Thursday, September 22, 2011

Unstoppable - நிறுத்த முடியாத ரயில் ஹாலிவூட் பட விமர்சனம்!

குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல!

வாழ்க்கையினை நாம் எல்லோரும் சவாலாக எடுத்துக் கொண்டால் தான் தடைகளையும்- தடங்கல்களையும் தாண்டி வளர்ச்சியடைய முடியும். சவால்கள் நிறைந்த தமது வாழ்க்கையினைப் பிறருக்காக அர்ப்பணிக்கின்ற தியாக மனப்பான்மை எல்லா மனிதர்களுக்கும் அமைவதில்லை. தன் வாழ்க்கையினை அர்ப்பணித்து, பிறருக்காகப் போராடுகின்ற சவால்கள் நிறைந்த மனிதனின் திரைக் கதையினை உள்ளடக்கிய ஒரு படத்தினைப் பற்றித் தான் நாம் இப் பதிவினூடாகப் பார்க்கப் போகின்றோம்.
2010ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 10ம் திகதியன்று 20th Century நிறுவனத்தின் வெளியிட்டீல், டன்ஷல் வோஷிங்டன் (Danzel Washington) , டோனி ஸ்கோர்ட் (Tony Scott) , கிறிஸ் பைன் (Chris Pine) மற்றும் பல ஹோலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பில்  ரிலீஸ் ஆகிய படம் தான் இந்த UNSTOPPABLE.  முற்று முழுதாக உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாக வைத்து (INSPIRED BY TRUE EVENTS) தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த திரில்- ஆக்சன் படமானது, அமெரிக்காவின் Walbridge Ohio பகுதியில் 2001ம் ஆண்டு தன் கட்டுப்பாட்டினை இழந்து அசம்பாவிதத்தினை ஏற்படுத்திய ரயிலின் கதையினைத் தன்னகத்தே உண்மைச் சம்வமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்திலிருந்து 150 பள்ளிச் சிறார்களை ஏற்றியபடி ஒரு புகை வண்டி புறப்படத் தயாராகும் வேளை, இன்னோர் புகை வண்டியான 777எனும் பெயர் கொண்ட புகைவண்டி, 30,000 தொன் இராசயன- வாயுக்களை உள்ளடக்கிய கொள்கலன்களோடு மறு திசையிலிருந்து சம நேரத்தில் தமது பயணத்தினைத் ஆரம்பிக்கின்றது. இரசாயன வாயுக்களை உள்ளடக்கிய 777 ரயிலின் தண்டவாளத்தில் ஏதோ தடங்கல்கள் உள்ளதென்று அறிந்த ஓட்டுனர், முதலில் உதவியாளரை அழைத்து, கீழே இறங்கிப் பார்க்குமாறு கூறுகின்றார். 

உதவியாளரால் ரயிலில் என்ன கோளாறு என்று கண்டறிய முடியாத சூழ் நிலை ஏற்பட்டுக் கொள்ள, 777 வண்டியின் ஓட்டுனர் புகை வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பரிசோதிக்கும் சமயம் வண்டியானது AIR BREAK அறுந்ததும் வேகமாக கட்டுப்பாட்டினை இழந்து ஓடத் தொடங்குன்றது. பத்து இலட்சம் மக்கள் செறிந்து வாழும் பென்சில்வேனியா மாநிலத்தின் முக்கிய நகருக்கூடாக இந்தப் புகை வண்டியானது கட்டுப்பாடுகள் ஏதுமின்றி அதி வேகமாகச் செல்லும் போது, ஆபத்துக்கள் நிகழும் என்பதால், தமது உயிரினைப் பணயம் வைத்துப் புகை வண்டியினை நிறுத்துவதற்காகப் போராடுகின்றார்கள் ரயில்வே துறை அதிகாரிகள்.

முதலில் கட்டுப்பாட்டினை இழந்த ரயிலின் ஓட்டுனரும், அவரது உதவியாளரும் வேகமாக காரின் உதவியோடு கலைத்துச் சென்று, புகை வண்டிக்குள் நுழைந்து நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும் சமயம், நொடிக்கொரு தரம் அதிகரிக்கும் புகை வண்டியின் வேகம் காரணமாக அம் முயற்சி தோல்வியில் முடிவடைகின்றது. 

 அடுத்து முன் பக்கமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் உதவியுடன், அதே தண்டவாளத்தில் பின்னே வரும் 777 வண்டியினைத் தடுத்தி நிறுத்திப் இரு பெட்டிகளையும் இணைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி தோல்வியினைத் தழுவிக் கொள்ள, 777 வண்டியானது அதி வேகமாகத் தனக்கு முன்னே செல்லும் வண்டியினை உடைத்து நொறுக்கியவாறு பயணிக்கையில் தடுத்து நிறுத்த முயற்சித்த வண்டி தீப்பற்றி வெடித்துச் சிதறுகின்றது.

ஹெலிகாப்டரின் உதவியோடு வேகமாக ஓடுகின்ற ரயிலின் மேற் புறத்தில் குதித்து, உள்ளே சென்று ரயிலினைத் தடுத்து நிறுத்தலாம் என்று மேற்கொள்ளப்படும் முயற்சியும் விபரீதமான உயிரிழப்பில் முடிவடைந்து கொள்ள, பென்சில்வேனியா மாநிலத்தின் போலீஸ் படைப் பிரிவின் உதவியானது கோரப்படுகின்றது. 

ஓடுகின்ற ரயிலின் Emergency Stop Button ஐத் துப்பாக்கியால் கூட்டாகத் தாக்குதல் நடாத்தி உடைத்துப் புகை வண்டியினை நிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியும் தோல்வியில் தழுவிக் கொள்ள படத்தின் கதாநாயகன் டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள்- 20 வருடங்களாகப் ரயில்வே பணியில் இருக்கும் தன்னால் இப் புகையிரதத்தினை நிறுத்த முடியும் எனச் சவால் மேற்கொண்டு, பலத்த தடைகளின் மத்தியில், ரயில்வே கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உதவி பெற்று 70mph வேகத்தில் செல்லும் ரயிலைத் தனது ரயிலின் மூலம் பின் பக்கமாகக் கலைத்துச் சென்று, ரயிலினை நிறுத்தினாரா இல்லையா, எதிர்த் திசையில் 150 பள்ளிச் சிறார்களோடு வருகின்ற புகையிரதத்திற்கு என்ன ஆச்சு எனும் விடயங்களைக் கூறி நிற்கின்ற படம் தான் இந்த Unstoppable. 

ஒவ்வொரு நொடிப் பொழுதும் அடுத்தது என்ன நடக்கும் என்கின்ற திரிலிங் உணர்வினையும், மயிர்க் கூச்செரியும் காட்சிகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய இப் படத்திற்கு HARRY GREGSON- WILLIAMS அவர்கள் இசையமைத்திருக்கிறார். விசுவல் எபக்ட் மூலம் துல்லியமான ஒலிக் கலவைகளைத் தன்னகத்தே தாங்கி வந்திருக்கிறது இப் படம். 

MARK BOMBACK அவர்களின் எண்ணத்திலும், எழுத்துருவாக்கத்திலும் உருவாகியுள்ள இப் படத்தினை Julie Yor, Tony Scott, Mimi Roger, Eric Mcleod, Alex Young முதலியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். திரிலிங் படம் என்றாலும் ஆங்காங்கே ஒரு சில செண்டிமெண்டல் காட்சிகளையும் தவழ விட்டிருக்கிறார்கள் படக் குழுவினர். டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள் தன் இரண்டாவது மகளின் பிறந்த நாளிற்கு வாழ்த்துச் சொல்லாது, வேலை பிசியால் மறந்து போய் வேலைக்கு வந்த பின்னர் மகளோடு தன் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ள முயற்சி செய்கின்றார். ஆனால், அவரது மகள் செல்லமாய்க் கோபம் கொண்டு தன் தந்தை வாழ்த்துத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளும் ஒவ்வோர் நிமிடமும், அவரது தொலைபேசி அழைப்பினை அவொய்ட் பண்ணிக் கொள்கின்றார்.

இறுதியில் மக்களுக்காக தம் உயிர் போனாலும் பரவாயில்லை, கட்டுப்பாடுகள் ஏதுமின்றிப் பயணிக்கும் இந்தப் புகையிரதத்தினைத் தடுத்து நிறுத்த வேண்டும் என உறுதி கொண்டவர்களாக டன்ஷேல் வோஷிங்டன் அவர்களும், புதிதாக ரயில்வே பணிக்குச் சேர்ந்த டோனி ஸ்கோர்ட் அவர்களும் தீர்மானம் மேற்கொள்ளும் சமயத்தில், தன் மகளைப் பற்றிய நினைப்பானது மீண்டும் வந்து கொள்ளத் தொலைபேசி அழைப்பினை எடுக்கின்றார் டன்ஷேல் அவர்கள்.

அவரின் மூத்த மகளிடம் உன் தங்கையோடு பேச வேண்டும் என்ற சொல்ல,  மகளோ மீண்டும் தந்தையினை அவொய்ட் பண்ணி, அவரோடு பேசமாட்டேன் என்று சொல்ல, அந்த நிமிடத்தில் 
"Tell you'r Sister, I Love You, I Have to go"....எனச் சொல்லும் சமயத்தில் அவர் கண்களிலிருந்து நீர் சொரிகின்றது. 

தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அதிகம் நிரம்பியிருந்தாலும், பாலியல் சீன்கள் ஏதுமற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த திரிலிங் படமானது 83வது அக்கடமி அவார்ட்டிற்கு சிறந்த சவுண்ட் எடிற்றிங் எனும் பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. $85-95 மில்லியன் பட்ஜெட்டில் வெளிவந்துள்ள இப் படமானது வசூலில் சாதனை நிலை நாட்டியிருக்கிறது. 

UNSTOPPABLE: திரிலிங் பிரியர்களுக்கான தித்திக்கும் விருந்து. 


படத்தின் ட்ரெயிலரைக் கண்டு களிக்க: 

98 நிமிடங்கள் கொண்ட இப் படத்தினைப் பார்த்து மகிழ: 

இப் படத்தின் ட்ரெயிலர், மற்றும் படத்தினைப் பார்ப்பதற்கான லிங்கினை இணைக்கச் சொல்லிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி. வருங்காலத்தில் விமர்சனம் எழுதும் போது படத்தின் ட்ரெயிலர், மற்றும் படம் பார்ப்பதற்கான லிங்கினையும் இணைக்கின்றேன். 


பிற் சேர்க்கை: வேலையில் கொஞ்சம் பிசியாகி விட்ட காரணத்தினால், வழமையாக உங்களை நாடி வரும் பதிவர் சந்திப்பினை, இப் பதிவோடு இணைக்க முடியவில்லை. மன்னிக்கவும் உறவுகளே.

63 Comments:

SURYAJEEVA said...
Best Blogger Tips

உன்னை வேலையிலிருந்து தூக்கி விடுகிறேன் என்று டென்சலிடம் மேலாளர் கூற, என்னை எப்பொழுதோ வேலையில் இருந்து நீக்கி விட்டீர்கள் என்று சொல்லும் காட்சி அருமை..

Prabu Krishna said...
Best Blogger Tips

பட லிங்க் ப்ளீஸ்.

Prabu Krishna said...
Best Blogger Tips

தமிழ்மணம் இன்னும் அப்டேட் ஆகவில்லை சகோ.

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு சகோ.

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

திரில்லிங் உடன் சென்டிமென்ட் கலந்த படம். விமர்சனம் நல்லாயிருந்தது.

Anonymous said...
Best Blogger Tips

முதல் முதலாக ஹாலிவுட் பட விமர்சனம் தாங்கி வரும் நாற்றுக்கு வாழ்த்துக்கள்...

காட்டான் said...
Best Blogger Tips

நல்ல விமர்சனமாய்தான் இருக்கு.. எங்களுக்கு நேரமிருக்கோனுமேய்யா படம் பார்க்க..

Anonymous said...
Best Blogger Tips

வார்த்தை கோர்வைகளால் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனத்துக்கு உயிர் கொடுத்துள்ளீர்கள்..

படத்தில் லிங் இருந்தா கொடுங்கோ பாஸ்..?

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

சகோ.. விமர்சனம் சூப்பர்..

படம் பாக்கணும் போல இருக்கு...

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

இன்னைக்கு பதிவர் அறிமுகம் இல்லையா...??

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

விமர்சனத்தை பார்த்தா படம் பாக்கணும் போலதான் இருக்கு சமயம் இல்லையே மக்கா....

M.R said...
Best Blogger Tips

பட விமர்சனம் அருமை ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

விமர்சனம் அட்டகாசம், எப்பிடிய்யா இப்பிடி தமிழ் பொங்கி வருது உங்க பதிவுகளில் வாழ்த்துக்கள்!!!!!!!

Mathuran said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை பாஸ்.. படத்தைப்போலவே

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன், விமர்சனம் எழுதும்போது அதன் டிரெயிலரையும் இணைத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்குமே...

Unknown said...
Best Blogger Tips

விமர்சனம் அருமை.ஆனால் இப்பவா இந்த படம் பாத்தீர்கள்?

Unknown said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லாதான் இருக்கு.
படம் பாக்க தான் நேரமில்லை

shanmugavel said...
Best Blogger Tips

படம் பார்க்கும் உணர்வினை தூண்டுவது உண்மை.

Anonymous said...
Best Blogger Tips

விமர்சனம் நல்லாயிருந்தது நண்பரே...

டைம் பாஸ் படம்...போன வருஷம் பார்த்த நியாபகம்...தமிழ் படம் போல் டென்செல் ஹீரோயசம்.. டயலாக்...

ஒரு தடவை பார்க்கலாம்...ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை இவங்க ரயில் வச்சு படம் எடுக்காட்டி தூக்கம் வராது...

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

நண்பா...சூப்பர்...அழகுத்தமிழில் ஆங்கிலப்படத்துக்கு அசத்தலாக எழுதி உள்ளீர்கள்.

Unknown said...
Best Blogger Tips

Nice Review Friend..

கோகுல் said...
Best Blogger Tips

புதிய தளத்தில் புகுந்து விளையாடி இருக்கீங்க போங்க!

Unknown said...
Best Blogger Tips

இந்த படத்தை பார்க்க வேண்டிய ஆர்வத்தை பதிவு உண்டாக்கிவிட்டது சகோ.நன்றி.

செங்கோவி said...
Best Blogger Tips

இந்தப் படம் ரிலீஸ் ஆகியும் ரெண்டு வருசம் ஆச்சே..கொஞ்ச நாள் முன்னே இதே மாதிரி 2 வருசம் முன்னே ரிலீஸ் ஆன பூஜா சிடிக்கி விமர்சனம் போட்டாரு..ஏன் இப்படி 2 வருசம் பின்னாடியே நிரூ நிற்காரு?

செங்கோவி said...
Best Blogger Tips

செம விறுவிறுப்பான படம் மச்சி..ஆனாலும் ஸ்பீடு அளவுக்கு இல்லேங்கறதையும் சொல்லணும்.

செங்கோவி said...
Best Blogger Tips

//டன்ஷேல் வோஷிங்டன் அவர்கள் தன் இரண்டாவது மகளின் பிறந்த நாளிற்கு வாழ்த்துச் சொல்லாது, வேலை பிசியால் மறந்து போய் வேலைக்கு வந்த பின்னர் மகளோடு தன் வாழ்த்தினைப் பரிமாறிக் கொள்ள முயற்சி செய்கின்றார். ஆனால், அவரது மகள் செல்லமாய்க் கோபம் கொண்டு தன் தந்தை வாழ்த்துத் தெரிவிக்கத் தொடர்பு கொள்ளும் ஒவ்வோர் நிமிடமும், அவரது தொலைபேசி அழைப்பினை அவொய்ட் பண்ணிக் கொள்கின்றார்.//

ஆமாம், நல்ல டச்சிங்கான சீன் அது..கடைசியில் இன்னொரு ஹீரோவின் மனைவி வருவதும் நன்றாக இருக்கும்.

செங்கோவி said...
Best Blogger Tips

தமிழ்மணத்தைக் காணவில்லை.

தனிமரம் said...
Best Blogger Tips

விமர்சனம் படத்தைப்பார்க்கத்தூண்டுகின்றது ஆனால் நேரம்தான் பிரச்சனை பாஸ்!

K said...
Best Blogger Tips

விறுவிறுப்பான படத்துக்கு விறுவிறுப்பான விமர்சனம்!

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

படம் பார்க்க லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

முதல் முதலாக ஹாலிவுட் பட விமர்சனம் தாங்கி வரும் நாற்றுக்கு வாழ்த்துக்கள்...//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

இன்னைக்கு பதிவர் அறிமுகம் இல்லையா...??//

வேலையில் கொஞ்சம் பிசியாக இருந்தேன்.
நாளைக்கு வழமை போல வரும் பாஸ்...

மன்னிக்கவும்,

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
நிரூபன், விமர்சனம் எழுதும்போது அதன் டிரெயிலரையும் இணைத்து விட்டால் இன்னும் நன்றாக இருக்குமே.//

மன்னிக்க வேண்டும் பாஸ்.

தற்போது ட்ரெயிலர், மற்றும் படம் பார்ப்பதற்கான லிங்கினை இணைத்துள்ளேன் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.Shanmugan

விமர்சனம் அருமை.ஆனால் இப்பவா இந்த படம் பாத்தீர்கள்?//

இல்லை பாஸ்..இந்த வருட ஆரம்பத்தில் MC இல் பார்த்தேன்.
விமர்சனம் எழுத வேண்டும் என்று இப்போது தான் தோன்றியது.

நிரூபன் said...
Best Blogger Tips

@கடம்பவன குயில்

தமிழ்மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டாச்சு சகோ.//

மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி
இந்தப் படம் ரிலீஸ் ஆகியும் ரெண்டு வருசம் ஆச்சே..கொஞ்ச நாள் முன்னே இதே மாதிரி 2 வருசம் முன்னே ரிலீஸ் ஆன பூஜா சிடிக்கி விமர்சனம் போட்டாரு..ஏன் இப்படி 2 வருசம் பின்னாடியே நிரூ நிற்காரு?//

அவ்...படம் ரிலீஸ் ஆகி இப்போ ஒரு வருசம் தானே ஆகப் போகிறது.............

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

// குழந்தைகள் மற்றும் இளகிய மனமுடையோர் பார்ப்பதற்கு உகந்த படம் அல்ல! //

என்ன நண்பா... இதுக்கே இப்படி சொல்லிட்டீங்க...

Philosophy Prabhakaran said...
Best Blogger Tips

தொடர்ந்து பல உலகப்படங்கள் கண்டு உலகநாயகனாக வாழ்த்துக்கள்...

K.s.s.Rajh said...
Best Blogger Tips

விமர்சணம் சூப்பர்..பாஸ்....

test said...
Best Blogger Tips

நல்லாத்தான் சொல்லி இருக்கீங்க பாஸ்!

மாய உலகம் said...
Best Blogger Tips

மாம்ஸூ அசத்தலான அன்ஸ்டாப்புள் படத்துடைய விமர்சணம்... வாவ் கலக்கிட்டீங்க பாஸ்... கண்டிப்பா பாக்கனும்... இருங்க டிரைலர் பாத்துட்டு வரேன்...

மாய உலகம் said...
Best Blogger Tips

அவரின் மூத்த மகளிடம் உன் தங்கையோடு பேச வேண்டும் என்ற சொல்ல, மகளோ மீண்டும் தந்தையினை அவொய்ட் பண்ணி, அவரோடு பேசமாட்டேன் என்று சொல்ல, அந்த நிமிடத்தில்
"Tell you'r Sister, I Love You, I Have to go"....எனச் சொல்லும் சமயத்தில் அவர் கண்களிலிருந்து நீர் சொரிகின்றது. //

பாக்கும்போது நமக்கும் ஃபீலிங் வருவது உறுதி என்பது படிக்கும் போதே தெரிகிறது....

மாய உலகம் said...
Best Blogger Tips

டிரைலர் சூப்பர் பாஸ்.... படம் பாத்தே ஆகோனும்.... நன்றி பாஸ் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்

இந்திரா said...
Best Blogger Tips

ட்ரெய்லர் லிங்க் குடுத்தமைக்கு நன்றி

Astrologer sathishkumar Erode said...
Best Blogger Tips

ஹாலிவுட் விமர்சனங்கள் நிறைய எதிர்பார்க்கிறேன் சகோ..வாரம் ஒன்றை அப்டேட் செய்யுங்கள்...

கவி அழகன் said...
Best Blogger Tips

படத்தை பாக்கிறதா உத்தேசித்துள்ளேன் விமர்சனம் படிச்ச் பிறகு

Unknown said...
Best Blogger Tips

மாப்ள அழகான தமிழில் அட்டகாசமா பகிர்ந்து இருக்கீங்க நன்றி...இந்தப்படம் பாத்து நானும் அப்போது மிரண்டு போனேன்..நினைவை சிறிது மீட்டிப்பார்க்க வச்சதுக்கு நன்றி!

சசிகுமார் said...
Best Blogger Tips

விமர்சனம் சூப்பர் மச்சி

vimalanperali said...
Best Blogger Tips

வணக்கம் நிருபன் சார்.நல்ல விமர்சனம்.இனிமேல் ஆங்கிலப்படங்களையும் கவனமெடுத்து பார்க்கிறேன்.

பிரணவன் said...
Best Blogger Tips

விமர்சனத்தை படிக்கும் போதே இவ்வளவு சுவாரசியம் என்றால் திரையில். அருமை நிரூ சகா. . .

Anonymous said...
Best Blogger Tips

விமர்சனமே
படத்தை பார்க்க தூண்டுகிறது
நன்றி... சகோ

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

ஆவலைத் தூண்டி விட்டு விட்டீர்கள்.

Mahan.Thamesh said...
Best Blogger Tips

இனி திரை விமர்சனத்தையும் நாற்றில் படிக்கலாம் போல

Mahan.Thamesh said...
Best Blogger Tips

விமர்சனம் சுப்பர் .

Unknown said...
Best Blogger Tips

படத்தைப் பற்றிய தகவல்களோடு கூடிய விமர்சன பதிவை தந்துள்ளீர்கள். நன்றி சகோ..

ப.கந்தசாமி said...
Best Blogger Tips

நண்பரே, பல விதமான பதிவுகள் போட்டு அசத்துகிறீர். வாழ்க வளமுடன்.

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

தகாத வார்த்தைப் பிரயோகங்கள் அதிகம் நிரம்பியிருந்தாலும், பாலியல் சீன்கள் ஏதுமற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்டோர் பார்த்து இப் படத்தினைக் கண்டு களிக்கலாம். இந்த திரிலிங் படமானது 83வது அக்கடமி அவார்ட்டிற்கு சிறந்த சவுண்ட் எடிற்றிங் எனும் பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறான திரைப்படம் பற்றிய குறிப்புக்களில் இறுதியாக இவ்வாறான விடயங்களை நிச்சயமாக சொல்ல வேண்டும் நண்பா.. மிக முக்கியம். வாழ்த்துக்கள் பாஸ்..

Unknown said...
Best Blogger Tips

அருமையான படம் அதுக்கேத்த மாதிரி விமர்சனம்..

நல்லா இருக்கு நிரூ

aotspr said...
Best Blogger Tips

அருமையான விமர்சனம்....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ம.தி.சுதா said...
Best Blogger Tips

விமர்சனத்தை பொறுமையாக வாசித்து மட்டுமே இப்போது செல்ல முடியும்.

எங்க ஊர் இணைய இணைப்பில படம் பற்றி நினைத்தே பார்க்கேலாது... மதுரனை தான் பிடிக்கணும் சிடிக்கு..

வாக்கோட எஸ்கேப்பு...

Sivakumar said...
Best Blogger Tips

//MANO நாஞ்சில் மனோ said...

இன்னைக்கு பதிவர் அறிமுகம் இல்லையா...?//

இல்லை. அது என்ன படிச்சதுக்கு அப்பறம் ஒண்ணுமே தெரியாத மாதிரி ஒரு கேள்வி?

Sivakumar said...
Best Blogger Tips

//MANO நாஞ்சில் மனோ said...

விமர்சனம் அட்டகாசம், எப்பிடிய்யா இப்பிடி தமிழ் பொங்கி வருது உங்க பதிவுகளில்//

அண்ணனுக்கு செயல்முறை விளக்கம் குடுங்க நிரூபன்.

Mohamed Faaique said...
Best Blogger Tips

//ஹெலிகாப்டரின் உதவியோடு வேகமாக ஓடுகின்ற ரயிலின் மேற் புறத்தில் குதித்து, உள்ளே சென்று ரயிலினைத் தடுத்து நிறுத்தலாம் என்று மேற்கொள்ளப்படும் முயற்சியும் விபரீதமான உயிரிழப்பில் முடிவடைந்து கொள்ள///

முடிவில் அந்தப் பையன் உயிரோடிருப்பதாக காட்டுவார்களே!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails