பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனம் காக்கலாமா?
இப் பதிவின் நோக்கம் தனி மனித தாக்குதலை நடாத்துவதோ, அல்லது யாருடனும் சண்டை போடுவதோ அல்ல. ஒரு சில பதிவர்களால் பாதிக்கப்படும் பல பதிவர்களின் உழைப்பினையும், பதிவுகளின் காப்புரிமத்தினை உறுதிப்படுத்தும் வகையிலும் இப் பதிவானது எழுதப்படுகின்றது.
இப் பதிவில் ஏதாவது தவறுகள் இருப்பின், நான் இப் பதிவினூடாக, தனிப்பட்ட முறையில் மனம் நொந்து கொள்ளும் வகையில்; யாரையாவது சாடி எழுதியிருந்தால், தயவு செய்து என்னை மன்னியுங்கள்.
மிக மிக அதி உன்னதமான ஒரு படைப்பினை எழுதுகின்ற வலியானது, ஒரு குழந்தையினைப் பிரசவிக்கின்ற ஒரு தாயின் வலிக்கு நிகரானது என்று கூறுவார்கள். இதே போலத் தான் வலைப் பதிவில் எழுதி வரும் வலைப் பதிவர்களும், ஒரு சில பதிவுகளை, ஆராய்ச்சிப் பதிவுகளை, ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு பட்ட சிரமங்களை எதிர் நோக்கி, பல தேடல்களை மேற்கொண்டு- பல நூல்களினைப் படித்துப் பின்னர் அவற்றினூடாகப் பெற்றுக் கொண்ட சாராம்சத்திலிருந்து, எழுதுகின்றார்கள்.
நாம் எழுதுகின்ற ஒவ்வோர் பதிவுகளும், லப்டோப்பின் (Laptop) முன்னாடி குந்தி இருந்து, பெட்டி தட்டினால் வந்து விடுபவை அல்ல. ஒரு சில பதிவுகளை நாம் எழுதுவதற்குப் பல்வேறு சிரமங்களைக் கூடச் சில வேளைகளில் எதிர் கொள்ள நேரிடலாம். ஆனால் காத்திரமான பதிவுகளாயினும் சரி - கடின உழைப்பின் மூலம் எழுதப்படுகின்ற பதிவுகளாயினும் சரி, இவை அனைத்தையும் தாம் ஏன் காப்பி பண்ணுகின்றோம்;
வலைப் பதிவில் இன்னொருவர் எழுதித் திரட்டிகளில் இணைத்த பதிவுகளை எம்முடைய பதிவுகளில் ஏன் இணைத்து வெளியிடுகின்றோம்?, எனும் போதிய விளக்கமேதுமில்லாது ஒரு சில அப்பாவிகள் காப்பி பேஸ்ட் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு, பல பதிவர்களின் கடின உழைப்பினைத் தமது சொந்தப் பதிவுகள் போலக் காட்டிக் கொள்ள முயல்கிறார்கள். இது தான் மிக வேதனையான விடயம்.
ஒரு பதிவர் எழுதும் ஆராய்ச்சிப் பதிவினை, அப் பதிவில் என்னென்ன விடயங்கள் எழுதியிருக்கிறார்கள் என்ற புரிதலேதுமின்றி, அவசர அவசரமாகக் காப்பி பண்ணி, தம்முடைய ப்ளாக்கில் பதிவின் டைட்டிலை மாத்திரம் மாற்றி விட்டு, அப் பதிவினைப் பிரபலமாக்கி, அதிக ஓட்டுக்களையும், கருத்துக்களையும் பெறும் நபர்களை நினைத்தால் மிகுந்த வேதனையாக இருக்கிறது,
என்னுடைய பதிவுகள், சகோதரர்களான வந்தேமாதரம் தொழில் நுட்பத் தளப் பதிவர் சசியின் பதிவுகள், அட்ராசக்க ப்ளாக் சி.பி.செந்தில்குமாரின் பதிவுகள், செங்கோவி ப்ளாக்- செங்கோவியின் பதிவுகள், பலே பிரபு தளத்தின் ஓனர் பிரபு கிருஷ்ணாவின் பதிவுகள், தொழில்நுட்பப் பதிவிகளை வழங்கி வரும் பொன்மலரின் பதிவுகள்; எனப் பலரின் பதிவுகளை நம்பித் தான் இப்போது பல இணையத் தளங்களும், வலைப் பதிவுகளும் இயங்கி வருகின்ற்ன போலும்.
இதில் காமெடியான மேட்டர் என்னவென்றால், நாம் எழுதிய பதிவுகளின் டைட்டில் மாற்றப்பட்டு அவை திரட்டிகளில் காப்பி பேஸ்ட் மன்னர்களால் இணைக்கப்படும் போது, அதிக ஹிட்ஸினையும், சூடான இடுகைகளிலும் வந்து விடுகின்றன. இலங்கையின் பண்பலை வானொலியான வெற்றி எப். எம் இல் வெளிவந்த என்னுடைய வலைப் பதிவு பற்றிய அறிமுகத்தினை- ஏன் இந்தப் பதிவினைக் காப்பியடித்தோம் எனும் சிந்தனையேதுமின்றி, usetamil,net எனும் இணையத் தளத்தினர் (‘பதிவர்கள், டுவிட்டர், பேஸ்புக் பாவானையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை எனும் தலைப்பில் நான் எழுதிய பதிவினை) ஏதோ, ஒரு தொழில் நுட்பப் பதிவினை நிரூபன் எழுதியிருக்கிறார் எனும் நோக்கில் காப்பியடித்துப் போட்டுப் பிரபலமாக்கியிருக்கிறார்கள்.
இதில் மனவருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால், என்னுடைய- சக நண்பர்களின் பதிவுகளைக் காப்பி பண்ணித் தம் பதிவுகள் போலக் காட்டிக் கொள்ளும் இணையத் தளங்கள், எங்கேயிருந்து இப் பதிவினை எடுத்தோம் எனும் தகவலைக் கூட வெளியிடுவதில்லை. பதிவிற்கான சுட்டிகளைக் கூட இணைப்பதில்லை. நாம் கஸ்டப்பட்டு எழுதும் பதிவினை, பதிவு வெளியாகி; ஒரு சில மணி நேரங்களினுள் காப்பி பண்ணி, எழுதிச் சுய இன்பம் காண்கிறார்கள் இந்த மனிதர்கள்.
என்னுடைய பதிவினையும், என் நண்பர்களின் பதிவினையும் காப்பி பண்ணித் தம் பதிவு போன்று போட்டிருந்த ஒரு இஸ்லாமியப் பெயர் கொண்ட இ.....தா...ர் எனும் வலைப் பதிவின் ஓனருக்கு மூன்று மெயில் அனுப்பி, பதிவினை நீக்கச் சொல்லிய பின்னர் வந்த பதில் மடல் என்ன தெரியுமா?
‘இது நான் எழுதிக் ஹிட்ஸ் ஆக்கிய பதிவு, இதனை நீங்கள் வேணும்னா காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கலாம். நான் காப்பி பேஸ்ட் பண்ணவில்லை என்று’.
மேற்படி பதிவில் இருந்த சகோதரன் கந்தசாமியின் கை வண்ணத்தில் உருவான, என் வலைப் பூ முகவரியுடன் கூடிய போட்டோ பற்றிய கேள்வியினை அடுத்ததாக கேட்ட பின்னர் தான் அப் பதிவினை நீக்கினார் ப்ளாக் ஓனர்.
பதிவர்களின் பதிவினைக் காப்பியடிக்கும் நபர்களுள், இனயம் தாஹீர், விவசாயி.com, கவிந்தன், கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு, usetami.net , தமிழ்CNN, மற்றும் லங்காசிறி, மனிதன், வை.அருள்மொழி, முதலிய தளங்கள் முன்னணி வகிக்கின்றன. இன்னும் பல தளங்களும் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்கள் உறவுகளே!
இவர்கள் எம் பதிவுகளைக் முன் அனுமதியேதுமின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணுவதால், எம் வலைப் பூக்களில் நாம் எழுதும் பதிவுகள் பல பேரைச் சென்றடைவது தடுக்கப்படுகின்றது. இன்றைய தினம் நான் எழுதிய பதிவினைக் கூட விவசாயி.Com கவிந்தன் காப்பி பண்ணி தன் பதிவு போன்று வெளியிட்டதால், என்னுடைய பதிவு பிரபலமாக நீண்ட நேரம் எடுத்தது.
இது தொடர்ந்தும் இடம் பெறுமாயின் நாம் எழுதும் பதிவுகளுக்கு என்ன உத்தரவாதம்?
இனயம் தாஹீர் என்பவர் பல பதிவர்களின் பதிவுகளைக் காப்பி பேஸ்ட் பண்ணி வருவதால், அவரின் வலைப் பதிவினைப் பல திரட்டிகள் நீக்கி விட்டன. இதே போன்று ஏனைய திரட்டிகளும் இந் நபர்களின் பதிவுகளை சேர்க்கையிலிருந்து நீக்கி விட வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
எம் பதிவுகள் காப்பி செய்யப்பட்டிருக்கிறதா என்பதனை, எம் பதிவில் உள்ள ஒரு சில வசனங்களைக் கூகிளில் கொடுத்துத் தேடுவதன் மூலம் கண்டறிய முடியும்.
பதிவர்களே! திரட்டிகளே! நீங்கள் இனியும் மௌனமாக இருக்கலாமா? இதற்கான உங்களின் பதில் என்ன?
எல்லாப் பதிவர்களும், எழுதி ஆதங்கப்படுவது போல் ஆதங்கப்படும் நோக்கில் இந்த இடுகையினை நான் எழுதவில்லை. இவ்வாறான காப்பி டூ பேஸ்ட்டில் இருந்து எம் பதிவுகளைப் பாதுகாக்கும் நோக்கில்,
காப்பி பேஸ்ட் பதிவுகளை எழுதும் நபர்களுக்கு எதிராக நாம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கலாம்?
எந்த வழியில் இவ் நடவடிக்கைகளைச் சாத்தியப்படுத்தலாம்?
எம் பதிவுகளைக் காப்பி பேஸ்ட் செய்யாதவாறு எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?
மேற்படி விடயங்கள் பற்றி, உங்களுக்குத் தெரிந்த உங்களின் காத்திரமான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!
இப் பதிவானது அனைவரிடமும் சென்று சேர வேண்டும் எனும் நோக்கில், இப் பதிவினை உங்கள் நண்பர்களிற்கும் தெரியப்படுத்துங்கள். இப் பதிவின் ஸ்திரத் தன்மை கருதி, பதிவினைப் படிக்கும் அனைத்து உள்ளங்களும் பிடித்திருந்தால், உங்களது பேராதரவினை பின்னூட்டம் மூலமாகத் தெரிவிக்க முடியாவிட்டாலும், ஓட்டுக்கள் வாயிலாக வழங்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
|
86 Comments:
\\மிக மிக அதி உன்னதமான ஒரு படைப்பினை எழுதுகின்ற வலியானது, ஒரு குழந்தையினைப் பிரசவிக்கின்ற ஒரு தாயின் வலிக்கு நிகரானது \\
உண்மை சகோ, அந்த வேதனை கூட நம் பதிவு பலரை சென்றடையும்போது சுகமாகிறது.
அதை திருடி சுகம் காண்பது வன்மையாக கண்டிக்கத்தது
///என்னுடைய பதிவுகள், சகோதரர்களான வந்தேமாதரம் தொழில் நுட்பத் தளப் பதிவர் சசியின் பதிவுகள், அட்ராசக்க ப்ளாக் சி.பி.செந்தில்குமாரின் பதிவுகள், செங்கோவி ப்ளாக்- செங்கோவியின் பதிவுகள், பலே பிரபு தளத்தின் ஓனர் பிரபு கிருஷ்ணாவின் பதிவுகள், தொழில்நுட்பப் பதிவிகளை வழங்கி வரும் பொன்மலரின் பதிவுகள்;//// இதில் முக்கியமாக வந்தேமாதரம் சசி,மற்றும் பொன்மலர் அவர்களின் பதிவை லங்காசிறி என்ற இணையத்தளம் தினமும் திருடி தங்கள் பெயரிலே போடுகிறது. எதற்காக இந்த கேவலமான தொழில் என்று தான் புரியவில்லை...
எவனோ ஒருத்தன் பெத்த பிள்ளையை திருடி சென்று தன வீட்டிலேயே பூட்டி வைத்து ஊராருக்கு தன் பிள்ளை என்று அடையாளப்படுத்தி பெருமைப்படுவதற்கு ஒப்பானது இந்த அடுத்தவன் எழுத்துக்களை திருடுவது என்பது ... எவ்வளவு கேவலம்...
\\இதில் மனவருத்ததிற்குரிய விடயம் என்னவென்றால், என்னுடைய- சக நண்பர்களின் பதிவுகளைக் காப்பி பண்ணித் தம் பதிவுகள் போலக் காட்டிக் கொள்ளும் இணையத் தளங்கள், எங்கேயிருந்து இப் பதிவினை எடுத்தோம் எனும் தகவலைக் கூட வெளியிடுவதில்லை. பதிவிற்கான சுட்டிகளைக் கூட இணைப்பதில்லை. நாம் கஸ்டப்பட்டு எழுதும் பதிவினை, பதிவு வெளியாகி; ஒரு சில மணி நேரங்களினுள் காப்பி பண்ணி, எழுதிச் சுய இன்பம் காண்கிறார்கள் இந்த மனிதர்கள்.\\
இது போன்ற வலைத்திருடர்களைப் பற்றி தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவரும்.
கண்டிக்க வேண்டிய விஷயம் தான் நிரூ. பதிவு என்பது லேப்டாப்+டைப்பிங் மூலம் வருவதல்ல. அதன்பின் நமது அனுபவமும் இருக்கின்றது.
கொஞ்சம்கூட வெட்கம் இல்லாமல் கப்பி பேஸ்ட் செய்யும் இவர்களை என்ன செய்வது என்று நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.
///மேற்படி பதிவில் இருந்த சகோதரன் கந்தசாமியின் கை வண்ணத்தில் உருவான, என் வலைப் பூ முகவரியுடன் கூடிய போட்டோ பற்றிய கேள்வியினை அடுத்ததாக கேட்ட பின்னர் தான் அப் பதிவினை நீக்கினார் ப்ளாக் ஓனர். /// சரியான முட்டாளுங்கள் இவங்கள்... copy பண்ணுறது தான் பண்ணுறாங்கள் ஒரு டெக்னிக் வேணாம் ஹிஹி
உண்மையிலே இது நிறுத்தப்பட வேண்டும் ஆனால் எனக்கு சரியான வலி தெரியவில்லை..குறிப்பிட்ட வலைத்தலக்காறரை புறக்கணிப்பதை தவிர.. முக்கியமாக திரட்டிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்...
உடனடியாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் இது. பதிவர்கள் ஒன்றிணைந்து திரட்டிகளில் புகார் கொடுக்கலாம்.
இனயம் தாஹீர், விவசாயி.com, கவிந்தன், கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு, usetami.net , தமிழ்CNN, மற்றும் லங்காசிறி, மனிதன் தளங்கள் முன்னணி வகிக்கின்றன/// மச்சி இந்த வரிசையில நீயூ ஜப்னாவை விட்டுட்டியே (ஒரு வேளை அதி திருத்த முடியாத ஜென்மங்கள் என்ற வகையில் உள்வாங்கப்படவில்லையோ )
இது போன்றவர்களை தடை செய்யவேண்டும். அபோதுதான் திருந்துவார்கள்
இவர்களைவிட
ஜாஹீர் ஹுசைன் (http://kollumedualhairat.blogspot.com/2011/05/blog-post_6031.html)
தீசன்
http://theesanbloggercom.blogspot.com/2011/04/18.html( இங்க போய் பாருங்க உங்கட போஸ்ட் கிடக்குது)
http://theesanbloggercom.blogspot.com/2011/06/ip-address.html மதுரன் இது உங்களது பதிவையும் திருடியிருக்கார். பாருங்கோ இவங்களால எப்பிடி தான் மூஞ்சியை சைடில போட்டு உலாவ முடியுது...
anaivarum onru sernthu antha kayavarkalai azhikka vendum. sako ungal thaakkuthal unmaiye.
ஸலாம் சகோ.நிரூபன்,
ஒருவேளை, இந்ந்ந்ந்ந்த பதிவையையும் அவர்கள் எவராவது காபி பேஸ்ட் பண்ணி போட்டார்கள் என்றால்...
ஹூம்.... அவர்கள் மனிதர்களே அல்லர்..!
மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன்..!?!?!
திரட்டிகளிடம் தொடர்ந்து நாம் ஒன்று திரண்டு புகார் தெரிவித்து வந்தால் இதனை தடுக்க முடியும் என்று நினைக்கிறேன்......பெற்றவளுக்கு தானே தெரியும் அந்த வலி....இப்படி செய்யும் முண்டங்களை என்ன செய்ய!
//பதிவு வெளியாகி; ஒரு சில மணி நேரங்களினுள் காப்பி பண்ணி// சிலர் அதை விட வேகமாக இருப்பார்கள் நிரூபன். ஆவி பறக்கப் பறக்க சூடாக 'காப்பி'. ;) ஒரிஜினல் கண்ணில்படும் முன் இது பட்டுவிடுகிறது. ;(
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
நண்பரே... பூனைக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில் உங்கள் பதிவு இதற்கு ஒரு தீர்வை நோக்கி நம்மை அழைத்து செல்லும்னு நினைக்கிறேன்...
அலுவலகங்களில் தான் இந்த உழைப்பு திருட்டும்...'Taking the credit for other's work' ம் அதிகமாய் இருந்தது....இதற்க்கு என்ன தீர்வு...?
தெளிவாக தெரியும் வலைத்திருடர்களை நம் வலை முகப்பு பக்கங்களில் நிரந்தரமாக பட்டியலிடலாம்...திரட்டிகளிடம் புகார் கொடுக்கலாம்...திருட்டு வலைகளில் பின்னூட்டங்களை வைத்து flood பண்ணலாம்...வழி ஒன்றும் இல்லையெனில்...நண்பர்களை வைத்து hack பண்ணவேண்டியது தான்...
Meanwhile மனதை தேற்றிக் கொள்ளுங்கள் ...படைப்பாளியின் வலி புரிகிறது...
உங்களின் வலி புரிகிறது...
இந்த பதிவயும் கோப்பி பண்ணி பட்டிருப்பானுகள்.....என்ன உலகமடா..
வணக்கம் நிரூபன் சகா.
தங்கள் மனவேதனை எனக்கு புரிகிறது.உங்களுக்கு மனவேதனை இருக்கிற தென்பதற்காக எல்லோரையும் தான்தோன்றியாக குற்றம் சாட்ட முயல்வது சரியாகி விடாது.
தங்களின் இந்த பதிவில் எனது வலைப்பூ பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளீர்கள்.
பதிவர்களின் பதிவினைக் காப்பியடிக்கும் நபர்களுள், இனயம் தாஹீர், விவசாயி.com, கவிந்தன், கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு, usetami.net , தமிழ்CNN, மற்றும் லங்காசிறி, மனிதன் தளங்கள் முன்னணி வகிக்கின்றன. இன்னும் பல தளங்களும் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தால் பகிருங்கள் உறவுகளே!
இது தொடர்பாக எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.
1.கணினிமஞ்சம் எனது பதிவுகளை மட்டுமே 100 வீதம் கொண்டுள்ளது.
2. கருத்துரைகளில் சில நண்பர்களுடைய வாழ்த்துப்பதிவுகள் அவர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெயருடன் பிரசுரித்துள்ளேன்.
3.யாழ் மஞ்சு தளம் ஆரம்பத்தில் திரட்டியாக செயற்பட்டது. ஆனால் வந்தே மாதரம் சசி,கவிதை வீதி சௌந்தர் போன்றோர் தம் மனக்குறையை நேரடியாக பகிர்ந்து கொண்டதன் பின்னர் திரட்டியாக செயற்படுவதில்லை.யாருடைய பதிவையும் காப்பி பேஸ்ட் செய்யவுமில்லை.
4.மறு பிரசுரம் செய்த பதிவுகள் கூட முழுமையாக மறுபிரசுரம் செய்யப்பட்டதில்லை. அப்பதிவு தொடர்பாக சிறிய அறிமுகமும் அப்பதிவை முழுமையாக வாசிக்க குறித்த தளத்தின் இணைப்பு முகவரியும் வழங்கப்பட்டது.
5.உங்களைப் போன்று மூன்றாம்தர தலைப்புக்களை வைத்து வயதுக்கு வந்தோருக்கான எச்சரிக்கை இன்றி மொக்கை பதிவுகள் என்ற முகமூடியில் ஒளிந்து வாழ்பவன் இல்லை.
6.உங்கள் பதிவுகள் எவையாவது நான் நடத்திய திரட்டியில் முன்பு இடப்பட்டதை உங்களால் நீருபிக்க முடியுமா?
7.நீர் உம்மை எல்லாம் தெரிந்தவனாக எண்ணலாம்.ஆனால் பதிவுலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் என் தளம்மீது குற்றம் சுமத்த உமக்கு எந்த முகாந்திரமும் இல்லை.
8.எனது தளப் பெயர் உடனடியாக உங்கள் பதிவில் இருந்து அகற்றப்படல் வேண்டும். இது தொடர்பாக எனது கம்பனியின் சட்டத்தரணியுடன் கலந்துரையாடி அவதூறு வழக்கு தொடர மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
9.யாழ் மஞ்சு தளம் தற்போது பதிவுலகில் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளும்.
10.பதிவுகளை திருடுவது வேறு. எழுத்தாளரின் பெயருடன் அவரின் சம்மதத்துடன் மறுபிரசுரம் செய்வது வேறு.பதிவை திருடுவது பற்றி நானும் பதிவட்டுள்ளேன்.இந்த பதிவை இந்த முகவரியில் http://pc-park.blogspot.com/2011/07/system-silencer.html சென்று பார்க்கலாம்.
எனவே நாம் எல்லோரும் பதிவை திருடுபவர்களையே எதிர்க்க வேண்டும்.
@கணினி மஞ்சம்
கணினி மஞ்சம் said...
வணக்கம் நிரூபன் சகா.
தங்கள் மனவேதனை எனக்கு புரிகிறது.உங்களுக்கு மனவேதனை இருக்கிற தென்பதற்காக எல்லோரையும் தான்தோன்றியாக குற்றம் சாட்ட முயல்வது சரியாகி விடாது.//
வணக்கம் சகோ, நான் எல்லோரையும் இங்கே தான் தோன்றியாக குற்றம் சாட்ட முயலவில்லை, அத்தோடு என் பதிவுகளை மாத்திரம் ஆதாரப்படுத்தி, காப்பியடிக்கிறார்கள் என்ற கருத்தினை முன் வைக்கவில்லை, இங்கே நண்பர்களின் பதிவுகளையும் கொப்பி பேஸ்ட் பண்ணியிருக்கிறார்கள் எனும் காரணத்தினை அடிப்படையாக வைத்துத் தான் இக் கருத்தினை முன் வைத்துள்ளேன்.
@கணினி மஞ்சம்
1.கணினிமஞ்சம் எனது பதிவுகளை மட்டுமே 100 வீதம் கொண்டுள்ளது.
2. கருத்துரைகளில் சில நண்பர்களுடைய வாழ்த்துப்பதிவுகள் அவர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெயருடன் பிரசுரித்துள்ளேன்.
3.யாழ் மஞ்சு தளம் ஆரம்பத்தில் திரட்டியாக செயற்பட்டது. ஆனால் வந்தே மாதரம் சசி,கவிதை வீதி சௌந்தர் போன்றோர் தம் மனக்குறையை நேரடியாக பகிர்ந்து கொண்டதன் பின்னர் திரட்டியாக செயற்படுவதில்லை.யாருடைய பதிவையும் காப்பி பேஸ்ட் செய்யவுமில்லை. //
இல்லைச் சகோ, மதிசுதா, வந்தேமாதரம் சசி முதலிய நண்பர்களின் பதிவுகள் அவர்களின் அனுமதியின்றி, உங்கள் தளத்தில் தலைப்பு மாற்றங்களோடு வெளியாகியிருந்தன, பின்னர் மதிசுதா உங்களிடம் வினவிய போது, பதிவின் லிங்கினை மாத்திரம் தலைப்பின் கீழ் கொடுத்திருக்கிறேன் என்று பதிலளித்திருந்தீங்க சகோ,
5.உங்களைப் போன்று மூன்றாம்தர தலைப்புக்களை வைத்து வயதுக்கு வந்தோருக்கான எச்சரிக்கை இன்றி மொக்கை பதிவுகள் என்ற முகமூடியில் ஒளிந்து வாழ்பவன் இல்லை//
ஆபாசம் என்றால் என்னவென்று விளக்கம் அறியவில்லையா சகோ, நான், இங்கே வயது வந்தோருக்கான படமா காட்டுகிறேன். வயது வந்தோருக்கான எச்சரிக்கை அறிவிப்போடு பதிவினை எழுதுவதற்கு?
அப்படி ஒரு சில பதிவுகள் எழுதினாலும், அபாய அறிவிப்பு என்று, பதிவில் தடித்த எழுத்துக்களில் சிகப்பு மையினால் அடையாளப்படுத்தித் தான் எழுதுகிறேன்.
நான் மொக்கைப் பதிவுகள் என்ற முக மூடியில் மாத்திரம் ஒளிந்து வாழவில்லை, அரசியல், சமூகப் பதிவுகளும் எழுதுகிறேன்.
ஹா..ஹா...
@கணினி மஞ்சம்
6.உங்கள் பதிவுகள் எவையாவது நான் நடத்திய திரட்டியில் முன்பு இடப்பட்டதை உங்களால் நீருபிக்க முடியுமா?//
என் பதிவுகள் என்று நான் இங்கு தனிமைப்படுத்திக் கூறவில்லை, சக பதிவர்களின் பதிவுகளும் என்று தான் கூறியுள்ளேன்.
உண்மையாகவே கண்டிக்கப் படவேண்டிய விஷயம் சகோ..
இதற்கு எதாவது தீர்வுகள் உண்டா?
உண்டெனில் விரைவில் ஒரு பதிவாக தாருங்கள்..
7.நீர் உம்மை எல்லாம் தெரிந்தவனாக எண்ணலாம்.ஆனால் பதிவுலகில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் என் தளம்மீது குற்றம் சுமத்த உமக்கு எந்த முகாந்திரமும் இல்லை.//
நான் எப்போதாவது சொல்லியிருக்கேனா எல்லாம் தெரிந்தவன் என்று;-))
இது ரொம்ப ஓவர் காமெடி சாமி.
@கணினி மஞ்சம்
8.எனது தளப் பெயர் உடனடியாக உங்கள் பதிவில் இருந்து அகற்றப்படல் வேண்டும். இது தொடர்பாக எனது கம்பனியின் சட்டத்தரணியுடன் கலந்துரையாடி அவதூறு வழக்கு தொடர மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.//
பரவாயில்லை, அதனையும் சட்ட பூர்வமாக எதிர் கொள்ள நானும் தயார். ஏற்கனவே, முட் கம்பி வேலிக்குள் 6 மாசம் வவுனியாவில் இருந்தனான் தானே, ஆதலால் உள்ளே போய் இருக்க வேண்டி வந்தால் பரவாயில்லை,
முன்பு தடை முகாம் என்ற காரணத்தால் வெந்தும்,வேகாத உணவுகளைத் தந்தார்கள். இனிமேல் ஜெயில் என்றால்,
பாணும் பருப்புக் கறியும் தருவார்கள்.
ஜாலி...ஆய்...ஜாலி...!
நீங்கள் ஏற்கனவே பலரின் பதிவுகளைக் காப்பியடித்ததற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?
இனயம் தாஹீர், விவசாயி.com, கவிந்தன், கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு, usetami.net , தமிழ்CNN, மற்றும் லங்காசிறி, மனிதன் தளங்கள் முன்னணி வகிக்கின்றன//இவ்வளவு நடக்கிறதா? நான் அறுசுவையில் எழுதிய கதையினை வேறு தளத்தில் ஒருவர் சுட்டு போட்டிருகிறார். தெரிந்தது இது மட்டும் தெரியாமல் என்ன நடக்குதோ என்று விளங்கவில்லை.
நல்ல பதிவு.
@கணினி மஞ்சம்
9.யாழ் மஞ்சு தளம் தற்போது பதிவுலகில் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளும்.//
அடடா...இது முன்னர் எழுதியதையும் சேர்த்து, எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வாக எழுதப்பட்டது, இப்போது நீங்கள் அந்த தளத்தினைக் யாழ் மஞ்சு எனும் பெயரினைக் கை விட்டு, வேறு பெயரில் திருந்தி எழுதுகின்றீர்கள் என்றால் மிகவும் சந்தோசம் சகோ.
என் வாழ்த்துக்களையும், வரவேற்பினையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@கணினி மஞ்சம்
10.பதிவுகளை திருடுவது வேறு. எழுத்தாளரின் பெயருடன் அவரின் சம்மதத்துடன் மறுபிரசுரம் செய்வது வேறு.பதிவை திருடுவது பற்றி நானும் பதிவட்டுள்ளேன்.இந்த பதிவை இந்த முகவரியில் http://pc-park.blogspot.com/2011/07/system-silencer.html சென்று பார்க்கலாம்.
எனவே நாம் எல்லோரும் பதிவை திருடுபவர்களையே எதிர்க்க வேண்டும்.//
சகோதரம், நான் இங்கே குறிப்பிட்டிருப்பது, பதிவினைத் திருடி, அனுமதியேதுமின்றி, எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் ஏதுமின்றிப் பதிவிடுவோரைத் தான். பதிவினை மீள் பிரசுரம் செய்வோரைப் பற்றி நான் இப் பதிவில் ஏதும் குறிப்பிடவில்லை.
தங்களின் புரிந்துணர்விற்கும், கருத்துக்களுக்கும் நன்றி சகோ.
இந்தப்போஸ்ட்டையும் காப்பி பண்ணிட்டாங்களா? இன்னும் இல்லையா? ஹா ஹா
நிரூபன்.. ஃபிரீயா விடுங்க
இது குறித்து பல சகபதிவர்கள் அவ்வப்போது எழுதினாலும் தொடர்ந்து இந்த பதிவுத்திருட்டு நடைபெறுவது சற்றே ஆத்திரத்தை மூட்டுகிறது.
என்னை மாதிரி மொக்கைகளை எழுதுவது திருடர்களுக்குத் தேள் கொட்ட ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று தோன்றுகிறது சகோதரம்! :-)
/http://youngtamilan.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
இவர் கூட அப்படியே என் கதையை காப்பி பேஸ்ட் பண்ணிருக்கிறார்!
சரியான வார்த்தைகள் சகோ!திருந்தட்டும்.
கணினி மஞ்சம் அவர்களே..
நான் வலைச்சரத்தில் இருந்தபோது தங்களின் அந்த பிரச்சனைக்குரிய தளத்தை அறிமுகப் படுத்தியபோது வந்த எதிர்ப்பு காரணமாக நீக்கிவிட்டேன் என்பதை தாங்கள் அறிவீர்கள் ..//
சசிகுமார் said...
அறிமுகத்தில் முதலில் இருக்கும் யாழ்பாணம் பதிவர் ஒரு பதிவை கூட அவர் எழுதியதில்லை எல்லாமே காப்பி தான். நிஜப்பதிவு இங்கே
http://www.vandhemadharam.com/2011/05/blog-post_02.html
இவர் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டாம்.
//// தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன் நண்பரே.. அதனால் அவருடைய குறிப்புகளை நீக்கிவிட்டேன்.
May 11, 2011 3:49:00 PM GMT+05:3 //
நண்பர் நிரு அவர் எழுதிய பதிவுகளை திருடுகிறார்கள் என்றே அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.. நீங்கள் எனக்கு சொன்ன அதே பதிலை சொல்லி இருக்கலாம்.. அதை விடுத்து.. இது தேவையா சகோ/
விழிப்புணர்வு பதிவு இது ! என்னை போன்று எழுத்துலகில் புதிதாக அடி எடுத்து வைத்தவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு !
நன்றி நிரூபன்....
மிகவும் நியாயமான ஆதங்கம் .....என்னுடைய பதிவுகளும் பல காப்பியடிக்கப் படுவதை நான் பார்த்திருக்கிறேன் .சில தளங்களில் நமக்கு நன்றி தெரிவிப்பதாக கீழே குறிப்பிடுகிறார்கள் .சில தளங்களில் அவர்கள் படைப்பாகவே காட்டிக் கொள்கிறார்கள் ...
நிச்சயம் கண்டிக்கப்படவேண்டிய, தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம் மச்சி!
நியாயமான கோபம் தான்....
பெரிய பெரிய பேங்க்ல திருடுரவங்களையே இன்னும் ஒன்னும் பண்ண முடியல/தடுக்க முடியல.... பதிவு திருடுறதையா தடுத்துட முடியும்? தடுக்க முடிந்தால் சந்தோஷமே :)
என்னை போன்று எழுத்துலகில் புதிதாக அடி எடுத்து வைத்தவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு !
நன்றி நிரூபன்....
ஏற்கனவே நீயாடா எழுதுறேன்னு மக்கள் கேக்குறாங்க
இவனுங்க இப்படி செய்தால் என்னை யாருமே நம்ப மாட்டங்க சகோ ...
எனது ஜோதிட பதிவுகளும் தொடர்ச்சியாக காப்பியடிக்கப்படுகின்றன...எனது ஜோதிட பதிவொன்று 5 இணையதளங்களில் காப்பியடிக்கப்பட்டு வெளியாகின..எனக்கு கிடைக்க வேண்டிய ஹிட்ஸ் அவர்களுக்கு போய்விட்டது..ரொம்ப கொடுமை...
மக்கா விடு யா............. இத நினச்சு மனச போட்டு குழப்பிக்காத... ஜஸ்ட் மேக் இட் ஃப்ரி மாப்ள...
திருடி சுகம் காண்பது வன்மையாக கண்டிக்கத்தது.
இதில என்ன காமெடி எண்டால் என்னுடைய மொக்கை பதிவுகள் சிலவற்றையும் காப்பி பண்ணி இருக்கிறார்கள் என்பது தான்!!!
நிரூ...!
சாட்டையடிப் பதிவு.
அடுத்தவனின் உழைப்பை திருடித்தின்கிறவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். இவர்களுக்கு தங்களின் மீது கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அடுத்தவனின் முதுகிலேறி உலகத்தைப் பார்க்க முனையும் வெண்ணைகள்.
இவர்களைத் திருத்த முடியாது. ஆனாலும், அவதானத்துடன் நாங்கள் இருப்பது முக்கியம்.
பின்னுாட்டம் மட்டுமில்ல- வாக்கும் போட்டாச்சு நிரூ...!
சகோ!நீரூபன்!நீங்கள் குறிப்பிடும் தளங்கள் பெரும்பாலும் இலங்கையைச் சார்ந்தவையா எனத் தெரியவில்லை.அவ்வாறாயின் தகவல் பரப்பும் சேவையை காப்பி பேஸ்டு மூலமாக இவர்கள் செய்கிறார்களா என்ற மாற்றுப்பார்வையே எனக்குத் தோன்றுகிறது.
வேலியில்லாத நிலத்தில் ஆடு,மாடுகள் மேய்வது இயல்பே.தீவிரமான எழுத்துக் காதலர்களுக்கு தனிக்கடையே மிகுந்த பாதுகாப்புத் தரும்.
காப்பி பேஸ்ட் செய்கிறவர்களின் இந்த தளத்திலிருந்து எடுத்தது என்ற தகவலை சொல்வது நாகரீகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
நான் முன்பே ஒருமுறை உங்கள் தலைப்பு வைக்கும் பாணி பற்றிக் குறிப்பிட்டேன்.உங்கள் எழுத்துக்கு கருப்பட்டிச் சாறு ஊற்றி தேனீக்களை வரவழைக்க வேண்டிய அவசியமில்லையென்றே நினைக்கின்றேன்:)
திரைப்படம் எடுத்தவர்கள் திருட்டு வீடீயோக்காரர்களை லபோ திபோன்னு கரிச்சுக்கொட்டுவதே நினைவுக்கு வருகிறது.
சத்தியராஜ் பரம்பரை அப்பா கன்றுடன் மாடு வாங்கும் ஆக்கள்
கண்ட இடத்தில சுடனும்
@கணினி மஞ்சம்
சகோ,
1.கணினிமஞ்சம் எனது பதிவுகளை மட்டுமே 100 வீதம் கொண்டுள்ளது.//
நான் இங்கே கணினி மஞ்சம் பற்றிக் குறிப்பிடவில்லையே, தங்கள் பெயரில் முன்பு இருந்த யாழ்மஞ்சு வின் தளம் பற்றித் தான் குறிப்பிட்டிருக்கிறேன்.
@கணினி மஞ்சம்
2. கருத்துரைகளில் சில நண்பர்களுடைய வாழ்த்துப்பதிவுகள் அவர்களின் அனுமதியுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெயருடன் பிரசுரித்துள்ளேன்//
இக் கருத்திற்குரிய பதிலை, மதிசுதா, வந்தேமாதரம் சசி, முதலிய சகோதரர்கள் வழங்குவார்கள்.
@கணினி மஞ்சம்
5.உங்களைப் போன்று மூன்றாம்தர தலைப்புக்களை வைத்து வயதுக்கு வந்தோருக்கான எச்சரிக்கை இன்றி மொக்கை பதிவுகள் என்ற முகமூடியில் ஒளிந்து வாழ்பவன் இல்லை.//
ஏற்கனவே முன்பு ஒரு முறையும், என் பதிவுகளைப் படிக்காது, நீங்கள் இத்தகைய தொனியில் கருத்தினை வழங்கியிருந்தீர்கள்,
என்னுடைய சுபாவம், நான் எதையுமே சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாத ஆள், அரசியல் பதிவுகள் எழுதும் போது கூட, என்னைத் திட்டி வரும் பின்னூட்டங்களை அனுமதித்திருக்கிறேன்.
ஆனாலும், இப்போதும் கூட சீரியஸ் ஆகாது, என் இயல்பான நிலையிலிருந்தே உங்களுக்கான பதிலினைத் தரலாம் என நினைக்கின்றேன்.
என் பதிவுகளில் மூன்றாம் தர தலைப்பு என்று கூறுவது தொடர்பாக தங்களிற்கு விளகமளிக்கலாம் என நினைக்கின்றேன்.
@கணினி மஞ்சம்
5.உங்களைப் போன்று மூன்றாம்தர தலைப்புக்களை வைத்து வயதுக்கு வந்தோருக்கான எச்சரிக்கை இன்றி மொக்கை பதிவுகள் என்ற முகமூடியில் ஒளிந்து வாழ்பவன் இல்லை.//
காமம் என்றோ, புணர்ச்சி என்றோ, பதிவுகளின் தலைப்பில் வைப்பது ஆபாசம் என்று கருதும் உங்களிடம் சில கேள்விகள் சகோ,
முன்னர் இயங்கிய யாழ் மஞ்சு தளத்தில் உடலுறவினை எப்படி மேற்கொள்வது பற்றியும், காமசூத்திரா சொல்லும் கலைகளின் ஒவ்வோர் படி நிலை விளக்கங்களையும் விளக்கப் படமாக நீங்கள் போட்டு, திரட்டிகளில் இணைத்தும் வைத்திருந்தீங்களே!
அது என்ன ஆபாசம் இல்லையா?
என் பதிவுகளுக்கு மூன்றாம் தரத் தலைப்பு என்றால்,
இங்கே மூன்றாம் தரத் தலைப்பு வைத்த பதிவுகளை விட,
நிறைவான பொருள் தரக் கூடிய தலைப்பு வைத்த பதிவுகள் தான் அதிகம் பேரால் பார்க்க/ படிக்கப்பட்டிருக்கின்றன. என் பதிவுகளில் வயது வந்தோருக்கான விடயங்கள் அடங்கியிருக்கா விட்டாலும்,
ஒரு சில பதிவுகளில் அபாய அறிவிப்பு என்று, தடித்த எழுத்தில் சிகப்புக் கோட்டினால் காட்டப்பட்ட அறிவிப்புக்கள் இது வரை இடம் பெற்றதை நீங்கள் பார்த்ததில்லையா?
அதன் பின்னரும் இப்படிக் குற்றம் சுமத்துவது நியாயமா?
சகோ, உங்களின் இக் கருத்திற்காக நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும், அதே போல வந்தேமாதரம் சசி, மதிசுதா, மற்றும் பலேபிரபு போன்ற பதிவர்களின் பதிவுகளை அவர்களின் அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணி உங்கள் பழைய தளத்தில் பதிவிட்டு வந்தீர்களே,
அதற்காகவும், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
@கணினி மஞ்சம்
5.உங்களைப் போன்று மூன்றாம்தர தலைப்புக்களை வைத்து வயதுக்கு வந்தோருக்கான எச்சரிக்கை இன்றி மொக்கை பதிவுகள் என்ற முகமூடியில் ஒளிந்து வாழ்பவன் இல்லை.
சகோ, கொஞ்சம் சைட் பாரில் பார்க்க முடியுமா?
இது வரை ஆபாசத் தலைப்பு வைத்த பதிவுகளுக்கா, இல்லை அரசியற் தலைப்புக்கல் வைத்த பதிவுகளுக்கா அதிகம் பேர் வருகை தந்திருக்கிறார்கள் என்று?
நான் மொக்கைப் பதிவுகள் மட்டும் போடவில்லை, அரசியல், கவிதை, கதை, என்று பலதரப்பட்ட பதிவுகளை எழுதி வருகின்றேன் சகோ.மூன்றாம் தரத் தலைப்பிற்கும், என் பதிவுகளில் நான் வைக்கும் தலைப்பிற்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா?
மூன்றாம் தரத் தலைப்பு என்பது,புணர்ச்சி என்ற நாகரிகமான இலக்கிய வார்த்தைக்குப் பதிலாக....................................எனும் சொல்லினை வைத்து ஆபாச இணையத் தளங்களில் எழுதப்படும் வார்த்தை.
என்னுடைய பதிவுகளின் தலைப்பில் கொஞ்சம் கவர்ச்சி இருந்தாலும், பதிவின் உள்ளடக்கத்தில், எங்காவது, ஆபாசப் படமோ, இல்லை சீன் படமோ வந்திருக்கிறதா?
சொல்லுங்கள், என் பதிவுகளில் இது வரை எத்தனை பதிவுகளை முழுமையாகப் படித்திருப்பீங்கள்?
சீன் பட சீடி பற்றிய பதிவில் கூட, ஒரு படம் விரக தாபத்தினைத் தூண்டும் வகையிலோ, உடல் உணர்ச்சிகளை உசுப்பி விடும் வகையிலோ வந்ததா என்று சொல்லுங்கள் பார்ப்போம்?
நீங்கள் சொல்லும் மூன்றாம் தரப் பதிவுத் தலைப்புக்களில், ஒரு பதிவிலாவது, ஆபாசமான படம், அல்லது ஆபாசமான விடயங்கள் பச்சையாக எழுதப்பட்டிருப்பதைக் காட்ட முடியுமா?
பதிவர்களின் பதிவுகளை இனியும் நீங்கள் காப்பியடித்து எழுதினால், யாழ் மஞ்சுவைப் பாலோ செய்யும் நபர்கள் அனைவரையும் அவரைப் பாலோ பண்ணுவதை நிறுத்துவதோடு, கூகிளிடமும், திரட்டிகளிடமும் புகார் செய்து இவரின் பதிவுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மிகப் பொறுப்புணர்வுடன், உதாரணங்களோடு பதிவுத் திருட்டுப் பற்றி எழுதிதற்கு நன்றி. இது மிகவும் வருந்தத்தக்க கேவலமான செயல் என்பதில் ஐயமில்லை.
எனது பதிவுகளை பலரும் கேட்டுக் கேள்வி இன்றி எடுத்துப் போடுவதைக் கண்டுள்ளேன். ஆனால் பெரும்பாலும் எழுதிய எனது பெயரையும் சேர்க்கிறார்கள்.
மருத்துவ விடயங்கள் பலருக்கும் சென்றடைவதால் இது பற்றி அலட்டிக் கொள்ளாதிருக்கிறேன்.
#முன்னர் இயங்கிய யாழ் மஞ்சு தளத்தில் உடலுறவினை எப்படி மேற்கொள்வது பற்றியும், காமசூத்திரா சொல்லும் கலைகளின் ஒவ்வோர் படி நிலை விளக்கங்களையும் விளக்கப் படமாக நீங்கள் போட்டு, திரட்டிகளில் இணைத்தும் வைத்திருந்தீங்களே!
அது என்ன ஆபாசம் இல்லையா?#
ஹலோ நீங்கள் எனது தளங்களை பார்வையிட்டதே இல்லை என்பது துலாம்பரமாக தெரிகிறது.யாழ் மஞ்சு தளம் ஒரு கணினித்தளம்.அதில் கணினி சார்ந்த பதிவுகள் தவிர வேறேந்த பதிவும் வந்ததில்லை.அதை கூட பார்க்காமல் குற்றப் பத்திரம் வாசிப்பது எந்த விதத்தில் நியாயம்?
நீங்கள் சொன்ன பதிவுகள் வந்தது யாழ் தாம்பத்தியவாழ்வு எனும் மருத்துவ தளம்.அத்தளத்தில் நுழைவிலேயே Adult Content எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் உங்களுடைய தளத்தில் நுழைவு எச்சரிக்கை எதுவும் இல்லை.பதிவி தலைப்பை வாசிக்க தொடங்கிய பின்பே உங்கள் எச்சரிக்கையை பார்க்க முடியும்.
நீங்கள் சொல்கின்ற இரண்டு தளங்களும் எனது பயனர் கணக்கில இருந்து நீக்கப்பட்டு பல நாட்கள் ஆகிவிட்டது என்பதை முதலில் தெரிந்து கொள்ளும்.
@கணினி மஞ்சம்
நீங்கள் சொன்ன பதிவுகள் வந்தது யாழ் தாம்பத்தியவாழ்வு எனும் மருத்துவ தளம்.அத்தளத்தில் நுழைவிலேயே Adult Content எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் உங்களுடைய தளத்தில் நுழைவு எச்சரிக்கை எதுவும் இல்லை.பதிவி தலைப்பை வாசிக்க தொடங்கிய பின்பே உங்கள் எச்சரிக்கையை பார்க்க முடியும்.//
என்னுடைய பதிவுகளில், நீங்கள் சொல்வது போல, Adult Content எச்சரிக்கை வைக்க, இது என்ன, அந்த மாதிரியான தளமா? என் பதிவுகளைக் கொஞ்சம் விரிவாகப் படிக்கலாமல்லவா. பதிவுகளில் உள்ள விடயங்களில் அப்படியேதும் இருக்காது, சும்மா ஒரு பந்தாவிற்காகத் தான் இப்படியான அறிவிப்புக்களை நான் வைப்பதுண்டு.
#சகோ, உங்களின் இக் கருத்திற்காக நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும், அதே போல வந்தேமாதரம் சசி, மதிசுதா, மற்றும் பலேபிரபு போன்ற பதிவர்களின் பதிவுகளை அவர்களின் அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் பண்ணி உங்கள் பழைய தளத்தில் பதிவிட்டு வந்தீர்களே,
அதற்காகவும், நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும்.#
உமது அபத்தமான கருத்துக்களை முதலில் வாபஸ் பெற்றுக் கொள்ளும்.
வந்தே மாதரம் தளம், வலைச்சரம் சென்று பார்த்தால் தெரியும் அவர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டு அவர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பும் கேட்டு பல மாதங்களுக்கு முன்பே கருத்திட்டிருக்கிறேன்.
அது சரி அவர்களிடம் மன்னிப்பு கேட்கும்படி எனக்கு சொல்ல நீர் யார்?
என்ன பதிவுலகு உம் வீட்டு சொத்தா? அல்லது பதிவுலகின் காவற்காரனாக கூகிள் உம்மை நியமித்ததா?
மதிசுதா இன்று என் சிறந்த நண்பன். நீர் இடையில் யார்? உம் பதிவுகளின் காப்புரிமை என்னால் மீறப்பட்டதா? இல்லையே.உம் சொந்த அலுவலை பார்ப்பதுவே உமக்கு நல்லது.
என்ன பதிவிட சரக்கு தீர்ந்து விட்டது எனபதற்காகவா அல்லது உம் பிரபல்யத்திற்காகவா என்னுடைய மனதை புண்படுத்தி என்மீது சேறு பூசி என்நேரத்தையும் வீணடித்து கொண்டிருக்கீறிர்?
இன்று பல்கலைக்கழக ஆணடிறுதிப் பரீட்சைக்கு செல்ல முதல் உமது வசைமாரிக்கு கருத்திட்டு என்நேரம் வீணானது அறிவீரா?
சரியான கருத்து!
#பதிவர்களின் பதிவுகளை இனியும் நீங்கள் காப்பியடித்து எழுதினால், யாழ் மஞ்சுவைப் பாலோ செய்யும் நபர்கள் அனைவரையும் அவரைப் பாலோ பண்ணுவதை நிறுத்துவதோடு, கூகிளிடமும், திரட்டிகளிடமும் புகார் செய்து இவரின் பதிவுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!#
என்னை பாலோ செய்யும் நபர்கள் அனைவரையும் நிறுத்த நீர் யார்?
கூகிளிடமும், திரட்டிகளிடமும் புகார் செய்து என் பதிவுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க நீர் யார்?
தயவு செய்து உம்வேலையை மட்டும் பாரும்.அடுத்தவன் உம் வசைமாரியை கீழ்த்தரமான வேலையை ஏற்கலாம். ஆனால் என் பெயர் என் தளங்களின் பெயர் எக்காரணம் கொண்டும் உம் தளத்தில் இனி இடம்பெற்றால் நான் சட்டநடவடிக்கையில் இறங்குவேன்.என்னிடம் தற்போது "கணினி மஞ்சம்" என்ற தளம் ம்ட்டுமெ உள்ளது. அதன் பதிவுகளே திரட்டிகளில் இணைக்கப்படுகிறது.அதில் ஒருபதிவாவது வேறு யாருடையது என்று உம்மால் நிருபிக்க முடியுமா?
உமக்கு நேரமில்லாட்டில் வேறு யார் மீதும் சேற்றை வாரி பூசும். என் மீதோ உடல் உள ரீதியான துன்புறுத்தலோ என தளம்மீது முடக்கும் வகையில் ஏதாவது அசாம்பாவிதங்கள் நடந்தால் இலங்கைச் சட்டப்படி எனக்கு கிடைக்கவேண்டிய நியாயத்தை பெற காவற்துறையை நாடுவேன் என்பதை தங்களின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.
@நிரூபன்
திரும்பவும் நீர் இட்ட பதிவை ஆரம்பத்தில் இருந்தே வாசியும். பினவருமாறே குறிப்பிட்டுள்ளீர்
#கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு# என்றே தரப்பட்டுள்ளது.
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி......
மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?
நாம் பதிவுலக நண்பரகளாகக் கூடாதா?
நான் என்றோ உம் நண்பர் வட்டாரத்தில் இணைந்து விட்டேன்.
பதிவை திருடுபவர்களை எதிர்க்க என் கரங்களும் என்றும் உங்களுக்கு உதவும்.
@கணினி மஞ்சம்
ஐயகோ, எனக்குப் பதிவிடச் சரக்குத் தீரவில்லை, கைவசம் பல பதிவுகள் இருக்கின்றன, மதிசுதாவிற்கு நான் யாரா..
அதனை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் சகோ.
இன்னொரு விடயம், நான் சொல்லுவது, இனிமேல் நீங்கள் முன்பு போல காப்பி பேஸ்ட் பதிவுகளை எழுதினால்... என்று.
@கணினி மஞ்சம்
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி......
மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?
நாம் பதிவுலக நண்பரகளாகக் கூடாதா?
நான் என்றோ உம் நண்பர் வட்டாரத்தில் இணைந்து விட்டேன்.
பதிவை திருடுபவர்களை எதிர்க்க என் கரங்களும் என்றும் உங்களுக்கு உதவும்.//
மச்சான், நான் இதுவரை எழுதிய பதிவுகள் குறைந்த தொகை தான், உங்களின் பெயரை வைத்து பிரபலமாக வேண்டும் எனும் நோக்கம் எனக்கில்லைச் சகோ.
பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருக்கிறேன்.
யாருடைய மனமாவாது புண்படும் வகையில் நான் இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும் என்று.
இதுவரை நான் எழுதிய பதிவுகளைப் படித்தாலே தெரியும், நான் யாரையும் வசை மாரி பொழிந்து, சேற்றை வாரி இறைத்தோ பதிவெழுதுவதில்லை.
நான் ஒரு ஜாலியான டைப் மச்சி.
பதிவில் நீங்கள் இட்ட, உங்களின் முதலாவது பின்னூட்டத்தின் மூலம் நீங்கள் சவால் விட்டது தான்....பின்னர் வந்த என் பின்னூட்டங்களுக்கு காரணமாகியது.
வெள்ளைவானுக்கு நான் பயமே தவிர,
என்னிடம் வெள்ளை வான் அனுப்பும் அளவிற்கு ஒரு பழக்கமும் கிடையாது,
நான் பிறந்த மண், என் அன்னை ஊட்டிய தாய்ப் பால்...என்னை அந்தளவிற்கு கொடூரமானவனாக....துரோகியாக மாற்றவில்லைப் பாஸ்.
நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.
@கணினி மஞ்சம்
@நிரூபன்
திரும்பவும் நீர் இட்ட பதிவை ஆரம்பத்தில் இருந்தே வாசியும். பினவருமாறே குறிப்பிட்டுள்ளீர்
#கணினி மஞ்சம் -யாழ் மஞ்சு# என்றே தரப்பட்டுள்ளது.//
ஓ...அதுவா, முன்னாள் யாழ்மஞ்சு, இப்போதைய கணினி மஞ்சம் என்பதனை விளிக்கப்வே அவ்வாறு எழுதினேன்,
என் பதிவின் மூலம் உங்கள் மனம் புண்பட்டிருந்தால், மன்னிக்கவும் சகோதரா.
@கணினி மஞ்சம்
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி......
மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?
நாம் பதிவுலக நண்பரகளாகக் கூடாதா?
நான் என்றோ உம் நண்பர் வட்டாரத்தில் இணைந்து விட்டேன்.
பதிவை திருடுபவர்களை எதிர்க்க என் கரங்களும் என்றும் உங்களுக்கு உதவும்.//
மச்சி, சும்மா காமெடியாத் தான் எழுதிக்கிட்டிருந்தேன், சிவனே என்று காமெடி, அரசியல் என எழுதிக் கொண்டிருந்த என் பதிவில் மல்லுக்கட்டியது நீங்கள்.
அதன் பின்னர் தான் உங்களைப் பற்றிய வலைச்சர அறிமுகம் என் நண்பர்கள் மூலமாக எனக்கு கிடைத்தது.
அதன் பின்னர் தான் தங்களின் பழைய பதிவினை நான் ஆராய வேண்டிய தேவை உருவாகியது.
இனிமேல் காப்பி பேஸ்ட் எழுத மாட்டீங்கள் எனும் உங்கள் முடிவினை நான் வரவேற்கிறேன்.
வாழ்த்துக்கள் சகோ.
என் முயற்சிக்கு கை கொடுக்கும், உங்களுக்கும் நான் என்னுடைய பங்களிப்பினை நல்கிறேன்.
மாப்பிள இண்டைக்கு உனக்கு நித்திரை இல்லை.... காப்பி அடிக்க வேண்டாம் என்று கூறாதீர்கள்.. அதை நாங்கள் செய்யாவிட்டால் எப்படி நாங்கள் பதிவ போடுவது சொந்தமாக பதிவ போடுவதற்கு தலையில் ஏதோ இருக்க வேண்டுமாம்..? எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லுவா காட்டான்ட தலையில களிமண்னுதான் இருக்கெண்டு.. அப்ப நாங்க என்ன செய்யுறது... இப்பதான் என்ர மனிசியும் காட்டானும் ஏதோ கிறுக்கிறான்னு ஒரு பாசத்தோட இருக்கிறாள்.. அதில நீ கல்லை தூக்கி போடலாமா.. நீ என்னுடைய ஒரு பதிவில பெண்களை இறக்குமதி செய்யாதீர்கள் என்று நகைசுவையாக கேட்டீர்கள் அதில் இருந்துதான் எனது அடுத்த பதிவு காட்டான் பிடித்த கிளி போட்டேன்..இப்படி நீ எடுத்து தருவதால்தான் நானும் ஏதோ எழுத்து கூட்டி பதிவ போடுறேன்.. நீ அதுக்கும் ஆப்ப வைச்சா நாங்க எங்க போறது இப்ப கூட எனது அடுத்த பதிவு நீ எழுதிய ராயபக்ஸவுக்கு சூனியம் வைக்கலாமான்னு எழுதியதை அடிப்படையாக வைத்துதான் எனது அடுத்த பதிவ போடலாம்ன்னு இருந்தேன்...நீ எனக்கு செய்தது துரோகம்.. இதுக்கு பிராயசித்தம் நான் இன்று போட்ட நடந்தது என்ன காட்டானின் வாக்கு மூலம் என்னும் பதிவ ஆயிரம் தடவைகள் வாசிக்க வேண்டும்.. இத விட சிறப்பான தண்டனையை அந்த மஞ்சுவோ குஞ்சுவோ உனக்கு பெற்று தர முடியாது...!!!!???
என்ன நடக்குது நாட்டில ஒரு கருத்த சிண்டு முடிஞ்சு பதிவம் என்று நான் வந்தால் அதற்குள் நீங்கள் சமாதானமாகி விட்டீர்களா..!? வெள்ளவானுக்கு எப்பிடி பயபடுகிறீர்கள்... இதுக்குதான் சொல்லுறது மாட்டு வண்டிய வைச்சிருக்கோனும்ன்னு...!!!
அட மறந்து போனன் ஆ....
காட்டான் குழ போட்டான்...
உண்மையில் இது கண்டிக்கப்படவேண்டிய விடயம் பலர் பதைப் பேசிய படியால் நிரூவிற்கு வாழ்த்துச் சொல்லி விடைபெறுகின்றேன் .இதன் வலி எழுதும் போதுதான் தெரியும் நேரமும் கற்பனையும் திருடும் போக்கு! நல்ல பதிவு .சிலரை அறிமுகம் காட்டி என்னையும் சுயமாக சிந்திக்கவும் யார் யாருடைய பதிவை படிக்கனும் என்ற தெளிவு ஏற்பட்டுள்ளது. கருத்துச்சுதந்திரம் பலரை வில்லன் ஆக்கின்றது. உங்கள் வலைப்பதிவுகளில் நானும் ஒரு கும்மியடிக்கும் வாசகன் சிலதுக்கு கோபம் வரும் போது உங்களுடன் முரன் பட்டாலும் மதிக்கும் நண்பன் .!
மீண்டும் சில வாரத்தின் பின் சந்திப்போம்!
கடவுளே.. அரசியலில்தான் ஓட்டுக்கு அடிபாடு எனப் பார்த்தால், பதிவுலகிலுமோ? இது என்ன அநியாயம்... ஆனாலும் எப்படிக் கண்டுபிடிக்க முடியும், யாராவது சொன்னால்தானே எமக்கு தெரியவரும், எல்லா இடமும் போகிறோமா இல்லையே.
நல்ல பகிர்வு, இதைப் பொறுக்க முடியாமல்தான் பூஸார் ஏறிப் பிரிண்டரில் இருக்கிறார்போல அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)))
பிரபலம் எண்டாலே இது பிரச்சனை தான். அதுவும் நீங்க பெரும் பிரபல பதிவர். சமாளிச்சு போங்கோ சகோ!
அதே ஆதங்கத்தில் தான் நானும் இருகக்கிறேக் நன்பரே...
தாங்கள் குறிப்பிட்ட அந்த தளங்களில் என்னுடைய எல்லா கவிதை மற்றும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன...
என்ன செய்வதென்றே புரிய வில்லை...
கண்டிப்பாக ஏதாவது ஒரு தீர்வு வரும் என்று நம்புவோம்...
ஒரு பதிவை எழுத எவ்வளவு ஜோசிக்க வேண்டி இருக்கு பின் அந்தப்பதிவு கொப்பி செய்யப்பட்டால் கவலைக்குறிய விடயமே.இந்த விசயத்தில் நான் உங்களுக்கு ஆதரவுதான் பாஸ்
எனக்கு அந்த வலி அதிகம் தான். காபி செய்ய நான் அனுமதி கொடுத்துள்ளேன் ஆனால் எனது தள முகவரியோடு. அதை நிறைய பேர் செய்வதே இல்லை.
@கணினி மஞ்சம்
நீங்கள் சொன்ன பதிவுகள் வந்தது யாழ் தாம்பத்தியவாழ்வு எனும் மருத்துவ தளம்.அத்தளத்தில் நுழைவிலேயே Adult Content எச்சரிக்கை செய்தி வழங்கப்பட்டிருந்தது.ஆனால் உங்களுடைய தளத்தில் நுழைவு எச்சரிக்கை எதுவும் இல்லை.பதிவி தலைப்பை வாசிக்க தொடங்கிய பின்பே உங்கள் எச்சரிக்கையை பார்க்க முடியும்.//
நேற்றைய தினம் உங்களுக்குப் பரீட்சை இருக்கிறது என்று கூறிய காரணத்தால், மௌனமாக இருந்து விட்டேன், சகோ, என் தளத்தில் ஆபாசப் பதிவுகள்- பச்சை பச்சையான பதிவுகள் இருக்கின்றது என்று நீங்கள் கூறுவதற்கான சான்றுகளை முன் வைக்க முடியுமா?
இல்லையேல் இந்தக் கருத்துக்களுக்காக நீங்கள் இப்போது மன்னிப்புக் கேட்க வேண்டும்.
@கணினி மஞ்சம்
என்னை பாலோ செய்யும் நபர்கள் அனைவரையும் நிறுத்த நீர் யார்?
கூகிளிடமும், திரட்டிகளிடமும் புகார் செய்து என் பதிவுகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க நீர் யார்?
தயவு செய்து உம்வேலையை மட்டும் பாரும்.அடுத்தவன் உம் வசைமாரியை கீழ்த்தரமான வேலையை ஏற்கலாம். ஆனால் என் பெயர் என் தளங்களின் பெயர் எக்காரணம் கொண்டும் உம் தளத்தில் இனி இடம்பெற்றால் நான் சட்டநடவடிக்கையில் இறங்குவேன்.என்னிடம் தற்போது "கணினி மஞ்சம்" என்ற தளம் ம்ட்டுமெ உள்ளது. அதன் பதிவுகளே திரட்டிகளில் இணைக்கப்படுகிறது.அதில் ஒருபதிவாவது வேறு யாருடையது என்று உம்மால் நிருபிக்க முடியுமா?//
இதோ, நிரூபிக்கிறேன், சகோதரன் சின்மயனின் வலையில் வந்த இளம் விஞ்ஞானி சபேசன் பற்றிய பதிவினை அவரது அனுமதியேதுமின்றிக் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தளத்தில் பதிவிட்ட பின்னர்,
சின்மயன் வந்து தனது தளத்திலிருந்து அந்தப் பதிவினை நீங்கள் எடுத்திருப்பதாக கூறிய பின்னர், தான் அந்தத் தளத்தினைக் காப்பியடித்ததாக கீழே சுட்டியிருக்கிறீர்கள். இது போதுமா சகோ.
இதோ இணைப்புக்கள்.
http://nizal-sinmajan.blogspot.com/2011/07/blog-post.html
இது சின்மஜனின் பதிவிற்கான இணைப்பு,
சின்மஜனை காப்பி செய்த உங்கள் பதிவின் இணைப்பு இதோ.
http://pc-park.blogspot.com/2011/07/blog-post.html
@கணினி மஞ்சம்
என்ன நிரு வெள்ளை வான் வருமா?
ஹி ஹி......
மோதலில் காதல் மட்டுமா பிறக்கனும்?//
அடுத்து வெள்ளை வான் பற்றிய பேச்சினை ஆரம்பித்து, என்னைப் பயமுறுத்தும் நோக்கில் அப்பட்டமான ஊடகச் சுதந்திர மீறலை, கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் செயலில் ஈடுபட்ட நீங்கள் உடனடியாக இந்தக் கருத்திற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும். எதிர்காலத்தில் எனக்கு எம் நாட்டின் எந்தப் பகுதியிலாவது என் உயிருக்கு அச்சுறுத்தல் நிகழும் சந்தர்ப்பத்தில்- அதற்கான முழுப் பொறுப்பினையும் தாங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மன்னிச்சுக்கோடா மச்சி வாரம் ஒருமுறை வாற என்னை இடையிலேயே உன் பதிவு வர வச்சிட்டுது முதல்ல வந்திருந்தால் கன பேரை புட்டுப் புட்டு வச்சிருப்பேனே.....
ஒரு வசனத்தை பார்வைக்கு வைக்கிறேன்... மன்னிப்புக் கேட்கத் தெரிந்தவன் மனிதன் மன்னிக்கத் தெரிந்தவன் கடவுள்... எந்தத் தப்பையும் தப்பென்று உணரும் போது ஏற்கப் பழக வேண்டும் இங்கு நிருபன் எனது பெயரை இழுத்த இடங்களில் உண்மையே பரிந்துரைக்கப்பட்டுள்ளது...
இங்கு வந்து இறுதிப் பின்னூட்டம் வாசித்த போது தான் மிகவும் மனவருத்தப்பட்டுக் கொண்டேன் சின்மஜன் என்பவர் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராகும். எனது தளத்தின் பதிவர் அறிமுகத்தில் மஞ்சுவை அறிமுகப்படுத்தும் போது அதே பதிவு தான் எனக்குப் பிடித்த பதிவாகச் சொன்னேன்... அதை சின்மஜன் பார்த்திருந்தால் இவன் தனது பதிவை வாசிப்பதில்லைத் தானே என்றல்லவா நினைத்திருப்பான்.... மஞ்சு நீங்கள் எனது நண்பர் தான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் எப்பவும் எமது வேர்வைக்குக் கிடைக்கும் பாராட்டே பெருமதியானதுப்பா....
மிகுதிக்கு இரவு வருகிறேனே...
ஞ்சானமுத்து என்டவரும் கோப்பி பேஸ்ட் கில்லாடி,
மஞ்சு நீங்கள் என்னைமட்டுமல்ல நான் செய்த பதிவர் அறிமுகம் என்ற பகுதியையுமே ஏமாற்றி விட்டீர்கள். இனிமேல் நான் ஒரு சிறந்த எழுத்தாளனை அறிமுகப்படுத்தினால் கூட இதுவும் திருட்டுப் பதிவு தானோ எண்டு சிந்திப்பாங்கள்... உங்களுக்கெல்லாம் எப்படித் தான் மற்றவருக்கு சேர வேண்டிய பாராட்டைப் பெற மனம் வருகுதோ தெரியவில்லை. நான் தங்களை உங்கள் உண்மைப் பதிவக்கான லிங்கைத் தாருங்கள் என்ற போது என்ன துணிவில் தந்தீர்கள். இப்படியான பதிவுலகப் பிழைப்பும் தேவையா ?
மஞ்சு தங்களின் பதிவு ஆர்வம் தெரிகிறது. எனத அனுபவத்திற்கு எட்டிய வரை ஒரே ஒரு வழி தான் இருக்கு நீங்கள் இனி சொந்தமாக எழுதினாலும் இதே சந்தேகக் கண்ணோடு தான் நான் கூடப் பார்ப்பேன் அப்படித் தங்களுக்கு எழுதும் ஆர்வம் இருந்தால் புதிய தளம் ஒன்றைத் திறந்து தங்கள் சொந்தப் பதிவுகளை இட்டு எழுத ஆரம்பியுங்கள்...
இங்கும் ஒரு வசனத்தை விட்டுச் செல்கிறேன் நான் பதிவர்களுடன் தொலைபேசி உரையாடல் நிறுத்தி ரொம்ப நாளாச்சி....
வணக்கம் நண்பா ,
என்பெயர் விஜி,
எனக்கு உங்களை போல் எழுத
தெரியாது ....படிக்க மட்டும் தான் தெரிஉம்
...எனக்கு பிடித்ததை சேமிக்க மட்டும் தான்
நான் என் வெப்ஸைட் டை பயன் படுத்துகிறேன்,,,
அதாவது நான் படித்தை மீண்டும் மீண்டும் படிப்பதற்கு....
ஆனால் நான் எந்த வெப்ஸைட் டில் இருந்து எடுத்தேனோ அவர்களுக்கு நன்றி கூறுவேன்....
Post a Comment