கேள்வி கேட்கையில் சொல்ல முடியாத சில பதில்களுக்காக, அவர் வெளிக்காட்டிய மழுப்பல் கலந்த புன்னகை போல உன் புன்னைகையும் இருந்து விடுமா என்று என்னுள் நானே ஐயம் கொள்வதுண்டு. ஆனாலும் நீ அவ்வாறில்லை. மனமென்னும் இதய அறையின் குருதி நாளங்களை மெது மெதுவாக உசுப்பி விட்டு, காதல் குளமென்ற ஒன்றை என்னுள் உருவாக்கி விட்டாய். ’ஏன் என்னுள் இப்படி ஒரு மாற்றம்? புரியாத கவிதைகளையா இல்லை, கவிதை கலந்த உரை நடையினையா நான் எழுதுகின்றேன். எங்கோ தொடங்கி, எங்கோ முடிவடையப் போகின்றதா இந்தக் காவியம்? சொல்! ஏதாவது சொல்! உனக்கான நினைவுகளை இப்படியாவது எழுதித் தொலைக்கலாம் என்றல்லவா எண்ணியிருந்தேன்.
எதுவும் புரியாத நிலையில் நின்று, காதல் தந்த போதையில் உழன்று இன்று நீ இல்லையே என நான் தவிப்பதாலா இந்த மாற்றம்? நான் என்ன எழுதுகின்றேன் என்பது தெரியாத நிலையில், இருக்கும் போது, உன்னை எழுதலாம், மேலும் மேலும் எழுதி உன்னுள் என் எழுத்தை மெருகேற்றலாம் என எண்ணியிருக்கையிலோ, விழித்துப் பார்க்கிறேன். என் அருகே நீ இல்லை. அர்த்த இராத்திரிகளின் ஒவ்வோர் பொழுதுகளையும் அர்த்தமுள்ளதாக்கும் உன் கூந்தல் முடிகள் என நான் நினைத்துப் படுக்கையில் புரளுகையில், புரண்டெழுந்து நிமிர்ந்து பார்க்கையில் என் அருகே நீ இருக்க மாட்டாய். ஓ அப்படியாயின் இது கனவா?
சே....சே இருக்காது. அவளைப் பற்றிய நினைவுகள் எப்படிக் கனவாக முடியும்?
செம் புழுதித் தெருக்களில் செருப்புத் தடங்களைப் பின்பற்றித் தேடிய என் மன விழிகளுக்குப் பொய் சொல்லி, அவ்வளவு இலகுவில் என்னை விட்டு நீ பிரிந்து விட முடியுமா?
நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இல்லாத ஒரு பொருளின் நினைவலைகளை எப்படிப் பத்திரப்படுத்தி வைக்க முடியும்? ஓ.... இப்போது தான் நினைவுக்கு வருகின்றது. விமானக் குண்டு வீச்சின் அழியாத வடுவாக என் கையில் இருக்கும், தழும்பிலிருந்து உன் நினைவுகள் இன்றும் வந்து போகின்றதே. அப்படியாயின் நீ எங்கே? உன்னை தொலைத்து விட்டுத் தேடுகிறேனா?
இல்லை, நீ என்னுள் உறைந்ததனால் தவிக்கிறேனா?
ஓ.....இப்போது தான் உய்த்தறிந்து கொண்டேன்.
அன்றைய தினம் மாலை வேளை...........................
பசியும், தேடலும் தொடரும்.......
இத் தொடரின் இரண்டாம் பாகத்தினைப் படிக்க:
http://www.thamilnattu.com/2011/07/blog-post_8418.html
பசியும், தேடலும் தொடரும்.......
இத் தொடரின் இரண்டாம் பாகத்தினைப் படிக்க:
http://www.thamilnattu.com/2011/07/blog-post_8418.html
|
63 Comments:
ஹாய் பாஸ்
காலை வணக்கம்...எனக்கு கொஞ்சம் காச்சல் அதனால வேலைக்கு முழுக்கு இன்னிக்கு!
என்ன பாஸ் திடீரெண்டு இந்த மாதிரி கெளம்பிட்டீங்க??
எனக்கு தான் காச்சல் எண்டு பாத்தா உங்களுக்கு வேற காச்சல் போல ஹிஹி
//அர்த்தமுள்ளதாக்கும் உன் கூந்தல் முடிகள் என நான் நினைத்துப் படுக்கையில் புரளுகையில், புரண்டெழுந்து நிமிர்ந்து பார்க்கையில் என் அருகே நீ இருக்க மாட்டாய். ஓ அப்படியாயின் இது கனவா? //
காதலில் பிதற்றல் கூட அருமை தான் பாஸ்!
//நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். //
எங்க பாஸ்???சொல்லுங்க எங்க???
சுவிஸ் பேங்க் இல்ல தானே?
பசியும் தேடலும் தொடரட்டும்!!!
(பசிச்சா போயி சாப்பிடுவீங்களா...அத விட்டிட்டு...)
//புன்னகைகளால், ஒரு தேசத்தின் இருப்பினை- அடையாளத்தினைக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மடிந்தவர் ஒருவர் இருக்கிறார்.//
யார் நண்பா அது ?
மகாத்மா காந்திதானே!
ஒரு மிஸ்ட் கோலில் தான் இன்றைய காதலின் நீடித்து நிலைக்கும் பண்பு தங்கியிருக்கிறது. அன்பின் வெளியீடாய் அவளிடமிருந்து கிடைக்கும் மிஸ்ட் கோலும், தன் பண பலத்தின் குறியீடாய் ஆடவன் மேற்கொள்ளும் அழைப்பும் கதிரியக்கம் மூலமாக காதல் இயங்க வேண்டும் எனும் தொனிப் பொருளை விளக்கி நிற்கிறது.
காசு இருக்கோ இல்லையோ கடன் பட்டாவது கிட் கார்டு வாங்கி கால் பானுவமெள்ள
அவளது ஒவ்வோர் அசைவுகளும், என்னுள் வந்து போகையிலும், என் மன அலைகளைச் சிதறடித்து விட்டுச் செல்லுகையிலும், என் இருத்தல்கள் சில வேளை, இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு, எங்கோ ஓர் தொலை தூர வெளியில் நான் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற பேரின்பத்தை அடைந்து கொள்கிறேன்.
கற்பனையில் தான் காதல் ருசி கைக்கு கிடைச்சால் கண்ண்டுக்கவே மாட்டாங்க
புன்னகைகளால், ஒரு தேசத்தின் இருப்பினை- அடையாளத்தினைக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மடிந்தவர் ஒருவர் இருக்கிறார்.
எத எழுத போனாலும் நாட்டு பற்று அதுக்குள்ள புகுவது தவிர்கமுடியாத ஒன்று சொந்த மண் எழுத்தாளர்களுக்கு
சே....சே இருக்காது. அவளைப் பற்றிய நினைவுகள் எப்படிக் கனவாக முடியும்?
செம் புழுதித் தெருக்களில் செருப்புத் தடங்களைப் பின்பற்றித் தேடிய என் மன விழிகளுக்குப் பொய் சொல்லி, அவ்வளவு இலகுவில் என்னை விட்டு நீ பிரிந்து விட முடியுமா?
கச்ற்றப்பட்டவனுக்கு தான் அதன் வலி தெரியும்
இல்லை இழந்து விட்டோம் என்பதற்காக மறந்து விடவில்லை குறை கஊருவதும் இல்லை ( இந்த பலம் புளிக்கும்) இறக்கும் வரை இதயத்தில் உணர்வுகள் உயிர்கொடுக்கும் காதலுக்கு ( அது எது எண்டாலும்)
ஒன்று சொல்ல விரும்புகின்றேன்
இந்த பதிவி மிகவும் அளவான அழகான பதிவு. சிக்கென்று இருக்கு
SHORT AND SWEET
VERY INTERESTING WHEN YOU WRITE YOUR FEELING
டிஸ்கி - ஒரு ஆக்கத்தின் கட்டமைப்பு எவளவு முக்கியம் இந்த அவசர யுகத்தில் என்பதை இதில் இருந்து கற்றுக்கொண்டேன்
காதல் கவிதை கலந்த கட்டுரையா இது?
Super . . . Super . . Super . . .
உரைநடையிலும் கவிதை பலே.அருமையான பதிவு சகோ காதலில் சுகித்து பதிவிட்டுள்ளீர்கள்
சகோ.... காதலில் விழுந்தேன் என்கிறீர்களா?
வரிக்கு வரி காதல், எழுதிய விதம சூப்பர் சகோ'
என்னமா ஆராய்ச்சி பண்றாரு நிரூபன் .. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
புன்னகையில் எனக்கு அன்னை தெரேசா தான் ஞாபகம்!
காதல்வலியை எடுத்து இயம்புவது ஞாபக மீட்டலாக இருக்கும் அதனூடு ஒரு விடுதலையாக இருக்கலாம் தொடருங்கள் சகோ!
காய்ச்சல் வந்தால் மருந்தைப் போட்டுட்டு விடுமுறை எடுத்தவர் வீட்டில் நித்திரைகொள்ளனும் பதிவில் வந்து கும்மியடிக்கும் மைந்தன் சிவாவின் மேலதிகாரிக்கு ஒரு மெயில் போடனும்!
காதலின் காய்ச்சல் நிரூவிற்கு ஒரு மயில் தேடனும்!
ஏழாவது ஒட்டு
//மெதுவாய் மன அறைகளில் வந்து குந்தியிருக்கும்; எளிதில் தூரத் தள்ளி விட முடியாத அவளைப் பற்றிய நினைவலைகள், எப்போதும் போல, என்னுள் என்னையறியாமல் ஆடவனுக்கான என் அடையாளத்தினை உணர்த்தி விட்டுச் செல்லுகின்றன//
இதில் கண்ணியம் மிக்க ஆண்மை தெரிகிறது ...
வாழ்த்துக்கள்
உடல் சார்ந்த பசியாய் இல்லாது
உணர்வு சார்ந்த தேடலாய் இருந்தால்
காதல் கரையேறும்......
நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
aha!....This is love isn't it love....
http://kovaikkavi.wordpress.com
Vetha.Elangathilakam
ஹா ஹா முக்கியமான ஆராய்ச்சி
காதலையும் பசியையும் யாராலும் தடுக்க அல்லது தவிர்க்க முடியாது. மறைத்து வைக்கலாம்
மறந்து இருக்க முடியாது
நன்று நிரூபன்
காதல் காதல்காதல்காதல்காதல்காதல்....கவிதை!..........மாப்ள நல்லாத்தானய்யா இருந்த!
நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். காதல் ஒரு மனம் சார்ந்த பசியே. . .
என்னையா நடக்குது இங்க.. கொஞ்ச காலமா எல்லா பதிவர்களுக்கும் காதல்கிளிகள் அம்புட்டுட்டோ.. குடுத்து வைசிருக்கீங்க மாப்பிள.. காட்டானும் காதல் செய்ய கிளம்பிவிட்டான்..
என்ர செல்லமே எங்கையம்மா போட்ட..!?
காட்டானுக்கும் காதல் வந்துவிட்டது உங்களால்...
காட்டான் குழ போட்டான்...
ஆமா !காதலில் விழுந்திட்டாங்களென்றால் அவங்களுடைய phone busyயாகத்தானே இருக்கும்....
எல்லாமே மிஸ்கோலின் வேலை..
/அவளது ஒவ்வோர் அசைவுகளும், என்னுள் வந்து போகையிலும், என் மன அலைகளைச் சிதறடித்து விட்டுச் செல்லுகையிலும், என் இருத்தல்கள் சில வேளை, இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு, எங்கோ ஓர் தொலை தூர வெளியில் நான் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற பேரின்பத்தை அடைந்து கொள்கிறேன்./
நல்ல கற்பனைவளத்துடன் எழுதியிருக்கிறீங்க...
யதார்த்தமான பதிவு..
வாழ்த்துக்கள்..
///காதல் உடல் சார்ந்த பசியா அல்லது உணர்வு சார்ந்த தேடலா!/// தெரியிலேயேப்பா (கூடவே நாயகன் பாக்கிரவுண்ட் மியூசிக் ஒளிபரப்பாகிறது)
///இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு, எங்கோ ஓர் தொலை தூர வெளியில் நான் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற பேரின்பத்தை அடைந்து கொள்கிறேன். /// யாரையும் காதலிச்சு பார்ப்பம் வருதா எண்டு... எண்டாலும் நிரூபன் போல காதலில் அனுபவசாலிகள் சொல்லேக்க கேக்க தான் வேணும் ஹிஹி
///புன்னகைகளால் எதனையும் வாங்க முடியும் என்பதற்குமப்பால், புன்னகைகளால், ஒரு தேசத்தின் இருப்பினை- அடையாளத்தினைக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மடிந்தவர் ஒருவர் இருக்கிறார். கேள்வி கேட்கையில் சொல்ல முடியாத சில பதில்களுக்காக, அவர் வெளிக்காட்டிய மழுப்பல் கலந்த புன்னகை போல /// ம்ம்ம் அந்தாளின்ர அந்த புன் சிரிப்பே பலரை கட்டி போட்டுவிடும் ;-(
எங்கெல்லாம் தொட்டு செல்லுரிங்க பாஸ் , அருமை
////என் அருகே நீ இல்லை. அர்த்த இராத்திரிகளின் ஒவ்வோர் பொழுதுகளையும் அர்த்தமுள்ளதாக்கும் உன் கூந்தல் முடிகள் என நான் நினைத்துப் படுக்கையில் புரளுகையில், புரண்டெழுந்து நிமிர்ந்து பார்க்கையில் என் அருகே நீ இருக்க மாட்டாய். /// யாரு ...அந்த நேமிசாவா ...))
உங்கள் தேடலோடு நானும் தொடர்கிறேன், அடுத்த பகுதிக்கான எதிர்பார்ப்புடன்....
///புன்னகைகளால் எதனையும் வாங்க முடியும் என்பதற்குமப்பால், புன்னகைகளால், ஒரு தேசத்தின் இருப்பினை- அடையாளத்தினைக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மடிந்தவர் ஒருவர் இருக்கிறார். கேள்வி கேட்கையில் சொல்ல முடியாத சில பதில்களுக்காக, அவர் வெளிக்காட்டிய மழுப்பல் கலந்த புன்னகை போல /// இந்த வரி யாரை நினைத்து எழுதப்பட்டது என்று இது வரை மேலுள்ள பின்னூட்டத்தில் யாரும் கண்டு கொள்ளவில்லையே.. ஐ.. அப்போ நான் தான் கெட்டிக்காரனா ;-))
//////
மனமென்னும் இதய அறையின் குருதி நாளங்களை மெது மெதுவாக உசுப்பி விட்டு, காதல் குளமென்ற ஒன்றை என்னுள் உருவாக்கி விட்டாய். ’ஏன் என்னுள் இப்படி ஒரு மாற்றம்?////
இதுதான்
காதல் பற்றிக்கொள்ளும் அழகிய தருணங்கள்...
///
சே....சே இருக்காது. அவளைப் பற்றிய நினைவுகள் எப்படிக் கனவாக முடியும்?/////
அவள்..
விலக விலக விஸ்வரூபம் எடுப்பவள்..
அவள்
தூரத்தில் சென்றாலும்
அதிகரிக்கும் அவளின் நெருக்கங்கள்..
ரசணையான தொடக்கம்...
சிறப்பாக செல்ல வாழ்த்துக்கள்...
ஒரு மிஸ்ட் கோலில் தான் இன்றைய காதலின் நீடித்து நிலைக்கும் பண்பு தங்கியிருக்கிறது. அன்பின் வெளியீடாய் அவளிடமிருந்து கிடைக்கும் மிஸ்ட் கோலும், தன் பண பலத்தின் குறியீடாய் ஆடவன் மேற்கொள்ளும் அழைப்பும் கதிரியக்கம் மூலமாக காதல் இயங்க வேண்டும் எனும் தொனிப் பொருளை விளக்கி நிற்கிறது.
ஆரம்மப்த்தில்லையே மிகப்பெரிய உண்மையை வெளிப்படுத்தி இருக்கீங்க பாஸ் சுப்பர்
ரெண்டும் சேர்ந்தது தானே மாப்பு?
தொடருமா...இதுல எல்லாம் சஸ்பென்ஸ் வைக்கலாமா?
காதல் ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற வாழ்த்துக்கள் பாஸ் ......
//எளிதில் தூரத் தள்ளி விட முடியாத அவளைப் பற்றிய நினைவலைகள்,//
உண்மையான உணர்ச்சி வரிகள்
//அவளைப் பற்றிய நினைவுகள் எப்படிக் கனவாக முடியும்?
நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
நீ எங்கே? உன்னை தொலைத்து விட்டுத் தேடுகிறேனா?
இல்லை, நீ என்னுள் உறைந்ததனால் தவிக்கிறேனா?//
அற்புதமான தினம் கொல்லும் நினைவலைகளின் வரிகள்... வாழ்த்துக்கள் நண்பா
அண்ணன் லவ் மூட்ல கலக்கி இருக்காரு......
கவிதையாய் செல்கிறது,தொடருங்கள் நிரூபன்.
அருமையான , காதல் மயமான தொடக்கம்..
தொடர்ச்சியை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்..
நிரு.. ஏன் டாஸ்போர்டில் இப்ப தான் அப்டேட் ஆகுது..
நிரு.. ஏன் டாஸ்போர்டில் இப்ப தான் அப்டேட் ஆகுது..
நிரு.. ஏன் டாஸ்போர்டில் இப்ப தான் அப்டேட் ஆகுது..
//நீ இல்லை என்றாலும், நான் உன் நினைவுகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.//
அதுதான் காதல்.
//மனமென்னும் இதய அறையின் குருதி நாளங்களை மெது மெதுவாக உசுப்பி விட்டு, காதல் குளமென்ற ஒன்றை என்னுள் உருவாக்கி விட்டாய்.//
பெண்ணின் மனம் போல் ஆழமான குளம்!
அருமை நிரூ.
காதலா?? தொடரட்டும் தொடரட்டும்!
//புன்னகைகளால் எதனையும் வாங்க முடியும் என்பதற்குமப்பால், புன்னகைகளால், ஒரு தேசத்தின் இருப்பினை- அடையாளத்தினைக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து மடிந்தவர் ஒருவர் இருக்கிறார்.
கேள்வி கேட்கையில் சொல்ல முடியாத சில பதில்களுக்காக, அவர் வெளிக்காட்டிய மழுப்பல் கலந்த புன்னகை போல உன் புன்னைகையும் இருந்து விடுமா என்று என்னுள் நானே ஐயம் கொள்வதுண்டு.//
இந்த உவமை ஒப்பீடு பலபேருக்கு வெளிப்படையாய் புரியாது பாஸ் புரிந்த பின்புதான் யோசிப்பார்கள் அதுவா... இது...... காதலியின் புன்னகைக்கு அருமையான ஒப்பீடு
தொடக்கத்தில் கொஞ்சம் விளங்காடிலும் பிறகு எல்லாம் புரிந்தது...கனமான பதிவு...
எனது கனா.................
////அர்த்த இராத்திரிகளின் ஒவ்வோர் பொழுதுகளையும் அர்த்தமுள்ளதாக்கும் உன் கூந்தல் முடிகள் ////
ஏன்யா சும்மா இருக்கிறவனுக்கு காதல் மூட் வர வைக்கிறே...
அந்த சுகமான காதல் நினைவுகளை தரம் பிரித்து அவற்றை சரியாக கண்டுகொள்வதில் இருக்கும் அந்த குழப்பமோ ஒரு தனி சுகம்.. குழப்பத்தில் மகிழ்வாய் இருத்தல் என்பது எப்பொழுதுமே காதல் நினைவுகளின் மீட்டலில்தான் நிகழும். மிகவும் அழகான, உணர்வாளமிக்க பதிவு நிரூபன். வாழ்த்துக்கள்.
Post a Comment