Tuesday, July 26, 2011

பதிவர்கள், டுவிட்டர்- பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை அறிவிப்பு!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே,
சமூக வலைத் தளங்களான பேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கரில் உள்ள பலரது கணக்குகளை முடக்கும் அல்லது செயலிழக்கச் செய்யும் நோக்கில் உங்கள் வலைப் பதிவுகளுக்கும், பேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கர் மின்னஞ்சலுக்கும் கீழ் காணும் விபரங்களோடு அனுப்பப்படும் ஈமெயில்களை யாரும் கிளிக் பண்ணிப் பார்க்கவோ அல்லது பின் தொடர்ந்து செல்லவோ; வேண்டாம் என அன்போடு
கேட்டுக் கொள்கின்றேன்.
Someone said this real bad thing about you in a blog....tinyurl.pl/?VtIlpMyVச்ட்ச்ட்ச்ட்ச்ட்
Someone said this real bad thing about you in a blog....
இத்தகைய மெசேஜ்களினை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம், உங்களது பேஸ்புக், டுவிட்டர், ப்ளாக்கர் அக்கவுண்டின்(Account) பாஸ்வேர்ட்டினை, இதே சாயலுடன் உள்ள Pishing Web மூலமாக நகல் எடுத்துச் செயலிழக்கும் முயற்சியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகவே மேலே தரப்பட்டது போன்ற மெசேஜ்ஜினை யாரும் கிளிக் செய்யவோ, அல்லது திறந்து பார்க்கவோ வேண்டாமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

லங்கையின் முதல் தர் வானொலியான, வெற்றி எப்.எம் இன் நாளுமொரு தளத்தில் உங்கள் நாற்று!

இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் பண்பலை வானொலிகள் பல்கிப் பெருகி விட்ட சூழலில்- போட்டிகள் நிறைந்த உலகில்; 
வியாபார நோக்கில் பல்வேறு வானொலிகள் விளம்பர நிகழ்ச்சிகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை மக்கள் மனங் கவரும் வண்ணம் படைப்பதோடு மக்களுக்கான பணிகளையும் ஓரிரு, வானொலிகள் தான் முன்னெடுத்து வருகின்றன.

இத்தகைய சூழலில் பல்வேறு வானொலிகள் தமிழ் பற்றிய நிகழ்வுகளுக்கு முதன்மையளிக்காது, தம் வியாபர நோக்கில் குறியாக இருக்கையில், இலங்கையின் முதல் தர தமிழ் வானொலியாக விளங்கும் வெற்றி எப்.எம் மக்களுக்கான பணி, தமிழுக்கான சேவைகள் எனத் தன் பங்களிப்பினையும் ஜனரஞ்சகமான படைப்புக்களோடு சேர்ந்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் இலங்கையின் முதல் தர வானொலியாக விளங்கும் வெற்றி ஒலிபரப்புச் சேவையின் காலை நேர நிகழ்ச்சியான ’விடியலில்’; 
நாளும் ஒரு தளம் நிகழ்ச்சியில் நாற்று வலைப் பதிவினை 26.07.2011 அன்று அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.

இந் நேரத்தில் வெற்றி எப்.எம். முகாமையாளரும், பணிப்பாளரும், விடியல் நிகழ்ச்சித் தொகுப்பாளரும், வலைப் பதிவாளருமான, 
திரு.ஏ.ஆர்.வி. லோசன்; அவர்களுக்கும், வெற்றி வானொலிக் குழுவினருக்கும், 
என் சார்பிலும், நாற்று வலைப் பதிவோடு இணைந்திருக்கும், தோளோடு தோள் நிற்கும்; உறவுகளாகிய- வாசகர்கள், விமர்சகர்கள், நண்பர்கள், சார்பிலும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வெற்றி எப். எம் இல் அறிவிப்பாளர், வலைப் பதிவர்; 
திரு.ஏ.ஆர்.வி. லோசனின் குரலில் இடம் பெற்ற நாற்று வலைப் பதிவு பற்றிய அறிமுகத்தை கீழே உள்ள ப்ளேயர் மூலமாக நீங்கள் கேட்டு மகிழலாம்.


இவ் அறிமுகத்தைக் கேட்க முடியாதவர்களுக்காக, எழுத்து வடிவில் அதனை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

‘’நாளொரு தளமாக இன்றைய தினம் வருகின்ற ஒரு தளம்- ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் பதிவுலக எழுத்தாளரின் வலைத் தளமாக இருந்து, இப்பொழுது இணையத் தளமாக மாறியிருக்கும் ஒன்று. 
தமிழ் நாற்று என்று சொல்லி; அவர் இணையத் தளத்திற்கான தலைப்பினை இட்டிருக்கின்றார். நாற்று- மலரத் துடிக்கும் அரும்புகளின் கூடல்....என்று பல்வேறு வகைப்படுத்தல்களை வாசல், மொழி, ஈழம், கவிதை, மொக்கை, விவாத மேடை, சுவையருவி, இவை தவிர அவரது டுவிட்டர், பேஸ்புக் தளங்களின் தகவல்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.

பல விதமான விசயங்கள், நாட்டு நடப்புக்கள், சுவாரஸ்யமான; அந்த பிராந்தியத் தமிழ் வாசனை வீசுகின்ற எழுத்துகள், இது மட்டுமல்லாமல் அரசியல் தகவல்கள், கொஞ்சம் வேடிக்கையான; இல்லா விட்டால் விவகாரமான விசயங்கள், கொஞ்சம் வித்தியாசமான விசயங்கள் என்று பல்வேறு விசயங்களை உள்ளடக்கிய ஒரு வலைத் தளமாக இது இருக்கின்றது.

நிரூபன் என்பவர் இதனைத் தொடர்ந்து எழுதி வருகின்றார். அநேகமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பதிவுகளாவது வந்து கொண்டிருப்பது இதில் பார்க்கக் கூடிய விசயங்களாக இருக்கின்றது,
’மாறனிடம் மண்டியிட்ட திமுக தாத்தாவின் புரிந்துணர்வற்ற செயல், என்பதும் கவனிக்கக் கூடிய ஒரு முக்கியமான விசயம்.
சில சுவாரஸ்யமான விசயங்கள், பல்வேறுபட்ட- கொஞ்சம் ஆழமான விசயங்களையும் பேசக் கூடிய ஒரு தளமாக இது இருக்கின்றது.

‘ஈழப் போர் தந்த சாபங்கள்- உண்மைச் சம்பவம்' என்ற தகவலும் இங்கே பதியப்பட்டிருக்கின்றது. இது நாற்று- மலரத் துடிக்கும் அரும்புகளின் கூடல்,
உங்களுக்காக அந்த தளத்தின் முகவரியினை நாங்கள் தந்து விடுகின்றேன்.
www.thamilnattu.com என்பது இதன் ஆங்கிலத் தள முகவரியாக இருக்கின்றது.
நீங்களும் பாருங்கள், பார்த்துப் பரவசமடையுங்கள்.



<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>


ந்த அறிமுகமானது, 
நாற்று வலையின் வளர்ச்சிக்கும், ஒவ்வோர் படைப்புக்களின் வெற்றிக்குப் பின்னும் தோளோடு தோள் நிற்கும் வாசகர்கள், நண்பர்களாகிய உங்களுக்கே உரித்தானது. ஆதலால் இவ் அறிமுகத்தை உங்கள் முன் சமர்ப்பிப்பதில் உளம் மகிழ்வதோடு, என் இதய பூர்வமான நன்றிகளையும் நாற்று வலைப் பதிவோடு இணைந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன்.


பிற் சேர்க்கை: இப் பதிவில் இணைக்கப்பட்டுள்ள மீடியா ப்ளேயரில் பாடல் அப்லோட் செய்யும் முறையினை எனக்கு அறிமுகப்படுத்திய, கற்றுக் கொடுத்த, சகோதரன் - ஜனகனின் எண்ண ஜனனங்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் செல்வன் ஜனகன் அவர்களுக்கும் நாற்றின் வாசகர்கள் சார்பிலும், என் சார்பிலும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

104 Comments:

கோகுல் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் பணி தொடரட்டும்.

மகேந்திரன் said...
Best Blogger Tips

அன்பு நண்பரே
எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி.
தங்களின் தளம் மென்மேலும் வளர்ச்சி பெறவேண்டுமென
இறைவனை வேண்டுகிறேன்.

Anonymous said...
Best Blogger Tips

///rdevendran ///யார் இது ? இவரா அவர் ????

Anonymous said...
Best Blogger Tips

வெற்றியில் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்.

ஷஹன்ஷா said...
Best Blogger Tips

உஷார் பதிவுக்கு நன்றி.. வெற்றியின் அறிமுகத்திற்கு வெற்றி வாழ்த்துகள்...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

பாஸ்வேர்ட் பற்றிய தகவலுக்கு நன்றி நிரூபன்.

நீங்க இவ்ளோஓஓஓஒ பெரியாளாகிட்டீங்களோ? ரேடியோவில எல்லாம் வந்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். நினைக்கவே பெருமையாக இருக்கு நிரூபன் வாழ்த்துக்கள்.

தொடர்ந்து இதே உற்சாகத்தோடு கலக்குங்கோ.

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

இந்த பெருமையான உஙலின் அமர்க்கள அ(ரி)றிமுகம் என்னை போன்ற உங்களின் நலன் விரும்பிகளையும் மகிழ்ச்சி அடையவைக்கிறது சகோ
பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்

Angel said...
Best Blogger Tips

முதலில் எனது வாழ்த்துக்கள் .தொடருங்கள் நாங்களும் தொடர்ந்து வருகிறோம் .எச்சரிக்கை செய்ததற்கு மிக்க நன்றி .எங்கள் சகோதரர் நிரூபன்
ரேடியோவிலும் .WOW !!!! KEEP ROCKING.

நிரூபன் said...
Best Blogger Tips

@gokul

வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் பணி தொடரட்டும்.//

வணக்கம் சகோ, உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஊக்கமும், ஆதரவும் தான் இவற்றுக் கெல்லாம் காரணம்.
உங்கள் ஆதரவு இருக்கும் வரை என் பயணம் தொடரும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மகேந்திரன்
அன்பு நண்பரே
எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி.
தங்களின் தளம் மென்மேலும் வளர்ச்சி பெறவேண்டுமென
இறைவனை வேண்டுகிறேன்.//

நன்றி சகோ, உங்களைப் போன்ற உறவுகள் அனைவரினதும் பேராதரவு தான் இதற்கெல்லாம் காரணம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

///rdevendran ///யார் இது ? இவரா அவர் ????//

என்னமோ, தெரியலை பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

வெற்றியில் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் பாஸ்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@“நிலவின்” ஜனகன்

உஷார் பதிவுக்கு நன்றி.. வெற்றியின் அறிமுகத்திற்கு வெற்றி வாழ்த்துகள்...//

நன்றி பாஸ், உங்கள் ஆதரவோடு தான் இந்தப் ப்ளேயரை இணைத்தேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
பாஸ்வேர்ட் பற்றிய தகவலுக்கு நன்றி நிரூபன்.

நீங்க இவ்ளோஓஓஓஒ பெரியாளாகிட்டீங்களோ?//

//ரொம்ப நக்கலு, நான் எப்பவுமே ஒரே மாதிரித் தான் இருக்கேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@athira
பாஸ்வேர்ட் பற்றிய தகவலுக்கு நன்றி நிரூபன்.

தொடர்ந்து இதே உற்சாகத்தோடு கலக்குங்கோ.//

வாசக உள்ளங்களின் ஆதரவு இருக்கும் வரை, என் பணி தொடரும், இந்த உற்சாகம் எல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வந்தது. ஆகவே உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்
இந்த பெருமையான உஙலின் அமர்க்கள அ(ரி)றிமுகம் என்னை போன்ற உங்களின் நலன் விரும்பிகளையும் மகிழ்ச்சி அடையவைக்கிறது சகோ
பாராட்டுக்கள்
வாழ்த்துக்கள்//

நன்றி பாஸ். உங்கள் ஆதரவும், ஆசியும் தான் இதற்கெல்லாம் காரணம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@angelin
முதலில் எனது வாழ்த்துக்கள் .தொடருங்கள் நாங்களும் தொடர்ந்து வருகிறோம் .எச்சரிக்கை செய்ததற்கு மிக்க நன்றி .எங்கள் சகோதரர் நிரூபன்
ரேடியோவிலும் .WOW !!!! KEEP ROCKING.//

உங்கள் ஆதரவு தான் இதற்கெல்லாம் காரணம், ஆகவே இந்த வாழ்த்துக்களும் வாசக உள்ளங்களுக்கே சொந்தமானது.

செங்கோவி said...
Best Blogger Tips

அப்படிக் கலக்குங்க நிரூ!

வாழ்த்துகள். அடுத்து டிவியிலும் எங்க நிரூ பற்றிச் செய்தி வர வேண்டும்.

தனிமரம் said...
Best Blogger Tips

வலைத்திருட்டுக்கு அறிவிப்பு தனிப்பட்ட முறையிலும் இன்று பதிவு மூலமும் தெளிவாக்கிய நண்பனுக்கு நன்றிகள்!
வெற்றியில் வெற்றி முரசு கொட்டியதற்கு வாழ்த்துக்கள் சகோ!
அன்பு வேண்டு கோள் !உங்கள் பயணம் இன்னும் தொடரனும் இந்த வெற்றி நாற்றுக்கு ஒரு நீர்ப்பாய்ச்சலாக இருக்கட்டும் வரம்பாகக்கூடாது!

ஹேமா said...
Best Blogger Tips

நாற்று இன்னும் விளைச்சல் தர மனம் நிறைந்த வாழ்த்துகள் !

Anonymous said...
Best Blogger Tips

நண்பரே...
எச்சரிக்கைக்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள்...இனி உங்களுக்கு ஏறுமுகம் தான்...

இமா க்றிஸ் said...
Best Blogger Tips

எச்சரிக்கைக்கு நன்றி.

நாற்று வெற்றி எஃப் எம்மில் அறிமுகமானதையிட்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நிரூபன்.

Mathuran said...
Best Blogger Tips

//பதிவர்கள், டுவிட்டர்- பேஸ்புக் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை அறிவிப்பு//

நல்ல வேளை இப்பவே சொல்லீட்டிங்க... அதால தப்பிச்சோம்
ரொம்ப நன்றி பாஸ்

Mathuran said...
Best Blogger Tips

வெற்றி எப்.எம் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

ஆமினா said...
Best Blogger Tips

ஹை.... பெரிய ஆளுங்களோட தான் சகவாசம் வச்சுருக்கோமா? :))

எச்சரிக்கைக்கு நன்றி சகோ

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

Unknown said...
Best Blogger Tips

இன்று தான் பதிவுலகுக்கு மீண்டேன் ஒரு கிழமையின் பின்னர் பாஸ்!!
விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிகள் மற்றும் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் தல!!!நிருபன் ராக்ஸ்!!!

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

வலை உலக மோசடிக்காரர்களை பற்றிய எச்சரிக்கைக்கு நன்றி...நிரூபன்.

தங்கள் வலைப்பக்கத்தை பற்றி பண்பலை வரிசையில் இடம் பெற்ற சிறப்பு செய்தி தொகுப்பினை கேட்டேன்.
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.
சிறு வயதில் இலங்கை வானொலி கேட்ட திருப்தியை ஏற்படுத்தியது.
இந்தப்பதிவு இரட்டை மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் சகோதரா...

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

பயனுள்ள பதிவு
எச்சரிக்கைத் தகவலுக்குமனமார்ந்த நன்றி
தகுதி உடையவர்கள் பாராட்டப் படும்போது
மனதில் ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சி
தங்களை மிகச் சரியாக அடையாளம் கண்டு
பாராட்டியிருப்பதைக் கேட்கும் போதும் ஏற்ப்பட்டது
பதிவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போம்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

ஆல் அப்டேட்ஸ்

யூஸ் ஃபுல் போஸ்ட்..

rajamelaiyur said...
Best Blogger Tips

Congrats

ரேவா said...
Best Blogger Tips

வாழ்த்துகள் சகோ...இந்த பதிவில் உள்ள ஒலி நாடவை கேட்கவும், அதை பதிவில் பகிர்ந்ததை பார்க்கவும் மகிழ்ச்சியாய் இருந்தது..தொடர்ந்து கலக்குங்கள்...

கடம்பவன குயில் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் சகோ. தாங்கள் பண்பலையினால் அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்டது மிகுந்த ஆனந்தம் அளிக்கிறது. தங்கள் மகிழ்சியில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.

தக்க சமயத்தில் fisihing mail பற்றி எச்சரிக்கை கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ.

test said...
Best Blogger Tips

எச்சரிக்கைக்கு நன்றி!
வாழ்த்துக்கள்! :-)

rajamelaiyur said...
Best Blogger Tips

வாழ்த்துகள் நண்பா

கூடல் பாலா said...
Best Blogger Tips

ஒரு நல்ல பதிவருக்கு கிடைத்த நியாயமான வெகுமதி .......நாற்று புயலுக்கும் அசையாத மரமாக வளர வாழ்த்துக்கள் ..

Prabu Krishna said...
Best Blogger Tips

முதல் தகவல் மின்னஞ்சலில் வந்தது. இரண்டாவதுக்கு வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி.

சசிகுமார் said...
Best Blogger Tips

தகுதிக்கேற்ற பாராட்டுதல் உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. ஆடியோவை அலுவலகத்தில் கேட்க முடியவில்லை வீட்டிற்கு சென்றவுடன் கேட்கிறேன்.

ARV Loshan said...
Best Blogger Tips

எச்சரிக்கைக்கு நன்றி..

அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் :) ஹீ ஹீ..
தொடர்ந்து கலக்குங்கள் சகோ..
உங்கள் எழுத்துக்களின் வலிமையையும் நாசூக்கும் நான் மிகவும் ரசிப்பவை

FARHAN said...
Best Blogger Tips

பயனுள்ள தகவலுக்கு முதலில் நன்றிகள்
வெற்றி எப் எம் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி

Unknown said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் பணி தொடரட்டும்.

Unknown said...
Best Blogger Tips

தக்க சமயத்தில் fisihing mail பற்றி எச்சரிக்கை கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ

காட்டான் said...
Best Blogger Tips

மன்னிச்சுகொள் மாப்பிள .. லேட்டா வந்ததற்கு..இவ்வளவு விசயங்களையும் எழுத்து கூட்டி வாசித்து வருவதற்குள் எல்லோரும் குழ வைச்சிட்டு போட்டார்கள்.. வெற்றி FM க்கு ஈழத்தில் இவ்வளவு புகழா....!!!! அட என்ர கணணியில் கேள்விக்குறி வேலை செய்யவில்லை மாப்பு அதுதான் இப்படி போடுறன்..

காட்டான் குழ போட்டான்..

ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி!ஒரே நேரத்தில் எப்படி பதிவு,டுவிட்டர்- பேஸ்புக்ன்னு சுத்த முடியுதுன்னு தெரியலையே!நமக்கு பதிவுக்கே மூச்சு முட்டுது.

Sivakumar said...
Best Blogger Tips

வானொலியில் தங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நிரூபன். மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும். ‘பதிவர்களுக்கு எச்சரிக்கை’ தந்ததற்கும் நன்றி. பல்லாண்டு வாழ்க சகோ!!

பிரணவன் said...
Best Blogger Tips

செய்தி பகிர்வுக்கு நன்றி. . . வாழ்த்துக்கள். . .நிரூ

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

ஆகா ....நிருபனா இது அருமை அருமை வாழ்த்துக்கள்
சகோ விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால்
எதிலும் வெற்றிகிட்டும் என்பார்கள் அதற்க்கு உதாரணமாக
இன்று உங்களையும் சொல்லலாம்.மென்மேலும் உங்கள்
ஆக்கங்கள் சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
அத்துடன் எச்சரிக்கை விளம்பரத்துக்கும் மிக்க நன்றி........

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

எச்சரிக்கை செய்ததற்கு மிக்க நன்றி..
சகோ..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள். . .நிரூ..........

GEETHA ACHAL said...
Best Blogger Tips

ரொம்ப சந்தோசம்...வாழ்த்துகள்....

M.R said...
Best Blogger Tips

தங்களின் எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...
Best Blogger Tips

எச்சரிக்கை பதிவுக்கு நன்றி நண்பரெ... பதிவில் fM ல் தங்களது விளம்பரம் கேட்டேன்.. அருமை... வாழ்த்துக்கள்

KANA VARO said...
Best Blogger Tips

26.07.20011 அன்று அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.//

அடி ஆத்தாடி இம்புட்டு வருசமா...
கலக்குங்கண்ணா வாழ்த்துக்கள்...

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி

அப்படிக் கலக்குங்க நிரூ!

வாழ்த்துகள். அடுத்து டிவியிலும் எங்க நிரூ பற்றிச் செய்தி வர வேண்டும்.//

ஏன் பாஸ், நான் ஏதாவது சர்ச்சைகள் செய்யனும் என்று விரும்புறீங்களா?
சொல்லவேயில்லை, நான் சும்மா தமாஸிற்குச் சொன்னேன்,;-))

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
அன்பு வேண்டு கோள் !உங்கள் பயணம் இன்னும் தொடரனும் இந்த வெற்றி நாற்றுக்கு ஒரு நீர்ப்பாய்ச்சலாக இருக்கட்டும் வரம்பாகக்கூடாது!//

வாசகர்களாகிய உங்களது ஆதரவு இருக்கும் வரை என் பயணம் தொடரும் சகோ.
நன்றி நண்பா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா

நாற்று இன்னும் விளைச்சல் தர மனம் நிறைந்த வாழ்த்துகள் !//

நன்றி அக்காச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@Reverie
நண்பரே...
எச்சரிக்கைக்கு மிக்க நன்றி...

வாழ்த்துக்கள்...இனி உங்களுக்கு ஏறுமுகம் தான்...//

நன்றி, வாசகர்களாகிய உங்களது ஆதரவு இருக்கும் வரை என் பயணம் தொடரும், நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இமா

எச்சரிக்கைக்கு நன்றி.

நாற்று வெற்றி எஃப் எம்மில் அறிமுகமானதையிட்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நிரூபன்.//

வாங்கோ இமா அக்கா,
உங்கள் வாழ்த்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

எச்சரிக்கைக்கு நன்றி.

நாற்று வெற்றி எஃப் எம்மில் அறிமுகமானதையிட்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நிரூபன்.//

எல்லாம் வாசகர்களும், நண்பர்களும் வழங்கும் ஆதரவினால் தான் சாத்தியமாகின்றது, நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

வெற்றி எப்.எம் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஆமினா
ஹை.... பெரிய ஆளுங்களோட தான் சகவாசம் வச்சுருக்கோமா? :))

எச்சரிக்கைக்கு நன்றி சகோ

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்//

அப்படியெல்லாம் இல்லைங்கோ,
நான் எப்பவுமே நாற்றுத் தான்;-)))
ஹி....ஹி...
இந்த வளர்ச்சி எல்லாம் வாசகர்களாகிய உங்களால் தான் சாத்தியமாகின்றது, நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

இன்று தான் பதிவுலகுக்கு மீண்டேன் ஒரு கிழமையின் பின்னர் பாஸ்!!//

ஏன் மச்சான், இவ்ளோ நாளும் என்ன உல்லாசப் பயணத்திலா இருந்தீங்க பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிகள் மற்றும் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் தல!!!நிருபன் ராக்ஸ்!!!//

உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் தான் இவற்றுக்கெல்லாம் காரணம் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
வலை உலக மோசடிக்காரர்களை பற்றிய எச்சரிக்கைக்கு நன்றி...நிரூபன்.

தங்கள் வலைப்பக்கத்தை பற்றி பண்பலை வரிசையில் இடம் பெற்ற சிறப்பு செய்தி தொகுப்பினை கேட்டேன்.
மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.
சிறு வயதில் இலங்கை வானொலி கேட்ட திருப்தியை ஏற்படுத்தியது.
இந்தப்பதிவு இரட்டை மகிழ்ச்சி...
வாழ்த்துக்கள் சகோதரா...//

நன்றி சகோ,
உங்கள் ஆதரவும், அன்பும் தான் இதற்கெல்லாம் காரணம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramani
பயனுள்ள பதிவு
எச்சரிக்கைத் தகவலுக்குமனமார்ந்த நன்றி
தகுதி உடையவர்கள் பாராட்டப் படும்போது
மனதில் ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சி
தங்களை மிகச் சரியாக அடையாளம் கண்டு
பாராட்டியிருப்பதைக் கேட்கும் போதும் ஏற்ப்பட்டது
பதிவர்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து சந்திப்போம்//

நன்றி ஐயா,

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

ஆல் அப்டேட்ஸ்

யூஸ் ஃபுல் போஸ்ட்.//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

Congrats//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரேவா

வாழ்த்துகள் சகோ...இந்த பதிவில் உள்ள ஒலி நாடவை கேட்கவும், அதை பதிவில் பகிர்ந்ததை பார்க்கவும் மகிழ்ச்சியாய் இருந்தது..தொடர்ந்து கலக்குங்கள்...//

நன்றி சகோ.
உங்களைப் போன்ற நண்பர்களின் ஊக்கமும், ஆதரவும் தான் காரணம்,

நிரூபன் said...
Best Blogger Tips

@கடம்பவன குயில்

தக்க சமயத்தில் pisihing mail பற்றி எச்சரிக்கை கொடுத்ததற்கு மிக்க நன்றி சகோ.//

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஜீ...
எச்சரிக்கைக்கு நன்றி!
வாழ்த்துக்கள்! :-)//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

வாழ்த்துகள் நண்பா//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala

ஒரு நல்ல பதிவருக்கு கிடைத்த நியாயமான வெகுமதி .......நாற்று புயலுக்கும் அசையாத மரமாக வளர வாழ்த்துக்கள் ..//

நன்றி சகோ, உங்களது ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை நாற்றுத் தொடர்ந்தும் வளரும்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பலே பிரபு

முதல் தகவல் மின்னஞ்சலில் வந்தது. இரண்டாவதுக்கு வாழ்த்துகள்.//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@சே.குமார்

எச்சரிக்கை தகவலுக்கு மிக்க நன்றி.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்

தகுதிக்கேற்ற பாராட்டுதல் உங்களின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. ஆடியோவை அலுவலகத்தில் கேட்க முடியவில்லை வீட்டிற்கு சென்றவுடன் கேட்கிறேன்.//

நன்றி சகோ, உங்களின் அன்பும், ஆதரவும், ஊக்கமும் தான் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@LOSHAN

எச்சரிக்கைக்கு நன்றி..

அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் :) ஹீ ஹீ..
தொடர்ந்து கலக்குங்கள் சகோ..
உங்கள் எழுத்துக்களின் வலிமையையும் நாசூக்கும் நான் மிகவும் ரசிப்பவை//

அவ்...அவ்...
மீண்டும் நன்றி பாஸ்.
வாசகர்களும், நண்பர்களும் தரும் ஊக்கம் தான் ஒவ்வோர் புதிய படைப்பின் பிறப்பிற்கும் காரணமாக அமைகின்றது, ஆகவே என்னைப் பின் தொடரும் வாசகர்களுக்குத் தான் இந்த வாழ்த்துக்கள் போய்ச் சேர வேண்டும்.

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@FARHAN

பயனுள்ள தகவலுக்கு முதலில் நன்றிகள்
வெற்றி எப் எம் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் தங்கள் பணி//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது

வாழ்த்துக்கள் நண்பரே.தங்கள் பணி தொடரட்டும்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@காட்டான்
மன்னிச்சுகொள் மாப்பிள .. லேட்டா வந்ததற்கு..இவ்வளவு விசயங்களையும் எழுத்து கூட்டி வாசித்து வருவதற்குள் எல்லோரும் குழ வைச்சிட்டு போட்டார்கள்.. வெற்றி FM க்கு ஈழத்தில் இவ்வளவு புகழா....!!!! அட என்ர கணணியில் கேள்விக்குறி வேலை செய்யவில்லை மாப்பு அதுதான் இப்படி போடுறன்..

காட்டான் குழ போட்டான்..//

ஆமாம் பாஸ், நம்ம ஊரில் வெற்றிக்கென்று ஒரு தனித்துவம் இருக்கின்றது, ஊருக்கு வரும் போது ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்.

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்
பகிர்வுக்கு நன்றி!ஒரே நேரத்தில் எப்படி பதிவு,டுவிட்டர்- பேஸ்புக்ன்னு சுத்த முடியுதுன்னு தெரியலையே!நமக்கு பதிவுக்கே மூச்சு முட்டுது.//

என்ன பாஸ், ரொம்ப லொள்ளுப் பண்ணுறீங்க, ஆப்பீசுக்குத் தெரியாமல், கணினி பாவிப்பதால் வரும் விளைவுகள் தான் இவை. நான் சுத்தலை. உட்கார்ந்து தான் இருக்கேன்;-))
ஹி.....ஹி....

நிரூபன் said...
Best Blogger Tips

@! சிவகுமார் !

வானொலியில் தங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நிரூபன். மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும். ‘பதிவர்களுக்கு எச்சரிக்கை’ தந்ததற்கும் நன்றி. பல்லாண்டு வாழ்க சகோ!!//

நன்றி சகோ.
உங்கள் ஆதரவும் அன்பும் தான் இவற்றுக்கெல்லாம் காரணம்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பிரணவன்

செய்தி பகிர்வுக்கு நன்றி. . . வாழ்த்துக்கள். . .நிரூ.//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பாளடியாள்
மென்மேலும் உங்கள்
ஆக்கங்கள் சிறப்புற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ.
அத்துடன் எச்சரிக்கை விளம்பரத்துக்கும் மிக்க நன்றி.......//

உங்கள் ஆதரவும், அன்பும் இருக்கும் வரை என் பயணம் தொடரும். நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!
எச்சரிக்கை செய்ததற்கு மிக்க நன்றி..
சகோ..//


வாழ்த்துக்கள். . .நிரூ..........//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@GEETHA ACHAL

ரொம்ப சந்தோசம்...வாழ்த்துகள்....//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@M.R

தங்களின் எச்சரிக்கைக்கு நன்றி நண்பரே//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மாய உலகம்
எச்சரிக்கை பதிவுக்கு நன்றி நண்பரே... பதிவில் fM ல் தங்களது விளம்பரம் கேட்டேன்.. அருமை... வாழ்த்துக்கள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@KANA VARO
26.07.20011 அன்று அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.//

அடி ஆத்தாடி இம்புட்டு வருசமா...
கலக்குங்கண்ணா வாழ்த்துக்கள்...//

தவறினைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி சகோ.
அது 2011 என்றி வர வேண்டும், ஒரு பூஜ்ஜியத்தை அதிகமாக எழுதி விட்டேன், தற்போது திருத்தி விட்டேன்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

உங்களை அறிமுகம் செய்ததால் அவர்களுக்குப் பெருமை நிரூ!

Unknown said...
Best Blogger Tips

சகோ!
வரிவடிவ நாற்று -மேலும்
ஒலிவடிவ நாற்றா
எரிவடிவ நாற்றே-நல்
இமயமென சாற்றே
விரிவடைய நாற்றே-குன்றின்
விளக்காமென போற்றே
பரியெனவே நாற்றே-விண்
பரவிவரும் காற்றே

புலவர் சா இராமாநுசம்

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

வானொலியில் தாங்கள் தளம் அறிமுகம் - வாழ்த்துக்கள் சகோ... மென்மேலும் உயர வாழ்த்துகள்.

shanmugavel said...
Best Blogger Tips

சரியான நேரத்தில் எச்சரித்திருப்பது நன்று.

shanmugavel said...
Best Blogger Tips

நிருபனை அறிமுகப்படுத்திய எப் .எம் க்கு நன்றி

Thangasivam said...
Best Blogger Tips

நன்றி வாழ்த்துக்கள்

அன்புடன் அருணா said...
Best Blogger Tips

அட! பூங்கொத்து!

ஆகுலன் said...
Best Blogger Tips

முதலாவது தகவலுக்கு நன்றி..

வெற்றி வானொலியில் இடம் பெற்றதுக்கு வாழ்த்துக்கள்..

எனது கனா.................

Mahan.Thamesh said...
Best Blogger Tips

உங்களின் எழுத்துக்கு கிடைத்த பெரு வெற்றி சகோ . வாழ்த்துக்கள் . தொடருங்கள் இன்னும் சாதிக்கலாம்

Mahan.Thamesh said...
Best Blogger Tips

எச்சரிக்கை தகவலுக்கு நன்றி

டக்கால்டி said...
Best Blogger Tips

Even though i am late, my latest congrats to you boss...

டக்கால்டி said...
Best Blogger Tips

101 my comment as "moi"

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

தாமதத்திற்கு மன்னிக்க, மிக மகிழ்ச்சியான செய்தி நிரூபன், வானொலி அறிமுகம் அருமை, மென்மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துக்கள் நண்பா.....!

கார்த்தி said...
Best Blogger Tips

பிரயோசமான தகவலுக்கு நன்றிகள்!
இனிய வாழ்த்துக்கள் வானொலி அறிமுகத்துக்கு!
ஒரு கேள்வி என்னென்று உங்களால் லோசன் அண்ணா உங்களது தளத்தை அறிவிக்க முதலே record பண்ண முடிந்தது? மறக்காமல் பதில் போடவும்!

MANO நாஞ்சில் மனோ said...
Best Blogger Tips

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மக்கா.....!!

Unknown said...
Best Blogger Tips

வாழ்த்துகள் நண்பா

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails