Saturday, July 2, 2011

ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள்!


போர் ஒரு வரலாற்றை அழித்து, இன்னோர் வரலாற்றை நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தியாக உலக நாடுகளில் எங்கோ ஓர் முலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் ஓர் பரிணாமம் தான் ஈழ மக்கள் வாழ்வினையும் ஈழப் போர் எனும் வடிவில் திசை மாற்றியிருக்கிறது. இந்தப் போர் பல உயிர்களைத் தன் பசிக்கு இரையாக்கியிருக்கிறது.

தாமாக விரும்பிப் போரில் ஈடுபட்டு இறந்தவர்கள்,
காலத்தின் கட்டாயத்தினால் போரில் தம்மையும் இணைத்துக் கொண்டோர்,
கட்டாய ஆள் சேர்ப்பினால் போரில் இணைத்துக் கொள்ளப்பட்டோர்,
கண் மூடித்தனமான, கோரமான தாக்குதல்களினால் போரில் கொல்லப்பட்டோர்,
இனவாதம் எனும் அடிப்படையில், ஒரு இனத்தினைப் பூண்டோடு அழிக்க வேண்டும் எனும் ஆணவத்தினால் கொல்லப்பட்டோர்,
எனப் இவ் ஈழப் போரில் உயிரிழந்தோரைப் பலவாறாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.

ஈழப் போரில் ஓர் சந்ததியின் விடுதலை நோக்கிய பயணத்தினை வேரோடு அறுக்க வேண்டும் எனும் நோக்கத்தின் காரணத்தால் இனம் தெரியாத முகமூடி மனிதர்களாலும், கண் மூடித்தனமான குண்டு வீச்சினாலும் கொல்லப்பட்டோர் தொகை தான் அதிகமாக இருக்கிறது. இந்தத் தொகை தான் இதுவரை சரியாகவும் கணக்கெடுக்கப்படாமல் இருக்கிறது.

தமிழர்கள் எனும் நாமம் கொண்ட அனைவரும், போர் என்னும் கொடிய அரக்கனின் கோரப் பசிக்கு இயல்பாகவே ஆளாகினார்கள். கண் முன்னே ஓர் உயிரினைக் கொல்வதும், ஏனையோரைப் பார்க்க வைத்து - அவர்கள் யாவரும் இதே வழியினை வருங் காலத்தில் பின்பற்றக் கூடாது எனும் நோக்கிலும் கதறக் கதறத்- துடிக்கத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட பலரது எண்ணிக்கை இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை.

ஓர் போர் இடம் பெறும் பகுதியில். இன்றோ, நாளையோ நாம் உயிரோடு இருப்போமா அல்லது இல்லையா எனும் அச்ச உணர்வோடு வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பது அதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும்.  இந்தப் போரின் காரணமாக, பெற்றோரை- சகோதர்களை இழந்தோர், உடல் உறுப்புக்களை இழந்தோர் நடைப் பிணமாக, தேற்றுவார் இன்றி வாழ்வது தான் இன்றைய ஈழப் போர் எம்மிடம் விட்டுச் சென்ற எச்சமாக இருக்கிறது.

போர் இடம் பெற்ற பகுதிகளில் மீன் பிடித் தொழிலினைத் தம் ஜீவனோபாயமாக மேற் கொண்ட மீனவர்களின் வாழ்க்கை முறை எந் நாளுமே அச்சத்திற்குரியதாக இருந்திருக்கிறது. இரவில் கடலுக்குச் செல்வோர், மறு நாள் உயிரோடு திரும்புவார்களா எனும் அச்சம் இருந்த போதிலும், உயிரைப் பணயம் வைத்துப் பலர் மீன் பிடித் தொழில் மேற்கொண்டு தம் வாழ்க்கையினை நகர்த்தியிருக்கிறார்கள்.

இரவில் கடலுக்குச் சென்ற தன் தந்தை மறு நாள் காலையாகியும் திரும்பி வராது, கொல்லப்பட்டு விட,
தந்தை மீண்டும் வருவார் எனும் ஆதங்கத்தோடும், எதிர்பார்ப்போடும் காத்திருக்கும் சிறுவர்களின் வாழ்வின் வலிகளை, யதார்த்த நிலமையினை, அவர்களின் மனங்களில் படிந்துள்ள எதிர்பார்ப்புடன் கலந்த எண்ண அலைகளைத் தாங்கித் தான் பெரும்பாலான தமிழ்ச் சிறுவர்களின் கடந்த கால வரலாற்று வாழ்க்கையானது நகர்ந்திருக்கிறது.

ஈழப் போர் விட்டுச் சென்ற தடயங்கள் எம் இனத்தின் மத்தியில் பல்வேறு வடிவங்களில் புதையுண்டு போயிருக்கின்றது. இழந்து போன வாழ்வினை மீளக் கட்டியெழுப்பி, மீண்டும் எம் பசுந் தேசங்களில் நடை போடலாம் என்று நினைக்கையில்- எங்கள் வயல்களெங்கும் தடயங்களாக இறந்த உயிர்களின் எலும்புகள் போடப்பட்டிருப்பது தான் நினைவிற்கு வந்து போகிறது.

இந்தத் தடயங்களை அழித்துப் புதிய தோர் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கான திரு நாள் மீண்டும் வாராதா என்று தான் மனம் ஏங்கித் தவிக்கிறது.

<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>

போரின் கொடூரத்தால், தன் தந்தையின் அரவணைப்பினைத் தொலைத்த பிஞ்சு மனம் ஒன்றின் ஏக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் நிறைந்த உள்ளத்து உணர்வுகளைக் கவிதையாக்கிப் பாடலாகக் கோர்த்திருக்கிறார் கவிஞர் துளசிச் செல்வன் அவர்கள்.

அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே.... எனத் தொடங்கும் அப் பாடலின் பாடல் வரிகளையும், பாடலையும் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.


பாடல்: அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே..
பாடியவர்: குட்டிக்கண்ணன்
பாடல் வரிகள்: துளசிச் செல்வன்
பாடலுக்கு இசை: சிறீகுகன்

‘அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே
எப்போதும் நீயிருக்க ஆசை வைச்சேன் அப்பாவே
துப்பாக்கி போல் மனசு தூங்காமல் விழித்திருக்கும்
எப்போதும் உம் நினைவு கற்பனையில் விழித்திருக்கும்
(அப்பாவே பாரதி......)

மீசையிலே இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்
கடலினில் கேட்ட வெடியினால் துடித்து
கரையில் இருந்து நானும் பாடித் தவிச்சேன்!
(அப்பாவே பாரதி......)

பட்ட மரம் தானே கட்டு மரங்கள்
கட்டு மரம் மேலே பூத்த ஸ்வரங்கள்
வெட்டுப் பட்டுத் தானே ஓடும் சின்ன மரங்கள்
வெட்டுப் பட்டுத் தானே வாடும் சின்ன மரங்கள்
முட்டி மோதித் தந்ததாரு சோக வரங்கள்
சின்ன வயசில் நான் என்ன செய்தேன்
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்
(அப்பாவே பாரதி...)

கடலினில் தானே எந்தன் கண்கள்
கண்ணுக்குள் வாழும் வற்றாக் கடல்கள்
உடலைக் கூடக் கண்ணில் நான் காணவில்லையே
கரையில் மீன்கள் வந்து கதை பேசவில்லையே
நாளைக்கு கடல் எங்கள் கையில் சேரும்
உந்தன் மேனிக்கு அலை வந்து பூக்கள் போடும்
(அப்பாவே பாரதி போல....)



’’சின்ன வயசில் நான் என்ன செய்தேன்
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்... எனும் உணர்வுகளோடு இன்றும் ஈழத்தில் வாழும் பிஞ்சு மனங்களின் உணர்விற்கான பதிலை யார் தான் சொல்லப் போகிறார்களோ!!!

இப் பாடலைப் பாடிய குட்டிக் கண்ணன் அவர்களும் இன்றும் உயிரோடு இல்லை.....

138 Comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

ஓர் போர் இடம் பெறும் பகுதியில். இன்றோ, நாளையோ நாம் உயிரோடு இருப்போமா அல்லது இல்லையா எனும் அச்ச உணர்வோடு வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பது அதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும். >>>>

ஆமாம் சகோ..... நாட்களை எண்ணிக கொண்டு, பாவம் அவர்கள்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///போர் ஒரு வரலாற்றை அழித்து, இன்னோர் வரலாற்றை நிலை நிறுத்தப் பயன்படுத்தும் உத்தியாக உலக நாடுகளில் எங்கோ ஓர் முலையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.///உண்மை தான் , இதற்க்கு முடிவு என்றதே இருக்காது

Yoga.s.FR said...
Best Blogger Tips

சொல்வதற்கு ஏதுமில்லை.அடிக்கடி ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி தூக்கம் தொலைக்க வைக்கிறீர்கள்.காலத்துக்கேற்ற பதிவு.நன்றி!

Anonymous said...
Best Blogger Tips

///கண் முன்னே ஓர் உயிரினைக் கொல்வதும், ஏனையோரைப் பார்க்க வைத்து - அவர்கள் யாவரும் இதே வழியினை வருங் காலத்தில் பின்பற்றக் கூடாது எனும் நோக்கிலும் கதறக் கதறத்- துடிக்கத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட பலரது எண்ணிக்கை இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை.///எவ்வளவு கொடூரம் ((

Anonymous said...
Best Blogger Tips

பாடல் வரிகள் கனக்க வைக்கிறது இவ்வாறு எத்தனை சிறார்கள்...((

தமிழ்வாசி பிரகாஷ் said...
Best Blogger Tips

சகோ... இந்த சிறார்களுக்கு விடிவு என ஒன்று இருக்குமா?

Anonymous said...
Best Blogger Tips

/// தமிழ்வாசி -
சகோ... இந்த சிறார்களுக்கு விடிவு என ஒன்று இருக்குமா/// காலம் ஒருநாள் மாறும்...

செங்கோவி said...
Best Blogger Tips

படித்து விட்டு என்ன சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்..அந்த சிறார்கள் செய்த பாவம் தான் என்ன? அவர்கள் மனம் போர்க்காலத்தில் என்ன பாடு பட்டிருக்கும்? எவ்வளவு பாதிப்பு அடைந்திருக்கும்?

செங்கோவி said...
Best Blogger Tips

//மீசையிலே இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்// என்ன ஒரு எளிமையான வரிகள்..தந்தை இழந்த ஏக்கம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகிறது.

செங்கோவி said...
Best Blogger Tips

100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிரூ. வலைப்பூ வெறும் பொழுதுபொக்கு என்பதையும் தாண்டி பல காத்திரமான விசயங்களையும் கருத்துக்களையும் முன்வைக்கும் உங்கள் பணி வாழ்க. தொடர்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@தமிழ்வாசி - Prakash

ஆமாம் சகோ..... நாட்களை எண்ணிக கொண்டு, பாவம் அவர்கள்.//

ம்..மரணத்தின் காலடியில் வாழ்வதென்பது எவ்வளவு ஆபத்தானது...

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்

உண்மை தான் , இதற்க்கு முடிவு என்றதே இருக்காது//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR


சொல்வதற்கு ஏதுமில்லை.அடிக்கடி ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி தூக்கம் தொலைக்க வைக்கிறீர்கள்.காலத்துக்கேற்ற பதிவு.நன்றி!//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


படித்து விட்டு என்ன சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன்..அந்த சிறார்கள் செய்த பாவம் தான் என்ன? அவர்கள் மனம் போர்க்காலத்தில் என்ன பாடு பட்டிருக்கும்? எவ்வளவு பாதிப்பு அடைந்திருக்கும்?//

இது தான் அனைவருக்குமே புரியாத ஓர் புதிராக இருக்கிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@செங்கோவி


100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிரூ. வலைப்பூ வெறும் பொழுதுபொக்கு என்பதையும் தாண்டி பல காத்திரமான விசயங்களையும் கருத்துக்களையும் முன்வைக்கும் உங்கள் பணி வாழ்க. தொடர்க.//

வாழ்த்துகளுக்கு நன்றி பாஸ்,
உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் தான் எனது பதிவுகளுக்குக் காரணமாக இருக்கிறது.

ஆகவே என் வாசகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நான் தான் இந்த வாழ்த்துக்கள் போய்ச் சேர வேண்டும்.

நன்றி சகோ.

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

ஈழத்தில் நடக்கும் நடந்த பல விஷயங்கள் உங்கள் வாயிலாகவே அறிகிறேன் சகோ
தகப்பனை நினைத்து பாடும் அந்த பாடல் கல்லையும் கரயவைக்கும்

எத்தனையோ வேதனைகளை சுமந்து வாழு அந்த மக்களுக்கு கண்ணீரைத் தவிர எதையும் தரஇயலாத அபாக்கியசாலி நாம்

A.R.ராஜகோபாலன் said...
Best Blogger Tips

உங்களின் சாதனையான சதத்திற்கு என் வாழ்த்துக்கள் அன்பு சகோ

ஹேமா said...
Best Blogger Tips

மறக்காமலிருப்பதே நல்லது.ஆனால் வலி வலுக்கிறது நிரூ !

சிவகுமாரன் said...
Best Blogger Tips

\\நாளைக்கு கடல் எங்கள் கையில் சேரும்
உந்தன் மேனிக்கு அலை வந்து பூக்கள் போடும்//

-மனத்தைக் கனக்க வைத்த பாடல் வரிகள்.

Unknown said...
Best Blogger Tips

100வது பதிவிற்கு வாழ்த்துகள்.....

இனி இழக்க ஒன்றுமில்லை எம்மிடம்....
இனியாவது எம்மை வைத்து....பிழைப்பை நடத்தும் பெரியோரே அடங்குவீர்களாக....!

வெத்து வேட்டு said...
Best Blogger Tips

"கண் முன்னே ஓர் உயிரினைக் கொல்வதும், ஏனையோரைப் பார்க்க வைத்து - அவர்கள் யாவரும் இதே வழியினை வருங் காலத்தில் பின்பற்றக் கூடாது எனும் நோக்கிலும் கதறக் கதறத்- துடிக்கத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட பலரது எண்ணிக்கை இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை."
i hope you are not talking about LTTE :)

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

ஈழப்போர் என்பது காலத்தால் வரலாற்றால் மறந்துவிடமுடியாத ஒன்றும் கேட்காத உலகத்திற்க்கு ஏற்ப்பட்ட கரும்புள்ளி..

அதையாராலும் மறந்துவிட முடியாது...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

//////
எனப் இவ் ஈழப் போரில் உயிரிழந்தோரைப் பலவாறாக வகைப்படுத்திக் கொள்ளலாம்.///////



இந் கொடூரத்தால் தான் இன்னும் பட்ட ரணங்கள் காயம் ஆராமல் அப்படியே இருக்கிறது...

அப்பாவி மக்களின் உயிர்களை களவாடியதற்க்கு இலங்கை அரசு கண்டிப்பாக கலத்திடம் பதில் சொல்லியே தீர வேண்டும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

////
இந்தத் தடயங்களை அழித்துப் புதிய தோர் வாழ்வினை மீளக் கட்டியெழுப்புவதற்கான திரு நாள் மீண்டும் வாராதா என்று தான் மனம் ஏங்கித் தவிக்கிறது.

//////


தற்போது இருக்கும் நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு காத்திருப்போம் நமக்காக ஒரு கிழக்கு இருக்கும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

பாரதி போல மீசை வைச்ச அப்பாவே.

எவ்வளவு ஏக்கம் கொண்ட பாடல்..
கேட்கும்போதே மனசு கணக்கிறது...

வணக்கம்...

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

>>தமிழர்கள் எனும் நாமம் கொண்ட அனைவரும், போர் என்னும் கொடிய அரக்கனின் கோரப் பசிக்கு இயல்பாகவே ஆளாகினார்கள்.

வலி நிறைந்த வரிகள் நிரூபா..

கூடல் பாலா said...
Best Blogger Tips

ஜீரணிக்க முடியாத சம்பவங்கள்

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மரணத்தின் காலடியில் வாழ்வதென்பது எவ்வளவு ஆபத்தானது... /// இது பெரிய கொடுமை நண்பரே..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

மீசையிலே இழுத்து நெஞ்சு மயிர் பிடிச்சு
தோளிலே தூங்கியாட நானும் நினைச்சேன்
கடலினில் கேட்ட வெடியினால் துடித்து
கரையில் இருந்து நானும் பாடித் தவிச்சேன்!///
அவனுடைய தவிப்பு வார்த்தைகளில் தெரிகிறது..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

சின்ன வயசில் நான் என்ன செய்தேன்
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்// என்ன ஒற்று கொடுமையான விஷயம்..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

கண்ணுக்குள் வாழும் வற்றாக் கடல்கள்// அட என்னொரு உவமை..

சக்தி கல்வி மையம் said...
Best Blogger Tips

நெஞ்சை நெகிழ்ச்சிஊட்டும் பாடல்...

Thangasivam said...
Best Blogger Tips

அனைத்திற்கும் ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரும் நண்பரே.........

shanmugavel said...
Best Blogger Tips

உருக்கமான பதிவு.அந்த பாடல் நெஞ்சை அறுக்கிறது.

Unknown said...
Best Blogger Tips

உருக்கமான பதிவு.கொடுமை.அதையாராலும் ஜீரணிக்க மறந்துவிட முடியாது...

Unknown said...
Best Blogger Tips

voted in all

கவி அழகன் said...
Best Blogger Tips

தன் உயிர் தான் நேசித்த உயிர்கள் உறவுகள் சொந்தம் பந்தம் நட்பு ஒன்றன் பின் ஒன்றாக மடியும் போது ஒவொன்றாக பிடிங்கி எடுக்கும் போது கண்ணீர் வற்றிய கதறல்கள் அனுபவிதவனால் கூட அதே உணர்வுடன் திருப்பி சொல்ல முடியாது

எனது கவிலை இதை அனுபவிக்காமல் உணராமல் இன்றும் சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் ஒரு கும்பல் தாய் மண்ணை தன்வசப்படுத்த நிக்கிறது

ம.தி.சுதா said...
Best Blogger Tips

/////சின்ன வயசில் நான் என்ன செய்தேன்
எந்தன் சிரிப்பை அவர்கள் ஏன் கொள்ளை செய்தார்... எனும் உணர்வுகளோடு இன்றும் ஈழத்தில் வாழும் பிஞ்சு மனங்களின் உணர்விற்கான பதிலை யார் தான் சொல்லப் போகிறார்களோ/////

இப்போதும் தொடரத் துடிக்கும் அந்தக் கூட்டத்தின் கண்களுக்கு இது எட்டுமா சகோதரம்...

ம.தி.சுதா said...
Best Blogger Tips

போர் என்பத எவ்வளவ கொடுரமானது எனத் தெரிந்தும் ஏன் பல் அதை ஆதரிக்கிறார்கள் என்பது தான் என் சந்தேகம்..

ம.தி.சுதா said...
Best Blogger Tips

குட்டிக் கண்ணனின் அந்தச் செல்லக் குரலுக்கு மயங்காத மனிதருண்டோ... ”சிறகு முளைத்த குருவிக்கிங்கே சின்னச் சின்ன கூடு தீனி பொறுக்கும் அணிலுக்கிங்கே சொந்தம் கொள்ள வீடு“

அடிக்கடி கேட்கும் அந்த குரல் மட்டும் இன்று உயிரோடு...

கவி அழகன் said...
Best Blogger Tips

பிறந்த பூமி
வாழ்ந்த வீடு
தோட்டம் துறவு வயல் இன்றி
அனாதையாய் அட்டிபட்டு
உணவுக்காய் கை ஏந்தி
உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்

கவி அழகன் said...
Best Blogger Tips

தன் உயிர்
தான் நேசித்த உயிர்கள்
உறவுகள் சொந்தம் பந்தம் நட்பு
ஒன்றன் பின் ஒன்றாக
மடியும் போது
கண்ணீர் வற்றிய கதறல்கள்
அனுபவிதவனால் கூட
அதே உணர்வுடன்
திருப்பி சொல்ல முடியாது

கவி அழகன் said...
Best Blogger Tips

இன்னும் இதை அனுபவிக்காமல் உணரவும் கூட தெரியாமல் சில சித்தாந்தம் வேதாந்தம் பேசும் குழுக்கள் தாய் மண்ணை தம்வசாவ்ப்படுத்த துடிக்கிறான
நல்ல நிலையில் மக்கள் இன்றி மண்ணை வைத்து என்ன பிரயோசனம்

கவி அழகன் said...
Best Blogger Tips

100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்
100வது பதிவிற்கு வாழ்த்துகள் நிருபன்

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
ராஜ நடராஜன் said...
Best Blogger Tips

எடுக்கவோ கோர்க்கவோ போல் 100க்கு வாழ்த்தவா?தடயங்களுக்கு வருந்தவா?

Unknown said...
Best Blogger Tips

சகோ சகோ
நீங்கள் எத்தனை துயர்
களுக்கிடையே வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவும்
தெளிவாக உணர்த்துகிறது சகே

வாழ்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த தலையும் தந்த இறைவன்
சிங்கள இனவெறி கயவர்களை
வீழ்த்த விரைவில் வழி காட்டுவான்
அமைதி கொள்ளுங்கள் சகோ

புலவர் சா இராமாநுசம்

சசிகுமார் said...
Best Blogger Tips

பதிவு நல்லா இருக்கு நிரூ மற்றும் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ம.தி.சுதா said...
Best Blogger Tips

நிரு 100 க்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்...

சுதா SJ said...
Best Blogger Tips

இது வது பதிவாண்ணா..??
ம்ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

//தாமாக விரும்பிப் போரில் ஈடுபட்டு இறந்தவர்கள்,
காலத்தின் கட்டாயத்தினால் போரில் தம்மையும் இணைத்துக் கொண்டோர்,
கட்டாய ஆள் சேர்ப்பினால் போரில் இணைத்துக் கொள்ளப்பட்டோர்,//

மூடி மறைக்காமல் நிஜத்தையும் எழுதி உள்ளீர்கள்
வாழ்த்துக்கள்

சுதா SJ said...
Best Blogger Tips

//தமிழர்கள் எனும் நாமம் கொண்ட அனைவரும், போர் என்னும் கொடிய அரக்கனின் கோரப் பசிக்கு இயல்பாகவே ஆளாகினார்கள்//

உண்மைதான் பாஸ்
நாம் வாங்கி வந்த வரம் அப்படி,
எனக்கு தெரிந்து போர் என்னும் அரக்கனின் புடியில் இருந்து தப்பியவர் ஒரு சிலரே

சுதா SJ said...
Best Blogger Tips

//ஓர் போர் இடம் பெறும் பகுதியில். இன்றோ, நாளையோ நாம் உயிரோடு இருப்போமா அல்லது இல்லையா எனும் அச்ச உணர்வோடு வாழ்வது எவ்வளவு கொடுமையானது என்பது அதனை அனுபவித்தவர்களுக்கே தெரியும்//

நானும் இந்த நிலையை அனுபவித்து இருக்குறேன்,
உயிரை கையில் புடித்துகொண்டு வாழ்வது எத்தகையது என்று அனுபவித்தவர் மட்டுமே உணரும் வலி அது

சுதா SJ said...
Best Blogger Tips

//அப்பாவே பாரதி போல மீசை வைச்ச அப்பாவே.... எனத் தொடங்கும் அப் பாடலின் பாடல் வரிகளையும், பாடலையும் உங்களுக்காக இங்கே இணைத்துள்ளேன்.//

மனதை கனக்க வைக்கும் பாடல்

சுதா SJ said...
Best Blogger Tips

இந்த பாடலுக்கு முன் வரும் அறிவிப்பை செய்பவர் சின்ன வயசு இசைபிரியாவா ???

FARHAN said...
Best Blogger Tips

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா

Mathuran said...
Best Blogger Tips

முதலில் தங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

Mathuran said...
Best Blogger Tips

ஈழத்திலும் சரி, உலகிலும் சரி போர் என்ற பதத்தையே அழித்துவிடவேண்டும்..

இந்த பிஞ்சுகளின் ஏக்கத்தை பார்த்த பின்னும், இன்னும் போர், போர் என அலையும் கூட்டங்கள் திருந்தவில்லையா?

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

நெஞ்சு கனக்கும் பதிவு.... எதுவுமே சொல்லத்தெரியவில்லை. இன்றுபோல் நாளை இருக்காது....

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

100 ஆவது பதிவா நிரூபன்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

ஈழப்போராட்டம் உங்கள் பார்வையில்... நாங்கள் காண்பது...
வலி மிக்கதாக உள்ளது.வழக்கம் போல் உண்மையை உரத்து சொல்லுங்கள்.

நூறு ஆயிரமாகட்டும்...
வாழ்த்துக்கள்....

தனிமரம் said...
Best Blogger Tips

எத்தனை துயரங்கள் நம் வாழ்வில் இப்பாடல் அறிமுக நாயகிக்கு நடந்த கொடுமை பார்த்தும் இன்னும் ஒரு தீர்வு இல்லை கொடுமைகள் பல குட்டிக்கண்ணனின் குரல் மயக்கும் இன்னொரு பாடல் நித்திரையா தமிழா என்று ஒரு பாடல் ஞாபகம் வருகிறது இது நிச்சயம் என நம்புகின்றேன். இப்பாடலைப்போல் இன்னொரு பாடல் இசைப்பிரியா தோன்றும் காட்சி உடனடியாக ஞாபகம் வருதில்லை.
வாழ்த்துக்கள் நல்ல பாடலை உங்கள் மூலம் கேட்டேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

என்ன பாஸ் ஒளியூற்றுக்கா 100 பதிவு என நான் நினைக்கின்றேன் நாற்று பல நூறு பதிவை கண்டு விட்டது என்பது என் நினைப்பு இது வரை உங்கள் கருத்துக்களை பார்ப்பேன் மற்ற விடயங்களை ஆராய்வது இல்லை இனி எல்லாம் பூதக்கண்ணாடி போட்டு தேடனும் பாஸ் என் வேலை தெரியும் தானே ம்....100 பதிவுக்கு வாழ்த்து இன்னும் உங்கள் சேவை எனக்குத் தேவை!

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்

எத்தனையோ வேதனைகளை சுமந்து வாழு அந்த மக்களுக்கு கண்ணீரைத் தவிர எதையும் தரஇயலாத அபாக்கியசாலி நாம்//

உங்களில் எந்தத் தவறும் இல்லை சகோ, எல்லாமே அரசியல் மேடைகள் செய்யும் தவறு தான்.
உங்களின் உணர்வுகளுக்கு மீண்டும், மீண்டும் என் நன்றிகள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@A.R.ராஜகோபாலன்


உங்களின் சாதனையான சதத்திற்கு என் வாழ்த்துக்கள் அன்பு சகோ//

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களைப் போன்ற நண்பர்களுக்கும், என் வாசகர்களுக்கும் தான் போய்ச் சேர வேண்டியவை. இந்த நாற்றினை நூறாவது பதிவு வரை நகர்த்திக் கொண்டிருப்பதும் வாசகப் பெருமக்களும், நண்பர்களும் தான். ஆகவே இவ் வாழ்த்துக்களை என் உறவுகளுக்கே காணிக்கையாக்குகின்றேன்.
நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ஹேமா


மறக்காமலிருப்பதே நல்லது.ஆனால் வலி வலுக்கிறது நிரூ !//

என்ன செய்ய முடியும்? எங்களின் கடந்த காலங்களை, நாம் நடந்து வந்த பாதைகளை எப்படி மறக்க முடியும்?

நிரூபன் said...
Best Blogger Tips

@சிவகுமாரன்


-மனத்தைக் கனக்க வைத்த பாடல் வரிகள்.//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@விக்கியுலகம்

100வது பதிவிற்கு வாழ்த்துகள்.....

இனி இழக்க ஒன்றுமில்லை எம்மிடம்....
இனியாவது எம்மை வைத்து....பிழைப்பை நடத்தும் பெரியோரே அடங்குவீர்களாக....!//

வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ,
இனியும் தொடருவார்கள் போலத் தான் தெரிகிறது.....

நிரூபன் said...
Best Blogger Tips

@வெத்து வேட்டு

"கண் முன்னே ஓர் உயிரினைக் கொல்வதும், ஏனையோரைப் பார்க்க வைத்து - அவர்கள் யாவரும் இதே வழியினை வருங் காலத்தில் பின்பற்றக் கூடாது எனும் நோக்கிலும் கதறக் கதறத்- துடிக்கத் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்ட பலரது எண்ணிக்கை இதுவரை கணக்கெடுக்கப்படவில்லை."
i hope you are not talking about LTTE :)//


ஏன் பாஸ், நான் நல்லா இருப்பது உங்களுக்குப் பிடிக்கலை, கோர்த்து விடுறீங்களே(((;

நிரூபன் said...
Best Blogger Tips

@ கவிதை வீதி # சௌந்தர்//

தற்போது இருக்கும் நம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக்கொண்டு காத்திருப்போம் நமக்காக ஒரு கிழக்கு இருக்கும்...

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@FOOD

இன்னும் திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?//

அது தான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்


வலி நிறைந்த வரிகள் நிரூபா..//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@koodal bala


ஜீரணிக்க முடியாத சம்பவங்கள்//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@!* வேடந்தாங்கல் - கருன் *!


நெஞ்சை நெகிழ்ச்சிஊட்டும் பாடல்...//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Thangasivam B.Pharm,M.B.A,DPH

அனைத்திற்கும் ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரும் நண்பரே.........//

அந்த நாளைத் தான் எல்லோர் மனங்களும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கின்றன, ஆனால் இன்னும் தான் விடிவு காலம் வரவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

உருக்கமான பதிவு.அந்த பாடல் நெஞ்சை அறுக்கிறது.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ரியாஸ் அஹமது


உருக்கமான பதிவு.கொடுமை.அதையாராலும் ஜீரணிக்க மறந்துவிட முடியாது...//

நன்றி சகோ,

//voted in all//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்


எனது கவலை இதை அனுபவிக்காமல் உணராமல் இன்றும் சித்தாந்தம் வேதாந்தம் கதைக்கும் ஒரு கும்பல் தாய் மண்ணை தன்வசப்படுத்த நிக்கிறது//

அதான் சகோ, வலியை அனுபவித்தவனை விட, வலியைத் தூண்டி விட்டவர்களே, இன்று ஆளுகை மேற்கொள்ள முனைப்புக் காட்டுகிறார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

இப்போதும் தொடரத் துடிக்கும் அந்தக் கூட்டத்தின் கண்களுக்கு இது எட்டுமா சகோதரம்...//

மச்சி, எட்டுமா என்பது சந்தேகம் தான்,
மனிதாபிமானம் இருந்தால் தான் எட்டும் சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔

குட்டிக் கண்ணனின் அந்தச் செல்லக் குரலுக்கு மயங்காத மனிதருண்டோ... ”சிறகு முளைத்த குருவிக்கிங்கே சின்னச் சின்ன கூடு தீனி பொறுக்கும் அணிலுக்கிங்கே சொந்தம் கொள்ள வீடு“

அடிக்கடி கேட்கும் அந்த குரல் மட்டும் இன்று உயிரோடு...//

ஆமாம் சகோ.....
”சிறகு முளைத்த குருவிக்கிங்கே சின்னச் சின்ன கூடு
தீனி பொறுக்கும் அணிலுக்கிங்கே சொந்தம் கொள்ள வீடு“
உறவுகளோடிங்கே வாழ எமக்கில்லை நாடு
உறக்கங் கூட மரங்கள் தானே இங்கே எங்கள் கூடு.....
வீடும் இல்லை
நாடும் இல்லை
நடந்து போகத் தெருவும் இல்லை..........


நினைவுகளை மீட்ட வைத்து விட்டாய் மச்சி.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்
பிறந்த பூமி
வாழ்ந்த வீடு
தோட்டம் துறவு வயல் இன்றி
அனாதையாய் அட்டிபட்டு
உணவுக்காய் கை ஏந்தி
உயிர் காக்க
உடைகள் உரிந்து காட்டி
உயிர் தப்பினவன்
இன்னொரு பிறப்பு கேட்க மாட்டான்//

எங்கள் மக்கள் பலரது யதார்த்தத்தை உரைத்திருக்கிறீர்கள்..

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

இன்னும் இதை அனுபவிக்காமல் உணரவும் கூட தெரியாமல் சில சித்தாந்தம் வேதாந்தம் பேசும் குழுக்கள் தாய் மண்ணை தம்வசாவ்ப்படுத்த துடிக்கிறான
நல்ல நிலையில் மக்கள் இன்றி மண்ணை வைத்து என்ன பிரயோசனம்//

சொற்களால் சாட்டையடி கொடுக்கிறீங்க.

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவி அழகன்

இந்த வாழ்த்துக்கள் அனைத்தும்
என் வாசகர்களுக்கும், என்னை ஊக்கப்படுத்தும் அன்பு உள்ளங்களுக்கும் தான் போய்ச் சேர வேண்டியவை,
ஆதலால் உங்கள் வாழ்த்துக்களை இந்த நாற்றின் வாசக உள்ளங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி


நூறாவது பதிவுக்கு நாற்றுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@ராஜ நடராஜன்


எடுக்கவோ கோர்க்கவோ போல் 100க்கு வாழ்த்தவா?தடயங்களுக்கு வருந்தவா?//

தடயங்களுக்கு வருந்துதல் தான் சாலச் சிறந்தது.

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@புலவர் சா இராமாநுசம்

சகோ சகோ
நீங்கள் எத்தனை துயர்
களுக்கிடையே வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் ஒவ்வொரு பதிவும்
தெளிவாக உணர்த்துகிறது சகே

வாழ்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த தலையும் தந்த இறைவன்
சிங்கள இனவெறி கயவர்களை
வீழ்த்த விரைவில் வழி காட்டுவான்
அமைதி கொள்ளுங்கள் சகோ

புலவர் சா இராமாநுசம்//

உங்களின் உணர்வுப் பகிர்விற்கு நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சசிகுமார்


பதிவு நல்லா இருக்கு நிரூ மற்றும் 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@♔ம.தி.சுதா♔


நிரு 100 க்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்...//

நன்றி மாப்ளே.

நிரூபன் said...
Best Blogger Tips

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்

இது வது பதிவாண்ணா..??
ம்ம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள//

நன்றி மச்சி,

நிரூபன் said...
Best Blogger Tips

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்

மூடி மறைக்காமல் நிஜத்தையும் எழுதி உள்ளீர்கள்
வாழ்த்துக்கள்//

பாஸ், போட்டுக் கொடுக்கிறீங்களா((((;

நிரூபன் said...
Best Blogger Tips

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்


இந்த பாடலுக்கு முன் வரும் அறிவிப்பை செய்பவர் சின்ன வயசு இசைபிரியாவா ???//

ஆமாம் பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@FARHAN


100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பா//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்

முதலில் தங்களது நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@மதுரன்
ஈழத்திலும் சரி, உலகிலும் சரி போர் என்ற பதத்தையே அழித்துவிடவேண்டும்..

இந்த பிஞ்சுகளின் ஏக்கத்தை பார்த்த பின்னும், இன்னும் போர், போர் என அலையும் கூட்டங்கள் திருந்தவில்லையா?//

திருந்தியிருந்தால்......மீண்டும் போர் வேண்டும் என அழமாட்டார்கள் தானே சகோ(((((;

நிரூபன் said...
Best Blogger Tips

@athira


100 ஆவது பதிவா நிரூபன்... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கள் அனைத்தும் என் வாசகர்களுக்கே போய்ச் சேர வேண்டியவை...

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@உலக சினிமா ரசிகன்
ஈழப்போராட்டம் உங்கள் பார்வையில்... நாங்கள் காண்பது...
வலி மிக்கதாக உள்ளது.வழக்கம் போல் உண்மையை உரத்து சொல்லுங்கள்.

நூறு ஆயிரமாகட்டும்...
வாழ்த்துக்கள்....//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

குட்டிக்கண்ணனின் குரல் மயக்கும் இன்னொரு பாடல் நித்திரையா தமிழா என்று ஒரு பாடல் ஞாபகம் வருகிறது இது நிச்சயம் என நம்புகின்றேன்.//

சகோ, என்ன சொல்ல வருகிறீர்கள்? நித்திரையா தமிழா என்பது நிச்சயமா? புரியாமல் இருக்கிறதே...

குட்டிக்கண்ணன் பாடிய பாடல்களை விரல் விட்டு/ விரல் தொட்டு எண்ணி விடலாம்.

நித்திரையா தமிழா பாடல்...குட்டிக் கண்ணனின் பாடல் அல்ல. ஜெயா சுகுமார் அவர்கள் பாடிய பாடல்.


//இப்பாடலைப்போல் இன்னொரு பாடல் இசைப்பிரியா தோன்றும் காட்சி உடனடியாக ஞாபகம் வருதில்லை.
வாழ்த்துக்கள் நல்ல பாடலை உங்கள் மூலம் கேட்டேன்!//

இப் பாடலில் இசைப் பிரியா தோன்றி நடிக்கவில்லை. இசைப்பிரியா இப் பாடல் இடம் பெற்ற ஒளிவீச்சு ஒளிநாடாவில் அறிமுக உரையினை ஓர் அறிவிப்பாளராக வழங்குகிறார்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan
என்ன பாஸ் ஒளியூற்றுக்கா 100 பதிவு என நான் நினைக்கின்றேன் நாற்று பல நூறு பதிவை கண்டு விட்டது என்பது என் நினைப்பு இது வரை உங்கள் கருத்துக்களை பார்ப்பேன் மற்ற விடயங்களை ஆராய்வது இல்லை இனி எல்லாம் பூதக்கண்ணாடி போட்டு தேடனும் பாஸ் என் வேலை தெரியும் தானே ம்....100 பதிவுக்கு வாழ்த்து இன்னும் உங்கள் சேவை எனக்குத் தேவை!


நாற்று இப்போது தான் நூறாவது பதிவினை எட்டியுள்ளது,
ஒளியூற்று, நாற்றில் வீடியோக்களை இணைத்தால் லோடிங் ஆகும் என்பதால்,
அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று நான் உருவாக்கிய வலைப்பதிவு.

நான் வலைப்பதிவிற்கு இந்த வருட ஜனவரி மாதம் ஆரம்பத்தில் தான் வந்திருக்கிறேன், ஆகவே நாற்றுக்குத் தான் நூறாவது பதிவு பாஸ்.
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ

நிரூபன் said...
Best Blogger Tips

என் உறவுகளால் நூறாவது பதிவிற்குத் தெரிவிக்கப்பட்ட வாழ்த்துக்கள் அனைத்தினையும், நாற்றின் ஒவ்வோர் நகர்வுகளுக்கும் தோளோடு தோள் நின்று, என்னை ஊக்கப்படுத்தும் வாசக உள்ளங்களுக்கும், குறை நிறைகளைச் சுட்டிப் படைப்புக்களை மேம்படுத்த உதவும் அன்பு உறவுகளுக்கும், என்னோடு எப்போதும் கூட வரும் நட்பின் சிகரங்களுக்கும் காணிக்கையாக்குகிறேன்.

தனிமரம் said...
Best Blogger Tips

மன்னிக்கனும் பாஸ் முதலில் பிழையான பாடலைக்குறிப்பிட்டு விட்டேன் குட்டிக்கண்ணன் பாடியது ஆண்டாடு காலமாய் என்ற பாடல் தயவு செய்து முதல் பின்னூட்டத்தை நீக்கி விடுங்கள்

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நல்ல பதிவுக்குக்கூட மைனஸ் ஓட்டு போடறவங்களைக்கண்டா எரிச்சல் வருது

தனிமரம் said...
Best Blogger Tips

நித்திரை எனக்குத்தான் நண்பா அதனால் தான் இரண்டு விடயங்களை குழப்பி விட்டேன்.இப்பாடல் காட்சியைப் போல் இன்னொரு பாடல் காட்சியில் இசைப்பிரியா தோன்றி இருந்தார் என்று கூறவந்தேன். 
நிரு நித்திரையின் நேரம் வெறும் 4.30 மணித்தியாலம் தான் இது புலம்பெயர்வு தந்தவரம் புரிகிறதா என் தவறு மன்னிக்கவும் மீண்டும் ஒரு முறை.!

Kousalya Raj said...
Best Blogger Tips

ஆரம்பம் முதல் முடிவு வரை என்னவென்று சொல்ல...?! என்றும் நெஞ்சில் ஒரு முள் போல குத்திகொண்டிருக்கிறது.

உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டு என்ன கருத்துரை இட என்று தெரியாமல் மௌனத்தால் கடந்து சென்றுவிடுவேன்...

இப்போதும் வரிகளை தேடிகொண்டிருக்கிறேன் நிரூபன்.

இந்த வலி நிரந்தரமா ? தற்காலிகமா ? என தெரியாமல் நாட்களும் போய் கொண்டே இருக்கிறது.

maruthamooran said...
Best Blogger Tips

நிரூபன்.....!


மோதல்களின் வலி படுபயங்கரமானது. இன்னும் ஒரு தலைமுறை வரை அதன் தாக்கங்கள் பெருமளவில் இருக்கப்போகிறது. அதிலிருந்து வெளிவருவதுதான் இப்போது அவசரமாகத் தேவைப்படுவது. ஆனாலும், அதற்கான ஏற்பாடுகள் எந்த்த் தரப்பினாலும் முன்னெடுக்கப்படவில்லை என்பது வேதனையே!!

குட்டிக்கண்ணன்.

வன்னியில் வாழ்ந்த 1996- 1998 காலப்பகுதியில் பல தெருநாடகங்களுக்கு முன்னர் அவர் பாடும் பாடல்களை கேட்டிருக்கிறேன். பாவம், நல்ல கலைஞன், மோதல்களின் உக்கிரத்தில் அவரும் மாண்டுபோனார் என்பது வலிக்கிறது.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

வலி நிறைந்த வரிகள்!

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///நித்திரையா தமிழா பாடல்...குட்டிக் கண்ணனின் பாடல் அல்ல. ஜெயா சுகுமார் அவர்கள் பாடிய பாடல். /// மச்சி பாடியது சாந்தன் எண்டு தான் நினைக்கிறன் ....

நிரூபன் said...
Best Blogger Tips

@நிகழ்வுகள்


///நித்திரையா தமிழா பாடல்...குட்டிக் கண்ணனின் பாடல் அல்ல. ஜெயா சுகுமார் அவர்கள் பாடிய பாடல். /// மச்சி பாடியது சாந்தன் எண்டு தான் நினைக்கிறன் ....//

இல்லை மச்சி, நித்திரையா தமிழா... பாடியவர் ஜெயா சுகுமார்,
அதே அல்பத்தில் இடம் பெற்ற
இனிவரும் இனிவரும் காலங்கள்.......
எனும் பாடலைப் பாடியவர் தான் சாந்தன்.

நிகழ்வுகள் said...
Best Blogger Tips

///நிரூபன் said...

@நிகழ்வுகள்
///நித்திரையா தமிழா பாடல்...குட்டிக் கண்ணனின் பாடல் அல்ல. ஜெயா சுகுமார் அவர்கள் பாடிய பாடல். /// மச்சி பாடியது சாந்தன் எண்டு தான் நினைக்கிறன் ....//

இல்லை மச்சி, நித்திரையா தமிழா... பாடியவர் ஜெயா சுகுமார்,
அதே அல்பத்தில் இடம் பெற்ற
இனிவரும் இனிவரும் காலங்கள்.......
எனும் பாடலைப் பாடியவர் தான் சாந்தன்/// ஆமாம் பாஸ் நீங்க சொல்வது தான் சரி , நானும் இது வரை சாந்தன் பாடியது எண்டு தான் நினைச்சுக்கொண்டு இருந்தான், புதுவையின் வரிகளுக்கு சுகுமார் தான் பாடியது ...

Jana said...
Best Blogger Tips

சில தடங்கள், வடுக்களை எப்படி அற்றிக்கொள்ளப்போகின்றோம் என்பதே தற்போது எம்முன்னே விஸ்பரூபம் எடத்து நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நிற்கின்றது நிரூ.
சில வேளைகளில் உச்சமாக நான் நினைத்துக்கொள்வது நாம் செய்த பாவம் என்ன? என்ற கேள்வியைத்தான்...

Thenammai Lakshmanan said...
Best Blogger Tips

வருத்தம் ஏற்படுத்திய பதிவு..

vidivelli said...
Best Blogger Tips

சகோ/என்ன செய்ய எல்லாமே வேதனைதான்........
இதுவே விதியாகி விட்டது எமக்கு..
அருமையான பதிவு.
வழ்த்துக்கள்.
முதல் வந்து வாசித்துவிட்டு பின்னூட்டமிட முடியாமல் சென்றுவிட்டேன்.

நண்பர்களே நம்ம பக்கம்!!! மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்!!
நீங்களும் யோசித்து பாருங்களேன்

சரியில்ல....... said...
Best Blogger Tips

கண்ணீர் பதிவு... கனமான பதிவு..

சரியில்ல....... said...
Best Blogger Tips

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்...

ஆகுலன் said...
Best Blogger Tips

Feel bad...............
(my Tamil font didn't work)
sorry for the late..
I like kuddikannan.....

Admin said...
Best Blogger Tips

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

மனதை சஞ்சலப்படுத்திய வரிகள்

மாலதி said...
Best Blogger Tips

100வது பதிவிற்கு வாழ்த்துகள்

மாலதி said...
Best Blogger Tips

ஈழப்போர் என்பது காலத்தால் வரலாற்றால் மறந்துவிடமுடியாத ஒன்றும் கேட்காத உலகத்திற்க்கு ஏற்ப்பட்ட கரும்புள்ளி..

மாலதி said...
Best Blogger Tips

மரணத்தின் காலடியில் வாழ்வதென்பது எவ்வளவு ஆபத்தானது... /// இது பெரிய கொடுமை நண்பரே..

காட்டான் said...
Best Blogger Tips

வாழ்த்துக்கள் 100வது பதிவிற்கு

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

100வது பதிவிற்கு வாழ்த்துகள்..........

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

மன்னிக்கனும் பாஸ் முதலில் பிழையான பாடலைக்குறிப்பிட்டு விட்டேன் குட்டிக்கண்ணன் பாடியது ஆண்டாடு காலமாய் என்ற பாடல் தயவு செய்து முதல் பின்னூட்டத்தை நீக்கி விடுங்கள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சி.பி.செந்தில்குமார்

நல்ல பதிவுக்குக்கூட மைனஸ் ஓட்டு போடறவங்களைக்கண்டா எரிச்சல் வருது//

பாஸ், மைனஸ் ஓட்டுப் போடுறாங்கள், ஓக்கே,
ஆனால் ஏன் போடுறாங்க என்ற காரணத்தைச் சொல்லிட்டுப் போடலாமில்லே.

நிரூபன் said...
Best Blogger Tips

@Nesan

நித்திரை எனக்குத்தான் நண்பா அதனால் தான் இரண்டு விடயங்களை குழப்பி விட்டேன்.இப்பாடல் காட்சியைப் போல் இன்னொரு பாடல் காட்சியில் இசைப்பிரியா தோன்றி இருந்தார் என்று கூறவந்தேன்.
நிரு நித்திரையின் நேரம் வெறும் 4.30 மணித்தியாலம் தான் இது புலம்பெயர்வு தந்தவரம் புரிகிறதா என் தவறு மன்னிக்கவும் மீண்டும் ஒரு முறை.!//

சகோ, தூக்கக் குழப்பத்தில் கருத்துக்களைக் கூறும் போதும், பிறருக்குப் புரியும்படியாக கருத்துக்களைக் கூறினால் அருமையாக இருக்காதல்லவா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Kousalya


ஆரம்பம் முதல் முடிவு வரை என்னவென்று சொல்ல...?! என்றும் நெஞ்சில் ஒரு முள் போல குத்திகொண்டிருக்கிறது.

உங்களின் பல பதிவுகளை படித்துவிட்டு என்ன கருத்துரை இட என்று தெரியாமல் மௌனத்தால் கடந்து சென்றுவிடுவேன்...

இப்போதும் வரிகளை தேடிகொண்டிருக்கிறேன் நிரூபன்.

இந்த வலி நிரந்தரமா ? தற்காலிகமா ? என தெரியாமல் நாட்களும் போய் கொண்டே இருக்கிறது.//

இந்த வலிகள் தற்காலிகமானவையாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோரதும் ஆசை.

உங்களின் உணர்வுப் பகிர்விற்கு நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@மருதமூரான்.

நன்றி சகோ,

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்


வலி நிறைந்த வரிகள்!//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@சென்னை பித்தன்


வலி நிறைந்த வரிகள்!//

நன்றி ஐயா.

நிரூபன் said...
Best Blogger Tips

@Jana

சில தடங்கள், வடுக்களை எப்படி அற்றிக்கொள்ளப்போகின்றோம் என்பதே தற்போது எம்முன்னே விஸ்பரூபம் எடத்து நிற்கும் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நிற்கின்றது நிரூ.
சில வேளைகளில் உச்சமாக நான் நினைத்துக்கொள்வது நாம் செய்த பாவம் என்ன? என்ற கேள்வியைத்தான்...//

என்னுடைய கேள்வியும் அதே தான்...
நாம் செய்த பாவம் தான் என்ன?

நிரூபன் said...
Best Blogger Tips

@தேனம்மை லெக்ஷ்மணன்


வருத்தம் ஏற்படுத்திய பதிவு..//

நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@vidivelli

சகோ/என்ன செய்ய எல்லாமே வேதனைதான்........
இதுவே விதியாகி விட்டது எமக்கு..
அருமையான பதிவு.
வழ்த்துக்கள்.
முதல் வந்து வாசித்துவிட்டு பின்னூட்டமிட முடியாமல் சென்றுவிட்டேன்.//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சரியில்ல.......

கண்ணீர் பதிவு... கனமான பதிவு..//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@akulan

Feel bad...............
(my Tamil font didn't work)
sorry for the late..
I like kuddikannan.....//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@சந்ரு

100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்..

மனதை சஞ்சலப்படுத்திய வரிகள்//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@ATHAVAN


வாழ்த்துக்கள் 100வது பதிவிற்கு//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@அம்பாளடியாள்


100வது பதிவிற்கு வாழ்த்துகள்..........//

நன்றி சகோ.

Riyas said...
Best Blogger Tips

யுத்தத்தின் கொடூரங்களை கண்முன்னேகொண்டு வருகிறது உங்கள் பதிவு சகோ..

...αηαη∂.... said...
Best Blogger Tips

கனமான பதிவு... 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

எஸ் சக்திவேல் said...
Best Blogger Tips

இந்தப் போட்டோக்களே எம் துயர் நிலை காட்டும்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails