Wednesday, April 4, 2012

ஊதிப் பருத்த ஊர்மிளா! உன் ஒடம்பு சைஸிற்கு இது தேவையா?

தூர இடப் பயணம் போறவங்க எல்லாரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வாங்க. நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கில் ஒருவாட்டி இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன். 

வழமையாக பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், அன்று மட்டும் சன நெரிசல் ஏதுமின்றி இருந்திச்சுங்க. இதுக்குப் பேர் தான் நல்ல நேரமோ! என எண்ணியவாறு; யாருமே இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான் நீட்டி நிமிர்ந்து தூங்கத் ஆரம்பிச்சிட்டேன்.  பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ் ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக் கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து உட்காருகிறாள். (டைம்மிங் நிரூபா! விடாத! சீக்கிரமே புடிச்சிரு என மனதினுளோ முணு முணுத்தேன்!)

Tuesday, April 3, 2012

யோவ்! கஸ்மாலம் என்னையா நீ காதலிக்கிறே? காரி துப்பினாள் கார்த்தி!

சருகாகிப் போன காதல்!

உன் பார்வை அம்புகளால்
என் காதல் துளிர் விட்டது - இன்றோ
சந்தேகப் பார்வைகளால்
அது சருகாகி விட்டது!

Monday, April 2, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம்!

இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்;
உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும் மனித நேயம் கொண்டு மதித்தார்கள்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க