Showing posts with label ஈனர். Show all posts
Showing posts with label ஈனர். Show all posts

Thursday, May 3, 2012

மானங் கெட்ட மத வெறியர் கூட்ட ஈனப் புருஷனுடன் ஓர் நேர்காணல்!

பதிவுலகில் தன் மதத்தை வலிந்து திணித்து, தீவிர வெறியனாக மதம் பரப்பும் நோக்கில் அலைந்து கொண்டிருக்கும் ஈனப் புருஷனை ஓர் நேர்காணலுக்காக சந்தித்தோம். மதம் பரப்பும் நோக்கிலும், மைனஸ், ப்ளஸ் ஓட்டுப் போடும் நோக்கிலும் ரொம்ப பிசியாக இருந்தவர் கொஞ்ச நேரம் பிகு பண்ணி விட்டு பேட்டி கொடுக்க சம்மதித்தார்.

Thursday, April 26, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம்!

இளகிய மனமுடையோருக்கும், குழந்தைகளுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
பாகம் 01
ஈழ வள நாட்டின் வட புலத்தில் அமைந்துள்ள பலாலி எனும் சிற்றூர் விவசாயத்திற்கு நன்கு பெயர் பெற்றது. இன்று வரை தம் சொந்த இடத்திற்குப் போக முடியாது 22 வருடங்களுக்கும் மேலாக அகதி என்ற நாமத்தோடு இலங்கை முழுதும் அடுத்தவர்களின் குடிலுக்கு கீழ் ஒதுங்கி வாழும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வலி வடக்கு மக்கள். பலாலியிலிருந்து இடம் பெயர்ந்து மீசாலையில் குடி புகுந்தவர்கள் தான் சின்னமணி குடும்பத்தினர்.

Thursday, April 5, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம் - வேம்பிராய் கொலைக் களம்!

இளகிய மனமுடையோருக்கும், குழந்தைகளுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
 பாகம் 01
ஈழ வள நாட்டின் வட புலத்தில் அமைந்துள்ள பலாலி எனும் சிற்றூர் விவசாயத்திற்கு நன்கு பெயர் பெற்றது. இன்று வரை தம் சொந்த இடத்திற்குப் போக முடியாது 22 வருடங்களுக்கும் மேலாக அகதி என்ற நாமத்தோடு இலங்கை முழுதும் அடுத்தவர்களின் குடிலுக்கு கீழ் ஒதுங்கி வாழும் துர்ப்பாக்கிய நிலையில் உள்ளவர்கள் தான் இந்த வலி வடக்கு மக்கள். பலாலியிலிருந்து இடம் பெயர்ந்து மீசாலையில் குடி புகுந்தவர்கள் தான் சின்னமணி குடும்பத்தினர்.

Monday, April 2, 2012

சிங்களனின் சித்திரவதை முகாம்!

இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல!
இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்;
உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும் மனித நேயம் கொண்டு மதித்தார்கள்!

Thursday, December 15, 2011

வன்னி மக்களை கொல்லுங்கள்! மகிந்தரிடம் கொழு(ப்)(ம்)புத் தமிழர்கள் ஆவேசம்!

தப்பி வந்த ஓணாண்களை எட்டி உதைக்கும் வெளவால்கள்!

மேகத் திரை கூட்டங்களை விலக்கி - தம்
மேனி பார்த்து மகிழத் துடிக்கும் 
முகில் கற்றைகளாய்
வன்னி மக்கள் வாழ்வு!
விரும்பிய போது 
வீறாப்பு வசனங்கள் பேசி
உருவேற்றிடவும், 
வெறுத்திடும் வேளையில்
உவமை அணிகளை கையாண்டு
உச்சுக் கொட்டிடவும்
சபிக்கப்பட்ட ஓர் இனமாக
இந்த உலகினில் உள்ள
விடுதலை விரும்பிகள் 
கொடு முடி வேந்தர்கள்
கொழும்புத் தமிழர்கள் பார்வையில்
இறுதிப் போரில் தப்பிய
ஈனப் பிறவிகளாய்- வன்னி மக்கள்!

Saturday, August 13, 2011

ஈழத்தை முதலாக்கி விபச்சாரம் செய்யும் ஈனப் பிறவிகள்!

குருதி சிந்தி
எலும்புகள் புதையுண்ட
ஏகாந்த பெரு வெளியில்
இன்றும் அதே வாசனை
அவர்கள் இறுக(ப்)நிரூபனின் நாற்று வலை
பற்றிப் பிடித்திருந்த
இலட்சிய(க்) கனவுகள்
எச்சங்களாக
இருப்பது நிரூபனின் நாற்று வலை
மனக் கண் முன்னே
காட்சிகளாய் விரிகின்றது!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க