Showing posts with label வேலாயுதம். Show all posts
Showing posts with label வேலாயுதம். Show all posts

Sunday, January 15, 2012

நண்பன் - சிந்தனையை தூண்டும் விஜயின் சினிமா திருப்பு முனை

2012ம் ஆண்டின் பொங்கல் வெளியீட்டு திரைவிமர்சனம்:
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனித மூளையின் செயற்பாடுகளை மனிதனால் உருவாக்கப்பட்ட கம்பியூட்டர்கள் வெல்லத் துடிக்கும் வேளையில்; வியாபார நோக்கம்,பொழுதுபோக்கு அம்சம் மற்றும் ஜனரஞ்சக அந்தஸ்து ஆகியவற்றினை முன்னிறுத்தி,சமூகத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான செய்தியினைக் கொடுக்கின்ற திரைப்படங்களானது வெளி வருவது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்கில் எம் வாசல் எங்கும் இன்பம் தங்க வேண்டும் என நாம் பொங்கத் தயாராகும் இந் நேரத்தில் திரைக்கு வந்திருக்கிறது R.ஷங்கரின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் நண்பன் படம்.

Wednesday, November 2, 2011

விஜயிற்காய் தீக்குளிக்க தயாரான பதிவர் - வேலாயுத வெறி!

பதிவின் நோக்கம்: இச் சம்பவத்தோடு தொடர்புடைய பதிவரை அவதூறு செய்வதோ அல்லது தனி மனிதத் தாக்குதல் நிகழ்த்துவதோ அல்ல. 
விஜய் ரசிகர்கள் பதிவினைப் படித்த பின் உங்கள் கருத்துக்களை முன் வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சே! கேவலமா இருக்கு! எம் தமிழ்ச் சமூகத்தின் தீவிர வெறியினை நினைத்தால்!

ஒரு மனிதனது தனி மனித ஆசாபாசங்களுக்குள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இப் பதிவினை எழுதவில்லை. ஒவ்வோர் மனிதர்களுக்கும் ஒவ்வோர் விதமான உணர்வுகள் இருக்கும். ஒவ்வோர் மனிதனின் ரசனைகளும் அவனது உள் மன உணர்வுகளைப் பொறுத்து வேறுபட்டுக் கொள்ளும். நடிகர்கள் மீதான ரசனையும் ஒரு அளவோடு இருந்தால் சமூகத்தில் உள்ள ஏனைய மக்களுக்கு வெறுப்பினை வரவைக்காது என்பது யதார்த்தம். எந்த ஒரு விடயமும் அளவுக்கு மீறி தீவிர வெறித்தனத்தோடு நோக்கப்படுகையில் தான் அவை விபரீதமான முடிவினைத் தருகின்றது.

Thursday, October 27, 2011

வேலாயுதம் - தூள் கிளப்பும் ஆக்சன் - கொஞ்சம் பழைய சாயலடிக்கும் சென்டிமென்ட்!

இளகிய மனமுடையோர், மற்றும் குழந்தைகளுக்கு உகந்த படம் அல்ல!
புத்தாடை அணிந்து, மத்தாப்புக் கொழுத்தி மகிழ்வோடு உறவினர்கள் அனைவருடன் இணைந்து தீபத் திருநாளைக் கொண்டாடி விட்டு, கணினி முன்னே உட்கார்ந்திருப்போருக்கும், மற்றும் ஏனைய உறவுகளுக்கும் வணக்கம் & மீண்டும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தமிழ் சினிமா வரலாற்றில் நீண்ட காலமாக இருந்து வந்த பண்டிகைக் கால ரஜினி - கமல் படங்களின் அந்தஸ்தினையும், தியேட்டர் உரிமத்தினையும் தற்போது தன் வசம் தக்க வைத்திருக்கும் ஒரேயொரு மாஸ் ஹீரோ இளைய தளபதி விஜய் அவர்கள் தான்.  பண்டிகைக் காலத்தில் வெளியிடப்படுகின்ற படங்கள் ஜனரஞ்சக அந்தஸ்தினைக் கருத்திற் கொண்டு வெளியடப்படும் அதே சூழலை உணர்ந்தவர்களாக கதாநாயகர்கள் படக் கருவினைக் தேர்வு செய்தால் மக்களுக்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்! அதே வேளை சலிப்பும் இருக்காது.

Wednesday, August 24, 2011

பட்டய கெளப்ப போகும் தளபதி விஜய் இன் வேலாயுதம்- போஸ்டர் விமர்சனம்!

வலையுலக வரலாற்றில் முதன் முறையாகத் திரைப்படத்தின் போஸ்டருக்கு அதிரடி விமர்சனம் வழங்கி அசத்திய மாத்தியோசி வலைப்பதிவின் ஓனரும், நண்பனுமான ஓட்டவடை நாராயணனின் முயற்சியினைத் தொடர்ந்து, உங்களை நாடி வருகின்றது வேலாயுதம் போஸ்டர் விமர்சனம். தொடர்ச்சியாகப் பல படங்கள் மூலம் தன் ரசிகர்களுக்குத் தொல்லை கொடுத்து வந்த இளைய தளபதி அவர்களின் திரையுலக வாழ்வில் திருப்பு முனையாக அமையவுள்ள படம் தான் இந்த வேலாயுதம்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க