பதிவின் நோக்கம்: இச் சம்பவத்தோடு தொடர்புடைய பதிவரை அவதூறு செய்வதோ அல்லது தனி மனிதத் தாக்குதல் நிகழ்த்துவதோ அல்ல.
விஜய் ரசிகர்கள் பதிவினைப் படித்த பின் உங்கள் கருத்துக்களை முன் வைத்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். சே! கேவலமா இருக்கு! எம் தமிழ்ச் சமூகத்தின் தீவிர வெறியினை நினைத்தால்!
ஒரு மனிதனது தனி மனித ஆசாபாசங்களுக்குள் தலையிட வேண்டிய கட்டாயத்தில் இப் பதிவினை எழுதவில்லை. ஒவ்வோர் மனிதர்களுக்கும் ஒவ்வோர் விதமான உணர்வுகள் இருக்கும். ஒவ்வோர் மனிதனின் ரசனைகளும் அவனது உள் மன உணர்வுகளைப் பொறுத்து வேறுபட்டுக் கொள்ளும். நடிகர்கள் மீதான ரசனையும் ஒரு அளவோடு இருந்தால் சமூகத்தில் உள்ள ஏனைய மக்களுக்கு வெறுப்பினை வரவைக்காது என்பது யதார்த்தம். எந்த ஒரு விடயமும் அளவுக்கு மீறி தீவிர வெறித்தனத்தோடு நோக்கப்படுகையில் தான் அவை விபரீதமான முடிவினைத் தருகின்றது.