2012ம் ஆண்டின் பொங்கல் வெளியீட்டு திரைவிமர்சனம்:
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அனைத்து உள்ளங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
இன்றைய இயந்திர உலகில் மனித மூளையின் செயற்பாடுகளை மனிதனால் உருவாக்கப்பட்ட கம்பியூட்டர்கள் வெல்லத் துடிக்கும் வேளையில்; வியாபார நோக்கம்,பொழுதுபோக்கு அம்சம் மற்றும் ஜனரஞ்சக அந்தஸ்து ஆகியவற்றினை முன்னிறுத்தி,சமூகத்திற்கு ஒரு ஆக்கபூர்வமான செய்தியினைக் கொடுக்கின்ற திரைப்படங்களானது வெளி வருவது அரிதாகிக் கொண்டிருக்கிறது. இந்தக் குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்யும் நோக்கில் எம் வாசல் எங்கும் இன்பம் தங்க வேண்டும் என நாம் பொங்கத் தயாராகும் இந் நேரத்தில் திரைக்கு வந்திருக்கிறது R.ஷங்கரின் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்திருக்கும் நண்பன் படம்.
|
|

