பதிவிற்குள் நுழைவதற்கு முன்பதாக ஒரு சிறிய எடுகோளை இங்கு முன் வைக்கிறேன்.
ஆபாசப் பதிவர்கள் வரிசையில் பதிவுலகில் அடியேனும் உள்ளேன் என்பது உங்கள் அனைவருக்கும் சொல்லியா தெரியனும்? நன்றாக எழுதும் பதிவர்கள் வரிசையில் நிரூபனின் பெயரையும் நீங்கள் சிபாரிசு செய்தால் உங்கள் மூஞ்சியில் காறி உமிழாத குறையாக உங்கள் நண்பர்கள்.."நிரூபனெல்லாம் ஒரு பதிவனா?" இவனை விட நன்றாக பலர் எழுதுகிறார்களே எனக் கூறி உங்களுக்கு தரமான பதிவர்களை அறிமுகப்படுத்துவார்கள்! நான் சொல்வது சரி தானே! ஆகவே நான் ஒரு சுத்தமான - ரொம்ப நல்ல பதிவர் என்று எப்போதும் சொல்லியதில்லை! நல்ல பதிவிற்கும், நாறின பதிவிற்கும் இடையிலான வித்தியாசம் உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
ஆழியாள் என்ற படைப்பாளியின் படைப்புக்கள் பற்றிய அலசலாக இப் பதிவு இருக்காது என்பதனை பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகின்றேன். ஆழியாள் என்ற கவிதாயினியின் புதுமைக் கவிதைகள் மூலம் தான் நவீன பெண்ணியத்தின் கதவுகள் திறக்கப்பட்டதாக இன்றைய பெண்ணியம் பற்றிப் பறை சாற்றும் கவிஞர்கள் குட்டி ரேவதி, லீனா மணிமேகலை உள்ளிட்டோர் வரலாற்றுத் திரிபினை ஏற்படுத்துகின்றார்கள். தமிழ்க் கவிதை வரலாறு அறிந்த எவராலும் இத் திரிபினை ஏற்றுக் கொள்ள முடியாது. பெண்ணியம் என்றால் என்ன என்பதற்கும், புரட்சி கவிதைகள் அல்லது கவிதைகளில் புதுமைகள் ஏற்படுத்தப்பட்டது என்றால் என்ன என்பதற்கும் அர்த்தம் சிறிதும் அறியாத குட்டி ரேவதி, லீனா மணிமேகலை உள்ளிட்ட கவிதாயினிகள் ஓர் இனத்தின் வரலாற்றினை ஆழியாளை முன்னிறுத்தி திரிபுபடுத்துகிறார்கள்.
தமிழ்ப் படைப்பாளிகளே! இந்த தவறினை நாம் ஒவ்வொருவரும் அனுமதிக்கப் போகின்றோமா? சுதந்திரப் படைப்பாளிகளுக்கும், புதுமைக் கவிஞர்களுக்கும் வேறுபாடு அறியாதவர்கள் இம் மாதிரியான கவிதைகளை தலைமேற் கொண்டாடுவதன் மூலம் ஈழத்தில் பெண் கவிஞர்கள் வரிசையில் 1980-2009ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல திறமையான பெண் கவிஞர்களை, கவிதைகளில் புரட்சி செய்த பெண் கவிஞர்களையெல்லாம் வரலாற்றுத் தடத்திலிருந்து தம் ஆபாச கவிதைகள் மூலம் அழித்து விட்டு, ஆண் குறி பற்றியும், யோனி மடல் பற்றியும் பேசும் கவிதைகள் தான் நனி சிறந்த கவிதைகள், இவையே புரட்சி கவிதைகள் என புது அர்த்தம் கற்பிக்கின்றனர் நவீன படைப்பாளிகள்!
ஈழ மண்ணைப் பொறுத்த வரை, போர்ச் சூழலுக்குள்ளும், போர்ச் சூழலுக்கு வெளியேயும், பல பெண் கவிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கவிதையில் பல சாதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏன் மகளிர் இசைக் குழுவினை அமைத்து, பாடல்களை எழுதியிருக்கிறார்கள். பாடல்களை வெளியிட்டும் உள்ளார்கள். கவிஞர் செம்பருத்தி, மலைமகள், கப்டன் வானதி, யோ.புரட்சிகா, அம்புலி, ஆதிலட்சுமி சிவகுமார், அலையிசை, அ,காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞானமதி, கஸ்தூரி, கிருபா, நகுலா, நாமகள், நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபிமார்க்கட், பாரதி, சிரஞ்சீவி, சூரியநிலா, சுதாமதி, தமிழவள், தயாமதி, தூயவள், தமிழ்க்கவி உள்ளிட்ட பல கவிதாயினிகளின் கவிதைகளின் உட் கருத்துக்களிற்கு ஈடாகவோ அல்லது, அக் கவிதைகளின் வீரியத்திற்கு நிகராகவோ நிற்க முடியாத ஆழியாளின் ஆண் குறிப் புனைவுக் கவிதைகள் ஊடாக தமிழ்க் கவிதைகள், ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் ஆழியாள் எனும் புரட்சிகரப் பெணின் ஊடாக வளர்ந்திருக்கிறது எனக் கூறுவது ஈனத் தனமான செயலாகும்.
ஆழியாளினை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இத் தவறினை ஆழியாள் கூட ஆதரிக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகின்றது. ஒரு வரையறைக்குள் பெண்கள் வாழ வேண்டும், பெண்களின் கவிதைகள் ஒரு எல்லைக்குள் நிற்க வேண்டும் என்ற நிலையினைத் தகர்த்தெறிந்தவர் ஆழியாள் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கது. சுதந்திர எழுத்தாளர்காளாக பலர் இன்று உலகினில் அவதரித்திருக்கும் வேளையில், ஆண்களும், பெண்களும் ஆண்குறி, தொடர்பிலும், பெண்குறி தொடர்பிலும் கவிதை படைப்பது என்பது ஒரு சாதாரண விடயம். இதனை இன்னோர் வகையில் சொன்னால் ஆதித் தாயின் முதுகில் பட்ட சவுக்கடி என ஆழியாளை முன்னுறுத்தி நவீன பெண்ணியம் பற்றிப் போதனை செய்யும் கவிதாயினிகளான லீனா மணிமேகலையும், குட்டிரேவதியும் தம்மிடம் இருக்கும் உடல் உறுப்புக்களை வாசகர்களுக்கு விற்பனை செய்வதற்கு தயாராக உள்ளவர்கள் போல கவிதை படைக்கிறார்கள்!
தன்னுடைய அந்தரங்க உறுப்பினைப் பற்றி ஒருவர் கவிதை படைக்கின்றார் என்றால் தன் உறுப்பினை அனைவரும் ஓடி வந்து ரசியுங்கள் என்று தானே கூவி அழைக்கின்றார்கள் என்று அர்த்தம்! ஆனால் பல இடப் பெயர்வுகளின் நடுவிலும், கோர யுத்தங்களின் நடுவேயும் பல வரலாற்றுச் சுவடுகளை விட்டுச் சென்ற ஆக்கபூர்வமான தமிழ்ப் பெண் கவிஞர்களின் வரலாறு இந்த ஆண் குறி மையப் புனைவைச் சிதைத்த விபச்சார கவிதாயினிகளின் அற்பச் செயல் மூலம் அழிக்கப்படுகின்றது. தமிழின உணர்வாளர்களே! இந்த உண்மை உங்கள் அனைவருக்கும் தெரிந்த பின்னுமா இவ் வரலாற்றுத் தவறு நிகழ இடம் கொடுக்கிறீர்கள்?
சுதந்திர எழுத்தாளர்களாக பெண்கள் எந்தவித தடையுமின்றி, கட்டுப்பாடுகள் ஏதுமின்றி எழுதுவதில் தவறேதுமில்லை! ஆனால் ஒரு வரலாற்றுச் சுவட்டின் அடையாளங்களாக விளங்கும் போராளிக் கவிஞர்கள், அக் கவிஞர்கள் கவிதையில் செய்த புரட்சிச் செயற்பாடுகள், இவற்றையெல்லாம் நாம் மறைத்து, ஆண்குறி பற்றியும், பெண் உறுப்பு தொடர்பாகவும் கவிதை பாடுவோரின் கவிதைகள் தான் சிறந்த கவிதைகள் என்று சொல்வதை தமிழ்ப் படைப்புலகமே ஏற்றுக் கொள்கிறாயா? இந்த மாதிரியான விஷமக் கவிப் பிரச்சாரத்திற்கு தகுந்த பதில் கொடுக்க தமிழ்ப் படைப்பாளிகள் யாருமே இல்லையா?
பெண்ணிய எழுத்தாளர்கள் வரிசையில் புரட்சி செய்த பல பெண் கவிஞர்களின் பெயர்களை சேற்றில் புதைத்து விட்டோம் என்ற பெருமிதத்தில், ஆபாசச் சொற்களை கோர்வையாக்கி கவிபாடி தம் உடல் உறுப்புக்களை விற்பனை செய்யும் கவிஞர்களின் கவிதைகள் தான் இன்றைய பெண்ணியம் பேசும் புரட்சி கவிதைகள் என்று சொல்வதற்கு வரலாறு ஒரு போதும் இடமளிக்காது. ஈழத்தில் வாழ்ந்த, இன்றும் வாழுகின்ற போராளிக் கவிஞர்களின் கவி வீரியத்திற்கு ஈடாக முடியாத அற்ப கவிதைகள் எல்லாம் புரட்சி கவிதைகள் என்று சொல்லி பொய்ப் புகழ்ச்சியில் சுய சொறிதல் அரங்கேற்றுவதை நிறுத்துங்கள் போலிப் பெண்ணியவாதிகளே!
"அன்புள்ள அம்மாவே
ஆசையுள்ள அப்பாவே
எங்கே நான் என்று தேடாதீர்கள்
இதயத்தில் வெந்து வெந்து நோகாதீர்கள்
காணாமற் போவதற்கும் நான் ஒன்றும் போகலை
களம் நோக்கிப் போகின்றேன் பாரம்மா!
தாயே உன் முகத்தை நான் தலைவனிடம் காண்கிறேன்
தாய் மடியின் சுகத்தை நான் தாயகத்தில் காண்கிறேன்! ”
மேலே எடுத்துக்காட்டாக கூறப்பட்ட கவிதை செம்பருத்தியின் கவிதை. இக் கவிதையின் வீரியத்திற்கு கூட கிட்ட நிற்க முடியாத விபச்சார கவிதைகள் எல்லாம் நவீன பெண்ணிய கவிதைகள் என்று சொல்வதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் எம் தமிழ்ச் சமூகமே ஏற்றுக் கொள்ளப் போகின்றாய்?
ஆழியாள் தூங்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தின் கவிதைப் பாதையில் ஒரு தூண்டுகோலாக இருந்தவராக இருக்கட்டும். ஆனால் அவரைப் பின் தொடர்ந்து பல ஆபாசச் சொற்களை கோர்வையாக்கி எழுதும் கவிஞர்கள் ஒரு வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த போராளி கவிஞர்களின் வீரியமிகு கவிதைகளை குழி தோண்டிப் புதைக்கிறார்கள் என்பது மட்டும் நிரூபணம்!
|
5 Comments:
ஆழ்ந்த கருத்துகள்.அருமையான பதிவு
விரிவான அலசல்! பாராட்டுக்கள்!
தங்கள் பதிவின் ஊடாக புரட்சி கவிதாயினிகளை தெரிந்து கொண்டேன்.
அவர்களது படைப்புகளை பொருத்தமான இடத்தில் தங்கள் பதிவுகளில் குறிப்பிடுங்கள்...நிரூபன்.
நீங்கள் சொலுவதை நூறு சவீதம் நான்
ஏற்றுக்கொள்கிறேன் .நீண்ட நாட்களாக
உங்களை வாசித்தாலும் இன்றுதான் முதன் முதல் கருத்து இடுகிறேன் .
அடுத்து சில கவிதாஜினிகள் என் தங்கள் உறுப்புக்களை வெளிச்சம் போடுகிறார்கள் என்று தெரியவில்லை.
அப்படி போட்டால்தான் புரட்சி க்விதாஜினிகள் என்று பிறர் மதிப்பார் என்று எண்ணுகின்றனர் போலும்.
நல்லதொரு சாட்டையடி!
கரிகாலன்
ஆபாசம் தப்பில்லையே நிரு...
ஆபாசத்தை ஆபாசமில்லாமல் சொல்ல வேண்டும்.... அந்த வகையில் நீ எப்பவோ தேறி விட்டாய்
Post a Comment