Wednesday, August 10, 2011

பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டி மன்றம்- காமெடி ஜிம்மி

முற் சேர்க்கை: பத்து வருடங்களின் பின்னர் இன்று பதிவுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவரும் தமிழகத்தில் ஒன்று கூடுகிறார்கள். முன்னாள் பதிவர்களின் நினைவுகளை மீட்டிப் பார்க்கும் வண்ணம் பதிவர் சந்திப்பு ஒன்றினை வைத்த பின்னர், பட்டிமன்றம் ஒன்று வைத்துத் தமது இளமைக் காலத்தினை 2011ம் ஆண்டில் தாம் பதிவுலகில் என்னவெல்லாம் செய்தோம் என்பதனை மீட்டிப் பார்க்கிறார்கள். இந்தப் பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

எங்கே...... இப்பொழுது மேடையின் திரைச்சீலை திறந்து கொள்கிறது. உங்களின் கரகோஷம் வானைப் பிளக்கட்டும். பட்டிமன்றத்தில் வாதாடப் போகின்ற பதிவர்கள் அனைவரும் அரங்கிற்கு வரட்டும்,
பதிவர்கள் பரபரப்புடன் மோதிக் கொள்ளும் பட்டிமன்றம் இப்போது ஆரம்பமாகிறது. இப் பட்டிமன்றத்தில்; பதிவுலகம் நம்மை வளர்த்ததா அல்லது அழித்ததா எனும் தலைப்பின் கீழ் வாதாடப் பல பதிவர்கள் காத்திருக்கிறார்கள்; என நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரூபன் அறிவித்து முடிக்க, பன்னிக்குட்டியார் மைக்கினைக் கையிலெடுக்கிறார்.

’’என்னது....பன்னிக்குட்டி மட்டுமா மைக்கினைத் தூக்க முடியும்? 
யோகா நான் என்ன பண் தின்னு கிட்டா இருக்கிறது. ஏலேய் எடுங்கடா அந்த மைக்கை என யோகா வேர்க்க விறு விறுக்க ஓடோடி வந்து மைக்கினைக் கையிலெடுக்கிறார் யோகா.

பன்னிகுட்டி: ’’புறூக்............புறூக்..................கிர்.............கிர்................புறூக்........புறூக்..

யோகா: ’ஏன் பன்னி காலையிலே டாய்லெட்டுக்குப் போகலையா? இங்கிட்டு வந்து சவுண்டு விட்டுக்கிட்டு இருக்கிறீங்க? வெள்ளைப் பூண்டு சாப்பிட்டு வந்திருக்கலாமில்லே. ஏன் பொது இடத்திலை அசிங்கம் பண்ற மாதிரிச் சவுண்டு குடுக்கிறீங்க?

பன்னிக்குட்டி: ’போடாங்க்...........நான் மைக் டெஸ்ட்டிங் பண்ணிக்கிட்டிருக்கேன். அத வுட்டிட்டு, டாய் லெட் போற மாதிரிக் காஸ் லீக் பண்றேன் என்று என்னை அவமானப்படுத்துறியே, இது நியாயமா அண்ணே?

யோகா: நாம பேசி டைம்மை வேஸ்ட்டாக்குவது இருக்கட்டும், ரசிகர்கள் எல்லோரும் டீவியில், கம்பியூட்டரில் லைவ் ஸீரீம் {LIVE STREAM} ஊடாக நம்ம பட்டிமன்றத்தினைப் பார்த்திட்டு இருக்காங்க, மானத்தை வாங்காமால் ஒழுங்க நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமில்லே!!

பன்னிக்குட்டி: ம்...வெளங்கிடும்...வெளங்கிடும்... மைக் டெஸ்ட்டிங் ஒன்.....
டூ....த்திரீ..................
மைக் டெஸ்ட்டிங் திரீசா.............நம்...நமீதா....

யோகா: மைக் எல்லாம் ஒர்க் ஆகுது ஓக்கே. வுட்டால் முன்னாள் நடிகைங்களை எல்லாம் கூப்பிட்டுப் பார்ப்பீங்க போல இருக்கே.
சரி...நாம் நிகழ்ச்சியை ஆரம்பிப்போமா.

பன்னிக்குட்டி: வலைப் பூவின் வழியே தமிழ் வளர்த்து, உங்கள் அனைவரின் மனவாசல் எங்கும் இடம் பிடித்த முன்னாள் பதிவர்கள், இந் நாளில் பட்டிமன்றம் மூலமாக உங்களை மகிழ்விக்கப் போகிறார்கள்.

யோகா: ஆமாம்.........இந் நாளில் தம் இளமைக் காலத்தை மீட்டிப் பார்க்கும் வகையில் பொன்னான நேரமதில் சொற் போர் நடாத்தப் பதிவர்கள் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள்.
அரங்கினிலே வலது பக்கம், அருவாள் புகழ் நாஞ்சில் மனோவும், குழை போடும் காட்டானும், மன்மத லீலைகள் நினைப்பில் இப்போது லீலைகள் செய்யலாம் என நரை விழுந்த பருவத்திலும் நம்மூர் பெண்கள் பின்னே திரியும் செங்கோவியாரும், போலிச் சாமியை நம்பினாலும், இந்தக் கந்தசாமியை நம்பக் கூடாது எனச் சொல்ல வைக்கும் கந்தசாமியும் வீற்றிருக்கிறார்கள்.

இடது பக்கம், புதுமைப் பெண்களின் அடையாளமாக, முற் காலத்திலிருந்த ஹேமாப் பாட்டியும்,  கூர் நகத்தால் மனிதர்களை பிராண்ட முடியாத காரணத்தால் பூனைகளை எப்போதும் தன் கூடவே அழைத்துச் செல்லும்அதிரா ஆண்டியும், சித்ரா அம்மம்மாவும், 
வயதான காலத்திலும் நிறுத்தாது 16 வருடங்களாக கில்மாப் படத்திற்கு விமர்சனம் எழுதி; கில்மா கிழவன் எனும் பட்டப் பெயரினைத் தன் வசம் வைத்திருக்கும் சிபி செந்தில்குமாரும், கொலு வீற்றிருக்கிறார்கள்.

எங்கே உங்கள் கரகோஷம் வானைப் பிளக்கட்டும், 

’’யோ....நான் ஒருத்தன் இங்கிட்டு இருக்கிறது தெரியலை?
என நடு நடுங்கியவாறு குரல் ஒலித்த திசையினை நோக்கித் தம் பார்வையினைத் திருப்பினார்கள் யோகாவும், பன்னிக்குட்டியும்.
‘’ என்ன அப்பிடிப் பார்க்கிறீங்க? 
நான் தான் ஆப்பிசர் சங்கரலிங்கம்! என்ன உங்க எல்லாருக்கும் என்னை நெனைவிருக்கா? பட்டிமன்றத்தில் இரு அணிகளுக்கும் வழங்கும் மார்க்கில் நீங்க ஏதாச்சும் கலப்படம் வைத்தாலுமெண்டு பார்த்துக்கிட்டிருக்கேனில்லே, எப்பூடி??
ஆப்பிசரை அறிமுகப்படுத்தாது விட்டு விட்டோமே என்று பன்னியும், யோகாவும் வருத்தமுறவும்,
ஆப்பிசரின் அருகே இருந்த விக்கி, கடுப்பாகி; தான் பாக்கட் பண்ணி வியட்னாமிலிருந்து கொண்டு வந்த அழுகிய தக்காளியால்...அரங்கில் இருந்த பன்னியின் மூஞ்சியில் எறிய அது இலக்குத் தவறி கீழே விழுந்து கொள்கிறது.

அரங்கில் ஒரு உருவம் கம்பியூட்டரும் கையுமாக ஓடோடி வந்தது.
’என்னை விடுங்க. என்னை விடுங்க. இந்தத் தக்காளியில் ஆராய்ச்சி பண்ணி, நம்ம கணினியைப் பாதுகாக்கும், அண்டி வைரஸ் ஏதாச்சும் இருக்கா என்று கண்டு பிடிக்கனும்’’ என தக்காளிப் பழத்தினைக் கண்ணாடிப் பெட்டியொன்றில் அடைத்துச் சென்ற உருவத்தினைப் பார்த்து எல்லோரும் மூக்கின் மேல் விரல் வைத்தார்கள்.
அட....இது நம்ம வந்தேமாதரம் சசி தானே... 
பாரய்யா...ஆளு விஞ்ஞானியானதும் தான் தாமதம். நம்மளை எல்லாம் மறந்துட்டான். 
தக்காளிப் பழத்திலிருந்து அண்டி வைரஸ் கண்டு பிடிக்கிறானாமில்லே.
என்ன ஒரு புதுமையான மனுசன் அவன் என சென்னைப் பித்தன் ஐயா பெரு மூச்சு விட்டுக் கூறவும்.
அரங்கில் இருந்த சிபி....’’யோ....என்ன எல்லாப் பெருசுங்களும் ஆளாளைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கிறீங்க. ஒரு நாளைக்கு எட்டுப் பதிவு போடுற நானே என் முக்கியமான வேலையை வுட்டிட்டு இங்கே வந்திருக்கேன். எல்லோரும் என்னா பேசிக்கிட்டிருக்கிறீங்க?
பட்டிமன்றத்தைத் தொடங்கிறீங்களா? இல்லை நான் கிளம்பட்டுமா?

நாஞ்சில் மனோ: நாதாரி...இப்பவும் பாரு...இது திருந்தவே இல்லை. இந்த வயசிலையும் பதிவு போடனும் என்று அலையுது. ஏய் சிபித் தாத்தா...போடா போயி, உன் பேரக் குழந்தைகளைப் பாரு. அதை விட உனக்கு இந்தப் பதிவுலமகா முக்கியம்?

யோகா: எல்லோரும் கொஞ்சம் பொத்திக்கிட்டு இருக்கிறீங்களா?

செங்கோவி: என்னத்தைப் பொத்திகிட்டு இருக்கிறது? அபையில் பெண் பதிவர்கள் இருக்கிறது தெரியாமல் அசிங்கமாப் பேசுறீங்களே? இது நியாயமா?

யோகா: யோ செங்கோவி என்ன மனுசனய்யா நீர்? நான் சொன்னது வாயைப் பொத்திக்கிட்டு இருக்கச் சொல்லி. நல்ல விடயம் சொன்னாலும் தப்பா எடுக்கிறீங்களே, இது தகுமா?

பன்னிக்குட்டி: இப்போது நாம் பட்டிமன்றத்தை ஆரம்பிக்கப் போகிறோம்.
இன்றைய பட்டிமன்றத் தலைப்பு இது தான். பதிவுலகம் நம்மை வளர்த்ததா? இல்லை அழித்ததா? 
இந்த தலைப்பின் கீழ்
நாஞ்சில் மனோவின் அணி வளர்த்தது என்றும், 
சித்ராவின் அணி நம்மை அழித்தது என்றும் வாதாடவுள்ளார்கள்.
ஒவ்வோர் வாதிகளும் தம் தரப்பு வாதங்களை எடுத்து வைக்கலாம்.

நாஞ்சில் மனோ: மதிப்பிற்குரிய நடுவர் அவர்களே, அபையோர்களே, மற்றும் அருவாள் கொண்டு சீவாமலே மண்டையில் மயிர் இல்லாதிருக்கும் முதியோர்களே! உங்கள் அனைவருக்கும் என் வணக்கம்!
பதிவுலம் என்னை வளர்த்தது என வாதிட வந்திருக்கும் அணி சார்பில் இங்கே வந்துள்ளேன். நான் அருவாள் வியாபாரத்தில் முன்னேறவும், என் அருவாள்களைச் சந்தைப்படுத்தவும் இந்தப் பதிவுலகம் எனக்கு ஆதரவாக இருந்து என்னை வளர்த்திருக்கிறது. ஏன் இன்னமும் சொல்லப் போனால் ஏற்கனவே டைப் பண்ணி வைத்த கத்தி....கோடாலி...அருவா...பொல்லு...செயின் கமெண்டுகளை வேகம் டைப் பண்ணாமல் காப்பி பேஸ்ட் முறையில் சிபியின் ப்ளாக்கில் போட்டு மகிழும்படி என்னைச் செய்ததும் இந்தப் பதிவுலகம் தானே?
அன்பான ஒரு தங்கை, பாசமுள்ள ஒரு தம்பியினை எனக்கு அன்பளிப்பாகத் தந்ததும் இந்தப் பதிவுலகம் தானே...

டிரிங்........டிரிங்.... நாஞ்சில் மனோவின் நேரம் முடிந்து விட்டது என்பதனை அறிவிக்கும் வகையில் ஏழாவது தடவையாக மணியொலி கேட்கிறது.

பன்னிக்குட்டி: டோய்...நிறுத்து நிறுத்து...நீ ரொம்ப ஓவராப் பேசுறாய். வரும் வழியில் எங்காவது டாஸ்க்மார்க்கிற்குப் போயிட்டு வந்தனியா? அடங்கிட்டு கம்முன்னு உட்காரு.

யோகா: நாஞ்சில் மனோ படிமன்றத் தலைப்பிற்குப் பொருத்தமில்லாது, தன் பதிவுலக நினைவுகளை மட்டும் மீட்டியிருக்கிறார். அடுத்ததாக நாம் அழைக்கவிருப்பது சித்ரா அவர்களை. இவர் பதிவுலகம் நம்மை அழித்தது எனும் தலைப்பில் வாதாடவருகிறார்.

சித்ரா: அனைவருக்கும் வணக்கம். பதிவுலகில் ஆபாசப் பதிவுகளை எழுதும் பொறுப்பற்ற பதிவர்களால் பல காத்திரமான பெண் பதிவர்களை இந்தப் பதிவுலகம் முன்னேற முடியாதவாறு அழித்திருக்கிறது. ஒரு பெண்ணிற்குச் சுதந்திரமாக கருத்துச் சொல்லும் உரிமை இருப்பினும், தனி மெயிலில் ஏன் அப்படிச் சொன்னீங்க என்று தான் தோன்றித் தனமான கேள்வி கேட்டு பெண்களை முடக்கி வைக்கும் நிலையினை ஒரு சில ஆணாதிக்கவாதிகள் மூலம் இந்தப் பதிவுலகம் சாதித்திருக்கிறது, ஆகவே என் தரப்பு வாதத்தின் அடிப்படையில், இந்தப் பதிவுகலம் எம்மை அழித்தது என்றே கூறுவேன்.

அடுத்ததாக நாம் அழைப்பது, பதிவர் காட்டான் அவர்களை:

காட்டான்: ஐயா வணக்கமுங்க. நான் காட்டான் வந்திருக்கேன். இந்தப் பதிவுலகம் உங்க முன்னாடி நடுவரா உட்கார்ந்திருக்கிற குறும்பாட்டிற்கு குழை போட வைச்சு, என் தொழிலில் என்னை முன்னேற வைத்து என்னை வளர்த்த்திருக்கிறது ஐயா. குட்டிக் காட்டான்கள் இருவருக்கும் என் பதிவுகளுக்கு வரும் ஓட்டுக்களின் எண்ணிக்கையினை எண்ணிச் சொல்லிப் பெருமைப்படவும், என் மனைவி வாயால் என் பதிவுகளை வலுக்கட்டாயமாகப் படிக்க வைத்து, நான் ரசித்துக் கேட்டு மகிழச் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்.
பிரான்ஸில் என்னிடம் லேட்டஸா வந்த ஐபோன் இருக்கு என்று ஆபிரிக்க குடிமகன்களுக்கு ஸ்டைல் காட்டி, வீடியோக்கள் எடுத்துப் பதிவுகளில் போட்டு மகிழவும், ரோட்டில், மெட்ரோ ரெயிலில், பஸ்ஸில் என நான் போகுமிடமெங்கும் என்னைப் பதிவு போட்டு உடனடி அப்டேற் பதிவுகளையும், உடனுக்குடன் அசத்தலான குழைகளையும் பதிவர்களுக்கு உணவாக வழங்கும் வண்ணம் என்னை முன்னேற்றியதும் இந்தப் பதிவுலகம் தான் மக்களே! ஆதலால் இந்தப் பதிவுலகம் என்னை வளர்த்தது என்றே கூறுவேன்.
என்ன
இது போதுமா?

யோகா: நீ....இந்த வயதிலையும் திருந்தலைப் பார்...குழ போடுறியா. இரு பட்டிமன்றம் முடிஞ்சதும் உனக்கு நான் யாருன்னு காண்பிக்கிறேன்..
எங்கே அடுத்த போட்டியாளர்: காட்டான் கொஞ்சம் கம்முன்னு உட்காரலாமில்லே, பதிவர்களையும் என்னை மாதிரிக் குறும்பாடு என்று நினைச்சிட்டியா மாப்ளே? என்னது...பதிவர்களுக்கு குழை போட்டீங்களா?
தாய்க் குலங்களே, இவரது பேச்சைக் கேட்டுப் பொறுமையாக இருப்பது சரியா?
துடப்பங் கட்டையினை எடுத்து அவருக்கு உங்க சக்தி என்னவென்று நிரூபிக்க வேண்டாமா?

ஹேமா: அனைவருக்கும் வணக்கம், இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது எனும் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். காரணம் காத்திரமான என்னுடைய பல கவிதைகள் அனுமதியின்றிக் காப்பி பேஸ்ட் செய்யப்பட்டு வேறு ஆண்களின் பெயரில் வலையில் வெளியாகியிருக்கிறது. பல நாட் சிரமபட்டு வெளங்காத குறியீடு- படிமம் மூலம் கவிதைகளை நான் எழுதினாலும், அவற்றிற்கான பொருள் கேட்டு என்னை டிஷ்ரப் பண்ணி அழித்த பெருமை இந்தப் பதிவுலகத்திற்கே சாரும். நன்றி வணக்கம்!

அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது,

செங்கோவி:
எல்லாருக்கும் வணக்கமுங்க.
டாபக்கா...டூபக்கா.....டோபக்கா....டீபக்கா...
‘’ஏய் குட்டி...முன்னால நீ....பின்னால நான் வந்தா தான்..
ஏனோ என் மனசு தான் பட படக்குது முன்னால......
இது வெறும் பாட்டு அல்ல...நான் பல நாட்களாகச் சிரம்பட்டு பொருள் தேடிப் படித்த- ரசித்த அரும் பெரும் பொக்கிசமான கவிதையும் கூட.
இந்தக் கவிதைக்கான பொருளைக் கூடப் புரியவில்லையே என்று தனி மெயிலில் விளக்கம் கேட்டு,
கொலைவெறியோடு என்னைஅணுகி, என் தூக்கம் தொலையும் வண்ணம் பாட்டிற்கான பொருள் விளக்கம் கேட்டு, டிஷ்ரப் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்....
{என்னது...நான் சரியாத் தான் பேசுறேனா..}
ஆதலால் பதிவுலகம் என் தேடலுக்கு ஊக்கமளித்து என்னை வளர்த்தது என்றே கூறுவேன்.

பன்னிக்குட்டி: கிழிஞ்சுது போ...தான் போடுற பாட்டுக்களுக்கு என்னம்மா வெளக்கம் குடுக்கிறாரு செங்கோவியார். கம்முன்னு உட்காராலாமில்லே, இங்கே என்ன பட்டிமன்றமா இல்லே பாட்டு மன்றமா நடாத்துறோம்?
அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது-

அதிரா: எல்லோருக்கும் வணக்கமுங்க. நான் தான் என் பக்கம் அதிரா வந்திருக்கேன். எனக்கு பூனைகள் என்றால் ரொம்ப உசிருங்க. என் பூனைகளைப் பற்றிப் பதிவெழுதி அதற்குப் பொருத்தமான படங்கள் போட்டு, கொஞ்ச நாட்களின் பின்னாடி, நானே பூனைகளின் மொழியினையும் படித்து, அதனையும் என் பதிவுகளில் எழுதி வந்தேனுங்க. நாசமாப் போன பதிவருங்க..என் பூனை மொழி புரியல்லை என்று திட்டிக் கமெண்ட்டு வேற போட்டிட்டாங்க.
ஆதலால் பதிவுலகம் என்னை அழித்தது என்றே கூறுவேன்.

பன்னிக்குட்டி: அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது வளர்த்தது எனும் அணியிலிருந்து,  கந்தசாமியாரை அழைக்கின்றோம்,

கந்தசாமி: அனைவருக்கும் வணக்கம். இந்தப் பதிவுலகம் என்னை வளர்த்தது என்றே அடித்துக் கூறுவேன். பச்சிளம் பாலகனாகப் பதிவுலகில் அறிமுகமான என்னைப் பத்து வருடங்களின் பின்னரும் இதே இளமையோடு கந்தசாமியாக வைத்திருக்கும் பெருமை இந்தப் பதிவுலகையே சாரும், ஏன்னா...நான் பதிவெழுத வந்தது 19 வயசிலை, இப்போ எனக்கு 29 வயசில்லே. நான் எப்பவுமே யூத் தானுங்கோ. அட நம்புங்கப்பா.
தலைக்கு கூட இன்னமும் நான் டை அடிக்கத் தொடங்கலை.
 எனவே இந்தப் பதிவுலகம் என்னை வளர்த்தது என்றே கூறுவேன்.

யோகா: அடுத்த போட்டியாளராக நாம் அழைப்பது

சிபி செந்தில்குமார்:
எல்லோருக்கும் வணக்கமுங்க. இந்தப் பதிவுலகம் என்னை அழித்தது என்று தான் அடித்துச் சொல்லுவேன். இந்தக் காலத்திலை எந்தப் ப்ளாக்கினை நம்பிக்கையோடு பப்பிளிக்கில் ஓப்பின் பண்ணிப் பார்க்கிறதென்றே தெரியலைங்க.
ஆபாசமாப் படம் போடுறாங்க. அசிங்கமான தலைப்பு வைக்கிறாங்க. நடிகைகளின் அசிங்கமான போட்டோக்களைப் போடுறாங்க. நான் கூட என் வீட்டில் உட்கார்ந்து ஒரு பதிவினையும் படிக்க முடியாத நிலமை. எங்கு பார்த்தாலும் கில்மா, ஜொள்ளு என்றே பதிவிடுறாங்களே, இது நியாயமா சொல்லுங்க. இப்படியான காரணிகளால் பதிவுலகம் நம்மை அழித்ததே என்று கூறேன்.

இவ்வாறு சிபி செந்தில்குமார் பேசி முடிக்கவும், தீர்ப்புச் சொல்லுவோம் என்று பட்டிமன்ற நடுவர்களான யோகாவும் பன்னிக்குட்டியும் தயாராகும் வேளை பார்த்து,
நாஞ்சில் மனோ....கொலை வெறியோடு எழுந்து...
‘’எடுங்கடா அந்த அருவாளை.
இந்த நாதாரி சிபிப் பயல் பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப தான் திருந்திட்டேன் என்று,  பொய் சொல்லுறான். பட்டிமன்றமா நடாத்துறீங்க...தீர்ப்புச் சொல்ல யாராவது எந்திருச்சீங்க...என் திருப்பாச்சி அருவாளாலை சீவிப்புடுவேன்...என்று நாஞ்சிலார் மிரட்டவும் தீர்ப்பேதுமின்றிப் பட்டிமன்றம் நிறைவு பெற்று விட்டது.

பிற் சேர்க்கை: இப் பதிவு வெறும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரும் இதனைச் சீரியஸ்ஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யார் மனமாமவது புண்படும் வண்ணம் இப் பதிவில் ஓவரா கிண்டல் பண்ணியிருந்தால் அனைவரும் மன்னிக்கவும்.

பிற்சேர்க்கை: இப் பதிவிற்கான ஆலோசனையை வழங்கியவர்...உங்கள் எல்லோர் உள்ளங்களிலும் சில நாட்களிற்கு முன்னர் உச்சரிக்கப்பட்ட பெயருக்குச் சொந்தக்காரர். தற்போது பதிவுலகிற்கு விடுமுறை கொடுத்து பிரான்ஸில் உல்லாசமாக விடுமுறையில் ஊர் சுற்றித் திரியும் நம்ம ஓட்ட வடை நாராயணன் - ஓனர் ஆப் மாத்தியோசி. 
இன்னும் ஓரிரு நாட்களில் ஓட்டவடை உங்களனைவரையும் ஒரு புதிய பதிவோடு வலைப் பதிவினூடாகச் சந்திக்கவுள்ளார் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

223 Comments:

«Oldest   ‹Older   201 – 223 of 223   Newer›   Newest»
பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

//////சி.பி.செந்தில்குமார் said...
# கவிதை வீதி # சௌந்தர் said...

200 அடிச்சிட்டு கிளம்பிட்டேன்...

ஆமா, இவரு பெரிய சச்சின் டெண்டுல்கர்! 200 அடிச்சதும் பெவிலியன் கிளம்பரார்.
///////

அண்ணே, அவரு சொன்ன இருநூறு, 200 மில்லி...

ஷர்புதீன் said...
Best Blogger Tips

//ஓட்டவடை உங்களனைவரையும் ஒரு புதிய பதிவோடு வலைப் பதிவினூடாகச் சந்திக்கவுள்ளார் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.//

மகிழ்ச்சி??!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

தமிழ்வாசி - Prakash said...
பட்டிமன்றத்திற்கு நடுவர்களாக திரு. பன்னிக்குட்டி ராம்சாமி அவர்களும், திரு யோகா அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள். >>>>

நடுவர்கள் திறமையானவர்களா? டவுட்டு சகோ!////டவுட்டெல்லாம் படப்பிடாது!நியாயமா தீர்ப்பு கண்டிப்பா சொல்லுவோம்!டேய் யாரடா அங்க பராக்கு பாத்துகிட்டு?சொம்பு கொண்டாடா!!!!!!!!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said.........அண்ணே, அவரு சொன்ன இருநூறு, 200 மில்லி...////..........மீட்டரு!!!!!!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

அண்ணாத்த அவசரமா வந்தா வெளியபோககூடாது.. வீட்டுக்குள்ளேயே பிரன்சுக்காரங்க அழகா கட்டி வைச்சிருக்கான்யா..?? வெளிய அவசரமான நிலையில உங்கள பொலீஸ் கண்டா கம்பை எடுத்து செம்ப நெளிச்சுடுவாங்கையா..!!!??????))))))////யோ!நான் "அந்த" வெளிக்குப் போறத சொல்லல!அலுவலா வெளியில போறன் எண்டு தான் சொன்னனான்!இந்தப் பாவிப் பயல் கோத்து விட்டு நான் வயது போன நேரத்தில என்ன பாடுபட வேண்டிக் கிடக்கு?அடுத்த வரியம் ஊருக்கு வந்து வச்சுக்கிறன் கச்சேரிய!(நிரூபன் தம்பி)

Yoga.s.FR said...
Best Blogger Tips

தாய்க் குலங்களே, இவரது பேச்சைக் கேட்டுப் பொறுமையாக இருப்பது சரியா?
துடப்பங் கட்டையினை எடுத்து அவருக்கு உங்க சக்தி என்னவென்று நிரூபிக்க வேண்டாமா?///"ஹேமா"வைக் கிண்டி விட்டு வேடிக்கை பாக்கலாம்னு நெனைக்கிறீங்களா?நடக்காது மவனே!அந்தப் "பிள்ளை"க்கு என்னைப் பற்றித் தெரியாதா?! என்ன??????????

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான்........பிரான்ஸில் என்னிடம் லேட்டஸா வந்த ஐபோன் இருக்கு என்று ஆபிரிக்க (கறுப்பு&வெள்ளை)குடிமகன்களுக்கு ஸ்டைல் காட்டி,(அடி) வாங்கி,வைத்தியர்களுக்கு வேலை கொடுக்க வைத்த பெருமையும் இந்தப் பதிவுலகுக்கே சேரும்!

அம்பாளடியாள் said...
Best Blogger Tips

அருமையான நகைச்சுவை வாழ்த்துக்கள் சகோ.........

Yoga.s.FR said...
Best Blogger Tips

’’என்னது....பன்னிக்குட்டி மட்டுமா மைக்கினைத் தூக்க முடியும்?
நான் என்ன பண் தின்னு கிட்டா இருக்கிறது.ஏலேய் எடுங்கடா அந்த மைக்கை என வேர்க்க விறு விறுக்க ஓடோடி வந்து மைக்கினைக் கையிலெடுக்கிறார் யோகா.////நல்ல வேளை நான் ஊரில் மைக் பிடித்த காலத்தில் நிரூபன் பிறக்கவில்லை!!!!!!

Yoga.s.FR said...
Best Blogger Tips

செங்கோவி: என்னத்தைப் பொத்திகிட்டு இருக்கிறது? அவையில் பெண் பதிவர்கள் இருக்கிறது தெரியாமல் அசிங்கமாப் பேசுறீங்களே? இது நியாயமா?////பொல்லுப் புடிக்கிற கேசுங்களையெல்லாம் நடுவராப் போட்டா இப்புடித்தான் எடக்கு,முடக்கா பேசிக்கிட்டே இருக்குங்க!நம்மூரில அறளை பேந்து போச்சுன்னு சொல்லுவோம்,செங்கோவி!

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான்:என் மனைவி வாயால் என் பதிவுகளை வலுக்கட்டாயமாகப் படிக்க வைத்து, நான் ரசித்துக் கேட்டு மகிழச் செய்ததும் இந்தப் பதிவுலகம் தான்.////தான்(கொ)கலைஞர் மாதிரின்னு பில்டாப்பு குடுக்கிறாரோ?(டவுட்டு-1)

ம.தி.சுதா said...
Best Blogger Tips

////வலைப் பூவின் வழியே தமிழ் வளர்த்து, உங்கள் அனைவரின் மனவாசல் எங்கும் இடம் பிடித்த முன்னாள் பதிவர்கள், இந் நாளில் பட்டிமன்றம் மூலமாக உங்களை மகிழ்விக்கப் போகிறார்கள்./////

அப்ப அவிய்ங்க இந் நாளில் பதிவெழுத வரமாட்டாய்ங்களா ?

ம.தி.சுதா said...
Best Blogger Tips

ஃஃஃஃஃஃஇன்னும் ஓரிரு நாட்களில் ஓட்டவடை உங்களனைவரையும் ஒரு புதிய பதிவோடு வலைப் பதிவினூடாகச் சந்திக்கவுள்ளார் எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.ஃஃஃஃஃ

வரவதற்கு முதல் மெயிலையாச்சும் ஒழுங்க படிக்கப் பழகீட்டு வரச் சொல்லுப்பா...ஹ..ஹ..

கோகுல் said...
Best Blogger Tips

நல்லா கூடி கும்மி அடிச்சிட்டிங்க போங்க

கூடல் பாலா said...
Best Blogger Tips

செம கலக்கல் மாப்ள ...திரும்ப திரும்ப படிச்சி சிரிச்சிகிட்டே இருக்கலாம் ....போனசா ஓட்ட வட வருகையையும் அறிவிச்சி குஷிப் படுத்திட்டீங்க ....குட் நைட் .

காட்டான் said...
Best Blogger Tips

செளந்தரயா இப்பிடியெல்லாம் டெக்கினுக்கு இருகுக்கென்று சொல்லிதாராம தனித்தவில் வாசிட்டுட்டு போட்டீங்களேயா.. அடுத்த முறை இத நான் கவனிச்சுகிறேன் மாப்பிள..

காட்டான் said...
Best Blogger Tips

 இப்பதான்யா தோட்டத்த சுத்தி பாத்திட்டு வீட்ட வந்திருக்கேன்யா.. பனிகுட்டியண்ணை நீதி தவராதவர் நல்லவர்தானுங்கோ.. அவர் நல்ல தீர்பதானுங்கோ சொல்லுவார் செம்ப கேட்ட நாட்டாமைய எனக்கு நல்லா தெரியுமுங்கோ அவரும் நல்லவர் வல்லவர் திறமைசாலி புத்திசாலிதானுங்கோ(அட நல்ல தீர்ப்ப வாங்க எப்பிடியெலலாம்  பம்ம வேண்டியிருக்குங்க)....!!!!???))) அண்ண பழசையெல்லாம் மனசுல வைக்காம தீர்ப்ப சொல்லுங்கோ...!!!))))))))

காட்டான் said...
Best Blogger Tips

அண்ணாத்த அந்த டவுட்டு என்னையா சொல்லாட்டா தூங்கமுடியாதையா வூட்டில..!!!)))

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...

அண்ணாத்த அந்த டவுட்டு என்னையா சொல்லாட்டா தூங்கமுடியாதையா வூட்டில..!!!)))////சொன்ன பேச்சக் கேக்க வேணும்,அச்சாப் புள்ளயில்ல?இன்டைக்கு எல்லாத்தையும் மறந்து தூங்க?! வேணும்,என்ன?ஐயா,நாளைக்கு பாட்டி வட சுட்ட கத சொல்லுவாராம்!சரியோ??????

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said...அண்ண பழசையெல்லாம் மனசுல வைக்காம தீர்ப்ப சொல்லுங்கோ...!!!))))))))///எல்லாரும் நல்லா விவாதம்?!புரிந்தார்கள்!வாழ்த்துக்கள்.ஆனாலும்,சிலர் தலைப்புக்குப் பொருத்தமின்றி கருத்துக்கள் பரிமாறிக் கொண்(ன்)டா(றா)ர்கள்!எனவே இந்தப் பட்டி?!மன்றத் தீர்ப்பை,வரும் மாதங்களில் ஏதாவது ஒரு திகதியில் அறிவிப்போம்!(அவனவன் கேசில இருநூறு,முன்னூறு வாய்தா வாங்குறாங்க!இது என்ன பிசுக்கோத்து?)

Yoga.s.FR said...
Best Blogger Tips

காட்டான் said..செம்ப கேட்ட நாட்டாமைய எனக்கு நல்லா தெரியுமுங்கோ.அவரும் நல்லவர், வல்லவர்,திறமைசாலி புத்திசாலிதானுங்கோ!////நாலும்? தெரிஞ்சவர்!திக்கறோருக்கு உதவுபவர்,இதெல்லாத்தையும் வுட்டுப்புட்டீங்களே?§§§இந்த மாதிரி பேசி பட்டர் பூசினா உங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்லுவேன் என்று எண்ணமோ?பிச்சுப்புடுவேன் பிச்சி!!!!!!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...
Best Blogger Tips

அடடா... பின்னூட்டம் தேம்ஸ் வரை வந்திட்டுதே...:), இனி என்ன செய்வது? அவ்வ்வ்வ்:). பட்டிமன்றம் களைகட்டிய வேளை நான் பார்க்கத்தவறிட்டேன்....

//என் பூனை மொழி புரியல்லை என்று திட்டிக் கமெண்ட்டு வேற போட்டிட்டாங்க.
ஆதலால் பதிவுலகம் என்னை அழித்தது என்றே கூறுவேன்.///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு முதலே உலகம் அழிஞ்சுடும்ம்ம்ம்ம்ம்ம்.

Jaleela Kamal said...
Best Blogger Tips

ஹா ஹா சரி காமடி. இப்படியும் ஒரு பட்டி மன்றமா?

«Oldest ‹Older   201 – 223 of 223   Newer› Newest»

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails