வணக்கம் உறவுகளே,
டெசோ மாநாடு தொடர்பில் ரொம்ப பிசியாக இருந்த கலைஞர் ஐயாவை சந்திப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்து கொளுத்தும் வெயிலின் மத்தியில் கோபாலபுரத்தினை அடைந்தோம்! கோபாலபுரத்தை அடைந்த எமக்கோ காத்திருந்தது. அதிர்ச்சி. காரணம் கோபாலபுரத்தின் வாசலில் கடவுள் வாழும் இல்லம் என கலைஞர் இல்லத்திற்கு பெயர் மாற்றப்பட்டிருந்தது. ஆச்சரியத்துடன் உள்ளே சென்ற எமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.
ஐயா வழமை போலவே மஞ்சள் துண்டை முக்காடு போலப் போட்டவாறு, சாய்மனை கதிரையில் உட்கார்ந்திருந்தார்.
தூய தமிழில் வணக்கம் ஐயா என்றேன், தம்பிகளே! ஏன் இந்த சுணக்கம் என எடுத்து விட்டார்.
தமிழ் மணக்கும் தங்களிடம் யாம் வரும் வழியில் குண்டும் குழியுமாக உள்ள வீதியினுள் ஆட்டோ விழுந்து வந்ததனால் சற்றே தாமதம் என்றோம்.
அம்மா ஜெயலலிதா செய்யும் மாபாதகத்தின் மற்றோர் முகம் தான் இந்த வீதிகளின் நிலையும் என முணுமுணுத்தார் ஐயா!
ஐயாவிடம் கேள்விகளை தொடுக்கும் நேரமும் நெருங்கி வந்தது. ஐயா கேள்விகளை ஆரம்பிக்கவா என்று கேட்டோம்!
ஐயாவோ தனக்கு அருகே இருந்த ஒருவனை அழைத்து செம்பில் தண்ணீர் எடுத்துவருமாறு அழைப்பாணை கொடுத்தார்.
கலைஞரின் கட்டளையை ஏற்றவனோ சீறிப் பாயாத குறையாக ஓடிச் சென்று செம்பில் தண்ணீர் கொண்டு வந்தான்.
நண்பர்களே! புரட்சி எப்.எம் கேட்டவாறு பதிவினைப் படிக்க கீழே உள்ள Player இல் Play button ஐ கிளிக் செய்து உங்கள் ஆதரவினையும் வாரி வழங்குங்கள்!
ஐயா, அவனுக்கு நன்றி கூடச் சொல்லாமல், இப்போது செம்பில் தண்ணீர் கொண்டு வந்தானே! இவன் யார் தெரியுமா? இவன் தான் செம்பு தூக்கி!
என் அல்லக்கை லிஸ்ட்டில் செம்பு தூக்கியாக இருந்த இவனை அருகே அழைத்து வைத்திருக்கிறேன். தேவையேற்படும் போதெல்லாம் செம்பு தூக்குவதற்கு இவனே உதவி புரிகின்றான் என்றார்.
என் அருகே பேட்டி எடுக்கும் நோக்கில் வந்த நண்பனோ, தானும் திமுக அல்லக்கையாக இருந்தால் செம்பு தூக்கும் வாய்ப்பு கிடைத்திருக்குமே என என் காதில் குசுகுசுத்தான்!
ஐயாவிடம் முதல் கேள்வியை முன் வைத்தோம்!
டெல்லி சோனியா மாநாட்டை (டெசோ) மாநாட்டை தாங்கள் நடாத்துவதற்கு காரணம் என்ன என்று கேட்டோம்?
கலைஞர்: தம்பிகளா, வயசு போகும் காலத்தில மீண்டும் ஒரு தடவை மந்திரியாகனும் என்று உள்மனம் என்னை பாடாய் படுத்துது. அதனால என் பிள்ளைகள், உடன் பிறப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இருக்கும் பணத்தையெல்லாம் வாரியிறைத்து திமுக அடுத்த தேர்தலிலாவது இழந்த இடத்தை மறுபடியும் பிடிக்கனும் எனும் நோக்கில தான் இந்த மாநாட்டை நடாத்துறோம்.
இந்த விடயம் ரகசியமாகவே இருக்கட்டும். இதனை நீங்கள் பத்திரிகைல எழுதிடாதீங்க..அப்படீன்னு ஐயா சொல்ல, அருகே இருந்த நண்பன்
ஐயா நாம ப்ளாக்கில இருந்து வர்றோம். பத்திரிகைல இல்லை என்று சொன்னான்.
கலைஞர் பம்ம தொடங்கினார். தம்பிகளா அதிமுக செல்வி கூட இப்போ விகடன், குமுதத்திற்கு பயப்படுறாங்க இல்லையோ! ப்ளாக்கிற்கு பயப்படுறாங்க. நான் என்ன எல்லாம் சொல்றேனோ! அவற்றை என் மகள் கனிமொழி சரின்னு சொன்ன பிற்பாடு தான் உங்க ப்ளாக்கில போடனும் என கலைஞர் கண்டிசன் போட்டார்.
தொடர்ந்தும் கேள்விகளை கேட்டோம்.
செம்மொழி மாநாடு வைக்கும் போது, தமிழின் பெருமையை உலகறியச் செய்வதாக சொன்னீங்க. இந்த டெசோ மாநாடு மூலமா தாங்கள் சாதிக்க நினைப்பது என்ன?
கலைஞர் தன் பொக்கவாயிலிருந்து சிறிய புன்னகையை உதிர்த்தவாறு, சாதிக்கப் போவது ஒண்ணுமில்ல. தமிழனை எப்போதுமே ஏமாத்தலாம் அப்படீங்கிற தத்துவத்தை மறுபடியும் நிலைநாட்டப் போறோம் எனச் சொன்னார்.
அடுத்த கேள்வியை கேட்டோம்! ஐயா பெரியவரே! தாங்கள் இன்னும் எத்தனை காலத்திற்கு மண்ணாசை கொண்டவராய் அரசியலில் இருப்பீங்க எனக் கேட்டோம்!
மஞ்சள் துண்டைச் சரி செய்தவாறு, தம்பிகளா, இன்னும் எத்தனை பிறப்பு எனக்கு இருக்குமோ! அத்தனை பிறப்பிலும் அரசியலில் இறங்கி நீராடுவது தான் என் கொள்கை எனச் கொல் எனச் சிரித்தவாறு பதிலுரைத்தார் கலைஞர்..
கலைஞருக்குப் பின்னே உள்ள அறையிலிருந்து ஒரு நடிகை வெளியே வந்தார்.
இவர் எப்படி இந்த நேரத்தில் எனக் கேட்டோம்!
டெசோ மாநாட்டின் ஆரம்ப பாடலுக்கு இவர் தான் சிறப்பு நடனமாடவுள்ளார். ஆதலால் இப்போது ஒத்திகை பார்க்கிறோம் எனச் சொன்னார்.
இறுதியாக இம் மாநாட்டின் மூலம் தமிழ் மக்களுக்கு பயனேதும் கிடைக்கும் என நினைக்கிறீர்களா என ஒரு கேள்வி கேட்டோம்!
ஆம்...நிச்சயமாக தமிழீழம் தமிழ் மக்கள் கைகளில் தவழும் எனச் சொன்னார்.
தமிழீழம் என்ன உருட்டி விளையாடும் பந்தா என நினைத்தவாறு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓட்டம் எடுத்தோம் நாம்!
யாவும் கற்பனையே!!
அன்பு நண்பர்களே,
உங்கள் தொலைபேசிகளூடாகவும் நீங்கள் புரட்சி இணைய வானொலியை கேட்டு மகிழலாம். விபரம் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
|
1 Comments:
//கலைஞர் பம்ம தொடங்கினார். தம்பிகளா அதிமுக செல்வி கூட இப்போ விகடன், குமுதத்திற்கு பயப்படுறாங்க இல்லையோ! ப்ளாக்கிற்கு பயப்படுறாங்க. நான் என்ன எல்லாம் சொல்றேனோ! அவற்றை என் மகள் கனிமொழி சரின்னு சொன்ன பிற்பாடு தான் உங்க ப்ளாக்கில போடனும் என கலைஞர் கண்டிசன் போட்டார்.\\
அருமையான பேட்டி
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
Post a Comment