Tuesday, August 7, 2012

கண்டாங்கி சேலை வாங்கி கருணாநிதிக்கு கட்ட வாரீர்!

கண்டாங்கி சேலை வாங்கி எல்லோரும்
கருணாநிதிக்கு கட்ட வாரீர் - தமிழனை 
துண்டாக ஆக்கி துக்கடா அரசியல் நடத்திய
துஷ்டரின் வேசம் கலைந்ததை மறக்காத அனைவரும்
கொண்டாடி மகிழ்வோம் - குடும்ப அரசியலின்
கொலு விளக்காம் கலைஞருக்கு எல்லோரும்
கண்டாங்கி சேலை கட்டி மகிழ்வோம் 
கல கலப்பாய் கிளம்பி வாரீர்! 
கொசுத் தொல்லை தாங்கிடுவோம்
கொட்டும் தேளதனை விரட்டிடுவோம்
டெசோ எனப் பேர் சூட்டி
டெல்லி வரை மகளை போய் பார்த்த - காமெடி
பீசுத் தொல்லை தாங்க முடியலையே - வயசு
போனதனால் பிதற்றுகின்றார் - அடிச்ச  கோடி
காசதும் கைவசம் இருப்பதனால் நம்ம
காதினில் நல்லா பூச்சுத்துகிறார்!

ஐயா கலைஞர் ஐயா, உன் 
அழிவுறாத பதவியெனும்
மெய்யில் ஊறிய ஆசைக்கு
மேதினியில் நாமா கிடைத்தோம்?
மேய்ப்பாரற்று இருக்கும் எம்மையா
மேன் மக்கள் என கருதி நடிக்கிறாய்?
பொய்யாய் பகல் வேசம் போட்டு நீயும்
பதவி ஆசைக்காய் பலியாக்குகிறாய்?

பற்றிக் கொண்ட பதவிப் பித்தது  உன் வாழ்வில் 
ஒற்றிக் கொண்ட இழி குணமா? - நீயும் பதவிப்
பற்றை விட்டு பாரினிலே மனுசனாக 
பண்போடு வாழும் நாளும் எந் நாளோ? 
******************************************************************************************************************
அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

நாளைய தினம் இலங்கை - இந்திய நேரம் காலை  10.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

ஹலோ இணையம் நிகழ்ச்சி காலை 10.00-12.00 மணி வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் உங்கள் உற்றார், உறவினர் நண்பர்களுக்கு நீங்கள் வாழ்த்த்துக்களை தொலைபேசி, Skype ஊடாக நீங்களும் இணைந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.
ஹலோ இணையம் நிகழ்ச்சியை தொடர்ந்து வாங்க பேசலாம் நிகழ்ச்சி உங்களுக்காக நண்பகல் 12.00-03.00pm வரை இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்கள் நாளாந்த செய்திகள், தினப் பலன்கள், இணையச் செய்திகளின் தொகுப்பு, சிறந்த வலைப் பதிவு பற்றிய விளக்கம் ஆகியவற்றையும் கேட்டு மகிழ்வதோடு நேரடியாக இணைந்து பாடல்களையும் கேட்டு மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 

புரட்சி இணைய வானொலியில் இதயம் கேட்ட பாடல் நிகழ்ச்சி, காதலா காதலா நிகழ்ச்சியில் பாடல் விரும்பி கேட்க விரும்பும் நேயர்கள் இந்தப் பதிவின் பின்னூட்டம் வாயிலாகவும் உங்கள் விருப்ப பாடலின் பெயரையும், பாடலை யாருக்காக விரும்பி கேட்கிறீங்க என்பதனையும் குறிப்பிட்டால் நிகழ்ச்சியில் உங்கள் விருப்ப பாடலும் இடம் பெறும்! 

0 Comments:

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails