எப்படி தான் தொடங்குவது
என்று எனக்கு தெரியவில்லை
மப்படித்து கவி எழுத
மடி லேஞ்சில காசு தேறவில்லை
செப்படி வித்தையாய் ஆனதோ எம் நட்பு
செல்லாத காசாக ஆகிடுமா இந்த வாழ்வு?
அஞ்சாறு நாள் குளிக்காம
பஞ்சியில நீ இருப்பே
அடுத்த வூட்டு காரங்களோ
அந்த நாத்தம் தாங்காம
வாந்தி மேல வாந்தி எடுப்பாங்க
சந்தில சனம் நின்று குளிக்காத
சண்டாளனை திட்டி கொல்லும்
அந்த நாத்தம் தாங்காம
அக்காரயன் குளத்தினில
ஆனை போல உன்னை போட்டு எடுத்தோம்!
கண்டாவளை கடை தெருவில
கோரப் புல் எடுத்து
கந்தையற்ற மாட்டுக்கு ஊட்டி விட்டோம்
கண்ணால் யாரும் பார்கிறாங்களா என அறிந்து
கனகாம்பிகை குளத்தடியில்
கள்ள கோழி பிடிச்சு அடிச்சோம்!
கோணாவில் கவிதாக்கும் உனக்கும்
கோதாரி விழுந்த காதல் பத்திக்கிட
அம்பு தைத்த மானாக நானழுதேன்
மல்லாக்கா படுத்துக்கிட்டு
மாங்குளத்து குணத்தானின் கடைல வாங்கின
ஆர்வீஜி பீடியை ஆறு தரம் நானிழுக்க
அதை அப்படியே வாங்கி நீ இழுத்து
ஆறுதலைச் சொன்னாயே - இப்போ மனசில்
ஆறாத காயம் தந்து போனாயே என் செய்வேன் நான்?
முறிகண்டிப் பிள்ளையார்க்கு
முந்நூறு தேங்காய் அடிக்க நேர்த்தி வைச்சேன்
முத்தையன்கட்டு வைரவர்க்கு
மடை பரவ ஆசை கொண்டேன்
புதூர் நாக தம்பிரானுக்கு
புதுப் புது நேர்த்தி வச்சன்
பூநகரி ஐயப்பனுக்கும்
பூக் கோர்த்து மாலை போட்டேன்
அநாகரிகமா என் காதல்
அடம்பன் கொடி போல திரளாது
ஆசைகளை உடைத்து
ஆனையிறவு உப்பு வெளியினில புதைஞ்சிடுச்சே!
என்னவாய் இருக்கும் என் காதலுக்கு என
ஏக்கம் மிக கொண்டவனாய்
ஏழாலை சாத்திரியிடம் ஜோசியம் கேட்டேன்
ஏளனமாய் பார்த்தார் சாத்திரி!
எனக்கு ஏழரை என்றும் சொல்லி
பீதியினை கெளப்பி விட்டார்.
மல்லாவி மல்லிகா
துணுக்காய் துளசிகா
வவுனிக்குளம் வானதி
நட்டாங்கண்டல் நளாயினி
தேறாங்கண்டல் தேவகி
வெள்ளாங்குளம் வெண்ணிலா
மாங்குளம் மாலதி
கனகராயன்குளம் கார்த்தி
இவை எல்லாரையும் விட
நான் காதலித்த கஸ்மாலம்
சூப்பர் பிகர் என்றேன்!
சீ தூ என மூஞ்சில துப்பிட்டு
நீ காதலித்தது ஒரு
காட்டுப் பூச்சி ஆம்பளைடா என்று சொல்லி
கன்னத்துல அறைஞ்சிட்டாங்கோ!
லேடி போல் காதல் தந்து
கேடியாய் காயம் தந்தான்- மனம்
வாடிட செய்தான் - நினைவை விட்டு
ஓடியே போனான் - நான் போதையில்
தள்ளாடியே போனேன்!
உறவுகளே, புரட்சி இணைய வானொலியை நீங்கள் கேட்பதோடு மாத்திரமன்றி, உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்திட முடியுமா?
புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்.
வெகு விரைவில் உங்கள் நாற்று வலைப் பதிவில் விவாத மேடை! எதிர்பாருங்கள்!
|
6 Comments:
Kalakkukanka machi
வணக்கம் ,
உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
www.thiraddu.com
அடச்சீ அப்பவே இவனுக இப்பிடி தானா? :P
காலை வணக்கம்,நிரூபன்!நலமா?இப்பிடி நாறிப் போயிட்டீங்களே,ஹி!ஹி!ஹீ!!!!!!!!!!!!!
புலம்பல் கவிதை சூப்பர்!
இன்று என் தளத்தில்
மனம் திருந்திய சதீஷ்
அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!
http://thalirssb.blogspot.in
முறிகண்டிப் பிள்ளையார்க்கு
முந்நூறு தேங்காய் அடிக்க நேர்த்தி வைச்சேன்
முத்தையன்கட்டு வைரவர்க்கு
மடை பரவ ஆசை கொண்டேன்
புதூர் நாக தம்பிரானுக்கு
புதுப் புது நேர்த்தி வச்சன்
பூநகரி ஐயப்பனுக்கும்
பூக் கோர்த்து மாலை போட்டேன்
அநாகரிகமா என் காதல்
அடம்பன் கொடி போல திரளாது
ஆசைகளை உடைத்து
ஆனையிறவு உப்பு வெளியினில புதைஞ்சிடுச்சே!
Post a Comment