Thursday, August 2, 2012

பேஸ்புக்கில் அரங்கேறும் கள்ள காதலும், தில்லு முல்லுகளும்!

ஒரு அதிரடி ரிப்போர்ட்! 
முக நூல் ஊடே நட்பாகிய தோழி அவள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது அரட்டையடிப்பதும், பதிவுகள், வலைப் பதிவு இணையம் பற்றிச் சிலாகிப்பதுடன் எங்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. அவளது காதல் திருமணம் முதல் இன்று கணவன் எங்கே இருக்கிறான் எனும் தகவல் வரை அனைத்து தகவல்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவள். திடீரென அவள் கணவனுடன், இன்னோர் பெண் நிற்கும் முக நூல் Profile இனை அனுப்பி இவர் யார் தெரியுமா என்று கேட்டாள் அவள்?
அவளது கணவன், தொழிலுக்காக அரேபியாவிற்குச் சென்ற இடத்தில் இன்னோர் பெண்ணை திருமணம் புரிந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தாள் அந்த திருச்சி பெண்.  ஆம்! பல தில்லு முல்லுகளின் கூடாரமாகவும், திருட்டுக்களை கண்டறிவதற்கு ஏதுவாகவும் இன்று பேஸ்புக் வந்து விட்டது. என்ன நம்புவதற்கே கஸ்டமாக இருக்கா? உலகெங்கும் வாழுகின்ற இணையத்தினை உபயோகிக்கின்ற அதிகளவானோர் உபயோகிக்கும் ஒன்றாக பேஸ்புக் இணையம் மாறி விட்டது.  கணவனுக்கு தெரியாமல் மனைவியும், மனைவிக்கு தெரியாமல் கணவனும், கள்ள காதல் செய்யும் இடமாகவும் இன்று பேஸ்புக் மாறி விட்டது.http://www.thamilnattu.com/

அவரவர் வசதிக்கும், அவசரத்திற்கும் ஏற்றாற் போல வடிகாலாக இப்போது பேஸ்புக் உருமாற்றம் பெற்றிருக்கிறது. கட்டிய மனைவிக்கு தெரியாமல் தொழிலுக்குப் போன இடத்தில் காதல் கொண்டு கலியாணம் முடித்த கணவனின் திருமணப் புகைப்படத்தினூடாக அவனின் இரட்டை வேடத்தினை அறிந்து கொள்வதற்கும், செல்போன் சிம்கார்ட் போல காதலியையும், காதலனையும் நொடிக்கு ஒரு தரம் மாற்றும் இளசுகளின் தில்லு முல்லுகளையும் அறிந்து கொள்வதற்கும் பேஸ்புக் உளவுத்துறையாக இன்று பலருக்கு உதவிக் கொள்கின்றது என்றால் மிகையல்ல.http://www.thamilnattu.com/
இன்னோர் புறம் கோயிலின் கருவறைக்குள் சென்று சிவலிங்கத்தின் மேல் கால் வைத்து நிற்பதற்கும், அடுத்தவர்களின் புகைப்படத்தை திருடி போலிக் கணக்கு ஆரம்பித்து சுய சொறிதல் செய்வதற்கும்,  இணையச் செய்திகளைப் பல மக்களிடம் கொண்டு செல்வதற்கும் பேஸ்புக் உதவிக் கொண்டிருக்கிறது என்றால் சொல்லவா வேண்டும்! தற்போது மேற்குலக, வளர்ந்த நாடுகளில் வேலைக்கு ஒருவரை நேர்முகத் தேர்வு செய்யும் போது, அவரது குணவியல்பு, மற்றும் நடத்தைகளை அறிந்து கொள்ளவும் பேஸ்புக் உதவிக் கொண்டிருக்கிறது. http://www.thamilnattu.com/
நல்ல முறையில் பேஸ்புக்கினை நாம் உபயோகித்தால் உலகெல்லாம் வாழும் உறவுகளோடு உன்னதமான தொடர்பினை நொடிப் பொழுதில் எம் விரல் நுனியில் கொண்டிருக்க முடியும். இல்லையேல் அழிவுப் பாதையில் தான் செல்ல முடியும்! http://www.thamilnattu.com/


********************************************************************************************************
அன்பு உறவுகளே,
உங்கள் புரட்சி வானொலிக்குரிய பனர் விளம்பரத்திற்கான HTML கோடிங்கை கீழே இணைத்திருக்கிறேன். இதனை உங்கள் வலைப் பூக்களில் இணைத்து ஏனைய தமிழ்ச் சொந்தங்களிடமும் இந்த வானொலியை அறிமுகப்படுத்துவற்கு நீங்களும் உதவலாம் அல்லவா? 

<a href="http://www.puradsifm.com/" target="_blank"><img src="http://i1219.photobucket.com/albums/dd437/nirupans/puradshi-1.gif" border="0" alt="Photobucket"></a>
அன்பு நண்பர்களே, மேலே உள்ள கோடிங்கை, உங்கள் ப்ளாக்கின் சைட் பாரில் Widget பகுதி ஊடாக Add Html பெட்டியில் அட் செய்வதனூடாக எமது வானொலியை பல உறவுகளிடம் கொண்டு சேர்ப்பதற்கு நீங்களும் உதவலாம் அல்லவா?

நாளைய தினம் இலங்கை - இந்திய நேரம் இரவு 08.00 மணி தொடக்கம் நள்ளிரவு 12.00 மணி வரைக்கும் உங்கள் புரட்சி இணைய வானொலியில் நேரடி நிகழ்ச்சிகள் இடம் பெற்றவிருக்கிறது.. நீங்களும், மின்னஞ்சல், தொலைபேசி, பேஸ்புக், Skype, Google Talk ஊடாக இணைந்து கொண்டு உங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லி மகிழலாம். 

இரவு 08.00 மணிக்கு அறிவிப்பாளர் இராமலிங்கம் ராகவன் தொகுத்து வழங்கும் "காதலா காதலா” நிகழ்ச்சி இடம் பெற காத்திருக்கிறது. அதனை தொடர்ந்து இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை இனிய இடைக்காலப் பாடல்களை நீங்கள் விரும்பி கேட்டு மகிழும் "இதயம் கேட்கும் பாடல்" நிகழ்ச்சி இடம் பெறவிருக்கிறது. இந் நிகழ்ச்சியில் நீங்களும் இணைந்து உங்கள் விருப்ப பாடல்களை உங்கள் மனதிற்கு பிடித்தமானவர்களுக்கு கேட்டு மகிழலாம். உங்கள் விருப்ப பாடல்களை அனுப்ப puradsifm@gmail.com

புரட்சி எப்.எம் உடன் இணைந்திருங்கள்! 


3 Comments:

தனிமரம் said...
Best Blogger Tips

முகநூலில் முகமும்` பார்க்கலாம் அடுத்தவர் வாழ்வில் மூக்கையும் நுழைக்கும் வழி வந்து விட்டது அவசர உலகில்!ம்ம் பாவிக்கும் நாம் நான் அவதானமாக இருக்க வேண்டும்! சிந்திக்க வேண்டிய நிலையைச் சொல்லும் பதிவு!

விச்சு said...
Best Blogger Tips

முகம்பார்க்காமல் பேசுவது முகநூல். அதனுடைய உண்மைமுகம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதம்.

நிரூபன் said...
Best Blogger Tips

உங்களின் இனிய கருத்துக்களுக்கு நன்றி நண்பர்களே!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails