Saturday, August 18, 2012

கற்பக் கிரகத்தினுள் கா(ம)விச் சாமி!

*விக்கிரகங்களிற்குப் பூஜை செய்த காலம் போய் - இன்று
விலை மகளிருக்கும் சில கோவில்களில் பூஜை நடக்கிறது!
*கற்பக் கிரகத்தினுள் கண்ணியமிக்க கடவுளர் வாழ்ந்த காலம் மாறி
கற்பைச் சூறையாடும் பூசகர் குரூப் கமரா வைத்து பிழைக்கிறது இன்று! 

*ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அன்றைய முதுமொழி
ஆலயமுள்ளே அந்தரங்க நாடகம் நடக்கு இன்று என்பது இக் கால புது மொழி!

*அர்ச்சகர் மந்திரம் உச்சரித்து அருட்கடாட்சம் செய்த நிலை அழிந்து
அர்ச்சகர் பெண்களை மந்திரித்து கமெராக் கடாட்சம் வழங்கும் நிலை ஒளிர்கிறது! 

*பூசகர் மீது புத்துணர்வோடு மரியாதை வைத்த தமிழனின் மானம்
தாசியர் பலர் கோவிலின் உள்ளே புணர்வதால் தறி கெட்டுப் போகிறது!

*கற்பக் கிரகத்தினுள் காமச் சாமியாம்
கண்டவர் எவரும் கூறவில்லை
விக்கிரகம் ஏதும் விடை இயம்பவில்லை
விளையாட்டாய் நானும் கவி எழுதவில்லை
பொற்பதம் தொட்டு பணிந்திட வேண்டிய
பூசகர் சிலரோ வன்புணர்வெனும் வழியது கொண்டு
சொர்க்கத்தை தேடி கற்ப(க்) கிரகத்தினுள் போகின்றார்
அற்பராம் அவரோ! அந்த காட்சியை படம் பிடித்து
அனைவரும் பார்த்திட ஆபாச காட்சியாய் வெளியிடுகின்றார்!!

*காவிச் சாமிகள் ஆவியிலும் மேலாக ஆன்மீகத்தை நேசித்த நிலை மாறி
காமச் சாமிகள் துறவு வாழ்விலும் மேலாக துகிலுரிய ஆசை கொள்கின்றனர்!

நண்பர்களே! பதிவினைப் படித்தவாறு புரட்சி எப்.எம் கேட்க கீழே உள்ள ப்ளேயரில் Play Button ஐ கிளிக் செய்யுங்க.


  புரட்சி எப்.எம் இணையப் பக்கத்திற்குச் செல்ல இங்கே கிளிக் செய்யவும்:

1 Comments:

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம்,நிரூபன்!என்ன செய்ய?கலிகாலம்,ஹும்!!!!!!!!!!!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

Puradsi News - Around The World In your Finger Tips

    இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

    Related Posts with Thumbnails