Monday, September 2, 2013

காமத் தேடலுக்காய் அரங்கேறும் காதல் நாடகம்

ஒரு மிஸ்ட் கோலில் தான் இன்றைய காதலின் நீடித்து நிலைக்கும் பண்பு தங்கியிருக்கிறது. அன்பின் வெளியீடாய் அவளிடமிருந்து கிடைக்கும் மிஸ்ட் கோலும், தன் பண பலத்தின் குறியீடாய் ஆடவன் மேற்கொள்ளும் அழைப்பும் கதிரியக்கம் மூலமாக காதல் இயங்க வேண்டும் எனும் தொனிப் பொருளை விளக்கி நிற்கிறது. அவளது ஒவ்வோர் அசைவுகளும், என்னுள் வந்து போகையிலும், என் மன அலைகளைச் சிதறடித்து விட்டுச் செல்லுகையிலும், என் இருத்தல்கள் சில வேளை, இனம் புரியாத ஒன்றினால் தூண்டப்பட்டு, எங்கோ ஓர் தொலை தூர வெளியில் நான் இறக்கை கட்டிப் பறப்பது போன்ற பேரின்பத்தை அடைந்து கொள்கிறேன்.

The Pursuit Of Happyness: விமர்சனம் - கண்ணீர் காவியம்!

கண்டிப்பாக நாம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்: இளமையில் கொடுமை வறுமை என்று ஔவையார் சொல்லிய வரிகளுக்கான அர்த்தத்தினை எம் வாழ் நாளில் நாம் ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் கடந்து வந்திருப்போம். ஒரு இளைஞனின் வாழ்வில் வறுமை வந்தால் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து தள்ளாடும் தன் வாழ்வினைத் தூக்கி நிறுத்திட அவன் முயற்சி செய்வான். ஆனால் ஒரு குடும்பஸ்தனின் வாழ்வில் வறுமை ஏற்பட்டால் அவனது நிலமை என்னாகும்? உலகில் இடம் பெற்ற யுத்தங்களில் பெரும்பாலான யுத்தங்கள் பசிக் கொடுமையினாலும், ஆற்றாத வறுமைப் பிணியினாலும் இடம் பெற்றிருக்கின்றன. ஏன் இன்றும் ஆபிரிக்க கண்டத்தில் கொடிய வறுமையின் காரணத்தினால் பல துயரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

Sunday, September 1, 2013

பேஸ்புக் & டுவிட்டரில் பட்டயக் கெளப்பும் க(கொ)லைஞர்!

தமிழினத் தலைவர் - இலவசங்களால் தமிழகத்தை கெடுத்து குட்டிச் சுவராக்கும் வள்ள, டில்லிக்கு தந்தி அடிக்கும் செம்மல் ஐயா கலைஞர் பேஸ்புக்கில் வருகை தந்த மகிழ்வான தருணத்தில் நம்ம பதிவர்களின் மன நிலை எப்படி இருந்தது தெரியுமா?
தமிழினத் தலைவர் இப்போது சமூக வலைத் தளங்களிலும் இறங்கிட்டாருங்கோ! ஆல் அல்லக்கைஸ் ஓடிப் போய் லைக் செஞ்சு செம்பை தூக்குங்க!

கந்தசாமி: ஏலேய் டாக்குத்தர் கருணாநிதி பேஸ்புக் அக்கவுண்ட் திறந்திருக்காராம்ல. இனிமே பலருக்கு பொழுது போகாத நேரத்தில வெளாட ஒருத்தன் கிடைச்சிருக்காண்டா.
துஸ்யந்தன்: அடடா..அருமையா இருக்கில்லே! வாங்க மக்கள்ஸ், நாம செத்து செத்து வெளாடுவோம்!

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க