தொலைபேசி என்பது இன்று எல்லோர் வாழ்வோடும் இணைந்து விட்ட ஒரு இன்றியமையாத தொடர்பாடல் சாதனமாகும். விலை வாசி உயர்வான ஊரில் வாழ்ந்தாலும் அலை பேசி இன்றி வாழ மாட்டோம் எனும் நிலைக்கமைவாக நம் மக்களில் பலரும் கையில் ஓர் தொலைபேசியுடன் செல்லுகின்றார்கள். சிலரோ கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு அல்லது மூன்று அலை பேசிகளை வைத்துப் பொது இடங்களில் தாம் ஏதோ ஹீரோ எனும் நினைப்பு வரப் பெற்றவர்களாக ஸ்டைல் காட்டுவார்கள். பட்டணத்தில் உள்ளோர் தொடக்கம், பாமர மக்கள் வரை இன்று அனைவரும் அலைபேசிப் பாவனையாளர்களாக மாறி விட்டார்கள். அலைபேசி பாவிப்போரில் ஒரு சிலருக்கு அலைபேசியினூடாக அழைப்புக்கள் வரா விட்டாலும் பிறருக்கு ஸ்டைல் காட்டுவதற்காகவும் அலைபேசியினை பாவிக்கின்றார்கள்.
|
|

