Showing posts with label வக்கிரம். Show all posts
Showing posts with label வக்கிரம். Show all posts

Saturday, February 11, 2012

ஆபாசம் - நிர்வாணம் - அந்தரங்கம் - வக்கிர குணத் தமிழன்!

அனைவரும் படிக்க வேண்டிய காரசாரமான பதிவு: இங்கே முகம் சுளிக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லை! 
எல்லோருக்கும் வணக்கமுங்க. பதிவுலகில் உள் குத்து, ஊமக் குத்து, நேர்க் குத்து என எந்தப் பதிவு எழுதுவோராக இருப்பினும், விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்கள் முன் வைக்கப்படும் போது பரிசீலிக்கும் மன உறுதி இருப்பவராக இருந்தால் மாத்திரம் எழுதுங்க. அப்படி மன உறுதி இல்லாதோர், பதிவர்களின் பதிவுகளைக் கண்டிக்கிறேன் அப்படீன்னு பதிவு எழுத ஆரம்பித்து, பதிவர்கள் யாராச்சும் எதிர்க் கேள்வி கேட்டா, ஐயோ, உங்களைச் சொல்லவில்லையே, உங்கள் மனசாட்சி ஏன் குறு குறுன்னு குடையுது அப்படீன்னு கேட்டு மழுப்பல் பதிலைச் சொல்லி எஸ் ஆக முயற்சி பண்ணாதீங்க. நீங்க ஒரு விடயத்தை கையிலெடுத்தால், சரியோ, பிழையோ கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு சரியான பதிலைச் சொல்லும் வண்ணம் உங்கள் பின்னூட்டங்களை எழுதப் பாருங்க. இல்லே என்னோட பதிவிற்கு என் கருத்து தான் சரி என்று சொல்லுவீங்களா இருந்தா, மத்த பதிவர்களின் கருத்துக்களை ஏற்கமாட்டேன் அப்படீன்னு எழுதி வைச்சிடுங்க! யாரையுமே தாக்காம பம்மிட்டு இருந்திடுங்க. இனிப் பதிவிற்குள் போவோமா?

Wednesday, December 7, 2011

வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தைகள் பார்க்க கூடாத படம்!

வாக்கு மூலம் விமர்சனம்: இலங்கை இராணுவ அராஜகத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டும் குறும்படம்!
போர் இடம் பெறும் பகுதிகளில் அராஜகம், அக்கிரமம் நிறைந்த மனிதாபிமான உணர்வுகள் அற்ற இராணுவத்தினர் தம் எதிர்த் தரப்பினரைக் கைது செய்தால் சொற்களால் வடிக்க முடியாத மிக - மிக கொடுமையான துன்புறுத்தல்களை நிக்ழ்த்திப் பல ரசசியங்களைக் கேட்டு அறிந்து கொள்ள முனைவார்கள். உலக வரலாற்றில் ஹிட்லரின் சித்திரவதை கூடாரங்களையும், அமெரிக்கப் படைகளால் ஈராக்கியப் போராளிகளை,மக்களைச் சித்திரவதைக்கு உட்படுத்திய குவாண்டனமோ சிறை ஆகியவற்றினை விடவும் மிகவும் குரூரமான சிறைக் கூடங்கள் இன்றும் இலங்கையில் இருந்து வருகின்றன.

Sunday, March 13, 2011

ஈழ மக்களை துடி துடிக்க கொல்லும் ஈனர்களின் செயல்கள் - உண்மைச் சம்பவம்!

பெண் உறுப்பினுள் மிளகாய்த் தூள் தூவுதல்!
பதிவினைப் படிக்க முன்: இப் பதிவு முற்று முழுதாக உண்மைச் சம்பவங்கள் கலந்த பதிவாகும்.  இங்கு கடந்த காலங்களில் இடம் பெற்ற உண்மைச் சம்பவங்களும், கசப்பான நிகழ்வுகளையும் மட்டுமே பதிவாக உங்கள் முன் கொண்டு வருகிறேன்!

விவரணம் 1): மனித இனத்தில் பல் வேறு விதமான விசித்திர முகங்கள் உள்ளன. மனிதர்களினை அடித்து துன்புறுத்துவது, மனிதர்களைத் துடிக்கத் துடிக்க கொலை செய்வது இவையெல்லாம் இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு உடலளவில் தண்டனை கொடுத்தே குற்றங்களை நிறுத்தப்பார்க்கிறார்கள். மனிதனை உடலளவில் கொடுமைப்படுத்துவதனை Brutal என அழைப்பார்கள். மனிதர்களை மனிதர்கள் தங்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏதுவாக, தம் மனதின் அடிப்படையில் துன்புறுத்தி மகிழ்கிறார்கள்.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க