Showing posts with label ஈழ யுத்தம். Show all posts
Showing posts with label ஈழ யுத்தம். Show all posts

Wednesday, November 23, 2011

ஈழத்தின் இறுதிப் போரைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரங்கள்!

நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். மறு நாள் 12.04.2007 அன்று; வவுனியா நகரம் அதிரத் தொடங்கியது. வவுனியா வைத்தியசாலையினை நோக்கி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடத் தொடங்கியது. 11.04.2007 அன்று புலிகளுக்கு ஆதரவானோர் மூவரையும் இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. புலிகளின் கோட்டையாக வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிற்குள் இருந்த உக்குளாங்குளம்,கூமாங்குளம் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் புலிகளோடு நெருங்கிப் பழக மக்கள் அச்சம் கொண்டார்கள். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு பிரதேசத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது மிகவும் இயலாத காரியமாக இருந்தது.

Thursday, November 17, 2011

ஈழப் போரியலில் இது வரை வெளி வராத மர்மங்கள்!

சத்தியன் தலமையில் இராணுவத்தினர் நெருப்பினையும்,ஏனைய போராளிகளையும் தேடி அழிக்கும் நோக்கில் ஒரு அதிரடி நடவடிக்கைக்குத் திட்டமிட்டார்கள். சத்தியன் தலமையிலான குழுவினர் புலிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியினுள் பொது மக்கள் போன்று வேடமிட்டுச் சென்று தாக்குதல் நடத்தினால் தான் புலிகளை உயிரோடு பிடிக்க முடியும் என கனவு கண்டார்கள்.தாம் புலிகளினைத் தேடிச் செல்வதனை புலிகள் அறியாதவர்களாக பொது மக்களோடு உரையாடிக் கொண்டிருப்பார்கள். இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் போது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள் இராணுவத்தினர். மழைக் காலத்தில் ஓடுவதனைப் போன்று ஆட்டோவின் இரு பக்க யன்னல் பகுதிகளையும் தரப்பாள் / படங்கு கொண்டு மூடித் தம் தாக்குதலுக்குத் தயாராக ஆட்டோவினையும் ஒழுங்கு செய்தார்கள் இராணுவத்தினர். 


Saturday, November 12, 2011

ஈழப் போரியல் வரலாற்றில் வெளி வராத மர்மங்கள்!

வவுனியாவில் உள்ள கருணா குழுவினரின் முகாம்களைத் தாக்கியளிக்க வேண்டும் அல்லது கருணா குழு முகாம்கள் மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தவன் தான் டக்ளஸ்! இப்போது போராளி டக்ளசும், போராளி நெருப்பும் ஒன்றாகச் சேர்ந்து விட்டார்கள். தம் தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். நெருப்பு வவுனியாவிற்குள் நுழைந்து மூன்று நாட்களாக முன்னரே ஏனைய போராளிகளின் உதவியோடு பட்டாணிச்சூர் பகுதிகுச் சென்று கருணா குழுவு முகாம் காவலரன் மீது கைக் குண்டுத் தாக்குதல் (கிரேனட்) நடாத்தி விட்டு பாதுகாப்பாகத் தளம் திரும்பினான். ஏற்கனவே சமாதான காலத்தில் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினரின் நடவடிக்கைகளை விரிவுபடுத்தியிருந்த இராணுவம்,தற்போது புலிகளில் இருந்து மக்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளை முழு மூச்சில் மேற் கொள்ளத் தொடங்கியது.

Friday, November 11, 2011

ஈழத்தில் அவசரப்பட்டுத் தவறிழைத்த புலிகளும் அதிரடி நடவடிக்கை தொடங்கிய இராணுவமும்!

புலிகளின் உள்ளிருந்து தாக்கும் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்த இராணுவம் தனக்கு கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வன்னி மீதான படையெடுப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கியது. இதே வேளையில் புலிகளின் உள்ளிருந்து தாக்கும் அல்லது புலிகள் வவுனியா நகரின் உள்ளே மக்களோடு மக்களாக இருந்து தாக்கும் தாக்குதல்களின் வீரியத் திறனினை உணர்ந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்ட படி வழமைக்கு மாறாகப் புதிய தாக்குதல் நுட்பத்தினை நான்காம் கட்ட ஈழப் போரில் கையாளத் தொடங்கியது. அது தான் புலிகளின் குகைக்குள் சென்று பொது மக்கள் போன்று வேடமிட்டு தாக்குதல் நடாத்துவது. இந்தத் தாக்குதல் அணியினரை ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் என்றும் இவர்களின் தாக்குதல்களை ஆழ ஊடுருவித் தாக்குதல் என்றும் பெயர் சொல்லி அழைப்பார்கள். 

Saturday, September 24, 2011

காகிதப் புலிகளின் காழ்ப்புணர்ச்சிக்குள்ளாகும் ஈழத்து வன்னி மக்கள்!

இருண்ட மேகங்களின்
இடையறாத
மழைப் பொழிவிற்கு மத்தியில்
கந்தக(த்) துகள்களின்
எச்சங்களோடு 
காற்றில் கலைந்து
புதைந்து போக வேண்டிய
வன்னி மக்கள்
புனர்வாழ்வு பெற்று
புத்துயிர் பெற்றோராய்
எப்படி வாழ்ந்திட முடியும்?

Saturday, September 10, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

பாகம் 02
முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................எனும் வகையில் முதற் பாகம் நிறை வடைந்திருந்தது. இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்காது தவற விட்டவர்கள், இங்கே கிளிக் பண்ணிப் படிக்கலாம்.

மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.

Saturday, September 3, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

மீண்டும் அதே கணங்கள், அதே வலி சுமந்த நினைவுகள், உணவின்றி உயிர் மட்டும் ஊசலாடிய ரணங்கள் நிறைந்த மரத்தடி வாழ்க்கை இனிமேல் வரவே வரக் கூடாது எனும் எண்ணம் இப்போது எல்லார் மனங்களிலும் உட் புகுந்து விட்டது. ஆனாலும் என் ஞாபகச் சிதறல்களில் வெடி வைத்து, ஆங்காங்கே காயங்களை உண்டாக்கிய சீழ் கலந்த பருக்களை இலகுவில் அழித்து விட முடியாது எனும் எண்ணத்தோடு; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க