Showing posts with label முகமாலை. Show all posts
Showing posts with label முகமாலை. Show all posts

Wednesday, December 28, 2011

பீரங்கிப் படை மூலம் ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!

கப்பல் மூலம் இராணுவத்தினருக்கு வந்த ஷெல்களைத் தந்திரமாகத் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தரையிறக்கிய புலிகள் அச் ஷெல்கள் அனைத்தையும் பயன்படுத்தி இராணுவத்தினர் மீது மழை போல எறிகணைகளைப் பொழிந்து தள்ளினார்கள். புலிகளின் ஆட்டிலறி அணிகள் மிக மிகத் துல்லியமாக ஷெல்களை இராணுவ முகாம்கள் மீது ஏவிக் கொண்டிருந்தனர். ”ஈழப் போரியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஓயாத அலைகள் மூன்றின் போது தான் புலிகளின் குரல் வானொலியானது நேரடி ஒலிபரப்பினூடாக கள முனை நிலவரங்களை உடனுக்குடன் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தது”. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது "பீரங்கி கைப்பற்றி ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் இறுதிப் பாகமாகும்! தொடரின் கடந்த பகுதிகளைப் படிக்க இவ் Drop Down Menu இணைப்பில் கிளிக் செய்யுங்கள். 

Friday, December 9, 2011

பீரங்கி கைப்பற்றி இலங்கை ஆமிக்கு பீதியைக் கொடுத்த புலிகள்!

ஆட்டிலறிப் பீரங்கிகளைத் தொட்டுப் பார்த்த தலைவர் வன்னியில் மக்கள் பார்வைக்காக வீதியால் இழுத்துச் சென்று மக்களுக்கு காண்பிக்குமாறு ஓர் சிறப்பு அறிவிப்பினை அப்போது போராளிகளுக்கு வழங்கினார். காட்டிலிருந்து பெற்ற குழைகளால் மறைக்கப்பட்டு வன்னியின் சில பகுதிகளில் பீரங்கிகள் இரண்டும் பொது மக்களின் பார்வைக்காக வலம் வந்தது.இப்போது புலிகள் கைகளிற்கு கிடைத்த புதிய ஆயுதத்தினை இயக்குவது;பராமரிப்பது முதலிய செயல்கள் போராளிகளுக்குப் புதியனவாகவே இருந்தது. அப்போது தான் புலிகள் அமைப்பின் பொறியல் - கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்த கேணல் ராஜூ (குயிலன்) அவர்களிடம் ஆட்டிலறிகளை இயக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கப்பெறும் எனும் நோக்கில் ஆட்டிலறிகள் இரண்டையும் கையளித்தார்கள் புலிகள்.

Wednesday, December 7, 2011

புலிகளை தோற்கடிக்க ஈழப் போரில் இராணுவம் கையாண்ட சூழ்ச்சிகள்!

வன்னிக் கள முனையில் ஓர் சமரினை ஆரம்பிக்கும் நோக்குடன் இராணுவத்தினரால் ஆயுத தளபாடங்களை வவுனியாவிலிருந்து ஓமந்தைப் பகுதி நோக்கி நகர்த்தும் நடவடிக்கைகளுக்கு புலிகளால் ஏற்படுத்தப்பட்ட உள்ளிருந்து ஊடுருவித் தாக்கும் தாக்குதல்கள்; மறைந்திருந்து தாக்கும் செயற்பாடுகள் அனைத்துமே 2007ம் ஆண்டின் ஜூன் மாதத்தில் சிறிது சிறிதாகக் குறைந்திருந்தன. கூமாங்குளத்தில் காலில் காயப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வன்னிக்கு அனுப்பப்பட்ட அமலன் இப்போது சிகிச்சை முடிந்து புதிய சில திட்டங்களோடு வவுனியாவிற்கு வந்தார். அந் நேரம் தலமைப் பீடம் நெருப்பினை வன்னிக்கு அழைத்தது.இராணுவம் வவுனியாவிலிருந்தா, மன்னாரிலிருந்தா வன்னிக்குள் தன்னுடைய படை நடவடிக்கையினை ஆரம்பிப்பது என குழம்பிக் கொண்டிருந்தது

Tuesday, December 6, 2011

4ம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட (இ)ரகசியங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள்!
இராணுவம் இப்போது முன்பை விட தீவிர வெறியோடு புலிகளின் வவுனியா நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கங்கணம் கட்டத் தொடங்கியது. விமலன் வவுனியா வைரவப் புளியங்குளம் வீதியூடாக வீதிச் சோதனை நடவடிக்கையின் நிமித்தம் (ரோந்து) செல்லும் இராணுவத்தினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்துவதற்குத் திட்டமிட்டார்.வவுனியா வைரவப் புளியங்குள குளக் கட்டிற்கும் கீழ்ப் பகுதியில் நெல் வயல் அமைந்திருக்கிறது. நெல் வயலின் பின்னே அம்மன் கோவில் ஒன்று உள்ளது. விமலன் தன் திட்டத்தினைச் செயற்படுத்தும் நோக்கோடு அம்மன் கோவிலடிக்கு வந்தார். நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது நிரூபனின் நாற்று தளத்தில் வெளியாகும், ஈழப் போரியல் வரலாற்றில் இது வரை வெளி வராத மர்மங்கள் தொகுப்பின் ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யவும். 

Friday, December 2, 2011

பீரங்கி கைப்பற்றல் மூலம் பேரெழுச்சியுற்ற வன்னி மக்களும் புலிகளும்!

ஆட்டிலறிகள் புலிகள் வசம் வந்தால் அப்போது பலாலி கூட்டுப் படைத் தளம் மீது யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து புலிகளால் தாக்குதல் நடாத்த வசதியாக இருக்குமே எனும் எண்ணம் மக்கள் மனங்களில் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ்ப்பாணக் குடா நாட்டின் வீழ்ச்சி வரை புலிகள் வசம் அந்த ஆட்டிலறிகள் என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. புலிகள் யாழினை விட்டுப் பின்னகர்ந்த காலத்தில் புலிகள் பூண்டோடு அழிவார்களா என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கையில் தான் தலைவர் வே.பிரபாகரன் அவர்களால் முல்லைத் தீவு இராணுவ முகா மீதான தாக்குதலுக்குத் திட்டங்கள் தீட்டப்படுகின்றது. இந்தக் தாக்குதல் தொடங்கப்படுவதற்கு இறுதி நேரம் வரை போராளிகளுக்கு எந்த முகாம் மீதான தாக்குதல் இடம் பெறப் போகின்றது எனும் விடயம் புலிகளால் சொல்லப்படாது மிகவும் ரகசியமான முறையில் பயிற்சிகள் வழங்கப்பட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

ஈழத்தில் ஆட்டிலறி கைப்பற்றி ஆமிக்குத் திருப்பியடித்த புலிகள்!

வரலாற்றின் பாதையில் தமிழர் தம் வீரம் பண்டார வன்னியனின் பின்னர் கரிகாலன் எனும் நாமத்தினூடாகத் தான் உலக அரங்கில் உச்சரிக்கப்பட்டது. புலிகளின் வளர்ச்சி, புலிகளின் திறமைகள், புலிகளின் திட்டமிடல்கள் என அனைத்துமே உலகின் பார்வைக்கும், இலங்கை இராணுவத்தின் பார்வைக்கும் இலகுவில் உய்த்தறிய முடியாத புதிராக இருந்த காலங்கள் அவை. ஓர் இன மானத்தின் அடையாளமாக, வீரத்தின் குறியீடாக விடுதலைப் புலிகள் ஈழத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இன்று அழியாச் சுடராக மக்கள் மனங்களினுள் வாழ்கின்றார்கள். புலிகளின் பல்லைப் பிடுங்கியதாகவும், புலிகள் பலமிழந்து விட்டதாகவும் உலக அரங்கிலும், இலங்கையில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் மத்தியிலும் சிங்கள அரசு தனது பிரச்சார நடவடிக்கையினை முடுக்கி விட்டிருந்த காலப் பகுதி அது.

Wednesday, November 23, 2011

ஈழத்தின் இறுதிப் போரைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரங்கள்!

நெருப்பு, டக்ளஸ், விமலன் ஆகியோர் களத்தில் இறங்கினார்கள். மறு நாள் 12.04.2007 அன்று; வவுனியா நகரம் அதிரத் தொடங்கியது. வவுனியா வைத்தியசாலையினை நோக்கி அம்புலன்ஸ் வண்டிகள் ஓடத் தொடங்கியது. 11.04.2007 அன்று புலிகளுக்கு ஆதரவானோர் மூவரையும் இராணுவத்தினர் சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. புலிகளின் கோட்டையாக வவுனியா அரச கட்டுப்பாட்டுப் பகுதியிற்குள் இருந்த உக்குளாங்குளம்,கூமாங்குளம் பகுதிகளில் இராணுவத்தினர் மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் புலிகளோடு நெருங்கிப் பழக மக்கள் அச்சம் கொண்டார்கள். மக்கள் ஆதரவு இல்லாத ஒரு பிரதேசத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புலிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது மிகவும் இயலாத காரியமாக இருந்தது.

Thursday, November 17, 2011

ஈழப் போரியலில் இது வரை வெளி வராத மர்மங்கள்!

சத்தியன் தலமையில் இராணுவத்தினர் நெருப்பினையும்,ஏனைய போராளிகளையும் தேடி அழிக்கும் நோக்கில் ஒரு அதிரடி நடவடிக்கைக்குத் திட்டமிட்டார்கள். சத்தியன் தலமையிலான குழுவினர் புலிகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியினுள் பொது மக்கள் போன்று வேடமிட்டுச் சென்று தாக்குதல் நடத்தினால் தான் புலிகளை உயிரோடு பிடிக்க முடியும் என கனவு கண்டார்கள்.தாம் புலிகளினைத் தேடிச் செல்வதனை புலிகள் அறியாதவர்களாக பொது மக்களோடு உரையாடிக் கொண்டிருப்பார்கள். இப்படியொரு சந்தர்ப்பம் அமையும் போது தாக்குதல் நிகழ்த்த வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள் இராணுவத்தினர். மழைக் காலத்தில் ஓடுவதனைப் போன்று ஆட்டோவின் இரு பக்க யன்னல் பகுதிகளையும் தரப்பாள் / படங்கு கொண்டு மூடித் தம் தாக்குதலுக்குத் தயாராக ஆட்டோவினையும் ஒழுங்கு செய்தார்கள் இராணுவத்தினர். 


Monday, November 7, 2011

வன்னி போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட வியூகங்கள்!

இந் நேரத்தில் இராணுவம் புலிகளை வலை வீசித் தேடும் முயற்சியில் களைத்துப் போயிருக்கும் போது, "தமிழனுக்குத் தமிழன் தான் எதிரி" எனும் வாக்கிற்கமைவாக சத்திய வரதன் எனப்படும் தமிழ்ப் புலனாய்வாளார் தன் பணியினைத் தீவிரமாக்கினார். இனி மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக... இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு! 
பாகம் 04: 
யார் இந்த சத்தியவரதன்: இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் உள்ள மல்லாவிப் பகுதியினைச் சேர்ந்த ஊமக் கந்தையர் எனும் பெயரால் அழைக்கப்படும் கந்தசாமியின் மகன் தான் சத்தியவரதன். 1990ம் ஆண்டு வரை புளொட் அமைப்பில் சேர்ந்திருந்த சத்திய வரதன். (நிஜப் பெயர்) இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்த மாற்று இயக்கங்களைப் புலிகள் மன்னிப்புக் கொடுத்து வாழ விடுகின்றோம் என்று ஆசை காட்டி அழைத்த காலப் பகுதியில்; ரெலோ இயக்க அமைப்பினர் பலர் உயிரோடு பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட போது, தனக்கும் இதே நிலமை வரும் என உணர்ந்து புலிகளால் தனக்கும் அச்சுறுத்தல் உள்ளது என்பதனை அறிந்து இராணுவத்தோடு சேர்ந்து புலிகளையும், புலிகளுக்கு ஆதரவானோரையும் தேடி அளிக்கும் நடவடிக்கையில் மும்முரமாக ஈடுபட்ட நபர் தான் இவர்.

Saturday, November 5, 2011

வன்னி முற்றுகையை திசை திருப்ப புலிகள் மேற் கொண்ட அதிரடி நடவடிக்கைகள்!

இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் சம்பவங்களின் அடிப்படையில் தற்போது சிறையில் உள்ள போராளிகள்; மற்றும் இச் சம்வத்தோடு தொடர்புடைய பொது மக்களின் பெயர்கள் யாவும் மாற்றப்படுகின்றது. இப் பதிவில் இடம் பெறும் கதாபாத்திரங்களில் ஒரு சிலரின் பெயரினை மாத்திரம் நீங்கள் நிஜப் பெயர்களூடாக அல்லது சிறப்புப் பெயரினூடாகத் தரிசிக்கலாம். ஏனையோரின் பெயர்களை இங்கே மாற்றியிருக்கிறேன்.

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு! 
பாகம் 03:
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்.
 இனி இரண்டாவது பாகத்தின் தொடர்ச்சியாக............
வவுனியா, மற்றும் மன்னார்ப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் வன்னி மீதான முற்றுகை பற்றிச் சிந்திக்கா வண்ணம் குழம்ப வேண்டும்; அச்சத்தில் உறைய வேண்டும் என முடிவு செய்த புலிகள் தமது தாக்குதற் பிரிவில் உள்ள சிறப்புப் போராளிகளை அழைத்து உளவுப் பிரிவு அல்லது வேவுப் பிரிவோடு ஒருங்கிணைத்து வன்னியில் 2006ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு திட்டத்தினைத் தீட்டத் தொடங்கினார்கள். அந்தத் திட்டம் தான் வவுனியாவில் உள்ள இராணுவத்தினரின் உறக்கத்தினைச் சீர்குலைக்கும் திட்டமாகும். 

Friday, November 4, 2011

நான்காம் ஈழப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 02....
யாழ் குடா நாட்டிலும் திருகோணமலை மாவட்டத்திலும் 24 மணி நேர ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தியது இலங்கை அரசு. இராணுவம் புலிகள் அமைப்பினருக்குத் தண்ணி காட்டும் நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் புதிய கள முனையினை வாகரையினை அண்டிய பகுதியிலும், சம்பூரிலும் திறந்தது. மக்களைப் பற்றிய கவலையேதுமின்றி புலிகளைப் பூண்டோடு அழித்தால் போதும் என்ற நோக்கோடு கிழக்கு மாகாணத்தில் இராணுவம் தன் தாக்குதல் நடவடிக்கையினைத் தொடங்கியது. இதே வேளை புலிகளுக்கு இருந்த மக்கள் ஆதரவினைச் சீர் குலைக்கும் நோக்கோடு வன்னிப் பகுதியில் வாழ்ந்த மக்களிற்குப் புலிகள் மீது வெறுப்பினை உருவாக்கும் நோக்கில் கண் மூடித்தனமான விமானக் குண்டு வீச்சினை இலங்கை இராணுவம் ஆரம்பிக்கின்றது.


வன்னிப் போரை திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாயங்கள்!

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 01:
2005ம் ஆண்டு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டும் எனும் தீவிர குறிக்கோளோடு செயற்பட்ட புலிகள் அமைப்பினர் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் வாக்குரிமையினைப் புறக்கணிக்கச் செய்து அச் செயற்பாட்டில் வெற்றி பெற்றுக் கொள்கின்றார்கள். 2002ம் ஆண்டில் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையே கைச்சாத்தான சமாதான ஒப்பந்தத்தின் வாயிலாக; "தமிழர் தரப்பு ஏமாந்தது போதும்! இனிமேல் பலன் ஏதும் இல்லை!" எனும் நிலையினை உணர்ந்த புலிகளின் தலமைப்பீடம் சர்வதேச நாடுகள் முன்னே தான் நல்ல பிள்ளை எனும் பெயரினைத் தக்க வைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் ஊடாக சமாதான ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து போரினை ஆரம்பிக்க வேண்டும் எனும் செயற்பாட்டில் தனது கவனத்தினைச் செலுத்தத் தொடங்குகின்றது.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க