Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Tuesday, October 18, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 11

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....

பத்தாவது பாகத்தின் தொடர்ச்சியாக....
ஐயா எப்படி ஒத்த பண்பாடு, ஒத்த மொழிப் பேச்சு உடையவர்கள் என்று எப்படி ஆதாரம் இல்லாது சொல்லுவீங்க. Any Evidence? என நான் கேட்கையில், ஐயா சிரித்தவாறு, பொடியனுக்கு சுமதி டீச்சரிடம் ரெண்டு நாள் படிச்ச இங்கிலீஸ் ஒர்க் பண்ணுது என நக்கல் அடித்தார்.  ஆதாரம் இல்லாமல் நான் ஏதும் சொல்லுவேனோ பேரா? கொஞ்சம் பொறுமையாக கதையினைக் கேள் பேரா எனச் சொல்லியவாறு ஐயா தொடர்ந்தார்.

Sunday, October 16, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 10

இலங்கைத் தமிழர்களின் மொழி - கலாச்சார - வரலாற்றுப் பரம்பல்:
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....

ஒன்பதாவது பாகத்தின் தொடர்ச்சியாக.....

இவ்வாறு ஐயா நீண்ட தன்னுடைய பிரசங்கத்தை நிறைவு செய்கையில் அம்மா தான் வரலாற்றினை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தா(ர்) என்பதற்கு சான்றாக "இலங்கையில் தமிழ் மொழியின் பரம்பல், தமிழ் மொழி தமிழர்களின் பேச்சு மொழியாக எப்படி உருமாற்றம் பெற்றது என்று சொல்லாமே" என ஐயாவிற்கு நினைப்பூட்டினா(ர்). 


"இன்னைக்கே நான் சொல்லத் தொடங்கி என்னோட நித்திரையினையும் கை விட்டு நிற்பதுதான் உனக்கு விருப்பமோ? இப்பவே பேரன் தூங்கிட்டான். அவனைக் கொண்டு போய் தூங்க வை.நான் நாளைக்கு மிகுதி வரலாற்றினைச் சொல்கிறேன்" எனப் பேசியவாறு படுக்கையறையினை நோக்கிப் போனார் ஐயா.


Saturday, October 15, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 09

இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு: 
இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
இலங்கைத் தீவில் வாழும் மக்களுள் முஸ்லிம் மக்களும் தமக்கென்றோர் தனியான, நீண்ட பாரம்பரிய வரலாற்றினைக் கொண்டவர்களாக வாழ்கிறார்கள்.  இலங்கைத் தீவில்(ஈழத்தில்) முதன் முதலாக வியாபார நோக்கோடு கி.பி 414ம் ஆண்டு தென் அரேபிய வர்த்தகர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். ஆனாலும் அவர்களது வருகையானது வியாபார நோக்கத்தோடு அமைந்து கொள்கிறது. இதன் பின்னர், கி.பி 628ம் ஆண்டளவில் "வஹாப் இப்னு அபீ ஹப்ஸா" எனும் நபிகளின் தோழர் இலங்கைக்கு வருகை தந்து, "இலங்கையர்களை இஸ்லாமியர்களாகவும், இலங்கை மன்னனாக அக் காலத்திலிருந்தவனை இஸ்லாமிற்கு மதம் மாறும் படியும்" கோரியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.

Thursday, October 13, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 08

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஏழாவது பாகத்தின் தொடர்ச்சியாக.......
"ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" என நான் மீண்டும் நினைபடுத்தினேன். "நிரூபன் பொடியன் (பையன்) என்னைத் தூங்கவும் விட மாட்டான் போலிருக்கே" என்று ஐயா செல்லமாய்க் கோபித்தவாறு, "நாளைக்கு இரவு உனக்குத் தூக்கம் வரப் பண்ண ஏதும் வேணுமில்லே! அப்போ நாளைக்கே சொல்றேன்" என்றவாறு படுக்கையறைப் பக்கம் போனார்..............

Sunday, October 9, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 07

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
இவ்ளோ பெரிய வரலாற்றினைக் கொண்டிருக்கிற புலி மாமாக்கள் ஏன் சிங்கள ஆமியாக்களோட அடிபடுறாங்க? என்று நான் வாயினை ஆவென்றபடி கேள்வியெளுப்பினேன். அம்மா என்னை உற்றுப் பார்த்தவளாய் "தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய்? இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே?" என்று சொல்லிக் கொண்டிருக்க ஐயா "தம்பி நிரூக் குட்டி, இப்ப நாங்கள் சாப்பிடுவோம்,. இரவைக்கு (இரவிற்கு) மிகுதிக் கதையினைப் புள்ளைக்குச் சொல்லுறன்" என்றவாறு அடுப்படிப் (கிச்சன்) பக்கம் நகரத் தொடங்கினார். 


Friday, October 7, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 06

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
அம்மா மெதுவாக எங்களின் பூர்வீக வரலாற்றினைச் சொல்லத் தொடங்கினா(ர்). 
"நாங்கள் இற்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாக இந்தியாவிலிருந்து வந்த தமிழர்கள்! எங்களின் பூர்வீகம் இந்தியா தான்!" 
சிங்களவர்களின் வரலாறு எங்களுக்குப் பின்னர் தான் தொடங்கியது. இந்தியாவின் குமரிக் கண்டத்தில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாக வாழ்ந்த மூதாதையர்களின் எச்சம் தான் நாங்கள். 

எனக்கு அம்மா என்ன சொல்ல வருகிறா என்றே புரியாதவனாக அவாவின் விழியினை உற்றுப் பார்த்தேன். 


Friday, September 30, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 05

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாக......
எங்களின் விளைச்சல் நிலங்கள் அனைத்திலும் பசளைகளுக்குப் பதிலாக(உரத்திற்கு) மனித எலும்புகளே புதைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினைத் தோண்டி எடுத்து, தோல்விகளை ஆற்றுப்படுத்த முடியாதவர்களாய் நாங்கள் இன்று நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.


"ஊர் நினைவுகள் எப்பொழுதும் நினைக்க - நினைக்க சுகத்தை அள்ளி வழங்கும் இயல்புடையவை" என்று பாடுகின்ற பல கவிஞர்கள் மத்தியில் எம் இறந்த காலங்கள் இதயத்தை வாட்டுகின்ற நரக ஞாபகங்களாக மட்டுமே நெஞ்சில் நிழலாடுகின்றன. என்னவோ தெரியவில்லை! ஈழத் தமிழன் மட்டும் தன் மண்னில் உள்ள வளங்களோடு தானும் ஒன்றித்து, அனுபவித்து வாழ்ந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்ற வரத்தினை காலம் தரவில்லை. 


Friday, September 23, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 04

இத் தொடரின் கடந்த பாகங்களைப் படிக்க..........
மூன்றாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
மார்கழி மாதத்தில் பாடசாலை விடுமுறை விட்டதும் பல திட்டங்கள் போட்டுப் பட்டங்கள் கட்டி ஏற்றத் தொடங்கிடுவோம். அதுவும் கழுசான் அவிழ்ந்து விழும் பருவத்தில் பட்டங்களைக் கட்டி வயற் தரை முழுதும் ஓடி, ஓடிப் பட்டம் ஏற்றிய அனுபவங்களை எளிதில் மறந்து விட முடியாது. ஆட்களின் உயரங்களுக்கேற்ப பட்டங்களின் வகைகள் பலவாறாய் அமைந்து கொள்ளும். 

Friday, September 16, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 03

அன்பிற்கினிய உறவுகளே! இந்தத் தொடரின் மூன்றாவது பாகத்தினூடாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி! நாள் தோறும் நீங்கள் வழங்கி வரும் பேராதரவு தான் ஈழத்து மண் வாசனை கலந்த இத் தொடரினை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்குத் தூண்டு கோலாக இருக்கின்றது! அந்த வகையில் மீண்டும், மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி(கள்)!
ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் - 3
இத் தொடரின் கடந்த பாகங்களைப் படிக்க..........
எங்கள் வீட்டில் உள்ள ஐயனாருக்கு மடை பரவுவதற்காய்(படையல் வைப்பதற்காய்) எல்லோரும் தயாராகிக் கொண்டிருந்தோம்.அப்போது மாமா, மீண்டும் ஓடோடி வருகிறார். இராசாத்தியைக் காணேல்லையாம்...........என பதை பதைத்தபடி வார்த்தைகள் எச்சிலோடு மல்லுக் கட்டி, வெளியே வர முடியாத நிலையில் இருக்கும் மனிதனைப் போல உணர்வற்றவராகி நடுக்கத்துடன் சொல்லத் தொடங்குகிறார்.......................................................

Saturday, September 10, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

பாகம் 02
முதற் பாகத்தின் தொடர்ச்சியாக...மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................எனும் வகையில் முதற் பாகம் நிறை வடைந்திருந்தது. இத் தொடரின் முதற் பாகத்தினைப் படிக்காது தவற விட்டவர்கள், இங்கே கிளிக் பண்ணிப் படிக்கலாம்.

மாமா, ஏன் ஏறினார், எதற்கு ஏறினார் என்பது அறியாதவனாய், அவரது செய்கைகளை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டு நின்றேன். மாமாவினைப் பின் தொடர்ந்து பூட்ஸ் கால்கள் பட படக்க, குதிரைக் குழம்பின் ஓசையினைப் போல நிலம் எல்லாம் தடதடக்க பச்சை நிறம் என்றால் பசுமையிற்கான குறியீடல்ல, பகைமையிற்கான பொருள் விளக்கம் என்பதற்கான அறை கூவலுடன் அவர்கள் வந்தார்கள்.

Saturday, September 3, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!

மீண்டும் அதே கணங்கள், அதே வலி சுமந்த நினைவுகள், உணவின்றி உயிர் மட்டும் ஊசலாடிய ரணங்கள் நிறைந்த மரத்தடி வாழ்க்கை இனிமேல் வரவே வரக் கூடாது எனும் எண்ணம் இப்போது எல்லார் மனங்களிலும் உட் புகுந்து விட்டது. ஆனாலும் என் ஞாபகச் சிதறல்களில் வெடி வைத்து, ஆங்காங்கே காயங்களை உண்டாக்கிய சீழ் கலந்த பருக்களை இலகுவில் அழித்து விட முடியாது எனும் எண்ணத்தோடு; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க