Showing posts with label ஆலமரத்தடி. Show all posts
Showing posts with label ஆலமரத்தடி. Show all posts

Friday, November 18, 2011

புலம்பெயர் தமிழர்களும் புலம்பிப் புளுகும் புண்ணாக்குகளும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே! எல்லோரும் நல்லா இருக்கிறீங்களா? இப் பதிவு ஒட்டு மொத்தப் புலம் பெயர் தமிழர்களுக்கும் எதிரான பதிவு அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழ் உறவுகளுள் இருக்கும் ஒரு சில புல்லுருவிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில் தான் இப் பதிவினை எழுதியிருக்கிறேன். உங்கள் நாற்று வலைப் பதிவில் ஏற்கனவே வெளியாகி பலரின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டிருந்த ஆலமரத்தடி அரட்டை எனும் பகுதியினை நீண்ட நாட்களாக காணவில்லையே என்று யோசித்திருப்பீங்க தானே. உங்கள் கவலைகளைப் போக்கும் வகையில் ஆலமரத்தடி அரட்டைப் பகுதியினைக் கொஞ்சம் பட்டை தீட்டிப் புதிய வடிவில் "விண்ணாணம் விநாசியாரும், வேடிக்கை விநோதங்களும்!" எனும் தலைப்பில் வழங்கவுள்ளேன். 

Monday, July 18, 2011

மாறனிடம் மண்டியிட்ட திமுக - தாத்தாவின் புரிந்துணர்வற்ற செயல்!

நீண்ட இடை வேளையின் பின்னர், மீண்டும் வழமை போல ஆலமரத்தடி அரட்டை கூடுகின்றது.  பழைய ஆலமரத்தடி அரட்டைகளை நீங்கள் இங்கே சென்று படித்து மகிழலாம். 

'திமுகவை நான் திங் பண்ணுறேன்
திஹார் ஜெயிலை நான் அவோய்ட் பண்ணுறேன்
உன் குடும்ப அரசியலை புறக்கணிக்கிறேன்,
இதனாலை வந்த விளைவை நினைச்சு நான் சிரிக்கிறேன்...
ஹா....ஹா...ஹா...என வடிவேலுவின் பாட்டினை மாற்றிப் பாடிக் கொண்டிருந்த நிரூபன், திடீரெனப் பின் வருமாறு பாடத் தொடங்கினான். 
’உன்னை நான் லவ் பண்ணுறேன்
உன் தங்கச்சியை லைக் பண்ணுறேன்
உங்க அக்காவை லுக்கு விடுறேன்
உன் வீட்டு வேலைக்காரியை ரூட்டு விடுறேன்....
உன் தம்பி கூட வருவதைத் தள்ளி வை
உங்க அண்ணன் கிட்ட என்னைப் பற்றி சொல்லி வை................

Thursday, March 24, 2011

இம் முறைத் தேர்தலில் எல்லாமே இலவசம்!

இது தேர்தல் காலம், மக்கள் மனங்களையெல்லாம் இலவசங்களை அள்ளிக் கொடுத்து வாங்கும் திருவிழாக் காலம். எங்கள் தாய் தமிழக உறவுகளின் தேர்தல் கொண்டாட்டங்கள் பற்றி எங்கள் ஊரில் இடம் பெறும் ஒரு அரசியல் கருத்தாடலை உங்களுடன் இன்று பகிர்ந்து கொள்ளப் போகிறேன். எல்லோரும் படிக்க றெடி தானே!

இன்று முதல் என் வலைப் பதிவினூடாக, இவ்வாறான அரசியல், சமூகம் சார் அரட்டைகள் இடம் பெறும் பகுதியாக ‘ஆலமரத்தடி’ எனும் பெயரில் ஒரு பகுதியினை உங்களின் பேராதரவுடன் தொடங்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.


உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க