இலங்கை அரச கைக் கூலிகளின் கையாலாகத் தனம் & இழி நிலை:
காலங் காலமாக அநீதிக்கு எதிராக குரல் கொடுப்போர் மீதும், எழுத்துக்கள் ஊடாக தம் கருத்துக்களை முன் வைப்போர் மீதும் சரியான முறையில் எதிர்க்கத் திராணியற்றவர்களாக ஊடக அடக்கு முறை எனும் ஆயுதத்தினை சிங்களப் பேரினவாதம் பிரயோகித்து வருவது நாம் அனைவரும் அறியாத ஓர் விடயம் அல்ல. இருண்ட தீவிற்குள் முடங்கிய செய்திகளை, குட்டித் தீவின் உண்மை நிலையினை உலகம் அறிய வேண்டும் எனும் நோக்கில் தம் உயிரைப் பற்றிக் கூடக் கவலைப்படாது நேர்த்தியான செய்திகளை வழங்க வேண்டும் எனும் நோக்கில் செயற்பட்ட பல ஊடகவியலாளர்கள் இலங்கையில் ஆயுத முனையில் கொல்லப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டிருக்கிறார்கள். காணாமற் போகடிக்கச் செய்யப்பட்டுள்ளார்கள்.
|
|



