காற் சட்டைக் காலத்தில் 1991ம் ஆண்டில் இது புலிகள் காலம் எனும் இசைப்பேழையில் காசி ஆனந்தனின் பாடல் வரிகளில் தேனிசை செல்லப்பா அவர்கள் இசையமைத்துப் பாடிய பாடலை முணு முணுக்கும் போது மனதில் பல கேள்விகள், பல ஐயங்கள் தோன்றும். ஆனாலும் அந் நேரத்தில் அந்த கேள்விகளுக்கான விடைகளை யாரிடம் கேட்டுப் பெறுவது எனும் சிந்தனையுடன் என் நாட்கள் நகர்ந்தன. "மக்கள் எல்லாம் மக்கள் எல்லாம் பிரபாகரன் பக்கம். மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம் தான் நிற்கும்..." என்றவாறு அந்தப் பாடல் அமைந்திருக்கும். இப் பாடலில் குறிப்பிடப்படும் மக்கள் படை ஈழத்தில் அப்போது இல்லையே எனும் நிலையில் என் சிந்தனைகள் பின்வருமாறு விரிந்திருந்தது.
|
|


