வருமுன் காப்பதே சிறந்தது!
நெல் அரிசி சோறு
நேற்றிரவு தந்தவளோ யாரு
சொல்லழகால் காதல் சொன்னாள்
சொக்கவைத்து காதில் முத்தமிட்டாள்
பில் எடுக்க சொன்னேன்
பிள்ளை வேண்டும் என்றாள்
வில்லெடுக்கா வினை தந்தாள்
விருந்தோடு மயக்கம் தந்தாள்
நள்ளிரவில் கொள்ளையிட்ட நாயே
நானுமிப்போன் ஆகிவிட்டேன் தாயே - என
கள்ள மொழி சொன்னாள் - என்னை
கம்பி எண்ண வைத்தாள்!!
*பில் : மாத்திரை
*பில் : மாத்திரை
நவீன Dating
மெல்ல நடந்து அருகே வந்தாள்
மேனியினை கொஞ்சும் வாசம் தந்தாள்
கள்ளில் இல்லா போதை தந்தாள்
களிப்புடனே காதல் மோகம் செய்தாள்
அள்ளி அணைக்க அருகே வேண்டும் என்றேள்
ஐயோ எஸ்கேப்பு இது Dating காதல் என்றாள்!
ஹாய் என்றாள் - காலப் போக்கில் பாய் சொன்னாள்!
கோயம்பேடு சென்னை நகர் பஸ்டாப்பு
கோலமயில் கொடுத்தாள் மிஸ்ட்கோலு
காயமின்றி காதல் செய்தால் தப்புமில்லை
காசு பார்த்தால் காதலிலே சொர்கமில்லை
வாயும் வயிறுமாக வந்து நின்றாள்
வடிவான பையனையும் கூட்டி வந்தாள்
தாயாய் நானும் ஆகி விட்டேன் என்றாள்
தடியன் இவனே எனக்கு கணவன் என்றாள்
நாயைப் போல் முகத்தை பார்த்தேன் - நங்கையோ
பாய் என்று சொல்லி பறந்து சென்றாள்!
தமிழனின் பண்பாடு!
வெறி கொண்டலைகின்றாராம் தமிழர்கள்
வேடிக்கையாய் பலர் சொல்லி இகழ்கின்றாராம்
அறிவில் பாலியல் கல்வி இன்மையால்
தெருவில் நாயை போல் நாமிங்கே - இதை
அறிய மறுக்கிறது சமூகம் - செக்ஸ் பற்றி
அறிய நினைத்தாலோ
வெறுப்பால் உமிழ்கிறது தினம் தினம்!
எல்லோருக்கும் வணக்கமுங்க..
எல்லோரும் நலமாக இருக்கீங்களா?
|
12 Comments:
ம்ம்ம் அருமை
நல்ல பார்வை தோழரே (உண்மையும் கூட )
@செய்தாலி
தங்களின் இனிய கருத்திற்கு நன்றி நண்பா.
வணக்கம்
ஆழமான வரிகளில் யதார்த்தமாக....நன்று
வணக்கம் நிரூபன்!நல்லாயிருக்கிறியளோ?நீங்கள் நல்லாயியிருக்கிறியள் எண்டு விளங்குது.இன்னும் "ஒண்டும்"சரி வரயில்லையோ?
சூப்பரப்பு!கானா பாட்டு பாடுவிங்க என நினைக்கிறேன்....
எலிப்புளுக்கை ஏகாம்பரம்!? வெய் திஸ் கொலைவெறி? நடத்துங்கோ!
நிரூ....கனகாலத்துக்குப்பிறகு...சுகம்தானே !
சூப்பரா இருக்கு நண்பரே.
வணக்கம் நிரூபன்,
நலமா?
விடுமுறையில் இருப்பதால் வலைப்பக்கம் வரமுடியவில்லை
மன்னிக்கவும்...
எந்த ஒரு விஷயத்திலும் உங்கள் பார்வை
வித்தியாசமாகவும் தீர்க்கமாகவும் இருப்பதற்கு
மற்றுமொரு சான்று...
ஹாய் என்றாள் - காலப் போக்கில் பாய் சொன்னாள்!....சிந்திக்க வைக்கும் பதிவு .
நீண்டநாட்களுக்கப்புறம் உங்க பதிவை கண்டதில் மகிழ்ச்சி நிரூ. எலிப்புளுக்கை.... இன் வரவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வா மச்சி! ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கே! யோ..... மணியம் கஃபேக்கு இப்படி ஒரு விளம்பரமா?
கொய்யாலே அதைக் கூட தாங்கிக்கலாம்! ஆனா டீ க்கடையில ஆப்பிள் விக்கிறேன்னு சொன்னே பாரு! அதைத்தான் என்னால தாங்க முடியேலை! ஹா ஹா ஹா
கலக்கலுங்க...
Post a Comment