ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல மாற்றும் உணவுகளை தயாரிப்பது எப்படி?
எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? "நலமாக இருந்தால் தான் பல காலம் வாழலாம்" அப்படீன்னு சொல்லுவாங்க. அந்த முது மொழிக்கு அமைவாக கடந்த வாரம் "ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல மாற்ற உகந்த வழிகள்!” எனும் பதிவினூடாக உடல் எடையை குறைக்க உதவும் சில குறிப்புக்களை உங்களோடு பகிர்ந்திருந்தேன். இப் பதிவினூடாகவும், இப் பதிவின் தொடர்ச்சியாகவும், ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையான உணவுகளை நம்ம கையாலே நாமே நம்ம வீட்டில தயாரித்து உண்பது எப்படீன்னு பார்ப்போமா?
பகுதி 01 - ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்:
இந்த உணவிற்கு ஏலவே பல பெயர்கள் இருந்தாலும், தமிழில் நான் ஓர் பேரை வைச்சிருக்கேனுங்க. அது தான் ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட். ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட்டை எப்படிச் செய்வதென்று பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:
*பாண் / துண்டு துண்டாக வெட்டப்பட்ட பாண் (தேவையான அளவு)
*முட்டை (தேவையான அளவு)
*கீரை (சிறிதளவு)
*முட்டை பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை: பாணை பீஸ் பாணாக வாங்க முடிந்தவர்கள் வாங்கி கொள்ளலாம். இல்லையேல் கடையில் பாணை வாங்கி சிறிய சிறிய துண்டுகளாக வெட்டலாம். வெட்டிய பாணை இப்போது ஓர் ஓரமா வைச்சிடுங்க. அப்புறமா முட்டையினை எடுத்து உடைத்து ஆம்லெட் போடுவதற்கு ஏற்றவாறு தயார் செய்து கொள்ளுங்க. ஆம்லெட்டினுள் உப்பு போடும் போது, கையில் சிறிதளவு கீரை இலைகளை கழுவி கையால் சிறிய சிறிய துண்டுகளாக கிள்ளி முட்டையுடன் சேர்த்துக் கொள்ளவும்.
இப்போது ஆம்லெட்டினை அடுப்பில் சட்டியினுள் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி பொரித்துக் கொள்ளுங்கள். நன்றாகப் பொரிக்காது இளம் மஞ்சள் கலரில் (அரை அவியல் பருவத்தில்) பொரித்து எடுத்து கொள்ளுங்க. உங்கள் கைவசம் உள்ள பாணின் அளவிற்கு ஏற்றாற் போல முட்டையினையும் பொரிக்கவும்.
அப்புறமா இரண்டு வெட்டிய பாண் துண்டுகளை எடுத்து அதன் நடுவில் பொரித்த ஆம்லெட் முட்டையினை வைத்து உண்டால்....அது தான் ஒல்லி பிரெட் சில்லி சிக்கன். (இப்படி உங்களுக்கு வேண்டிய அளவு பிரெட்டினுள் வேண்டிய அளவு முட்டையினை வைத்து பல ஒல்லி பிரெட் சில்லி சிக்கனை நீங்க உருவாக்கி கொள்ளலாம்.)
விரும்பியவங்க கீரை சேர்க்கும் போது சிறிதளவு காளானையும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி முட்டையுடன் சேர்த்து பொரித்துக் கொள்ளலாம்.
அப்புறமா இந்த உணவுக் குறிப்பில் சில்லி சிக்கன் என்று வந்திருக்கே...எங்கே சில்லியை காணலை என்று யோசிக்கிறீங்களா? விரும்பியவங்க ஆம்லெட் போடும் போது, சிறிதளவு சில்லியையும் சேர்த்துக்கிட்டா அது தான் சில்லி சிக்கன் ஆம்லெட். எப்பூடி ஐடியா?
காலை உணவாக இந்த உணவினை நீங்க எடுத்துக்கலாம். குறைந்தது நான்கு துண்டு நறுக்கிய பாண் (இரண்டு சோடி) ஒரு தனி நபருக்கு போதுமானது. அது தான் உங்கள் எடையினையும் மெயிண்டேன் பண்ணிக்க உதவும். அடுத்த பாகத்தில் மதிய உணவு ஒன்றினைத் தயாரிப்பதற்கு ஏற்ற குறிப்பினைப் பகிர்கிறேன்.
|
31 Comments:
காலை வணக்கம் நிரூபன்!அருமையான ஐடியாப் பகிர்வு!///(இரண்டு சோடி)///இங்கயும் சோடிதானா,ஹ!ஹ!ஹா!!!!!!!!!
எல்லாம் சரி. சிக்கன் எங்கே?
ரெசிப்பி எல்லாம் கலக்கட்ட ஆரம்பிருச்சி நண்பா...அடுத்த மதிய உணவுக்கு வெயிட்டிங்.
@ எல்லாம் சரி. சிக்கன் எங்கே? @
நானும் அததான் கேக்குறேன்..சிக்கன் இல்லாம அதோடு குட்டி பீஸுதான் இருக்கு..
யோவ் ... அடிக்கடி இதத்தானேயய்யா சான்ட்விச் என்ற பேர்ல வருஷக்கணக்கா சாப்பிடுறோம். ஆனாலும் உடம்பு தான் குறைய மாட்டேங்குது. என்னமோ போங்கப்பா.
ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட் -
எல்லாம் இருக்கு. சிக்கனை காணோமே? இல்ல நாங்க முட்டையை அடைகாத்து சிக்கன் ஆக்கிக் கொள்ளணுமா?
நண்பர்களே, சிக்கனுக்குரிய விளக்கம் இரவு வழங்குகிறேன்!
மன்னிக்கவும்.
அப்புறமா இந்த உணவுக் குறிப்பில் சில்லி சிக்கன் என்று வந்திருக்கே...எங்கே சில்லியை காணலை என்று யோசிக்கிறீங்களா? ///நோ,நோ!!!நானும் கவனிக்கவில்லை!சில்லி மட்டுமில்ல சிக்க னையும் காணவில்லைத்தான்!நல்லவேளை நண்பர்கள் கேட்டார்கள்!
மரக்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் என்ன செய்யலாம்.... முட்டை போடாமல் பாணை மட்டுமே போட்டு பொரிப்பதா?
நிரூபன் said...
நண்பர்களே, சிக்கனுக்குரிய விளக்கம் இரவு வழங்குகிறேன்!
மன்னிக்கவும்.////ஆற்றை வீட்டுக் கோழிக்கூடு காணாமப் போகப் போகுதோ?இரவில எண்டா?மக்களே தூக்கம் விளியுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!
காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிரூ.கோழியை விட்டிட்டு சாப்பிடுறதாக்கும்.எனக்கெண்டே அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடுறார் நிரூ.வாழ்க !
ஹேமா said...
காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிரூ.கோழியை விட்டிட்டு சாப்பிடுறதாக்கும்.எனக்கெண்டே அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடுறார் நிரூ.வாழ்க !
////அப்போ,கலை சொல்வது (பூசணிக்காய்)உண்மைதானோ????
ஹேமா said...
காலமைச் சாப்பாட்டுக்கு "முன்னம்" சாப்பிடுறதோ இது நிரூ. ////இது தேறுற கேஸ் மாதிரி தெரியல்லையே?(படத்தில இருக்கிற என்ர பையன் மாதிரி!)
இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா? பின்னாடி சாப்பிடனுமா....
@Yoga.S.FR
காலை வணக்கம் நிரூபன்!அருமையான ஐடியாப் பகிர்வு!///(இரண்டு சோடி)///இங்கயும் சோடிதானா,ஹ!ஹ!ஹா!!!!!!!!!
//
வணக்கம் ஐயா
அதை விட அதிகம் சாப்பிட்டா உடம்பு ஊசி போல வராது! ஆனால் ஊதிப் பெருக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@பழனி.கந்தசாமி
எல்லாம் சரி. சிக்கன் எங்கே?
//
சிக்கனோட சிநேகிதன் கோழி முட்டையில் இருந்து ஆம்லெட் போடப்படுவதால் சில்லி சிக்கன் என்று பேர் வைச்சிட்டேன் அப்படீன்னு சொல்லி எஸ் ஆக மாட்டேன்.
சிக்கனைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொலட்ஸ்ரோல் பிரீ ஆயிலில் பொரித்து பிரெட்டின் நடுவேயும் வைத்து சாப்பிடலாம்! அதால சில்லி சிக்கன் என்றும் சொல்லிக்கலாம் ஐயா..
இதைப் பதிவில சொல்ல மறந்துட்டேன்.

@Kumaran
ரெசிப்பி எல்லாம் கலக்கட்ட ஆரம்பிருச்சி நண்பா...அடுத்த மதிய உணவுக்கு வெயிட்டிங்.
//
நன்றி நண்பா...
வெகு விரைவில் மதிய உணவினையும் பகிர்ந்திடுறேன்.
@ஹாலிவுட்ரசிகன்
யோவ் ... அடிக்கடி இதத்தானேயய்யா சான்ட்விச் என்ற பேர்ல வருஷக்கணக்கா சாப்பிடுறோம். ஆனாலும் உடம்பு தான் குறைய மாட்டேங்குது. என்னமோ போங்கப்பா.
ஒல்லி பிரெட் சில்லி சிக்கன் ஆம்லெட் -
எல்லாம் இருக்கு. சிக்கனை காணோமே? இல்ல நாங்க முட்டையை அடைகாத்து சிக்கன் ஆக்கிக் கொள்ளணுமா?
//
மச்சி! நீங்க சான்விட்ச் என்ற பெயரில அதிகமா சாப்பிட்டிருப்பீங்க.
ஆகவே இப்போ நான் சொல்வது ரெண்டு சோடி மட்டும் சாப்பிடுங்க என்று!
சிக்கனுக்கு மேலே விளக்கம் கொடுத்திருக்கேன் நண்பா.
@Yoga.S.FR
அப்புறமா இந்த உணவுக் குறிப்பில் சில்லி சிக்கன் என்று வந்திருக்கே...எங்கே சில்லியை காணலை என்று யோசிக்கிறீங்களா? ///நோ,நோ!!!நானும் கவனிக்கவில்லை!சில்லி மட்டுமில்ல சிக்க னையும் காணவில்லைத்தான்!நல்லவேளை நண்பர்கள் கேட்டார்கள்!
//
ஐயா...சில்லியை சேர்த்து முட்டையைப் பொரித்தா அது சில்லி ஆம்லெட் என்று கீழே சொல்லியிருக்கேன்! ரெசிப்பியில் சிக்கன் சேர்க்கும் முறையினையும் மேலே சொல்லியிருக்கேன்!
ஆர்வக் கோளாறில பெயரைக் கொஞ்சம் டைம்மிங்கா வைச்சேன்!
அது இப்படி ஆகிட்டு!
@கலைவிழி
மரக்கறி மட்டுமே சாப்பிடுபவர்கள் என்ன செய்யலாம்.... முட்டை போடாமல் பாணை மட்டுமே போட்டு பொரிப்பதா?
//
கவலையே வேணாம்.
அடுத்து வரும் சமையற் குறிப்பில் மரக்கறி சாப்பிடுவோருக்கும் ஓர் அசத்தலான குறிப்பு வழங்கிடுறேன்.
@Yoga.S.FR
நண்பர்களே, சிக்கனுக்குரிய விளக்கம் இரவு வழங்குகிறேன்!
மன்னிக்கவும்.////ஆற்றை வீட்டுக் கோழிக்கூடு காணாமப் போகப் போகுதோ?இரவில எண்டா?மக்களே தூக்கம் விளியுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!
//
ஹே...ஹே..
செமையா காமெடி பண்றீங்க ஐயா..
@ஹேமா
காலமைச் சாப்பாட்டுக்கு முன்னம் சாப்பிடுறதோ இது நிரூ.கோழியை விட்டிட்டு சாப்பிடுறதாக்கும்.எனக்கெண்டே அடிக்கடி இப்பல்லாம் பதிவு போடுறார் நிரூ.வாழ்க !
//
உங்களுக்கு நக்கல் கூடிப் போச்சுங்க.
இது தான் காலமைச் சாப்பாடே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@வீடு சுரேஸ்குமார்
இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா? பின்னாடி சாப்பிடனுமா....
//
அடப் பாவிங்களா..
நண்பா..இது தான் காலைச் சாப்பாடாக எடுத்துக்கனும்!
ஹே...ஹே...
சாப்பாடே இது தான்...இதுக்கு மேல ஒண்ணுமே சாப்பிடாம தண்ணீர் மட்டும் குடிக்கலாம். பழங்கள் சாப்பிடலாம். அப்புறமா லஞ்ச் எடுத்துக்கலாம்.
HEMAA AKKAA KKU கண்டிப்பா இந்த பதிவு பயனுள்ளதா இருக்கும் ...மிக்க நன்றி
கலை said...
HEMAA AKKAA KKU கண்டிப்பா இந்த பதிவு பயனுள்ளதா இருக்கும் ...மிக்க நன்றி
////புலனாய்வு செய்து நிரூபித்த கலை வாழ்க!(ஹேமா ஒத்துக்கிட்டா,குண்டுதான்னு!)
நல்ல ஐடியா.
இருந்தாலும் எனக்கு தேவைபடாது
எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!
எல்லோருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்களும்,காலை வணக்கமும்!
Happy Easter and Easter holidays...
Vetha. Elangathilakam.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிடவும் விட மாட்டீர்கள் போலேருக்கே....மத்திய உணவையும் மறந்து விட்டீர்களே!
இருக்கிறது கொஞ்ச நாள்...அதுல எதுக்கு இந்த விசப்பரீட்சைஎல்லாம்...நமக்கு ஒத்து வராது...
Absent Sir...
அடடா நல்ல யோசனையாவுல்ல இருக்கு.
யார் யாரெல்லாம் குண்டா இருக்காங்களோ அவாளெல்லாம் ஓடோடிவாங்க பதிவப்படிக்க உடம்பக்குறைங்க..
Post a Comment