தூர
இடப் பயணம் போறவங்க எல்லாரும் இரவு ரயிலினைத் தான் தெரிவு செய்வாங்க.
நானும் அலுவலகப் பணி நிமித்தம் தலை நகருக்குச் செல்லும் நோக்கில் ஒருவாட்டி இரவு ரயிலில் என் பயணத்தினைத் தொடங்கினேன்.
வழமையாக
பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழியும் ரயில், அன்று மட்டும் சன நெரிசல் ஏதுமின்றி இருந்திச்சுங்க. இதுக்குப் பேர் தான் நல்ல நேரமோ! என எண்ணியவாறு; யாருமே
இல்லாத பெட்டி ஒன்று எனக்கு கிடைக்க, அதில் டபுள் சீட் உள்ள இடத்தில் நான்
நீட்டி நிமிர்ந்து தூங்கத் ஆரம்பிச்சிட்டேன். பாயிண்டு பாயிண்ட் எக்ஸ்பிரஸ்
ஆகப் புறப்பட்ட ரயில் ஒரு இடத்தில் நிற்கத் தொடங்க, நானும் விழித்துக்
கொள்ள, அழகிய பெண்ணொருத்தி, நான் இருந்த அதே பெட்டியினுள் வந்து
உட்காருகிறாள். (டைம்மிங் நிரூபா! விடாத! சீக்கிரமே புடிச்சிரு என மனதினுளோ முணு முணுத்தேன்!)
என்
அதிஷ்டம்...இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும் என்று எத்தனை நாள் ஏங்கி
இருந்தேன் எனும் நினைப்போடு, தூக்கமும் மண்ணாங்கட்டியும்; என்று என்
மனதிற்குள் நானே பேசியபடி, விழித்திருந்து, என் பிரயாணப் பையினுள் இருந்த
ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.
புத்தகத்தைப் படிக்கிற மாதிரி நடிச்சுக் கொண்டு, சந்திலை சிந்து பாடிச் சீன் பார்க்கிறது தானே பசங்களோடை வேலை. (ஹே...ஹே... பழக்க தோசமுங்க)
டட்டட்ட....டட்ட...டட்ட.....டட்ட....எனச்
சத்தத்தமிட்டு, அசைந்த வாறு ரயில் பயணித்துக் கொண்டிருக்கிறது. சிறிது
தூரம் சென்ற பின் எனக்கு முன்னாடி இருந்த பெண்,
என்னைப் பார்த்து,
‘எக்ஸ்கியூஸ்மீ!
கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, ஒரு வேளை கடைக் கண்ணாலை நான் அவளைப் பார்க்கிறதைப் பார்த்திருப்பாளோ,
இன்னைக்கு நமக்கு ஏழரை தான் என்று யோசிக்க,
எக்ஸ்கியூஸ்மி, ஹலோ, ஆர்யூ தமிழ்?(Are you Tamil)
என் மூஞ்சியைப் பார்த்தா, உனக்குத் தெரியலை? என்று மனசிற்குள் கடுப்பாகி யோசித்து விட்டு,
யேஸ், ஐ ஆம் டமில்! என்று பதில் சொன்னேன்,
ஓ......ரியலீ...மீ டூ(Me to) நானும் தமிழ் தான் என்று 32 பல்லும் முன்னுக்கு வந்து விழுங்குவது போன்ற சிரிப்போடு ஒரு பதில் சொன்னாள் பாருங்கள், தானும் தமிழாம்...
சரி, இத்தோடு நிறுத்திக் கொள்வாள் என்று நெனைத்த நேரம் பார்த்து, அடுத்ததா ஒரு கேள்வியைக் கேட்டாள் பாருங்க,
‘நீங்க என்ன படிக்கிறீங்களா? இல்லே ஒர்க் பண்றீங்களா? ,
நான் என்ன படிச்சா உனக்கென்ன?, என்ன வேலை பார்த்தா உனக்கென்ன? ரயிலில் ஏறினமா, பயணம் செய்தமா, (ஒர்க் பண்ணலை என்றாலும் கொடுத்திடவா போறாள்) என்று இருக்கிறதை வுட்டிட்டு, சிபிஐ ஆப்பிசர் மாதிரித் துருவித் துருவிக் கேட்கிறாளே இவள்; என மனதினுள் நினைத்துக் கொண்டு,
’உங்கடை பார்வைக்கு என்ன மாதிரித் தெரிதுங்க?
பார்த்தா தெரியலை? நான் புக் படிக்கிறேன் எனப் பதில் சொன்னேன்.
அவளும் விடுவதாயில்லை. இன்னைக்குச் செத்தமடா சாமியோவ்!. என்று நினைத்து முடிக்க முன்னாடி, அடுத்த கேள்வியைக் கேட்டாள்,
என்ன புக்? நாவலா?
இல்லைச் சிறுகதையா?
கறுமம், கறுமம், நான் என்ன புக் படிச்சால் இவளுக்கென்ன, இதுக்கு மேல இவளைப் பேசச் சான்ஸ் குடுக்க கூடாது என்ற நினைப்பில்
இது நாவலும் இல்லை, சிறுகதையும் இல்லை. இப்போ புதிதா இன்ரநெட்டில உள்ள- ப்ளாக்கில் அறிமுகப்படுத்தியிருக்கிற புளி இலக்கியம்’ அதனைத் தான் படிக்கிறேன் என்றேன்.
ஓ....இன்ரஸ்ரிங்,(Oh interesting) , மை நேம் இஸ் ஊர்மிலா!, அப்போ உங்களோடை பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா?
ஆஹா...இது தாண்டா நிரூபா சான்ஸ்.. நீயா நெனைச்ச மேட்டரைப் பிகரே வழிக்கு கொண்டு வருது, என நினைத்தவாறு,
என்னோடை பெயர் வந்து, நான் பொறந்தப்போ என் அத்தை ஆசையாக வைத்த பெயர் நிரூபன். ஏன் என் பெயரே நிரூபன் தான், ஆனால்
இப்போ கொஞ்ச நாளா நம்ம கூட்டாளிப் பசங்க ஆசையா நிருபன் என்று மாத்திக் கூப்பிடுறாங்க என்று, எக்ஸ்ட்ராவா ஒரு பிட் கொடுத்தேன்.
ஓ....ரெண்டு நேம் உங்களுக்கு, யூ ஆர் சோ சுவீட்(you are so sweet) என்று சிரித்தாள்.
ஒரு சின்னச் சந்தேகம், உங்க பெயர் ஊர்மிலா வா? கொஞ்சம் புதுசா இருக்கே என்றேன்.
பிளடி
இடியற், (Bloody Idiot) நீங்க எந்தக் காலத்தில் இருக்கிறீங்க, ஆக்சுவலி மை
நேட்டிவ் நேம் இஸ் ஊர்மிளா, ஆனால் அது பாஷன் இல்லைப் பாருங்க. அதான்
ஊர்மிலா என்று நானே எனக்கு மாத்திக் கிட்டேன், நம்ம நண்பிகளுக்கும்
இப்படியே அழைக்கச் சொல்லி இப்போ ஊர்மிலாவே என்னோடை நேம் ஆகிடுச்சு. அதை
வுடுங்க.
பை த வே(By the way) நான் ஒன்னு தெரிஞ்சுக்கலாமா?
ஆர் யூ சிங்கிள்? (அடடா...நிரூபா! உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சு)
ஆஹா...ஓஹோ...ஆஹஹா....மாட்டிக்கிட்டுதடா; என்று நினைத்த போது, என்ன யோசிக்கிறீங்க, பதிலைச் சொல்லக் காணோம்?
நான் சிங்கிள் தான், (நிரூபா! பிடிச்சாலும் பிடிச்சாய்! புளியங் கொப்பையெல்லே புடிச்சிருக்கே! விட்டிராத சுனா பானா! மெயிண்டேன் பண்ணிக்கோ)
ஓ, அப்போ நீங்களும் கலியாணம் பண்ணிக்கலை,
நானும் கலியாணம் பண்ணிக்கலை, என்று இரண்டு பேரும் கலியாணம் பண்ணிக்கிட்டா எப்படி இருக்கும்? (இது தான் கண்டவுடன் காதலோ - கடைசி நிமிடத்தில் கலியாணமோ?)
ஆஹா...இவள் என்கிட்ட வலிய வந்தல்லவா கேட்கிறாள், ஒரு வேளை லூசா இருப்பாளோ, எனக்குள் நானே யோசித்தேன், (அடப் போடா நிரூ! ஓஸில ஒரு வாய்ப்பு வருதில்லே! அப்படியே அமுக்கிடு மச்சி)
இப்பத் தானே பார்த்தோம், அதுக்குள்ளே முடிவைச் சொல்லுவதா, கொஞ்சம் யோசிச்சுச் சொல்லுறேனே என்று பதிலுரைத்தேன்.
அவளோ விடுவதாயில்லை, இப்ப
நீங்க என்னைக் கட்டுறீங்களா? இல்லை ரயிலை நிறுத்தி, இவர் என்னை ரேப் பண்ண
ட்ரை பண்ணிட்டார் என்று ஒரு கேஸைப் போட்டு, வாழ்க்கை பூரா வெளியே வராத படி
பண்ணட்டுமா? (ஆகா..ரூட்டு வேற மாதிரியில்லே போய்க்கிட்டிருக்கு)
என்னா
நினைச்சுக் கிட்டிருக்காய், உன் மனசிலை. ஒரு இளம் பெண் தனியா ரயில்ல
வந்தா, ரேப் பண்ணுற மாதிரிப் பார்க்கிறாய், இருடா ராஸ்கல், உனக்கு
இன்னைக்குப் பாடம் கற்பிக்கிறேன், என்று சொல்லியவாறு, அவள் ரயிலை நிறுத்தும் நோக்கில் பெல்லினை அடிக்கப் போக,
சீட்டில் இருந்த நானோ ஓடிப் போய் மூனு சீட்டுத் தள்ளியிருந்த அவள் மேல் பாய்ந்து விழ ஐயோ ராமா! இந்த கொசுத் தொல்லை தாங்க முடியல்லையே எனச் சொல்ல யாருமே இல்லாம போயிட்டுதுங்க!
என்
மானத்தைக் கப்பலேற்றிடாதே, உனக்குப் புண்ணியம் கிடைக்கும், ரயிலை நிறுத்தி
ஊரைக் கூப்பிட்டு மானத்தை வாங்கிடாதே, என்று கெஞ்சி, அவளைக் கட்டிப்
பிடிச்சு- கட்டுறன், விடடி,
ஊர்மிளா உன்னைக் கட்டுறன் விடடி,
உன்னையைக் கட்டுறன் விடடி! என்று சொல்ல,
கனவிலை
இதெல்லாம் நடந்திட்டிருக்கு என்பது தெரியாமல், சுய நினைவின்றி நான்
கட்டிப் பிடித்துக் கொண்டு விழித்துப் பார்க்கிறேன், அது பக்கத்துச்
சீட்டில் இருந்த ஒரு குண்டுப் பூசணிக்காய் கிழவி.
அந்த நேரமே ஒரு பொலிடோலைக் குடிச்சுச் செத்திடலாம் போல இருந்திச்சு.
கிழவி ரயிலை நிறுத்த, போலிசும் ஓடி வர, என் நிலமையைச் சொல்லவா வேணும்.
டேய் பன்னாடை பரதேசி, உனக்கெப்படியடா என் பேரு ஊர்மிளா என்று தெரிஞ்சிச்சு?- இது கிழவி
நானும்
உன்னைய நல்லா நோட் பண்ணிக் கொண்டு தான் இருந்தேன். நான் ஏறின நேரம்
தொடக்கம் நீ என் பேரைச் சொல்லிச் சொல்லி தூங்கிற மாதிரி அக்ட் (Act)
பண்ணிக் கொண்டு லவ்சு விட்டிருக்கிறாய் படவா.
உனக்கு எப்பூடி என் பேரு தெரியும்? சொல்லடா நாதாரி என்று கிழவி ஒரு கேள்வி கேட்டிச்சுப் பாருங்க.
அப்பவே, ரயில் ஓடத் தொடங்க, நான் குதிச்சு செத்திடலாம் போல இருந்திச்சு.
என்னதூ, சாகப் போற ஒனக்கு ஊர்மிளாவா, ஏய் கிழவி என்ன பொய் தானே சொல்லுறா.
போடா....ஆமணக்கு
வாயா, ஊத்தேஸ்வரி என்ற என் பெயரை, இந்தக் காலத்திற்கேற்ற மாதிரிச் சேஞ்ச்
பண்ணி, என் ஆத்துக்காரர் தான் ஊர்மிளா என்று வைச்சிருக்கிறார் தெரியுமா?
போலீஸ்
என்னையைப் பார்த்து, டோய், சொல்லுறமில்ல. அப்புறம் என்ன பேச்சு வேண்டிக்
கிடக்கு. வாடா வந்து ஜீப்பிலை ஏறடா என்று சொல்லிச்சுப் பாருங்க. எனக்கு
இதுவும் வேணும், இன்னமும் வேணும்!
இப்ப சொல்லுங்க, யாருக்காச்சும் ரயிலில் கனவு வர வேண்டும் என்று நினைக்கிறீங்களா? பார்த்துங்க! ஊர்மிலா வந்திடப் போறாங்க!
ஆளை விடுங்க சாமிங்களா!
டிஸ்கி: இக்
கதையில் வரும் ரயில் பயணச் சம்பவத்தை, அந்தக் காலத்தில்(இற்றைக்குப் பல
வருடங்களுக்கு முன்பதாக) யாழ்ப்பாணத்தில் பிரபலமாகவிருந்த லூஸ் மாஸ்டரின்
தனி நடிப்பு கசற்றில் இருந்து சுட்டு, என்னோடை வசனங்களைக் கோர்த்து
எழுதியிருக்கிறேன்.
|
9 Comments:
வணக்கம் நிரூபன்!(நிருபன்?????)சுட்டாலும்(கசெட்)சங்கு(பதிவு)வெண்மை தரும் என்பது போல் நல்லாயிருந்திச்சு!உண்மையிலேயே அப்படி நடந்திருக்கக் கூடாதா என்றும் ஒரு ஆதங்கம்!(தப்பிச்சுட்டானே/ரே?)
பதிவின் ஆரம்பத்தில் இருக்கும் படம் வித்தியாசமாக இருக்கிறது..\
எப்படியோ நிரூபனுக்கு கடைசியில் கிழவி தான்னு எழுதி வச்சிருக்கு. வாழ்த்துக்கள் நண்பா.
நிரூபன் ஆச்சியை கட்டிப்பிடித்த காட்சியை கற்பனை பண்ணிப் பார்த்தேன். சிரிச்சதில வயிறு வலிக்கிறது.
தேடிப்பிடிச்சு நல்ல அம்சமான விசயத்தைத்தான் சுட்டுக்கொண்டுவந்திருக்கிறியள்.
அண்ணே அந்த குண்டு கிழவி அம்சமா இருக்காங்கள்ளா?
நம்ம சைட்டுக்கும் ஒரு விசிட் அடிங்க
கருத்துரை வழங்கிய அத்தனை பேருக்கும் நன்றி!
கண்டிப்பா உங்க சைட்டுக்கு வாறேன் சதீஷ்.!
கொஞ்சம் பிசியாகிட்டேன்!
வந்துடுறேன்!
சீக்கிரம் டும் டும் டும் டும் ஆகட்டும்...சீன் பார்கிறேன்னு சீன பெருஞ்சுவர் பார்த்த ரேஞ்சுக்கு...
கனவுனால சும்மா விடறேன்...
பொழச்சு போங்க...
Post a Comment