Wednesday, January 4, 2012

ஒரு குட்டிப் பதிவரின் எழுத்துலக சுட்டித் தனம் பற்றிய அலசல்!

அன்பிற்குரிய சொந்தங்களே, இணையத்தில் எழுதி வரும் பல்லாயிரக் கணக்கான படைப்பாளிகளுக்கு காலச் சக்கரச் சுழற்சியின் பயனாக விரிவான விமர்சனங்கள் கிடைப்பதில்லை.இணையத்தில் கருத்துரைப் பெட்டியினூடாக பின்னூட்டங்களைப் பகிர்ந்து கொள்வோரில் அதிகளவானோர் எல்லோரின் பதிவுகளையும் படிக்க வேண்டும் எனும் காரணத்தினாலும், ஓடி ஓடிப் பின்னூட்டங்களை எழுதி விட்டுச் செல்ல வேண்டும் என நினைப்பதாலும் பல படைப்பாளிகளின் படைப்புக்களைப் பற்றிய எண்ணக் கருத்துக்களை யாராலுமே வெளிப்படுத்த முடிவதில்லை. அந்தக் குறைகளையெல்லாம் எண்ணிய "அம்பலத்தார் பக்கங்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் திரு.பொன்னர் அம்பலத்தார்" அவர்கள் வித்தியாசமான முயற்சியாக வாரம் ஒரு படைப்பாளியின் படைப்புக்களை அலசுகின்ற பணியினைக் கையிலெடுத்திருக்கிறார்.அவரது இம் முயற்சியினை வரவேற்று உங்கள் நாற்று வலையில் அம்பலத்தார் ஐயாவின் பதிவினை இங்கே தவழ விடுகின்றேன்.
சிறகுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் ரவீந்திரன் மதுரன் அவர்கள் இன்றைய இளையதலைமுறை பதிவர்களில் வித்தியாசமானவராக தெரிகிறார். மச்சி, அண்ணா, ஐயா.... என அழைத்து உறவாடி சகபதிவர்களுடன் ஈகோ ஏதுமற்று சுமூகமான உறவையும் நட்பையும் பேணிவருகிறார். சமூக அக்கறையுடைய இளைஞனாக, சமுதாயச் சீர்கேடுகளை எதிர்க்க முற்படும் இளைஞனாக மதுரன் ஓரளவிற்கு பக்குவமாக எழுதமுற்படுகிறார்.  தனது மனதிற்குச் சரியெனப்பட்டதை துணிந்து சொல்லும் அவர் நிதானமாகவும் அடுத்தவர் மனங்களை நோகடிக்காமலும் தனது கருத்துக்களை முன்வைப்பது பாராட்டத்தக்கது. தாயகம், வாழ்வியல், சமுதாயம், சினிமா என பலதுறைகளிலும் எழுதுகிறார். கில்மாக் கதைகளை எழுதுவதையும், அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும்  இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே இலகுவாக பிரபல்யம் அடைவதற்குரிய குறுக்குவழியாக சில  பதிவர்கள் கடைபிடிக்கும்போது   தனது திறமையை நம்பி மதுரன் எழுதுவதுகிறார். வாழ்த்தி வரவேற்கப்படவேண்டிய விடயம்.

ழிதேடும் சுவடுகள்அவர் அண்மையில் எழுதிய வழிதேடும் சுவடுகள் எனும் குறுந்தொடர் படித்தேன். ஒரு ஆரம்ப எழுத்தாளனது எழுத்தாக அது நல்லமுறையில் வந்துள்ளது எனலாம். ஒரு அனுபவப்பதிவாக நிறைவை தந்தாலும் ஒரு கதை என்ற ரீதியில் படிக்கும்போது ஓரளவு சுவாரசியமாகப் போனாலும் சில இடங்களில் ஒரு ஆவணப் படத்தை பார்ப்பது அல்லது ஒரு ஆவணத்தை படிப்பது போன்ற மனநிலையை உண்டுபண்ணுவதை தவிர்த்திருக்கலாம். பாலன் அண்ணா,கதிரேசன் அண்ணா, ஆச்சி என கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எமது அயல்வீட்டில், சொந்தத்தில் ஊரவர்களில் நாம் சந்தித்த நம்மவர்களின் குண இயல்புகளுடன் யதார்த்தமாக படைக்கப்பட்டு கதையுடன் வாசகனை ஒன்றிப் போக வைக்கிறது.
                           
கதையில் வரும் உரையாடல்கள் ஈழத்தமிழனாக எனக்கு எம் மண் வாசனையுடன், தாயகத்தில் வீட்டு முற்றத்தில் நிற்கும் போது கேட்கும் ஏதோ ஒரு  சம்பாசனையாக இனிய உணர்வைத் தந்தது. இது வாசகனிற்கு கதையுடன் ஒருமித்து பயணிக்கும் மனநிலையையும் ஈர்ப்பையும் தந்ததில் வியப்பில்லை. ஆனால் தமிழக வாசகர்களிற்கு இது (இந்த) கதையை பூரணமாக புரிந்துணர தடையாக இருந்திருக்கலாம். ஒரு தொடரை எழுதும் போது எங்கே தொடரை நிறுத்தி, தொடரும் போட வேண்டும் என்பது முக்கியமானது. தொடரின் ஒவ்வொரு பகுதியும் சாதாரணமாக ஆரம்பித்து வாசகனை பூரணமக ஆக்கிரமிக்கும் உச்ச நிலையை அடையும் போது தொடரும் போடுவதே நல்லது. ஒரு மினி கிளைமாக்ஸ்சுடன் வாசகரை அடுத்த பாகத்தை படிக்கும் ஆவலை தூண்டும் வண்ணம் நிறுத்தும் இந்த உத்தியை ஒருசில இடங்களில் மட்டுமே காணமுடிகிறது. 
சட்டென பார்த்தவுடன் பதிவின்மேல் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவது படங்கள்தான். இந்தக் கதைக்கான படங்கள் பெரும்பாலும் தூரப் பார்வையில் எடுக்கப்பட்டன ஆகவும் கதையை படிக்க தூண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தாமலும் இருக்கிறது. இவ்வாறான சிறு சிறு குறைகளைக் கவனத்தில் எடுத்து எழுதினால் படைப்புலகில் மதுரனிற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. 

வேலாயுதமும் தோலுரியும் பதிவர்களும்!

மதுரனின் என்னைக் கவர்ந்த பொழுதுபோக்கு சினிமா பதிவுகளில் ஒன்றாக "வேலாயுதமும் தோலுரியும் பதிவர்களும்" எனும் பதிவினைக் குறிப்பிடலாம். மிகவும் சுவாரசியமாகவும் அதே நேரத்தில் உண்மைக்கு மிக அண்மையில் நின்று உள்ளதை உள்ளபடி போட்டு உடைத்திருக்கிறார். 
Keep it up Mathu. இது உங்களது அதிகூடிய கிளிக்குகள் வாங்கிய பதிவாகவும் இருக்கலாம். வெறும் கட் அன்ட் பேஸ்ட் பதிவுகளின் (காப்பி பேஸ்ட்) குப்பைக் கூடமாக பதிவுலகம் மாறிவரும் இன்றைய காலத்தில் சினிமா சம்பந்தமான பதிவுகளில்கூட அக்கறையெடுத்து தனது சொந்த சரக்கில் எழுதுவது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். வலையில் கண்ட குப்பைகளையும் வெட்டிக்கொட்டி குவிக்கும் பதிவர்களில் யாராவது இதை படித்தால் மதுரன் மோன்றவர்களை பார்த்து தயவு செய்து கொஞ்சம் திருந்துங்கப்பா!கொலை வெறியோட வலைப்பூக்களை குப்பைகளால் நிறைத்து  வாசகர்களிற்கு வலைப்பூக்களின் மேல் இருக்கும் ஈர்ப்பை கொலை பண்ணாதிங்கப்பா உங்களைக் கும்பிட்டுக் கேட்டுக்கிறேன்!!


அவரது மற்றுமொரு என்னைக் கவர்ந்த சினிமாப் பதிவு என்று குறிப்பிடலாம். "அஜித் என்ன அவ்வளோ பெரிய ஆளா?"




அண்மையில் அவர் எழுதிய "முல்லைப் பெரியாறும் இலங்கை ஊடகங்களும் இளைய தளபதியும்" எனும் பதிவு சமுதாய அக்கறையும் பதிவராக தனக்கு உள்ள தார்மீக கடமையையும் சரிவர புரிந்து எழுதப்பட்ட பதிவாகும். இங்கு தமிழக மக்களுக்காக ஈழத்தமிழர் குரல் கொடுக்க வேண்டுமென கூறியிருந்தாலும் எந்த வகையான ஆக்க பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் எனக் கூறாது விட்டிருப்பது சற்று நெருடலைத் தருகிறது. ஆயினும் தான் ஒரு விஜய் ரசிகராக இருந்தபோதும் விஜயின் மற்றொரு முகத்தை  பதிவிட்டிருப்பது மதுவின் பக்குவப்பட்ட மனநிலையை எடுத்துக்காட்டுகிறது.

மேற்படி பதிவுகளை எழுதிய மதுரனின் சிந்தனையிலா? "பெண்கள் காதலிப்பது உண்மையாகவா?"எனும் பதிவு உதித்தது என்று நம்பமுடியவில்லை."பெண்கள் காதலிப்பது உண்மையாகவா?இங்கு  அவர் ஒரு ஆணாக ஆணாதிக்க மனநிலையிலேயே தனது பெரும்பாலான கருத்துக்களை முன் வைத்திருக்கிறார். அவரிடமிருந்து இவ்வாறான கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இன்னமும் பெண்கள் தாம் சரியென நினைப்பதை நடைமுறைப்படுத்த முடியாத ஆணாதிக்கத்தின் நேரடியான மறைமுகமான அழுத்தங்களை எதிர்கொண்ட வண்ணமே நம் தமிழ் பெண்கள் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்களால் சரியான முடிவுகளை எடுக்கமுடியாமை. அதனை ஏனோ உணர்ந்துகொள்ள தவறிவிட்டார்.
வலைப்பூக்கள் ஆனந்தவிகடன் குமுதம் etc.... போல பல்சுவை கதம்பமாக இருந்தல்தான் அதிக வாசகர்களைக் கவர முடியும். கணையாழி, கலைமக்கள், மல்லிகை போன்று இருந்தால் அதிக மக்களை சென்றடையாது. அதிக வாசகர்களையும் சென்றடைய வேண்டும் அதே நேரத்தில் நல்ல கருத்துக்களையும் சொல்லவேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயமாக மதுரனின் பாணியை பின்பற்றலாம். இவரது படைப்புக்களும் வலைப்பூவும் ஓர் இளைஞனின் வெற்றிக்கான சரியான காம்பினேசன். ஒரு படைப்பாளியை ஒரு பதிவரை நமக்குப் பிடித்தவராக வரிந்துக் கொள்ள அவரின் எல்லாப் படைப்புக்களையும் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது.ஒரு சில ஆக்கங்கள் போதுமானது. சிறகுகளில் அதில் ஒன்று இதில் ஒன்றாக படித்துப் பாருங்கள்!!மதுரனையும்  சிறகுகள் வலைப்பூவையும் உங்களுக்கும் பிடித்துப்போகலாம்.

மீண்டும் மற்றுமோர் இணையப் படைப்பாளியின் விமர்சனத்தின் ஊடாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை,
உங்களிளிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது;
 நேசமுடன் 
அம்பலத்தார்.
*************************************************************************************************************
மயிலறகால் உங்களை மென்மையாக வருடுவது போன்று தன் மென்மையான எழுத்துக்களோடு உங்களை வருடும் நோக்கில், உங்கள் வாசிப்புத் திறனை தன் எழுத்துத் தோகை கொண்டு சாந்தப்படுத்தும் நோக்கில் தன் படைப்புக்களை "மயிலிறகு எனும் தளத்தில் பகிர்ந்து வருகிறார் மயிலன்" அவர்கள். 
மயிலன் அவர்களின் தளத்திற்கு நீங்களும் சென்று அவரது படைப்புக்களைப் படித்து மகிழ:
*************************************************************************************************************

47 Comments:

Yaathoramani.blogspot.com said...
Best Blogger Tips

நல்ல அறிமுகம்
நானும் அவரது பதிவுகளின் ரசிகன்
ஆயினும் த்ங்களைப் போல இத்தனை அழகாக
அறிமுகம் செய்து பதிவு தர நிச்சயம் முடியாது
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

அம்பலத்தார் ஜயாவின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள்

அப்பறம் மதுரனின் எழுத்துக்களை பற்றி சொல்லவா வேணும் சுருக்கமாக சொன்னால் ஒரு தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்.

மதுரன் எழுதிய இன்னும் ஒரு பதிவு இருக்கு எனக்கு அந்த பதிவின் தலைப்பு ஞாபகம் இல்லை அதாவது ஆண் பெண் நட்புடன் பழகுவதை சமூகம் காதலாக பார்பதால் உண்மையான ஒரு நட்பின் வலிகளை சுமந்த ஒரு பதிவை எழுதியிருந்தார்.அந்த பதிவு எனக்கு அவரது பதிவுகளில் மிகவும் பிடித்த ஒன்று.

மதுரன் இன்னும் பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்

மகேந்திரன் said...
Best Blogger Tips

அன்புநிறை அம்பலத்தாரே. ,
நண்பர் மதுரனின் சில பதிவுகளை படித்திருக்கிறேன்.
ஆழ்ந்து எழுதக்கூடியவர். நாற்று வலையில் அவரின்
அறிமுகம் இன்னும் அழகு கூட்டுகிறது.

வாழ்த்துக்கள் நண்பர் மதுரன்.

வாழ்த்துக்கள் நண்பர் மயிலன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Ramani

ஆயினும் த்ங்களைப் போல இத்தனை அழகாக
அறிமுகம் செய்து பதிவு தர நிச்சயம் முடியாது
//

மன்னிக்க வேண்டும் ரமணி ஐயா,
இது அம்பலத்தார் ஐயா மதுரனின் பதிவுகளை விமர்சித்து எழுதி அனுப்பிய பதிவு. என்னுடைய பதிவு அல்ல.

ஆகுலன் said...
Best Blogger Tips

இந்த முயற்சியை வரவேற்கிறேன்..

ஐயா மதுரன் அண்ணாவை பற்றி அருமையா சொல்லி இருகுறார்...

வாழ்த்துக்கள் மதுரன் அண்ணா..

rajamelaiyur said...
Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி .. நண்பா

rajamelaiyur said...
Best Blogger Tips

அருமையான முயற்சி .. பல பதிவைர்களை பற்றி தெரிந்து கொள்ள பயன் படும்

Unknown said...
Best Blogger Tips

நல்லா விமர்சனம் பண்ணி இருக்கீங்க அம்பலத்தார்!...அதை தன் பிளோக்கில் பகிர்ந்த நிரூவுக்கும் நன்றி!

இந்திரா said...
Best Blogger Tips

விமர்சனமும் அறிமுகமும் அருமை..
நல்லதொரு பகிர்வு நண்பரே..

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips
This comment has been removed by the author.
Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!அம்பலத்தார் சரியான கணிப்புடன் மதுரனை விமர்சித்தது என்னைப் புளகாங்கிதமடையச்(அளவு கடந்த மகிழ்ச்சி) செய்தது!அவருக்கும்,அந்தப் பயலை(Hi!Hi!Hi!)கணிப்பீடு செய்து எழுதிய அம்பலத்தார் அவர்களுக்கும் நன்றி!

பி.அமல்ராஜ் said...
Best Blogger Tips

அம்பலத்தாரின் இந்த புதிய அருமையான முயற்சி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் எழுத்தாணி பிடிப்பவனிற்கு மிகவும் முக்கியம். மதுரனின் அருமையான வலைப்பூவையும் பதிவுகளையும் தொடர்பவர்களில் நானும் ஒருத்தன். உங்கள் எழுத்துப் பணி தொடர எனது வாழ்த்துக்களும் மதுரன்.

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் அம்பலத்தார்..!
மதுரனின் பதிவுகள் அனைத்தையும் படிச்சிருக்கிறேன்.. 
அவர் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் சிறப்பானது. 

கருத்து முரண்பட்டாலும் அதை அந்த பதிவுக்கானது என ஏற்றுக்கொள்ளும்  பாங்கும் போற்றத்தக்கது...!! 

வாழ்த்துக்கள் மதுரன்..!

நிவாஸ் said...
Best Blogger Tips

நன்று

காட்டான் said...
Best Blogger Tips

அருமையான விமர்சனத்தை வைத்த அம்பலத்தாருக்கும் அதை தன் பதிவில் இட்ட நிரூபனுக்கும் வாழ்த்துக்கள்..!!

சி.பி.செந்தில்குமார் said...
Best Blogger Tips

நியூ இயரில் நல்ல பதிவு.. அழகிய அலசல்

சசிகுமார் said...
Best Blogger Tips

மச்சி திறமையானவருக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்... வாழ்த்துக்கள் மதுரன் சார்....

Admin said...
Best Blogger Tips

நல்ல அறிமுகம் நானும் இவரின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவன். முகப்புத்தகத்திலும் சரி வலைப்பதிவிலும்சரி பலரை அறிமுகம் செய்து வரும் உங்களின் மனநிலைபோல் எல்லோருக்கும் இன்னொருவரை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை. உங்களுக்கு எனது நன்றிகள்.

K said...
Best Blogger Tips

மச்சி நிரூ! நாற்று ப்ளாக்கின் ஓனர் நீதானே! ஓகே! உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்! மழுப்பாமல், சுத்திவளைக்காமல், சடையாமல் பதில் சொல்லு மச்சி!

” கில்மாக் கதைகளை எழுதுவதையும், அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும் இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே இலகுவாக பிரபல்யம் அடைவதற்குரிய குறுக்குவழியாக பெரும்பான்மையான பதிவர்களும் கடைபிடிக்கும்போது ....”

இவ் வரிகள் யாரைக் குறிக்கும் மச்சி? பதிவுலகில் பெரும்பானமையான பதிவர்கள் இப்படியா எழுதி பிரபலம் ஆகிறார்கள்? அல்லது இப்படி எழுதிப் பிரபலம் ஆன பதிவர்களின் லிஸ்டினை இங்கே பகிரங்கமாக வெளியிட முடியுமா? மேலும், ஒரு சில பதிவர்களைக் குற்றம் சுமத்துவதற்காக, இப்படிப் பொதுப்படையாக எழுதப்பட்டுள்ளதா?

எனக்குத் தெரிந்து பெரும்பான்மையான பதிவர்கள் தங்கள் கடும் உழைப்பினாலும், அயராத முயற்சியினாலுமே முன்னேறியுள்ளார்கள்! அப்படியிருக்க, உனது தளத்தில், பெரும்பானமையான பதிவர்கள் குறுக்குவழியில் தான் முன்னேறுகின்றனர் என்ற வாக்கியம் வந்திருப்பது, உனக்கும் ஏனைய பதிவர்களுக்குமிடையே விரிசலை உண்டு பண்ணும் ஒரு காரணியாக இருக்கும்!

குண்டு வைப்பவனை விட, குண்டு வைப்பவனுக்கு சோறு கொடுத்து அடைக்கலம் கொடுப்பவனே ஆபத்தானவன்!

மேலும், மதுரனை நான் இங்கே வாழ்த்தவேண்டிய அவசியம் இல்லை! மதுவுக்கு எனது வாழ்த்துக்களும், அக்கறையும் எப்போதும் இருக்கும்!

மச்சி, மேற்படி எனது கேள்விகளுக்கு சடையாமல் பதில் சொல்லு! இதனைச் சிவப்பு நிறத்தில் வர்ணம்தீட்டியது நீதானே!

மச்சி, இந்தக் கருத்துக்கு கண்டிப்பாக எதிர்வினை உண்டு! அதுவும் மஹா மட்டமான வார்த்தைகள் கொண்டுதான் எழுதுவேன்!

பிறகு காட்டான் அண்ணர் என்னிடம் வந்து “ வயசுக்கு மரியாதை கொடு” என்று சொல்லக் கூடாது! அட்வான்ஸா சொல்லிட்டேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

” கில்மாக் கதைகளை எழுதுவதையும், அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும் இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே இலகுவாக பிரபல்யம் அடைவதற்குரிய குறுக்குவழியாக பெரும்பான்மையான பதிவர்களும் கடைபிடிக்கும்போது ....”
//

மச்சி....உனக்கு தெரியும் என்னைப் பற்றி. ஏன்னா நானும் முன்னாடி கில்மா பயங்கரமா எழுதிய நான். இப்போது கொஞ்சம் குறைத்து விட்டேன்,. ஆனாலும் எழுதுகின்றேன்.

கில்மாக் கதை எழுதி நானும் பிரபலாகினேன் என்று பலர் விமர்சனங்களை முன் வைத்தது உனக்கு நினைவிருக்கலாம். நான் பிரபலமாகல்லை. அது வேறு பிரச்சினை. அப்படிச் சொல்லிய சிலரைக் குத்தும் நோக்கில் தான் மேற்படி வரிகளைச் சிகப்பு மை கொண்டு பிரித்துக் காட்டினேன்.

K said...
Best Blogger Tips

நிரூ, நான் பகிரங்கமாகக் கேட்கிறேன்! சாட்டிங்கில் வந்து சொல்வதை நிறுத்திவிட்டு, இங்கு வந்து பதில் சொல்லு!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

எனக்குத் தெரிந்து பெரும்பான்மையான பதிவர்கள் தங்கள் கடும் உழைப்பினாலும், அயராத முயற்சியினாலுமே முன்னேறியுள்ளார்கள்! அப்படியிருக்க, உனது தளத்தில், பெரும்பானமையான பதிவர்கள் குறுக்குவழியில் தான் முன்னேறுகின்றனர் என்ற வாக்கியம் வந்திருப்பது, உனக்கும் ஏனைய பதிவர்களுக்குமிடையே விரிசலை உண்டு பண்ணும் ஒரு காரணியாக இருக்கும்!
//

நண்பா..பெரும்பான்மையான வாக்கியம் இங்கே இடம் பெற்றிருப்பது தவறு நண்பா.
நான் அவ் வரிகளைப் பற்றிக் கவனமெடுக்காது பிரசுரித்து விட்டேன்.
இப்போதே அவ் வரிகளை மாற்றுகின்றேன்,

மேற்படி வரிகளைப் பிரசுரித்த குற்றத்திற்காக தவறினைச் சுட்டிக் காட்டிய உன்னிடமும், ஏனைய நண்பர்களிடமும் மன்னிப்புக் கேட்கின்றேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி
நிரூ, நான் பகிரங்கமாகக் கேட்கிறேன்! சாட்டிங்கில் வந்து சொல்வதை நிறுத்திவிட்டு, இங்கு வந்து பதில் சொல்லு!//

யோ...நான் உனக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்பதனை அறிவிக்கும் நோக்கில் தான் அந்த பதில்களைச் சாட்டிங்கில் போட்டேன்.

K said...
Best Blogger Tips

மச்சி....உனக்கு தெரியும் என்னைப் பற்றி. ஏன்னா நானும் முன்னாடி கில்மா பயங்கரமா எழுதிய நான். இப்போது கொஞ்சம் குறைத்து விட்டேன்,. ஆனாலும் எழுதுகின்றேன்.

கில்மாக் கதை எழுதி நானும் பிரபலாகினேன் என்று பலர் விமர்சனங்களை முன் வைத்தது உனக்கு நினைவிருக்கலாம். நான் பிரபலமாகல்லை. அது வேறு பிரச்சினை. அப்படிச் சொல்லிய சிலரைக் குத்தும் நோக்கில் தான் மேற்படி வரிகளைச் சிகப்பு மை கொண்டு பிரித்துக் காட்டினேன்.://////

மச்சி, எனக்கு எப்பவோ, காது குத்தியாகிவிட்டது! உன்னுடைய பழைய பிரச்சனை ஒன்றை, இங்கே நண்பன் மதுவை வாழ்த்தி எழுத வேண்டிய பதிவில் சொருக வேண்டிய அவசியம் என்ன? அப்ப்டியானால் மேற்படி வரிகளில் சுட்டப் படும் கில்மா வழியில் முன்னுக்கு வந்த பதிவர் நீதானா?

யாரையோ காப்பாற்ற எதுக்கு நீ உன் தலையில் பழியைப் போடுகிறாய்? மேலும் தன்னுடைய பதிவு ஒன்றை உன்னுடைய தளத்தில் வெளியிட விரும்பும் ஒருவர், உன்னைத் தாக்கி நாலு வரிகள் எழுதி, அதையும் சேர்த்தா, உன்னிடம் ஒப்படைப்பார்?

மச்சி, நான் முன்பே சொன்னேன், சடையாமல், பூசி மெழுகாமல் பதில் சொல்லும்படி!

மச்சி, நீ கில்மா எழுதி முன்னுக்கு வந்தவன் என்று குற்றம் சாட்டுபவர்களைக் கண்டிப்பதற்காகவே அவ்வரிகள் வந்தன என்று ஒரு சின்னப் புள்ளைக்குச் சொன்னால் கூட அது நம்புமா?

உன்னைக் குற்றம் சுமத்தியவர்களைக் கண்டிக்க இதுதான் தருணமா? அப்படியானால் நீங்கள் மதுரனை வைத்து கபடி ஆடுகிறீர்களா?

புரியவில்லை எனக்கு!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

மச்சி, எனக்கு எப்பவோ, காது குத்தியாகிவிட்டது! உன்னுடைய பழைய பிரச்சனை ஒன்றை, இங்கே நண்பன் மதுவை வாழ்த்தி எழுத வேண்டிய பதிவில் சொருக வேண்டிய அவசியம் என்ன? அப்ப்டியானால் மேற்படி வரிகளில் சுட்டப் படும் கில்மா வழியில் முன்னுக்கு வந்த பதிவர் நீதானா?

யாரையோ காப்பாற்ற எதுக்கு நீ உன் தலையில் பழியைப் போடுகிறாய்? மேலும் தன்னுடைய பதிவு ஒன்றை உன்னுடைய தளத்தில் வெளியிட விரும்பும் ஒருவர், உன்னைத் தாக்கி நாலு வரிகள் எழுதி, அதையும் சேர்த்தா, உன்னிடம் ஒப்படைப்பார்?
//

மச்சி,

உனக்கு காது குத்தியது இருக்கட்டும்.

கில்மா உன் தளத்தில் உன்னை விமர்சிக்கும் உரிமை இருந்தால் அதனை நீ மறுப்பாய் போல இருக்கிறதே? ஹே..ஹே..

ஏன்னா என் தளத்தில் என்னைக் குத்தி வரும் கருத்துக்களைப் பிரசுரிக்க கூடாது என்று ஏதும் நியதி இருக்கிறதா?

பலரது படைப்புக்களையும் ஒப்பிட்டுத் தான் அம்பலத்தார் ஐயா அவர்கள் மேற்படி விமர்ச்சனத்தினைத் தந்திருந்தார்.

தவறுகளைத் திருத்திப் பதிவும் போது, குறிப்பிட்ட வரி தொடர்பில் கவனம் செலுத்தாதது என் தவறு!

அதற்காக நான் மன்னிப்பும் கேட்டு, அவ் வரிகளுக்கான விளக்த்தினையும் சொல்லி விட்டேன்.

மதுரனை வைத்து கபடி ஆட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை!

எனக்கு என்ன எழுத வேண்டுமோ என் வழியில் எழுதுவதற்கு நான் பின் நிற்க மாட்டேன்.

இது பதிவினைத் திருத்தும் போது நான் தவற விட்ட பிழை நண்பா. ஆகவே தற்போது உணர்ந்து அதனைச் சீர் செய்திருக்கிறேன்.
அம்பலத்தார் ஐயா தான் இவ் வரிகள் தொடர்பில் உனக்கு மேலதிக விளக்கம் கொடுக்க வேண்டும்.

K said...
Best Blogger Tips

அந்த வரிகளைத் திருத்தியமைக்கு மிக்க நன்றி நிரூ! ஆனால், நீ சொல்லும் சப்பைக் கட்டு இருக்கிறதே மஹா மட்டம்! எமக்கெல்லாம் அறிவே கிடையாது என்ற நினைப்பில் தான் நீ எழுதிக்கொண்டு இருக்கிறாய்!

மற்றது, இந்த வரிகள் குறித்து நான் அம்பலத்தாரிடம் விளக்கம் கேட்கப் போவதில்லை! அதற்கு வேறு காரணம் இருக்கிறது!

” ” கில்மாக் கதைகளை எழுதுவதையும், அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும் இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே இலகுவாக பிரபல்யம் அடைவதற்குரிய குறுக்குவழியாக பெரும்பான்மையான பதிவர்களும் கடைபிடிக்கும்போது ....”
இந்த வரிகளைப் படிக்கும் ஒருவர் மனதுக்குள் என்ன நினைப்பார் என்பதை என்னால் நன்றாக அனுமானிக்க முடியும்! இவ்வரிகளில் யார் சுட்டப்படுகிறார் என்பதையும் நான் நன்கு அறிவேன்! இதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளத்தெரியாமல் நீ தடுமாறிச் சடைவதையும் அனைவரும் வேடிக்கை பார்க்கின்றனர்!

இவ்வரிகளில் சுட்டப்படும் பதிவர் ஒருவராகவோ, சிலராகவோ இருக்கலாம்! அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில், அவர்கள் நண்பர்களாக இருப்பின் நேரடியாகச் சென்று சுட்டிக்காட்டுவதே நல்லது!

நீ நண்பன் நண்பன் என்று பழகிவிட்டு, இப்படியான வேலைகள் செய்தால், நட்பு கண்டிப்பாகக் கேள்விக்குறியாகும் ஆபத்து உள்ளது!

வரிகளை நீக்கிவிட்டாய் தான்! ஆனால் அதற்குச் சொன்ன சாட்டு இருக்கிறதே! - நிரூ நான் இன்னமும் நம்புகிறேன் நீ ஒரு அறிவாளி என்று!

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//வலைப்பூக்கள் ஆனந்தவிகடன் குமுதம் எட்c.... போல பல்சுவை கதம்பமாக இருந்தல்தான் அதிக வாசகர்களைக் கவர முடியும். கணையாழி, கலைமக்கள், மல்லிகை போன்று இருந்தால் அதிக மக்களை சென்றடையாது. அதிக வாசகர்களையும் சென்றடைய வேண்டும் அதே நேரத்தில் நல்ல கருத்துக்களையும் சொல்லவேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயமாக மதுரனின் பாணியை பின்பற்றலாம். இவரது படைப்புக்களும் வலைப்பூவும் ஓர் இளைஞனின் வெற்றிக்கான சரியான காம்பினேசன்.//
மணி ஒரு விடயத்தை புரிந்துகொள்ளுங்கள் நான் உங்களை, நிரூபனைபோன்று பல்சுவைவை கதம்பமாக எழுதுபவர்களை ஆதரித்து மேலே கூறிய வரிகளையும் எழுதியிருந்தேன். ஆனால் கில்மாக் கதைகளை எழுதுவதையும், அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும் இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே இலகுவாக பிரபல்யம் அடைவதற்குரிய குறுக்குவழியாக பாவிப்பதை மட்டும் பலரும் பாவிப்பதையே நான் எதிர்க்கிறேன். பதிவுலகில் எத்தனை வீதமானவர்கள் சிறந்தபடைப்புக்களை மட்டும் எழுதி பிரபலமானார்கள் எத்தனைபேர் பல்சுவைக்கதம்பமாக எழுதி பிரபலமானார்கள் எத்தனைபேர் கில்மாக் கதைகளையும் அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும் இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே எழுதிப்பிரபலமானார்கள். பதிவுலகை நன்கு மேய்பவர்களுக்கு நன்கு புரியும். இனிவரும் நாட்களிலும் இந்தத்தொடர்பதிவு எழுதுவேன். நாற்றில் எழுதுவது நிரூபனிற்கு ஏற்புடையதில்லை என அவர் கருதினால் எனது பக்கத்தில் தொடர்ந்து எழுதுவேன். அப்பொழுது பலதரப்பட்ட பதிவர்களையும் விமர்சிப்பேன். அப்பொழுது புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

சென்னை பித்தன் said...
Best Blogger Tips

நல்ல அறிமுகம்.பகிர்வுக்கு நன்றி.

Angel said...
Best Blogger Tips

மோதிரக்கையால் விமர்சன அறிமுகம் .
அழகாக மதுரனைபற்றி அறிமுகம்செய்த அம்பலத்தாருக்கு நன்றி .மதுரனுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .
புதுசுபுதுசா யோசிக்கிற நிருபனுக்கும் வாழ்த்துக்கள்

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம் மணி, இங்கு நீங்கள் பின்னூட்டத்தில் நிரூபனுடன் விவாதித்ததை படித்தேன். இந்தப்பதிவு நான் எழுதியது. இது எனது கருத்து இதற்கு நீங்கள் நிரூபனுடன் கோவித்துக்கொள்வது அர்த்தமற்றது.
//மேலும் தன்னுடைய பதிவு ஒன்றை உன்னுடைய தளத்தில் வெளியிட விரும்பும் ஒருவர், உன்னைத் தாக்கி நாலு வரிகள் எழுதி, அதையும் சேர்த்தா, உன்னிடம் ஒப்படைப்பார்? // நீங்கள் கூறுவதை படிக்கும்போது நிரூபன் தனது கருத்துக்களை என்மூலம் வெளிப்படுத்தியிருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நிருபன் தான் விரும்பிய கருத்துக்களை சொல்லத் தயங்குவதோ பயப்படுவதோ கிடையாது. அதே போல நானும் அடுத்தவர் சொல் கேட்டு சுய புத்தி இல்லாது எழுதுபவனும் கிடையாது. இந்த பதிவு எழுதிய நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையோ அல்லது திசை திருப்ப முயலுகிறீர்களோ புரியவில்லை

அம்பலத்தார் said...
Best Blogger Tips

// ” கில்மாக் கதைகளை எழுதுவதையும், அடுத்தவனைக் கிண்டலடிப்பதையும் இஸ்டத்திற்கு தாக்கி எழுதுவதையுமே இலகுவாக பிரபல்யம் அடைவதற்குரிய குறுக்குவழியாக பெரும்பான்மையான பதிவர்களும் கடைபிடிக்கும்போது ....”
இந்த வரிகளைப் படிக்கும் ஒருவர் மனதுக்குள் என்ன நினைப்பார் என்பதை என்னால் நன்றாக அனுமானிக்க முடியும்! இவ்வரிகளில் யார் சுட்டப்படுகிறார் என்பதையும் நான் நன்கு அறிவேன்! //
மணி தொப்பி அளவாக உள்ள யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும். அப்படி தொப்பியை மாட்டிக்கொண்டவர்களும் தாராளமாக தனது தரப்பு நியாயத்துடன் கருத்திடட்டும் தொடர்ந்தும் விவாதிக்கலாம். எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள நியாயமான விவாதங்கள் தேவை.

K said...
Best Blogger Tips

அம்பலத்தார், நீங்கள் வெளிப்படையாகப் பேசுபவர் தானே! அப்படியானால் சொல்லுங்களேன், அந்த கில்மா எழுதிப் பிரபலம் தேடியவர்கள், அடுத்தவனை இஷ்டத்துக்குத் தாக்கி பிரபலம் ஆனவர்கள், அடுத்தவனைக் கிண்டலடித்துப் பிரபலமானவர்கள் இவர்கள் எல்லாம் யார் யாருன்னு சொல்ல முடியுமா?

இப்படிப் பொதுப்படையாகக் குற்றம் சுமத்துவதால், கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது! படைப்பாளியின் ஒரு படைப்பு தொடர்பில், வாசகன் கேள்வி எழுப்பினால், அந்த வாசகனை கோபமாகப் பார்க்காமல் பதில் சொல்வது, படைப்பாளியின் கடமை அல்லவா?

K said...
Best Blogger Tips

மணி தொப்பி அளவாக உள்ள யார் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும். அப்படி தொப்பியை மாட்டிக்கொண்டவர்களும் தாராளமாக தனது தரப்பு நியாயத்துடன் கருத்திடட்டும் தொடர்ந்தும் விவாதிக்கலாம். எங்களை நாங்கள் திருத்திக்கொள்ள நியாயமான விவாதங்கள் தேவை.//////

நிச்சயமாக உங்கள் கருத்தை ஏற்கிறேன்! பிரபலமாக வேண்டும் + ஹிட்ஸ் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அடுத்தவனைத் தாக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாம் மன்னிக்கவே கூடாது!

அதே சமயம், தீமைகள் களையப்பட வேண்டும் எனும் நோக்கில் சிலரைத் தாக்கி எழுதுபவர்களையும் நாம் மறக்கலாகாது!

இந்த இரு தரப்பாரையும் ஒரே தட்டில் வைத்து எடை போடுபவர்களை, அறிவிலிகளாகப் பார்ப்பது பற்றி அம்பலத்தார் அண்ணர் என்ன நினைக்கிறீர்கள்?

ad said...
Best Blogger Tips

அடுத்தவனின் படைப்புக்களை விளம்பரப்படுத்துவதற்கும் ஒரு மனது தேவை.அம்பலத்தார் அவர்களும் "நாற்று" அவர்களும் ,"மதிஓடை" அவர்களும் இதை செய்வதைப் பார்த்திருக்கிறேன்.
அம்பலத்தார் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக,அறிமுகத்தோடு நின்றுவிடாது குறைநிறைகளையும் சுட்டிக்காட்ட முற்பட்டிருப்பது மற்றவர்களுக்கு முன்மாதிரி.

K said...
Best Blogger Tips

நீங்கள் கூறுவதை படிக்கும்போது நிரூபன் தனது கருத்துக்களை என்மூலம் வெளிப்படுத்தியிருப்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. நிருபன் தான் விரும்பிய கருத்துக்களை சொல்லத் தயங்குவதோ பயப்படுவதோ கிடையாது. அதே போல நானும் அடுத்தவர் சொல் கேட்டு சுய புத்தி இல்லாது எழுதுபவனும் கிடையாது. இந்த பதிவு எழுதிய நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையோ அல்லது திசை திருப்ப முயலுகிறீர்களோ புரியவில்லை :://///

அம்பலத்தார் ஐயா, நிரூபன் என்னுடைய நெருங்கிய நண்பன்! அவன் எந்தக் கருத்துச் சொல்வதாக இருந்தாலும், சாட்டிங்கில் வந்து நாயே பேயே என்று பேசுவான்! தூஷணத்தால் ஏசுவான்! போதாக்குறைக்கு ஃபோன் பன்ணியும் திட்டுவான்!

ஆகவே, நிரூபன் உங்கள் மூலமாக கருத்துச் சொல்ல நினைக்கிறான் என்று நான் நினைப்பதாக நீங்கள் நினைப்பது விநோதமாக உளளது! இப்பதிவை எழுதியது நீங்கள் தானென்றும், இக்கருத்துக்கள் உங்களுடையவை தான் என்றும் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு எனக்கு பகுத்தறிவு மங்கிவிடவில்லை!

மேலும், இப்பதிவு மிகவும் அவசியமானதும், அருமையானதுமாகும்! அதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது! ஆனால் முன்பு குறிப்பிட்ட அந்த வரிகள் குறித்து எனக்கு விளக்கம் தேவைப்பட்டது! அதனால் தான் நிரூவிடம் கேட்டேன்! பிரசுரித்தவர் என்ற ரீதியில் விளக்கம் சொல்லும் கடப்பாடு நிரூபனுக்கு உண்டு!

ஆக நான் நிரூபனிடம் கேள்வி எழுப்பியதில் தவறேதுமிருப்பதாக, நோகுனர்கள் கருதார்!

மேலும், இப்பதிவின் நோக்கத்தினை நான் திசை திருப்ப முயல்வதாக நீங்கள் கூறுவதும் விநோதமாகவே உள்ளது! காரணம் இது எனது தம்பி மதுவைப் பற்றி விதந்துரைத்து எழுதப்பட்ட ஒரு பதிவாகும்!

இப்பதிவில் மிகவும் அநாவசியமாக, இடைச்சொருகலாக அவ்வரிகள் இருப்பது மதுரனுக்கே சங்கடம் விளைவிக்கும்!

இன்னொருவரைத் தாக்கியா என்னைப் புகழணும்? என்று மது எண்ணி வருந்துவதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன!

Admin said...
Best Blogger Tips

அம்பலத்தார் அவர்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்..அறிமுகப் படுத்தும் முறையே பதிவுகளைச் சென்று படிக்கத் தூண்டுகிறது..வாழ்த்துகள்..

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//நிச்சயமாக உங்கள் கருத்தை ஏற்கிறேன்! பிரபலமாக வேண்டும் + ஹிட்ஸ் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அடுத்தவனைத் தாக்க வேண்டும் என்று நினைப்பவர்களை நாம் மன்னிக்கவே கூடாது!

அதே சமயம், தீமைகள் களையப்பட வேண்டும் எனும் நோக்கில் சிலரைத் தாக்கி எழுதுபவர்களையும் நாம் மறக்கலாகாது!//
மணி நிச்சயமாக நீங்கள் கூறியதை மறுப்பதற்கில்லை. படைப்பாளிகளுக்கும் பதிவர்களுக்கும்கூட சமுதாயம் சார்ந்த பொறுப்புணர்வு நிச்சயமாக இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் தான் பிரபலமானால் போதும் மற்றவர்கள், சமுதாயம் எக்கேடு கெட்டாலும் பரவாயைல்லை என நினைப்பவர்கள் இனங்காணப்பட்டு விமர்சிக்கப்படவேண்டும். இவர்கள் விசம்போன்றவர்கள். அதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.
இந்த இருதரப்பினரையும் வேறுபடுத்தி இனங்காணமுடியாதவர்கள் விவரம் புரியாதவர்கள் பரந்த அறிவற்றவர்கள்தான். நியாயத்திற்காக எதிர்க்குரல் கொடுப்பது வேறு தான் பிரபலமடைய எதிர்த்து விதண்டாவாதம் செய்வதுவேறு

அம்பலத்தார் said...
Best Blogger Tips

//இன்னொருவரைத் தாக்கியா என்னைப் புகழணும்? என்று மது எண்ணி வருந்துவதற்கு அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன!//

மணி உங்களது மனதையோ அல்லது மதுரனையோ அல்லது வேறு எவரையோ எனது வார்த்தைகள் நோகடித்திருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கோ. யாரையும் நோகடிப்பதல்ல எனது நோக்கம். பதிவுலகிலும் படைப்பாளிகளிடமும் ஆரோக்கியமான மாற்றங்கள் வரவேண்டும் என்பதே எனது அவா. இந்தப்பதிவை படிப்பவர்களில் நான் குறிப்பிட்டதுபோல எழுதுபவர்கள் யாராவது ஒருவர் இருந்தால் இதைப்படிப்பதன்மூலம் திருந்தமாட்டாரா என்ற ஏக்கத்திலேயே அந்தவிடயத்தையும் தொட்டு எழுதினேன். தவறை தெரிந்தே செய்பவர்களை சாடுவதில் தவறு இல்லையே.

சுதா SJ said...
Best Blogger Tips

அம்பலத்தார் பாஸ்.
உண்மையில் மது பற்றி சொல்லியவை அத்தனையும் உண்மையே....
மது ஆரம்பத்தில் எழுதியதுக்கும் இப்போது எழுதியதுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.... ஹா ஹா...
ஆனாலும் ஆரம்பத்தில் இருந்து சமூகத்தின் மீது அக்கறையுள்ள பதிவுகள் (விஜய் பதிவுகள் தவிர்த்து) தான் மது எழுதுவான்.
இதை பல தடவை அவன் கிட்ட சொல்லி பாராட்டி இருக்கேன்...

மதுவும் நானும் பெஸ்ட் பிரெண்ட்... ஆனால் ஒரு உண்மை தெரியுமா?? நானும் மதுவும் பேச தொடங்கினால் அது சண்டையில் தான் போய் முடியும். நான் சரி என்பதை அவன் தப்பு என்பான். நான் தப்பு என்பதை அவன் சரி என்பான்.

எனக்கு எப்போதும் கலாச்சாரங்கள் மீது நம்பிக்கை விருப்பு இல்லை. மதுக்கு அதான் உயிர்... (இப்போ கொஞ்சம் மாறிட்டான்& மாற்றிவிட்டேன்.. ஹா ஹா).

என் ஓரின செயற்கை ஆதரவு பதிவில் மதுவும் நானும் போட்ட சண்டை... ரெம்ப காரசாரம்.

மது நல்ல பதிவர் மட்டும் அல்ல.... நல்ல மனிதரும் கூட... அவருடன் நெருங்கி பழகினால் இது தெரியும்.

அப்புறம்.... உங்கள் இந்த முயற்சி தொடர்ந்து வெற்றி பெற என் வாழ்த்துக்கள். நிருபன் தளத்தில் தொடர்ந்து எழுதுங்கள்.....காரணம் நிருபன் தளம் எங்கள் எல்லோர் தளத்தையும் விட மிக அதிக பேர் பார்க்கும் தளம். சோ இப்படியான முயற்சி நிருபன் தளத்தில் செய்வதுதான் அதிக பயன் தரும்.

நிருபனுக்கு- நிரு.. தொடர்ந்து வரும் அம்பலத்தாரின் இந்த பதிவில் மட்டும்.... வேறு பதிவர் அறிமுகத்தை தவிருங்கள். இதே ஒரு வகையில் பதிவர் அறிமுகம் போல் தான்.... சோ அதற்குள் இன்னொரு அறிமுகம் வருவது நன்றாக இல்லை...ப்ளீஸ் இந்த பதிவில் மட்டும் தவிருங்கள்.

shanmugavel said...
Best Blogger Tips

உண்மைதான் சகோ! மதுரனின் பாணி இடைப்பட்டதாய் அனைவரும் படிக்கும் வண்ணமே இருக்கிறது.இவ்வகை விமர்சனம்.நல்ல முயற்சி.

Mathuran said...
Best Blogger Tips

அம்பலத்தார் ஐயா & நிரூபன்

இருவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்..

சரியான முறையில் என்னை எடை போடக்கூடியதாக இருந்தது உங்கள் விமர்சனம். உங்கள் அத்தனை கருத்துக்களையும் ஏற்று அடுத்தடுத்த பதிவுகளில் என்னை திருத்திக்கொள்கிறேன்.

”பெண்கள் காதலிப்பது உண்மையா” இப்படியொரு பதிவை எழுதியதற்காக நிச்சயமாக இப்போது வருத்தப்படுகிறேன் ஐயா. பெண்களை அடக்கியாழும் சமூகத்தில் இருந்து வந்தவன் தானே நானும். அந்த சமூகத்தின் போதனைகளில் சிக்கியிருந்த சமயம் எழுதியது அது. நிச்சயமாக இப்போது தெளிவாகிவிட்டேன். எதிர்காலத்தில் இப்படியான முட்டாள்தனமான பதிவுகள் எழுதப்போவதில்லை.

அம்பலத்தார் ஐயா.. என் பதிவுகள் பற்றி சிறப்பானதொரு விமர்சனத்தை தந்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றிகள்.

கருத்துக்கள்மூலம் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...
Best Blogger Tips

@ஐடியாமணி,

//கில்மா எழுதிப் பிரபலம் தேடியவர்கள், அடுத்தவனை இஷ்டத்துக்குத் தாக்கி பிரபலம் ஆனவர்கள், அடுத்தவனைக் கிண்டலடித்துப் பிரபலமானவர்கள்//

ஐடியா அண்ணே!அம்பலத்தார் சொன்ன இந்தக்காரணியெல்லாம் வைத்துப்பார்த்தால்.. இந்த லிஸ்டில் உங்க பெயர்தான் முதலில் வரும்.. இக்காரணிகள் எல்லாம் உங்களுக்குத்தான் சரியாப்பொருந்தும்,,

உ=ம் சொல்லட்டுமா!
முன்ன ஹிட்சுக்காக பன்னிக்குட்டி அண்ணன தாக்கி பதிவு போட்டீர்கள்,, இப்போ அதே ஹிட்சுக்காக அவர புகழ்வது போல் நடித்து பதிவு போடுகிறீர்கள்,,

முன்ன ஹிட்சுக்காக முஸ்லிம்கள் தன்னைக்காப்பாற்றியவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்றீர்கள் இப்போ அதே ஹிட்சுக்காக அதே முஸ்லிம்களை கேவலப்படுத்துகிறீர்கள்,, போதுமா இன்னும் சொல்லனுமா மிஸ்டர் ரஜீவன் (எ) ஐடியாமணி,,

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்,, பெரியவ சொல்லுவாக அதுதான் உங்க நெஞ்சமும் குறுகுறுத்து அது யாரைப்பற்றி எழுதியது என்று கேட்கிறீர்கள்..

இதெல்லாம் நிரூபனுக்காக எழுதியது என நிரூபன் சொல்வது சும்மா பம்மாத்து,,

போங்கய்யா நீங்களும் உங்க பதிவுலக நியாயங்களும்..

K said...
Best Blogger Tips

ஹி ஹி ஹி ஹி நான் ஒருவரைப் புகழ்வதும், பின்னர் விமர்சிப்பதும் ஹிட்ஸுக்காக என்று நீங்கள் நினைப்பதற்கு என்னால் எதுவுமே செய்ய முடியாது! எனக்கு ஹிட்ஸ் வருவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன! எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன!

இது பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

இது பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்!
//

நீர் தனிப் பதிவு போடுவதெல்லாம் அப்புறமா இருக்கட்டும்! விமர்சனங்கள் வருகையில் கருத்துக்களைச் சுட்டிக் காட்டினால்
அக் கருத்தில் தவறு உண்டென்று ஒரு படைப்பாளி ஒத்துக் கொண்டு கருத்தினைத் திருத்தி மன்னிப்புக் கேட்ட பின்னர் மீண்டும் மீண்டும் ஒரே குட்டையினைக் குழப்பிக் கொண்டிருப்பதனை முதலில் நிறுத்துங்கள் நண்பா.

அடுத்த விடயம், நாம் மட்டும் பலரையும் விமர்சிக்கலாம். பலரைப் பற்றி எம் இஷ்டத்திற்கு எழுதலாம் எனும் உணர்வு உங்களுக்கு இருப்பது போன்று ஒரே தராசில் சம தட்டில் பிறரின் கருத்துக்களை உங்களை நோக்கி வருவதாக நீங்கள் நினைக்கையில் அவற்றினை மறு பரிசீலனை செய்து ஆராய வேண்டும்!
அக் கருத்துக்கள் தவறு என்று ஒருவர் ஏற்றுக் கொண்ட பிற்பாடு, குறித்த கருத்துக்கள் தொடர்பாக நீர் உமது பக்க நியாயத்தினை வெளிப்படுத்தலாம். அது தான் ஓர் படைப்பாளிக்கு அழகு! அதனை விடுத்து மேலும் மேலும் ஒரே புள்ளியில் நின்று அந்த வரிகள் உம்மை காயப்படுத்தி விட்டது என்று பிறருக்கு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தும் வகையில் பேசிக் கொண்டிருப்பது நல்லதோர் படைப்பாளிக்கு அழகல்ல!

தவறுகள் என்று கூறும் போது பரிசீலனை செய்வது எம் கடமை! அதே போல என் பதிவில் உள்ள தவறினை நீர் சுட்டிக் காட்டியதும் நான் திருத்தியிருந்தேன்.
அதன் பின்னர் உமது தலையில் ஒரு விடயத்தினை நீர் போட்டுக் கொண்டு மல்லுக் கட்டுவது பலருக்கு நேர விடயத்தினைக் ஏற்படுத்தும் செயல்!

நிரூபன் said...
Best Blogger Tips

@Powder Star - Dr. ஐடியாமணி

இது பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்!
//

மணி...நீ இப் பதிவில் போதியளவு விளக்கங்கள் கொடுத்து கருத்துக்களால் மோதி விட்டாய்,
இதன் பின்னரும் ஓர் தனிப் பதிவு போடுவதென்பது பிறர் பார்வையில் உன்னைப் பற்றி எத்தகைய கண்ணோட்டத்தினை வரவைக்கும் என நினைத்துப் பார்?

அம்பலத்தார் said...
Best Blogger Tips

வணக்கம், நண்பர்களே,
எனது இந்த முயற்சிக்கு ஊக்கம் தந்து இந்தத் தொடர்பதிவினை தனது இணையப்பக்கத்தில் வெளியிடும் நிரூபனுக்கு முதலில் எனது நன்றிகள்.
இப்பதிவை மேலும் சிறப்பாக எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும்விதமாக உற்சாகம் தரும் பின்னூட்டங்களை இட்ட அனைத்து நட்புக்கள், வாசகர்களிற்கும் எனது நன்றிகள். விமர்சனங்களை நமது வளர்ச்சிக்கான ஒரு உந்துசக்தியாக ஏற்றுக்கொள்ள முற்படும் உங்கள் எல்லோரதும் மனநிலை எங்கள் தமிழ் படைப்பாளிகளினாலும், பதிவர்களினாலும்கூஉட ஆக்கபூர்வமான சாதனைகளை உண்டுபண்ணமுடியும் என்ற நம்பிக்கையை தருகிறது.
மது, உங்கள் படைப்புக்கள் மீதான விமர்சனத்தை ஆக்கபூர்வமான ஆலோசனையாக ஏற்றுக்கொண்ட உங்கள் புரிதலுக்கு நன்றியும் படைப்புலகில் நீங்கள்மேலும் பல உச்சங்க்களைத்தொட எனது அன்பான வாழ்த்துக்கள்.

அம்பலத்தார் said...
Best Blogger Tips

இனிவரும் அடுத்த பதிவில் உங்களில் பலருக்கும் தெரிந்த பிரபல பதிவர் ஒருவரது ஆக்கங்கள்பற்றிய தீர்க்கமான விமர்சனத்துடன் சந்திக்கிறேன். அதுவரை.......
நேசமுடன் அம்பலத்தார்

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails