ஈழப் போராட்டம் பல சாதனைகளையும், பல வேதனைகளையும் தந்து ஆயுதப் போராட்டத்திலிருந்தும் விலகி அனைத்துலகம் தழுவிய அறப் போரினை நோக்கிய வழியில் நடை போடுகின்றது. ஈழம் எனும் கனவினைத் தாங்கி ஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் தம் கொள்கையில் நின்றும் தவறி வேறு வழிகளை நாடிச் சென்று,மக்களை ஏமாற்றிப் பிழைக்க நினைக்கையில் புலிகள் அமைப்பினர் மாத்திரம் தாம் கொண்ட கொள்கையில் தீவிர பற்றுறுதியோடிருந்தார்கள். இறுதி வரை ஈழம் எனும் கனவினைத் தாங்கித் தம்மால் இயன்ற வரை போர் செய்த பெருமை பிரபாகரன் அவர்களுக்கும், அவரால் கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்குமே சாரும்!
இன்று பலராலும் முன்வைக்கப்படும் ஓர் குற்றச் சாட்டுத் தான் புலிகள் வன்னி மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பதாகும். இலங்கையில் வாழ்ந்த காலத்திலே இவ் விடயம் தொடர்பாக எழுத வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவல் இருந்தாலும் என்னால் எழுத முடியாத சூழல் நிலவியது. தற்போது புலம் பெயர்ந்த பின்னர் இது வரை காலமும் என் மனதினுள் பொதிந்திருந்த சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் எனும் நோக்கில் இப் பதிவினை வரைகின்றேன். "புலிகள் யாருக்காகப் போராடினார்கள்?" ஈழத் தமிழ் மக்களுக்காக! இறுதியில் அப் போராட்டம் வன்னி மக்கள் வாழ்ந்த பகுதியினை நோக்கித் திசை மாறியது. வன்னியில் வாழ்ந்த மக்கள் தமக்கு கை கொடுப்பார்கள் எனும் நம்பிக்கையில் தான் புலிகள் போராடினார்கள்.
இன்னோர் வகையில் சொல்லப் போனால் புலிகள் தம்மோடிருந்த மக்களுக்காகவும், தம்மை விட்டு இலங்கையின் ஏனைய பகுதிகளான இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும், புலம் பெயர் தேசங்களிலும் வாழ்ந்த தமிழ் மக்களுக்காகப் போராடினார்கள். "இறுதி வரை புலிகள் தம்மைக் கைவிடார்கள் எனும் நோக்கில் சென்றவர்கள் யார்?" வன்னி மக்கள்! ஆகவே அந்த மக்களோடு இருந்து புலிகள் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கப் படைகளின் முற்றுகை காரணமாகத் தள்ளப்பட்டார்கள். இப்போது இலங்கை அரசாலும், அரசோடு இணைந்திருக்கும் ஒரு சில கட்சிகளாலும் கீறல் விழுந்த இறுவட்டு (சீ)டி போன்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகின்ற வார்த்தை தான் "புலிகள் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்பதாகும்."
உலக நாட்டுத் தலைவர்கள் யாராவது கொழும்பிற்கு இராஜ தந்திர விஜயங்களை மேற் கொண்டு வரும் போதும்; ஐநாவில் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான கூட்டங்கள் நிகழ்கின்ற போதும்; அரசாங்கத் தரப்பினர் செய்கின்ற இழிவான வேலை என்ன தெரியுமா? சிறைகளில் இருக்கும் புலிகளின் முக்கியஸ்தர்கள் மற்றும் இன்று வரை விடுவிக்கப்படாதிருக்கும் முன்னாள் போராளிகளை அடித்து சித்திரவதைக்கு உட்படுத்தித்தி மிரட்டல் வாக்கு மூலம் பெற்று ஒளிப்பதிவு செய்வதாகும்."புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள்" அரசாங்கம் போர்க் குற்றம் ஏதும் நிகழ்த்தவில்லை" எனும் பாணியிலான மிரட்டல் வாக்கு மூலங்களை வாங்கி இவற்றின் மூலம் "இன்றும் தமக்கு ஏதும் நன்மைகள் கிடைக்காதா?" என செயற்படுகின்றது அரசாங்கம்.
இங்கே நகைப்பிற்குரிய விடயம் என்னவென்றால் அரசாங்கம் போர்க் குற்றம் நிகழ்த்தியதா? நிகழ்த்தவில்லையா? எனத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகளிற்கும், மனித உரிமை அமைப்புக்களிற்குமே உரியது. ஆனால் அரசாங்கம் போர்க் குற்றம் புரியவில்லை என்று முன்னாள் போராளிகள் சொன்னால் உலக நாடுகள் அனைத்தும் முன்னாள் போராளிகளின் கூற்றினை நம்பி தம் மீதான குற்றங்களை தூக்கி எறிந்து விடும் எனும் பாணியில் செயற்படுகின்றனர் மகிந்த பரிவாரங்கள். புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி; புலிகளுக்குத் தெரியாது கிழக்கிலே தனி இராஜ்ஜியம் நடாத்த நினைத்தவர்கள் உளறுவது எவ் வகையில் நியாயமாகும்?
புலிகள் பிரதேசவாத ரீதியில் செயற்படுவதனை நிறுத்தி பாரபட்சம் காட்டுவதை கை விட்டு கிழக்கு மாகாணத்தினை பிரித்துக் கொடுக்க வேண்டும் என முதுகில் குத்தும் நோக்கில் செயற்பட்டவர்கள் எல்லாம் இற்றை வரை மனிதக் கேடயம் பற்றி பேசுவது மிகப் பெரிய நகைச்சுவையாக இலங்கை அரசியலைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.அரசாங்கத் தரப்பு அமைச்சர்களின் ஆசனப் பகுதிக்கு கீழே ஒளிந்திருப்போர் எல்லாம் மனிதக் கேடயம் பற்றிப் பேச தகுதி உள்ளவர்களா? உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொண்டு பேசலாமே! பிரிவினை எனும் நஞ்சினைக் கையிலெடுத்து மக்கள் மனங்களில் விடுதலைப் போராட்டத்தினைக் குழப்ப வேண்டும் எனும் நோக்கில் செயற்பட்டவர்கள் எல்லாம் மக்களோடு இணைந்திருந்து போராடிய விடுதலை அமைப்பின் செயல்கள் பற்றிச் சொல்ல வெட்கமாக இல்லையா?
தனி நாடு வேண்டாம், மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்று இருபது வருடங்களுக்கும் மேலாக மக்களையும் ஏமாற்றி தனக்கென்று நிலையான கொள்கை ஏதும் இல்லாது அரசாங்கத்தின் கால்களைப் பிடித்து வாழ்வோர் எல்லாம் மனிதக் கேடயம் பற்றிப் பேசத் தகுதி உள்ளோர்களா? புலிகளினால் தமக்கு அச்சம் என்று கூறி இராணுவத்தினரின் பாதுகாப்பில் ஒளித்துக் கொண்டு அப்பாவித் தமிழ் மக்களைக் கடத்திக் கப்பம் கோரியோரும், மக்கள் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாது நடுத் தெருவில் நாய் சுட்டுக் கொல்வது போன்று அரச படைகளோடு இணைந்து சுட்டுக் கொன்றவர்களும் மனிதக் கேடயம் பற்றி நீலிக் கண்ணீர் விடுவது நியாயமா? கேட்கிறவன் கேனயன் என்றால் எருமை மாடும் ஏரோப் பிளேன் ஓட்டுமாம்! நல்லா ஓட்டுங்கைய்யா! வாழ்க தமிழ்! வாழ்க உங்கள் ஜனநாயகம்!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான தலைப்பு பதிவில் உள்ள மையக் கருத்துக்களின் அடிப்படையிலே வைக்கப்பட்டுள்ளது. பதிவினைப் படிக்காது தலைப்பினை மட்டும் புரிந்து கொண்டு எதிர்ப் பதிவு போடுவோர் தாரளமாகப் போட்டு உங்கள் டவுசரை நீங்களே கிழித்துக் கொள்ளலாம்!
|
34 Comments:
பதிவின் கருத்து பதிவில் உள்ள மையக் கருத்துக்களின் அடிப்படையிலே வைக்கப்பட்டுள்ளது. பதிவினைப் படிக்காது தலைப்பினை மட்டும் புரிந்து கொண்டு எதிர்ப் பதிவு போடுவோர் தாரளமாகப் போட்டு உங்கள் டவுசரை நீங்களே கிழித்துக் கொள்ளலாம்! ///////
மச்சி, இவ்விடத்தில் பதிவின் தலைப்பு என்று வர வேண்டும்! கவனி!
நல்லதொரு விளக்கம் மச்சி! வித்தியாசமான அலசல்!
வணக்கம் பாஸ்!
என்ன மிகவும் சூடாக இருக்கின்றீர்கள்!
உண்மையில் இனவாத ஆட்சிகளின் உதவியில் இருக்கும் அமைச்சர்கள் இதைக் கதைப்பதுக்குக்காரணம் தமது இருப்பை உறுதி செய்யவே என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்ன செய்வது அரசுக்கு பிரச்சாரப் பீரங்கிகள் நம் தமிழர் பெயரில் வாழும் பாராளமன்றம் போனதாக கொக்கரிக்கும் நாதாரிகள் தான்!
நீண்டநாட்களுக்குப்பிறகு வணக்கம்.
தாங்கள் எழுதும் பதிவுகளைவைத்து அறிந்துகொண்டேன்-இறுதிக்காலப்பகுதியில் நம்மைப்போலவே
யுத்தத்தில் சிக்கிய ஒருவராகத்தான் இருக்கவேண்டுமென்று.
அந்தவகையில்,அங்கு நடந்த சில விபரங்களை உங்கள் தலைப்பினூடே எதிர்பார்த்தேன்.ஆனால்,தலைப்பிலிருந்து மாறுபட்டு.. தலைப்பில் கூறப்பட்ட விடயம் தொடர்பாக அறிக்கைவிடுவோரைப்பற்றிக்கூறியிருக்கிறீர்கள்.
"நக்கிப்"பிழைக்கும் நாய்களுக்கு எதற்கு இந்தப்பேச்சு என்று நானும் உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன்.
உலகநாடுகள் கூட விசாரனை வேண்டும் என்று நடுநிலையில் இருப்பதாக சொல்லமுடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து.தம் அசைவுக்கு ஏற்றமாதிரி ஒவ்வொன்றையும் தூக்கிப்பிடிக்கும் நயவஞ்சகர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர்.
இப்படிப் பேசுங்கள் இல்லையே உங்களுக்கும் தீர்ப்புக்கள் கூறப்படலாம் என்ற பயத்தில் பாவம் அவர்களும் நன்றி விசுவாசம் காட்டுகின்றார்கள் போலும் வீணை வாசிக்க அம்மான் தாளம் போடுவார் இதுதான் நம்ம நையாண்டி அரசியல்.
///பதிவினைப் படிக்காது தலைப்பினை மட்டும் புரிந்து கொண்டு எதிர்ப் பதிவு போடுவோர் தாரளமாகப் போட்டு உங்கள் டவுசரை நீங்களே கிழித்துக் கொள்ளலாம்!
/// யாரப்பா அது ஹாஹா )
அட தனிமரம் அண்ணாச்சி வந்துருக்கிறாரு...
தலைப்பு எதிர்பார்த்தது தான் ஆனா உட்கிடக்கை எதிர்பார்க்கவில்லை... புலம்பெயர்ந்தவுடன் துணிச்சலும் ஜாஸ்தியாகவே வந்துவிடுகிறது )
///புலிகளுக்குத் தெரியாது கிழக்கிலே தனி இராஜ்ஜியம் நடாத்த நினைத்தவர்கள் உளறுவது எவ் வகையில் நியாயமாகும்?/// பிள்ளையானை சொல்லவில்லையே?
சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
@Powder Star - Dr. ஐடியாமணி
பதிவின் கருத்து பதிவில் உள்ள மையக் கருத்துக்களின் அடிப்படையிலே வைக்கப்பட்டுள்ளது. பதிவினைப் படிக்காது தலைப்பினை மட்டும் புரிந்து கொண்டு எதிர்ப் பதிவு போடுவோர் தாரளமாகப் போட்டு உங்கள் டவுசரை நீங்களே கிழித்துக் கொள்ளலாம்! ///////
மச்சி, இவ்விடத்தில் பதிவின் தலைப்பு என்று வர வேண்டும்! கவனி!
//
ஆமாம் நண்பா, மன்னிக்க வேண்டும்!, நித்திரைத் தூக்கத்தில் எழுதி விட்டு, பதிவினைச் சரி பார்த்த போதும் இத் தவறினைக் கண்டு பிடிக்க முடியவில்லை நண்பா.
தற்போது திருத்தி விட்டேன்.
@Powder Star - Dr. ஐடியாமணி
நல்லதொரு விளக்கம் மச்சி! வித்தியாசமான அலசல்!
//
நன்றி நண்பா.
@தனிமரம்
வணக்கம் பாஸ்!
என்ன மிகவும் சூடாக இருக்கின்றீர்கள்!
உண்மையில் இனவாத ஆட்சிகளின் உதவியில் இருக்கும் அமைச்சர்கள் இதைக் கதைப்பதுக்குக்காரணம் தமது இருப்பை உறுதி செய்யவே என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை என்ன செய்வது அரசுக்கு பிரச்சாரப் பீரங்கிகள் நம் தமிழர் பெயரில் வாழும் பாராளமன்றம் போனதாக கொக்கரிக்கும் நாதாரிகள் தான்!
//
நான் எங்கே பாஸ்..சூடாக இருக்கின்றேன்! ஹே...ஹே...
இப்படியாவர்களும் இருக்கிறார்களே! இவர்கள் என்ன செய்தார்கள் என்று நினைவுபடுத்த வேண்டும் அல்லவா?
ஹே...ஹே...
@எஸ்.பி.ஜெ.கேதரன்
தலைப்பில் கூறப்பட்ட விடயம் தொடர்பாக அறிக்கைவிடுவோரைப்பற்றிக்கூறியிருக்கிறீர்கள்.
"நக்கிப்"பிழைக்கும் நாய்களுக்கு எதற்கு இந்தப்பேச்சு என்று நானும் உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன்.//
ஹே....ஹே...திருத்த முடியாதவர்கள் அவர்கள்.
@கந்தசாமி.
தலைப்பு எதிர்பார்த்தது தான் ஆனா உட்கிடக்கை எதிர்பார்க்கவில்லை... புலம்பெயர்ந்தவுடன் துணிச்சலும் ஜாஸ்தியாகவே வந்துவிடுகிறது )
//
ஹி....ஹி...
உள்குத்து ஏதாச்சும் இருக்கா பாஸ்?
@நண்டு @நொரண்டு -ஈரோடு
சரியா சொன்னீங்க .
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.//
நன்றி பாஸ்.
//உங்கள் டவுசரை நீங்களே கிழித்துக் கொள்ளலாம்//
ஒருவைளை வேட்டி கட்டி இருந்தா என்ன பண்ணனும்னு சொல்லு மச்சி.. ஹீ ஹீ
காத்திரமான பதிவு. இனி இனி இப்படி நிஜங்கள் நாற்றை அலங்கரிக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள் சகோ.
தமிழ் தேசியவாதிகள் எல்ல உங்கள் மேல் கோவை பட போகிறார் பார்த்து கொள்ளுங்கள்
ஈழா அரசியல்வாதின் அதிரடி
வன்னியில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கோருவதால் தமிழர்களுக்குத் தீமையே ஏற்படும் என்று கூட்டமைப்பின் நியமன பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பிரித்தானியாவில் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்குசெய்திருந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். video http://www.youtube.com/watch?v=LBaEK_j8ET4&feature=player_embedded தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன்:
போர்க்குற்ற விசாரணை தேவையில்லை- சுமந்திரன்:ஏன் இவரு சொல்ல வேண்டும்
பிரதேசவாதம் பேசுவதும் அண்டி அடுத்தவன் காலடியில் கிடந்து பிசத்துவதும். அவர்கள் தமது இருப்பை நிலை நிறுத்திக்கொள்ளவே.
நடுநிலைமையாளர் என்று சொல்லிக்கொண்டு இலன்கை அரசுக்கெதிராக பேசும் நாடுகள் எதுவும் இதயசுத்தியுடன் எமக்காக குரல் கொடுக்கவில்லை. இலங்கை அரசை தமக்கு ஆதாயமான போக்கிற்கு கொண்டுவருவதற்கு போர்க்குற்றங்கள் என்ற விடயத்தை பாவிக்கின்றன. அவ்வளவுதான். நாமும் கிடைக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை எமக்குச் சாதகமாக பாவித்துக்கொள்ளவேண்டும்.
அரசின் அடிவருடிகளாக இருந்து அரசியல் நடத்தும் நம்மவர் காலம் குறுகியது. அரசே அவர்களை மெதுமெதுவாக செல்லாக்காசாக்கிவிடும்.
வணக்கம், நிரூபன்!காலத்துக்கேற்ற பதிவு.இறுதி இன அழிப்பு நிகழ்ந்த பகுதிகளில்,இலங்கை இராணுவத்தால் அநியாயமாகக் கொல்லப்பட்ட பெருந்தொகையான பொதுமக்களின் உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஐரோப்பிய பா.உ வின் அச்சம் முதல் தடவையாக வெளிப்படுத்தப் பட்டிருக்கும் வேளையில் இந்தப் பதிவு வந்திருக்கிறது.அவரின் இந்தக் கூற்றின் மூலம்,பொதுமக்கள் தங்கள் பாதுகாப்புக்காகவே புலிகளுடன் இருந்தார்கள் என்பது வெளிப்பட்டிருக்கிறது!புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தவில்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
துரோகிகளின் முகத்திரையை கிழித்தெறிந்து விட்டீர்கள்...!!!
அன்பு சகோ, நலம் நாடுவது நலமே
இந்த தலைப்பின் முடிவில் நீங்கள் குறைந்த பட்சமாக ஒரு கேள்விகுறியாவது போட்டிருக்கலாம், இது என் எண்ணம்.
மற்றபடி வழமை போலவே பல அரிய தெரிய வேண்டிய செய்திகளை தந்துள்ளீர்கள். அருமை. நன்றி
அட தனிமரம் அண்ணாச்சி வந்துருக்கிறாரு...
//
கந்தசாமித் தாத்தா ஏன் இந்த கொலைவெறி ஹீஹீ !
நிரூபனுக்கும் எனக்கும் வாய்க்கால் தகராறு ஒன்றும் இல்லை எனக்கு கொஞ்சம் வேலைப்பளு அதிகம் அதுதான் இப்போது வருவது குறைவு மீண்டும் விரைவில் வருவேன் ஐயா .தனிமரம் எப்போதும் இப்படித்தான் அவ்வ்வ்வ்வ்வ்!
நிரூ...நிறையச் சொல்ல விருப்பமில்லை.
நல்ல விளக்கமான பதிவு !
வன்னி நிலா மக்களை விட்டு யாழ்ப்பாண மேடு குடி மக்களை குட்டி சென்று இருக்கனும்
தலையங்கத்த பார்த்திட்டு நான் பதிவ வாசிக்காம விட்டுட்டேனே.. ஹி ஹி
நிரு இந்த கருத்தை நீங்கள் பிரசுரப்பீர்களா இல்லையா எனத்தெரியாது.ஆனால் உண்மையாக உங்கள் வலைப்பூ கருத்துக்களாலோ தமிழகத்தில், ஏன் உலகம் பூராக வாழ்கின்ற தமிழ் மக்களால் கூட புலிகள் மக்களை கேடயமாக பாவித்தார்கள் என்பதை நிராகரிக்கமுடியாது. உங்கள் பதிவுகளில் இருந்து தெரிகிறது நீங்களும் வன்னியில் இருந்தவர் தான்.அப்போ உண்மை உங்களுக்கும் தெரியும்,மக்கள் ஜெயசிக்குறு வை நினைத்துத்தான் இறுவரை புலிகளுடன் முள்ளீவாய்க்கால் வரை போனார்கள்.ஆனால் இறுதியில்தான் அவர்கள் புரிந்துகொண்டார்கள் தாம் கேடயங்களாக்கப்பட்டது ,ஆனாலும் அதை குறை சொல்லமுடியாது..ஆனால் இழப்புக்களை ஏற்றுக்கொண்ட அந்த சொந்தகளின் இன்றைய நிலையைப்பாருங்கள் என்ன இறுதியில் கிடத்திருக்கிறது.அவர்களின் மனவோட்டத்தை ஒரு கணம் படித்துப்பாருங்கள் அப்போ புரியும் அந்த வேதனை.பிணவறையில் எனது நண்பனை அடையாளம் காட்ட சென்ரபோது 17 பேர் கேடயம் தாண்டி வரும்போது சுட்டுக்கொல்லப்பட்டு உடலமாக கிடந்தார்கள் அவர்களில் சிறுவர்களும் அடக்கம்,வெளியேவந்தவர்களுடன் வந்து வெடித்ததில் என் நண்பன் முகம் சிதறி தனியே முகம் இருக்கவேண்டிய இடத்தில் துணியால் சுற்றப்பட்டிருந்த மண்டை ஓட்டினை மட்டுமே நான் பார்த்தென்.தந்தை,தாய் மனைவி 2 மாதங்களுக்கு பிறகு உடையை வைத்து பிண அறையில் அடையாளம் கண்டேன் உருக்குலைந்த உடலமாக, அந்த வலி... திருப்பிக்கொடுக்கமுடியுமா,இப்போ தம்பியும் தங்கையும் செய்வதறியாது வேலை செய்து வாழ்கிறார்கள்.இது ஒரு சின்ன உதாரணம் .எனது சித்தி ,மாமா உட்பட பல சொந்தங்களை இழந்த என்னால் உங்கள் இந்த கருத்துக்கு எதிராகத்தான் எழுதமுடியும்,புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.சில அரசியவாதிகள் மட்டுமல்ல நாமும் கூடத்தான் எதிரி செய்த நல்லதை பார்க்காமல் கெட்டதைத்தானே பார்ப்போம்.. அப்போ அரசியவாதிகளை குரை சொல்லி என்ன பயன்..
@தங்கராஜா கீர்த்திராஜ்
அன்பிற்குரிய சகோ,
இப் பதிவில் நான் எங்கேயாவது புலிகளைத் தவறாகவோ அல்லது புலிகள் மக்களை மனிதக் கேடயமாக்கிய விடயம் தொடர்பாகவோ சொல்லியிருக்கிறேனா?
ஹே...ஹே..
காலதி காலமாக புலிகள் மனிதக் கேடயமாக மக்களைப் பாவித்தார்கள் என பெரு மூச்சு விடுவோரை அல்லவா சாடியிருக்கேன் நண்பா.
அதைத்தான் நானும் சொல்லவந்தேன் நிரு, அவர்களுக்கு வாயில் மெல்வதற்கு அவலை கொடுத்துவிட்டோமே,அவர்கள் பொரி கிடைத்தாலே பொங்கல் கிடைச்ச மாதிரி பீத்துவார்கள் அவல் கிடைத்தால். அவர்களை விடுங்கள் நாயென்றால் குரைக்கத்தான் வேண்டும் இல்லாவிட்டால் நக்குவதற்கான எலும்புத்துண்டில் மண் அள்ளீபோட்டுவிடுவார்கள் என்ற பயம் ,அவர்களின் குரைப்பை கேட்பதை விட்டுவிட்டு நாம் எம்மாலான ஆக்கபூர்வமான செய்கைகளை நமது மக்களுக்கு செய்வோம்...உங்களை வேண்டி நிற்பது அதுவே... தொடருங்கள்..
Post a Comment