இலங்கையின் காலித் துறைமுகத்திற்கு கப்பல் வரும் என இலங்கை அரசு விழி மேல் வழி வைத்துக் காத்திருக்கையில் அந்தக் கப்பலோ இன்னுமோர் இடத்திற்கு வந்தது. குறிப்பிட்ட தினத்திற்குள் கப்பல் வரவில்லையே என கப்பல் கம்பனியின் தலைமையகத்தினை இலங்கை அரசு தொடர்பு கொள்ளும் போது, இன்னும் சில தினங்களுள் கப்பல் இலங்கைக்கு வந்து விடும் என பதில் வழங்கப்பட்டது. இந் நேரத்தில் தான் இலங்கை அரசிற்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. நீங்கள் இங்கே படித்துக் கொண்டிருப்பது "பீரங்கி கைப்பற்றி ஆமிக்குப் பீதியைக் கொடுத்த புலிகள்" தொடரின் ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாகும். இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க இங்கே உள்ள DROP DOWN MENU இல் கிளிக் செய்யவும்.
கப்பலில் ஏற்றப்பட்ட இலங்கை அரசிற்குச் சொந்தமான ஆட்டிலறி ஷெல்களையும், ஆயுத தளபாடங்களையும் அவை செல்ல வேண்டிய இடம் தொடர்பான விபரங்களையும் பெற்றுக் கொண்ட கப்பல் கப்டன் நேரடியாக ஆயுதக் கப்பலை இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டு செல்லாது புலிகளின் வழங்கல் - விநியோகப் பிரிவினருடன் தொடர்பு கொண்ட பின்னர் முல்லைத்தீவினை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் ஆயுத தளபாடங்கள்,வெடி பொருட்கள்,பீரங்கிச் செலுத்திக்கான உந்து கணைகள் ஆகியன தரையிறக்கப்பட்டுச் சில நாட்களின் பின்னர் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினூடாக இலங்கை அரசிற்குப் புலிகள் ஓர் செய்தியினை அனுப்பினார்கள்.
அச் செய்தியினைப் படித்த இலங்கை அரசிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. தாம் உலக நாடுகளிடம் கையேந்தி, கடன் வாங்கிப் புலிகளையும் தமிழ் மக்களையும் பூண்டோடு அழிக்கும் படை நடவடிக்கைக்காக கொள்வனவு செய்த ஆயுதங்களைப் புலிகள் தந்திரமாக பிற நாடொன்றில் பதிவு செய்யப்பட்ட கப்பல் மூலம் தம் பகுதியினுள் தரையிறக்கியிருந்தார்கள் எனும் விடயமும், புலிகளிடமும் ஆயுதங்களை நகர்த்தவல்ல பாரிய கப்பல்கள் புழக்கத்திற்கு வந்து விட்டது எனும் தகவலும் இலங்கை அரசிற்கு ஆச்சரியத்தினையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. இலங்கை அரசிற்கு ஆயுதங்களை ஏற்றி வருவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட கப்பல் தொடர்பில் இலங்கை அரசு ஆராய்ச்சியினை மேற் கொண்ட போதிலும் புலிகளின் கப்பல் என்றோ, புலிகள் பெயரில் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் பற்றிய ஒரு சிறு தகவல்களைக் கூட இலங்கை அரசினால் பெற முடியவில்லை.
கருணா புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற காலத்தின் பின்னர் 2004ம் ஆண்டு காலப் பகுதியில் தான் புலிகள் வசமிருக்கும் சர்வதேச கடத்தல்களுக்கான கப்பல்கள் பற்றியும், அவை எங்கே ரிஜிஸ்டர் செய்ப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பிலும் புகை கிளம்பத் தொடங்கியிருந்தது. அது பின்னர் கடலில் அடிபட்ட கப்பல்களின் மூலம் இலங்கை அரசால் உறுதி செயப்பட்டது. இந்தோனேசியாவும், கம்போடியாவும் தான் புலிகளின் கடல் வழி விநியோகத்திற்கு காத்திரமான வழியமைத்துக் கொடுப்பவர்கள் எனும் உண்மையினை இலங்கை அரசு காலங் கடந்த ஞானமாகத் தான் உணர்ந்து கொண்டது அல்லது அறிந்து கொண்டது. ஓயாத அலைகள் மூன்று சமர் வன்னியின் ஒட்டு சுட்டான் பகுதியிலிருந்து வேகமெடுக்கத் தொடங்கியது.
1997ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வெற்றி உறுதி அல்லது ஜெயசிக்குறு எனப் பெயர் சூட்டப்பட்டு புலிகளைப் பூண்டோடு அழிக்கும் நோக்கில் படை நடவடிக்கையினைத் தொடங்கியிருந்த இராணுவம் ஜெயசிக்குறு எனும் பெயர் தாங்கி வந்து 30 (அண்ணளவாக) மாதங்களாக புதுக் குடியிருப்பினைக் கைப்பற்றுவதா அல்லது மாங்குளத்தினைக் கைப்பற்றுவதா எனச் சில்லெடுத்துக் கொண்டிருந்தது, இந் நேரத்தில் 01.11.1999ம் ஆண்டு அன்று வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டானிலிருந்து ஓயாத அலைகள் மூன்று படை நடவடிக்கை புலிகளால் ஆரம்பிக்கப்பட்டது.இராணுவத்தினரால் பல சிரமங்களின் மத்தியில் அண்ணளவாக 30 மாதங்கள் செலவழிக்கப்பட்டு பிடிக்கப்பட்ட நிலங்களைப் புலிகள் வெறும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் புலிகள் மீட்டார்கள்.
ரிவிபல இராணுவ நடவடிக்கை, ரணகோச இராணுவ நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் கைப்பற்றப்பட்ட நிலங்களும் புலிகளால் இச் சமரின் மூலம் மீட்டெடுக்கப்பட்டது. இச் சமரின் போது தான் புலிகள் தம் வசமிருந்த மூன்று ஆட்டிலறிப் பீரங்கி உந்துகணைச் செலுத்திகளையும் ஒன்றிணைத்துத் தாக்குதல் நடாத்தினார்கள். கப்பல் மூலம் இராணுவத்தினருக்கு வந்த ஷெல்களைத் தந்திரமாகத் தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தரையிறக்கிய புலிகள்....... அடுத்தது என்ன என்று அறிய ஆவலா? காத்திருங்கள்!
நாளையுடன் இத் தொடர் நிறைவடைகின்றது. நாளைய தினம் இத் தொடரில் சில சுவாரஸ்யமான விடயங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றது.
இப் பதிவிற்கான படங்கள் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை.
|
5 Comments:
இரவு வணக்கம், நிரூபன்!தொடருங்கள்,தொடர்வோம்!
நிருபன் தீவிரவாதிகள் நடமாட்டம் உங்க ப்ளாக் இல் நிறைய இருக்கு போல,,, மைனஸ் மைனஸ் ஆ.... விழுது... அவ்வ்..
நான் முதலே சொன்னனே அதுவல் திருந்தாதுவள் :(
மைனஸ் ஓட்டு இந்தகட்டுரைக்கா....!முந்திய கட்டுரைக்கா....? மைனஸ் ஓட்டு போட்டா என்ன தூக்கில போட்ட மாதிரியா?நிரூபா நீ...நடத்துப்பா....
ஏன் மைனஸ் ஓட்டு? அவர்களுக்கு என்ன லாபம்?
அறிந்துகொண்டேன் super Why This Kolaveri news version
Post a Comment