ஈழப் போராட்ட வரலாற்றில் புலம் பெயர் தமிழர்களின் தியாங்களும், அர்ப்பணிப்புக்களும், கடுமையான உழைப்பின் மூலம் ஈழ மக்கள் வாழ்விற்காகவும், போராட்ட நகர்விற்காகவும் அவர்கள் திரட்டி அனுப்பிய பொருளுதவிகளும் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவை. ஈழப் போராட்டத்தின் நவீன தள வடிவ (நவீன ஆயுத களமுனை நகர்வு) நகர்விற்குப் பக்க பலமாகத் தோள் கொடுத்து தம் வியர்வைத் துளிகளையெல்லாம் பணமாக்கி ஈழ மக்களின் வீரத்தினை உலகறியச் செய்வதற்கு உழைத்த பெருமைக்குரியவர்கள் எம் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள்.
வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரச்சாரக் கூட்டங்களில் ஆட்களைச் சேர்க்கும் நடவடிக்கையில் புலிப் போராளிகளும், பிரச்சாரக் குழுவினர்களும் களமிறங்கும் போதெல்லாம் புலம் பெயர் தமிழர்களைப் பற்றி யாராவது கேள்விக் கணைகள் தொடுத்தால் புலிகள் அடிக்கடி நினைவு கூருகின்ற ஓர் வாக்கியம் தான் "ஜெயசிக்குறுச் சமர் காலத்தில் சிங்கள அரசினை விரட்டி அடிப்பதற்காக ஏவப்பட்ட ஒவ்வோர் ஆட்டிலறிச் ஷெல்களிலும் புலம் பெயர் தமிழர்களின் கடின உழைப்புத் தான் செறிந்திருக்கிறது" எனும் வாக்கியமாகும்.
ஈழத்தில் நிகழ்ந்த கொடுமைகள், தமிழர் தாயகப் பகுதிகளில் நிலவிய நிம்மதியற்ற வாழ்க்கை முறை காரணமாக புலம் பெயர்ந்த தமிழர்களிடத்தே போராட்ட உணர்வும், போராட்டத்திற்குப் பங்களிப்புச் செய்யும் நல் உணர்வுகளும் மங்கி விடவில்லை என்பதனை தன் தொலை நோக்குப் பார்வை மூலம் அறிந்து கொண்ட தமிழீழத் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் படை நடத்துவது தொடக்கம், திட்டமிடல்களை மேற் கொள்ளும் செயற்பாடுகள் வரை தலைவருக்கு நிகராகச் செயற்படவல்ல ஒரேயொருவரான கேணல் கிட்டு அவர்களை 1989ம் ஆண்டு அக்டோபர் (ஐப்பசி) மாதமளவில் பிரித்தானியாவிற்கு அனுப்பி வைக்கின்றார்.
அந்நிய தேசத்தில் தம் வாழ்க்கையினைக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு ஊர்களிலும், பல நாடுகளிலும் வாழ்ந்த புலம் பெயர் மக்களை ஒன்று திரட்டி புலிகளின் அனைத்துலக தொடர்பகத்தினூடாகப் புலம் பெயர் மக்களை விடுதலை நோக்கிய பயணத்திற்காகத் தயார்படுத்திய பெருமை கேணல் கிட்டு அவர்களையே சாரும். லண்டலின் புலம் பெயர் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் களத்தில் எனும் பத்திரிகையினையும், பிரான்ஸில் எரிமலை எனும் சஞ்சிகையினையும் வெளியிட்டுப் புலம் பெயர் மக்களினை ஈழப் போராட்டத்துடன் இரண்டறக் கலக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டார் கேணல் கிட்டு.
பிரான்ஸில் வெளியான எரிமலைப் பத்திரிகையினைத் தொடர்ந்து ஈழமுரசுப் பத்திரிகையின் உருவாக்கத்திற்காகவும் அடித்தளமிட்டவர் கேணல் கிட்டு அவர்களே! (ஈழமுரசினை உருவாக்கியவர் கிட்டு அல்ல) தம் தாய்த் தேசத்தை விட்டுப் பல்வேறு காரணங்களாக தூரப் பறந்த ஊர்க் குருவிகளான புலம் பெயர் மக்களின் உணர்வுகள், எண்ணங்கள் யாவும் தமீழம் எனும் கனவு தேசத்தை நோக்கியதாக - தாய் நிலக் காற்றினைச் சுவாசித்து மகிழ வேண்டும் எனும் எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனும் எண்ணத்திற்கமைவாக கலை பண்பாட்டுக் கழகங்களை அமைத்ததோடு, புலம் பெயர் மண்ணில் ஊடகங்கள் வாயிலாகவும் போராட்டம் பற்றிய கருத்துக்கள் மக்களிற்கு உரிய வழியில் சென்று சேருவதற்கான அடித்தளத்தினைத் தான் வாழ்ந்த காலத்தில் உருவாக்கினார் கேணல் கிட்டு அவர்கள்.
பின்னர் கேணல் கிட்டு அவர்களின் செயற்பாடுகளைத் தொடர்ந்து அரசியல் ரீதியில் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் எண்ணக் கருத்துக்களைச் சிந்தனைகளை திரு. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் புலம் பெயர் மண்ணில் நெறிப்படுத்தினார். தமிழர் தம் வரலாற்றுப் பாதையில் 240 வருடங்களாகத் தமிழர்களின் கைகளிற்கு எட்டாக் கனியாக இருந்த ஆனையிறவு எனப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையினைப் புலிகள் 2000ம் ஆண்டு கைப்பற்றிய போது கேணல் கிட்டு அவர்களால் அடித்தளமிடப்பட்ட புலம் பெயர் தமிழ் சொந்தங்களின் ஒருங்கிணைந்த எழுச்சியானது பேரெழுச்சி பெறுகின்றது. அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சமாதான காலத்தில் வன்னிக்கு வந்து போராளிகளுடன் பேசும் போது அடிக்கடி பின் வரும் சம்பவத்தினை நினைவு கூருவார்.
"லண்டன் மாநகரின் அலெக்ஸாந்ரா ப்ளேஸ் (பலஸ்) மண்டபத்தில் ஆனையிறவு வெற்றிச் சமரைத் தொடர்ந்து இடம் பெற்ற ஓர் நிகழ்வில் தான் பேசிய போது புலம் பெயர் சொந்தங்கள் பணத்தினையும், நகையினையும் அள்ளி வழங்கினார்களாம். ஒரு கட்டத்தில் தன்னுடைய தாயகம் பற்றிய அரசியல் கருத்துக்களையும், தேசியத் தலைவரின் சிந்தனைகளையும் கேட்ட மக்கள், தம் கழுத்தில் அணிந்திருந்த தாலிக் கொடிகளையும் கழற்றிக் கொடுத்தார்கள். அப்போது தனக்கு கண்ணீர் விட்டு அழ வேண்டும் போல இருந்ததாம்.ஆனாலும் மண்டபத்தினை உரிய நேரத்திற்கு கையளிக்க வேண்டிய நிலமையால் உரை குழம்பக் கூடாது எனும் நோக்கில் அழுகையை அடக்கித் பேச்சினை முடித்ததாக அடிக்கடி வன்னியில் அரசியற் துறைப் போராளிகளிடம் சொல்லிப் புலம் பெயர் தமிழர்களின் உணர்வுகளை நினைவு கூர்ந்து கொள்ளுவார்.
தமிழன் இல்லா நாடும் இல்லைத் தமிழனுக்கு என்றோர் நாடும் இல்லை எனும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளிற்கு அமைவாக உலகம் எங்கும் பரந்து வாழும் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்களால் தான் வன்னியில் இடம் பெற்ற இன அழிப்புக்கள் முதல், பல்வேறுபட்ட மனிதப் பேரவலங்கள் வரை அனைத்து விடயங்களுமே உலகின் காதுகளை எட்டியது. தமிழ் மக்கள் சர்வதேசத் தொடர்பேதுமின்றிப் பூண்டோடு அழிக்கப்பட்டு விடுவார்கள் எனப் பிரச்சாரம் செய்த அரசின் காதுகளுக்குப் புலம் பெயர் தமிழர்களின் பேரெழுச்சி என்பது அச்சமூட்டும் ஓர் விடயமாகவே இருந்தது. எழுக தமிழ் எனும் நிகழ்வினை அனைத்துலகத்திலும் செயற்படுத்தித் தமிழனுக்கு என்றோர் தனி நாடு வேண்டும் என்பதனைச் செயற்படுத்திய புலம் பெயர் சொந்தங்கள் தம் சொந்தங்கள் ஈழத்தில் இராணுவத்தினரது மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு ஆளாகிக் கொலப்படும் போது பார்த்துக் கொண்டிருப்பார்களா?
2008ம் ஆண்டில் அகில உலகெங்கும் அலையெனத் திரண்டு வீதிகளில் இறங்கி உலக நாட்டுத் தலைவர்களுக்கு இலங்கையில் இடம் பெறும் மனிதப் பேரவலம் பற்றிய உண்மையினை எடுத்துரைத்தார்கள். ஐநாவின் முன்றலில் முருகதாசன் எனும் சகோதரன் தீக்குளித்து "எங்கள் அனைவரின் உணர்வுகளும் தீயாய் எரிகின்றனவே நீங்கள் கலங்க வேண்டாம். சர்வதேசம் ஈழ மக்களுக்காய் கண் திறக்கும்!" எனும் நம்பிக்கையினைக் கொடுத்தார். ஈழத்தில் இறுதி யுத்தத்தில் மக்கள் பெட்டி வடிவ வேலிக்குள் முடக்கப்பட்ட போது பிரித்தானியாவில் வணங்கா மண் எனும் கப்பல் மூலம் உணவுப் பொருட்களைச் சேகரித்து பல்வேறு தடைகள், தடங்கல்களின் மத்தியிலும் ஈழத்த்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அயராது பாடுபட்டவர்களும் புலம் பெயர் மக்களே!
இலங்கையில் இறுதி யுத்தத்தின் பின்னர் இலங்கை அரச படைகள் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று விட்டு, தாம் போர்க் குற்றங்களைச் செய்யவில்லை, மக்களைக் கொல்லவில்லை என ஐநா செயலாளர் பான்கிமூனை அழைத்து வந்து முள்ளிவாய்க்காலைச் சுற்றிக் காட்டி உலகின் வாயினை மூடிடலாம் எனச் சிங்கள தேசம் நினைத்துத் தம் செயற்பாடுகளை முன்னெடுத்த போது, ஆதாரங்களுடன் இலங்கை அரசு செய்த போர்க் குற்ற விடயங்களை அம்பலப்படுத்தி இலங்கை அரசின் கோர முகத்தினையும், பொய் நாடகத்தினையும் உலகறியச் செய்தவர்களும் எம் புலம் பெயர் சொந்தங்கள் தான்.
இன்று இறுதி யுத்தத்தில் படை நடத்திய படைத் தளபதிகளையும், இலங்கை அரச தலைவர் மகிந்த ராஜபக்ஸ அவர்களையும் அச்சத்திற்கு உள்ளாக்கும் பெரு நெருப்பாக மிளாசிக் கொண்டிருப்பவர்களும் புலம் பெயர் சொந்தங்கள் தான். உலக நாடுகளின் மத்தியில் இலங்கை அரசிற்குத் தலை குனிவையும் - அவமானத்தினையும் உருவாக்கியதோடு, இலங்கை அமைச்சர்கள், போர்க் குற்றத்தில் ஈடுபட்ட பிரமுகர்கள் ஆகியோர் எங்கும் - எந் நாட்டிலும் - எந் நேரத்திலும் வைத்துக் கைது செய்யப்படலாம் எனும் அச்ச நிலையினை உருவாக்கியவர்களும் எம் சொந்தங்கள் தான். ஈழத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டாலும், ஈழ மக்களின் அடி மனதில் பிரிந்து சென்று தமக்கான தனி நாடு ஒன்றினைப் பெற்று வாழ வேண்டும் எனும் கனவு இன்றும் அணையாத விடுதலைத் தீயாக எரிந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதனை உணர்ந்து தமிழருக்கான தனியரசு நோக்கிய விடுதலைச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தார்மீக கடமையினைச் செய்கின்றார்கள் எம் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள்.
ஆயுதப் போராட்டம், புலிகள் அமைப்பு ஈழத்தில் இலங்கை அரசால் அழிக்கப்பட்ட பின்னர், புலம் பெயர் நாடுகளில் அரசியல் ரீதியில் தமிழர்களின் பலம் மேலோங்குகின்றதே எனும் அச்ச நிலையினை இலங்கை அரசிற்கு ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள் புலம் பெயர் தமிழ்ச் சொந்தங்கள். ஈழத்தில் உள்ள மக்கள் இன்று மேய்ப்பாரற்று நடு வெளியில் விடப்பட்ட ஆடுகளைப் போல தம் விடுதலைக் கனவோடு வாழும் வேளையிலும் தமக்கான கனவினைப் புலம் பெயர் மக்கள் அணைய விடமாட்டார்கள் எனத் திடமாக நம்புகின்றார்கள். போராட்டம் நடை பெறும் போது எவ்வாறு வாரி வாரிப் புலம் பெயர்ந்த மக்கள் அள்ளி வழங்கினார்களோ அது போல இன்றும் போரில் சிதைந்த தம் வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பிட, மனதுள் புதைந்துள்ள கனவு தேசத்தினை மீளுருவாக்கம் செய்திட நம்பியிருக்கும் ஒரேயொரு சக்தியாக இப் புலம் பெயர் சொந்தங்கள் விளங்குகின்றார்கள்.
ஈழ மக்களின் உணர்வுகளைப் புரிந்தவர்களாக புலம் பெயர் மக்கள் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும் என்பதே ஈழத்தில் வாழும் மக்களின் எண்ணமாக இருக்கின்றது. ஈழ மக்களுக்கான வாழ்க்கையினை மீளக் கட்டியெழுப்பிடவும், ஈழ மக்கள் பற்றிய வாழ்வாதாரப் பிரச்சினைகளை உலகறியச் செய்து, இலங்கை அரசினூடாக அல்லாது நேரடியாக உலக நாடுகளின் தலையீட்டினை வன்னி மக்களுக்குப் பெற்றுக் கொடுத்து எம் மக்களின் வாழ்வு சிறக்க இப் புலம் பெயர் சொந்தங்கள் செயற்பட வேண்டும் என்பதே ஈழத்தில் வாழும் எல்லோரினதும் அவா. இதனை எம் சொந்தங்கள் செய்வார்களா?
புலம் பெயர் தேசங்களிலுள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் ஊடாக ஈழ மக்கள் வாழ்வு பற்றிய சீரான கருத்துக்களை வழங்கி ஈழ மக்கள் வாழ்க்கையினைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளிற்கு புலம் பெயர் மக்கள் அனைவரும் பங்களிப்பு நல்கும் வகையில் புலம் பெயர் ஊடகவியலாளர்கள் செயற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான சர்வதேசத்தின் பார்வை வெகு விரைவில் ஈழத்தின் பக்கம் திரும்ப உதவியாக இருக்கும் அல்லவா? இதனையும் எம் சொந்தங்கள் செய்வார்கள் எனும் நம்பிக்கையுடன் ஈழத்தில் உள்ள மக்கள் காத்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தின் புதிய தள வடிவத்தினை புலம் பெயர் தேச மக்கள் அற வழியில் தம் கைகளில் ஏந்தியிருக்கிறார்கள்.
ஈழ மக்கள் கனவினை நனவாக்கும் வகையில் புலம் பெயர் தேச மக்கள் தம் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டவர்களாக வெளிப்படுத்தி, போராட்டத்தினை வேகப்படுத்துவார்களா? இப்போது காலம் தன் கடமையினை புலம் பெயர் மக்களிடம் ஒப்படைத்துள்ளது. ஞாலத்தில் ஈழத் தமிழர்கள் வாழ்வு சிறக்கப் புலம் பெயர் தமிழர்கள் இன்னும் வேகத்துடன் செயற்பட வேண்டும் என்பதே அனைவரினதும் அவா! பொறுத்திருந்து பார்ப்போம்! புலம் பெயர் மக்கள் ஈழ மக்களைக் கைவிடார்கள் எனும் நம்பிக்கையோடு!
பிற் சேர்க்கை: அடியேனும் தற்போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால் என் பதிவுகள், கட்டுரைகள், ஆக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமான பார்வையில் இன்று முதல் வெளி வரவுள்ளது உறவுகளே!
|
30 Comments:
அருமையான பதிவு.மற்றைய பதிவுகளை எதிர்பார்த்து
பிற் சேர்க்கை:அடியேனும் தற்போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால் ////வணக்கம், நிரூபன்!சந்தோஷ அதிர்ச்சி,ஆச்சரியம்,எங்கே வந்திருக்கிறீர்கள்?முன்பே சொன்னீர்கள் தான்,உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
போராட்டம் இருந்தால் தானே முடிவும் இருக்கும்... நல்ல பகிர்வு சகோ...
வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்... தலைப்பே வில்லங்கமா இருக்கு...
@M.Shanmugan
அருமையான பதிவு.மற்றைய பதிவுகளை எதிர்பார்த்து
//
நன்றி நண்பா.
@Yoga.S.FR
பிற் சேர்க்கை:அடியேனும் தற்போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால் ////வணக்கம், நிரூபன்!சந்தோஷ அதிர்ச்சி,ஆச்சரியம்,எங்கே வந்திருக்கிறீர்கள்?முன்பே சொன்னீர்கள் தான்,உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
//
ஹி...ஹி...
ஐயா பொது இடத்தில நாம பேசலாமா?
ஹி....ஹி..
நான் உங்களோடு மின்னஞ்சலில் பேசும் போது சொல்கிறேன்.
நன்றி ஐயா.
@தமிழ்வாசி பிரகாஷ்
போராட்டம் இருந்தால் தானே முடிவும் இருக்கும்... நல்ல பகிர்வு சகோ...
//
பாஸ்...நான் எதிர்பார்த்த கருத்துக்கள் புலம் பெயர் மக்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்று..
அது பற்றி எத்வும் சொல்லாமல் எஸ் ஆகிட்டீங்களே.
@சசிகுமார்
அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்... தலைப்பே வில்லங்கமா இருக்கு...
//
நன்றி பாஸ்.
புலம்பெயர் தமிழர்கள் வீரியத்துடன் இருப்பதால்தான், இந்தியாவில் வந்து விருந்துண்டு மகிழ்ந்த ராஜ[[நாய்]]பக்சே'வால் இங்கிலாந்தில் நிம்மதியாக இருக்க முடியாமல் போனது...!!!
புலம்பெயர் தமிழர்கள் வீரியத்துடன் இருப்பதால்தான், இந்தியாவில் வந்து விருந்துண்டு மகிழ்ந்த ராஜ[[நாய்]]பக்சே'வால் இங்கிலாந்தில் நிம்மதியாக இருக்க முடியாமல் போனது...!!!
சரியா சொன்னீங்க மனோ... இந்த வீரியம் தொடரனும் அப்போதுதான் எங்களுக்கான உரிமைகளை பெறலாம்...!!
நிரூ இப்ப நீங்க எந்த நாட்டில நிக்கிறீங்க? உங்கள் மச்சானை பார்க்க பிரான்சுக்கு வந்தீங்களா? என்னை சந்திக்க முடியுமா? எனது பேஸ் புக்குக்கு மெசேஸ் அனுப்புங்கோ...
அருமையான பதிவு நண்பா
////பிற் சேர்க்கை: அடியேனும் தற் போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால் என் பதிவுகள், கட்டுரைகள், ஆக்கங்கள் கொஞ்சம் வித்தியாசமான பார்வையில் இன்று முதல் வெளி வரவுள்ளது உறவுகளே!
/// 'தற்போது!'
////காட்டான் said...
நிரூ இப்ப நீங்க எந்த நாட்டில நிக்கிறீங்க? உங்கள் மச்சானை பார்க்க பிரான்சுக்கு வந்தீங்களா? என்னை சந்திக்க முடியுமா? /// உள்க்குத்து ஏதும் இல்லையே காட்டான் மாமா )
தமிழண்ணா? வீரியம் உள்ளவன் தான் புலம் பெயர் தமிழன் நீருபித்து உள்ளான்
அடுத்து அடுத்து வரும் அதிரடி பதிவுகளுக்காக ஆவலுடன் மனசாட்சி
சகோ! புலம்பெயர் தமிழர்களின் பல விஷயங்களை அறியத் தந்திருக்கிறீர்கள்.புதிய இடத்திலிருந்து மேலும் காத்திரமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
ஆரம்பமே அசத்தலாகத்தான் உள்ளது.
புலம் பெயர் மக்கள் ஈழ மக்களைக் கைவிட மாட்டார்கள் என்றும்...
அப்படி ஒரு வேளை நடந்தாலும் அது ஈழ மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பவே செய்யும் சகோதரம்...
வருக! வருக!!
தங்கள் வருகையை
ஆவலோடு எதர்ப் பார்க்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
நிரூபன்!
இதற்கு முன்னர் நீ புலம்பெயர் மக்களை திட்டி வெளியிட்ட பதிவுகளுக்கு பிராயச்சித்தமாக இப்பதிவு இருக்கும் என் நீ நினைத்தால், ஐ ஆம் வெரி ஸாரி, அது உன்னுடைய அறிவீனம் என்றே அர்த்தம்!
இந்தப் புகழ்ச்சியெல்லாம் அநாவசியமானது! அதனை எதிர்பார்த்து யாரும் இங்கு செயல்படவில்லை! புலம்பெயர் மக்களாகிய நாம், எமது ஈழத்து சொந்தங்களுக்கு இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கு!
நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை செய்வோம்! இந்த சகட்டு மேனிக்குத் திட்டுறது + அநாவசியமா பாராட்டுறது இதையெல்லாம் நிறுத்திவிட்டு, கொஞ்சம் அமைதியாக இருக்கவும் நிரூபன்!
உண்மையில் புலம்பெயர்ந்து வந்த பின்னரே பெரும்பான்மை உறவுகள் ஈழப் போராட்டத்தின் தேவையை உணர்ந்து ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்கினார்கள்.எங்கள் வழக்கில் பல பழமொழிகள் பேசப்படுவதுண்டு. நிழலின் அருமை வெயிலில் தெரியுமென்பது அதில் ஒன்று.ஆம்,அது சத்திய வார்த்தை! நாங்கள் ஒன்றும் வேண்டுதலால் புலம்பெயரவில்லை.விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கையுமல்ல!சந்தர்ப்பம்,சூழ் நிலை அமைந்தது,வந்து விட்டோம்.அதற்காக பிறந்த நாட்டை மறக்க முடியுமா?எத்தனை பேர் கோடானு கோடி சொத்துகளை,உறவுகளை,பந்தங்களை விட்டு வந்திருக்கிறோம்?சொர்க்கம் கிடைத்தால் கூட சொந்த ஊராகி விடாது.ஊரில் இருப்போருக்கு இங்கிருக்கும் நிலைகளை விளக்க முடியாது.புரிந்து கொள்ளும் பக்குவமுமில்லை!புலம்பெயர்ந்து வந்த பின்னரே இங்கிருக்கும் நிலை புரியும்,தெரியும்!ஏலவே சில புல்லுருவிகள்/காட்டிக் கொடுப்போர் புலம்பெயர் தமிழரைக் குறி வைத்து உளவியல் தாக்குதல் நிகழ்த்துவது ஒன்றும் புதிதல்ல!ஊரில் இருப்போரில் பாதிப் பேர் அதனை நம்பவும் செய்கிறார்கள்!இங்கே என்ன வாழுகிறது?அதே நிலை தானே?இறுதிக்கட்ட இன அழிப்பின் பின்னர் இரண்டுபட்டிருக்கிறோமே,அதற்கு என்ன செய்யப் போகிறோம்?தனிமனித தாக்குதலை விடுத்து அடுத்து என்ன என்று சிந்திப்போம்! நாம் ஒற்றுமை இன்றி இருப்பதை மேடை போட்டுச் சொல்வதை விடுத்து எங்கள் விடுதலைக்கு எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ய முடியுமோ,அத்தனை வழிகளையும் பயன்படுத்துவோம்.பேரினவாதிகளே ஒப்புக் கொண்ட விடயம்,!பிரச்சாரப் போரில் புலம்பெயர் தமிழர்களை வீழ்த்த முடியாது என்பது. நன்றி!
//பிற் சேர்க்கை: அடியேனும் தற்போது புலம் பெயர் தமிழனாகி விட்ட காரணத்தினால்..........//
சந்தோஷம் நிரூ...வாழ்த்துகள்..!
நிரு பாஸ்... நம்பவே முடில்ல... வெயிட் என்ன killi பார்த்துக்கிறேன்.. இது கனவா நனவா என்று.... அவ்வ்வ்வ்
மாற்றத்துக்கு வாழ்த்துக்கள்...
Thanakku thanakkenda than sulaku padakku padakkendu adikkum
அருமையான பதிவை படிக்க வைத்ததற்கு நன்றி..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நாம் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை செய்வோம்! இந்த சகட்டு மேனிக்குத் திட்டுறது + அநாவசியமா பாராட்டுறது இதையெல்லாம் நிறுத்திவிட்டு, கொஞ்சம் அமைதியாக இருக்கவும் நிரூபன்!//
மிஸ்டர் ஓட்டவடை, நான் இப் பதிவில் புலம் பெயர் மக்களை வாழ்த்தியா எழுதியிருக்கேன்? பதிவை முழுமையாகப் படித்து கமெண்ட் போட மாட்டீங்களா? எப்பவுமே அவசரக்குடுக்கைத் தனமாக?
நண்பா, ஈழத்தில் வாழும் மக்கள் புலம் பெயர் மக்களிடம் எதிர்பார்க்கும் விடயங்களைத் தான் பதிவாக எழுதியிருக்கிறேன், அத்தோடு கடந்த காலத்தில் புலம் பெயர் மக்கள் செய்த நல்ல செயல்களையும் எழுதியுள்ளேன்! அவ்வளவும் தான்!
நிரூபன் எனக்கு தனிப்பட்ட முறையில் நல்ல நண்பன் சேட்டிங்கில் நிறைய விசயங்களை பேசியுள்ளோம் ஈழ புலம் பெயர்ந்தவர்களுக்கு அகதிகளாக இந்தியாவில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தவர்
நிரூபனின் எழுத்துக்களை புத்தகமாக வெளியிட முன் வந்த போது அதன் மூலம் வரும் பணத்தை எம் தமிழ்மக்களுக்கு எதாவது செய்யுங்கள் என்றார் அப்படிபட்டவர் புலம் பெயர்ந்தவர்களை பற்றி சிலரின் குறைகளை சுட்டிகாட்டினார் தவிர எல்லா புலம் பெயர்ந்தவர்களையும் ஒட்டு மொத்தமாக குறை சொல்லவில்லை
இதை புலம் பெயர்ந்த என் நண்பர்களே தவறாக கூறவில்லை நிரூபன் கூற்று உண்மைதான் என்று கூறினார்கள் தனிப்பட்ட முறையில் நமக்குள் நடந்த விசயங்களை சில காரணத்தினால் வெளியிட வேண்டியதாகிவிட்டது மாப்ளை மன்னிச்சிரு....
என்னதான் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் தம் பிறந்த மண்ணின் வாழ்வு சிறக்க புலம் பெயர் மக்கள் நிச்சயம் தயங்காது முன் வருவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
யாருய்யா ஓட்டை வடை...அனானிக இப்படி கிளம்பி வராங்களா?உஷாரய்யா...உஷாரு....
Post a Comment