கருணையின்றி கலங்கும் கனிமொழி!
நிரூபனின் நாற்று வலை
நிரூபனின் நாற்று வலை
ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்
முற்பணக் கேள்வியின்றி
அலைக் கற்றையினை
அரை விலையில் கொடுத்தேன் - அப்பன்
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது
ஏல அடிப்படையில்
எல்லோருக்கும் பங்குகளை கொடுத்திருந்தால்
இன்று எனக்கிந்த நிலை வருமா?
தப்புச் செய்தவன் தண்ணி குடிக்கனுமாம்
யாரோ ஒரு ஆன்றோன் தமிழில்
எழுதி வைத்து விட்டு போய் விட்டான்,
அப்பன் சொற் கேட்டு ஆட்டையை போட நினைத்து
வெப்பம் மிகுந்த திஹாரில் வெதுமி வாடுறேன் நான்!
ஜாமீன் கேட்டும் நிராகரித்த பின்னர்
கருணை கிடைக்காதா என ஏங்குகிறேன் ஏன்?
உணர்வும் பாசமும் எனக்குள் இருக்கென
நினைவுபடுத்தி நிற்கிறான் என் மகன்,
மனதில் பிள்ளைப் பாசம் வாட்ட
உடலை திஹார் வெப்பம் சுட்டெரிக்க
வெளியே போய் வாழ(க்) www.thamilnattu.com
கருணை ஜாமீன் கேட்டேன்
காரி என் முகத்தில் உமிழாத குறையாக
என் முகம் வாடிப் போகும் வண்ணம்
தில்லி நீதிமன்றம் தீர்ப்புத் தருகிறது! www.thamilnattu.com
வில்லியாய் நான் இருந்து பல
அரசியற் கொலைகளா செய்தேன்? - இல்லையே!
கலைஞரின் நேசமிகு தமிழ்(ப்)
பிள்ளையாய் அல்லவா
பிறந்து தொலைத்து விட்டேன்!
துன்பத்தில் உழன்று வாடித் துடிக்கும் எனை
பார்த்த பின்னுமா சிபிஐ குற்றவாளி
மன்றத்தில் ஏற்றிப் பார்த்து மகிழ நினைக்கிறது?
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
கதிரையின்றி கவலையுறும் கலைஞர்!
தூக்கமில்லை!
கொஞ்ச நாளாய்
என் கற்பனையில்
ஏதும் தோன்றவில்லை!
ஆட்சிக் கதிரை மட்டும்
அடியேனின் நினைப்பை விட்டு
இன்னும் அகலவில்லை!
உயிர் போகும் நிலை வரின்
பதவியிலே உட்கார்ந்திருக்கையில்
சட்டமன்றக் கதிரையிலே
போக வேண்டுமென எண்ணியிருந்தேன்!
ஆனால் என் கட்சியின் பெயரால்
கரன்சியில் கொள்ளை செய்து
கதிரைக்கும் வைத்து விட்டார்களே ஆப்பு!
ஊழலிலே உலகளாவிய ரீதியில் நாம
தான் டாப்பு என இப்போது பேச்சு!
மகளைப் பிரிந்த துயர் ஒரு புறம்
ஈழம் பற்றி நான் ஈனப் பிழைப்பு செய்திருக்க
என் பேரன் உதயநிதியோ
ஆளும் தமிழினம் ஏழாம் அறிவில்
அறிக்கை வேறு விட்டிருக்கானே!
முடியலையே! தமிழ்த் தாயே!
நான் வாடுகிறேன்!
முந்த நாள் பதவி வந்த ஜே செய்யும்
செயல்களால் நொந்து அறிக்கை விட
வார்த்தைகளைத் தேடுகிறேன்!
நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
பாட நோட்டுப் புக்கில்
என் பெயரை புகுத்தி
தமிழ்க் கூட்டிதென
சுவைக்கச் சொன்னேன்
அம்மா ஜெயலலிதா இப்போது
என் பெயரைத் தேடி வைக்கும்
வேட்டினை எதிர்க்க வழியின்றி
வெம்பி வாடுகின்றேன்!
புத்தியின்றி தடுமாறும் ஜெ!
நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
உலகில் விசித்திர அரசியல் செய்வதில்
தமிழர்கள் விந்தையானோர்
என்பதற்கு நானுமோர் உதாரணம்!
கலகம் ஏதுமின்றி
கலைஞர் குடும்ப(க்)
கட்சி செய்த ரகசிய ஊழலால்
மீண்டும் ஆட்சியில் நுழைந்த
அதிமுக அன்னை நான்!
ஆனாலும் ஒரு கர்வம் - இந்த கொலைஞர்
பெயரை தாங்கிய ஏதும் என் முன்னே
இருக்க கூடாது என்பதில் தனி ஆர்வம்!
நிரூபனின் நாற்று வலையிலிருந்து அனுமதியின்றி காப்பி பேஸ்ட் பதிவு
நோட்டு புக்கு முதல்
மருத்துவமனை வரை
நோண்டிப் பார்த்தேன்!
தமிழகத் தலைவர் என
தான் வாழ்ந்ததற்கு அடையாளமாய்
கலைஞரின் பெயர் தான்
கண் முன்னே வருகின்றது!
தற்போது தலமைப் பதவியில்
நானிருக்கையில்
தமிழினத் தலைவராய் கலைஞர்
எப்போது தோன்றினார்? ஹே...ஹே.....
மப்பேதும் ஏறி மனுசன்
பொறித்து வைத்திருப்பாரோ?
தப்பான ஒருவர் பெயர்
என் முன்னே இருக்கும் எனும்
அப்பாவி யோசனையா என்
மூளையினுள் ஓடுகின்றது?
அறிக்கை விட்டேன்!
கலைஞர் பெயர் கலந்திருக்கும்
அனைத்தும் தடை செய்யப்பட்டு
திருத்தப்பட வேண்டும்!
ஆனால் ஒன்றை மட்டும் மறந்து
நறுக்கென வார்த்தை விட்ட பின்னர்
நானும் யோசிக்கிறேன்?
இந் நிலையில் பார்க்கையில்
கலைஞரின் பெயர் தாங்கி நிற்கும்
அவர் பிள்ளைகளை
விட்டு வைக்கலாமா?
பேதலித்த புத்தியா எனக்கிருகிறது?
இல்லை
ஆதரித்த மக்கள் பணம் தானே
எனும் நிலையா என்னை இயக்குகிறது?
பிற் சேர்க்கை: இங்கே பிரசுரமாகியிருக்கும் கவிதைகளை வசன கவிதை, புதுக் கவிதை மற்றும் மரபுக் கவிதைச் சாயல்கள் கலந்து எழுதியிருக்கிறேன்.
********************************************************************************************************************************
தொடர்ச்சியாகப் பதிவர் அறிமுகம் எனும் பகுதியினை ஒவ்வோர் பதிவின் கீழும் வழங்கி வந்த நான் அண்மைக் காலத்தில் ஏன் நிறுத்தி விட்டேன் என்று உங்களில் பலருக்கு ஐயமிருக்கலாம். ஏலவே என்னுடைய பதிவொன்றில் வேலை பிசி, உயர் கல்விக்காக தாயகத்தை விட்டுப் புலம் பெயர வேண்டிய சூழ் நிலை ஆகிய காரணிகளால் இந்த மாதத்துடன் பதிவுலகை விட்டு விலகப் போவதாகவும், ஓய்வெடுக்கப் போவதாகவும் சொல்லியிருந்தேன். ஆனாலும் பல வாசக உள்ளங்கள் தொடர்ச்சியாகப் பதிவர் அறிமுகத்தினை வழங்குமாறு விடுத்த வேண்டுகோளைப் பரீசீலனை செய்து என்னால் இயன்றவரை புதிய வலைப் பூக்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கிறேன்.
பிரான்ஸிற்குப் போக வேண்டும் என்று ஆசையா? பிரான்ஸிற்குப் போக முடியலையே என்று கவலையா? இக் கவலைகளை மறக்க உங்கள் அனைவருக்கும் உதவப் போகும் ஒரு வலைப் பதிவிற்குத் தான் நாம் இன்றைய தினம் செல்லப் போகின்றோம். உங்கள் கணினித் திரையூடாக நீங்கள் அனைவரும் ரசித்து மகிழும் வண்ணம் பிரான்ஸில் உள்ள அனைத்து விதமான அம்சங்களையும் கண் கவரும் வண்ணப் புகைப்படங்களாக்கி தன்னுடைய "சொர்கத்தின் வாசற்படி" எனும் வலைப் பதிவினூடாக வழங்கி வருகின்றார் பதிவர் "பிரெஞ்சுக்காரன்" அவர்கள்.
"பிரெஞ்சுக்காரன்" அவர்களின் "சொர்க்கத்தின் வாசற்படி!" வலைப் பதிவிற்குச் செல்ல:
*********************************************************************************************************************************
இப் பதிவில் உள்ள படங்கள் யாவும் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
|
51 Comments:
தலைப்பே முழுப் பதிவிற்கான விளக்கத்தை தெரிவித்து விடுகிறது..
இந்திய அரசியலை கூட விட்டுவக்கமாட்டீங்களா
Ok....
Health eppadi irukku ???
Nalama ???
ஒரு கொட்டு..
ஒரு சொட்டு...
ஒரு முட்டு.....
இடித்துரைக்கும் கவிதை....
காலை வணக்கம், நிரூபன்!அருமை!!!ஐயாவை மட்டுமல்ல அம்மாவையும் ஒருபிடி பிடித்திருக்கிறீர்கள்.கனி வாழ்வு சிறையில் தான் கழியப் போகிறது போலும்!////கவி அழகன் said...
இந்திய அரசியலை கூட விட்டுவக்கமாட்டீங்களா?/////ஈழ அரசியலோடு இந்திய அரசியல் பின்னிப் பிணைந்து விட்டது நண்பரே,என் செய்ய? நாம் வேண்டாமென்றாலும்*அவர்கள்* விட மறுக்கிறார்களே?
ஹா ஹா ஹா ஹா அந்த கொலைஞர் படம் சூப்பருங்கோ, கவிதையை ரசித்தேன் மக்கா சூப்பரு....!!!
//ஆப்பர் கொடுத்தேன்//
ஹா ஹா அதுக்குத்தான் இப்ப ஜெயில்ல ஆப்பம் கொடுக்கிறாங்களே
//அப்பன்
கருணாய்நிதியின்//
அவ்வ்வ்.. நிரூ இதில “நா” திரிபடைந்து ”ணா” ஆகிட்டுதா
வணக்கம் நிரூபன்
முதலில் பிரன்சுக்காரனுக்கு வாழ்த்துக்கள் நாங்கள் தமிழர்களே இப்படி தமிழில் ஒருநாட்டை அறிமுகப்படுத்த முடியாது ஒரு பிரன்சுக்காரன் தமிழில் ஒரு பிளாக்கை வைத்திருப்பது ஆச்சரியம் தருக்கின்றது..!!
//உயிர் போகும் நிலை வரின்
பதவியிலே உட்கார்ந்திருக்கையில்
சட்டமன்றக் கதிரையிலே
போக வேண்டுமென எண்ணியிருந்தேன்!//
கவலைப்படாதிங்க தாத்தா இன்னும் ஐந்து வருடத்துக்கு பல்லை கடிச்சிட்டு இருந்தீங்க எண்டா அப்புறம் நீங்கதான் முதல்வர்.
போற போக்க பார்த்தாலே தெரியுது
//அறிக்கை விட்டேன்!
கலைஞர் பெயர் கலந்திருக்கும்
அனைத்தும் தடை செய்யப்பட்டு
திருத்தப்பட வேண்டும்! //
விடுங்க விடுங்க... அடுத்த முறை அவர் வது திருப்பவும் மாத்துவார். அதுக்கப்புறம் நீங்க வந்து திருப்பவும் மாத்துவீங்க...
//இந் நிலையில் பார்க்கையில்
கலைஞரின் பெயர் தாங்கி நிற்கும்
அவர் பிள்ளைகளை
விட்டு வைக்கலாமா?// அதானே... மாத்தீரலாமா?
மொத்தத்தில மூனுபேரும் மூன்று கோணங்கள் தானுங்கோ. கவிதை அருமையா இருக்குது நிரூ.
பிரெஞ்சுக்காரனுக்கு வாழ்த்துக்கள்
@மதுரன்
/அப்பன்
கருணாய்நிதியின்//
அவ்வ்வ்.. நிரூ இதில “நா” திரிபடைந்து ”ணா” ஆகிட்டுதா
//
சகோதரன் மதுரனின் வேண்டுகோளுக்கமைவாகவும்,
இப்படிப் போட்டால் கவிதையின் சுவை கூடும் எனும் மதுரனின் அன்பு மொழிக்கமைவாகவும் மேற்படி வரிகளைப் பின்வருமாறு மாற்றியிருக்கிறேன்.
//
- அப்பன்
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது//
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தலைப்பே முழுப் பதிவிற்கான விளக்கத்தை தெரிவித்து விடுகிறது..
//
ஆமா பாஸ்..
இல்லேன்னா பதிவிற்கும் தலைப்பிற்கும் தொடர்பேதும் இல்லை என்று ஒரு கும்பல் புரளி கிளப்பி விடுவாங்க இல்லே...
@கவி அழகன்
இந்திய அரசியலை கூட விட்டுவக்கமாட்டீங்களா
//
ஏதோ நம்மால முடிஞ்சது பாஸ்..
@FOOD
அரசியல் பதிவு-அப்பீட்டு.
//
அப்போ அடுத்த பதிவு ரிப்பீட்டா...
@NAAI-NAKKS
Ok....
Health eppadi irukku ???
Nalama ???//
அண்ணே இப்போ தேறியிருக்கேன்
மிக்க நன்றி..
நீங்கள் நலமா?
தங்கள் அன்பினாலும், ஆசியினாலும் அடியேன் நலம்.
@மகேந்திரன்
ஒரு கொட்டு..
ஒரு சொட்டு...
ஒரு முட்டு.....
இடித்துரைக்கும் கவிதை....//
நன்றி பாஸ்..
@Yoga.S.FR
காலை வணக்கம், நிரூபன்!அருமை!!!ஐயாவை மட்டுமல்ல அம்மாவையும் ஒருபிடி பிடித்திருக்கிறீர்கள்.கனி வாழ்வு சிறையில் தான் கழியப் போகிறது போலும்!////கவி அழகன் said...
இந்திய அரசியலை கூட விட்டுவக்கமாட்டீங்களா?/////ஈழ அரசியலோடு இந்திய அரசியல் பின்னிப் பிணைந்து விட்டது நண்பரே,என் செய்ய? நாம் வேண்டாமென்றாலும்*அவர்கள்* விட மறுக்கிறார்களே?//
இனிய மாலை வணக்கம் ஐயா,
ஊருக்கு வந்தாச்சா?
பேரப் பிள்ளைகள் எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?
ஆம் கனி பாவம் என்றாகி விட்டது ஐயா.
@மதுரன்
ஹா ஹா ஹா ஹா அந்த கொலைஞர் படம் சூப்பருங்கோ, கவிதையை ரசித்தேன் மக்கா சூப்பரு....!!!
//
நன்றி அண்ணே.
அந்தப் படம் கூகிள் ஆத்தா புண்ணியத்தில எடுத்தது..
@மதுரன்
//ஆப்பர் கொடுத்தேன்//
ஹா ஹா அதுக்குத்தான் இப்ப ஜெயில்ல ஆப்பம் கொடுக்கிறாங்களே
.//
ஹே..ஹே...
இல்ல பாஸ்.. வட இந்திய ஜெயில் என்பதால் சப்பாத்தி தான் அங்கே கொடுப்பாங்க என்று நினைக்கிறேன்.
@மதுரன்
//அப்பன்
கருணாய்நிதியின்//
அவ்வ்வ்.. நிரூ இதில “நா” திரிபடைந்து ”ணா” ஆகிட்டுதா
//
நன்றி சகோ,
தற்போது மாற்றி விட்டேன்.
@காட்டான்
வணக்கம் நிரூபன்
முதலில் பிரன்சுக்காரனுக்கு வாழ்த்துக்கள் நாங்கள் தமிழர்களே இப்படி தமிழில் ஒருநாட்டை அறிமுகப்படுத்த முடியாது ஒரு பிரன்சுக்காரன் தமிழில் ஒரு பிளாக்கை வைத்திருப்பது ஆச்சரியம் தருக்கின்றது..!!//
உங்கள் வாழ்த்துக்கள் நிச்சயமாக இந் நேரம் பிரெஞ்சுக்காரனைச் சென்று சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
நன்றி அண்ணே !
//FOOD said...
அரசியல் பதிவு-அப்பீட்டு.//
நாளையே நெல்லை மேயரிடம் இருந்து இப்படி ஒரு கமன்ட்டா?
நோட்டு முதல் மருத்துவமனை வரை எங்கே நோண்டிப்பார்த்தார்? எட்டிப்பார்த்ததற்கே இந்த அவலம். நோண்டினால் அவ்வளவுதான்.
நிரூபன் Howdy...
///உடலை திஹார் வெப்பம் சுட்டெரிக்க///
கனிமெழி இருக்கும் அறை குளிர்சாதன வசதி கொண்ட அறையாம் ஊடகத்தில் அறிந்தது
கருணாநிதி படம் சான்சேஇல்லை எங்கபுடிச்சிங்க
///கலைஞரின் பெயர் தாங்கி நிற்கும் அவர் பிள்ளைகளை விட்டு வைக்கலாமா?///
அதையாவது விட்டுவைக்குமா?
வணக்கம் மச்சி!நலமா?
கருணை கிடைக்காதா என்ற ஏக்கத்தையும்
ஏழாம் அறிவையும் கலந்து
புத்தியின்றி
தடுமாறும் ஜெ.க்கு குட்டு வைத்து கலக்கியிருக்கிரீர்கள்!
டைட்டிலே முழு கதையையும் சொல்லிடுச்சு!!!!
//ஆப்பர் கொடுத்தேன்
முதலில் வருவோருக்கு
முன்னுரிமை அடிப்படையில்//
ஆப்பர் கொடுத்ததே ஆப்பு ஆகிவிட்டதே..
வணக்கம் சகோ..
கனிமொழி அவர்களின் பார்வையிலான கவிதை படித்தவுடன் மனம் கணக்கத்தான் செய்கிறது.
எனினும் குற்றங்களை அடுக்கடுக்காய் செய்யும் பொழுதே சிறிதேனும் பின் விளைவுகளை யோசித்திருக்கலாம்..
ஏதோ அப்பாவின் (காங்கிரஸ்) தயவால் CBI ஜாமீன் கொடுக்க மறுப்பு தெரிவிக்காவிட்டாலும் நீதிபதி தன் கடமையை சரியாக செய்ததாகவே எனக்குப் படுகிறது
நன்றி
சம்பத்குமார்
கொலைஞரின் ஸ்டைல் போட்டோ சூப்பர்.
//இந் நிலையில் பார்க்கையில்
கலைஞரின் பெயர் தாங்கி நிற்கும்
அவர் பிள்ளைகளை
விட்டு வைக்கலாமா?
பேதலித்த புத்தியா எனக்கிருகிறது?//
அந்தம்மா அந்த ஐடியால தான் இருக்குன்னு நினைக்கிறேன்..
கனிமொழி கவிதை சோகம்
கலைஞர் கவிதை செம காமெடி
அம்மா.... ஹி...ஹி...ஹி.. எனக்கு அரசியல் தெரியாது :-)
தாங்கள் அறிமுகப்படுத்திய பிரஞ்சுக்காரன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
வணக்கம் நிரூபன் அண்ணா! முதலில் தரமான, சுவையான உங்கள் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்!
அடுத்து, உங்கள் தளத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றிகள்! புதிய பதிவர்களை அறிமுகம் செய்து ஊக்கப்படுத்தி வரும் உங்கள் பணி என்றுமே போற்றுதற்குரியது!
பின்னூட்டங்களில், எனக்கு வாழ்த்துத் தெரிவித்த எனது புதிய நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
இங்கே என்னை அறிமுகம் செய்திருப்பதால், நாற்று தளத்தின் மூலமாக இன்று என்னுடைய தளத்துக்குப் பலர் வந்து செல்கிறார்கள்!
அவர்கள் அனைவருக்கும், நிரூபன் அண்ணா உங்களுக்கும் மீண்டும் நன்றிகள்!
இன்னுமா இந்த உலகம் இவரை(தாத்தா) பற்றி பேசுது........ஹி.ஹி.ஹி.ஹி......
எப்போதும் பச்சைத்தமிழன்... இப்போ நான் வெள்ளைத்தமிழன்...
வாரத்துக்கு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு எழுதினாலும் பிரஞ்சுக்காரன் யார் என்பது ஊருக்கே தெரியுமே...
கருணை ஜாமீன் கேட்டேன்
காரி என் முகத்தில் உமிழாத குறையாக///
அதான் மக்கள் காரி துப்பிட்டான்களே... இதில அவங்களும் துப்பனுமா.... அவ்வவ்
தூக்கமில்லை!
கொஞ்ச நாளாய்
என் கற்பனையில்
ஏதும் தோன்றவில்லை!
ஆட்சிக் கதிரை மட்டும்
அடியேனின் நினைப்பை விட்டு
இன்னும் அகலவில்லை!///
இனி இந்தாளுக்கு கனவில் மட்டுமே கதிரை...
உயிர் போகும் நிலை வரின்
பதவியிலே உட்கார்ந்திருக்கையில்
சட்டமன்றக் கதிரையிலே
போக வேண்டுமென எண்ணியிருந்தேன்!//
ஹீ.. ஹீ..
இவரு உந்த ஆசையில் தான் இன்னும் தன் பதவியை மகனுக்கே கொடுக்காமல் இன்னும் இழவு காத்த கிளி போல இருக்காரு.. மக்க உன் ஆசை இனி அம்ம்போதான்..
புத்தியின்றி தடுமாறும் ஜெ!//
ரெம்பவே தடுமாறுகிறார்.....
அவரை நேசிக்கும் என்னை போன்றவர்களை கூட அவரை வெறுக்க பண்ணாமல் விட மாட்டார் போல..
இன்னொன்றையும் நான் மறக்க படாது
கருணாநிதி பண்ணும் வெட்டி பந்தாவால்தான் ஜெயா இப்படி கொலை வெறியோட இருக்காரு
உன்தாள் திருந்தாத வரை அவாவையும் திருத்த முடியாது..
பிரஞ்சு காரனுக்கு வாழ்த்துக்கள்.. நம்ம தோஸ் தான்.
@மதுரன்
/அப்பன்
கருணாய்நிதியின்//
அவ்வ்வ்.. நிரூ இதில “நா” திரிபடைந்து ”ணா” ஆகிட்டுதா
//
சகோதரன் மதுரனின் வேண்டுகோளுக்கமைவாகவும்,
இப்படிப் போட்டால் கவிதையின் சுவை கூடும் எனும் மதுரனின் அன்பு மொழிக்கமைவாகவும் மேற்படி வரிகளைப் பின்வருமாறு மாற்றியிருக்கிறேன்.
//
- அப்பன்
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது//
என்ன பொடியங்களா இரண்டு பேரும் ஒரு மார்க்கமாதான் திரியுறீங்க.. யாழ்ப்பாணத்துக்கு ஆட்டோ வராதென்ற தைரியமா...!!?? கலக்குங்கோ கலக்குங்கோ..!!
ஒண்டு வடக்க இழுத்தா மற்றது தெற்க இழுக்குதுன்னு சொல்லுவாங்க அதைப்போல அம்மாவும் ஐய்யாவும் செய்யுற அரசியலால் பாவம் தமிழன் தலைதான் உருளுது..
பாவம் தாத்தா அவர் தினமும் அறிக்கை விடனும் என்ற ஆசையில் பட்டவலிகள் அதிகம் இப்போது மகள் துயரம் ஏதோ வாழ்கிறார்!
மகன் பாசம் உண்மையில் கவிதாயினி கனிமொழி பாவம்!
பிரென்சுக்காரனுக்கு தனிமரத்தின் வாழ்த்துக்கள்!
கருநாய் நிதியின் அதட்டற்
சொல் கேளாது////
இது புதுமையான விடயம் தமிழில் இது சரியா??? கருநாய்-கருமை நிறமான நாய் -வைரவர் வாகணம் ஒன்னும் புரியவில்லை//
சொல்லுக்கேட்காதது கருப்பு நாய் மட்டுமா????
கருணையின்றி கலங்கும் கனிமொழி! கதிரையின்றி கவலையுறும் கலைஞர்! புத்தியின்றி தடுமாறும் ஜெ! //
தலைப்பு...ஒரு வார அரசியல் சாராம்சம்...
மு க படம் அசத்தல்...
குட்டு மழை...
Post a Comment