தமிழர்களை அழிப்பதற்கு உலக நாடுகள் உதவினாலும், தமிழர்களிடமிருந்து பணத்தினைப் பெருமளவில் பெற்று அதனை தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தேவைகளுக்காகவும்;தமிழருக்கு எதிரானோருக்கும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என நினைத்தார்கள் இராணுவத்தினர்.இதன் பிரகாரம் மட்டக்களப்பில் இருந்த கருணா குழுவினரின் செயற்பாடுகளை வவுனியா நோக்கி விரிவுபடுத்தினார்கள் இராணுவத்தினர். (Please Notify, I'm Clarifying those sentences Very Clearly. This is not my opinion Or Not my quotation.) இனி நான்காவது பாகத்தின் தொடர்ச்சியாக உங்கள் நாற்று வலைப் பதிவில்! இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள Drop Down Menu இல் கிளிக் செய்யுங்கள்!
ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!
பாகம் 05:
இதன் பிரகாரம்; தமிழ் வணிகர்கள், வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களின் உறவினர்களிடம் இனந் தெரியாத நபர்கள் என்ற பெயரில் தொலைபேசியூடாக அச்சுறுத்திக் கப்பம் கோருவதாகும். இந்த டீலிங் எப்படி இடம் பெற்றது என்றால், வவுனியாவில் உள்ள வர்த்தகர்கள், மற்றும் வெளி நாட்டில் உறவினர் உள்ளோரிடம் தொலைபேசியூடாக நாம் கருணா குறூப் பேசுகிறோம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஒன்றாகச் சுட்டுக் கொன்று விடுவோம். எங்களுக்கு நாற்பது அல்லது ஐம்பது இலட்சம் ரூபா வேண்டும் எனக் கேட்டு அச்சுறுத்துவார்கள். "ஓக்கே நாங்கள் நீங்கள் கேட்ட பணத்தினை தருகிறோம்" எனச் சொல்லி ஒத்துழைப்போருக்கு அச்சுறுத்தல் ஏதுமின்றி அவர்கள் தொலைபேசியூடாக சொல்லும் இடத்திற்கு பணத்தினைக் கொண்டு சென்று கொடுத்தால் போதும்.
"எங்களிடம் இவ்வளவு தொகைப் பணம் இல்லையே, நாம என்ன செய்வோம்? நீங்கள் உண்மையிலே கருணா குழு தானா?" எனக் கேட்போருக்கு அடுத்த நாள் காலையில் கிரைனட் தாக்குதல் நடத்தி அவர்கள் தான் நாங்கள் என உறுதிப்படுத்தும் வகையிலான துண்டுப் பிரசுரம் (நோட்டீஸ்) ஒன்றும் வாசலில் போட்டு விட்டுச் செல்வார்கள் அந்தக் குழுவின் பெயரைக் கொண்டவர்கள்.இந்தச் சம்பவங்களையும் கருணா குழுவினர் தான் வவுனியாவில் செய்தார்கள் எனப் பொது மக்கள் மத்தியிலும், நீதிக்கு ஆதரவானோர்கள் மத்தியிலும் பேச்சுக்கள் பரவலாக எழத் தொடங்கியது. இந் நபர்கள் தமது டீலிங்கிற்கு ஒத்துழைக்கும் பொது மக்களிடம் பணத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான இடமாக ஜோசேப் இராணுவ முகாமிற்கு முன்னுள்ள தேத்தண்ணிக் (தேநீர் கடை) கடையினையும், குருமண்காடு நூலகத்திற்கு சமீபமாக உள்ள விசேட அதிரப்படை முகாமினையும் (STF CAMP), குருமண்காடு பூங்காவினையும், வவுனியாவில் பண்டாரி குளத்திற்கு சமீபமாக உள்ள ட்ரான்ஸ்போமரடி முகாம் என அழைக்கப்படும் முகாமினையும் தெரிவு செய்திருந்தார்கள்.
மக்கள் மத்தியில் இனந் தெரியாத நபர்களும், கருணா குழுவின் பெயரால் கப்பம் கோருவோரும் அச்சத்தை உண்டுபண்ணும் வேளையில் வவுனியா நீதிவானாக இருந்த திரு இளஞ்செழியன் அவர்களின் கவனத்திற்கு மேற்படி விடயத்தினை வவுனியா வணிகர் கழகத்தினர் கொண்டு வந்தார்கள். இரவில் பொது மக்கள் வீடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் வந்து கதவினைத் தட்டினால் பொலிசாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற் கொள்ள வேண்டும் எனவும், யாராவது கப்பம் கோரினால் உடனே நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட விசேட பாதுகாப்புக் குழுவினூடாக பொலிஸாரிடம் முறையிட வேண்டும் என்றும், வவுனியாப் பொலிஸார் மக்களினைப் பாதுகாக்கும் முறையில் செயற்படுவார்கள் எனவும் அறிவித்தல் ஒன்றை விடுத்தார் திரு.இளஞ்செழியன் அவர்கள்.
"பாம்புப் பொந்தினுள் இருக்கும் பாம்புகள் கடிக்கின்றனவா"எனக் கண்காணிக்குமாறு இன்னோர் பாம்பிடம் சொன்னால் எப்படி இருக்குமோ அதே போலத் தான் நீதிபதி அவர்களால் அர்ப்பணிப்பு முறையில் செயற்படுவார்கள் என மக்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் கப்பம் கோருவோரிடம் பணத்தினை வாங்கித் தம் விசுவாசத்தினைத் திசை திருப்பிக் கொண்டார்கள். ஆனால் வவுனியா மக்களுக்கு இந்தக் குழுக்களால் இருந்த அச்சுறுத்தலை ஓரளவுக்கேனும் குறைத்த பெருமை நீதிபதி இளஞ்செழியன் அவர்களையே சாரும். இறுதியில் இந்தக் கப்பம் கோரும் நபர்கள் நீதிபதியின் வீட்டிற்கு கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தியதோடு மட்டுமல்லாது அவரது வாகனத்தினையும் வழி மறித்துத் தாக்குதல் நடத்திச் சேதங்களை விளைவித்தும் இந்தக் கப்பம் கேட்கும் குழுவினர் நீதிபதியின் வாயினை அடக்க முயற்சி செய்தார்கள்.
நெருப்பின் மனதில் "கப்பம் கோருவோரை எப்படிக் கைது செய்வது?" அவர்களை உயிரோடு பிடித்து பொது மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும். கப்பம் கோருவோரின் நடவடிக்கையினைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந் நேரத்தில் ஒரு தாக்குதலில் புலிகள் வசமிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இராணுவப் பகுதிக்குள் சிக்கி விட, புதிதாக இன்னோர் மோட்டார் சைக்கிளை வாங்க வேண்டிய தேவை புலிகளுக்கு எழுகின்றது.வவுனியாவில் மிக்ஸர் வியாபரத்திலும், ஏனைய பொலித்தீனில் அடைக்கப்பட்ட சிறு சிறு பைக்கட் (பாக்கட்) மளிகைப் பொருள் - இறைச்சிச் சரக்கு பைக்கட், முறுக்கு, கடலை எனப் பல சிறு பொதி செய்யப்பட்ட பொருள் வியாபாரத்திலும் பிரபல்யமான தமிழ் வணிகரான விண் மிக்ஸர் நிறுவனத்தின் உரிமையாளரைப் புலிகளின் அணியினர் நாடுகின்றார்கள்.
புதிதாக ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுக்குமாறு புலிகள் கேட்கையில் விண் மிக்ஸர் நிறுவன அதிகாரியோ மறுப்புத் தெரிவித்து வாங்கித் தர முடியாது எனக் கூறி புலிகளை அனுப்பி வைக்கின்றார். ஆனாலும் விண் மிக்ஸர் நிறுவன உரிமையாளரின் நிலையினை உணர்ந்த புலிகள் மௌனமாக வெளியேறிச் செல்கின்றார்கள். இந் நேரத்தில் தான் விண் மிக்ஸர் உரிமையாளரிடம் கருணா குழுவினர் எனும் பெயரால் ஐம்பது இலட்சம் ரூபா கப்பம் கோரிய சம்பவம் புலிகளின் உளவாளிகள் ஊடாக புலிகளிற்கு தெரிய வருகின்றது. புலிகள் நேரடியாகவே விண் மிக்ஸர் வீட்டிற்குச் சென்றார்கள்.
"உங்கள் மூலமாச்சும் மக்களின் நன்மை கருதி கருணா குழு எனும் பெயர் மூலம் தொலைபேசியில் அச்சுறுத்தல் செய்து பணம் கேட்போரை கண்டு பிடிக்கனும். அவர்களை அழித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். நீங்கள் எப்போது எங்கே அந்தக் குழுவினரைச் சந்திக்கப் போறீங்க என்று சொல்ல முடியுமா?. நாங்களும் பின்னால் வந்து மறைந்திருந்து உங்களுக்கு எந்தவிதமான இழப்பும் வராத வண்ணம் எமது நடவடிக்கைகளை மேற் கொண்டு அந்தக் குழுவினரை அழிக்கிறோம். இல்லாவிடில் உயிரோடு பிடிக்கிறோம். நீங்க தான் எங்களுக்கு உதவி செய்ய வேணும்" என்று புலிகள் கெஞ்சிக் கேட்டார்கள்.விண் மிக்ஸர் அதிகாரியோ தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஏதாவது நடந்தாலும் என மறுப்புத் தெரிவித்து விட்டார்.
ஆனாலும் புலிகள் உக்குளாங்குளத்திலிருந்த முருகனின் இளமைப் பெயர் கொண்ட இளைஞன் ஊடாக விண் மிக்ஸரிடம் மீண்டும் ஒரு டீலிங் வைத்துப் பார்த்தார்கள். "நீங்கள் எங்களுக்கு குறிப்பிட்ட நபர்களைப் பிடிக்க உதவி செய்தால், நாங்கள் அனைவரும் உங்களைக் குடும்பத்தோடு இந்தியாவிற்குச் செல்வதற்கு விசா எடுத்து பத்திரமாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறோம்” எனவும் கேட்டுப் பார்த்தார்கள். ஆனாலும் விண் மிக்ஸர் உரிமையாளர் இறங்கி வரவில்லை.குறித்த நாளில் ஐம்பது இலட்சம் பணத்தினை குருமண்காடு பூங்காவில் வைத்து விண் மிக்ஸர் அவர்கள் கப்பம் கோருவோரிடம் கையளித்தார். இந்தச் சம்பவம் நிகழ்ந்து முடிந்த பின்னர் தான் விண் மிக்ஸர் கப்பம் கொடுத்த விடயம் புலிகளின் காதுகளை எட்டியது.
நிரூபனின் நாற்று வலை
அப்போது புலிகள் செய்த அவசரக் குடுக்கைத் தனமான செயல் தான், புலிகளின் வவுனியாத் தாக்குதல்களின் வீழ்ச்சிக்கான ஆரம்பச் செயலாக அமைந்தது.இப்படியொரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த இராணுவம், அல்லது புலிகளின் உள்ளிருந்து தாக்கும் தாக்குதல்களைச் சமாளிக்க முடியாது திண்டாடிக் கொண்டிருந்த இராணுவம் தனக்கு கிடைத்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்தி வன்னி மீதான படையெடுப்பிற்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கியது. அந்தச் சம்பவம் என்ன? வவுனியாக் கள முனையின் வீழ்ச்சிக்கு புலிகள் தாமகத் தேடிப் பெற்றுக் கொண்ட விடயங்கள் எவை? இது பற்றி மேலும் அறிய ஆவலா! அடுத்த பாகத்திற்காக காத்திருங்கள்!
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
இப் பதிவிற்கான படங்கள் யாவும் கூகுள் தேடல் மூலம் பெறப்பட்டவை!
|
19 Comments:
வணக்கம் சகோதரம்! இருங்கோ படிச்சுட்டு வாறன்!
அப்போது புலிகள் செய்த ஈனத் தனமான செயல் தான்,//////
மச்சி, இந்த வரிகளை நீக்கு! இதன் அர்த்தம் வேறு!
மற்றும்படி தொடர் நன்றாகச் செல்கிறது! விறுவிறுப்பும்கூட! வாழ்த்துக்கள்!
நிறைய விடயங்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள்..
அப்போது புலிகள் செய்த ஈனத் தனமான செயல் தான், புலிகளின் வவுனியாத் தாக்குதல்களின் வீழ்ச்சிக்கான ஆரம்பச் செயலாக அமைந்தது//
அது என்ன என்று யூகித்தேன்...இருந்தாலும் காத்திருக்கிறேன் சகோதரம்...ஏற்கனவே சொன்னது தான்...என் புரிதலுக்கு புறம்பாக ஏராளமான செய்திகள் இந்த தொடரில் மட்டும்...
ம்ம் நடத்துங்க
இம்த பணம் பிடுங்கும் செயலை நிகழ்த்தியது உண்மையிலே கருணா குழுவா?
புலிகள் செய்தது என்ன?
//"பாம்புப் பொந்தினுள் இருக்கும் பாம்புகள் கடிக்கின்றனவா" எனக் கண்காணிக்குமாறு இன்னோர் பாம்பிடம் சொன்னால் எப்படி இருக்குமோ //
இது போல பல இடங்களில் மிக சரியான வார்த்தைகள்.தொடருங்கள்.சகோ!
வணக்கம் நிரூபன் தொடர் நன்றாக போகிறது ஆனா முக்கியமான கட்டம் வரும்போது அடுத்த பதிவை பார்க்க சொல்லுறிங்க அடுத்த பதிவிலும் அப்படி போடாதீங்க .... ஹி ஹி
அந்தச் சம்பவம் என்ன? வவுனியாக் கள முனையின் வீழ்ச்சிக்கு புலிகள் தாமகத் தேடிப் பெற்றுக் கொண்ட விடயங்கள் எவை? இது பற்றி மேலும் அறிய ஆவலா! அடுத்த பாகத்திற்காக காத்திருங்கள்!
காத்திருக்கிறோம்...
காத்திருப்பேன்.
@கோகுல்
இம்த பணம் பிடுங்கும் செயலை நிகழ்த்தியது உண்மையிலே கருணா குழுவா?
புலிகள் செய்தது என்ன?
//
புலிகள் ஆட்களை கடத்தி கப்பம் கோரவில்லை,
நான் இங்கே கருணா குழு தான் என்று நிரூபித்தும் சொல்லவில்லை, மக்கள் மத்தியில் கருணா குழுவினர் என்று தான் கதைகள் உலவின என்றே குறிப்பிட்டுள்ளேன் சகோ.
இரவு வணக்கம்,நிரூபன்!படித்தேன்.பல விடயங்கள் தெளிவாகின்றன, நன்றி!
தொடர்கின்றேன் தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள் சகோ!
தொடரட்டும் ஆவணப்பதிவு !
எப்படி இவ்வளவு தைரியமாக எழுதுகிறீர்கள் என்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது... உங்கள் வீரத்தை மெச்சுகிறேன்...
தில்லான பதிவு..
பேக் கிரவுண்டில் பச்சைக்கலர் மாறுனதுக்கும், அம்மா ஆட்சிக்கும் சம்பந்தம் இல்லைன்னு நம்பறேன் ஹி ஹி
நேற்று தவற விட்டுவிட்டேன்..பிறகு படிக்கிறேன்..
மர்மத் தொடர் கதைபோல்
தொடர்கிறது!
காத்திருக்குறோம்
புலவர் சா இராமாநுசம்
துணிச்சலாக அனைத்துவிடயங்களையும் நடுநிலைமையுடன் எழுதுகிறீர்கள் நிரூபன். இதற்காக உங்களுக்கு துரோகி என்ற பட்டமும் ஒருசிலரால் வழங்கப்படலாம்.
Post a Comment