"ஈழத்தில் இருப்பவர்க்கு இப்போது என்ன குறை" என ஒரு சிலரும், ஈழத்தில் இப்போதும் அதே அடிமை நிலையும் சிங்கள அரசின் அடக்கு முறையும் நிலவுகின்றதே என இன்னொரு தரப்பினரும் ஒரு வரை ஒருவர் போட்டி போட்டு வெல்ல முடியாதவர்களாய் பிரச்சாரப் போர் நடாத்தி வருகின்றார்கள். ஈழத்தில் யுத்தமற்ற சூழல் நீங்கி, மக்கள் வாழ்வினை மீளக் கட்டியெழுப்பும் திட்டங்கள் பெயரளவில் தொடங்கப்பட்டாலும், ஈழத்திலுள்ள மக்கள் தம் நாளாந்த வாழ்க்கையினை வெளியே சொல்ல முடியாத ஒரு வித அச்ச உணர்வோடு தான் கழிக்கின்றார்கள். ஆக இங்கே ஈழத்தில் பாலாறும் தேனாறும் ஓடுகின்றது என்பது உலக நாடுகளை ஏமாற்றும் நோக்கில் இலங்கை அரசால் முன் வைக்கப்படும் பொய்ப் பிரச்சாரேம்!
"எந்தவொரு இனமும் வாக்கெடுப்பின் அடிப்படையில் தனக்குரிய பெரும்பான்மை ஆட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் போது பிரிந்து செல்ல நேரிட்டால் பிரிந்து வாழவும், தம்மைத் தாமே சுயாட்சி செய்யவும் பரி பூரண சுதந்திர உரிமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட இனம் எனும் அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்கிறது" என ஐக்கிய நாடுகள் சபை பெயரளவில் ஒரு கொள்கை வைத்திருக்கின்றது. இக் கொள்கை உலகில் தமக்கான தனியரசினை நிறுவிய நாடுகளுக்கு மாத்திரம் பொருந்திப் போகும் வகையிலும், இலங்கை எனப்படும் பௌத்த மத குருமாரின் மஞ்சள் துண்டில் செங்கோலாட்சி செய்யும் இனவாத அரசிற்கு பொருந்தாத வகையிலும் காணப்படுகின்றது.
ஈழத்தில் இற்றைக்கு முப்பாதாண்டுகளுக்கு முன்பதாக தனியரசு வேண்டித் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த பிற்பாடு, இன்றைய கால கட்டத்தில் அற வழியிலான போராட்டத்திற்கு மீண்டும் ஈழத் தமிழ் மக்கள் சென்றிருக்கிறார்கள். "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்! நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!" என்று பல தசாப்தங்களாக நாம் சொல்லிச் சொல்லி நம்பிக்கை எனும் ஒரு வார்த்தையின் மீது ஏறி எம்மைச் சூழ்ந்திருக்கும் முட்களின் கோரப் பிடிக்குள்ளிருந்தும் எமக்கான விடுதலைக்குரிய பாதை விரைவில் திறக்கும் எனும் அசையா நம்பிக்கை கொண்டவர்களாக எம் நாட்களை நகர்த்தி வருகின்றோம்.
உண்மையில் தன் இனத்தினையும், இன மானத்தினையும், தன் மொழியினையும் நேசிக்கின்ற பெரும்பான்மையான ஈழ மக்கள் மனதில் இன்றும் வெளித் தெரியாத உள்ளே கனன்று கொண்டிருக்கின்ற ஒரு இலட்சியத் தீயாக தமக்கான தனியாட்சி அல்லது பிரிந்து செல்லும் உரிமை வேண்டும் எனும் கொள்கையே காணப்படுகின்றது.
"நாடு கடந்த அரசு நாளை விடுதலை பெற்றுத் தரும் என்றும், எமக்கான விடுதலைக்குரிய வழி வெகு தொலைவில் இல்லை" எனப் பலர் பிராச்சப் போர் நிகழ்த்தி நிற்கும் இச் சந்தர்ப்பத்தில்; நாம் முள்ளிவாய்க்கால் அவலம் நிக்ழ்ந்து மூன்றாண்டுகள் நெருங்கும் இச் சூழலில் எமக்கான விடி வெள்ளி கீழ் வானில் தோன்றாதா என அங்கலாய்த்தபடி இருக்கின்றோம்.
"நாடு கடந்த அரசு நாளை விடுதலை பெற்றுத் தரும் என்றும், எமக்கான விடுதலைக்குரிய வழி வெகு தொலைவில் இல்லை" எனப் பலர் பிராச்சப் போர் நிகழ்த்தி நிற்கும் இச் சந்தர்ப்பத்தில்; நாம் முள்ளிவாய்க்கால் அவலம் நிக்ழ்ந்து மூன்றாண்டுகள் நெருங்கும் இச் சூழலில் எமக்கான விடி வெள்ளி கீழ் வானில் தோன்றாதா என அங்கலாய்த்தபடி இருக்கின்றோம்.
மக்கள் வெளியே சொல்ல முடியாதவர்களாய் அதிகாரப் பலத்தினால் துப்பாக்கி முனை கொண்டு நசுக்கப்பட்ட குரல் வளையினை உடையோராக அச்சத்தில் வாழ்ந்தாலும்; தம் உளத்தில் தாம் அடக்கு முறையின் கீழ் வாழ விரும்பாதோராகவும், சிறுபான்மை மக்கள் என அடை மொழி சொல்லப்பட்டு அடிப்படை வசதிகள் முதல் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்படும் நிலையினை ஏற்காதோராகவும் தான் வாழுகின்றார்கள். இவ்வாறெல்லாம் வாழுகின்ற ஈழ மக்கள் தம் எதிர்காலம் எவ்வாறு அமையும்? தமக்கான எதிர் காலத்தை யார் கட்டியெழுப்புவார்கள் எனும் ஐயத்தின் கீழ் வாழ்கின்றார்கள். இன்று மேய்ப்பர்கள் யாருமற்றுத் திறந்த சூனியப் பிரதேசத்தில் கைவிடப்பட்ட ஆடுகளின் நிலைக்கு ஒப்பானதாக ஈழ மக்கள் இருக்கின்றார்கள்.
என்னிடத்தே இம் மக்கள் தொடர்பில் உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் உறவுகளிடம் எழுகின்ற கேள்விகள் இவை தான்:
*நாளை தமக்கான உரிமையினை யார் பெற்றுத் தருவார் எனும் ஐயத்தில் வாழும் ஈழ மக்களிற்கு இனி ஒரு தலமை அமைதல் சாத்தியமா?
*நாடுகடந்த அரசாங்கம் என்று சொல்லப்படுவோரால் ஈழ மக்களிற்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா?
*காலங் காலமாக நம்புங்கள் தமீழம் நாளை பிறக்கும் எனும் மன நிலையோடு வானம் பார்த்து மழையை எதிர்பார்த்து ஏங்கும் உறவுகளாய் உள்ள தமிழ் மக்களிற்கு இனி எந்த வழியில் தீர்வு கிடைக்கும்?
*இம் மக்களுக்கு தீர்வு கிடைக்க வழியேதும் இல்லையா?
*அடிமைகளாக தாம் வாழும் காலம் வரை ஆயுத முனையின் கீழ் அச்சத்தோடு வாழ்ந்து தொலைக்க வேண்டிய சாபத்தினையா காலம் ஈழ மக்களுக்குத் தந்திருக்கிறது?
இந்த வினாக்களுக்கான விடைகள் ஒவ்வோர் மனங்களிலும் வெவ்வேறு கோணங்களில் இருக்கலாம். சில வேறுபட்ட சிந்தனைகளை உங்கள் மனதில் தோன்றச் செய்யலாம்.ஈழ மக்களின் எதிர் காலம் பற்றி இங்கே விவாதிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகின்றது என நீங்கள் யோசிக்கலாம்? சில வேளை ஈழ மக்களின் எதிர்காலம் கணிப்பிட முடியாத கருமை சூழ்ந்த வாழ்வாக அமைந்து கொள்ளும் என உங்களில் சிலர் கருதலாம். ஆனாலும் எம் மன உணர்வுகளை ஒரு பொது இடத்தில் பகிர்ந்து கொள்வதன் மூலம் எம் குழப்பங்கள் அனைத்திற்குமான தீர்வாக ஒரு சிறு துளிக் கருத்தாவது ஈழ மக்கள் நோக்கிய அறப் போரினை முன்னெடுப்போரிடம் போய்ச் சேர்ந்தால் எல்லையில்லாப் பேரின்பத்தைக் கொடுக்கும் அல்லவா?
வாருங்கள் உறவுகளே! உங்களுக்கான விவாதக் களம் இங்கே திறந்திருக்கிறது! உங்கள் கருத்துக்களால் சொற் போர் புரிந்து தமிழ் இனத்தைச் சூந்துள்ள காரிருளை அகற்ற என்ன வழி என்று கூறுங்களேன்!
பிற் சேர்க்கை: விவாத மேடையில் பதிவர் அறிமுகம் இணைப்பதால் விவாதங்களைத் தொடரும் அன்பு உள்ளங்கள் அறிமுகப்படுத்தப்படும் பதிவரின் வலைக்குச் செல்ல முடியாது விவாதக் கருத்துக்களோடு முட்டி மோதுகின்ற காரணத்தினால், விவாத மேடையில் பதிவர் அறிமுகத்தினை இணைத்துக் கொள்ள முடியவில்லை என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
|
65 Comments:
// "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்! நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!" என்று பல தசாப்தங்களாக நாம் சொல்லிச் சொல்லி நம்பிக்கை எனும் ஒரு வார்த்தையின் மீது ஏறி எம்மைச் சூழ்ந்திருக்கும் முட்களின் கோரப் பிடிக்குள்ளிருந்தும் எமக்கான விடுதலைக்குரிய பாதை விரைவில் திறக்கும் எனும் அசையா நம்பிக்கை கொண்டவர்களாக எம் நாட்களை நகர்த்தி வருகின்றோம்.//
இனிய காலை வணக்கங்கள் சகோ..
வலிகளை சொல்லி நிற்க்கும் நிஜங்கள்..
”என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?” பாரதியின் வரிகள் நினைவிற்க்கு வருகிறது சகோ...
விரைவில் சுதந்திரம் கிட்ட இறைவனிடம் வேண்டுகிறேன்
அங்க பின்னூட்டம் போட்டிட்டுக் கை எடுக்கேல்லை இஞ்ச தலைப்பு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). இதைப் படிப்பேனோ... இருளைப்படிப்பேனோ.. நில்லுங்க வாறேன்ன்ன்ன்:))
வணக்கம் சகோ இந்த விவாதத்தில் ஓர் வழி கூற வழி தெரியாத போதிலும் உங்கள் முயற்சி பயனளிக்க என் வாழ்த்துக்கள் .உங்கள் தேசப் பற்றைக் கண்டு தலை வணங்குகின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
வணக்கம் நிரூ! நம்பிக்கை தான் வாழ்க்கையென்று நம்பிக்கொண்டு வாளாவிருப்பதை விடுத்து,இப்போதிருக்கும் தலைமைகளை தட்டி நிமிர்த்தி சுதந்திர வாழ்வுக்கு வழி தேடுவோம்!நா.க வின் செயற்பாடுகள் சூடு பிடிக்க மறுக்கிறது.உள்நாட்டில் மக்கள் துணிந்து செயற்பட ஆரம்பித்துள்ளார்கள்!புலம்பெயர் தேச ஜனநாயக செயற்பாடுகளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன!வெல்வோம்!!!!
hi niru, thanks for this valuable post that will creat a great concern on the issues of tamils who have been facing a number of problems in srilanka nowadays.
@சம்பத்குமார்
இனிய காலை வணக்கங்கள் சகோ..
வலிகளை சொல்லி நிற்க்கும் நிஜங்கள்..
”என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ?” பாரதியின் வரிகள் நினைவிற்க்கு வருகிறது சகோ...
விரைவில் சுதந்திரம் கிட்ட இறைவனிடம் வேண்டுகிறேன்//
நன்றி சகோதரம்,
நம்பிக்கையோடு நாட்கள் தான் நகர்கின்றதே தவிர மக்கள் எதிர்பார்க்கும் நல்ல சேதி ஏதும் இன்னமும் கிடைக்கலையே...
@athira
அங்க பின்னூட்டம் போட்டிட்டுக் கை எடுக்கேல்லை இஞ்ச தலைப்பு... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))). இதைப் படிப்பேனோ... இருளைப்படிப்பேனோ.. நில்லுங்க வாறேன்ன்ன்ன்:))
//
அப்போ நல்ல நேரம் என்று சொல்ல வாறீங்க...
குறும்படத்தைப் படியுங்க...
அரசியல் தான் உங்களுக்கு பிடிக்காத ஒன்றாய் ஆச்சே அக்கா.
@அம்பாளடியாள்
வணக்கம் சகோ இந்த விவாதத்தில் ஓர் வழி கூற வழி தெரியாத போதிலும் உங்கள் முயற்சி பயனளிக்க என் வாழ்த்துக்கள் .உங்கள் தேசப் பற்றைக் கண்டு தலை வணங்குகின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .
//
நன்றி அக்கா..
பொறுத்திருந்து பார்ப்போம், யாராவது சொல்கிறார்களா என்று/
@Yoga.S.FR
வணக்கம் நிரூ! நம்பிக்கை தான் வாழ்க்கையென்று நம்பிக்கொண்டு வாளாவிருப்பதை விடுத்து,இப்போதிருக்கும் தலைமைகளை தட்டி நிமிர்த்தி சுதந்திர வாழ்வுக்கு வழி தேடுவோம்!நா.க வின் செயற்பாடுகள் சூடு பிடிக்க மறுக்கிறது.உள்நாட்டில் மக்கள் துணிந்து செயற்பட ஆரம்பித்துள்ளார்கள்!புலம்பெயர் தேச ஜனநாயக செயற்பாடுகளும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன!வெல்வோம்!!!!
//
வணக்கம் ஐயா,
எல்லோரும் புலம் பெயர் தமிழர்களிடமிருந்து தான் பேராதரவினை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.
வெகு விரைவில் சூடு பிடித்து நல்ல சேதி வரும் என்றால் சந்தோசமே.
@Powder Star - Dr. ஐடியாமணி
hi niru, thanks for this valuable post that will creat a great concern on the issues of tamils who have been facing a number of problems in srilanka nowadays.
//
பார்ப்போம், யார் நன்றாக தம் மனக் கருத்துக்களை முன் வைக்கிறார்கள் என்று.
நிச்சயமாக நல்ல கருத்துக்களையும், புரிந்துணர்வினையும் இந்தப் பதிவு கட்டியெழுப்ப வேண்டும் என ஆவலோடு நானும் காத்திருக்கிறேன்.
///*நாளை தமக்கான உரிமையினை யார் பெற்றுத் தருவார் எனும் ஐயத்தில் வாழும் ஈழ மக்களிற்கு இனி ஒரு தலமை அமைதல் சாத்தியமா?//யாருக்கு அந்த தகுதி இருக்கு ...எல்லாம் சுயனலவாதிங்க ...
///*நாடுகடந்த அரசாங்கம் என்று சொல்லப்படுவோரால் ஈழ மக்களிற்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா?/// முதல்ல ஆயிரத்தெட்டு குழுக்களாய் செயற்படாமல் ஒன்று படட்டும் இவர்கள்...
////*காலங் காலமாக நம்புங்கள் தமீழம் நாளை பிறக்கும் எனும் மன நிலையோடு வானம் பார்த்து மழையை எதிர்பார்த்து ஏங்கும் உறவுகளாய் உள்ள தமிழ் மக்களிற்கு இனி எந்த வழியில் தீர்வு கிடைக்கும்?/// "நல்ல தீர்வு" என்று எதை சொல்லுகிறீர்கள் ...?
///*இம் மக்களுக்கு தீர்வு கிடைக்க வழியேதும் இல்லையா? /// ஏதாவது சுயநலத்தின் போக்கிலாவது உலக நாடுகளின் பார்வை ஈழ தமிழ் மக்கள் மீது திரும்ப வேண்டும் ...நடக்குமா ?
. "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நம்பிக் கெட்டவர்கள் பலர் !
இதுதான் என் கருத்து .
தொடருங்கள் நடுநிலையாளர்கள் மூத்தவர்கள் சொல்லட்டும் நான் ஓரங்கத்தில் காத்திருக்கின்றேன் வழிவிட்டு!
நண்பர்களே, விவாதிக்க வேண்டிய நீங்களே ஒதுங்கிக் கொண்டால், யார் தான் விவாதிப்பது?
ஜ.ஆம் அப்பீட்டு நெக்ஸ்ட் போஸ்ட் ரிப்பீட்டு
வரலாற்றில்... எள் முனையளவு கூட நாடில்லாமல் நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த யூதர்களுக்கு... இஸ்ரேல் என்ற நாடு உருவானது. மொத்த இலங்கைக்கே சொந்தக்காரன் தமிழன்...
என பழைய வரலாறு
எடுத்தியம்பும்போது ....
தமிழ் ஈழம் உருவானதை...
நாளைய வரலாறு எடுத்துரைக்கும்.
சத்தியம்...சத்தியம்...சத்தியம்
போர்க் களத்தில் நாம் என்ன ஆயுதம் எந்த வேண்டும் என்பதை நம் எதிரியே தீர்மானிக்கிறான்... இது மாவோ.... அந்த அந்த நாட்டில் வாழும் சூழ்நிலை படி மார்க்சியத்தை கையாள வேண்டும் என்பது மார்க்சியம் படித்தவர்களின் நிலை... இதை இரண்டையும் ஆமோதிப்பவன் நான்... உங்கள் நாட்டு சூழ்நிலையின் உண்மை முகம் எனக்கு தெரியாது... அதே நேரத்தில் அங்கு உண்மையாகவே விடியல் வரவேண்டும் என்று எண்ணுவதால்.. இந்த விவாதத்தில் மண்ணின் மைந்தர்கள் கலந்து கொள்வதை முறை... சரி... ஆகையால் வேடிக்கை பார்க்கிறேன்... அதற்காக மன்னிக்கவும்
@கந்தசாமி.
///*நாடுகடந்த அரசாங்கம் என்று சொல்லப்படுவோரால் ஈழ மக்களிற்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமா?/// முதல்ல ஆயிரத்தெட்டு குழுக்களாய் செயற்படாமல் ஒன்று படட்டும் இவர்கள்...//
இது தான் எந்த ஒரு நல்ல செயலை எடுத்துக் கொண்டாலும் தமிழனை அறியாமல் பிரிவினை அவனைச் சூழ்ந்து கொள்கிறது.
போட்டி, பொறாமை, பதவி ஆசையினை விடுத்து
மக்களுக்கான சேவை எனும் நோக்கில் அர்ப்பணிப்போடு இந்த அமைப்புக்கள் செயற்பட்டால் எமக்கு விடிவு எப்போதோ கிடைத்திருக்குமே!
@கந்தசாமி.
////*காலங் காலமாக நம்புங்கள் தமீழம் நாளை பிறக்கும் எனும் மன நிலையோடு வானம் பார்த்து மழையை எதிர்பார்த்து ஏங்கும் உறவுகளாய் உள்ள தமிழ் மக்களிற்கு இனி எந்த வழியில் தீர்வு கிடைக்கும்?/// "நல்ல தீர்வு" என்று எதை சொல்லுகிறீர்கள் ...?
//
ரொம்ப நக்கல் பாஸ், உங்களுக்கு,
நான் நல்ல தீர்வு என்று தனியாட்சி, அல்லது சுய நிர்ணய உரிமையுடன் கூடிய பிரிந்த வட கிழக்கு மாநிலம் பற்றி பதிவில் சொல்லியிருகிறேனே.
@கந்தசாமி.
///*இம் மக்களுக்கு தீர்வு கிடைக்க வழியேதும் இல்லையா? /// ஏதாவது சுயநலத்தின் போக்கிலாவது உலக நாடுகளின் பார்வை ஈழ தமிழ் மக்கள் மீது திரும்ப வேண்டும் ...நடக்குமா ?
//
இலங்கையில் நாம் பெற்றோல் செயற்கையாக உருவாக்க வேண்டும்,
தங்க வயல் உருவாக்க வேண்டும்,
இதெல்லாம் எப்போ நடக்கிறது?
என்னை பொறுத்தவரை கந்தசுவாமி சரியாக சொல்கிறார், குழுவாக பிரிந்து இல்லாமல் ஒன்றிணைய வேண்டும் என்று,,, ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தானே பிரச்சினை..
@தனிமரம்
"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நம்பிக் கெட்டவர்கள் பலர் !
இதுதான் என் கருத்து .
தொடருங்கள் நடுநிலையாளர்கள் மூத்தவர்கள் சொல்லட்டும் நான் ஓரங்கத்தில் காத்திருக்கின்றேன் வழிவிட்டு!
//
இப்படிச் சொல்லிச் சொல்லித் தான் காலதி காலமாக தமிழன் அடிமையாக வாழ்ந்து மடிகின்றான்.
எப்போது திருந்துமோ எம் சமூகம்?
சரியோ பிழையோ உங்கள் மனதில் பட்ட கருத்தினைச் சொல்லுவதில் என்ன தவறு?
போராட்டம் எனும் போது, நான் வர மாட்டேன்,
வேறு யாரும் ஆயுதம் தூக்கட்டும்,
அஹிம்சை - அறப் போர் என்றதும் ஐயோ என்னால முடியாது நடு நிலையாளர்கள் சொல்லட்டும்,
இப்படியே காலதி காலமாக அடுத்தவன் வந்து எமக்காய் ஆதரவுடன் பரிந்து பேசுவான் எனும் நிலையில் தமிழர்கள் பலர் இருப்பதால் தான் இன்றைய கால கட்டத்திலும் தமிழனின் விடிவு என்பது??????????
@செங்கோவி
நண்பர்களே, விவாதிக்க வேண்டிய நீங்களே ஒதுங்கிக் கொண்டால், யார் தான் விவாதிப்பது?
//
ஆமா பாஸ்...
@K.s.s.Rajh
ஜ.ஆம் அப்பீட்டு நெக்ஸ்ட் போஸ்ட் ரிப்பீட்டு
//
சரியோ பிழையோ ஏதாச்சும் சொல்லிட்டுப் போய்யா...
@உலக சினிமா ரசிகன்
வரலாற்றில்... எள் முனையளவு கூட நாடில்லாமல் நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த யூதர்களுக்கு... இஸ்ரேல் என்ற நாடு உருவானது. மொத்த இலங்கைக்கே சொந்தக்காரன் தமிழன்...
என பழைய வரலாறு
எடுத்தியம்பும்போது ....
தமிழ் ஈழம் உருவானதை...
நாளைய வரலாறு எடுத்துரைக்கும்.
சத்தியம்...சத்தியம்...சத்தியம்
//
எல்லோரும் காலங் காலமாக இதனைத் தான் அண்ணே சொல்லுறாங்க.
ஆனால் இன்னும் எத்தனை நாட்களில் இந்த வார்த்தைக்கான பதில் கிடைக்கும் என்பது தான் எனக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
@suryajeeva
உங்கள் நாட்டு சூழ்நிலையின் உண்மை முகம் எனக்கு தெரியாது... அதே நேரத்தில் அங்கு உண்மையாகவே விடியல் வரவேண்டும் என்று எண்ணுவதால்.. இந்த விவாதத்தில் மண்ணின் மைந்தர்கள் கலந்து கொள்வதை முறை... சரி... ஆகையால் வேடிக்கை பார்க்கிறேன்... அதற்காக மன்னிக்கவும்
//
இதில் என்ன தவறு நண்பா.
இதற்கெல்லாமா மன்னிப்புக் கேட்பாங்க.
நானும் மண்ணின் மைந்தர்களின் கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
@suryajeeva
என்னை பொறுத்தவரை கந்தசுவாமி சரியாக சொல்கிறார், குழுவாக பிரிந்து இல்லாமல் ஒன்றிணைய வேண்டும் என்று,,, ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது என்பது தானே பிரச்சினை..
//
ஆமாம் பாஸ்..
தமிழர்கள் ஒற்றுமை பெற வேண்டும்,
தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் பல வழிகளில் எமக்கான பாதையினைத் தேடிப் பயணிக்க முடியும்.
தமிழர்களுக்கும் ஒற்றுமைக்குத் தான் வெகு தூரமாச்செ,.
புதிதாக தலைமை ஏற்பது என்பது முழு அளவு மக்கள் நம்பிக்கையைப் பெறாது .ஒவ்வொரு பகுதிக்கும் அங்கங்கு உள்ள இப்பிரச்சினையில் அதிகம் ஆர்வமுள்ளவர்களை பிரதிநிதிகளாக்கி அனைத்து பிரதிநிதிகளையும் ஒருங்கிணைக்கவேண்டும் ...இது என்னுடைய சொந்தக் கருத்து ...
சகோ. நிரூபன்!
தமிழர்களுக்கு மத்தியில் முதலில் ஒற்றுமை வர வேண்டும். அடுத்து ஒரே மொழியை பேசும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும். தமிழக ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகளை தூரமாக்கி இந்தியாவின் மத்திய அரசோடு உள்ள மோதல் போக்கை கை விட்டு நேசக்கரம் நீட்ட வேண்டும். இவை எல்லாம் சாத்தியப் பட்டால்தான் அதிகார பகிர்வு என்ற இடத்துக்கே வர முடியும். இவை நடக்காத பட்சத்தில் தனி நாடு என்ற கோஷம் நம் நாட்டு அரசியல்வாதிகள் கொடுக்கும் வாக்குறுதியைப் போன்றதே!
வணக்கம் நண்பா ,பதிவினை படித்தேன் ,மற்றவர்களின் கருத்தினையும் படிக்கிரேன்
நல்ல கருதக்கள்
காத்திரமான விவாத மேடையில் பலர் கருத்துக்கள் கூறுவார்கள் என்ற படியால் தான் நானும் ஒதுங்கியிருந்தேன் ஏனே பலர் மெளனம் சாதிக்கின்றார்கள் சகோ!
நாடுகடந்த அரசினால் இலங்கையில் நன்மை செய்ய முடியும் என்பது தற்போதைய நிலையில் வெறும் கனவு மட்டுமே முதலில் இந்தக்குழு மக்கள் முன் சில கறுப்பாடுகள் முல்லைமாரிகளை வெளிச்சம் போட்டுக்காட்டனும் மக்கள் பணத்தை சூறையாடும் சிலரால் பலத் வெறுப்புற்று இருப்பதும் விலை போவதும் தடுக்க வேண்டும் அதற்கு இவர்கள் மக்களுக்கு போதிய விளிப்புணர்வு கொடுக்கனும் இந்த நிலை தற்போது சாத்தியம் இல்லை!
ஏற்கனவே தமிழர்களுக்கு ஒரு தலமைத்துவம் இருக்கின்றது மக்கள் பலர் அதனை ஏற்றுக்கொண்ட குழு த.வி.பு அவர்களின் அரசியல் முகாம் த.தே.கூ ஆகவே புதிய தலைமைத்துவம் தேவையற்றது ஆனால் அங்கு இருக்கும் சில கருத்துப்புரிதல் இன்மையைக் களை வேண்டும் முதலில் கூட்டமைப்பில் இருக்கும் பதவி மோகம் பணத்தாசை பிடித்தோரை வீட்டுக்கு அனுப்பி விட்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று உணர்ந்த பெரியவர்கள் சிலரை உள்வாங்கனும் கனடாவில் இருக்கும் மூத்த பத்திரிக்கையர் ஏன் கூட்டமைப்பில் இல்லாத தோற்றப்பாடு என்பதை களைய வேண்டும்!
தமிழ் மக்கள் பிளவு பட்டு நிற்கும் பிரதேசவாதம் ,மதவாதம் களையப்பட்டு ஒரே கருத்துடன் கூடிய குழுவாக செயல் படனும்!
தற்போதைய தமிழர் நிலைக்கு விடிவு ?
இதற்கு முதல் இலங்கை சுயசிந்தனையில் இயங்கும் அல்லது தனித்துவம் மிக்க நாடாக இதுக்கனும் ஆனால் இரு கழுகுகளின் கைகளில் நாட்டைக் கொடுத்துவிட்டார்கள் சில பதவி வெறி பிடித்தவர் குடும்பமும் அவர்களின் கொள்கைவகுப்பாளர்களும் இதில் இருந்து முதலில் நாடு வெளிவந்தால் தான் சகலரும் விடிவு பெறமுடியும்!
*அடிமைகளாக தாம் வாழும் காலம் வரை ஆயுத முனையின் கீழ் அச்சத்தோடு வாழ்ந்து தொலைக்க வேண்டிய சாபத்தினையா காலம் ஈழ மக்களுக்குத் தந்திருக்கிறது?
// இது ஈழத்தமிழர் மட்டும்மல்ல சிங்கள சாமானியர்களும் சேர்க்க வேண்டிய விடயம் அதிகாரம் சில கொள்கை வகுப்பாளர்களிடம் அனாதையாகப் போய் விட்டது தூரநோக்குச் சிந்தனையில் இலங்கைச் சமுகத்தில் ஒரு தலைவர் உருவாக்கப்படும் வரை இந்த நிலை மாறது என்பது என் கருத்து!
முதலில் அயல்நாடு கெதி என்று கிடக்கும் நம் அடிமைக்குணம் மாறனும் அயல் நாடு நம்மை வைத்து ஆடும் சதுரங்க விளையாட்டில் இருந்து இலங்கைத் தீவு வெளிவரனும் என்பது என் கருத்து !
தீர்வு என்பது முதலில் மக்கள் போராட்டமாக ஆயுதம் என்று நோக்கவேண்டாம் மக்கள் அரச -செயல்பாடுகளான சட்டம்,நிதி ,நீதி ,நிறுவாக செயல்பாடுகளை முடக்கி மக்களை நேசிக்கும் நாட்டை நேசிக்கும் மக்கள் குழுவைத் தேர்வு செய்து அந்தக் குழு ஒரு தீர்வுத் திட்டத்தினை முன்வைத்தால் அதை மக்கள் தீர்மானத்திற்கு வாக்கெடுப்பு செய்யனும் அதற்கு தலைவராக சொல்ஹையூம் விஜய் நம்பியார் ,பண்டாரி, கில் போன்றோர் தேவையில்லை ஒரு மக்கள் தலைவனின் நெறிப்படுத்தலில் உரிமையை நிலை நாட்டலாம்!
இன்னும் விவாதிக்கலாம் நாற்றுக்குழுமம் களம் இறங்கட்டும் சில மணித்தியாலம் கழித்து வருகின்றேன் சகோ!
@நிரூபன்
@K.s.s.Rajh
ஜ.ஆம் அப்பீட்டு நெக்ஸ்ட் போஸ்ட் ரிப்பீட்டு
//
சரியோ பிழையோ ஏதாச்சும் சொல்லிட்டுப் போய்யா./////
என்னிடம் பல கருத்துக்கள் இருக்கு பாஸ் கடந்த சிலவிவாதமேடைகளில் காரசாரமாக மோதிக்கொண்டதால் நான் இந்த விவாத மேடையில் கொஞ்சம் விலகியிருக்கின்றேன்..
தெளிவான பதில் இல்லை நிரூ.குழப்பம்.முதலில் எம்மிடையே இருக்கிற காட்டிக்கொடுக்கிற,
கொக்கரிக்கிற கோடரிக் காம்புகள் தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ளவேணும்.
ஒற்றுமையே அதிக பலம் !
சகோ!அனைத்துமே பளிங்கு மாதிரி முன்கூட்டியே தெரிவதால் கருத்துக்கள் நிறைய பகிர்ந்தாகி விட்டது.இருந்தாலும் மறந்து போகாமல் நினைவு படுத்தலுக்காக வேண்டியாவது இன்னுமொரு முறை....காலம் ஒவ்வொரு முறையும் சந்தர்ப்பங்களை வழங்கிக் கொண்டேயிருக்கிறது.சில ஈரம் பட்ட தீக்குச்சி மாதிரி நமுத்துப் போகிறது.இன்னும் கொஞ்சம் ஈரத்திலும் சொர்ரென்று பற்றி நின்றி விடுகிறது.இன்னும் சில முன்பே பற்றிய தீயில் நீர் பூத்த நெருப்பாக மனதுக்குள் அமுங்கியே கிடக்கிறது.ஒரேயடியாக சொல்வதுதான் கருத்துக்கள் சரியாகப் போய்ச் சேர்வதை உருவாக்கும்.நீண்ட பின்னூட்டங்களுக்கு கூகிள் தடையென்பதால் அடுத்த பின்னூட்டதில் சொல்ல வேண்டிய கட்டாயம்...
பெரும் அக்கினியாய் உருவாக வேண்டிய சந்தர்ப்பங்கள் என ஐ.நா அறிக்கையும்,சேனல் 4 தொலைக்காட்சி ஆவணப் பதிவும்.ராஜ பக்சே போர்க்குற்றவாளியெனும் சூழல்கள் இன்னும் இலங்கை அரசு இயந்திரம் என்ற வலுவான காரணம் கொண்டு காலம் கடந்தும் இன்னும் இழுபறி நிலையே.வலுவான மாற்று அரசியல் இலங்கையில் ஏற்படாத வரையில் ராஜபக்சேக்களின் தர்பார் இன்னும் கொஞ்ச காலம் நீளும்.
தனித்து நின்று போராடும் வலுவில்லாத நிலையிலேயே நிலம் சார்ந்தோ,புலம் சார்ந்தோ,தமிழகம் சார்ந்தோ இருக்கிறோம்.எனவே நமது பிரச்சினையை நாமே தீர்க்க முயல்வோம் என்பது உலக அரசியல்,க்டல் பொருளாதாரம்,புதிய சந்தைக்கான இலங்கை என்பதால் நம்மால் இயலாத ஒன்றே.ஆயுதப் போராட்டத்துக்கு மாற்றாக ஜனநாயக ரீதியில் நாடுகடந்த தமிழ் அரசும்,பிரிட்டன் வாழ் தமிழர்கள் அமைப்பும் வலுவான அமைப்பாக வந்திருக்க வேண்டும்.கருத்து வேறுபாடுகளின் உட்பூசல்கள் இருப்பதும் அதனை இலங்கை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சூழலும் காணப்படுகிறது.மாவீரர் தினம் நிகழ்ச்சியைக் கூட நடத்துவதில் ஏற்ற கருத்துக்களும் மாற்றுக்கருத்துக்களும் இருப்பதை அவதானிக்க முடிகிறது.பிரச்சினைகளுக்குள்ளூம் தேசிய உணர்வு புலம்பெயர் தமிழர்கள் தமது குரல்களை பதிவு செய்து கொண்டும் இருக்கிறார்கள்.இல்லாவிட்டால் இலண்டனை விட்டு ராஜபக்சேவை துரத்தியதெல்லாம் சாத்தியமில்லை.
மண்ட வெடிக்குது எந்த சொல்ல ஒவ்வௌதரும் ஒவ்வொரு பக்கம் ஈழ மக்கள் தெருபக்கம்
இதுதான் உண்மை
தாயின் மடியில் பிறந்து
பேயின் ஆட்ச்சியில் வாழ்ந்து
நாயைப்போல் சாகும் இனம்
தமிழகம் பக்கம் திருப்பினால் தி.மு.க காலத்து ஆட்சி நிலை... ஈழவரலாற்றைத் திருப்பிப் போட்ட காலம்.நிகழ்வுகளின் அடிப்படையிலேயே நம்மை முன்செலுத்தும் சூழல்கள் என்பதால் முன்பு விடுதலைப்புலிகளின் காலத்து ஈழ நிலைக்கு எதிரான அ.தி.மு.க இப்பொழுது சுய அரசியல் தேவை கருதியோ அல்லது கால மாற்றங்களை கருத்தில் கொண்டோ தமிழீழ ஆதரவு நிலை எடுத்திருப்பதும் ஆட்சிக்கு வந்து சட்டமன்ற தீர்மானங்கள் கொண்டு வந்ததும் முக்கியமானவை.தீர்மானங்களுக்கும் அப்பால் அயல் உறவு சார்ந்து இந்தியாவின் மத்திய அரசை சார்ந்தே மாநில அரசு இருக்க வேண்டியிருக்கிறது.மத்திய அரசுக்கு ஈழ மக்கள் நலன் என்பதை விட தனது நாட்டு எல்லைப் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடாத படி இலங்கை அரசை சார்ந்து இருக்க வேண்டிய சூழலும்,ராஜிவ் என்ற சொல் காரணமாக வன்மம் தரித்த அயல் உறவுக்கொள்கையை ஆளும் காங்கிரஸ் கொண்டுள்ளது என்பதும் வெள்ளிடை மலை.சீனாக்காரன் நுகர்ந்து பார்க்க நினைக்காத வரை இந்தியாவின் காங்கிரஸ் அரசு தென் எல்லைப்பாதுகாப்பு அயல் உறவுக் கொள்கை பற்றி மார்தட்டிக்கொள்ளலாம்.
மாற்றம் என்பதோ,புரட்சி என்பதோ மண் சார்ந்தும்,மண்ணின் மைந்தர்கள் சார்ந்தும் இருக்க வேண்டிய ஒன்று.அதைத்தான் விடுதலைப்புலிகளின் காலம் செய்தது.சரி தவறுகளை விட்டு மாற்றங்கள் தேடிய காலம் அதுவே எனலாம்.கூடவே தலைமையும்,கட்டமைப்பு,அர்ப்பணிப்பு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதையும் அதனை இப்போது உருவாக்க இயலாத சிதறுண்ட உணர்வுத்தீவுகளாகவே நிலம்,புலம்,தாய் தமிழகம் இருக்கிறது.
@ராஜ் நடராஜன்
.வலுவான மாற்று அரசியல் இலங்கையில் ஏற்படாத வரையில் ராஜபக்சேக்களின் தர்பார் இன்னும் கொஞ்ச காலம் நீளும். //
இது இன்னும் 10 வருடம் தாண்டும் எதிர்க்கட்சியில் ஒரு பொம்மை தலைவராக இருக்கு இன்னும் மாற்றக்கருத்துள்ளோர் ஒரணியில் திரட்டத்தெரியாத சிறுபாண்மைக்கட்சிகளின் சதுரங்கம் என பலதும் ராஜபக்ஸவுக்கு அனுகூலமே !
தமிழகத்தின் வலுவான தலைமை,இந்திய அரசு,மாநில அரசின் நல் உறவில் ஈழத்தமிழர்களுக்கான அக்கறை,புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமை இவற்றோடு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வலுவான நிலையும்,அதனை வலுப்படுத்தும் உலக அரசியல் ஆதரவு சூழல்,ராஜபக்சேக்கள் போதும் என்ற இலங்கை மற்றும் உலக மேடை அரசியல் நாடகக்காரர்கள் என்ற மொத்த சூழல்கள் உருவாவதற்கு முதல் பின்னூட்டத்தில் சொல்லிய நின்று எரியும் தீக்குச்சு உரசலும்,அதனைக் காற்றில் அணைந்து விடாமல் காக்கும் தனிமனித வருகையும் இல்லாமல் தமீழீழ மக்கள் பிரச்சினை தீர்க்க இயலாத ஒன்று.ஒன்று பட்ட இலங்கையா?சுயநிர்ணயமா என்ற சூழலுக்கு தமீழழ மக்களின் மனதில் விதை வேர் ஊன்றட்டும்.நன்றி.
//தனிமரம் said...
@ராஜ் நடராஜன்
.வலுவான மாற்று அரசியல் இலங்கையில் ஏற்படாத வரையில் ராஜபக்சேக்களின் தர்பார் இன்னும் கொஞ்ச காலம் நீளும். //
இது இன்னும் 10 வருடம் தாண்டும் எதிர்க்கட்சியில் ஒரு பொம்மை தலைவராக இருக்கு இன்னும் மாற்றக்கருத்துள்ளோர் ஒரணியில் திரட்டத்தெரியாத சிறுபாண்மைக்கட்சிகளின் சதுரங்கம் என பலதும் ராஜபக்ஸவுக்கு அனுகூலமே !//பந்தை என் பக்கம் தள்ளி விட்டிர்களா தனிமரம்!அது என்ன பேச்சிலர் என்பதின் தமிழ்ப் பொருளா தனிமரம்:)ராஜபக்சே அரசின் போர்க்குற்ற விசாரணையின் லட்சணக் குழந்தை எப்படி என்பது நவம்பர் மாதம் பிறந்து விடும்.முன்பே பதிவிலோ அல்லது யாருக்கான பின்னூட்டத்திலோ 2011 இதுவரையிலான வேகத்திலேயே நகரும்.2012 மே மாதம் மீண்டும் புதிய உணர்வுகளைக் கொண்டு வருகிறதா என்பதும் அல்லது கொண்டு வந்து நாங்க ஆகஸ்ட் 15 தேதிக்கு கொடி ஏற்றி மிட்டாய் தின்று கலைந்து விடுகிற மாதிரி துக்கங்களை நினைத்து விட்டு கலைந்து விடுகிறோமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
// தனிமரம் said...
முதலில் அயல்நாடு கெதி என்று கிடக்கும் நம் அடிமைக்குணம் மாறனும் அயல் நாடு நம்மை வைத்து ஆடும் சதுரங்க விளையாட்டில் இருந்து இலங்கைத் தீவு வெளிவரனும் என்பது என் கருத்து !//இதற்கான மாற்றுக்கருத்தை பின்னூட்டத்தில் வைத்திருக்கிறேன்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை ஆட்சி செய்த எந்த ஒரு அரசுமே தமிழர்களிற்குரிய உரிமைகளைப் பகிர்ந்துகொள்வதில் இதயசுத்தியுடன் நடந்துகொள்ளவில்லை. அதுமட்டுமன்றி தமிழ், சிங்களம், இஸ்லாமிய , மலையகதமிழர் என அனைத்துத் தரப்பிலும் உள்ள நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ முற்படவில்லை. முதலாளித்துவ அரசமைப்பின் நலன்களை பாதுகாப்பதில் அனைத்துதரப்பு உயர்மட்டத்தினரும் இணைந்தே இருக்கின்றனர். சாதாரண மக்கள் பிரித்தாளும் தந்திரத்தினால் ஒன்றிணையவிடாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பான்மை ஏழை சிங்கள இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட 1971 சேகுவரா புரட்சியின்போது இந்திய அரசு செயல்பட்டவிதத்தையும் இங்கு கவனத்தில்கொள்ளவேண்டும்.
அன்றைய காலத்தில் சோவியத்யூனியனுடன் மிகவும் நெருங்கிய உறவுகளையும் அணிசேரா அமைப்னை வலுப்படுத்துவதையும் தனது முக்கிய வெளியுறவுக்கொள்கையாக கொண்டிருந்த இந்திய மிகவும் துணிச்சலாக தனது கொள்கைகளை பாதுகாக்க முனைந்தது. இலங்கையில் சீன அரசின் ஆதரவைப்பெற்ற சேகுவராபுரட்சி வெற்றிபெற்று சீன சார்பு அரசு உருவாவதை விரும்பவில்லை. ஆதலால் உடனடியாக தனது இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி புரட்சியை முறியடித்து அணிசேரா நாடுகளில் தீவிரமாக செயல்பட்ட அன்றைய இலங்கை அரசை பாதுகாத்தது.
தமிழீழ போராளி அமைப்புக்களில் ஒன்றான PLOT எண்பதாம் ஆண்டுகளில் மாலைதீவில் சதிப்புரட்சி ஒன்றை மேற்கொண்டு தனக்கு ஆதரவானவர்களை அங்கு ஆட்சியில் அமர்த்தமுற்பட்டபோது இதே இந்திய அரசு தனது துருப்புக்களை அங்கு அனுப்பி அதனை முறியடித்தது. பாகிஸ்தானின் பலத்தை குறைக்க பங்காளதேசம் உருவாக நேரடியாக தலையிட்டது. இப்படியாக தன்னை சுற்றிலும் உள்ள நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள தயங்கியதில்லை. சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்குலக நாடுகளும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு மறைமுக ஆதரவை வழங்கும்.
மற்றுமொருபுறத்தில் சீனா இலங்கையின் ஒரு பகுதியில் நாங்கள் இப்பொழுது கனவுகாண்பதுப்போல அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் மேற்குலகிற்கு ஆதரவான ஒரு அரசு உருவாக ஒருபோதும் இடம்கொடாது இலங்கை அரசை பாதுகாக முற்படும். இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டு பார்க்கும்போது எமக்கென ஒரு நாடு உருவாகுவது இன்றைய களநிலையில் மிகவும் சிரமம்.
எண்பதாம் ஆண்டுகளில் இலங்கையில் மீண்டு தலைதூக்கிய சேகுவரா புரட்சியை அடக்க அன்றைய இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் ஒரு மறைமுக ஒப்பந்தத்தை செய்து அவர்களிற்குத்தேவையான ஆயுதங்களைக்கொடுத்து இந்திய அமைதிகாக்கும் படைகளுடன் மோதவிட்டுவிட்டு தனது அதிஉச்ச படைபலத்தையும் சேகுவராப் புரட்சியாளரிற்கு எதிராகப் பாவித்து அதை அடக்கியது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதியுத்தகாலத்தில் இனத்துவேசத்தை ஊக்குவிக்கும் பரப்புரைகள்மூலம் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் இருந்த தென்னிலங்கையின் காலி, அம்பாந்தோட்டைபோன்ற பிரதேச இளஞரை பெருமளவில் இணைத்து எம்மை நசுக்கியது.
இந்த நிலைமையில் எமது உரிமைகளை அவர்கள் தாமாக பகிர்ந்துகொடுக்க முன்வருவார்கள் என்ற கனவுகாணமுடியாது.
ஆதலால் பிரித்தாளும் சூழ்ச்சியினால் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரிந்து கிடக்கும் இலங்கையிலுள்ள அனைத்து சமூக அடித்தட்டு சாதாரண மக்களையும் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள மக்களையும் தொழிலாளர்களையும் ஒரு புரிந்துணர்வினூடாக ஒன்றிணைத்து அனைத்து தரப்பினரிற்குமான உரிமைகளையும் பாதுகாக்கவும் பெற்றுக்கொள்ளவும் முனைவதன் ஊடாக எமது உரிமைகளையும் பாதுகாப்பதே நடைமுறைச்சாத்தியமானது
ஈழத்தமிழர் இருளில்இருக்கிறார் உண்மை அவர்களை வெளியே கொண்டுவருவதற்கு என்னசெய்யலாம் அதைக்கூருங்கள் தனிமனிதனால் செய்வதற்கு எத்தனையோ இருக்கின்றது அதைச்செய்யுங்கள் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தவிர்ப்போம்
கோமணம் கூடஇல்லாது பலர்இருக்கின்றனர்
@அம்பலத்தார் ஐயா கூறியது
/ஆதலால் பிரித்தாளும் சூழ்ச்சியினால் முரண்பாடுகளை தோற்றுவித்து பிரிந்து கிடக்கும் இலங்கையிலுள்ள அனைத்து சமூக அடித்தட்டு சாதாரண மக்களையும் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள மக்களையும் தொழிலாளர்களையும் ஒரு புரிந்துணர்வினூடாக ஒன்றிணைத்து அனைத்து தரப்பினரிற்குமான உரிமைகளையும் பாதுகாக்கவும் பெற்றுக்கொள்ளவும் முனைவதன் ஊடாக எமது உரிமைகளையும் பாதுகாப்பதே சாத்தியம்////
// இதற்கு தற்சமயம் ஐக்கிய இலங்கை என்று பேசும் எந்தக் கட்சியிடமும் தீர்க்கமான கொள்கையும் இல்லை தலமைத்துவமும் இல்லை ஒரு வேளை சயீத் பிரேமதாசவின் மகன் தனிக்கட்சியில் இறங்கினால் கொஞ்சம் சாத்தியம் ஆனால் அவராலும் உடரட்ட சிங்கள மக்கள் மனத்தை வெல்ல முடியுமா? என்பது சந்தேகம் ஐயா!
@ராஜ நடராஜன் கூறியது!
:)ராஜபக்சே அரசின் போர்க்குற்ற விசாரணையின் லட்சணக் குழந்தை எப்படி என்பது நவம்பர் மாதம் பிறந்து விடும்.முன்பே பதிவிலோ அல்லது யாருக்கான பின்னூட்டத்திலோ 2011 இதுவரையிலான வேகத்திலேயே நகரும்.2012 மே மாதம் மீண்டும் புதிய உணர்வுகளைக் கொண்டு வருகிறதா என்பதும் அல்லது கொண்டு வந்து நாங்க ஆகஸ்ட் 15 தேதிக்கு கொடி ஏற்றி மிட்டாய் தின்று கலைந்து விடுகிற மாதிரி துக்கங்களை நினைத்து விட்டு கலைந்து விடுகிறோமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். //
தற்போதைய உலக அரங்கில் நிகழும் விடயங்களை உள்ளூர் அரசியல் அமுக்கம் நிச்சயம் இன்னும் சில காலம் தொடரும் 2012 நிச்சயம் ஒரு துக்கம் தான் கலையும் ஒரு மித்த உணர்வுகளை எழுப்பும் ஊடக சுதந்திரம் இல்லாத நிலை மக்களின் பொருளாதார இறுக்கம் இவற்றை மழுங்கடித்துவிடும் என்பதும்
அயல்நாடுகளின் கொள்கைவகுப்பாளர்களில் மாற்றம் ஏற்படாதவரை இந்த நிலை களப்பிரர் ஆட்சியின் நீட்சியில் இருந்தது போல் ஒரு இருண்ட காலம்தான் என்பது என் பார்வை ஐயா!
தலைப்பே சங்கடத்தை தருகிறது.சிறக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும்.
சிறக்கும்,சிறக்க வேண்டும் என்ற அனைவரின் பிரார்த்தனைகளும் பயன் தரும்.
மாற்றம் தானாக நடக்கும் என்று காத்திருக்கும் சமயம் இல்லை இது...
அதே நேரம் உடல் வலு குறைந்த இப்படை மனவலு மற்றும் சாதுர்யம் மூலம் மட்டுமே வெற்றியின் அடுத்த படியை கடக்க முடியும் என்பது என் கருத்து சகோதரம்.
இந்த விவாதத்தில் எனக்கு ஒன்றும் சொல்ல தெரியவில்லை
மன்னிக்கவும் சகோ
ஹேமா said...
தெளிவான பதில் இல்லை நிரூ.குழப்பம்.முதலில் எம்மிடையே இருக்கிற காட்டிக்கொடுக்கிற,
கொக்கரிக்கிற கோடரிக் காம்புகள் தங்களைத் தாங்களே திருத்திக்கொள்ளவேணும்.
ஒற்றுமையே அதிக பலம் !
Post a Comment