ஒவ்வோர் பகுதிக்கும் பொதுவான ஓர் மொழியிருந்தாலும் உச்சரிப்பில் மட்டும் பீறிட்டுக் கிளம்பின வேற்றுமைகள். அவையே பின் நாளில் மனிதர்களின் மனங்களில் பிரதேசவாதம் எனும் கொடிய விசம் நிறைந்த எமனின் பற்களைப் போல மாற்றமுறத் தொடங்கின. எல்லோரும் ஒரே கொள்கையில் திரள வேண்டும் எனும் எண்ணங்களில் மட்டும் ஆங்காங்கே நச்சுக் கற்றைகள் துளிர்க்கத் தொடங்குகின்றன. ஈழத்தின் அழகான வனப்புக்களிற்கிடையே தொலைந்து போகும் வல்லமையை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து நாம் எல்லோரும் இழக்கத் தொடங்கி விட்டோம்.
எங்கள் சுத்தமான காற்றில் தென்னங் கீற்றில் வாசனை நிரம்பியிருக்கும். எங்கள் ஊர் மண்ணில் செம்பாட்டின் செக்கச் சிவேலென்ற செம்மை கலந்திருக்கும். இத்தனைக்கும் அணி சேர்த்து அழகு கூட்டும் வல்லமை வான் உடைத்துப் பாயும் எங்கள் குளங்களிடமிருந்தது. பின்னாளில் அச் சுகந்தமான காற்றில் கந்தகத் துகள்கள் கலவி செய்து, அதன் வாசனையின் போக்கில் குருதிகளைத் தெளித்து விட்டிருந்தன.
பச்சைப் பசேலென்ற வயல் நாற்றுக்கள் காற்றில் தலையசைக்க, கீற்றுக்கள் குமரிப் பெண்களின் கொலு சொலி போல சத்தமிடும் ஓசையிலும், ‘அருவி வெட்டப் போறேன் பெண்னே, அரிவாளைக் கொண்டா...’ எனும் பாடலின் சந்த நயத்திலும் எங்களூர் கல கலவெனக் கண் சிமிட்டிப் புழுதி கலந்த செம்பாட்டுக் கிரவல் வீதிகளினூடு புன்னகைத்தபடி வந்தோரை வரவேற்கும் எண்ணத்தோடு காத்திருந்திருக்கிறது.
தாய் சொல்லே வேதம் என எண்ணிய மாமாவின் நினைப்புக்களை மட்டும் என் அம்மம்மா அடிக்கடி நினைவூட்டுவா. கூத்துப் பார்ப்பதற்காய் என் மாமாவிற்கு இருந்த அலாதிப் பிரியத்தினைத் தட்ட முடியாதவளாய், ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த பரஞ்சோதி ஐயாவுடன், கவனமாய்ப் போய் வா என்று கை கொடுத்து விடுகையில் தான் சொல்லிய ஒரே ஒரு வசனத்தின் அர்த்தத்தை பின்னாளில் எங்களுக்குச் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பா. இந் நாளில் பாட்டி வலைஞர் மடத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் இப்போதும் பாதுக்காக்கப்பட்டவளாய் ஆவியாய் உலவுகிறாள்.
‘கூத்துப் பார்க்கப் போகும் போது’கவனமாய்ப் போய் வா!
தம்பி, நீ சின்னப் பொடியன்(பையன்),
பரஞ்சோதிக்குப் பின்னுக்கு எப்போதுமே நில் எனும் அம்மம்மாவின் சொல் தட்டாதவராய் எங்கள் மாமா இருந்திருக்கிறார் என்பதனை மறு நாள் உணர்ந்திருக்கிறா அம்மம்மா.
‘எப்பூடியடா தம்பி கூத்து?
நான அங்கே கூத்தே பார்த்தனான், பரஞ்சோதியரின்ரை குண்டியையெல்லோ பார்த்தானான்.......
நீ தானே சொன்னனீ, பரஞ்சோதி ஐயாவைத் தவற விட்டால் தொலைந்து போய் விடுவாய் என்று, அது தான் எனும் பாணியில் மாமா ஆத்திரமும், நையாண்டியும் கலந்து பதில் சொல்லியிருக்கிறார். இப்படியான நினைவுகளை விட்டு இலகுவில் அறுத்தெறிய முடியாத நீண்ட காலச் சக்கரத்தின் பிடிமானங்கள் எங்களூரவர்கள் எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது.
பின் நாளில் என் மாமாவின் செய்கைகளைப் பார்த்து, நானும் மையல் கொண்டவனாய்; உயரத்தில் அவரைப் போல் ஆகாத விடலைப் பருவத்தில் உணர்வுகளில் அவர் போல் ஆக வேண்டும் என விடாப் பிடியாய் இருந்திருக்கிறேன். மாமாவின் வயதையொத்த ஏனைய பெரியவர்களின் வாழ்க்கையிலும், அன்ரிமார் வாழ்விலும் புயல் மையம் கொள்ளத் தொடங்கியது.
மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................
நினைவலைகள் தொடரும்.......................
|
77 Comments:
வடை??
ஆமா எனக்கு தான் வடை...
ஹஹா ரசித்தேன்...கிராமத்து ரசம் பொங்குகிறது..
பிரதேசவாதம் தானே நம்மளை புதைத்தது!!
அடடடடா வடை போச்சே....
மனசு வலிக்குதுய்யா.....
உங்கள் பகிர்வு வெறும் பதிவு மட்டும் அல்ல ரணங்களின் மேல் எழுதப்படும் எழுத்துக்கள்.....
ஆற்றாமை எனும் சொல் ஏனோ என் நினைவுக்கு வருகிறது.........
ம்ம்..... போராட்டம் என்ற ஒரு சொல் எமது வாழ்க்கையை மட்டுமல்லாது எம்மூர் வனப்புக்களையும் எம் முன்னோர்களின் சுவடுகளையும் அல்லவா அழித்துவிட்டது.
என்ன செய்வது? எல்லாமே நாமாக தேடிக்கொண்டவைதானே.
//‘எப்பூடியடா தம்பி கூத்து?
நான அங்கே கூத்தே பார்த்தனான், பரஞ்சோதியரின்ரை குண்டியையெல்லோ பார்த்தானான்.......
நீ தானே சொன்னனீ, பரஞ்சோதி ஐயாவைத் தவற விட்டால் தொலைந்து போய் விடுவாய் என்று, அது தான் //
ஹா ஹா செம காமடிதான்
தொடரை எதிர்பார்த்திருக்கிறோம்
எங்களுக்கு ஈழம் பற்றிய புரிதலை உங்கள் பதிவுகள் தொடர்ந்து தருகின்றன. இந்தத் தொடரும்..நன்றி!
/////தாய் சொல்லே வேதம் என எண்ணிய மாமாவின் நினைப்புக்களை மட்டும் என் அம்மம்மா அடிக்கடி நினைவூட்டுவா//////
அழுத்தமான நினைவலைகள்.... இழந்த அந்த பந்தங்களை நினைவுகளால் மட்டும் அணைத்தே இரவுகள் கழிகிறது....
தொடர்ந்து எழுதுங்க நிரூபன்.
சகோ!இலக்கியத்தனம் உங்களிடம் நீர்வீழ்ச்சியாய் கொட்டுகிறது.
நான் முன்பே சொன்னபடி உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பும் கலந்துரையாடலுமே புரிதலுக்கும்,புரிந்துணர்வுக்கும்,விவாதத்திற்கும் வலு சேர்க்கும்.
இன்னும் எதிர்பார்க்கிறேன்.
//ஒவ்வோர் பகுதிக்கும் பொதுவான ஓர் மொழியிருந்தாலும் உச்சரிப்பில் மட்டும் பீறிட்டுக் கிளம்பின வேற்றுமைகள். அவையே பின் நாளில் மனிதர்களின் மனங்களில்பிரதேசவாதம் எனும் கொடிய விசம் நிறைந்த எமனின் பற்களைப் போல மாற்றமுறத் தொடங்கின.//
இதைப்பற்றித்தான் சொல்ல வந்தேன்.அதற்குள் இலக்கியம் புகழ்ந்து பொற்காசுகளுக்கு வரிசையில் நின்று விட்டேன்:)
தமிழகத்தில் கொங்கு வட்டார வழக்கு,மதுரைத் தமிழ்,திருநெல்வேலி உச்சரிப்பு,மெட்ராஸ் தமிழ்ன்னு பல இருந்தும் தமிழ் என்றே, தமிழகம் என்ற பிடிப்பில் மட்டுமே எங்களை அடையாளத்தை மொத்த இந்தியாவுக்கும்,உலகுக்கும் முன் வைத்துள்ளோம்.
அப்படியிருக்க சிங்களவர்கள் தவிர தமிழர்களுக்குள் பிரதேசவாதம் வலுப்பெற்றதற்கு என்ன காரணத்தை முன் வைக்கிறீர்கள் என்று சொல்ல இயலுமா?
நிரூ...மறக்காமலிப்பதே நல்லது.நல்லதே நடக்கும்.தொடருங்கள் !
அந்த நாள் ஜாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ஏன் ஏன் ஏன்...................
////‘கூத்துப் பார்க்கப் போகும் போது’கவனமாய்ப் போய் வா!
தம்பி, நீ சின்னப் பொடியன்(பையன்),
பரஞ்சோதிக்குப் பின்னுக்கு எப்போதுமே நில் எனும் அம்மம்மாவின் சொல் தட்டாதவராய் எங்கள் மாமா இருந்திருக்கிறார் என்பதனை மறு நாள் உணர்ந்திருக்கிறா அம்மம்மா./// அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கூட சுதந்திரமாக உலா வரலாம். நம் ஊர் கோவில் திருவிழா காலங்களிலே திருவிழா முடிய இரவு ஒன்று அல்லது இரண்டு மணி ஆகிவிடும்...எவ்வளவு அழகான வாழ்க்கை அது ....
///அப்படியிருக்க சிங்களவர்கள் தவிர தமிழர்களுக்குள் பிரதேசவாதம் வலுப்பெற்றதற்கு என்ன காரணத்தை முன் வைக்கிறீர்கள் என்று சொல்ல இயலுமா? /// நான் நினைக்கிறேன்
ஒன்று பிரதேசங்கள் அடிப்படையாக சாதி வரையறுக்கப்பட்டிருந்தது.
மற்றையது சில அரசியல்வாதிகள் / செல்வாக்கு மிக்கவர்கள் தமது சுயநலனுக்காக பிரதேசவாதத்தை கையில் எடுப்பது. இவ்வாறு சில காரணங்களை சொல்லலாம்.
மிக அருமையாக உள்ளது சகோ .உங்களின் கட்டுரையை படிக்கும் போது எங்களூர் கிராமத்துக்கு போய்விட்டேன்;
தொடரட்டும் மேலும் நினைவலைகள்
தொடருங்கள் நிரூபன்.வாழ்த்துக்கள்.உங்கள் எழுத்தில் உயிர் இருக்கிறது.
நிரூபன், நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ. இழந்த வாழ்க்கை திரும்ப வராது. படிக்கும் போது ஏக்கமா இருக்கு. தொலைந்து போன சொந்தங்களை நினைச்சா மனம் பாராமாகி விடும்.
பழைய கதை கேக்க ஆசியும் இல்லை அப்புவும் இல்லை ஏன் அவர்கள் ஆவியும் இல்லை இப்பொழுது
ஆவணப்படுத்தி வையுங்கள் அருமையான வாழ்வியலை
நல்லதொரு பதிவு + பகிர்வு
சகோ உங்கள் நினைவோடு சேர்ந்து, நானும் பயணித்தது போன்ற உணர்வு..தொடர்ந்து எழுதுங்கள்...
மண்வாசனையுடன் உள்ளது தொடர்....தொடருங்கள்
நினைவுகளை தீண்டியே ஏங்கிப்போவதில் ஒருசுகம் துக்கம் இரண்டும் உண்டு வயல் வெளியில் பட்டம் விட்டகாலங்கள் ,சூடுமிதிக்கும் போது மாடு போடும் சாணம் நெல்லில் போய்விடும் என்று மாட்டின் வாலில் காத்திருந்த தருணங்கள் முடியவில்லை கண்கலங்குகிறது. சகோதரம்!
கிராமத்து மனம் தொலைந்து இன்று பட்டண வேசம் பொருந்திவிட்டது மனதில் மீண்டும் போகத்தூண்டும் என் வயல்கள் யுத்த அரக்கன் கிழித்துப்போட்ட பாதுகாப்பு வலயத்துள் சிறைவைகப்பட்ட வேதனைகள் எத்தனை உள்ளங்களில் மாறாமல் இருக்கும்.
அன்னாளில் பார்த்த கூத்துக்கள் எத்தனை மானாடமயிலாட வந்தாலும் அடிக்க முடியாத முதல்தரமானது.
குத்தரிசியை கொழுத்தவிட்டுட்டு கோரா அரிசிக்கு கூப்பன் கடையில் கியூவில் நின்ற கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது.
காவோலை புதைத்த வயல்களில் வெள்ளரசுப்பேய்கள் கண்ணிவெடி புதைத்த அத்துமீறல்களை யாரிடம் ஆற்றுப்படுத்துவது .
@ராஜ நடராஜன் அண்ணா! சிங்களவர்களிடமும் பிரதேசவாதம் ,இருக்கிறது சரச்சந்திரா எழுதிய "" மடல்துவ"நாவல் சிறப்பாக இதை பதிவு செய்துள்ளது மற்றவர்கள் நூல் விபரம் இன்னும் தரமுடியும் காலஅவகாசம் வேண்டுகிறேன் தற்பொழுதில் பணியில் இருப்பதால்!
மேலும் சாதியத்தின் அடிப்படையில் தான் பிரதேசவாதம் வலுப்பெற்றது என்பது என் கணிப்பு பார்ப்பம் சகோதரம் நிரூபன் ஆதாரங்களுடன் பதிவிடுவார் இன்னும் சிறப்பாக!
@ராஜ நடராஜன் அண்ணா! சிங்களவர்களிடமும் பிரதேசவாதம் ,கம்பெரலிய (கிராமப்பிறல்வு) என்ற நாவல் அற்புதமாக (தமிழில் திக்வெல்லகமால் அதிகமாக மொழிபெயர்த்து )கிராமத்தின் பிரதேசவாதம் தூண்டப்படுகிறது மற்றவர் மடுல்கிரிய விஜயதாச இவரும் நாவல் அதிகமாக பிரதேசவாத நிலையில் எழுதியவர் இவரின் தமிழ்மொழி பெயர்ப்பு மல்லிலைப்பந்தல் வெளீயீடாக வந்துள்ளது .
மொழியிலும் கலாச்சாரத்திலும் இந்த பிராந்தியத் தனமே வளாமை தரும்
உங்கள் எழுத்துகளில் மண்வாசனையும் எதார்த்தமும் இலக்கியமும் மணக்கிறது, ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஈழம் பற்றிய புரிதலுக்காக
இழந்த வாழ்க்கை திரும்ப வராது. நல்லதே நடக்கும்.தொடருங்கள் !
அழகான தமிழ்நடை மகிழ வைக்கிறது.
மண்வாசனை. அழகான தமிழ்நடை மகிழ வைக்கிறது.
இயல்பான வாழ்வை ஒட்டிய தூய பதிவு. தொடரட்டும் நண்பா!
; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.//
தரிசிங்க.. கூட சேந்து தரிசிக்கிறோம்..
//நீ தானே சொன்னனீ, பரஞ்சோதி ஐயாவைத் தவற விட்டால் தொலைந்து போய் விடுவாய் //
ஹி ஹி.. அதுக்குனு இப்படியா.?
//அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்...................//
பாத்துகுட்டே பக்கத்துல இருந்த தொட்டிகுள்ள விழுந்துட்டீங்க.. அதுதானே.!!
ஆரம்பத்துல கொஞ்சம் கடுப்படிச்சாலும் பின்னே மாமா என்ட்ரி பிறகு செம..!! ஹி ஹி.. அதுவும் கூத்து பாத்து திரும்பியபோது அந்த பதில்.. ஹி ஹி.. பாப்போம்.. இன்னும் என்னவெல்லாம் நடந்தது என்று..
@மைந்தன் சிவா
வடை??//
இங்கே என்ன அன்னதானமா நடக்கிறது?
@மைந்தன் சிவா
ஆமா எனக்கு தான் வடை...//
அது தான் முதல் தடவையாக கேட்டிட்டீங்க இல்லே,,,
தந்திட்டாப் போச்சு..
@மைந்தன் சிவா
ஹஹா ரசித்தேன்...கிராமத்து ரசம் பொங்குகிறது..
பிரதேசவாதம் தானே நம்மளை புதைத்தது!!//
உஸ்......மெதுவாச் சொல்லுங்க, யாராவது கேட்டுக் கொண்டு நிற்கப் போறாங்க.
@MANO நாஞ்சில் மனோ
அடடடடா வடை போச்சே....//
போனாப் போகுதய்யா, அடுத்த திருவிழாவிலை பந்திக்கு முந்தினாக் கிடைச்சிடாது.
@MANO நாஞ்சில் மனோ
மனசு வலிக்குதுய்யா.....//
நன்றிகள் சகோ.
@விக்கி உலகம்
உங்கள் பகிர்வு வெறும் பதிவு மட்டும் அல்ல ரணங்களின் மேல் எழுதப்படும் எழுத்துக்கள்.....
ஆற்றாமை எனும் சொல் ஏனோ என் நினைவுக்கு வருகிறது........//
நன்றிகள் சகோ.
எங்கள் வாழ்க்கையின் ரணங்களை மட்டுமே நிஜங்களாகத் தர முயற்சிக்கிறேன்.
@Mathuran
ம்ம்..... போராட்டம் என்ற ஒரு சொல் எமது வாழ்க்கையை மட்டுமல்லாது எம்மூர் வனப்புக்களையும் எம் முன்னோர்களின் சுவடுகளையும் அல்லவா அழித்துவிட்டது.//
ஆமாம் சகோ, நன்றிகள் சகோ.
@Mathuran
தொடரை எதிர்பார்த்திருக்கிறோம்//
நன்றிகள் சகோ, உங்கள் ஆதரவுடன் தொடர் தொடர்ந்து வரும்.
@செங்கோவி
எங்களுக்கு ஈழம் பற்றிய புரிதலை உங்கள் பதிவுகள் தொடர்ந்து தருகின்றன. இந்தத் தொடரும்..நன்றி!//
ஈழம் பற்றிய முழுமையான புரிதல்களை என் பதிவுகளினூடாக நீங்கள் எதிர்பார்ப்பது தவறு சகோ, என்னால் இயன்ற வரை, ஈழம் பற்றிய புரிதல்களைத் தர முயற்சி செய்கிறேன்.
@♔ம.தி.சுதா♔
அழுத்தமான நினைவலைகள்.... இழந்த அந்த பந்தங்களை நினைவுகளால் மட்டும் அணைத்தே இரவுகள் கழிகிறது....//
ஆமாம், சகோ. இந்த நினைவுகளோடு, புதைந்து போனவர்கள் பல பேர் அல்லவா.
@இமா
தொடர்ந்து எழுதுங்க நிரூபன்.//
நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
சகோ!இலக்கியத்தனம் உங்களிடம் நீர்வீழ்ச்சியாய் கொட்டுகிறது.
நான் முன்பே சொன்னபடி உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பும் கலந்துரையாடலுமே புரிதலுக்கும்,புரிந்துணர்வுக்கும்,விவாதத்திற்கும் வலு சேர்க்கும்.
இன்னும் எதிர்பார்க்கிறேன்//
என்னால் முடிஞ்சளவில் ஒரு சிறு தமிழ்ப் பங்களிப்பைச் செய்கிறேன் சகோ, நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
அப்படியிருக்க சிங்களவர்கள் தவிர தமிழர்களுக்குள் பிரதேசவாதம் வலுப்பெற்றதற்கு என்ன காரணத்தை முன் வைக்கிறீர்கள் என்று சொல்ல இயலுமா?//
இதற்குரிய பதிலை சகோ, கந்தசாமி, விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
@ஹேமா
நிரூ...மறக்காமலிப்பதே நல்லது.நல்லதே நடக்கும்.தொடருங்கள்!//
நன்றிகள் சகோ.
@கந்தசாமி.
அந்த நாள் ஜாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே ஏன் ஏன் ஏன்...................//
அந்த நாளுக்கும், இந்த நாளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குப் போல. அது தான் சகோ.
@கந்தசாமி.
அன்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு கூட சுதந்திரமாக உலா வரலாம். நம் ஊர் கோவில் திருவிழா காலங்களிலே திருவிழா முடிய இரவு ஒன்று அல்லது இரண்டு மணி ஆகிவிடும்...எவ்வளவு அழகான வாழ்க்கை அது//
அதெல்லாம் ஒரு காலம் சகோ.
@Mahan.Thamesh
மிக அருமையாக உள்ளது சகோ .உங்களின் கட்டுரையை படிக்கும் போது எங்களூர் கிராமத்துக்கு போய்விட்டேன்;
தொடரட்டும் மேலும் நினைவலைகள்//
நன்றிகள் சகோ.
@shanmugavel
தொடருங்கள் நிரூபன்.வாழ்த்துக்கள்.உங்கள் எழுத்தில் உயிர் இருக்கிறது.//
நன்றிகள் சகோ.
@vanathy
நிரூபன், நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ. இழந்த வாழ்க்கை திரும்ப வராது. படிக்கும் போது ஏக்கமா இருக்கு. தொலைந்து போன சொந்தங்களை நினைச்சா மனம் பாராமாகி விடும்.//
நன்றிகள் சகோ, தொடர்ந்தும் எழுதுகிறேன்.
@FOOD
உங்கள் எழுத்துக்கள் ஓராயிரம் செய்தி சொல்கின்றன. தொடர்ந்து எழுதுங்கள். தூக்கங்கள் தொலையட்டும்.//
நன்றிகள் சகோ, துக்கங்கள் எம்மை விட்டு, இலகுவில் தொலைந்து விடாது தானே சகோ.
@யாதவன்
பழைய கதை கேக்க ஆசியும் இல்லை அப்புவும் இல்லை ஏன் அவர்கள் ஆவியும் இல்லை இப்பொழுது
ஆவணப்படுத்தி வையுங்கள் அருமையான வாழ்வியலை//
நன்றிகள் சகோ.
@சி.பி.செந்தில்குமார்
நல்லதொரு பதிவு + பகிர்வு//
நிறையச் சொல்லுவீங்க என்றால், ஒற்றை வார்த்தையில சொல்லிப் போட்டு, எஸ் ஆகிட்டீங்களே.
@ரேவா
சகோ உங்கள் நினைவோடு சேர்ந்து, நானும் பயணித்தது போன்ற உணர்வு..தொடர்ந்து எழுதுங்கள்...//
நன்றிகள் சகோ.
@ரஹீம் கஸாலி
மண்வாசனையுடன் உள்ளது தொடர்....தொடருங்கள்//
நன்றிகள் சகோ.
@Nesan
நினைவுகளை தீண்டியே ஏங்கிப்போவதில் ஒருசுகம் துக்கம் இரண்டும் உண்டு. வயல் வெளியில் பட்டம் விட்டகாலங்கள் ,சூடுமிதிக்கும் போது மாடு போடும் சாணம் நெல்லில் போய்விடும் என்று மாட்டின் வாலில் காத்திருந்த தருணங்கள் முடியவில்லை கண்கலங்குகிறது. சகோதரம்!//
என்னை விட, உங்களிடம் தான் அதிகமான நினைவுகள் இருக்கின்றன சகோ.நீங்களும் இவற்றை எழுத்தாக்க முயற்சி செய்யலாமே சகோ.
@Nesan
அன்னாளில் பார்த்த கூத்துக்கள் எத்தனை மானாடமயிலாட வந்தாலும் அடிக்க முடியாத முதல்தரமானது.//
அண்ணாவியாரின் கூத்துக்கள் உங்களுக்கு நினைவிருக்கும் என்று தானே சகோ,
காத்தான் கூத்துக்கள், தெருக் கூத்துப் பார்த்த போர்க்கால ஞாபகங்கள், இவை எல்லாம் மறக்க முடியுமா?
@Nesan
குத்தரிசியை கொழுத்தவிட்டுட்டு கோரா அரிசிக்கு கூப்பன் கடையில் கியூவில் நின்ற கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது.//
பதிவைப் படித்த உடன், மீண்டும் ஊருக்கு வந்து விட்டீர்கள் போல இருக்கிறதே சகோ.
@இரா.எட்வின்
மொழியிலும் கலாச்சாரத்திலும் இந்த பிராந்தியத் தனமே வளாமை தரும்//
நன்றிகள் சகோ.
@தமிழ்த்தோட்டம்
இழந்த வாழ்க்கை திரும்ப வராது. நல்லதே நடக்கும்.தொடருங்கள் !//
இழந்தவைகள் இனி ஒரு போதும் கிடைக்காது என்பது உண்மை தான் சகோ. நன்றிகள் சகோ.
@Dr.எம்.கே.முருகானந்தன்
அழகான தமிழ்நடை மகிழ வைக்கிறது.//
நன்றிகள் சகோ.
@சுவனப்பிரியன்
மண்வாசனை. அழகான தமிழ்நடை மகிழ வைக்கிறது.//
நன்றிகள் சகோ.
@! சிவகுமார் !
இயல்பான வாழ்வை ஒட்டிய தூய பதிவு. தொடரட்டும் நண்பா!//
உங்கள் ஆதரவுகளோடு தொடருவேன் சகோ.
@தம்பி கூர்மதியன்
என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.//
தரிசிங்க.. கூட சேந்து தரிசிக்கிறோம்.//
நிஜமாவா? அப்போ இப்ப நீங்கள் எங்க நிக்கிறீங்க?
@தம்பி கூர்மதியன்
ஆரம்பத்துல கொஞ்சம் கடுப்படிச்சாலும் பின்னே மாமா என்ட்ரி பிறகு செம..!! ஹி ஹி.. அதுவும் கூத்து பாத்து திரும்பியபோது அந்த பதில்.. ஹி ஹி.. பாப்போம்.. இன்னும் என்னவெல்லாம் நடந்தது என்று..//
நன்றிகள் சகோ.
Post a Comment