கிளைகளற்ற மரத்தின்
உயிர்த் துடிப்பாய்
இப்போது நாங்கள்!
விரும்பிய போது
எடுத்தாளவும்
வேண்டிய போது
வேகமெடுத்ததுமாய்
எங்களின் கடந்த காலங்கள்;
பயனற்ற வெற்றுத் தோட்டாவாய்
பகலவன் ஒளியின்றி இருக்கும்
எங்களைப் பற்றிய நினைப்புக்கள்
இப்போது எவருக்கும் இருக்காது,
விழிகளை நெருப்பாக்கி
வீறு கொண்டெழ வைத்த நிகழ்வுகளின்
மனக் கண்ணின் பின்னே
ஆயிரம் கேள்விகள்;
ஊர் எரித்து
உயிர் எடுத்து
உதிரம் குடித்தவரின்
பூட்ஸ் கால்களுக்காய்
இப்போதும் நாங்கள்
புசிக்கப்படுகிறோம்;
என்னையும், என் கூட்டத்தினரையும்
எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள்,
இறக்கைகள் அறுத்து- இதயங்கள்
பறக்க முடியாதவாறு வலிகள்;
மட்டும் எல்லோர் முகங்களிலும்,
வயல் எரிந்து கிடக்கிறது
வரப்பு சிதைந்து போய் விட்டது
என் வம்சம், விழுதுகள்
வளங்கள் எல்லாம்
வெள்ளரசின் நிழலினால்
மறைக்கப்பட்டு விட்டது,
பெருமிதம் பேசிடும்
பூச்சாண்டிகள் முன்னே
துரோகியாய் நாங்களின்று
இறுதியில் இருந்த நீர்
இலக்கினைத் தொலைத்து விட்டீர் என
இறுமாப்போடு
ஈனஸ்வர அஸ்திரங்களும்;
சாவின் ஒலியாய்
இன்றும் எம் காதுகளில்,
பெரும் வெளியில்
தொலைந்து போன என்
தங்கையின் தீட்டுத் துணியில்
பேய் குடித்த ரத்தத்தின்
வாடை மட்டும்
உணர முடிகிறது;
நுகரப்படாத அரும்புகள் என்று
இப்போது ஏதுமில்லை
ஒரே ஒரு வேறுபாடு,
தேனீக்கள் மட்டும் எங்கள்
விளை நிலங்களின்
கருவறுத்து தேன் குடிக்கவில்லை
வெள்ளரசுகளில்
தொங்கும் வௌவால்கள் தான்
தினமும் வேட்டையாடி மகிழ்கின்றன!!
உறிஞ்சி முடிந்ததும்
உள்ளே விடப்பட்ட
திரவம் கழுவப்படாது
நாற்றம் அடங்க முன்பே
நகைகளும் பணமும்
கைகளை நனைக்கிறது,
ஒரு சந்ததியின்
வேதாந்தம் மட்டும்
வெள்ளரசுகளின்
சித்தாந்த நிழலின் கீழ்
சிதைக்கப்பட்டு விட்டது,
தூரத்தே தெரிகிறது
என் பாட்டனும்
தோழனும்
இதைப் பார்த்தும்
பார்வையற்றோராய்
பிளாவில் கள்ளருந்தி மகிழ்வது
என்னை அவர்களிடம்
போக விடுங்கள் என்ற படி
நிர்வாணமாய்
அவல ஒலியெழுப்பியபடி
என் தங்கை...
கூக்குரலிடுகிறாள்..
இதோ... இதோ....
உங்களுக்கும் கேட்கிறதா
அவளின் குரல்;
கேட்கவே கூடாது,
பிரபஞ்சமே
இதனை(ப்) பிறர்
கேளாதிருக்கச் செய்வாய்
நாங்கள் நாதியற்றவர்கள்....!!
|
67 Comments:
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
/////பெருமிதம் பேசிடும்
பூச்சாண்டிகள் முன்னே
துரோகியாய் நாங்களின்று////
ஆமாம் நிரு ஒரு கனடிய வாழ் பதிவர் என்னை பகிரங்கமாகவே ஒரு இடத்தில் கேட்டார் நீ ஒழித்தோடி வந்ததால் தான் உயிரோடு இருக்கிறாயாம்....
நுகரப்படாத அரும்புகள் என்று
இப்போது ஏதுமில்லை
ஒரே ஒரு வேறுபாடு,
தேனீக்கள் மட்டும் எங்கள்
விளை நிலங்களின்
கருவறுத்து தேன் குடிக்கவில்லை
வெள்ளரசுகளில்
தொங்கும் வௌவால்கள் தான்
தினமும் வேட்டையாடி மகிழ்கின்றன!!
சகோ என்ன பதில் பின்னூட்டம் இடுவது என்று தெரியவில்லை.. பதிவை படிக்கையில் நெஞ்சம் கணக்கிறது...
வலிகள் மிகுந்த கவிதை...
நல்ல தமிழில் அருமையான கவிதை தந்ததற்கு நன்றி ...
விரும்பிய போது
எடுத்தாளவும்
வேண்டிய போது
வேகமெடுத்ததுமாய்
எங்களின் கடந்த காலங்கள்;
இந்த வரிகளில் உங்கள் வலிகளை உணர முடிகிறது சகோ ....
உறிஞ்சி முடிந்ததும்
உள்ளே விடப்பட்ட
திரவம் கழுவப்படாது
நாற்றம் அடங்க முன்பே
நகைகளும் பணமும்
கைகளை நனைக்கிறது,
ஒரு சந்ததியின்
வேதாந்தம் மட்டும்
வெள்ளரசுகளின்
சித்தாந்த நிழலின் கீழ்
சிதைக்கப்பட்டு விட்டது,
ரொம்பவும் கொடுமை...படிக்கும் எங்களை போன்றோரால், பரிதாபத்தையே பதிலாய் இட முடிகிறது.... என்ன பண்ண, எல்லோரும் இருந்தும் நாங்களும் நாதியற்றோர் தான்...சிலர் முன்னிலையில்...உங்கள் வேதனை வலியை, இதைவிட சட்டை அடியாய் சொல்லிவிட முடியாது சகோ...
இதோ... இதோ....
உங்களுக்கும் கேட்கிறதா
அவளின் குரல்;
கேட்கவே கூடாது,
பிரபஞ்சமே
இதனை(ப்) பிறர்
கேளாதிருக்கச் செய்வாய்
நாங்கள் நாதியற்றவர்கள்....!!
மொத்தத்தில் இந்த பதிவில் சொல்லத்தெரியா சோகமும், கோவமும் எனை ஆட்கொள்கிறது... இதற்க்கு ..காரணமாய் இருப்போர் மேல்...
மனதில் வலி. கண்ணீருடன்.......
இதை ஒரு கவிதையாகப் பார்ப்பதை விடவும்.. எத்தனை எத்தனை உள்ளங்களின் ஆழ்மன உணர்வுகளின் பிம்பமாய் என் கண் முன் விரிகின்றது. எனது மூதாதையர் இலங்கைத் தீவில் வாழ்ந்திருந்தாலும்.. எனக்கு இலங்கையைத் தெரியாது. அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கின்றேன். இருந்தாலும் ஈழத்தமிழர்களின் வலி நெஞ்சை அடைக்கின்றது.. அதே சமயம் ! இந்த மக்களை துன்பத்தில் தள்ளிவிட்டு கனடா போன்ற நாடுகளில் கொஞ்சம் கூட கவலையற்று சில தமிழர்கள் இன்பமாய் வாழ்வதைப் பார்க்கும் போது எரிச்சலாய் வருகின்றது....
நிச்சயம் ஈழத்தமிழர்களி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்... ஏற்படுத்த வழி செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை..... ஆனால் அவற்றை மட்டும் நம்பி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் காலம் கடத்த வேண்டாம்... உங்களுக்கு உதவி தேடி வரும் என்பது கனவே !!!
மாறா வடுக்களுடன் துயரம் பகிர்வது தவிர திசை தெரியாமல்....
வடுக்களாகிவிட்ட வலிகளாய்
வாட்டியெடுக்கிறது வதைகள்.
வரிகளில் தெரிக்கும்
வேதனைகள்
வாசிக்கும்போதே
வலியுணரவைக்கிறது..
என்னையும், என் கூட்டத்தினரையும்
எல்லோரும் ஏமாற்றி விட்டார்கள்,
இறக்கைகள் அறுந்து
இதயங்கள் பறக்க முடியாத வலிகள்;
மட்டும் எல்லோர் முகங்களிலும்,
மிகச் சாதாரணமாக ஒரு அசாதாரண விஷயத்தைச் சொல்லும் இவ்வரிகள் போதும்... நேற்று என் அப்பாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். ”ஒருவர்” மனசு வைத்திருந்தால் இத்தனை லட்சம் பேரும் கம்பி வளைவுகளுக்கு அடங்கியிருக்கவேண்டியிருக்காதே என்று. ஒரு செய்தியாக நாம் இதைக் கேட்டுக் கொண்டு உச் கொட்டி சென்றுவிடலாம். ஆனால் ஒரே ஒரு நிமிட யோசித்துப் பார்த்தால்??? அந்த சூழ்நிலையை கற்பனையால் அனுபவித்தால்???
ஒருசில புரியவில்லை...
ஒரு சந்ததியின்
வேதாந்தம் மட்டும்
வெள்ளரசுகளின்
சித்தாந்த நிழலின் கீழ்
சிதைக்கப்பட்டு விட்டது,
இதில் வெள்ளரசு என்பது சிங்களத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்!
நான் முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.... கொல்வதாக முடிவெடுத்துவிட்டீர்கள்... செய்துவிடுங்கள்.... ஆனால் (மனச்)சித்ரவதை செய்யாதீர்கள்!!!
>>பிரபஞ்சமே
இதனை(ப்) பிறர்
கேளாதிருக்கச் செய்வாய்
வலி நிறைந்த கவிதை
நெஞ்சின் வலியை வெளியேற்ற துளிர்க்கிறது கண்ணீரும் இயலாமையும்.....
//வயல் எரிந்து கிடக்கிறது
வரப்பு சிதைந்து போய் விட்டது
என் வம்சம், விழுதுகள்
வளங்கள் எல்லாம்
வெள்ளரசின் நிழலினால்
மறைக்கப்பட்டு விட்டது,//
வலியும் வேதனையும் நெஞ்சை பிசைகிறது நண்பா...காலம் ஒரு நாள் மாறும் நம் கனவுகள் ஈடேறும் நம்பிக்கை கொள்வோம்....
திரும்பவும் வலி...ஆனால் திரும்பிப் பார்ப்பதும் நல்லதே.
மறந்தால் நாம் தமிழரல்ல !
////தூரத்தே தெரிகிறது
என் பாட்டனும்
தோழனும்
இதைப் பார்த்தும்
பார்வையற்றோராய்
பிளாவில் கள்ளருந்தி மகிழ்வது
என்னை அவர்களிடம்
போக விடுங்கள் என்ற படி
நிர்வாணமாய்
அவல ஒலியெழுப்பியபடி
என் தங்கை...
கூக்குரலிடுகிறாள்..
இதோ... இதோ....
உங்களுக்கும் கேட்கிறதா
அவளின் குரல்;
கேட்கவே கூடாது,
பிரபஞ்சமே
இதனை(ப்) பிறர்
கேளாதிருக்கச் செய்வாய்////வலிக்கிறது.... வலிகள் என்பதே வாழ்வாகி போச்சே(((((((
//கீறல் விழுந்த கண்ணாடியாய்
கிளைகளற்ற மரத்தின்
உயிர்த் துடிப்பாய்
இப்போது நாங்கள்!//
கீறல் விழுந்த கண்ணாடி
சீக்கிரமே சுக்குநூறாகும்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு செதில்களாய்
கொடியோனின் உயிரறுக்க எழுந்திடும்..
//எங்களைப் பற்றிய நினைப்புக்கள்
இப்போது எவருக்கும் இருக்காது,//
ஒளி மங்கிற்றாலும்
ஆதவன் ஆதவனே.!
புலி படுத்தாலும் பூனையாகாது.!!
மறந்தேன் என நினைத்தாயோ.?
மனதிலுள்ளே கொதிக்கும் நெருப்பை
வெளிக்கொண்டு வேரறுக்கவா.?
நினைவாலும் மறவேன்.!
//ஊர் எரித்து
உயிர் எடுத்து
உதிரம் குடித்தவரின்
பூட்ஸ் கால்களுக்காய்
இப்போதும் நாங்கள்
புசிக்கப்படுகிறோம்;//
புசிக்கப்பட்டன யாவும் செரிக்கபடும்.!
செரித்த கழிவானாலும்
வெகுண்டு தாக்கிடுவோம்.!
//பறக்க முடியாதவாறு வலிகள்;
மட்டும் எல்லோர் முகங்களிலும்,//
சிறகை அறுத்தால் என்ன தோழா.?
சினத்தை பூட்டிக்கொள்.!
விரைவில் விடிவெள்ளி முளைக்கும்
அன்று சினத்தை நஞ்சாக்கு..
//பெருமிதம் பேசிடும்
பூச்சாண்டிகள் முன்னே
துரோகியாய் நாங்களின்று
இறுதியில் இருந்த நீர்
இலக்கினைத் தொலைத்து விட்டீர் என
இறுமாப்போடு
ஈனஸ்வர அஸ்திரங்களும்;
சாவின் ஒலியாய்
இன்றும் எம் காதுகளில்,//
தூற்றுபவர் தூற்றட்டும்
தொடக்கம் முதல் இன்று வரை தோல்விகள் பல கண்டுள்ளோம்.!
தோல்விகள் நமக்கு புதிதல்ல.!
துவளாமை வேண்டுமடா.!!
//நுகரப்படாத அரும்புகள் என்று
இப்போது ஏதுமில்லை
ஒரே ஒரு வேறுபாடு,
தேனீக்கள் மட்டும் எங்கள்
விளை நிலங்களின்
கருவறுத்து தேன் குடிக்கவில்லை
வெள்ளரசுகளில்
தொங்கும் வௌவால்கள் தான்
தினமும் வேட்டையாடி மகிழ்கின்றன!!//
வெட்கிகொள்கிறேன்.!
கலங்கிய கண்களை துடைப்பதா.?
இல்லை,
கலங்கித்தவரை அழிப்பதா.?
உண்மை நிலையானாலும்
நினைத்திருக்கிறேன் பலநாள்
இவை மெய்பிக்காத கனவாகவேண்டுமென.!
ஆனால்,
நடக்கிறது இன்றும்..
வேதனை காட்டாமல்
எதிர்க்க வேகத்தை காட்டிடு தோழா.!
//ஒரு சந்ததியின்
வேதாந்தம் மட்டும்
வெள்ளரசுகளின்
சித்தாந்த நிழலின் கீழ்
சிதைக்கப்பட்டு விட்டது,//
காயம் கொண்ட நெஞ்சை
மேலும் கடுகிட்டாயடா.!
ஒவ்வொரு வரிகளிளும்
தேற்றிகொள்ள நினைத்தாலும்
கண்ணீர் துளைக்கிதடா.!
//இதோ... இதோ....
உங்களுக்கும் கேட்கிறதா
அவளின் குரல்;
கேட்கவே கூடாது,
பிரபஞ்சமே
இதனை(ப்) பிறர்
கேளாதிருக்கச் செய்வாய்//
கேட்காது இது போல எங்கும்.!
உற்றாரின் வலி
இன்றும் நெஞ்சை துளைக்கிறது..
வஞ்சக அரசுகளை
ஏச்சுகளை விட்டுவிட்டு
புதியதோர் விரிட்சமாக வெகுண்டு வா தோழா.!
இப்போது உங்கள் மொத்த ஆதங்கம்(கவிதை..)வலிக்கிறது.. வேண்டாம்.. என்னால் எதையும் சொல்லமுடியாத சூழலில் இருக்கிறேன்..
இன்றே அழுவது முடிவாகட்டும்
நாளை சூரியன் தொடராகட்டும்.!
வருத்தங்கள் போதும்
வஞ்சனைகள் போதும்
ஏச்சுகள் போதும்
பேச்சுகள் போதும்..
மங்கிவிட்ட ஒரு பாதையெண்ணி
மங்கிகொள்ளாதே உன் வாழ்வை.!!
மங்காத ஒளிவிளக்கு உம்மை தேடி வருகிறுது..
அதுவரை ஆடட்டும் அவர்கள்..
அதுவரை ஏத்திருப்போம்..
பின்னர், உயிரறுப்போம்..
//நாங்கள் நாதியற்றவர்கள்!//
உமக்காக இத்தனை நெஞ்சங்கள் துடிக்கையில்
எங்ஙனம் நீ சொல்லிட்டாய்.!
உண்மையில் நெஞ்சம் கொதிக்கிறது..
ஒருநாளில் என் எழுத்துக்கள் யாவும் நீ-களாய்..
இன்று உங்கள் துயர் மாற்ற நினைத்தால்
நான் மறந்திட்டேன் என்கிறாயே.!
கோபமும், கண்ணீருமாய் எழுதுகிறேன்..
உந்தன் வலி நீ அறிவாய்
ஆனால், நான் உணர்கிறேன்..
என் உணர்வால் சொல்கிறேன்
மீண்டும் அவ்வார்த்தை சொல்லிடாதே.!
உனக்கான நாதியாய் என்றுமே நான்.!
கரம் கொடுக்க நாங்களும் இருக்கோம்
ஒரு சந்ததியின்
வேதாந்தம் மட்டும்
வெள்ளரசுகளின்
சித்தாந்த நிழலின் கீழ்
சிதைக்கப்பட்டு விட்டது//
-;((
அருமையான கவிதை
முகத்தில் அறையும் கவிதைகள் சகோதரம்.
நான் இப்போது சென்னையில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....
--
உந்தன் வலி நீ அறிவாய்
ஆனால், நான் உணர்கிறேன்..
என் உணர்வால் சொல்கிறேன்
மீண்டும் அவ்வார்த்தை சொல்லிடாதே.!
உனக்கான நாதியாய் என்றுமே நான்.!
நண்பர் தம்பி கூர்மதியன் பின்னூட்டம் மெய் சிலிர்க்க வைக்கிறது...சகோ உங்கள் கவிதையில் இருந்து, உங்களுக்காக துடிக்க நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன, என்பதை நண்பர் தம்பி கூர்மதியன் மறுமொழியில் உணர்ந்திருப்பீர்கள்...துயர் கொள்ளாதீர்...நல் மாற்றம் நாளடைவில் நம்மை நாடி வரும்.சகோ.
பொறுமை காத்து நில்
பதுங்கிய புலி பாயும் நேரமொன்று உண்டு..!!
காட்டிகொடுத்த கைகளையும்
கூட்டி கொடுத்த உறவுகளையும்
கருவருபோம் முதலில்..
பின் இருக்கொமொரு வீர யுத்தம்
நிரயுதாபாநிகளை
நிர்வானபடுதியத்தை
வீரமென்று கொண்டாடும் அந்த
அரக்க கூட்டத்தை
வலிக்காது கொல்வோம் ஆடைகளுடனே..!!
மிக்க வலியை உண்டாக்குகிறது சகோ உங்கள் கவிதை. உங்கள் வலிக்கு பதில் சொல்ல முடியாமல் வெட்கி தலைகுனிவதை தவிர இப்போதைக்கு ஒன்றும் செய்ய இயலவில்லை என்னால்.
மனதில் ஆயிரம் கேள்விகள் என் செய்யமுடியும் என்ற ஆற்றாமைதான் வெளிப்படுகிறது.
நாதியற்றுப்போனாலும் நம்பிக்கை உண்டு
நாளை ஓர் உதயம் வரும் வெள்ளரசுப்பேய்கள் வேள்வி செய்தாலும்
வேர்களிடம் வேதாளம் வேலிமேய்ந்தாளும் இன்னும் கனல்கள் எம் சந்ததியை சருகாக்கி சாத்தானிடம் சல்லாபம் செய்ய
சாலையோரம் காத்துக்கிடந்தாளும்
ஒரு உதயம் வரும் கலிங்கத்துப்பரனிபார்த்து முடிதுறந்தான்
அசோகன் இனவாதிகள் இன்னும் குடி கெடுத்தாளும் கூற்றவன் விடான் எங்களை நம்புவோம் நல்லது நடக்கும்!
@♔ம.தி.சுதா♔
எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...//
வணக்கம் சகோ,
காலையில் நாங்கள் சோறு வழங்குவது கிடையாது சகோ. ஒன்லி பிட்டு & இடியப்பம் மட்டும் தான். இதில் உங்கள் தெரிவு என்ன?
@♔ம.தி.சுதா♔
/////பெருமிதம் பேசிடும்
பூச்சாண்டிகள் முன்னே
துரோகியாய் நாங்களின்று////
ஆமாம் நிரு ஒரு கனடிய வாழ் பதிவர் என்னை பகிரங்கமாகவே ஒரு இடத்தில் கேட்டார் நீ ஒழித்தோடி வந்ததால் தான் உயிரோடு இருக்கிறாயாம்...//
உங்களுக்கு விழுந்தது போன்ற இதே மாதிரியான சொல்லெறிகள் எனக்கும் விழுந்துள்ளன சகோதரம், என்னுடைய இனியும் ஒரு போர் வேண்டாம் கவிதைக்கும் தாறுமாறாக திட்டி பின்னூட்டம் அனுபியிருந்தார்கள்.
ஆனால் எந்த நாட்டுப் பதிவர் எனும் விபரங்கள் இல்லாது அனானிமஸ் பின்னூட்டம் வழங்கியிருந்தார்.
http://tamilnattu.blogspot.com/2011/03/blog-post_173.html
சகோ, யார் ஒழித்தோடியது?
போருக்குப் பயந்து கனடாவிலை ஓடிப் போயிருக்கும் அவருக்கும், இறுதிக் காலம் வரை சொல்லெண்ணாத் துயரங்களை அனுபவித்த எங்களுக்கும் இடையில் பல வேறுபாடுகள் உண்டு,
இதெல்லாம் சும்மா சப்பைக் கருத்துக்கள். கண்டுக்கவே வேண்டாம் சுதா. தொடர்ந்தும் எழுதுங்கோ.
@இராஜராஜேஸ்வரி
பறக்க முடியாத வலிகள்;
மட்டும் எல்லோர் முகங்களிலும்,//
வலிகளை நாங்களும் உணர்கிறோம்//
உங்கள் உணர்வுகளுக்காய் நாங்கள் தலை வணங்குகிறோம். நன்றிகள் சகோ.
@!* வேடந்தாங்கல் - கருன் *!
வலிகள் மிகுந்த கவிதை...//
நன்றிகள் சகோ, எங்களூரின் யதார்த்த நிலை தானே இது.
நல்ல தமிழில் அருமையான கவிதை தந்ததற்கு நன்றி ...//
மிக்க நன்றிகள் சகோ.
@ரேவா
ரொம்பவும் கொடுமை...படிக்கும் எங்களை போன்றோரால், பரிதாபத்தையே பதிலாய் இட முடிகிறது.... என்ன பண்ண, எல்லோரும் இருந்தும் நாங்களும் நாதியற்றோர் தான்...சிலர் முன்னிலையில்...உங்கள் வேதனை வலியை, இதைவிட சாட்டை அடியாய் சொல்லிவிட முடியாது சகோ...//
நன்றிகள் சகோ.
மொத்தத்தில் இந்த பதிவில் சொல்லத்தெரியா சோகமும், கோவமும் எனை ஆட்கொள்கிறது... இதற்க்கு ..காரணமாய் இருப்போர் மேல்...//
கோபப்பட்டு இனி என்ன செய்ய முடியும் சகோ. எல்லாமே காலங் கடந்து போய் விட்ட செயற்பாடுகள் தானே.
@ரேவா
மொத்தத்தில் இந்த பதிவில் சொல்லத்தெரியா சோகமும், கோவமும் எனை ஆட்கொள்கிறது... இதற்க்கு ..காரணமாய் இருப்போர் மேல்...//
உங்களின் உணர்வினைப் பகிர்ந்து கொண்டமைக்கும், விமர்சனத்திற்கும் நன்றிகள் சகோ.
@இக்பால் செல்வன்
இதை ஒரு கவிதையாகப் பார்ப்பதை விடவும்.. எத்தனை எத்தனை உள்ளங்களின் ஆழ்மன உணர்வுகளின் பிம்பமாய் என் கண் முன் விரிகின்றது. எனது மூதாதையர் இலங்கைத் தீவில் வாழ்ந்திருந்தாலும்.. எனக்கு இலங்கையைத் தெரியாது. அதனோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்கின்றேன். இருந்தாலும் ஈழத்தமிழர்களின் வலி நெஞ்சை அடைக்கின்றது.. அதே சமயம் ! இந்த மக்களை துன்பத்தில் தள்ளிவிட்டு கனடா போன்ற நாடுகளில் கொஞ்சம் கூட கவலையற்று சில தமிழர்கள் இன்பமாய் வாழ்வதைப் பார்க்கும் போது எரிச்சலாய் வருகின்றது....
நிச்சயம் ஈழத்தமிழர்களி வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்... ஏற்படுத்த வழி செய்வது ஒவ்வொரு தமிழனின் கடமை..... ஆனால் அவற்றை மட்டும் நம்பி இலங்கையில் இருக்கும் தமிழர்கள் காலம் கடத்த வேண்டாம்... உங்களுக்கு உதவி தேடி வரும் என்பது கனவே !!!//
உங்கள், எங்கள் அனைவரினதும் கனவுகள் ஒரு நாளில் நிஜமானால் ரொம்பவும் சந்தோசப்படுவோம். அதுவரை இலவு காத்த கிளிகள் தான் நாங்கள்.
நன்றிகள் சகோ.
@ராஜ நடராஜன்
மாறா வடுக்களுடன் துயரம் பகிர்வது தவிர திசை தெரியாமல்....//
உங்கள் உள்ளத்து உணர்வுகளையும் இக் கவிதையோடு பகிர்ந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ.
@அன்புடன் மலிக்கா
வடுக்களாகிவிட்ட வலிகளாய்
வாட்டியெடுக்கிறது வதைகள்.
வரிகளில் தெரிக்கும்
வேதனைகள்
வாசிக்கும்போதே
வலியுணரவைக்கிறது..//
உங்களின் உணர்வினைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரி,
இதனை விடவும் இன்னமும் கொடுமையான விடயங்கள் இருக்கின்றன. ஆனால் பதிவிட முடியாத சூழ் நிலை.
அருமைன்னு சொல்ல முடியவில்லை...சோகம் அப்பிக்கிடக்கும் ஒரு இனத்தின் பலிகளையும் வழிகளையும் பார்க்கும் போது
இரத்தச் சரித்திரம் படிக்க முடியாமல் வடித்தக் கண்ணீரில் கரைகிறது நிகழ்க்காலம். மனதை நூறுமுறை கொலை செய்யும் எழுத்து...
எதுவும் செய்ய இயலாதவனாய் இருக்கும் ஏழு கோடி பேரை எண்ணி அழுவதா..? இல்லை....
இழிநிலைக்கு ஆளான நம் இனத்தின் சிறுமை கண்டு சீறுவதா...?
விடியட்டும் எனக் காத்திருப்பது நம் கையாளாகாத்தனத்தை காட்டுகிறது.
எவரேனும் செய்யட்டும் என நினைப்பது நம் பொறுப்பற்றத் தன்மையைக் காட்டுகிறது.
நிச்சயம் மலரும் “தமிழீழம்”.
@ஆதவா
மிகச் சாதாரணமாக ஒரு அசாதாரண விஷயத்தைச் சொல்லும் இவ்வரிகள் போதும்... நேற்று என் அப்பாவும் நானும் பேசிக் கொண்டிருந்தோம். ”ஒருவர்” மனசு வைத்திருந்தால் இத்தனை லட்சம் பேரும் கம்பி வளைவுகளுக்கு அடங்கியிருக்கவேண்டியிருக்காதே என்று. ஒரு செய்தியாக நாம் இதைக் கேட்டுக் கொண்டு உச் கொட்டி சென்றுவிடலாம். ஆனால் ஒரே ஒரு நிமிட யோசித்துப் பார்த்தால்??? அந்த சூழ்நிலையை கற்பனையால் அனுபவித்தால்???//
கற்பனையால் அனுபவித்தால், சொல்லவே வேண்டாம், இதனை வர்ணிக்க வார்த்தைகளே இருக்காது.
ஒருசில புரியவில்லை... ///
எந்த எந்த வரிகள் என்று சொன்னால் சகோ விளக்கமளிக்கலாம்.
ஒரு சந்ததியின்
வேதாந்தம் மட்டும்
வெள்ளரசுகளின்
சித்தாந்த நிழலின் கீழ்
சிதைக்கப்பட்டு விட்டது,
இதில் வெள்ளரசு என்பது சிங்களத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்//
இல்லைச் சகோதரம், வெள்ளரச மரம் பற்றிக் அறிந்திருப்பீர்கள் தானே?
வெள்ளரச மரம் அல்லது அரச மரத்தினை அண்டித் தான் புத்த பெருமானின் கோயில்கள் அமைந்திருக்கும். பௌத்த பிக்குகளினை முன் மாதிரியாகக் கொண்டு, அவர்களின் சொல்லினைக் கேட்டு, பௌத்த மதத்தினரால் இலங்கைத் தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் நிகழ்வுகளைப் பூடமாகச் சொல்ல முனைந்தேன்.
//நான் முன்பே ஒருமுறை சொல்லியிருக்கிறேன்.... கொல்வதாக முடிவெடுத்துவிட்டீர்கள்... செய்துவிடுங்கள்.... ஆனால் (மனச்)சித்ரவதை செய்யாதீர்கள்!!!//
அதனைத் தான் எல்லோரும் கேட்கிறோம். ஒரு அணு குண்டைப் போட்டாலே போதும் எனும் மன நிலை தான் எல்லோருக்கும்.
@சி.பி.செந்தில்குமார்
வலி நிறைந்த கவிதை//
இதனை விடவும் இன்னும் அதிகமான வலிகள் நெஞ்சினுள் புதைந்திருக்கிறது சகோதரா.
@MANO நாஞ்சில் மனோ
நெஞ்சின் வலியை வெளியேற்ற துளிர்க்கிறது கண்ணீரும் இயலாமையும்.....//
என்ன செய்ய மனோ, இது தானே எழுதப்படாத விதி.
//
வலியும் வேதனையும் நெஞ்சை பிசைகிறது நண்பா...காலம் ஒரு நாள் மாறும் நம் கனவுகள் ஈடேறும் நம்பிக்கை கொள்வோம்....//
நம்பிக்கைச் சக்கரம் அச்சாணி இல்லாமல் சுழன்று கொண்டிருக்கிறது சகோதரனே, இனி நம்பிக்கை எனும் வசனங்களைத் தொலைத்தவராக நாங்கள் மட்டும் கால் போன போக்கில் போய்க் கொண்டிருக்கிறோம்.
@ஹேமா
திரும்பவும் வலி...ஆனால் திரும்பிப் பார்ப்பதும் நல்லதே.
மறந்தால் நாம் தமிழரல்ல !//
ஆமாம் சகோதரி, இது போன்ற பல செய்திகள் எழுதப்படாத காவியங்களாய் மனசினுள் புதைந்திருக்கின்றன, அவற்றினை வெளிக் கொணர வேண்டும் என்பதே என் அவா.
@கந்தசாமி.
கேளாதிருக்கச் செய்வாய்////வலிக்கிறது.... வலிகள் என்பதே வாழ்வாகி போச்சே(((((((//
நன்றிகள் சகோதரம்.
@FOOD
எங்கள் கண்கள் குளமாகின்றன.//
உங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் சகோதரம்.
@தம்பி கூர்மதியன்
தூற்றுபவர் தூற்றட்டும்
தொடக்கம் முதல் இன்று வரை தோல்விகள் பல கண்டுள்ளோம்.!
தோல்விகள் நமக்கு புதிதல்ல.!
துவளாமை வேண்டுமடா.!!//
முட்கம்பியின் பின்னாலும், முழத்திற்கு முழம் நிற்கும் தலையில் சட்டித் தொப்பி கவிழ்த்த உயிரினங்களின் பின்னேயும் எங்கள் துவாளமைகள் அடங்கி விட்டன. இனியும் இப்படியான செயல்கள் என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாகி விட்டது. வாழும் வரை வாழ்வது என்ற ஒன்று தான் என்னைப் போன்ற அனைத்துத் தமிழர்களின் எதிர்பார்ப்பு...
துவளாமை... எப்போதோ செத்துப் போன, எங்கள் இதயங்களைக் கருக்கிய ஒரு சொல்.
இனிமேல் எம் அகராதியில் இது வராது சகோதரனே!
@தம்பி கூர்மதியன்
நாங்கள் நாதியற்றவர்கள்!//
உமக்காக இத்தனை நெஞ்சங்கள் துடிக்கையில்
எங்ஙனம் நீ சொல்லிட்டாய்.!
உண்மையில் நெஞ்சம் கொதிக்கிறது..
ஒருநாளில் என் எழுத்துக்கள் யாவும் நீ-களாய்..
இன்று உங்கள் துயர் மாற்ற நினைத்தால்
நான் மறந்திட்டேன் என்கிறாயே.!
கோபமும், கண்ணீருமாய் எழுதுகிறேன்..
உந்தன் வலி நீ அறிவாய்
ஆனால், நான் உணர்கிறேன்..
என் உணர்வால் சொல்கிறேன்
மீண்டும் அவ்வார்த்தை சொல்லிடாதே.!
உனக்கான நாதியாய் என்றுமே நான்.//
உங்களின் உணர்விற்கும், மேலான வார்த்தைகளுக்கும் நன்றிகள் சகோதரனே.
@ஆர்.கே.சதீஷ்குமார்
கரம் கொடுக்க நாங்களும் இருக்கோம்//
நன்றிகள் சகோதரம்.
@shanmugavel
முகத்தில் அறையும் கவிதைகள் சகோதரம்.//
நன்றிகள் சகோதரா.
@ரஹீம் கஸாலி
நான் இப்போது சென்னையில் இருப்பதால்....மூன்று நான்கு தினங்களுக்கு வாக்குகள் மட்டுமே...பின்னூட்டமிட முடியாது.....மன்னிக்கவும் நண்பர்களே....//
இதில் மன்னிக்க என்ன இருக்கிறது சகோதரம்.
நன்றிகள்.
ஒன்னு, நீ வலியோனிடம் சேர் அல்லது ஒற்றுமையா அனைவரையும் சேர்த்து நீ வலியோன் ஆகு. ஒன்னுமே செய்யாம குத்துதே கொடையுதேன்னா இப்பிடி நீங்க பொலம்பியே சாக வேன்டியதுதான்.
வந்துட்டானுக ஒப்பாரி வைக்க.
ஒன்னு, நீ வலியோனிடம் சேர் அல்லது ஒற்றுமையா அனைவரையும் சேர்த்து நீ வலியோன் ஆகு. ஒன்னுமே செய்யாம குத்துதே கொடையுதேன்னா இப்பிடி நீங்க பொலம்பியே சாக வேன்டியதுதான்.
வந்துட்டானுக ஒப்பாரி வைக்க.
கீறல் விழுந்த கண்ணாடியாய்
கிளைகளற்ற மரத்தின்
உயிர்த் துடிப்பாய்
இப்போது நாங்கள்!
தொடக்கமே அழுத்தமாக சொல்கிறது எங்கள் சோகத்தை!!
பெருமிதம் பேசிடும்
பூச்சாண்டிகள் முன்னே
துரோகியாய் நாங்களின்று
இறுதியில் இருந்த நீர்
இலக்கினைத் தொலைத்து விட்டீர் என
இறுமாப்போடு
ஈனஸ்வர அஸ்திரங்களும்;
சாவின் ஒலியாய்
இன்றும் எம் காதுகளில்,
சில வியாதி பிடித்தவர்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள்! வன்னியில் ஒட்டுமொத்த சனமும் செத்திருந்தா, சிங்களவன் சந்தோசப்படுரானோ இல்லையோ, எங்கடையள் கொஞ்சத்துக்கு சரியான சந்தோசமா இருந்திருக்கும்!!
நிரு உண்மையில் இப்போ அங்க என்னதான் நடக்குது? எதுவுமே புரியவில்லை!!
வயலில் காலை வைப்பதற்கு முன்பு இது
யார்வயலோ என்று தெரியாமல்த்தான்
இறங்கினேன்.சத்தியம் பேசப் பேச மனதில்
வலியோடு மனமின்றித் திரும்புகின்றேன்.
இது இதழில் விழுந்த கவிதை வரிகளல்ல!..
நம் இதயத்தில் புதைந்திருக்கும் உண்மையின்
முகவரிகள்!!!!!!!!!!!!.......தடையின்றி தொடரட்டும்
தங்கள் பணி வாழ்த்துக்கள்
Post a Comment