சங்கிலி திருடன்! சம்போ ஜம்போ! இட்லி கள்ளன் டப்போ டிப்போ!
எல்லோருக்கும் வணக்கமுங்கோ!இனிய ஞாயிற்றுக் கிழமை வாழ்த்துக்கள்! ஐடியா மணி வழியில கும்பிடுறேனுங்கோ!!
தமிழ்ப் பதிவர்களிடம்; பல்லு வெளக்காத பன்னாடை யாருன்னு கேட்டா, எல்லோர் விரலும் அந்த ஒருவரைப் பார்த்துத் தான் நீளுமுங்க. ரொம்ப குள்ளமா, கறுப்பு கேலர் கண்ணாடி போட்டுக்கிட்டு மிக நீண்ட பெயருடன் ஒருத்தர் பதிவுலகில் வலம் வருவாரே! அவர் தான் பதிவுலகின் பல்லு வெளக்காத சங்கிலி திருடன். அவர் பெயர் ஐடியா மணி என்று நான் சொல்லி தான் ஒங்களுக்கு தெரியனும் என்கிற அவசியமெல்லாம் கிடையாது என்று நெனைக்கிறேன். இட்லி திருடன், சங்கிலி திருடன், Watermelon thief, பூனைக்குட்டி அபகரிப்பாளன் எனப் பல்வேறுபட்ட திருட்டுப் பட்டங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பவர் தான் இந்த ஐடியா மணி.
ஐடியா மணியிடம் ஒரு ஸ்பெஷல் பேட்டி எடுக்கும் நோக்கில் நாற்று வலைப் பதிவின் போட்டோ டிசைனரும், பதிவருமான கந்தசாமியிடம் 80 யூரோவிற்கு ஒரு மைக் செட்டையும் வாங்கி, பேட்டி எடுத்துக்கிட்டு ஓடிவாடா கந்து அப்படீன்னு போனில சொல்லி அனுப்பி வைச்சேனுங்க. பிரான்ஸில இருக்கிற கந்துவும் பேட்டி எடுக்கும் ஆவல் மேலிட நம்ம சங்கிலி திருடனை தேடி போனாருங்க. "பாவிப் பயல்! பல நாட்களா குளிக்காம இருக்கானே! நாத்தம் இப்படி குப்பென்று அடிக்குதே!!" எனச் சொல்லிட்டு கந்து வாந்தி எடுக்கும் நோக்கில் பேஷ் வாஷ் பண்ணும் சிங்கை தேடி ஓடிட்டாருங்க. வாந்தி எடுத்து முடிஞ்சதும், கந்து எனக்கு ஒரு போனைப் போட்டாருங்க.
"நிரூபன்! நீங்க பண்ணியது நல்லாவே இல்லைங்க! இந்த பாவிப் பயல் குளிக்காம இருக்கிறானே என்று முன்னாடி தெரிஞ்சிருந்தா நான் அவனுக்கு கிட்டயா போயிருக்கவே மாட்டேன்! நிரூ! நம்ம காட்டான் மாம்ஸ் குளிக்காம கோவணத்தோட திரிஞ்சாலும், குமரிப் பொண்ணுங்க கூட பார்த்து வியக்கிற மாதிரி அரேபியன் நாத்த மருந்த்தை அனுதினமும் அடிச்சுக்கிட்டு திரிகிறாரு! ஆனால் இந்த அபேஸ் மணி இருக்கானே! இவன் ஒரு மாதிரியான ஆளா இருப்பானோ தெரியலையே! பேட்டி எடுக்கலாமுன்னு போனா என் மூக்கை நாத்தத்தால வாட்டி அனுப்பிட்டானே மணி!” அப்படீன்னு முகத்தில கண்ணீர் சிந்தா குறையா பேசினாரு நம்ம கந்து! பேட்டி எடுக்க வேறு வழி இல்லையே எனும் நோக்கில, மணிக்கு போனை போட்டேன்!
"மச்சி! நிரூ! உனக்கு என் ஹிஸ்டரி முன்னாடியே தெரியும் தானே! என்னைப் பத்தி முழுமையா தெரிஞ்ச பின்னாடியும், கந்துவை அனுப்பி என் மானத்தை வாங்கிட்டியே!" அப்படீன்னு அழா குறையா சொன்னானு நம்ம மணி!
"அடோய்! ஒங்கிட்ட ஒண்ணு கேட்டா ஒளிவு மறைவு இன்றி சொல்லுவியா என்று கேட்டேன்?"
பல்லு வெளக்காதவனும்;"ஓக்கே மச்சி! சொல்றேன்!"அப்படீன்னு ஒத்துக்கிட்டான்.
"உன்னை ஏன் மச்சி எல்லோருமே பல்லு வெளக்காத சங்கிலி திருடன் அப்படீன்னு சொல்றாங்களே?" என்று கேட்டேன்! ஏதோ பரம ரகசியத்தை, பரம்பரை ரகசியத்தை புட்டுப் புட்டு வைப்பது போல மணி தேம்பித் தேம்பி அழுதவாறு சொல்ல ஆரம்பிச்சான்.
"சின்ன வயசில, நம்மளுக்கு ரொம்ப சொகுசான இடமா அமைஞ்சது வன்னிக் காடுகள். காலங் காத்தால எந்திருச்சு, வாயிற்குள் ஒரு வேப்பங் குச்சியை சொருகிக் கொண்டு, பல்லை வெளக்கியவாறு, ஒரு சோடாப் போத்தலுக்குள் தண்ணியை நிரப்பிக் கொண்டு, காட்டிற்குள் ஓரமா ஒதுங்குவேன் மச்சி! ஆனாலும் காலப் போக்கில காட்டுக்குள் பனை வடலிக்கு கீழே ஒதுங்கினாலும், பல பேரு கழிவுகளை வெளியேற்றி இருப்பதால நாத்தம் முகத்துல குப்பென்று அடிக்க ஆரம்பிச்சிடுச்சு. அப்புறமா வேப்பங் குச்சியே வேணாம் என்று, கரித் துண்டை எடுத்து பல்லு வெளக்க ஆரம்பிச்சேன்.
அடுப்பில அம்மா மொதல் நாள் சமைச்சு முடிஞ்சதும் கிடைக்கிற கரித் துண்டை மறு நாள் காலையில் எடுத்து பல்லை தேய்ச்சு தேய்ச்சு வெளக்கியது ஒரு காலம் மச்சி. அதுவும் காலப் போக்கில அலுத்துப் போக, அப்புறமா நெல்லின் உமியை எடுத்து, நெருப்பில சுட்டு, உமிக் கரி மூலமாய் பல்லு வெளக்க ஆரம்பிச்சேன்.
"வானம் போல் வெண்மை -இந்த
ஐடியா மணி பல்லோ தனித் தன்மை!!” அப்படீன்னு எல்லா பசங்களும் என்னோட பல்லைப் பார்த்து பள்ளிக் கூடத்தில பொறாமைப் பட்டாங்க. என்னோட மச்சாள் பொண்ணு ஒருத்தி யாழ்ப்பாணத்தில இருந்து வன்னிக்கு 1994ம் ஆண்டு லீவில வந்திருந்தாள். நாசமாப் போன ஐடியாக்காரியா அவள் இருப்பாளென்று நினைக்கிறேன். ஏன்னா, இந்த ஐடியா மணிக்கே ஒரு ஐடியா கொடுத்து கெடுத்துப் புட்டாள் மச்சி!
"அடோய் மணி! தினமும் காலங் காத்தால நீ பனம் பழஞ் சூப்பினாய் என்றால், உன்னோட பல்லு இன்னமும் பளிச்சிடும்!" அப்படீன்னு சொல்லிட்டாள்! நானும் அவளை நம்பி, பனம் பழ சீசன் வர்றப் போ, பனம் பழத்திற்கு வெயிட் பண்ணிட்டு இருந்து, பல்லு வெளக்க ஆரம்பிச்சேன்!
"அப்படீன்னா, நீ பனம் பழ சீசனில மாத்திரம் பல்லு வெளக்குவியா?” என்று ஒரு கேள்வியை கேட்டேன் பாருங்க. மணி! சின்னப் பையன் மாதிரி மீ எப்பவுமே மீ 5” அப்படீன்னு சொல்லி லேசா வெட்கப்பட்டு, "ஆமா மச்சி! பனம் பழ சீசனில மாத்திரம் பல்லு வெளக்க ஆரம்பிச்சேன். என் பல்லு மெது மெதுவா மஞ்சள் கலருக்கு மாற ஆரம்பிச்சது" அப்படீன்னு சொன்னானு.
அதுக்கு அப்புறமா மச்சி, நான் பற்பொடி அப்படீங்கிற ஒண்ணை கையில் எடுத்து, கை வெரல்ல தொட்டு தொட்டு பல்லு வெளக்க ஆரம்பிச்சேன். பற்பொடியால் பல்லு வெளக்க ஆரம்பிக்கையில் பல்லு மெது மெதுவா வெண்மையா தொடங்கிச்சு. ஆனா என் கை வெரலோ; காலையில ஸ்கூல் போகும் போது பிங் கேலரில மாற ஆரம்பிச்சிடுச்சு மச்சி. அதனால நான் பற்பொடி மூலமா பல்லு வெளக்குவதையும் நிறுத்திட்டு, சிக்னல் டூத் பேஸ்ட்டிற்கு மாற ஆரம்பிச்சேன் அப்படீன்னு மணி சொல்லிட்டு இருக்கும் போது; "அடோய் நிறுத்து! அதென்ன சிக்னல் டூத் பேஸ்ட்?" எனக்குப் புரியுது. எல்லோருக்கும் புரியும் படியா சொல்லேன் என்று கேட்டேன்!
பற்பொடியால தீட்டி தீட்டி, கை வலிக்க ஆரம்பிக்க, பற் தூரிகை, பற் பசை கொண்டு பல்லு வெளக்க ஆரம்பிச்சேன். அப்புறமா என் கை வலிக்க ஆரம்பிச்சிட்டுது மச்சி. நானும் பெரியாளாகி பிரான்ஸிற்கு வந்திட்டேன். ப்ரஷ்ஷால தீட்டுவதால் கை வலிக்குதே என நினைச்சு,பல்லு வெளக்குவதையே நிறுத்திட்டு பக்காவா ஒரு ஐடியா கண்டு புடிச்சேன். வெளிநாட்டு சுவீங்கம், பபுள்கம் உமிழ்ந்தால் (சப்பினால்) வாய் மணக்காது அப்படீன்னு கண்டு நம்ம காட்டான் அண்ணர் சொன்னது நினைவில் வரவே;இப்போதெல்லாம் வீட்டிற்குள் இருக்கும் நாளில பல்லே வெளக்குவதில்லை. வெளியே போகும் போது மாத்திரம் ஒரு Mint பபுள்கம் போட்டுக்கிட்டு போவேன் மச்சி!
தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டில எப்படியெல்லாம் பல்லு வெளக்குவாங்களோ, அப்படியெல்லாம் நானும் பல்லு வெளக்கிப் பார்த்தேன். ஆனாலும் என்னோட பல்லு வெண்மையாகல்லை மச்சி. ஒவ்வோர் நாளும் என்னோட வாயில இருந்து நாத்தம் குப்பென்று அடிக்க ஆரம்பிச்சுது. ஒரு நாள் லண்டனில இருக்கிற அதிரா வீட்டுப் பக்கம் விருந்துக்கு போனேன். என் வாயில இருந்து குப்பென்று அடித்த கெட்ட வாடையை உணர்ந்திட்டு, அவங்களே, என்னை பல்லு வெளக்காத பன்னாடை அப்படீன்னு பேசிட்டாங்க. நான் பேச்சை வாங்கிட்டு சும்மா இருக்கிற ஆள் கிடையாது தானே! அவங்க பேசும் மட்டும் என் கை என்ன புளியங்காயா பறிச்சுக்கிட்டு இருந்திச்சு? கபக் என்று அவங்க வூட்டு பூஸாரை புடிச்சு, லபக் என்று ஐம்பது பவுண் சங்கிலியை அபேஸ் செஞ்சிட்டேன்.
பார்த்தியா நிரூ! எனக்கு பல்லு வெளக்காத பன்னாடைன்னு பட்டங் கொடுத்து, நெஸ்டமோல்ட்ஸ் டீயும், போண்டாவும், பருத்தித்துறை வடையும் கொடுத்து, உபகாரம் செஞ்சதற்கு பதிலா,அதிரா தன் பூஸாரின் சங்கிலியை இழந்துட்டாங்களே என சொல்லி சிரித்தான் மணி! பேட்டியை கவலையோடு, தேம்பி தேம்பி அழுதவாறு ஆரம்பித்து, செம காமெடியா சிரிக்கும் வண்ணம் முடிச்சிருக்கிறியே நீ உண்மையிலே பலே திருடன் எனச் சொன்னேன்! போனிலிருந்து கெட்ட வார்த்தைகள் வகை தொகையின்றி வந்து குவிந்தன. என் காதில் ரத்தம் வர முன்னாடி ரெலிபோனை கட் பண்ணினேன் நான்.
இதுக்குத் தான் பேரு! உபசாரம் செய்து, உபத்திரம் வாங்குவது என்பதோ?
|
94 Comments:
Oru pallkoppi manikadaiyil sollunga itho vaaran
பனங்காய் சூப்பி இருந்தால் பல்லுக்கட்டத் தேவையில்லை அது உறுதி மிக்கது!
@தனிமரம்
Oru pallkoppi manikadaiyil sollunga itho vaaran
//
இன்னைக்கு பால் கோப்பி மணியம் கபேயில் கொடுக்க மாட்டாங்களாம் பாஸ்,
ஏன்னா..கோவணக்காரர், பசுமாட்டை கூட்டிக்கிட்டு நகர்வலம் போயிட்டாராம்!
அதால டீ, ப்ளேண்டீ தான் இருக்காம்.
@தனிமரம்
பனங்காய் சூப்பி இருந்தால் பல்லுக்கட்டத் தேவையில்லை அது உறுதி மிக்கது!
//
அடடே...பனங்காய் சூப்புவதில் இப்படியும் ஓர் ரகசியம் இருக்கா?
பல்லு விளக்காத பன்னாடை என்று நேற்றுத் திட்டினேன் மணியை தன் கடைக்கு வராதீங்கோ தற்கொலை செய்வேன் என்று இல்லையா என்னை பயமுறுத்தினான் இப்ப தான் தெரியுது தன் பல்லைக்காட்டித் தான் பயமுறுத்தி இருப்பான் என்று!ஹீ
அந்த மச்சாள் 1996 இல்லையா வன்னி வந்திருப்பாள் அதுவும் அம்மையாரின் ஆக்கிரமிப்பாள் இவனின் குள்ளநரித்தனம் தெரிந்து இருந்தால் வந்தே இருக்கமாட்டாள் மச்சாள் அப்படித்தானே !ஹீ நாங்க அரசியல் விடாதுப்பா மோத ஹீ
மச்சி ஒரு பிரட்சனையே இருக்கு மணிப்பன்னாடைக்கு (கோபம் எல்லாம் திட்டலால் பேட்டி எடுத்தது கந்துதானே!ஹ்ஹ்) பல்லுவிளக்க இருபது சிக்னல் என்ற பற்பசை ஒரு வியாபாரக் குறியீடு அது தெரியாமல் இந்தப் (மணி)பன்னாடையும் போய் கேட்பது முதலாளி ஒரு சிக்னல் தாங்கோ என்று இவங்களுக்கு அருகில் இருக்கும் குலோஸ் அப்,கோல்கேட்,,இன்னொரு இந்தியன் தயாரிப்பு அப்போது இருந்த பற்பசைகள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாது கோலோக்காட் பின்நாட்களில் வந்த போதும் கேட்பது சிக்னல் தான் என்ன ஒரு பன்னாடை இவன் ! மவன் இன்று கஞ்சிதான்!ஹாஹா
@தனிமரம்
Oru pallkoppi manikadaiyil sollunga itho vaaran
//
இன்னைக்கு பால் கோப்பி மணியம் கபேயில் கொடுக்க மாட்டாங்களாம் பாஸ்,
ஏன்னா..கோவணக்காரர், பசுமாட்டை கூட்டிக்கிட்டு நகர்வலம் போயிட்டாராம்!
அதால டீ, ப்ளேண்டீ தான் இருக்காம்.
// இன்றுவரை தனிமரம் தேத்தண்ணி குடித்ததில்லை (தேயிலை சமாச்சாரம்) சரி ஒரு வெறும் பால் தாங்கோ! கோவணக்காரர் வரமுன்னர் நான் வேலைக்குப் போகனும் !
பபுள் கம் போட்டே பல வெள்ளைகள் வாழ்க்கையை ஓட்டுது அதை மணியும் போலோ பண்ணுறானா அப்பநானும் பார்க்கனும் என்ற ஆசையை கருணாநிதி போல கடைசிகாலத்தில் பிள்ளைகளை முதல்வர் ஆக்கிப் பார்க்கவில்லையே என்று ஒப்பாரிதான் வைக்கனும் வேண்டாம் இவன் சந்திப்பு!ஹீ ஹீ
வாறன் பொறுங்கோ! ஒரு சிவப்புக் காருக்கு, நீல பெயிண்ட் அடிக்கிறன்! பிறகு வாறன்! இண்டைக்கு இருக்கு மோனே கச்சேரி!
வாங்க் மணி பல்லுத்தீட்டிங்களா ஹன்சி விட்டு ஓடிவிடும் ஹீ
avvvvvvvvvvvvvvv...எங்கட அண்ணா மானத்தை இப்புடியா சந்தி சிரிக்க போடுறது ...karrrrrrrrrrrrrrrrrrrrrr ...
ம்!ம்!ம்!ம்!ம்!ம்!...........
எங்கட அண்ணாவை இம்புட்டு அசிங்கப் படுத்திய உங்கட மானத்தை வாங்கோணும் எண்டு மனம் நினைக்குது ஆனால் மீ ரொம்ப சமத்துப் பொண்ணு ...அதனால் அமைதியா இருக்கேனாக்கும் ...
என்ன கலை இவருக்கு ஏற்கனவே மாணம் போய்விட்டது ஹாண்சிக்கு லூல் விட்டதால்
நிரு அண்ணா ,அண்ணாவிற்கு மற்றவர்கள் அளித்த பாராட்டு பட்டங்களையும் இண்டு சேர்த்துக் கொண்டால் சுப்பரா இருந்து இருக்கும் ....
@தனிமரம்
பல்லு விளக்காத பன்னாடை என்று நேற்றுத் திட்டினேன் மணியை தன் கடைக்கு வராதீங்கோ தற்கொலை செய்வேன் என்று இல்லையா என்னை பயமுறுத்தினான் இப்ப தான் தெரியுது தன் பல்லைக்காட்டித் தான் பயமுறுத்தி இருப்பான் என்று!ஹீ
//
\\
நீங்க சின்னப் பையன் போல இருக்கே..
அவன் பல்லை காட்டி தான் பல பேரை பயமுறுத்துறான்/
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@தனிமரம்
அந்த மச்சாள் 1996 இல்லையா வன்னி வந்திருப்பாள் அதுவும் அம்மையாரின் ஆக்கிரமிப்பாள் இவனின் குள்ளநரித்தனம் தெரிந்து இருந்தால் வந்தே இருக்கமாட்டாள் மச்சாள் அப்படித்தானே !ஹீ நாங்க அரசியல் விடாதுப்பா மோத ஹீ
//
யோவ்..அரசியலை சந்தர்ப்பம் இல்லாம புகுத்த கூடாது.
அவள் சும்மா லீவில வந்தவள்! மணிக்கு கெட்ட கோபம் வர முன்னாடி காலில விழுந்திடுங்கோ
@தனிமரம்
சிக்னல் பத்தி தெரியாம இருக்கானே...
என்ன கலை இவருக்கு ஏற்கனவே மாணம் போய்விட்டது ஹாண்சிக்கு லூல் விட்டதால்.//////////////
அதுதான் ஊருக்கே தெரியுமே ட்ரீ அண்ணா ..
எங்கட அண்ணா மானம் மட்டும் தான் போச்சி ...உங்கடுக்கு, நிரு அண்ணாக்கு மானம் மட்டும் மரியாதை போயிட்டது எண்டு ஹென்சிக்க சொல்லியவை
@தனிமரம்
// இன்றுவரை தனிமரம் தேத்தண்ணி குடித்ததில்லை (தேயிலை சமாச்சாரம்) சரி ஒரு வெறும் பால் தாங்கோ! கோவணக்காரர் வரமுன்னர் நான் வேலைக்குப் போகனும் !
//
ப்ளேன் டீ கொடுக்கிறேன்.
அதென்ன தேயிலை சமச்சாரம்?
இல்லாட்டி தேயிலை சம்சாரமோ!!!!!!!!!
@தனிமரம்
பபுள் கம் போட்டே பல வெள்ளைகள் வாழ்க்கையை ஓட்டுது அதை மணியும் போலோ பண்ணுறானா அப்பநானும் பார்க்கனும் என்ற ஆசையை கருணாநிதி போல கடைசிகாலத்தில் பிள்ளைகளை முதல்வர் ஆக்கிப் பார்க்கவில்லையே என்று ஒப்பாரிதான் வைக்கனும் வேண்டாம் இவன் சந்திப்பு!ஹீ ஹீ
//
சைட் கேப்பில் காட்டான் அண்ணரின் காலை வாரியமைக்கு வன்மையான கண்டனங்கள்!
ஏதோ என்னால முடிஞ்சது.
@Ideamani - The Master of Allவாறன் பொறுங்கோ! ஒரு சிவப்புக் காருக்கு, நீல பெயிண்ட் அடிக்கிறன்! பிறகு வாறன்! இண்டைக்கு இருக்கு மோனே கச்சேரி!
//
அடோய்...என்ன கம்பியூட்டரில paint இல படங் கீறி விளையாடுறியே...
பிறகு கீறலாம்! இப்ப வந்து கமெண்ட் போடு ராசா
Yoga.S.FR said...
ம்!ம்!ம்!ம்!ம்!ம்!....../////
ஒ ஒ யோகா மாம்ஸ் இங்குட்டு தான் இருக்காகளா ...அவங்களுக்கு ஒரு ஹாய்
@தனிமரம்
வாங்க் மணி பல்லுத்தீட்டிங்களா ஹன்சி விட்டு ஓடிவிடும் ஹீ
/.
ஆகா...ஐடியா மணியையே சாய்ச்சுப்புட்டாரே!
@கலைavvvvvvvvvvvvvvv...எங்கட அண்ணா மானத்தை இப்புடியா சந்தி சிரிக்க போடுறது ...karrrrrrrrrrrrrrrrrrrrrr ...
//
அவனுக்கு மானம் இருந்தா தானே..
மானம் இருந்தா மணி பல்லு வெளக்கி இருப்பானில்லே.
@Yoga.S.FR
ம்!ம்!ம்!ம்!ம்!ம்!...........
.//
ஐயா...ஒத்த வரியில சொல்லிட்டு போயிட்டீங்க இல்லே.
உங்களைப் பத்தி நாளைக்கு செம கவிதை ஒன்று ரெடியாகுது.
உங்கள் இளமைக்காலத்தை மீட்டும் கவிதையாக இருக்கும்.
@கலை
எங்கட அண்ணாவை இம்புட்டு அசிங்கப் படுத்திய உங்கட மானத்தை வாங்கோணும் எண்டு மனம் நினைக்குது ஆனால் மீ ரொம்ப சமத்துப் பொண்ணு ...அதனால் அமைதியா இருக்கேனாக்கும் ...
//
கொஞ்சூண்டு பொறுங்கோ..
என்னால சிரிச்சு முடியல.
என்னோட மானத்தை வாங்கப் போறீங்களோ! நான் விற்பதா இன்னமும் வெளம்பரம் போடலையே!!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
மச்சி நிரூ, வணக்கம்! இனிய நாய்.... ஸாரி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்!
என்னோட மானத்தை வாங்கப் போறீங்களோ! நான் விற்பதா இன்னமும் வெளம்பரம் போடலையே!!
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்////////
அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ..நீங்கள் விளம்பரம் போடாட்டியும் நான்கோ தான் வாங்குவோமே ,,,,
மீ know தி டேச்னிச்கேஸ் எ ...மீ தான் ஸ்டேடிட் பிரோம் வெல் educated குரு வேஏஏஏ ..ல லா லாஆஆஆஆ
பல்லு வெளக்காத பதிவுலக சங்கிலி திருடனின் கள்ள குறும்புகள்! ///////
ஆர் மச்சி அந்த வீராதி சூரன்???
ஹைய்ஈ ஈஈஈஈஈvஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஜாலி ஜாலி அண்ணா வந்துட்டங்கோ ...
சங்கிலி திருடன்! சம்போ ஜம்போ! //////
ஓ அவரின்ர பேர் சம்போ ஜம்போவோ?
இரு மச்சி சாப்பிட்டு வாறன்! பேப் பசி!
ஹைய்ஈ ஈஈஈஈஈvஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஜாலி ஜாலி அண்ணா வந்துட்டங்கோ .../////////
ஆ...... தங்கச்சியும் இஞ்சயா நிக்கிறீங்க! வணக்கம் தங்கச்சி! பாருங்கோ அண்ணனைப் பற்றி என்ன சொல்லியிருக்கார் எண்டு? இதுக்கு நியாயம் கேட்காமல் விடமாட்டேன்! பொறுங்க சாப்பிட்டு வாறன்!
அப்பத்தான் உசாரா சண்டை பிடிக்கலாம்!
@கலை
நிரு அண்ணா ,அண்ணாவிற்கு மற்றவர்கள் அளித்த பாராட்டு பட்டங்களையும் இண்டு சேர்த்துக் கொண்டால் சுப்பரா இருந்து இருக்கும் ....
//
என்னது, உங்க அண்ணாவுக்கு மத்தவங்க பாராட்டுப் பட்டம் கொடுத்தவங்களா?
நான் நம்பமாட்டேன்! நீங்களும் நம்பாதேங்கோ...நம்பாதேங்கோ..
வேறு யாருக்கும் கொடுக்கப்பட்ட பாராட்டுப் பட்டங்களையும் திருடி இவன் தன்னோட பேரில மாத்தியிருப்பான்.
நானறிய, உவன் எக்ஸாம் பேப்பரில கூட, நல்லா படிக்க கூடிய பையனின் கேள்வி பேப்பரில தன்ரை பெயரை போட்டு நூறுக்கு 85 வாங்கிறவன்!
@கலை
எங்கட அண்ணா மானம் மட்டும் தான் போச்சி ...உங்கடுக்கு, நிரு அண்ணாக்கு மானம் மட்டும் மரியாதை போயிட்டது எண்டு ஹென்சிக்க சொல்லியவை
//
என்னது..எனக்கு மானம் இருக்கு எனும் விஷயம் ஹன்சிகா வரைக்கும் தெரிஞ்சிடுச்சா..
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@கலை
Yoga.S.FR said...
ம்!ம்!ம்!ம்!ம்!ம்!....../////
ஒ ஒ யோகா மாம்ஸ் இங்குட்டு தான் இருக்காகளா ...அவங்களுக்கு ஒரு ஹாய்
//
என்னது..யோகா மாம்ஸா...
அவருக்கு பெரிய பையங்க யாருமே இல்லைங்க.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
@Ideamani - The Master of All
மச்சி நிரூ, வணக்கம்! இனிய நாய்.... ஸாரி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்!
//
வணக்கம் மச்சி! இனிய சனியன் டே..
சண்டே வணக்கம்!
@கலை
அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ..நீங்கள் விளம்பரம் போடாட்டியும் நான்கோ தான் வாங்குவோமே ,,,,
மீ know தி டேச்னிச்கேஸ் எ ...மீ தான் ஸ்டேடிட் பிரோம் வெல் educated குரு வேஏஏஏ ..ல லா லாஆஆஆஆ
//
நான் ஆல்ரெடி புக்கிங்..
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@Ideamani - The Master of All
பல்லு வெளக்காத பதிவுலக சங்கிலி திருடனின் கள்ள குறும்புகள்! ///////
ஆர் மச்சி அந்த வீராதி சூரன்???//
அதான் கறுப்பு கண்ணாடியோட ஒருத்தரு பிரான்ஸில இருந்து வந்து, இங்கின எல்லாம் அலைஞ்சிட்டு இருக்காரே..
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
@கலை
ஹைய்ஈ ஈஈஈஈஈvஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஜாலி ஜாலி அண்ணா வந்துட்டங்கோ ...
//
சே...கறுமம்! கறுமம்!\
என் ப்ளாக் மணக்கும் போதே நெனைச்சேன்! என்னடா இங்க செத்த எலி மணம் அடிக்குதே என்று!
உங்க அண்ணா வந்திட்டானா?
உங்க எல்லோருக்கும் ஜாலி..ஆனால் மணம் தாங்க முடியா நமக்கு சோலி!!!!!!!!!!!!!!!!!
@Ideamani - The Master of All
சங்கிலி திருடன்! சம்போ ஜம்போ! //////
ஓ அவரின்ர பேர் சம்போ ஜம்போவோ?
இரு மச்சி சாப்பிட்டு வாறன்! பேப் பசி!//
இது பதிவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அடைமொழி மச்சி! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வேறு யாருக்கும் கொடுக்கப்பட்ட பாராட்டுப் பட்டங்களையும் திருடி இவன் தன்னோட பேரில மாத்தியிருப்பான்.
நானறிய, உவன் எக்ஸாம் பேப்பரில கூட, நல்லா படிக்க கூடிய பையனின் கேள்வி பேப்பரில தன்ரை பெயரை போட்டு நூறுக்கு 85 வாங்கிறவன்!///////////////////
நீங்க சொல்லுறதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ..அன்னைக்கு நான் கூட பட்டம் கொடுத்து இருக்கேன் அண்ணாவோட சேவையைப் பாராட்டி ...
எங்கட அண்ணாவை பார்த்து தான் நீங்கள் எல்லாம் காப்பி அடித்து தேர்வு எழுதிநிங்கோ எண்டு உலகே அறிந்தவை
@Ideamani - The Master of All
ஆ...... தங்கச்சியும் இஞ்சயா நிக்கிறீங்க! வணக்கம் தங்கச்சி! பாருங்கோ அண்ணனைப் பற்றி என்ன சொல்லியிருக்கார் எண்டு? இதுக்கு நியாயம் கேட்காமல் விடமாட்டேன்! பொறுங்க சாப்பிட்டு வாறன்!
அப்பத்தான் உசாரா சண்டை பிடிக்கலாம்!//
என்னது, சாப்பிட்டா தான் சண்டை புடிக்கலாமா?
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
மொதல்லா காசை கொடுத்து வாங்கி சாப்பிடு!
ஒரு குடும்பமே ஒண்ணு சேர்ந்திட்டாங்களே! இனி என் கதை என்னாகுமோ?
கலை இந்த சம்போ எப்படி ஒரு கிராமத்துக்குள்க்குள் வந்தாது என்று இரவு சொல்கின்றேன் முதலில் பரீட்சைக்குப் படி!
அண்ணோவோட புகழை உலகுக்கு தெரிவிக்கும் நிலைக்கு நான் இப்போதுத் தள்ளப் பட்டு இருக்கேன் ..
நான் அண்ணாக்கு அளித்த பட்டங்களை உங்களோடு பகிர்வதில் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறேன்
[co="blue"]
கண்ணவிஞ்ச கபோதி,
கம்பளிபுச்சி வாயன்
கோல்மாலு கொள்ளித் தலையன்
ஊரை ஏமாற்றும் ஜில்லாலங்கடி
மப்புல உளறும் மாங்கா மண்டையன் .....
நாலு நாள் குளிக்காத நாதேறிப்பய!
பத்துநாள் ஒரே ஜீன்ஸ் ல திரியுற சோம்பேறிப் பய !
வேலைவெட்டி இல்லாத வெட்டிப்பய!
தரைல கப்பல் ஓட்டுர குடிகாரப்பய!
களவாடும் களவாணிப்பய![/co]
தனிமரம் said...
கலை இந்த சம்போ எப்படி ஒரு கிராமத்துக்குள்க்குள் வந்தாது என்று இரவு சொல்கின்றேன் முதலில் பரீட்சைக்குப் படி!/////////////
ஓம் அண்ணா ..எல்லாருமே படி படி எண்டு சொல்லுறாங்கள் ..அதேக் கேட்டு கேட்டு படிக்கிறேன் ...இன்னைக்கு எவ்ளோ படிச்சேன் தெரியுமா ,,,நிறிய படிச்சனாக்கும்...
ஓகே ரீரீ அண்ணா டாடா ...படிக்கப் போறேன் ....
முதலில் பரீட்சைக்குப் படி!//////////
மீ சமத்தாப் படிக்கிறனான்..ஆனா நிருபன் அவரு தான் அண்ணா என்னை படிக்க விடாமல் வம்பு பண்ணுறாங்கள் ..
இருங்கோ நிரு அவர்களே ,
எங்கட ட்ரீ அண்ணா ,பெல் அண்ணா ,யோகா மாம்ஸ் எல்லாரும் உங்களிடம் சண்டை போடுவினம்
என் தங்கை இன்று முதல் நாற்ரில் இனைந்து விட்டா ஒரு ஸ்பேஸால் கோப்பி சொல்லு தம்பி வேலைக்கு நேரம் அச்சு மணி இரவு வாரண் சிவப்பு மோர் சொல்லி வை
எல்லாருக்கும் வணக்கம்! ஸப்பா..... எத்தனை வணக்கம்ஸ்?
நான் பல்லு விளக்காமல் விட்டது ஏன் என்று உங்க எல்லாருக்கும் சொல்லப் போறேன்! அது ஒரு பெரிய சோகக் கதை! அதைச் சொல்லட்டுமா?
நான் கதை சொல்லப் போகிறேன்! எல்லோரும் ரெடியா? ஆரும் குறுக்கு கேள்விகள் கேட்க கூடாது! ஆனா, இடைக்கிடை “ ஆமா, சரி, மேல சொல்லு” அப்டீன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்! ஓகே வா?
அப்போது என்க்கு 10 வயசு இருக்கும்! ரொம்ப நாளா வீட்டில் இருந்து போரடிச்சுப் போய்ச்சு! அதனால் ஸ்கூலுக்குப் போகணும்னு தோணிச்சுது!
அதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்கூலுகுப் போனேன்!
” ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்கூல் இல்லை” என்று அங்கே ஒரு பெரிய போர்ட் வைச்சிருந்தாங்க! அதைப் படிச்சதும் எனக்கு அழுகை வந்திருச்சு!
கல்விக்காக ஏங்கும் ஒரு மாணவனுக்கு ஞாயிறென்ன? திங்கள் என்ன? எனக்கு அன்னிக்கு எப்படியாவது படிக்கணும்னு தோணிச்சுது! அதனால, எங்க ஊருலேயே ஃபேமஸான ஆதிரை டீச்சர் வீட்டுக்குப் போனேன்! ( உண்மையாவே ஆதிரை டீச்சர் இருந்தவா )
என்னுடைய ஆர்வத்தைப் பாராட்டிய ஆதிரை டீச்சர், “ தம்பி மணி! உன்னோட கல்வி தாகத்தைப் பார்க்க எனக்கு ஆச்சரியமா இருக்கு” இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை படிச்சால், அறிவு மங்கிப் போகும்! நீ பேசாமல் நாளைக்கு வா” என்றார்!
அதனால் நான் அழுதுகொண்டு வீட்டுக்கு வந்து விட்டேன்!
மறுநாள் செவ்வாய்க்கிழமை நான் காலையில் ஸ்கூல் போனேன்! ஆதிரை டீச்சருக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது! டீச்சர் என்னை வகுப்பு மொனிட்டர் ஆக்கினா!
டெயிலி ஸ்கூலுக்கு ஒழுங்கா வந்து படிக்கச் சொன்னா! விரலில் நகமெல்லாம் வெட்டி, சப்பாத்து போட்டு நீட்டா வரச்சொன்னா!
வெயிட்........... கதையை முழுசா கேட்கொணும்! நோ குறுக்கு கொஸ்டீன்!!
அதே ஸ்கூலில் நந்தகுமார் எண்டு ஒரு மாஸ்டரும் படிப்பிச்சவர்! அந்த மாஸ்டருக்கும் எங்க டீசசருக்கும் ஒரு லவ் இருக்கெண்டு , ஊருல கதை உலாவிச்சுது!
ஆனா அவையள் ரெண்டு பேரும் ஒரு நாள் கூட கதைச்சதில! மாஸ்டர் ஒருக்க ரெண்டு தரம் கதைக்க முயற்சி எடுத்தவராம்! ஆனா ஆதிரை டீச்சர் அவரோட கதைக்கேலை!
ஏனெண்டா நந்தகுமார் மாஸ்டருக்கு பல்லு கொஞ்சம் மிதப்பு!
ஹி ஹி ஹி ஹி ஹி !
@கலை
நீங்க சொல்லுறதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் ..அன்னைக்கு நான் கூட பட்டம் கொடுத்து இருக்கேன் அண்ணாவோட சேவையைப் பாராட்டி ...
எங்கட அண்ணாவை பார்த்து தான் நீங்கள் எல்லாம் காப்பி அடித்து தேர்வு எழுதிநிங்கோ எண்டு உலகே அறிந்தவை
//
இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது?
உங்க அண்ணாவை பார்த்து நான் காப்பி அடிச்சிருந்தா, இப்பவும் பத்தாம் கிளாஸில இருந்திருக்கனும்
@தனிமரம்
கலை இந்த சம்போ எப்படி ஒரு கிராமத்துக்குள்க்குள் வந்தாது என்று இரவு சொல்கின்றேன் முதலில் பரீட்சைக்குப் படி!
//
என்னது தனிமரம் கதை சொல்ல போகுதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ப்ளேன் டீ கொடுக்கிறேன்.
அதென்ன தேயிலை சமச்சாரம்?
இல்லாட்டி தேயிலை சம்சாரமோ!!!!!!!!!
//அடிங்க கொய்யால என்ற குடும்பத்தில் எல்லாரையும் விளக்கு மாத்தை தூக்க சதி செய்யுறான் நிரூபன் காப்பாத்துங்கோ காப்பாத்துங்கோ சன் நியூஸ் இதோ!
@கலை
அண்ணோவோட புகழை உலகுக்கு தெரிவிக்கும் நிலைக்கு நான் இப்போதுத் தள்ளப் பட்டு இருக்கேன் ..
நான் அண்ணாக்கு அளித்த பட்டங்களை உங்களோடு பகிர்வதில் பெரு மகிழ்ச்சிக் கொள்கிறேன்
[co="blue"]
கண்ணவிஞ்ச கபோதி,
கம்பளிபுச்சி வாயன்
கோல்மாலு கொள்ளித் தலையன்
ஊரை ஏமாற்றும் ஜில்லாலங்கடி
மப்புல உளறும் மாங்கா மண்டையன் .....
நாலு நாள் குளிக்காத நாதேறிப்பய!
பத்துநாள் ஒரே ஜீன்ஸ் ல திரியுற சோம்பேறிப் பய !
வேலைவெட்டி இல்லாத வெட்டிப்பய!
தரைல கப்பல் ஓட்டுர குடிகாரப்பய!
களவாடும் களவாணிப்பய![/co]//
ஜனங்களே! பார்த்தீங்களா! பார்த்தீங்களா! ஒருத்தன் கபோதி என்பது அவனோட தங்கைக்கே தெரிஞ்சிருக்கு!
அண்ணன் களவாடும் களவாணி என்பது கூட அருமைத் தங்கைக்கு தெரிஞ்சிருக்கு! மொத்தத்தில ஒரு திருடனுக்கு தங்கை பட்டம் கொடுக்கிற! இதைப் பார்த்த பின்னரும் நாம பொறுமையா இருக்கலாமா?
பொங்கி எழுங்கள்!
@கலை
ஓம் அண்ணா ..எல்லாருமே படி படி எண்டு சொல்லுறாங்கள் ..அதேக் கேட்டு கேட்டு படிக்கிறேன் ...இன்னைக்கு எவ்ளோ படிச்சேன் தெரியுமா ,,,நிறிய படிச்சனாக்கும்...
ஓகே ரீரீ அண்ணா டாடா ...படிக்கப் போறேன் .... //
கலை! பாடம் வெளங்காட்டி கேளுங்கோ! பிரீயா சொல்லி கொடுக்கிறேன்.
@கலை
மீ சமத்தாப் படிக்கிறனான்..ஆனா நிருபன் அவரு தான் அண்ணா என்னை படிக்க விடாமல் வம்பு பண்ணுறாங்கள் ..
//
நான் என்ன பண்றேன்?
ஐடியா மணி மாதிரி உங்க வீட்டிற்குள் வந்து திருடுறேனா? இல்லை தானே;-))))
@தனிமரம்
என் தங்கை இன்று முதல் நாற்ரில் இனைந்து விட்டா ஒரு ஸ்பேஸால் கோப்பி சொல்லு தம்பி வேலைக்கு நேரம் அச்சு மணி இரவு வாரண் சிவப்பு மோர் சொல்லி வை
//
யோவ்...தனிமரம் சார்..
உங்க தங்கை போனமாசமே நாற்றில் இணைஞ்சிட்டா..
@Ideamani - The Master of All
எல்லாருக்கும் வணக்கம்! ஸப்பா..... எத்தனை வணக்கம்ஸ்?..//
ரொம்ப முக்கியம்!!
நான் பல்லு விளக்காமல் விட்டது ஏன் என்று உங்க எல்லாருக்கும் சொல்லப் போறேன்! அது ஒரு பெரிய சோகக் கதை! அதைச் சொல்லட்டுமா?//
இவர் பெரிய அப்பாடாக்கரு! இவரு ப்ளாஷ்பேக் சொல்லுவாரு! நாம கேட்டு கண்ணீர் வடிப்போமாம்!
ஹே ஹே ஹே
@Ideamani - The Master of All
நான் கதை சொல்லப் போகிறேன்! எல்லோரும் ரெடியா? ஆரும் குறுக்கு கேள்விகள் கேட்க கூடாது! ஆனா, இடைக்கிடை “ ஆமா, சரி, மேல சொல்லு” அப்டீன்னு சொல்லிக்கிட்டு இருக்கணும்! ஓகே வா?
//
யோவ்...குறுக்கு கேள்வி கேட்கப்படாது! ஆனா பூனை ஏதும் குறுக்கே பாஞ்சா நான் பொறுப்பாக மாட்டேன்!
ஒருநாள் நந்து மாஸ்டர் தன்ர விருப்பத்த ஒரு கடிதத்தில எழுதி, ஆதிரை டீச்சருக்கு குடுக்க, அவ அதை கிழிச்சு எறிஞ்சு போட்டா, பிறகு என்னைக் கூப்பிட்டு, போய் நந்து மாஸ்டரிட்ட சொல்லு, உங்கட பல்லு மிதப்பாம் எண்டு” சொல்லு எண்டா!
நானும் உடன நந்து மாஸ்டரிட்ட போயி, ஆதிரை டீச்சர் சொன்னதை சொன்னேன்!
என்னில ஒரு பழக்கம் இருக்கு! ஒரு ஆள் ஒரு கதையைச் சொன்னா, அதுக்கு கண் காது மூக்கு வைச்சு, இடையில என்ர கற்பனையெல்லாம் சேர்த்து தான் சொல்லுவேன்!
நான் போய் நந்து மாஸ்டரிடம் சொன்னேன்
“ மாஸ்டர்! உங்களை ஆதிரை டீச்சருக்குப் பிடிக்கேலையாம்! உங்களுக்குப் பல்லு மிதப்பாம்! திருவலை மாதிரி இருக்காம்! தேங்காய் திருவலாமாம்! உங்களைக் கலியாணம் கட்டுறதிலும் பார்க்க ஓட்டைச் சிரட்டைக்குள்ள குதிச்சு சூ சைட் பண்ணலாமாம்”
எண்டு டீச்சர் சொன்னவா! என்றேன்!
@Ideamani - The Master of All
அப்போது என்க்கு 10 வயசு இருக்கும்! ரொம்ப நாளா வீட்டில் இருந்து போரடிச்சுப் போய்ச்சு! அதனால் ஸ்கூலுக்குப் போகணும்னு தோணிச்சுது!
அதனால் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்கூலுகுப் போனேன்!//
இது ஊருக்கே தெரிஞ்ச கதை ஆச்சே! ஏன்னா நீ பள்ளிக் கூட நாட்களில் பள்ளிக் கூடப் பக்கம் போவதே இல்லையே! ஞாயிற்றுக் கிழமையில போயி ஏதாச்சும் திருடலாமா என்று ப்ளான் பண்ணுவாய்! எனக்கு தெரியாத மேட்டரா என்ன?
@Ideamani - The Master of All
என்னுடைய ஆர்வத்தைப் பாராட்டிய ஆதிரை டீச்சர், “ தம்பி மணி! உன்னோட கல்வி தாகத்தைப் பார்க்க எனக்கு ஆச்சரியமா இருக்கு” இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை படிச்சால், அறிவு மங்கிப் போகும்! நீ பேசாமல் நாளைக்கு வா” என்றார்! //
இப்ப மட்டும், உனக்கு அறிவு என்னவா இருக்கு மச்சி?
நான் சொன்னதை அப்படியே நந்து மாஸ்டர் நம்பிட்டார்! அவருக்கு சரியான அதிர்ச்சியாப் போயிட்டுது! அவரின்ர முகம் சுருங்கீட்டுது! தன்ர வலது கையால வாயில தடவிப் பார்த்தார்! அவரின்ர கண்ணில இருந்து நாலைஞ்சு கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்திச்சு!
( எல்லோரும் கையில லேஞ்சி / கைக்குட்டை எடுத்து ரெடியா வைச்சிருங்கோ! இனித்தான் சோகமான கட்டம்! )
@Ideamani - The Master of All4“ மாஸ்டர்! உங்களை ஆதிரை டீச்சருக்குப் பிடிக்கேலையாம்! உங்களுக்குப் பல்லு மிதப்பாம்! திருவலை மாதிரி இருக்காம்! தேங்காய் திருவலாமாம்! உங்களைக் கலியாணம் கட்டுறதிலும் பார்க்க ஓட்டைச் சிரட்டைக்குள்ள குதிச்சு சூ சைட் பண்ணலாமாம்”
//
யோவ்..மாஸ்டருக்கு பல்லு மிதப்பா இருக்கிறதுக்கும், நீ பல்லு வெளக்காம இருப்பதற்கும் என்னய்யா சம்பந்தம்?
@Ideamani - The Master of All
( எல்லோரும் கையில லேஞ்சி / கைக்குட்டை எடுத்து ரெடியா வைச்சிருங்கோ! இனித்தான் சோகமான கட்டம்! )
//
யோவ்..நிறுத்தும் ஐசி! என்கிட்ட கைக்குட்டை இல்லை.
ஆனால் வீட்டில கைக் குத்தரிசி தான் இருக்கு. இது கண்ணீரை துடைக்க உதவுமா>?
வணக்கம் நிரூபன்!
இப்பல்லாம் நீ அலாப்பி விளையாட்டு விளையாடுற.. நான் வந்து கும்மியடிக்க முடியாதுன்னு தெரிஞ்சோ பதிவு போடுற? ஒரு பிறந்த நாள் பார்ட்டியில நிக்கிறன் பிறகு வாறன்யா..!!!
வேகமாக வீட்டுக்குப் போன நந்து மாஸ்டர், சுவரில முகத்தைக் கொண்டு போய் மோதி, மோதி தன்ர முன்பக்க பல்லு எல்லாத்தையும் உடைச்சிட்டார்!
பிறகு, கிணத்துக்குள்ள குதிச்சு தற்கொலை செய்திட்டார்! சாக முன்னாடி ஒரு கடிதம் எழுதி வைச்சிருந்தார்!
அதில்,
“ ஆதிரை, நீ என் உருவத்தை தானே பார்த்தாய்! என் மனசைப் பார்க்கவில்லையே! இதோ நீ வெறுத்த என்னுடைய பற்களை வாயில் இருந்து அகற்றிவிட்டேன்! ஒரே ஒரு முறை மட்டும் வந்து என்னுடைய பிணத்தைப் பார்த்துவிடுப் போ! அங்கே எனது முகத்தில் பற்கள் இருக்காது!
பிணமாகக் கிடக்கும் போதாவது உனது கண்களுக்கு நான் கொஞ்சம் அழகாக தெரிய முயற்சிக்கிறேன்”
என்று உருக்கமா எழுதியிருந்தார்!
( தங்கச்சி கலை! இப்ப எதுக்கு அழறீங்க! அழாதீங்க! கண்ணைத் தொடையுங்க! )
என்ன மணியும் நீயும் உங்க பிளாக்க நேசனுக்கு குத்தகைக்கு கொடுத்துட்டிங்களோ? இந்த கும்மு கும்முறார்..!!!
அந்தக் கடிதத்தைக் கொண்டு போய் ஆதிரை டீச்சரிடம் கொடுத்தேன்! அதைப் படிச்ச அவா, ஓ... என்று கதறி அழுதா! மண்ணுக்குள்ள விழுந்து புரண்டு புரண்டு அழுதா! “ கேவலம் வெறும் பல்லுக்காகவா நான் அவரை வெறுத்தேன்! அவர் அநியாயமாக உயிரை விட்டுட்டாரே” என்று கதறி கதறி அழுதா!
அவவைப் பார்க்க பாவமா இருந்திச்சு! நான் சொன்ன பொய்யால தானே, நந்து மாஸ்டர் தற்கொலை செய்தவர் எண்டு எனக்கும் ஒரே கவலையாப் போய்ச்சு!
என்ர பல்லைப் பார்க்க எனக்கே வெறுப்பா இருந்திச்சு! அண்டையில இருந்து நான் பல்லு வெளக்குவதில்லை என்று முடிவெடுத்தேன்!
எனக்கு துக்கம் தாங்க முடியவில்லை! நானும் ஓ என்று ஒப்பாரி வைச்சு அழுதேன்
“ இனிமேல் நான் பல்லு வெளக்க மாட்டேன்! பல்லு வெளக்க மாட்டேன்! “ என்று சத்தமாக கத்தி கத்தி கூச்சல் போட்டேன்!/
உடனே அம்மா ஓடிவந்து,
“ தம்பி விடிய 6 மணிக்கு பல்லு வெளக்கலாம்! இப்ப எதுக்கு ஜாமம் ஒரு மணிக்கு இந்தக் கத்து கத்துறே! அக்கம் பக்கத்துல எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க”
அப்டீன்னா! அப்புறம் தான் எனக்குப் புரிஞ்ச்து, நான் இவ்வளவு நேரமும் கண்டது கனவு என்று!!!
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி என்னதான் கனவா இருந்தாலும், அதில வந்த நந்தகுமார் மாஸ்டரை எனக்கு ரொம்ப பிடிச்சுவிட்டது! அவரின் ஞாபகமாத்தான் நான் கடந்த 15 வருஷமா பல்லு வெளக்காம இருக்கிறேன்!
ஹி ஹி ஹி ஹி ஹி இப்ப புரிஞ்சுதா? ஐடியாமணி எவ்வளவு இரக்கமானவன் என்று!
இதுதான் நான் பல்லு வெளக்காமல் இருப்பதற்கான பின்னணிக் காரம்! சிசீசீ காரணம்!!!
சே ஏன் நிரூ முன்னாடியே சொல்லவில்லை. பல்லு வெளக்காதவன்ரை பரதேசிபவானில் நேற்று ஒரு புல்மீல்ஸ் வெட்டீட்டனே. இப்ப இந்த சமாச்சாரத்தை படிச்சதும் குமட்டிடிக்கிடு வருகுது.
Ideamani - The Master of All said..
//பிறகு, கிணத்துக்குள்ள குதிச்சு தற்கொலை செய்திட்டார்! சாக முன்னாடி ஒரு கடிதம் எழுதி வைச்சிருந்தார்!
அதில்,
“ ஆதிரை, நீ என் உருவத்தை தானே பார்த்தாய்! என் மனசைப் பார்க்கவில்லையே! இதோ நீ வெறுத்த என்னுடைய பற்களை வாயில் இருந்து அகற்றிவிட்டேன்! ஒரே ஒரு முறை மட்டும் வந்து என்னுடைய பிணத்தைப் பார்த்துவிடுப் போ! ....
என்று உருக்கமா எழுதியிருந்தார்!//
இந்தக்கடிதத்தை படித்த அதிரா களனிகங்கையில குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் விக்கிலீக்ஸ் ஒரு தகவல் வெளியிட்டிருக்கு.
காட்டான் said...
//வணக்கம் நிரூபன்!
இப்பல்லாம் நீ அலாப்பி விளையாட்டு விளையாடுற.. நான் வந்து கும்மியடிக்க முடியாதுன்னு தெரிஞ்சோ பதிவு போடுற? ஒரு பிறந்த நாள் பார்ட்டியில நிக்கிறன் பிறகு வாறன்யா..!!!//
மச்சான் பிறந்தநாள் பார்ட்டிக்கும் தேசிய உடையில்தான் போனனிங்களோ? I mean koovanam.
சந்தோசமாக கொண்டாட்டத்தில கலந்துகொண்டுவிட்டு நிதானமாக வாங்கோ மச்சான்
@அம்பலத்தார்
இந்தக்கடிதத்தை படித்த அதிரா களனிகங்கையில குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் விக்கிலீக்ஸ் ஒரு தகவல் வெளியிட்டிருக்கு.://///////
அய்யோ, அம்பலத்தார் அண்ணர் அது ஆதிரை டீச்சர்! அவா வேற , இவா வேற! சத்தியமா ஆதிரை எண்டு ஒரு டீச்சர் இருந்தவா!
அய்யோ, அதைக் கொண்டு வந்து இவாவோட சேர்க்காதேங்கோ! பிறகு நான் இருந்த பாடில்லை! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!!
நிரூ நலமா? தனியாக புத்தி சொல்லி திருத்த முயற்சி செய்திருக்கலாம்.இப்படி மானத்தை வாங்க வேண்டுமா?ஹிஹி
@தனிமரம்
என் தங்கை இன்று முதல் நாற்ரில் இனைந்து விட்டா ஒரு ஸ்பேஸால் கோப்பி சொல்லு தம்பி வேலைக்கு நேரம் அச்சு மணி இரவு வாரண் சிவப்பு மோர் சொல்லி வை
//
யோவ்...தனிமரம் சார்..
உங்க தங்கை போனமாசமே நாற்றில் இணைஞ்சிட்டா..
//யோ நிரூ அவசரத்தில் இன்று என்னோடு நாற்றில் கும்மியடிக்கின்றா கலை என்று சொல்ல வந்தன் அதைப்புரியாமல் சார் மோர் போனமாதம் வந்த கலை என்றால் பயத்தில் ஓடப்போகுது கலை !லொல்லு!
என்ன மணியும் நீயும் உங்க பிளாக்க நேசனுக்கு குத்தகைக்கு கொடுத்துட்டிங்களோ? இந்த கும்மு கும்முறார்..!!!
//@காட்டான் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போது காற்று வாங்க வந்தால் முதலாளியிடம் நீங்களே போட்டுக்கொடுப்பீங்க போல!அவ்வ்வ்வ்வ்
@தனிமரம்
அந்த மச்சாள் 1996 இல்லையா வன்னி வந்திருப்பாள் அதுவும் அம்மையாரின் ஆக்கிரமிப்பாள் இவனின் குள்ளநரித்தனம் தெரிந்து இருந்தால் வந்தே இருக்கமாட்டாள் மச்சாள் அப்படித்தானே !ஹீ நாங்க அரசியல் விடாதுப்பா மோத ஹீ ::://///////////
அய்யோ அய்ய்ய்ய்யோ யாராவது ஒரு பண்டல் ப்ளாஸ்டர் கொண்டு வாங்கோ! முதல்ல நேசன் அண்ணையின்ர வாய ஒட்ட வேணும்!
ஏலவே அறிவித்தல் கொடுத்தமைக்கு நன்றி நிரூபன்!நேசன் பதிவில் ஒரு செய்தி பாத்தேன்.நாய் வாலை நிமிர்த்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாமென வினயமுடன் கேட்டுக் கொள்கிறேன்!!!!!!!(நாளைக்கு ஐயா லீவு.)
//
யோவ்...தனிமரம் சார்../////////////
ஹலோ என் அண்ணனை பற்றி இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினிங்கோ நான் உங்களிடம் கதைக்க மாட்டினம் என்ர அருவா தான் உங்களிடம் கதைக்கும் ...
குட்டி புஷ் கர்ர்ர்vர்vர்ர்ர்ர்ர்ர்ர்
நிரூ...இந்த செய்தியைக் கவனியுங்கோ ஒருக்கா.லங்காஸ்ரீல வந்திருக்கு...
யாழ்.நகரிலுள்ள நகைக்கடையில் நபரொருவர் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு தப்பி ஓட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2012, 04:38.17 PM GMT ]
யாழ்.நகரிலுள்ள நகைக் கடையொன்றில், நகை வாங்கவென வந்த நபர் சங்கிலியை போட்டு அழகு பார்ப்பதாக பாவனை செய்து கொண்டு, கடையிலிருந்து ஓடி மறைந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் கடையினுள் வந்து அரைப்பவுண் சங்கிலி தனக்கு வேண்டும் எனக்கேட்டுள்ளார். ஆனால் கடையில் முக்கால் பவுண் சங்கிலியே இருப்பதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்தச் சங்கிலியை வாங்கிய குறித்த நபர் அதனை கழுத்தில் போட்டு அழகு பார்ப்பதாக பாவனை செய்து கொண்டு கடையிலிருந்து தப்பியோடியுள்ளார். கடையில் இருந்தவர்கள் துரத்திச் சென்றிருந்தபோதும் அந்த நபர் தப்பிச் சென்று மறைந்திருக்கின்றார்.
இதுக்கும் பெல்லுக்கும் ஏதாவது சம்பந்தம்.....!
ச்ச...ச்ச....நேற்றே இந்தப் பதிவைப் போட்டிருக்கலாம் நிரூ.அப்பவும் கொம்பியூட்டருக்குள்ளால ஒரு நாத்தம் வந்தது.சுத்திச் சுத்திப் பாத்தனான்.மணியத்தாரிட்ட இருந்தே நாறினது....சாப்பாடுமெல்லே வாங்கிச் சாப்பிட்டனாங்கள்.என்னென்ன பற்றீரியாவெல்லாம் தொத்திச்சோ.அம்பலம் ஐயாவுக்கும்,நேசனுக்கும்தான் இல்லாத வியாதியெல்லாம் வரும் பாருங்கோ.அங்க நிண்டு சைட் அடிச்சுக்கொண்டு நிண்டவை நாள்முழுக்க !
அதிரா வந்தால் கவனிக்கச் சொல்லுங்கோ...லங்காஸ்ரீயில சங்கிலியின்ர படமும் போட்டிருக்கினமாம் எண்டு !
பல்லு விளக்காம இருக்கிறதுக்கு ஒரு சிறுகதையையே விளக்கமா விளக்கிட்டார் பல்லு விளக்காத.....!
யோகா அப்பா....என்ன விஷேசம்.நாளைக்கு லீவெண்டு சொல்லிக்கொண்டிருக்கிறீங்கள்.நேசன் அரசியல் கூட்டம் வைக்கப்போறண்டு உங்களையும் கூட்டுச் சேர்க்கிறாரோ.கவனம் கவனம் !
நான் பெரிய பக்கட்டா பிளாஸ்டர் அனுப்பிவிடவோ நிரூ.நேசனுக்கு ஒட்ட.காட்டான் மாமாவுக்கு அனுப்பிவிடலாம்.ஆனா காட்டான் மாமாவுக்கும் இன்னொரு துண்டுத் துணி ஆராச்சும் வாங்கிக் குடுங்கோவனப்பா !
அட பாவி மனுசா... யோவ்வ் மணி.. இதெல்லாம் ஒரு புழைப்பாயா??
செம.................தாங்க முடியல்ல......
கிராமத்துப் பழக்கங்கள் அழகாக தொட்டு செல்லப்பட்டுல்லாது..ஆனாலும் அவற்றை இன்றும் மறக்க முடியாது..
சகோ நீருபன் உங்கள் தளத்தில் பாலோவராக இருந்தும் உங்கள் பதிவுகள் எனக்கு வருவதில்லை ஏன்?
சரி செய்யுங்கள் நீருபன்
Post a Comment