Tuesday, March 6, 2012

"ABDUCTION" - கிரிமினலின் அசைவுகள் பட விமர்சனம்

ஹாலிவூட்/ ஹோலிவூட்/ ஹொலிவூட்/ கோலிவுட் ஆக்சன், த்ரிலிங் சினிமா விமர்சனம்!
இப் படமானது 15 வயதிற்கு மேற்பட்டோர் மாத்திரம் பார்த்து மகிழும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய உலகில் பல்வேறுபட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் மனித உயிர்களைக் கொல்லுகின்ற யுத்தங்கள் இடம் பெற்று வருகின்றன. சுதந்திரத்திற்காகவும், உணவுத் தேவைக்காகவும், இனவாதக் கொள்கைகளின் அடிப்படையிலும் ஒருவரை ஒருவர் அடக்கி வாழும் நோக்கிலும் யுத்தங்கள் இடம் பெற்று வரும் இக் காலத்தில் சைபர் கிரைம் எனப்படுகின்ற நவீன தொழில் நுட்பத் தரவிற்காக (DATA) இடம் பெறுகின்ற கொலை முயற்சிகளைப் பற்றிப் பேசுகின்ற படம் தான் ABDUCTION ஆகும். 
Longsgate (லாங்க்ஸ்கேட்) படத் தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கத்தில், Taylor Lautner (ரெயிலர் லன்ரெட்), Lily Collins (லில்லி காலின்ஸ்), Alfred Molina (அல்பிரட் மோலினா), Jason Isaacs (ஜாசன் இசாக்ஸ்), Sigourney Weaver (சிக்குரேணி வேய்வர்), Maria Bello (மரியா பெலோ), முதலிய அமெரிக்க- பிரிட்டிஷ் ஹாலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பிலும், Edward Shearmur (எட்வார்ட் சஃர்மெர்) இன் அடுத்தது என்ன எனும் எதிர்பார்ப்பினைத் தூண்டவல்ல இசையிலும், Shawan Cristensen (சவான் கிரிஸ்ரேன்ஸ்) அவர்களின் எழுத்துருவாக்கத்திலும், John Singelton (ஜான் சிங்கெல்ரோன்) அவர்களின் இயக்கத்திலும் செப்டெம்பர் 23ம் திகதி அன்று திரைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த ABDUCTION.

வாலிப வயசிற்குரிய குறும்புத் தனமும்,  மேலைத் தேச டீன் ஏஜ் பசங்களுக்கேயுரிய பார்ட்டி- கேளிக்கை ஆசை கொண்டவனாகவும், தன்னுடைய நிஜப் பெற்றோர் பற்றியோ, தான் யாரிடம் வளர்கின்றேன் என்பது பற்றியோ அறியாதவனாகத் தன் வளர்ப்புப் பெற்றோருடன் வாழ்ந்து வரும் பையன் தான் Nathan எனும் கதாபாத்திரமாக இப் படத்தில் வலம் வரும் Taylor Lautner. பல்கலைக் கழகத்தில் குரூப் புரொஜக்ட் அடிப்படையில் புகைப்படங்களை ஜோடிகளுக்கு ஏற்ற வாறு பொருத்த வேண்டும் எனும் ப்ராக்டிக்கலைத் தன் வகுப்புத் தோழியான லில்லியுடன் இணைந்து தன் வீட்டில் வைத்துச் செய்யத் தொடங்குகிறார் ரெயிலர் அவர்கள்.

ரெயிலரின் வகுப்புத் தோழி லில்லி மீது தனக்கு இருந்த ஆசையிற்குச் சரியான சந்தர்ப்பம் வாராதா எனும் ஏக்கத்தோடும், அவளைக் காதலிக்க வேண்டும் எனும் ஆவலினைத் தன் மனதினுள்ளும் கொண்டு நடை போட்டுக் கொண்டிருக்கும் ரெயிலருக்கு அவரது தோழி லில்லி சிறு வயதில் ரெயிலர் எப்படி இருந்தார் என்பதனை டிசைனிங் செய்து காட்டுகிறார். இதன் மூலம் தன் பிறப்பில் சந்தேகம் கொண்டவனாக தன் தயாரிடம் ஓடிச் சென்று கேட்கின்ற வேளை வளர்ப்புத் தாயாரோ பதிலேதும் சொல்ல முடியாதவராக விம்மி அழுகின்ற நேரம் பார்த்து இனந் தெரியாத கும்பல் ஒன்று அவரது தாயினையும், தந்தையினையும் கொல்வதற்காக ரெயிலரின் வீட்டினுள் நுழைகின்றது.
ரெயிலரின் வளர்ப்புப் பெற்றோரினைக் கொல்வதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் நுழையும் வரை மெதுவாக நகர்ந்து கொண்ட திரைக்கதை கொலையாளிகள் ரெயிலரின் வீட்டிற்குள் வெடி குண்டினைச் சொருகியிருக்கிறோம், இன்னும் சில நிமிட நேரத்தில் வெடித்து விடும் என்று சொன்னதும் சூடு பிடிக்கத் தொடங்குகின்றது. நேரக் கணிப்பு வெடி குண்டுத் தாக்குதலில் ரெயிலரின் வளர்ப்புப் பெற்றோர்கள் இறந்து கொள்ளத், தன் தோழி லில்லியை அழைத்துக் கொண்டு காயம்பட்ட தன் தோழிக்குச் சிகிச்சைய பெறும் நோக்கில் வைத்தியசாலை நோக்கி ஓடத் தொடங்குகிறார் ரெயிலர்.

ரெயிலர் மாத்திரம் அவர்களது குடும்பத்தில் எஞ்சியிருக்கிறார்கள் என்பதனை அறிந்து, அவரைக் கொல்லும் நோக்கோடு பின் தொடரும் ஐரோப்பிய மாபியா சைபர் கிரைம் கும்பலிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள ஓடிக் கொண்டிருக்கும் ரெயிலரின் ஒவ்வொர் அசைவுகளும் திருப்பங்கள் நிறைந்ததாகப் படத்திற்கு மேலும் திரிலிங்கை கூட்டுகின்றது.

ஐரோப்பிய மாபியா கும்பலான காஸ்டெல்லோ கும்பலும், அமெரிக்க உளவுத் துறையும் ஏன் ரெயிலரை இடை விடாது துரத்துகிறார்கள், ரெயிலரின் உண்மையான பெற்றோர் யார்? ரெயிலர் வைத்திருக்கும் தரவுக் கோப்புக்களின் மூலம் கிடைக்கப் போகும் பயன் என்ன? எனப் பல தரப்பட்ட தகவல்களுக்கு விடையளிக்கும் வண்ணம் படத்தினை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஜான் சின்கெல்டன் அவர்கள். திருப்பங்களும், அதிரடிக் கொலைகளும் நிகழ்ந்த இப் படத்தின் முடிவானது உங்களுக்குத் திரையில் நிச்சயம் தித்திப்பினைத் தரும் என்பதில் ஐயமில்லை.

லில்லி தன் தோழனான ரெயிலரோடு பின் தொடர்ந்து சென்று இறுதி வரை அவனுக்குத் துணையிருந்து, "உன் கூட நான் எப்பவுமே இருக்கனும்" எனச் சொல்லிக் கையோடு கை கோர்த்துப் புகைவண்டியில் தம்மைப் பாதுகாப்பதற்காக மறைந்து செல்லும் போது மூச்சு விடாது ரெயிலருக்கு முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கும் விருந்தளித்திருக்கிறார். 
படத்தின் ப்ளஸ் பாயிண்டுகளுள் ஒன்றாக; ஒவ்வோர் நொடியும் அடுத்தது என்ன என்று அறியும் ஆவலைத் தூண்டும் வண்ணம் Edward Shearmur அவர்களின் இசை அமைந்து கொள்கின்றது. Shawan Cristensen  அவர்கள் தன்னுடைய உன்னதமான வசனங்கள் நம் மனதில் இடம் பிடிக்கும் வண்ணம் படத்தின் காட்சிகளுக்கேற்றாற் போல அருமையான வசனங்களைத் தந்திருக்கிறார். எடுத்துக் காட்டாக, தன்னுடைய தாய் மீது சந்தேகம் கொண்ட ரெயிலரின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வண்ணம், உணர்ச்சி பொங்கும் வசனங்களை அமைத்திருக்கின்றார்.
"Are you my mum? Are you my mum? Why you din't tell me, 
(நீ என்னுடைய அம்மாவா? உண்மையிலே நீ என்னைப் பெறவில்லைத் தானே. ஏன் இன்று வரை சொல்லவில்லை?)

இறுதிக் காட்சிகளில் தன் தந்தையினைத் தான் எதிர்பார்க்காத தோற்றத்தில் படத்தில் Nathan ஆக வலம் வரும் ரெயிலர் அவர்கள் அறிந்து கொள்ள நேரிடும் போது; தந்தையோடு சேர்ந்து வாழ வேண்டும் எனும் உணர்வு கொண்டவனாகத் தொலைபேசி வழியே பேசும் போது, தனக்கு உன்னோடு வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை எனத் தந்தை சொல்லும் காட்சியில்
I'm your Father, But never be a Dad” (நான் உன்னைப் பெற்ற தந்தை. ஆனால் உனக்குத் தந்தையாக இருந்ததில்லை) என்று மனங்களை உருக்குகின்ற வசனம் பேச வைத்து தன் எழுத்துருவாக்கத்தின் ஸ்திரத் தன்மையினை நிரூபித்திருக்கிறார். 

ரெயிலருக்கு உதவுகின்ற நல்ல பெண்ணாக வருகின்ற Sigourney Weaver (மூத்த நடிகை) அவர்கள் தன்னுடைய 44 வயதிலும், துள்ளும் இளமைத் துடிப்போடு, மாபியா குறூப்பிற்குச் சவாலாக வேகமாகவும், சாதுர்யமாகவும் கார் ஓட்டி எம் விழிகளினைச் சில நிமிடங்கள் திரையினை விட்டு அகலாதவாறு பற்றிப் நிலை கொள்ளச் செய்திருக்கிறார்.
போரடிக்காமல் திரிலிங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இப் படத்தினை $35மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் எடுத்திருக்கிறார்கள். படத்தின் மொத்த நேரம் 103-106 நிமிடங்கள். 

ABDUCTION: அப்டக்சன் திரிலிங் கலந்த, சைபர் கிரைம் தொழில்நுட்பத் தரவுகளிற்காக இடம் பெறும் கொலைகளின் பின்னணியிலான துலங்கும் மர்மங்களிற்கான விடை.


பிற் சேர்க்கை: இப் படக் கதா நாயகன் ரெயிலரின் உண்மையான வயது என்ன தெரியுமா? 19
*******************************************************************************
நேரம் இன்மையால் நானும் ஓர் பதிவர் என்று நினைவூட்ட மீள் பதிவாக இப் பதிவினை எழுத வேண்டியதாகிட்டுதே!! 

13 Comments:

Thava said...
Best Blogger Tips

இனிய வணக்கம் நண்பரே, நலமா ?
கடந்த ஒரு வாரமாக பதிவேதும் இல்லையா ? என்று கேட்க வைத்துவிட்டீர்கள்.
இது மீள்ப்பதிவா..இதற்கு முன் படித்ததாக நினைவில்லை.

விமர்சனம் வழக்கம் போல தங்களது சூப்பரான பாணியில் அருமை..கதை, சுவாரஸ்யங்கள் என்று அழகாக தொகுத்து இருக்கீங்க.படம் பார்க்க வேண்டும் போல இருக்கிறது.கண்டிப்பாக மாதங்கள் போக வேண்டும்.பார்க்க முயற்சி செய்கிறேன்.நன்றி..

Yoga.S. said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன்!////நேரம் இன்மையால் நானும் ஓர் பதிவு என்று நினைவூட்ட மீள் பதிவாக இப் பதிவினை எழுத வேண்டியதாகிட்டுதே!! ///நேரம் இன்மையால் நானும் ஒரு பதிவர் இருக்கிறேன் என்று நினைவூட்ட மீள்பதிவை இட வேண்டியதாகி விட்டதே???////காப்பி பேஸ்ட் செய்யவும்,ஹ!ஹ!ஹா!!!!!!!!

Yoga.S. said...
Best Blogger Tips

தலைப்பின் இடது பக்கத்தில் "மீள்பதிவு"என்று குறிப்பிட்டிருந்தால் பிரச்சினை முடிந்தது!

Yoga.S. said...
Best Blogger Tips

அரைத்த மாவை மீண்டும் அரைத்த "பிரபல பதிவர்" என்று யாராவது உள்குத்துப் பதிவு போட்டு விடப் போகிறார்கள்!

ஹாலிவுட்ரசிகன் said...
Best Blogger Tips

ஏதோ பொடியன் படிக்கப் போய்விட்டான் எனப் பார்த்தால், பதிவு போடாமல் படம் பார்த்துக் கொண்டு இருக்கிறார் போலருக்கு நிரூபன். என்ன இது?

KANA VARO said...
Best Blogger Tips

இப் படக் கதா நாயகன் ரெயிலரின் உண்மையான வயது என்ன தெரியுமா? 19//

இவன் நடிச்ச படமொன்று கிட்டடில வந்தது போல..twilight saga

K said...
Best Blogger Tips

மச்சி ஒரு ஓட்டு போட்டிருக்கேன்!

ஹேமா said...
Best Blogger Tips

நானும் இருக்கிறேன் எண்டு சொல்றீங்கள்போல.உப்புமடச் சந்தியில மணிய்த்தாருக்கு பொன்னாடை போத்திறோம்ல.வந்து நீங்களும் போத்தியிருக்கலாம்.சரி நேரம் கிடைக்கேக்க வாங்கோ.படிப்பு முக்கியம் !

நிரூபன் said...
Best Blogger Tips

கருத்துரை வழங்கி ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கும், பதிவில் காணப்பட்ட தவறினைச் சுட்டிக் காட்டிய/
வழுவினைத் திருத்திட` உதவிய யோகா ஐயாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.

'பரிவை' சே.குமார் said...
Best Blogger Tips

விமர்சனம் வழக்கம் போல அருமை..

உலக சினிமா ரசிகன் said...
Best Blogger Tips

ஹாலிவுட் படத்திற்க்கு ஈழத்தமிழில் விமர்சனம் படிக்கும் போது புதிய சுவை கிட்டுகிறது.
வாழ்த்துக்கள் நிரூபன்.

shanmugavel said...
Best Blogger Tips

முடிந்தால் பார்க்கிறேன்.விமர்சனத்தையும் நன்றாக நகர்த்தி சென்றிருக்கிறீர்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel
கருத்துரை வழங்கிய மற்றும் பதிவினைப் படித்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள்.

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails