அடுத்தவன் குழந்தைக்கு அப்பனாக நினைக்கும் பதிவர்கள் - ஓர் அலசல்!
"ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடர் பதிவின் ஆறாவது பாகத்தினைப் படிக்க வந்திருக்கும் அன்புச் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்;
நான்காவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>>
ஐந்தாவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? எல்லோரும் பதிவினைப் படிக்க ரெடியா? ஸ்னாக்ஸ், சிப்ஸ், அப்புறம், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாமே கொண்டு வந்திருக்கிறீங்களா? வாங்க, வாங்க.
பிறர் படைப்பின் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்:
ஐந்தாவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி ஐந்தாவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? எல்லோரும் பதிவினைப் படிக்க ரெடியா? ஸ்னாக்ஸ், சிப்ஸ், அப்புறம், கூல் ட்ரிங்க்ஸ் எல்லாமே கொண்டு வந்திருக்கிறீங்களா? வாங்க, வாங்க.
பிறர் படைப்பின் மூலம் சுய இன்பம் காணும் பதிவர்கள்:
பதிவர்களை முட்டாளாக்கும் பதிவர்கள் செய்யும் இன்னுமோர் மகா தவறு என்ன தெரியுமா? தாம் படித்த பதிவினைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது தவறு அல்ல. அதே நேரம் தமக்கு பிடித்த படித்துச் சுவைத்த விடயங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதும் தவறே அல்ல. சில பதிவருங்க பதிவினைப் பிற இடங்களில் இருந்து காப்பி பேஸ்ட் செஞ்சிட்டு அந்தப் பதிவினை மட்டும் பெரிய எழுத்துருவில் போட்டு விடுவாங்க. ஆனால் தாங்க எங்கே இருந்து காப்பி செஞ்சிருக்கோம் என்ற விடயத்தினை மாத்திரம் மிகவும் சிறிய எழுத்துருவில் அடையாளம் தெரியாத மாதிரி ஒரு மூலையில் ஓரமாப் போட்டிருப்பாங்க.இம் மாதிரியான பதிவர்களுக்கு வேண்டியதெல்லாம் மத்தவங்க படைப்பினை தாங்கள் பிரசுரித்தாலும் தமது படைப்பு என நினைத்து பிறர் தம்மை புகழ வேண்டும் எனும் ஆசை தான்.
பதிவுலகில் காப்பி பேஸ்ட் பதிவர்கள் என்று சொல்லப்பட்டு சர்ச்சைக்குள் சிக்கிய பதிவுலக நண்பர்கள் எல்லோரும் வெளிப்படையாகவே தாம் எங்கிருந்து இப் பதிவினை காப்பி பண்ணியிருக்கோம் என்பதனை பெரிய எழுத்துருவில் போட்டிருப்பாங்க. ஆனால் இம் மாதிரியான சுய இன்பம் காணும் நோக்குடைய பதிவர்கள் மாத்திரம் விதி விலக்காக பிறர் படைப்பினைக் காப்பி பண்ணி அப்படியே தமது படைப்பு போன்று எழுதி விட்டு, அதன் கீழ் ஓரமா இந்தியா டுடே இல்லேன்னா இன்னோர் சஞ்சிகையில் இருந்து எடுத்தது அப்படீன்னு போட்டிருப்பாங்க. இவங்க எங்கே இருந்து எடுத்தாங்க என்பதற்கான ஆதாரத்தினை பதிவிற்குச் சமனான எழுத்துருவில் போடமாட்டாங்க. இதனால அப்பாவிப் பதிவருங்க என்னா பண்ணுவாங்க என்றால்; அசத்திட்டீங்க. ரைட்டு, கலக்கிட்டீங்க. உங்கள் படைப்புக்களில் சிறந்தது அப்படீன்னு கமெண்ட் போடுவாங்க.
இம் மாதிரியான கமெண்டுகளைப் படித்ததும் அடுத்தவன் குழந்தைக்கு திருட்டுத்தனமாக உரிமை கோரும் பதிவின் உரிமையாளருக்கோ இன்பம் பொங்கி வழியும். ஆனந்த கண்ணீர் விடாக் குறையாக, ரொம்ப நன்றிங்க. இப்படி ஓர் பதிவினை எழுத எம்புட்டு நாள் காத்திருந்தேன் அப்படீன்னு கமெண்ட் போடுவாரு. ஹே...ஹே.. நானும் ஓர் நாள் இப்படியான பதிவினையும், அதன் கீழே உள்ள பின்னூட்டங்களையும் பார்த்து விட்டு, பயங்கர கடுப்பாகிட்டேன். நான் போய் ஓர் கமெண்ட் போட்டேன். நீங்கள் படித்துச் சுவைத்த இந்தியா டுடே சஞ்சிகையில் உள்ள பதிவினை எம்முடன் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப நன்றிங்க அப்படீன்னு. அடப் பாவமே. அந்த நல்ல மனுசன் என் கமெண்டை ரிலீஸ் பண்ணிக்கவே இல்லைங்க. தற் புகழ்ச்சி வேண்டி பிறர் பதிவினைச் சுட்டுப் பகிர்வோரை நீங்கள் இலகுவில் கண்டறிய முடியாதுங்க. அப்படி கண்டு புடிச்சீங்க என்றாலும், உடனடியாக பதிவின் கீழே எங்கிட்டு இருந்து பதிவினைச் சுட்டிருக்கேன் என்று குறிப்பிட்டிருக்கேன் கவனிக்கலையா என்று உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார் பாருங்க! நீங்க அசந்து போடுவீங்க.
அடுத்த பாகத்தில் தமக்குத் தாமே விருது கொடுத்து மகிழும் பதிவர்கள் பற்றிப் பார்ப்போமா? பதிவுலகில் ஆரோக்கியமான எழுத்துலகினை நோக்கிய பயணத்தினை நாம் தொடர வேண்டுமானால், நல்ல பதிவுகள் எழுத வேண்டுமானால் இம் மாதிரியான விடயங்களையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம். இப் பதிவின் அடுத்தடுத்த பாகங்கள் தமக்குத் தாமே விருத்து கொடுத்து மகிழும் சில பதிவர்களின் குணவியல்புகளை நேரடியாகச் சுட்டும் வண்ணம் அமைந்து கொள்ளலாம். ஆகவே யாரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கி இப் பதிவினை எழுதும் நோக்கம் எனக்கில்லை. பல புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக எவ்வாறு நல்ல பதிவுகளையும், பதிவர்களையும் அடையாளங் கண்டு கொள்ளலாம் எனும் சிந்தனைக்கு அமைவாக இப் பதிவினை எழுதுகின்றேன்
இன்றைய தினம் ஓர் அதிரடிப் பதிவாக ஐடியா மணியின் ப்ளாக்கில் வெளியாகியிருக்கும்;
இன்றைய தினம் ஓர் அதிரடிப் பதிவாக ஐடியா மணியின் ப்ளாக்கில் வெளியாகியிருக்கும்;
|
28 Comments:
உங்களுடைய mission-டுபாகூர்ஸ் க்கு என்னுடைய வாழ்த்துக்கள்...:)
ஆனா ஒரே மாதிரி பதிவு தினம் வருகிற உணர்வு நண்பா..கொஞ்சம் காலம் இடைவெளி விட்டு வெளியிடுங்களேன்..இடையிடையே ஏகாம்பரதார் கவிதா மாதிரி அப்பப்ப ரிலீஸ் பண்ணுங்க...:)
தலைப்பு கொஞ்சம் சூடுதான்...:) ஹி ஹி...
வணக்கம்.
நீங்கள் சொல்வது அப்படியே சரி நண்பரே..நான் கூட சில வேளைகளில் அந்த மாதிரியான பதிவுகளை பார்த்திருக்கிறேன்.
ஆனால், இந்த பதிவின் வழி நானும் ஒன்று உணர்ந்தேன்
இனிமேல் விக்கிப்பீடியா, ஐஎம்டிபி போன்ற இணையத்தளங்களில் தகவல்களை எடுப்பின் கண்டிப்பாக நன்றி சொல்லி பதிவுகளில் போடுகிறேன்.
நன்றி.
இன்று பதிவு சற்று சிறியதாக தோன்றுகிறது. முடிந்தால் இரண்டு-மூனறு பதிவுகளை ஒரே பதிவாக இணைத்து வாரத்திற்கு ஒருமுறை ரிலீஸ் பண்ணினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
அகராதி புடிச்சவய்ங்கள பத்தி ஒரு அகராதியே போடலாம் போல...
சக பதிவர்களுக்கு சுய பரிசோதனை மற்றும் பாடம் தொடரட்டும்...
தொடருங்கள் சகோதரம்...
இது ஒரு காப்பி பேஸ்ட் கமெண்ட்.
நன்றி
மைக்ரோசாஃப்ட்
டெல் கம்ப்யூட்டர்ஸ்
கூகிள் கார்ப்பரேஷன்
NHM Writer
காப்பி பேஸ்ட் பதிவுகளை கண்டுபிடிக்க எளிய வழி:
பதிவில் இருந்து ஒரு வரியை காப்பி செய்து கூகிளில் தேடவும். அது ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டிருந்தால் அந்த லிங் கிடைக்கும்!
ஹிஹி காமெடி பதிவேர்ஸ் பற்றி பதிவு...இதோட எத்தின பேருக்கு குட்டோ!!:P
///சி.பி.செந்தில்குமார் said...
டைட்டில் நல்ல இலக்கியத்தரமா இருக்கு ஹி ஹி////
இது பின்நவீனத்துவம்தானே?
தலைப்பு கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கிறது
ஆயினும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லவேண்டும் எனில்
இப்படித்தானே சொல்லவேண்டியதாக உள்ளது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சில காப்பி ஜெராக்ஸ் மன்னர்கள் கமெண்ட் பகுதியே வைக்காம இருக்கிறாங்க....
வாங்க நிருபன் தலைப்பு பார்த்து அரண்டுவிட்டேன் படித்தபின் தெளிந்தேன் தொடருங்கள்
//தமக்குத் தாமே விருது கொடுத்து மகிழும் பதிவர்கள் பற்றிப் பார்ப்போமா?//
நீங்க விருது கொடுத்தா....ஏய்யா...அவங்க அப்படி பண்றாங்க...கொடுக்காததால தானே கொடுத்துக்கிறாங்க....
தான் பெரிய அப்பாடக்கரு அப்படின்னு நெனைச்சு எழுதறவங்களுக்கு எவனும் விருது கொடுக்க மாட்டான்...நாமல்லாம் எழுதறது ஒரு எழுத்தா அப்படின்னு நினைக்கிறவனுக்கு விருது தானா வரும்....
எத்தனையோ முறை திட்டியாகிவிட்டது,வெவ்வேறு வடிவம் எடுத்து உல்டா செய்கிறார்கள்.அதே கருப்பொருளை வைத்து வார்த்தையை மாற்றி போடுகிறார்கள்..ம்..
@veedu
நீங்க விருது கொடுத்தா....ஏய்யா...அவங்க அப்படி பண்றாங்க...கொடுக்காததால தானே கொடுத்துக்கிறாங்க....
தான் பெரிய அப்பாடக்கரு அப்படின்னு நெனைச்சு எழுதறவங்களுக்கு எவனும் விருது கொடுக்க மாட்டான்...நாமல்லாம் எழுதறது ஒரு எழுத்தா அப்படின்னு நினைக்கிறவனுக்கு விருது தானா வரும்....
/
நண்பா.
நான் சொல்லப் போற விடயத்தினை நீங்க தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீங்க
இன்னோர் பேரில ப்ளாக் தொடங்கி எழுதி
அந்த ப்ளாக் மூலமா தாம சொந்தப் பேரில எழுதும் ப்ளாக்கிற்கு விருது கொடுக்கும் பாக்கியசாலிகளைப் பற்றிய பதிவு தான் அடுத்து வரவிருக்கிறது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம் சகோ நிரூபன்
உள்ளதை உள்ளபடி சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்.
நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது...
வணக்கம் நிரூபன்!அருமையான தலைப்பு!இப்படி எழுதினாலாவது திருந்த மாட்டார்களா என்ற உங்கள் நப்பாசை புரிகிறது!தொடருங்கள்,முகத்திரைகளைக் கிழியுங்கள்!கருத்துரைப்போர் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரிகிறது,எத்தனை பேர் "மன்னர்"களென்று!ஹ!ஹ!ஹா!!!!!!!
இந்த காப்பி பேஸ் தொல்லையால் பெரிதும் பாதிக்கப்பட்டவன் நான்.
பலவிடயங்களை இந்த தொடரில் புட்டு புட்டு வைக்கிறீங்க இந்த தொடரில் பதிவர்களின் பதிவுகளை காப்பி அடிக்கும் இணைய தளங்கள் பற்றியும் குறிப்பிட வேண்டும் என்பது என் விண்ணப்பம் அபோதுதான் பதிவுலகின் முழு சூட்சுமமும் எல்லோறுக்கும் புரியும்.
பாஸ் பதிவுலகம் பற்றிய தொடரில் பலதை புட்டு புட்டு வைக்கிறீங்க பலருக்கு டவுசர் கிழியும்
உங்கள் தொடரில்
இந்த விடயங்கள் பற்றியும் எழுதவேண்டும்-
இரண்டு மூன்று பெயரில் தளம் நடத்தும் பதிவர்கள் அதாவது தனது தளத்தின் பெயரிலே இன்னும் ஒரு போலி தளம் உருவாக்கி அதில் தன் தளத்தை பற்றி கேவலமாக எழுதி அந்த தளத்துடன் சண்டை போடுவது போல சண்டை போட்டு பப்ளிசிட்டி தேடும் பதிவர்கள்.
இரண்டு மூன்று கணக்குகள் வைத்து கமண்ட் போடும் பதிவர்கள்,திரட்டிகளில் பல கள்ள ஓட்டு உருவாக்கி தங்கள் பதிவுகளுக்கு தாங்களே ஓட்டு போடும் பதிவர்கள்,
குறிப்பிட்ட ஒருவரின் பதிவுக்கு கும்பலாக போய் தாங்கள் ஓட்டு போட்டு திரட்டிகளில் பிரபலமாக்கும் பதிவர்கள்.
இப்படி பல விடயங்களை உங்கள் தொடரில் எதிர்பாக்கின்றோம்.
கொஞ்சநாள் பதிவுலகப்பக்கம் தல காட்டாம இருந்தா ஏன்னா அக்கப்போரு நடக்குது... இருங்கண்ணே, தொடர மொத்தமா படிச்சிட்டு வந்துடறேன்...
இந்த காப்பி பேஸ்ட் விவகாரத்துக்கு யாருமே விதிவிலக்கு இல்ல பிரபல பதிவர்கள் உட்பட
மச்சி இவனுங்களுக்கு பாடம் புகுத்தனும்.... நான் போடும் பிச்சையில் வாழும் இணையதளங்கள் அப்படின்னு ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கலாமா?
காப்பி பேஸ்ட் செய்பவர்களின் முகத்தை கிழிக்கலாம்....
உங்கள் யோசனை என்ன...
வணக்கம்.
கொஞ்சம் தாமதம்.மன்னிக்கவும்.
கொஞ்சம் மினக்கெட்டு ஆத்மதிருப்தியுடன் எழுதும் சில விடயங்களை பதிவில் போடவும் கொஞ்சம் தயக்கம் இருக்கு.அதற்குக்காரணம் இதுதான்.
நான் எழுதியதை வேறொரு தளத்தில் வைத்து நானே வாக்களிக்கவேண்டிவந்தால் என்ன செய்வதென்ற எண்ணம்.
பார்ப்போம்.திருந்துவார்களா என்று.
sasi...
மச்சி இவனுங்களுக்கு பாடம் புகுத்தனும்.... நான் போடும் பிச்சையில் வாழும் இணையதளங்கள் அப்படின்னு ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கலாமா? ////
மாப்ளே எப்பவோ சொன்ன, இன்னும் ஸ்டார்ட் பண்ணலியா?
சகோ நிரு அவர்களே, மேற்கண்ட கமென்ட் பதிவினை மேலிருந்து ஒன்றொன்றாக வாசித்து வந்து சசியின் கமெண்ட்டை பார்த்தவுடன் அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்ற நோக்கில் முதல் கமென்ட் எழுதினேன்....
பதிவர்களிடத்தில் காப்பி/பேஸ்ட் இப்போ கொறஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன்..
@சசிகுமார்மச்சி இவனுங்களுக்கு பாடம் புகுத்தனும்.... நான் போடும் பிச்சையில் வாழும் இணையதளங்கள் அப்படின்னு ஒரு தொடர் பதிவு ஆரம்பிக்கலாமா?
காப்பி பேஸ்ட் செய்பவர்களின் முகத்தை கிழிக்கலாம்....
உங்கள் யோசனை என்ன...
//
கண்டிப்பாக நல்ல ஐடியா நண்பா,
நீங்கள் தொடரை ஆரம்பியுங்கள்.
நாங்கள் கூட இருக்கிறோம்.
Post a Comment