ஹாலிவூட் திரை விமர்சனம்!
மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நரக வேதனைகளைக் கொடுக்கும் ஞாபகங்கள் மறு புறமும் என மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்பமும், துன்பமும் இடைவிடாது எம்மைத் தொடர்ந்து கொண்டிருப்பது இயல்பு தான் என்றாலும், மனத் திரையிலிருந்து சில நினைவுகளை நாம் அழிக்க நினைத்தாலும் பாசம் எனும் பிணைப்பானது இலகுவில் அழிக்க முடியாதவாறு அந்த நினைவுகளைப் பின் தொடர்ந்து வர வைத்து வேதனைத் தீயினுள் தினம் தினம் மனித வாழிவினைத் தள்ளிக் கொண்டிருக்கும்.
Rabbit Hole: நான்கு வயது நிரம்பிய பையன் ஒருவன் தமது வீட்டிற்கு வெளியே பாய்ந்தோடிய ஆசை நாய்க் குட்டியினைத் துரத்திச் செல்லும் வேளையில் வேகமாக வந்து கொண்டிருந்த காரில் அடிபட்டு இறந்து விடுகின்றான். இவ் வேளையில் அந்தப் பிஞ்சு உள்ளத்தின் பெற்றோர்களாக இப் படத்தில் வரும் தாயார் Becca (பெக்கா) மற்றும் தந்தை ஹாவி (Howie) ஆகியோர் பிள்ளையின் பிரிவுத் துயரிலிருந்து இலகுவில் மீள முடியாதவாறு தினம் தினம் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமது அன்புச் செல்வமான Danny நடந்து பழகிய வீடு, மற்றும் ஓடி விளையாடிய வீட்டுச் சுற்று வட்டாரம், பூங்கா இவற்றைக் காணும் வேளையில் பெற்றோருக்கு பிள்ளையின் நினைவலைகளாக இவை கண்களில் நீர்த்திவலைகளை உதிர்த்துச் செல்லுகின்றது.
குழந்தையின் தாயாரும், ஹாவியின் மனைவியுமான பெக்கா, நாயகன் ஹாவியுடன் குழந்தை இறந்து பல மாதங்களாகியும் செக்ஸ் வைத்துக் கொள்வதில் கூட நாட்டமற்றவராக பிள்ளை பற்றிய நினைப்பில் இருக்கின்றார். இந் நேரத்தில் ஹார்வியுடன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பனும், அவளது மனைவியும் ஹாவியிற்கு அறிமுகமாகின்றார்கள்.சில நாட்களின் பின்னர் ஹார்வியின் நண்பனின் மனைவியோ, தன் கணவரைக் கழட்டி விட்டு விட்டு, தனியே ஹார்வியைச் சந்திக்கத் தொடங்குகின்றாள். ஹார்வியுடன் உடல் உறவினைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கின்றாள். இந்த இடத்தில் நாம் எல்லோரும் எனன் நினைப்போம்? நீண்ட நாள் உடல் ரீதியான தொடுகை இன்மையால் சுகம் தேடி ஹாவி அலைகின்றான்.ஆகவே தனது நண்பனின் மனைவியுடன் உடலுறவு கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பானா என்று தானே நினைப்போம்? ஹே...ஹே..இது தானே தமிழனது இயல்பு;-))
அங்கே தான் படத்தின் இயக்குனர் தனது திறமையினை நிலை நாட்டியுள்ளார். அது என்ன என்று அறிய வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. இன்னும் கொஞ்ச கதை சொல்லினால் தானே படம் பார்க்க வேண்டும் எனும் ஆவல் உங்களுக்கும் மேலும் அதிகமாகும். குழந்தையின் தாயாரை விடத் தந்தையார் தான் ஒவ்வோர் பொழுதுகளிலும் தன் பிள்ளை மீதான நினைவுகளை தன் அலைபேசியில் பதிவாக்கப்பட்டிருக்கும் வீடியோ மூலம் மீட்டிக் கொண்டிருக்கிறார். திடீரென வீட்டின் கூரைப் பகுதியில் சிறிய திருத்தம் மேற் கொள்ளுவதற்காக தொழிலாளி ஒருவனைத் தொலைபேசி ஊடக அழைக்கும் போது கை தவறி அலைபேசியில் பதிந்திருந்த தன் ஆசை மகனின் நினைவுகள் அடங்கிய வீடியோவினை அழித்து விடுகிறாள் பெக்கா. இங்கிருந்து ஆரம்பிக்கின்றது உணர்ச்சி அலைகளுடனான ஓர் குடும்பத்தின் போராட்டம்.
குழந்தையின் நினைவலைகளிருந்தும் மீள முடியாதவாறு தாம் குடியிருக்கும் வீட்டினையும் விற்க வேண்டும் என நினைக்கும் பெக்காவும் கணவரும் அதற்கான முயற்சிகளில் இறங்கிறார்கள். சிறிது நாட்களின் பின் தன் பிள்ளையின் மரணத்திற்கு காரணமான 18 வயதிற்கும் குறைந்த பையனை குழந்தையின் தாயான பெக்கா எதேச்சையாக சந்திக்கிறாள். இதன் பின்னர் என்ன நடந்திருக்கும் என்று அறிய விரும்பினால் நீங்கள் இந்த திரைப்படத்தினைக் கண்டு களிக்கலாம். படத்தின் ஒவ்வோர் காட்சிகளையும் யதார்த்த உணர்வோடு, சிறிதளவு ஒப்பனையேதுமின்றி, மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாக காண்பிக்காது இயல்பான முறையில் செதுக்கியிருக்கிறார்கள். நடிப்பு பற்றிச் சொல்லவே தேவையில்லை. பார்க்கும் போதே, இப்படியொரு உணர்ச்சிக் காவியத்தினை தவற விட்டு விட்டோமே எனும் உணர்வு உங்களுக்கு நிச்சயமாக ஏற்படும்.
Rabbit Hole படம் பற்றிய சில குறிப்புக்கள்: பல விருதுகளை வென்றிருக்கும் இப் படமானது 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்திருக்கிறது. இந்த திரைப் படத்தினை John Cameron Mitchell அவர்கள் இயக்கியிருக்கிறார். இப் படத்திற்கான திரைக் கதையினை David Lindasy Abaria அவர்கள் தன்னுடைய Rabbit Hole நாடக நூலினை அடிப்படையாக வைத்து எழுதியிருக்கிறார். படத்தின் காட்சி நகர்வுகளிற்குப் பக்க பலமாக மென்மையாக, எம் விழிகளை ஈரமாக்கும் வண்ணம் இசையால் இப் படத்தினை மெருகூட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் Anton Sanko. இப் படத்தில் Nicole Kidman, Aaron Eckhart, Dianne Wiest, Miles Teller, Tammy Blanchard, Sandra Oh ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைக் காவியத்தினை Lionsgate நிறுவனத்தினர் விநியோகம் செய்திருக்கிறார்கள். Olympus Pictures நிறுவனத்தினர் இப் படத்தினைத் தயாரித்திருக்கிறார்கள்.
Rabbit Hole: ஞாபகச் சுவடுகளில் பொதிந்திருக்கும் வேதனை நிரம்பிய தடயம்.
இத் திரைப்படம் பெற்றுக் கொண்ட விருதுகள் எத்தனை என்று அறிய ஆவலா?
- Academy Award for Best Actress - Nicole Kidman
- Alliance of Women Film Journalists Award for Best Actress - Nicole Kidman
- Alliance of Women Film Journalists Award for Best Adapted Screenplay - David Lindsay-Abaire
- Broadcast Film Critics Association Award for Best Actress - Nicole Kidman
- Chicago Film Critics Association Award for Best Screenplay - David Lindsay-Abaire
- Chlotrudis Award for Best Adapted Screenplay - David Lindsay-Abaire
- Chlotrudis Award for Best Director - John Cameron Mitchell
- Chlotrudis Award for Best Supporting Actor - Miles Teller
- Chlotrudis Award for Best Supporting Actress - Dianne Wiest
- Dallas-Fort Worth Film Critics Association Award for Best Actress - Nicole Kidman
- Detroit Film Critics Society Award for Best Actress - Nicole Kidman
- Golden Globe Award for Best Actress - Motion Picture Drama - Nicole Kidman
- Houston Film Critics Society Award for Best Actress - Nicole Kidman
- Independent Spirit Award for Best Director - John Cameron Mitchell
- Independent Spirit Award for Best Female Lead - Nicole Kidman
- Independent Spirit Award for Best Male Lead - Aaron Eckhart
- Independent Spirit Award for Best Screenplay - David Lindsay-Abaire
- Italian Online Movie Award for Best Actress - Nicole Kidman
- Las Vegas Film Critics Society Award for Best Actress - Nicole Kidman
- Online Film Critics Society Award for Best Actress - Nicole Kidman
- San Diego Film Critics Society Award for Best Actor - Aaron Eckhart
- Satellite Award for Best Actress - Motion Picture Drama - Nicole Kidman
- Satellite Award for Best Supporting Actress - Motion Picture - Dianne Wiest
- Screen Actors Guild Award for Outstanding Performance by a Female Actor in a Leading Role - Motion Picture - Nicole Kidman
- St. Louis Gateway Film Critics Association Award for Best Actress - Nicole Kidman
- Utah Film Critics Association Award for Best Actress - Nicole Kidman
- Washington D.C. Area Film Critics Association Award for Best Actress - Nicole Kidman
இத் திரைப் படம் பற்றிய விபரங்களும், இப் படம் பெற்றுக் கொண்ட விருதுகள் தொடர்பான தகவல்களும் வீக்கிப்பீடியா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்!
|
17 Comments:
என்ன பாஸ் ட்ரெய்லரே ஒரு மணி 31 நிமிடங்களா அப்ப படம்? நிகோல் கிட்மேனை எனக்கு பிடிக்கும் பேரழகி இல்லையென்றாலும் பெர்ஃபோமன்ஸில் கலக்குபவர்
@தர்ஷன்
என்ன பாஸ் ட்ரெய்லரே ஒரு மணி 31 நிமிடங்களா அப்ப படம்? நிகோல் கிட்மேனை எனக்கு பிடிக்கும் பேரழகி இல்லையென்றாலும் பெர்ஃபோமன்ஸில் கலக்குபவர்
//
ஹே...ஹே..
மன்னிக்கவும் பாஸ்,
தப்பு நடந்து விட்டது,
படம் தான் ஒரு மணித்தியாலமும் 31 நிமிடங்களும்!
சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.
பார்க்க முயற்சி செய்கிறேன் பாஸ்! நிக்கோலே கிட்மேனை எனக்கும் பிடிக்கும்! :-)
பார்க்கத் தூண்டும் விமர்சனம் அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
த.ம 4
படம் ஏற்கனவே ஹார்ட் டிஸ்கில் கலெக்சனில் உள்ளது. போஸ்டரைப் பார்த்துவிட்டு நானும் கில்மாவை அப்புறமா தனியாப் பார்ப்போம்னு விட்டுட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.
சீக்கிரமே பார்த்துவிட்டு சொல்கிறேன்.
@ஹாலிவுட்ரசிகன்
போஸ்டரைப் பார்த்துவிட்டு நானும் கில்மாவை அப்புறமா தனியாப் பார்ப்போம்னு விட்டுட்டேன். ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.
//
நண்பா, இது கில்மாப் படம் அல்ல.
விருதுகள் பலவற்றை பெற்ற நல்லதோர் காவியம், இத் திரைப்படத்தில் ஒரு கில்மா காட்சியோ, அல்லது முத்தக் காட்சியோ இல்லை. போஸ்டரை மட்டும் விளம்பரத்திற்காக இவ்வாறு போட்டுள்ளார்கள்.
// நண்பா, இது கில்மாப் படம் அல்ல.
விருதுகள் பலவற்றை பெற்ற நல்லதோர் காவியம், இத் திரைப்படத்தில் ஒரு கில்மா காட்சியோ, அல்லது முத்தக் காட்சியோ இல்லை. போஸ்டரை மட்டும் விளம்பரத்திற்காக இவ்வாறு போட்டுள்ளார்கள். //
அடடா ... மாத்தி சொல்லிட்டேன் பாஸ். கில்மாப் படம்னு நினச்சு ஓரமா படுக்கப் போட்டுட்டேன். அது தப்புன்னு விமர்சனம் படிச்சப்பறம் தான் தெரிஞ்சுது.
நல்ல விமர்சனம். பகிர்வுக்கு நன்றி
வணக்கம் நிரூபன்!நல்ல படம்,பார்க்க வேண்டிய படம் என்று விமர்சனம் படித்த போதே புரிந்தது. நேரம் இருக்கும்போது பார்க்கிறேன். நன்றி பகிர்வுக்கு!
""மீட்டிப் பார்க்க சுகம் தரும் நினைவுகள் ஒரு புறமும், நினைத்துப் பார்க்க முடியாதவாறு அனலாய் மனதைக் கொதிக்க வைத்து நரக வேதனைகளைக் கொடுக்கும் ஞாபகங்கள் மறு புறமும் என மனித வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது"""
அமர்க்களமான ஆரம்ப வரிகள்,
அசத்தலான விமர்சனம்
விருதுகளின் அணிவரிசை
பிரமித்தேன் சகோ
உணர்வுகளின் வலியை உங்களின் எழுத்தின் வழியே வலிமையாக தந்து இருக்கிங்க.......
நல்ல விமர்சனம்.... படிப்பதை விட்டுப்போட்டு, இங்கிலீசுப் படம் பார்க்கிறியளாக்கும்?:)))).
சிறிது நேரத்துக்கு முன்பே வந்து படித்தேன்....இதோடு சேர்த்து இரண்டாவது முறை..
தங்கள் விமர்சனகங்கள் பற்றி சொல்ல என்ன என்ன இருக்கிறது..எப்போதும் போல அருமை..
நன்றி..
கரெக்டா கண்டுபிடிச்சது எப்படி? இல்ல போஸ்டர் பார்த்து போய் சிக்குச்சா? ஹி ஹி
நிரூ!அமுதவன் சாருக்கு டாட்டா காட்டிவிட்டு நீங்க வந்து உட்கார்ந்துகிட்டீங்களாக்கும்.
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்.
விமர்சனப் பகிர்வு படம் பார்க்கத் தூண்டுகின்றது.
நட்சத்திர வாழ்த்துக்கள்.
தமிழ்மண நட்சத்திர வாழ்த்துகள்!
படம் பார்க்கத் தூண்டும் விமரிசனம்.
Post a Comment