இப் பதிவினைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கமுங்க;
புதிய பதிவர்களுக்கும், ஏனைய பதிவுலக நண்பர்களுக்கும் ஒரு சின்ன உதவியாக அமையும் வண்ணம்; வலைப் பதிவில் "ஒத்தப் பதிவின் மூலம் மொத்த ஹிட்ஸையும் அள்ளுவது எப்படி?" எனும் தொடரினை எழுதிட்டு வருகிறேன். ஸோ அந்த தொடரின் ஐந்தாவது பாகமாக இப் பதிவு உங்களை நாடி வருகின்றது. இப் பதிவின் தொடர்ச்சியான:

நான்காவது பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்>>> இனி நான்காவது பாகத்தின் தொடர்ச்சியினைப் படிப்போமா? எல்லோரும் பதிவினைப் படிக்க ரெடியா? அப்படீன்னா ஓக்கே
பதிவர்களின் காதில் பூச் சுத்தும் பம்மாத்துப் பதிவர்கள்:
வலையுலகில் நான் இதற்கு முதற் பாகத்தில் கூறியது போன்று தமது கருத்துக்களை திணிக்கும் அல்லது தமது பதிவுகளைச் சந்தைப்படுத்தும் நோக்கில் எம்மை யூஸ் செய்யும் பதிவர்களிடம் நானும் பல்பு வாங்கியிருக்கேன். அது எப்படித் தெரியுமா? நானும் ஆரம்பத்தில் மாஞ்சு மாஞ்சு எல்லாப் பதிவர்களுக்கும் மொய் வைச்சேனுங்க. ஆனால் இந்த பல்பு கொடுக்கிற பதிவருங்க என் பதிவில் உள்ள ஒரு பந்தியினையோ அல்லது எனக்கு வந்திருக்கும் பின்னூட்டங்களில் ஏதாவது ஒன்றினையோ காப்பி பண்ணி தமது கமெண்ட் போல போட்டுக்கிட்டேயிருந்தாங்க. நானும் அப்பாவித்தனமாக அவங்க பதிவுக்கும் போயி ஒரு பந்தியினைக் காப்பி பண்ணிட்டு அவங்க பாணியிலே அருமை அப்படீன்னு கமெண்ட் போட்டேனுங்க. என்னா அநியாயம்? என் கமெண்டை அவங்க ரிலீஸ் பண்ணலைங்க. ஸப்பா, அப்போது தான் இந்த கருத்து திணிப்பு பற்றி நன்றாக உணர்ந்து கொண்டேன்.
இன்னும் சில பதிவர்கள் என்னா பண்ணுவாங்க என்றால், நீங்க பதிவு எழுதிப் பப்பிளிஷ் பண்ணியதும் ஓடோடி வந்து அருமை, கலக்கிட்டீங்க போங்க, சூப்பருங்க, ம்......தொடருங்கள், அப்படீன்னு கமெண்ட் போட்டுக்கிட்டு அடுத்த வலையினை நாடிப் போயி இதே மாதிரியான கமெண்டுகளைப் போடுவாங்க பாருங்க. இன்னும் சிலரோ தாங்கள் புதுப் பதிவு ரிலீஸ் பண்ண முன்னாடி திருவிழாவில தேர் வெள்ளோட்டம் வுடுறது போல உங்க வலைகளுக்கு வந்து கமெண்ட் போட்டு விட்டு கொஞ்ச நேரம் கழித்து புதுப் பதிவினை ரிலீஸ் பண்ணுவாங்க. ஸ்பப்பா...முடியலை என்று நீங்க வடிவேலு பாணியில அழுவீங்க. இம் மாதிரியான பதிவர்களைக் கண்டுபிடிக்க ஒரே வழி. உங்க பதிவினை நீங்க பப்பிளிஷ் பண்ணியதும் உங்களுக்கு இம் மாதிரியான நபரிடமிருந்து ஓர் கமெண்ட் வரும். அப்படி ஓர் கமெண்ட் வந்ததும் உங்க ப்ளாக்கின் டாஷ்போர்ட் மூலமா நீங்க பதிவர்களின் பதிவுகளை படிக்க கிளம்பனும்.
ப்ளாக் டாஷ்போர்ட்டில் பிரசுரமாகியிருக்கும் உங்க பதிவுக்கு கீழே யார் யாரோட பதிவுகள் டாஷ்போர்ட்டில் இருக்கோ. அங்கே எல்லாம் போய்ப் பாருங்க. இம் மாதிரியான கருத்து திணிப்பு மன்னர்களின் பின்னூட்டங்கள் கண்டிப்பாக ஒரே பாணியில இருக்கும். இதில இன்று என் வலையில் என்று கமெண்ட் போடும் பதிவருங்க தொல்லை இருக்கே. ஸப்பா...நீங்களே நொந்து நொந்து அழுவீங்க. இப்படித் தான் ஒரு பதிவர் தன்னோட சோகங்களையெல்லாம் சொல்லி, தன் மனைவிக்கு ஏற்பட்ட நோய் பற்றியும் எழுதியிருந்தாரு. இந்த மாதிரி பதிவினைப் படிக்காது விளம்பரம் கொடுக்கிற பதிவர் ஒருத்தர் அங்கே போயி; "அருமை" அப்படீன்னு ஓர் கமெண்டும் போட்டு, இன்று என் வலையில் "உங்கள் மனைவியை விரட்டியடிக்க என்ன வழி?" அப்படீன்னு போட்டிருக்காரு. அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே திங் பண்ணிப் பாருங்களேன்;-))
என்னோட அனுபவத்தில் எனக்கு நேரம் கிடைத்தால் பதிவினைப் படித்து பின்னூட்டம் போடுவேன். இல்லேன்னா பின்னூட்டம் போடவே மாட்டேன். சில நண்பர்களுக்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போட்டு விட்டு கமெண்ட் போட முடியலை அப்படீன்னு சொல்லிட்டு எஸ் ஆகியிருக்கேன். ஆனால் சில பதிவர்கள் என்னா; பண்ணுவாங்க என்றால் தாங்கள் ஓர் பதிவினை எழுதிப் பிரசுரித்து விட்டு, ஓடியோடி ஏனைய பதிவர்களுக்கு த.ம 1, த.ம 6, த.ம4 அப்படீன்னு நம்பர் கமெண்ட் போடுவாங்க. இம் மாதிரியான கமெண்ட் என்ன அர்த்தத்தில் போடுறாங்க என்று உங்களுக்கு புரியலையா? ஹி..ஹி..அவங்க உங்க பதிவிற்கு தமிழ்மணத்தில் 1ம் ஓட்டு போட்டிருக்காங்க. ஆகவே நீங்களும் அவங்க பதிவிற்கு தமிழ்மணத்தில் ஓட்டுப் போடுங்க என்பதனைச் சொல்லுறாங்க என்று அர்த்தம். இந்த மாதிரியான கமெண்ட் போடும் பதிவர்களுக்கு நீங்களும் த.ம2 அப்படீன்னு கமெண்ட் போட்டு பாருங்க. கெட்டவார்த்தையால திட்டாத குறையா உங்களை திட்டிடுவாங்க. இல்லேன்னா நீங்க போட்ட த.ம6 எனும் கமெண்டை வெளியிடவே மாட்டாங்க.
அடுத்த பாகம் கொஞ்சம் சூடான + சுவையான விடயங்களைக் கொண்ட பாகமாக உங்களை நாடிவரவிருக்கிறது. காத்திருங்கள். எதிர்பார்த்திருங்கள்.
|
111 Comments:
வணக்கம் நிரூபன் மாமா!
இன்னும் சில பதிவர்கள் என்னா பண்ணுவாங்க என்றால், நீங்க பதிவு எழுதிப் பப்பிளிஷ் பண்ணியதும் ஓடோடி வந்து அருமை, கலக்கிட்டீங்க போங்க, சூப்பருங்க, ம்......தொடருங்கள், அப்படீன்னு கமெண்ட் போட்டுக்கிட்டு அடுத்த வலையினை நாடிப் போயி இதே மாதிரியான கமெண்டுகளைப் போடுவாங்க பாருங்க.///////
ம்..... தொடருங்கள்!
த.ம 1
மச்சி, இதெல்லாம் நிறைஞ்சதுதான் பதிவுலகம்! இதுல யார் யாரைக் குற்றம் சாட்டுறது!
பேசாம ஒரு இங்கிலீஸ் பிகரை செட் பண்ணி சாட்டிங்ல 1 மணி நேரம் பேசிக்கிட்டு இரு! எல்லா டென்சனும் குறையும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இல்லேன்னா
குவாட்டர் அடிச்சுட்டு குப்பறக் கெட! ஓல் இஸ் வெல் மச்சி!
வணக்கம்.
முதலில் இந்த பதிவுக்கு கமெண்ட் போடவா வேண்டாமா என்று ஒரு நொடி யோசிக்க வச்சிட்டீங்க..பதிவர்கள் பற்றிய உண்மைகள் இந்த பதிவின் வழி வெளிவருகின்றன.
இந்த தொடரை முடிந்தவரை தொடர்ந்து படித்து வருகிறேன்.நன்றி.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
மச்சி, இதெல்லாம் நிறைஞ்சதுதான் பதிவுலகம்! இதுல யார் யாரைக் குற்றம் சாட்டுறது!
//
நண்பா, இப் பதிவு யாரையும் குறை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல.
பதிவர்கள் குமரன், ஹாலிவூட் ரசிகன் உட்பட இன்னும் சில பதிவுலகின் புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நல்ல பதிவினை எப்படி எழுதலாம் எனும் வகையிலும்,
பதிவுலகினை அடையாளங் கண்டு கொள்வது எப்படி என்பதன் விளக்கமாகவும் தான் இப் பதிவு எழுதப்படுகின்றது.
த.ம. 0
அடுத்த பதிவுக்கு வெயிட் பண்றேன்..சீக்கிரமா வாங்கோ..
த.ம. -0
ம்..... தொடருங்கள்!
thamizh 10 ????????
thamizh 10 ???????
த.ம 4
//நானும் அப்பாவித்தனமாக அவங்க பதிவுக்கும் போயி ஒரு பந்தியினைக் காப்பி பண்ணிட்டு அவங்க பாணியிலே அருமை அப்படீன்னு கமெண்ட் போட்டேனுங்க. என்னா அநியாயம்? என் கமெண்டை அவங்க ரிலீஸ் பண்ணலைங்க. ஸப்பா, அப்போது தான் இந்த கருத்து திணிப்பு பற்றி நன்றாக உணர்ந்து கொண்டேன்//
அருமை.. வாழ்த்துக்கள்.
He...he....
:)
arumai....
Thodarungal.....
Super....
TM..........minus....-1000
again...he...he....
:)
அன்பு சகோ
வணக்கம் நலமா??
ஏதோ முடிவு கட்டித்தான் இறங்கி இருக்கிங்க போலத்தெரியுது.
பதிவுலகத்தை ஒரு வழி பண்ணீட்டுத்தான ஓய்வெடுப்பது என்ற உங்கள் முடிவிற்கு என் பாரண ஆதரவு. ஏற்கெனவே என் பங்கிற்கு ஒரு பதிவு போட்டுட்டேன்.
பதிவுலக நினைவாலயம் எங்கு கட்டலாம் என்று யோசித்து வையுங்கள். தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா?
"இன்று என் வலையில்" ஏராளமான முறை நானும் கொடுத்துள்ளேன் நண்பா..
என்னுடைய தளத்தில் அவ்வாறு நண்பர்கள் இணைப்பு கொடுக்கும் போது நிச்சயம் நான் வெறுப்பு அடைந்தது கிடையாது..அவர்கள் தரும் இணைப்புகளை ஒன்று அப்போதே படிக்க முயற்சிப்பேன்..நேரம் இல்லையெனில் புக்மார்க் செய்து வைத்து கொள்வேன்..அதிக நண்பர்களால் தொடரபடாமல் இருக்கும் பதிவர்களுக்கு இது தேவை என்பது என் கருத்து...
யாரும் வெறுப்படைவார்கள் என்று நான் எண்ணியதும் இல்லை...இல்லையேல் நண்பர்கள் வெளிப்படையாய் இங்கு எந்த தளத்தின் விளம்பர இணைப்புகளும் தரவேண்டாம் என்று தங்கள் comment box க்கு மேல் சொல்லிவிடலாம்...
ஆனால் அதீத விளம்பர போக்காய் எனக்கே தெரிந்ததனால் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டேன்...இப்போதெல்லாம் பதிவை எழுதிவிட்டு திரட்டிகளில் இணைப்பேன்..மின்னஞ்சல் முகவரி தெரிந்த நண்பர்களுக்கு இணைப்பு அனுப்பிவிடுவேன்... ஆனால் புதிய பதிவர்களுக்கு அவ்வாறு செய்வதை என்னால் குற்றம் சொல்லமுடியவில்லை...
// நண்பா, இப் பதிவு யாரையும் குறை சொல்லும் நோக்கில் எழுதப்பட்டது அல்ல.
பதிவர்கள் குமரன், ஹாலிவூட் ரசிகன் உட்பட இன்னும் சில பதிவுலகின் புதிய பதிவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நல்ல பதிவினை எப்படி எழுதலாம் எனும் வகையிலும்,
பதிவுலகினை அடையாளங் கண்டு கொள்வது எப்படி என்பதன் விளக்கமாகவும் தான் இப் பதிவு எழுதப்படுகின்றது. //
தங்கள் முயற்சிக்கு மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள ஒரு தொடர். தொடர வாழ்த்துக்கள்.
ஒரு நிமிடம் நானும் யோசித்துப் பார்த்தேன். இந்தப் பதிவிற்கு கமெண்ட் இடுவதா வேண்டாமாவென்று ... ஏனெனில் பின்னோக்கி யோசித்துப் பார்த்ததில் நானும் அதிகமான பதிவுகளுக்கு “அருமையான பதிவு” , “கலக்கலாக எழுதியிருக்கீங்க” அப்படீன்னு தான் கமெண்ட் போட்டிருக்கேன். ஏனெனில் நிறைய மொக்கை போடும் காமெடி பதிவர்கள் அதிகம். அவர்களின் பதிவுகளுக்கு இவ்வாறு தான் நாமும் வாசித்தோம் என கூற முடியும். ( அதுமட்டுமல்லாமல் எனக்கு வாசித்து முடித்ததும் அந்த சமயத்தில் வேறு சொல்ல ஐடியா தெரிவதில்லை :( ).
அதனால் உங்கள் தொடரில் பதிவுகள் எழுதுவது எப்படி என்பது போல ஒவ்வொரு வகையான பதிவுகளுக்கு எவ்வாறான பின்னூட்டங்களை இடலாம் எனவும் சொன்னால் நல்லாயிருக்கும். :)
யோவ் பாஸ் உங்கள் பதிவினால் உண்மையாகவே பதிவில் ஒரு பந்தி பிடித்திருந்தால் அதை காப்ப்பி பண்ணி கமண்ட் போட ஏலாம இருக்கு எங்கே டெம்ளேட் கமண்ட் என்று நினைத்துவிடுவார்களோ என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதைவிட ஒரு பதிவோ இல்லை கவிதையோ பிடித்திருந்தால் சூப்பர்,அருமை.பிரமாதம்,இப்படி கூட கமண்ட் போட முடியாமல் இருக்கு இப்படி கமண்ட் போட்டால் கட்டாயம் டெம்ளேட் கமண்ட் என்றுதான் நினைப்பார்கள் இதற்கு மாற்றீடாக ஒரு பதிவு பிடித்திருந்தால் சுருக்கமாக எப்படி கமண்ட் போடுவது என்றும் சொல்லுமய்யா.
தமிழ்மணம்-7 ஹி.ஹி.ஹி.ஹி....
சகோ நலமா? நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பதிவு போடப்போகிறேன்.ஹேஹே!அப்புறம் முதல் பாகம் படித்த நினைவு.மற்றவற்றை அப்புறம் படிக்கிறேன்.பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்துமோ?
// யோவ் பாஸ் உங்கள் பதிவினால் உண்மையாகவே பதிவில் ஒரு பந்தி பிடித்திருந்தால் அதை காப்ப்பி பண்ணி கமண்ட் போட ஏலாம இருக்கு எங்கே டெம்ளேட் கமண்ட் என்று நினைத்துவிடுவார்களோ என்று //
அதே அதே ...
முக்கியமான விஷயம் த,ம.7.முதன்முறையாக பதிவுலகில் த.ம 7 என்று போடவைத்து விட்டீர்களே!
தமன்னா-1
ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும்..
//அடுத்த பாகம் கொஞ்சம் சூடான + சுவையான விடயங்களைக் கொண்ட பாகமாக உங்களை நாடிவரவிருக்கிறது. காத்திருங்கள். எதிர்பார்த்திருங்கள். //
இப்பூடித்தான் போடுறீங்க, ஆனா இம்முறை சூடு பத்தலியே நிரூபன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ஹன்சிகா-2
அஞ்சலி-3
இந்த இன்ஸ்ட்லி, தமிழ்மணம், திரைமணம், டான்ஸ்ஸ்.. இப்பூடியானதில எல்லாம் முதலாவதா வந்தா பணப்பரிசேதும் கிடைக்குமோ நிரூபன்? இல்ல ஒரு டவுட்டு:))..
சொன்னா நாங்களும் ஒழுங்கா வோட் பண்ணுவமில்ல:)).
”இதுவும் கடந்து போகும்”
”எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
”இறைவா எல்லோருக்கும் நல்ல கிட்னியைக் கொடப்பா”
பதிவுலகை..கிழி...கிழியென்று கிழிக்கும் நிரூபன் அவர்களே!காமெடிக்காக நான் கமெண்ட் போட்டாலும்...நிறைய விசயம் தெரிந்துகொண்டேன்....
நான் போயிட்டுப் பிறகு வாறேன்.. மற்றாக்களுக்கும் பின்னூட்டம்போட சந்தர்ப்பம் கொடுக்கோணுமெல்லோ:)).. அந்த நல்லெண்ணத்திலதான்..:)).
இன்று என் வலையில்
“.....................”:).
விழிப்புணர்வு பதிவு நல்லதுதான்.. முந்தைய பதிவொன்றில் நீங்கள் இப்படி செய்யும் ஒவ்வொருவரையும் தோலுரித்துக்காட்டி இருந்தீர்கள்.. இப்படி நேரடியாக பொதுவெளியில் குறிப்பிடும்போது அவர்களை பொதுவாக யாரும் படிக்க மாட்டார்கள்.. அவர்களுடைய பதிவை படிக்காமல் இவர் ஓர் டம்மி என்று பொது எண்ணம் உருவாகிவிடும்...
புதிய பதிவர் ஒருவர் தன் எழுத்துக்களை பிறரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஒரு கொலை குற்றமாக பார்க்கவேண்டாமே..
அருமை!!.. சூப்பர்! போன்ற சால்ரா பின்னூட்டங்கள் எழுத்தாளனை மழுங்கடித்துவிடும் என்ற உங்களுடைய கருத்துடன் எனக்கு முழு உடன்பாடுதான்.. ஆனால் இந்த கமெண்ட்ஸ் மூலம் மார்கெட்டிங் செய்பவர்களுக்கு மாற்று வழியை ஏதாவது சொல்லலாமே!!
௧. ஒரு பதிவை பற்றிய உண்மையான விமர்சன கருத்தை வைக்கும் போது.. அந்த எழுத்தாளனையும் செம்மையாக்கும், கருத்திடுபவர்களுக்கும் புதிய வாசகர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்
௨. உண்மையான கருத்துகளுடன் "நேரம் கிடைக்கும்போது என்னுடைய பதிவையும் பாருங்கள்" என்பதுபோலான தாழ்மையான அழைப்பு விடுக்கலாம் ..என்பது போலான யோசனைகளை தெரிவிக்கலாம்..
அப்படியே குட்டிப்பையன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லிடுங்கோ!! நான் மீண்டும் இங்கே வந்து பார்த்து தெரிந்து கொள்கிறேன்!!
பதிவின் குறிப்பிட்ட பகுதி பிடித்திருந்தால் அதனை copy செய்து கருத்தளிப்பதில் என்ன தவறு இருக்கிறது அன்பரே.
Hh
சி.பிரேம் குமார் said...
பதிவின் குறிப்பிட்ட பகுதி பிடித்திருந்தால் அதனை copy செய்து கருத்தளிப்பதில் என்ன தவறு இருக்கிறது அன்பரே.//
நீங்கள் தவறாகப் புரிந்து விட்டீர்கள். இத் தொடர் பதிவின் நான்காம் பாகத்தில் விளக்கமாகச் சொல்லியிருக்கேன்.
பிடித்திருக்குன் ஓர் பதிவின் ஒரு பந்தியினை முழுமையாக காப்பி செய்து அருமை, சூப்பர், கலக்கிட்டீங்க அப்படி தொடர்ச்சியாக ஒரே நபர் எல்லோர் வலைக்கும் பின்னூட்டம் போடும் போது உங்களால் ஏற்க முடியுமா?
ஓர் எளிய உதாரணம், போர் இடம் பெறுகையில் குண்டு வீச்சினால் கருகி குடிசை அழிந்தது என்று ஓர் பதிவர் உணர்வைக் கவியாக்கி எழுதியிருக்கும் போது, மேற்படி வரிகளைக் காப்பி செஞ்சு அருமை, சூப்பர் அப்படீன்னு போடுவது தவறில்லையா?
இதனைத் தான் நான் இங்கே சொல்லியிருக்கேன்.
@குடிமகன்
நீங்க புதிய பதிவர்ன்னு நினைக்கிறேன்.நீங்க போடுற பதிவுக்கு கமெண்ட் போடுற பதிவர்களை விட்டுவிடுங்க.....அவங்க நான் உட்பட எல்லாம் மொய்க்கு..மொய்தான் அது ஒரு கலாச்சாரமா மாறிடுச்சு!
அப்புறம் கமெண்ட்ல விளம்பரம் செய்யனும் என்கிற அவசியம் கிடையாது..News Letter போடலாம் News Letter ல் வரும் அனைத்து பதிவுகளுக்கும் என் ஓட்டு கண்டிப்பாக உண்டு.
அப்புறம் தொடர்ந்து எழுதும் போது எல்லாரும் அருமை...நன்று எனும் போது நாகரிகமாக நம் பதிவில் உள்ள குறைகளை சுட்டி காட்டுவார்கள் பாருங்க அவங்கதான் உங்களுடைய உண்மையான வாசகர்கள்
அல்லது மெயிலிலோ சேட்லையோ உங்க பதிவு நல்லாயிருக்குங்க என்று சொல்லுறாங்க பாருங்க....அவங்கதான் உண்மையான ரசனையாளர்கள்.
அவர்களுக்காக மட்டும் எழுதுங்க.
அதே மாதிரி கண்ட வலைதளங்களுக்கு உடனே பாலோவர் ஆகிறாதிங்க குறைந்த பட்சம் பத்து பதிவாவது படித்துப்பார்த்து பிறகு பாலோவர் ஆகுங்க...என் அனுபவம் என்னவென்றால் ஒருத்தர் சூப்பரா எழுதிக்கொண்டு இருந்தார் நானும் தொடர்ந்து படித்து கொண்டு இருந்தேன் கடைசியில் பார்த்தா அத்தனையும் காப்பி போஸ்ட்...எதாவது புக்கிலோ காதால் கேட்டோ பதிவிடுவது தவறு கிடையாது பதிவர்களிடம் இருந்து திருடியது...அதைப் போன்றவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
த.ம.unlucky 13!!ஹா.ஹா.
சும்மா கலாய்க்கிறீங்க!
கமென்ட் போடலாமா? வேணாமா?
நிரூ...நானும் உள்ளேன் !
தொடர் பதிவு சிறப்பாகப் போகிறது
நல்ல வழி காட்டியாகவும் உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 16
பதிவுலக டீச்சர் நிருபனுக்கு வணக்கம் ஏதோ ஒரு முடிவெடுத்து எழுதுரமாதிரி தெரியுது ம்ம் தொடருங்கள்
த.ம.46!!!!!ha!ha!haa!!!!!!
வணக்கம் நிரூபன்!ச்சும்மா!!!ஒரு தேர்ந்த ஆசிரியர் போல் பதிவு எழுதுவது எப்படி,ஹிட் அடிப்பது எப்படி,டெம்பிளேட் கமென்ட் போடுவது எப்படி என்றெல்லாம் விபரமாக எழுதி,ஒளிவு,மறைவுக்கே இடமின்றி பதிவுலகம் இருக்க வேண்டும் என்று உங்களிடமிருந்து புதிதாய் வரும் பதிவர்களும் அறிந்து கொள்ள வகை செய்திருக்கிறீர்கள்.ஸ்பெஷல் நன்றி உங்களுக்கு.தொடருங்கள்,வாழ்த்துக்கள்!(அப்பாடி தப்பீட்டன்!)
இப்படித் தான் ஒரு பதிவர் தன்னோட சோகங்களையெல்லாம் சொல்லி, தன் மனைவிக்கு ஏற்பட்ட நோய் பற்றியும் எழுதியிருந்தாரு. இந்த மாதிரி பதிவினைப் படிக்காது விளம்பரம் கொடுக்கிற பதிவர் ஒருத்தர் அங்கே போயி; "அருமை" அப்படீன்னு ஓர் கமெண்டும் போட்டு, இன்று என் வலையில் "உங்கள் மனைவியை விரட்டியடிக்க என்ன வழி?" அப்படீன்னு போட்டிருக்காரு./////
அட..க், கறுமமே..!!!
பதிவு ஆரம்பித்து கனகாலமாயினும்,எழுதியதும் குறைவு,படிச்சு மினக்கெட்டதும் குறைவுதான்.உங்களின் இந்த பகிர்வுகள் உதவியாக இருக்கு.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
ம்..... தொடருங்கள்!
//
நன்றிங்க சார்.
@ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
த.ம 1
//
in 1948 .... I don't know what can i say
@Kumaran
வணக்கம்.
முதலில் இந்த பதிவுக்கு கமெண்ட் போடவா வேண்டாமா என்று ஒரு நொடி யோசிக்க வச்சிட்டீங்க..பதிவர்கள் பற்றிய உண்மைகள் இந்த பதிவின் வழி வெளிவருகின்றன.
இந்த தொடரை முடிந்தவரை தொடர்ந்து படித்து வருகிறேன்.நன்றி.
//
ரொம்ப நன்றி குமரன்,
உங்களைப் போன்ற புதிய பதிவர்களுக்கும், இளைய தலைமுறைக்கும் பதிவுலகின் சுத்துமாத்துக்களைச் சொல்லிக் கொடுத்து ஆரோக்கியமான பதிவுலகம் உருவாக என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்பது தான் எனது ஆவல்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
த.ம. 0
//
ரொம்ப நன்றி தல.
உங்க கருத்துக்கள் என்னை மேலும் எழுதத் தூண்டுகிறது.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Kumaran
அடுத்த பதிவுக்கு வெயிட் பண்றேன்..சீக்கிரமா வாங்கோ..
//
இதோ வந்திட்டமில்லே/
@Riyas
த.ம. -0
//
புல்லரிக்குது சேர்
@Riyas
ம்..... தொடருங்கள்!
//
சான்ஸே இல்லைங்க.
@angelin
thamizh 10 ???????
//
அது கொஞ்ச நேரமா ஒர்க் ஆகலைங்க.
@Riyas
த.ம 4
/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Riyas
அருமை.. வாழ்த்துக்கள்.
//
கலக்கிட்டீங்க போங்க.
@NAAI-NAKKSHe...he....
:)
arumai....
Thodarungal.....
Super....
TM..........minus....-1000
again...he...he....
:)//
அண்ணே,
அந்த ஆன்லைன் பார்ட்டியை தவற விட்டீங்களே..
@A.R.ராஜகோபாலன்
அன்பு சகோ
வணக்கம் நலமா??
ஏதோ முடிவு கட்டித்தான் இறங்கி இருக்கிங்க போலத்தெரியுது.
//
அப்படி ஒன்னும் இல்லைங்க/
@பழனி.கந்தசாமி
பதிவுலகத்தை ஒரு வழி பண்ணீட்டுத்தான ஓய்வெடுப்பது என்ற உங்கள் முடிவிற்கு என் பாரண ஆதரவு. ஏற்கெனவே என் பங்கிற்கு ஒரு பதிவு போட்டுட்டேன்.
பதிவுலக நினைவாலயம் எங்கு கட்டலாம் என்று யோசித்து வையுங்கள். தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா?
//
ஆமாம் ஐயா.
தங்களின் அந்தப் பதிவினைப் படித்தேன்.
விரிவான கமெண்ட் போட வருகிறேன்.
பதிவுலக நினைவாலயத்தினை இரு நாடுகளுக்கும் பொதுவான இடமான தூத்துக்குடி /இராமேஸ்வரத்தில் வைப்போம் ஐயா.
@மயிலன்
"இன்று என் வலையில்" ஏராளமான முறை நானும் கொடுத்துள்ளேன் நண்பா..
என்னுடைய தளத்தில் அவ்வாறு நண்பர்கள் இணைப்பு கொடுக்கும் போது நிச்சயம் நான் வெறுப்பு அடைந்தது கிடையாது..அவர்கள் தரும் இணைப்புகளை ஒன்று அப்போதே படிக்க முயற்சிப்பேன்..நேரம் இல்லையெனில் புக்மார்க் செய்து வைத்து கொள்வேன்..அதிக நண்பர்களால் தொடரபடாமல் இருக்கும் பதிவர்களுக்கு இது தேவை என்பது என் கருத்து...
யாரும் வெறுப்படைவார்கள் என்று நான் எண்ணியதும் இல்லை...இல்லையேல் நண்பர்கள் வெளிப்படையாய் இங்கு எந்த தளத்தின் விளம்பர இணைப்புகளும் தரவேண்டாம் என்று தங்கள் comment box க்கு மேல் சொல்லிவிடலாம்...//
அன்பிற்குரிய சகோதரன் மயிலன்.
நான் உங்களைத் தாக்கி இப் பதிவில் எந்தக் கருத்தினையும் முன் வைக்கவில்லை.
நீங்கள், மதிசுதா உட்பட இன்னும் சில நண்பர்கள் பதிவினைப் படித்து கமெண்ட் போட்ட பின்னர் தான் லிங் கொடுத்து விட்டுப் போயிருக்கிறீங்க.
நான் இதனை அவதானித்தும் இருக்கிறேன்.
நிச்சயமாய் மேற்படி கருத்துக்கள் உங்களைத் தாக்கும் நோக்கில் எழுதப்படவில்லை.
ஆனால்....
நீங்கள் சொல்லும் லிங் போடும் நபர்களின் கருத்துக்களுக்கும்,
உங்களின் பின்னூட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினை நீங்கள் இதுவரை அறியவில்லையே நண்பா?
நீங்கள் பதிவினைப் படித்து விட்டு,. கமெண்ட் போடுவதனைப் போலவா உங்கள் வலைக்கு வந்து பதிவு ரிலீஸ் ஆகியதும்
இன்று என் வலையில் என லிங் கொடுப்போர் கமெண்ட் போட்டு விட்டுச் சொல்லுகிறார்கள்?
@மயிலன்
விளம்பர இணைப்புகளும் தரவேண்டாம் என்று தங்கள் comment box க்கு மேல் சொல்லிவிடலாம்...//
நண்பா,
நான் விளம்பர இணைப்புக் கொடுப்போருக்கு எதிரி கிடையாது.
எல்லாப் பதிவர்களுடைய பதிவுகளும் இலகுவில் பதிவுலகில் உள்ளோரால் அறியப்பட வேண்டும் என நினைப்பவன் நான்.
ஆனால் விளம்பர இணைப்போடு சேர்த்து படிவின் ஸ்திரத்தன்மையினைக் குலைக்கும் நோக்கில்
பதிவிற்கு தொடர்பில்லாது சிலர் கமெண்ட் போடுகிறார்களே!
அவர்களை எப்படி ஐயா கையாள்வது?
இதனால் தான் சில வேளைகளில் கடுப்பாக வேண்டியிருக்கிறது.
@மயிலன்
ஆனால் அதீத விளம்பர போக்காய் எனக்கே தெரிந்ததனால் ஒரு கட்டத்தில் நிறுத்திக்கொண்டேன்...இப்போதெல்லாம் பதிவை எழுதிவிட்டு திரட்டிகளில் இணைப்பேன்..மின்னஞ்சல் முகவரி தெரிந்த நண்பர்களுக்கு இணைப்பு அனுப்பிவிடுவேன்... ஆனால் புதிய பதிவர்களுக்கு அவ்வாறு செய்வதை என்னால் குற்றம் சொல்லமுடியவில்லை...
//
பதிவினைப் படித்து விட்டு,
பின்னூட்டத்துடன்
விளம்பர இணைப்பு கொடுக்கலாம் அது தவறில்லை நண்பா.
அதே போல மின்னஞ்சல் மூலமும் அனுப்புவது இன்னும் சிறந்தது.
ஆனால் நான் இங்கே புதிய பதிவர்கள் விளம்பர இணைப்பு கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை
பதிவுலகில் பல வருடங்களாக இருக்கும்
பதிவுலகினைத் தின்று துப்பிய நபர்கள் தான் இப்போது அதிகமாக விளம்பர இணைப்புக்களை பின்னூட்டம் ஊடாக போடுகின்றார்கள்.
புதிய பதிவர்கள் அவ்வாறு செய்வதில்லை சகோதரா.
மாப்ளே, ரைட்டு... லெப்ட்... டாப்... பாட்டம் இப்படி கமென்ட் போடறவங்கள பத்தி அடுத்த பாகமா?
@ஹாலிவுட்ரசிகன்
ஒரு நிமிடம் நானும் யோசித்துப் பார்த்தேன். இந்தப் பதிவிற்கு கமெண்ட் இடுவதா வேண்டாமாவென்று ... ஏனெனில் பின்னோக்கி யோசித்துப் பார்த்ததில் நானும் அதிகமான பதிவுகளுக்கு “அருமையான பதிவு” , “கலக்கலாக எழுதியிருக்கீங்க” அப்படீன்னு தான் கமெண்ட் போட்டிருக்கேன். ஏனெனில் நிறைய மொக்கை போடும் காமெடி பதிவர்கள் அதிகம். அவர்களின் பதிவுகளுக்கு இவ்வாறு தான் நாமும் வாசித்தோம் என கூற முடியும். ( அதுமட்டுமல்லாமல் எனக்கு வாசித்து முடித்ததும் அந்த சமயத்தில் வேறு சொல்ல ஐடியா தெரிவதில்லை :( ).
//
நண்பா,
பதிவினைப் படித்து முடித்து விட்டு இப்படி கமெண்ட் போடுவது தவறில்லை.
ஆனால் ஒரு சிலர் பதிவு ரிலீஸ் ஆகிய உடனே வந்து
ம்...
அருமை...
சூப்பர்
ரைட்டு அப்படீன்னு கமெண்ட் போட்டு புதிய பதிவர்கள் காதில் பூச் சுத்துகிறார்களே.
அவதானிக்கவில்லையா?
மாப்ளே, பதிவை படிக்காது கமென்ட் போடுவது பொருந்தாவிட்டால் அது தவறுதான்......
@ஹாலிவுட்ரசிகன்அதனால் உங்கள் தொடரில் பதிவுகள் எழுதுவது எப்படி என்பது போல ஒவ்வொரு வகையான பதிவுகளுக்கு எவ்வாறான பின்னூட்டங்களை இடலாம் எனவும் சொன்னால் நல்லாயிருக்கும். :)
//
அடப் பாவி..
இது வேறையா?
ஒவ்வொரு பதிவினையும் படித்து முடித்து உள்வாங்கி சிறிய சுருக்கமான பின்னூட்டத்தினை எழுதுவது தப்பேயில்லை சகோ.
ஆகவே ஒவ்வொரு பதிவுக்குமான பின்னூட்டமும் பதிவரின் மனநிலையினைப் பொறுத்தே தங்கியுள்ளது.
@குட்டிப்பையன்
யோவ் பாஸ் உங்கள் பதிவினால் உண்மையாகவே பதிவில் ஒரு பந்தி பிடித்திருந்தால் அதை காப்ப்பி பண்ணி கமண்ட் போட ஏலாம இருக்கு எங்கே டெம்ளேட் கமண்ட் என்று நினைத்துவிடுவார்களோ என்று அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//
நண்பா..
பதிவு ரிலீஸ் ஆகி...ஒரு நிமிடம் ஆக முன்னர் இப்படி கமெண்ட் போட்டால் தான் நீங்கள் கூறுவது போல நினைப்பார்கள்.
ஆனாலும் பதிவினை உள்வாங்கி சுருக்கமாக கமெண்ட் போடலாம் அல்லவா?
உன் பதிவுகள் நிறைய படித்துள்ளேன்.... ஆனால் கமென்ட் போட்டதும் இல்லை. ஓட்டு போட்டதும் இல்லை...
ஏனெனில் அந்த பதிவுகளுக்கு என்னால் கமென்ட்க்கான வார்த்தைகளை டைப் செய்வதை விட சாட்டில் பேசி விடலாம் என்றே தோணும்.....
@குட்டிப்பையன்
அதைவிட ஒரு பதிவோ இல்லை கவிதையோ பிடித்திருந்தால் சூப்பர்,அருமை.பிரமாதம்,இப்படி கூட கமண்ட் போட முடியாமல் இருக்கு இப்படி கமண்ட் போட்டால் கட்டாயம் டெம்ளேட் கமண்ட் என்றுதான் நினைப்பார்கள் இதற்கு மாற்றீடாக ஒரு பதிவு பிடித்திருந்தால் சுருக்கமாக எப்படி கமண்ட் போடுவது என்றும் சொல்லுமய்யா.
//
இருக்கவே இருக்கு,
சிம்பிள் & சுவீட் வழி.
பதிவினை உள்வாங்கி.
இந்தப் பொருளில் அருமையான பதிவினைத் தந்திருக்கிறீங்க என்று கமெண்ட் போட்டாப் போச்சு.
@குட்டிப்பையன்
தமிழ்மணம்-7 ஹி.ஹி.ஹி.ஹி....
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நன்றிங்க.
@shanmugavel
சகோ நலமா? நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் பதிவு போடப்போகிறேன்.ஹேஹே!அப்புறம் முதல் பாகம் படித்த நினைவு.மற்றவற்றை அப்புறம் படிக்கிறேன்.பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்துமோ?
//
ஆமாம் அண்ணா.
சிலருக்கு சங்கடத்தினையும்.
புதிய பதிவர்களுக்கு நல்ல பதிவுகளை, பதிவர்களை அடையாளம் காண்பதற்கான சந்தோசத்தினையும் கொடுக்கும்.
@shanmugavel
முக்கியமான விஷயம் த,ம.7.முதன்முறையாக பதிவுலகில் த.ம 7 என்று போடவைத்து விட்டீர்களே!
//
நன்றிங்க.
@veedu
தமன்னா-1
//
குஷ்பூ/...
@athira
ஒவ்வொரு தலைப்பின் முடிவிலும்..
//அடுத்த பாகம் கொஞ்சம் சூடான + சுவையான விடயங்களைக் கொண்ட பாகமாக உங்களை நாடிவரவிருக்கிறது. காத்திருங்கள். எதிர்பார்த்திருங்கள். //
இப்பூடித்தான் போடுறீங்க, ஆனா இம்முறை சூடு பத்தலியே நிரூபன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
//
அக்கா அவசரத்தில பதிவினை எழுதிட்டு போயிட்டேன்.
கண்டிப்பாக அடுத்த பாகம் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும்/
@veedu
ஹன்சிகா-2
//
கௌதமி
பதிவு ரிலீஸ் ஆகி...ஒரு நிமிடம் ஆக முன்னர் இப்படி கமெண்ட் போட்டால் தான் நீங்கள் கூறுவது போல நினைப்பார்கள்.///
மாப்ளே நாம செங்கோவிக்கு பதிவு போட்ட ஒரு நிமிசத்துக்குள்ள எத்தன கமென்ட் போட்டிருக்கோம்...
அதை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது...
அந்த பதிவுகள் பற்றி சாட்டில் பேசியிருக்கேன்... அந்த பதிவுக்கு தேவையான படங்கள் எடுத்து தந்திருக்கேன்...
ஆகையால் rapid கமென்ட் போட முடிகிறது.....
@veedu
அஞ்சலி-3
//
அம்பிகா.
நிரூபன் said...
@veedu
ஹன்சிகா-2
//
கௌதமி///
கௌதமி மகள் பேரு என்னான்னு சொல்லுங்கய்யா...?
@athira
இந்த இன்ஸ்ட்லி, தமிழ்மணம், திரைமணம், டான்ஸ்ஸ்.. இப்பூடியானதில எல்லாம் முதலாவதா வந்தா பணப்பரிசேதும் கிடைக்குமோ நிரூபன்? இல்ல ஒரு டவுட்டு:))..
சொன்னா நாங்களும் ஒழுங்கா வோட் பண்ணுவமில்ல:)).//
அக்கா, நீங்கள் படிக்கும் பதிவுகளில்
உங்களுக்கு பிடித்த பதிவிற்உ
இண்ட்லி, தமிழ்மணம்,
உடான்ஸ், இவற்றில் ஓட்டுப் போட்டால்
அதிக ஓட்டுக்களை வாங்கும் பதிவுகளின் தரவரிசையில்
உங்களுக்குப் பிடித்த பதிவும்
அதிக ஓட்டு வாங்குவதன் மூலம் வரக் கூடும்.
ஸோ....இப்படி அதிக ஓட்டுக்களைப் பெறும் பதிவினை படிக்க வாசகர்கள் அதிகமாக வருவாங்க.
அதற்காகத் தான் ஓட்டுப் போடுறாங்க/
@athira
”இதுவும் கடந்து போகும்”
//
Art is long, Life is short.
@athira
”எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
//
Nothing is impossible.
@athira
”இறைவா எல்லோருக்கும் நல்ல கிட்னியைக் கொடப்பா”
//
I need a good parts of body god.
@veedu
பதிவுலகை..கிழி...கிழியென்று கிழிக்கும் நிரூபன் அவர்களே!காமெடிக்காக நான் கமெண்ட் போட்டாலும்...நிறைய விசயம் தெரிந்துகொண்டேன்....
//
இன்னும் நிறைய விடயங்கள் லைனில இருக்கு நண்பா.
@athira
நான் போயிட்டுப் பிறகு வாறேன்.. மற்றாக்களுக்கும் பின்னூட்டம்போட சந்தர்ப்பம் கொடுக்கோணுமெல்லோ:)).. அந்த நல்லெண்ணத்திலதான்..:)).
இன்று என் வலையில்
“.....................”:).
அப்புறம் பதிலுக்கு நீங்க நேற்றையப் போல நீண்டாஆஆஆஆஆஆஆஆஆ
பின்னூட்டம் போடலை.
நான் தப்பிச்சிட்டேன்.
ஹி ஹி ஹி ஹி
பேசாம என்னோட கமெண்டை பிரெஞ்ச்ல போடப்போறேன்...ஒரு ப்ராப்ளம்...நமக்கு தான் பிரெஞ்ச் தெரியாதே....அவ்வ்வ்வ்வ்
@குடிமகன்
விழிப்புணர்வு பதிவு நல்லதுதான்.. முந்தைய பதிவொன்றில் நீங்கள் இப்படி செய்யும் ஒவ்வொருவரையும் தோலுரித்துக்காட்டி இருந்தீர்கள்.. இப்படி நேரடியாக பொதுவெளியில் குறிப்பிடும்போது அவர்களை பொதுவாக யாரும் படிக்க மாட்டார்கள்.. அவர்களுடைய பதிவை படிக்காமல் இவர் ஓர் டம்மி என்று பொது எண்ணம் உருவாகிவிடும்...
புதிய பதிவர் ஒருவர் தன் எழுத்துக்களை பிறரிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதை ஒரு கொலை குற்றமாக பார்க்கவேண்டாமே..
//
வாங்கோ நண்பா.
புதிய பதிவரைப் பற்றி நாம் இங்கே பேசவில்லை
பதிவுலகில் பல மாதங்களாக இருக்கும், வருடங்களாக இருக்கும் சில சீனியர் விளம்பரதாரப் பதிவர்கள் தான் பதிவுடன் சேர்த்து லிங் கொடுத்து செல்கிறார்கள்.
எனக்கு புதிய பதிவர்கள் மீது எந்த வெறுப்பும் கிடையாது.
ஆகவே நான் அவர்களைக் கொலைக் குற்றமாகப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை நண்பா.
புதிய பதிவர்களில் அதிகம் பேர் பதிவினைப் படித்துத் தான் பதிவினை உள்வாங்கி கருத்துப் போடுகிறார்கள்.
அவர்கள் லிங் கொடுத்தால் நான் நிச்சயம் வரவேற்பேன்.
ஆனால் ஒரு சிலர் பதிவு ரிலீஸ் ஆகியதும் எல்லாப் பதிவர்கள் வலைக்கும் போய் லிங் போடுகிறார்களே...
அவர்களை எந்த நோக்கத்தில் நீங்கள் பார்ப்பீங்க?
@குடிமகன்
அருமை!!.. சூப்பர்! போன்ற சால்ரா பின்னூட்டங்கள் எழுத்தாளனை மழுங்கடித்துவிடும் என்ற உங்களுடைய கருத்துடன் எனக்கு முழு உடன்பாடுதான்.. ஆனால் இந்த கமெண்ட்ஸ் மூலம் மார்கெட்டிங் செய்பவர்களுக்கு மாற்று வழியை ஏதாவது சொல்லலாமே!!
..//
நண்பா,. மாற்று வழி ஏலவே சொல்லியிருக்கேன்.
பதிவினைப் படித்து விட்டு,
சுருக்கமாக, சுவையாக கமெண்ட் போடலாமே.
ஏன் அருமை, சூப்பர் என்று பதிவு ரிலீஸ் ஆகி
திரட்டிகளில் இணைக்க முன்பாகவே சில பதிவர்கள் கமெண்ட் போட வேண்டும்?
@குடிமகன்
௧. ஒரு பதிவை பற்றிய உண்மையான விமர்சன கருத்தை வைக்கும் போது.. அந்த எழுத்தாளனையும் செம்மையாக்கும், கருத்திடுபவர்களுக்கும் புதிய வாசகர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்
௨. உண்மையான கருத்துகளுடன் "நேரம் கிடைக்கும்போது என்னுடைய பதிவையும் பாருங்கள்" என்பதுபோலான தாழ்மையான அழைப்பு விடுக்கலாம் ..என்பது போலான யோசனைகளை தெரிவிக்கலாம்..
அப்படியே குட்டிப்பையன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லிடுங்கோ!! நான் மீண்டும் இங்கே வந்து பார்த்து தெரிந்து கொள்கிறேன்!!
///
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கேன் என நினைக்கிறேன் நண்பா.
நீங்கள் முன் வைத்திருக்கும் ஆலோசனையும் அருமை. பார்ப்போம் இந்த ஜால்ரா பதிவர்கள் படித்து திருந்துகிறார்களா என்று-)))
@சென்னை பித்தன்
த.ம.unlucky 13!!ஹா.ஹா.
சும்மா கலாய்க்கிறீங்க!
//
நன்றி ஐயா.
@சசிகுமார்
கமென்ட் போடலாமா? வேணாமா?
//
அதான் இப்போ கமெண்ட் போட்டுட்டீங்க எல்லே.
அவ்வ்வ்
@ஹேமா
நிரூ...நானும் உள்ளேன் !
//
நன்றி அக்கா.
@Ramani
தொடர் பதிவு சிறப்பாகப் போகிறது
நல்ல வழி காட்டியாகவும் உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 16 //
நன்றி ஐயா.
@கோவிந்தராஜ்,மதுரை.
பதிவுலக டீச்சர் நிருபனுக்கு வணக்கம் ஏதோ ஒரு முடிவெடுத்து எழுதுரமாதிரி தெரியுது ம்ம் தொடருங்கள்
//
நான் பதிவுலக டீச்சர் இல்லை சகோ.
நானும் உங்களைப் போல சாதா ஆளு தான்.
@Yoga.S.FR
த.ம.46!!!!!ha!ha!haa!!!!!!
//
@$$*$$*$*#**#*
@Yoga.S.FR
வணக்கம் நிரூபன்!ச்சும்மா!!!ஒரு தேர்ந்த ஆசிரியர் போல் பதிவு எழுதுவது எப்படி,ஹிட் அடிப்பது எப்படி,டெம்பிளேட் கமென்ட் போடுவது எப்படி என்றெல்லாம் விபரமாக எழுதி,ஒளிவு,மறைவுக்கே இடமின்றி பதிவுலகம் இருக்க வேண்டும் என்று உங்களிடமிருந்து புதிதாய் வரும் பதிவர்களும் அறிந்து கொள்ள வகை செய்திருக்கிறீர்கள்.ஸ்பெஷல் நன்றி உங்களுக்கு.தொடருங்கள்,வாழ்த்துக்கள்!(அப்பாடி தப்பீட்டன்!)
//
ஐயா உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.
@சுவடுகள்
அட..க், கறுமமே..!!!
//
இதனை விடக் கொடுமைகளும் இடம்பெற்றிருக்கிறது பாஸ்.
@சுவடுகள்
பதிவு ஆரம்பித்து கனகாலமாயினும்,எழுதியதும் குறைவு,படிச்சு மினக்கெட்டதும் குறைவுதான்.உங்களின் இந்த பகிர்வுகள் உதவியாக இருக்கு.
//
அப்படீன்னா குரு தட்சணை கொடுத்திட்டு போங்க.
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, ரைட்டு... லெப்ட்... டாப்... பாட்டம் இப்படி கமென்ட் போடறவங்கள பத்தி அடுத்த பாகமா?
//
இல்லே மச்சி,
அடுத்த பாகம் காப்பி பேஸ்ட் பதிவு போடுறவங்களைப் பத்தியது.
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே, பதிவை படிக்காது கமென்ட் போடுவது பொருந்தாவிட்டால் அது தவறுதான்......
//
உண்மை தான் நண்பா.
@தமிழ்வாசி பிரகாஷ்
உன் பதிவுகள் நிறைய படித்துள்ளேன்.... ஆனால் கமென்ட் போட்டதும் இல்லை. ஓட்டு போட்டதும் இல்லை...
ஏனெனில் அந்த பதிவுகளுக்கு என்னால் கமென்ட்க்கான வார்த்தைகளை டைப் செய்வதை விட சாட்டில் பேசி விடலாம் என்றே தோணும்.....
//
நன்றி ஐயா.
நாம ஓர் நாள் பேசுவோம்.
@தமிழ்வாசி பிரகாஷ்
மாப்ளே நாம செங்கோவிக்கு பதிவு போட்ட ஒரு நிமிசத்துக்குள்ள எத்தன கமென்ட் போட்டிருக்கோம்...
அதை நீங்க தப்பா எடுத்துக்க கூடாது...
அந்த பதிவுகள் பற்றி சாட்டில் பேசியிருக்கேன்... அந்த பதிவுக்கு தேவையான படங்கள் எடுத்து தந்திருக்கேன்...
ஆகையால் rapid கமென்ட் போட முடிகிறது.....
//
\
யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்படி நானும் செங்கோவி பதிவிற்கு கமெண்ட் போட்டிருக்கேன்,
இங்கே எங்கே ஐயா உம்மைப் பத்தி சொல்லியிருக்கேன்,
ஏன் இந்த கொல வெறி.
@தமிழ்வாசி பிரகாஷ்
ஹன்சிகா-2
//
கௌதமி///
கௌதமி மகள் பேரு என்னான்னு சொல்லுங்கய்யா...?
//
ஹே...ஹே..
அவங்க தான் இப்போ நம்ம தனுஷ் கூட ஆட்டம் போட்டுக்கொண்டிருக்காங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@ரெவெரி
பேசாம என்னோட கமெண்டை பிரெஞ்ச்ல போடப்போறேன்...ஒரு ப்ராப்ளம்...நமக்கு தான் பிரெஞ்ச் தெரியாதே....அவ்வ்வ்வ்வ்
//
அண்ணே. நீங்க என்ன மொழியில வேண்ணாலும் கமெண்ட் போடலாம்.
நாம அதை கூகிள் ட்ரான்ஷ்லேட்டர் யூஸ் பண்ணி மொழிபெயர்ப்போமில்லே;-)))
நிரூபன் said...
இங்கே எங்கே ஐயா உம்மைப் பத்தி சொல்லியிருக்கேன்,
ஏன் இந்த கொல வெறி.////
அப்போ பதிவர்களுக்கு டிப்ஸ்ன்னு சொல்லிட்டு பதிவர்களுக்கு உள்குத்து தொடரா போடுறிங்க?????
ஹா.. ஹா.....
கோர்த்து விட்டாச்சு.....
நிரூபன் said...
@தமிழ்வாசி பிரகாஷ்
ஹன்சிகா-2
//
கௌதமி///
கௌதமி மகள் பேரு என்னான்னு சொல்லுங்கய்யா...?
//
ஹே...ஹே..
அவங்க தான் இப்போ நம்ம தனுஷ் கூட ஆட்டம் போட்டுக்கொண்டிருக்காங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்////\\
யோவ்,,,, ஸ்ருதியோட அம்மாவை மாத்திட்ட....
பதிவுலகை கரைத்து குடித்த மன்னவா... எவ்வளவு நாளா நடக்குது இந்த படிப்பு...
http://sivparkavi.wordpress.com/
sivaparkavi
மச்சி எல்லாம் எழுதினாய் என்னைக் கேட்டிருந்தால் நானும ஒரு அனுபவம் சொல்லியிருப்பேனில்லையா... கருத்திடல் என்றால் என்னவென்றறியாத ஒருவர் தனிமடலுக்கு லிங் அனுப்புவரே அது தான்...
த.ம -1
(இப்படி போட தில்லு வேணும் மச்சி)
Post a Comment