மனதினுள் ஒரு படபடப்பு, என் உள்ளத்தினுள் ஒரு குறு குறுப்பு. இன்றைக்கு எப்படியாச்சும் அவளிடம் போன தடவை கொடுத்த கடிதத்தில் சொல்லியதைப் பற்றி கேட்டுப் பார்த்திடனும். "அவள் அதற்கு ஒத்துக் கொள்வாளா" என மனம் ஏங்கியது. என்ன இருந்தாலும் நான் கட்டிக்கப் போகும் என் காதலி அல்லவா இவள் என அங்காலாய்த்தவாறு அவள் வருகைக்காய் காத்திருந்தேன் நான். கடற் கரையோரம் கனிந்த நல் காற்று உடலைத் தழுவ, அருகே அவள் இரு கைகள் என் உடலைத் தழுவாதா எனும் ஏக்கம் என்னுள் எழுந்தாட காத்திருந்தேன் நான். "ஓ! தூரத்தில் யாரது? குடையோடு! அவள் தானா! அடடா! நான் எதிர்பார்த்த மாதிரியே குடையோடு வருகிறாளா?" சிந்தையில் ஒரு கணம் சுய நினைவற்று சில்லென வீசிய காற்றினால் வருடப்பட்டு நிமிர்ந்து பார்த்தேன்!
அவளே தான்! என் எதிர் வீட்டில் இருந்தாலும், எம் வீட்டாருக்கு தெரியாதவாறு ஒரு நண்பியாக என் உற்ற தோழியாக பழகியவள் அவள்! சின்ன வயசில் எனக்கு மச்சாள் ஒருத்தி அருகே இல்லையே எனும் குறையினை தன் செல்லக் குறும்புகளால் உணரச் செய்த மாது! என்னுள் இருக்கும் உணர்ச்சி நரம்புகளைச் சீண்டி உசுப்பி விட்ட சாது! நானும் அவளும் ஒன்றாக மண் விளையாடி, ஒன்றாக பாலப் பழம் பொறுக்கச் சென்று, விளாம்பழம் பிடுங்கி உண்டு மகிழ்ந்தது தொடக்கம், ஆடையின்றி அம்மணமாக மண் விளையாடி மகிழ்ந்த காலங்கள் வரை மனதில் வந்து போகின்றது. அந்தச் சின்ன வயசில் அவளோடு மண் விளையாடி மகிழ்ந்த காலங்களை நினைக்கையில் மனதில் ஒரு இனம் புரியாத குறு குறுப்பு! இவளையா நான் அப்படிப் பார்த்தேன்!

ஒன்றாகப் படித்து, ஒன்றாக ஊர் சுற்றி விளையாடி; அவளுக்கு அது நடக்கும் வரை என்னோடு ஒன்றாக டியூசனுக்கு வந்த என் செல்ல ரௌரிசாவா இப்போது குடையோடு நான் இருக்கும் இடம் தேடி வருகிறாள்? என மனம் நம்ப மறுத்தது. அவள் பருவமடைந்து சாமர்த்தியச் சடங்கு முடிந்து பள்ளிக் கூடம் வரும் வரை அவளைக் காணாது தவித்த என் மனதிற்கு அவள் ஏன் அப்போது பள்ளிக்கு வரவில்லை எனும் காரணம் மாத்திரம் புரிய மறுத்தது. மீண்டும் பள்ளிக்கு வந்த போது, எல்லோருக்கும் சாக்கிலேட் (ரொபி) கொடுத்தாள். ஆசிரியர் காரணங் கேட்ட போது தனக்கு பிறந்த நாள் என்று சொல்லி அனைவரிடமிருந்தும் புகழாரம் வாங்கினாள். எனக்கு அப்போது தான் கொஞ்சம் உதைத்தது. ஆனாலும், அவளிடம் "உனக்கு இப்போது பிறந்த நாள் இல்லையே" என்று கேட்க வேண்டும் என எண்ணி அவள் முன்னே நான் நிற்கும் போதெல்லாம் அந்தப் 14 வயதில் வெட்கப்பட்டு என்னை விட்டு விலத்திச் சென்றாள் அவள்.
அருகே சென்று பேச நினைக்கையில் வெட்கத்தை ஆடையாக்கி என் மனக் கதவை மௌனச் சிறையால் அடைத்துச் சென்ற பாவி அவள். சாக்கிலேட் கொடுத்த பிறந்த நாள் முடிந்து ஒரு வருடம் ஆக முன்பே மறுபடியும் பிறந்த நாள் என சாக்கிலேட் கொண்டு வந்தாள். நாங்கள் கேட்க நினைத்ததை எம் குறும்புக்கார விஞ்ஞானப் பாட ஆசிரியர் கேட்டார். "ரௌரிசா உமக்கு மட்டும் எப்படி வருஷத்தில ரெண்டு பிறந்த நாள் வரும்?" அவள் வெட்கப்பட்டு, தலை குனிந்து, ஒன்றும் சொல்லாது உட்கார்ந்தாள். அப்போது தான் மனத் திரையில் ஒரு விம்பம் பட்டுத் தெறித்தது. அது வேறு பிறந்த நாள். இது வேறு பிறந்த நாள் அல்லவா எனும் உண்மையை அவ் விம்பம் உணர்திச் சென்றது. "அட முன் வீட்டில் இருக்கும் எங்களுக்குச் சொல்லாது எப்படி இவள் சாமர்த்தியச் சடங்கைச் செய்தார்கள்?" என யோசிக்கையில் தான் அவள் அம்மா என் அம்மாவிடம் சொல்லிய குப்பைத் தண்ணி வார்த்தல் பற்றிய நினைப்பு வந்தது.
"நான்கு நாள் பாடசாலை சென்ற காரணத்தினால் பேய்கள் பின் தொடர்ந்திருக்கும் என்பதால் ரௌரிக்கு குப்பைத் தண்ணீர் வார்த்தோம்" என புஷ்பம் ஆன்ரி என் அம்மாவிடம் சொல்லியது அப்போது தான் நினைவிற்கு வந்தது. அடிக் கள்ளி! என் கண்ணில் பட்டிருந்தால் நானாச்சும் கண்டல்லவா உன் அம்மாவிடம் சொல்லியிருப்பேன் என போன கடிதத்தில் எழுதியதை நினைத்துச் சிரித்தேன். கொஞ்சம் நிமிர்ந்தேன்! என் முன்னே அவள்!
என்னை நெருங்கி வந்து குடையைச் சுருக்கிய அவளைப் பார்த்து; "ஏன்டி குடையினைத் தேவையான இடத்திற்குத் தானே கொண்டு வந்திருக்காய்!" என்றேன். அவளோ காலால் தரையில் கோலமிட்டு, "போடா ராஸ்கல்! உனக்கு ஓவர் கொழுப்படா" என தமிழில் காதல் சந்தம் கலந்து செல்லம் கொஞ்சிப் பேசினாள்.
"ஏன் சிரித்தாய்? என் நடை அழகில்லையா என பீடிகை போட்டாள். அன்ன நடை! அகிலமே உன் அழகை பார்க்க நினைக்கும் வண்ண மயில்! பின்னல் இரண்டில் (ரெட்டை ஜடை) நான் வாங்கித் தரும் பூவைச் சூடிய கொஞ்சும் கிளி! கொல்லைப் புறம் அருகே என்னைத் தேடி வந்திருக்கும் மஞ்சள் நிலா! உன் அழகில் யாம் குறை கண்டு சிரிப்பேனா?" என என் உதட்டில் கொஞ்சம் எச்சில் பிரட்டி நாக்கிலிருந்து ஒரு துளி எச்சில் தெறித்து அருகே நின்ற அவள் கையில் படுமாறு சொல்லி முடித்தேன்!
"அப்போ ஏன் சிரித்தாய்" என்று கேட்டாள். "அடடா! என் செல்லக் குட்டியே! மறுபடியுமா?" என விளித்தேன்!
"ஆமாண்டா பொறுக்கி!" என பொருமினாள். "அது வந்து உனக்கு குப்பைத் தண்ணீர் வார்த்து பற்றி கடந்த கடித்தத்தில் கொஞ்சம் சிலாகிருந்தேனே. நீ தான் அது பற்றி பதில் கடிதத்தில் சொல்லையே" என்றேன் நான்.
"படவா....பின்னே, பெரிய பிள்ளையாகி நான்கு நாளைக்கு அதற்கான அர்த்தம் தெரியாமல் பள்ளிக்கூடம் போய் வந்த பின்னாடி தானே நான் சமைஞ்சதை வீட்டில கண்டு பிடிச்சாங்க! அதுக்குத் தான் குப்பைத் தண்ணீர் வார்த்தாங்கடா" என்று சொல்லி முடித்தாள் அவள். எனக்கு கொஞ்சம் சிரிப்பு வந்தது. ஆனாலும் பொருத்தமற்ற சந்தர்ப்பத்தில் சிரித்தால் லூசு என நினைப்பாளோ எனப் பயந்து கொஞ்சம் பம்மினேன்.
"அடோய் வெவரம் இல்லாதவனே! இந்தக் காலப் பையனா இருக்கிறியே! உனக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து தான் நான் வெ(வி)ளக்கம் எழுதாமல் பதில் கடிதம் அனுப்பினேன்" என உரைத்தாள் அவள்.
"அதெப்படி எனக்கு எல்லாம் தெரியும் என்று நீ சொல்லுறாய்? நீ தான் இன்னமும் முழுசா ஒன்னையுமே...............?
எனச் சிலேடையுரைத்த என்னைப் பார்த்து ஐயாவுக்கு ஆசை ஜாஸ்தி! செருப்பு பிஞ்சிடும் என அன்பால் எச்சரிக்கை செய்தாள்.
"ஆமாம் என்னை அழைத்த நோக்கம் யாது?" என அரசிளங் குமாரி போல பேசினாள் ரௌரிசா.
"அழகான பொண்ணு ஒருவனை காதலிக்கையில் அன்பைச் சொரியத் தானே கடற் கரைக்கு அழைப்பாங்கள்" என்றேன் நான்! "சீ! போடா, உனக்கு எப்ப பார்த்தாலும் அதே எண்ணம்" என்று செல்லக் கோபம் கொண்டாள் அவள். "பெண் எப்போதும் ஓரழகு என்று பாடிய கவிஞன், உன்னைப் பார்த்தால், "நீ கோப்பப்படும் போது ஓரழகு! கொஞ்சும் போது வேறழகு!"என மாற்றிப்பாடுவான் என்றேன் நான்.
"நான் தான் இன்னமும் உனக்கு பக்கத்தில் வரவில்லையே என நமக்குள் இருந்த இடைவெளியினை ஞாபகப்படுத்தினாள் அவள். "விடுவேனா நான்? நீ அருகே இருக்கையில் உன்னைத் தொடாது விலகிச் செல்வேனா நான்?" என நினைத்து அவள் அருகே நின்று, மெதுவாய் அவள் காலில் என் பாதம் பதித்து அவள் முன் போய் நின்றேன்.
"சே...யாராவது பார்த்தாலும்"; என்று சொல்லி குடையை விரித்தாள்.
"நான் தான் இன்னமும் உன்னைக் கொஞ்சலையே" என்று சொன்னேன். "போடாங்..........எனச் சொல்லி வாடா ஓரமா உட்காருவோம்" என அழைத்தாள்.
"குடைக்குள் இரு மனங்கள் - தவிப்பில் ஒரு மனம்!
தன் அருகே அவன் இருக்கிறான் எனும் நினைப்பில் அவள் மனம்."
"ஆமா உன்னோட ப்யூச்சர் ப்ளான் என்ன என்றேன் நான்?" அவளோ, "உன்னைக் கட்டி திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்பதற்கமைவாக ரெண்டு குழந்தைகள் பெற வேண்டும்" என்றாள் அவள்.
"ரெண்டு குழந்தைகளா உன் - - - - போல ரெட்டைக் குழந்தைகளா வேண்டும் என கேட்டேன் நான்?"
"எனக்கு எது என்றாலும் ஓக்கே, ஆமா நீ இப்போ உன் அது என்று கையை எங்கே காட்டினாய் என்று கேட்டாள் ரௌரிசா?"
அடடா, ஆணுக்கும் வெட்கம் வரும் என்பதனை நான் அப்போது தான் உணர்ந்து கொண்டேன்.
"அடோய், திருடா, என்னைக் கொல்லும் கள்வா. என்னைப் பார்த்தும், என் உதட்டைப் பார்த்தும் ஏன் நீ ஏதும் பேசாதிருக்கிறாய்" எனக் கேட்டாள் ரௌரிசா.
"உன் உதட்டைப் பார்த்தால் எப்படிப் பேச்சு வரும்?" என்று கேட்டேன் நான். ஏன்டா கள்வா, உனக்கேன் அந்த டவுட் வந்திச்சு என்று கேட்டாள் அவள்.
"அந்த டவுட் என்றால்? எனக்குப் புரியலையே? நீ எந்த டவுட்டு என்று சொல்லேன்" என அவள் காதைக் கடித்தேன் நான்?
"செல்ல முத்தம் போடுகையில் சின்னச் சின்ன மின்சாரம் தோன்றும் என்பார் பெண்ணே! சொல் தோன்றியதுண்டா கண்ணே!
அப்படீன்னு கடிதத்தில் எழுதியிருந்தாயே! ஏன் எனக் கேட்டாள் ரௌரிசா.
"ஓ! அதுவா, போடீ....கள்ளி! அது கடிதம் எழுதும் பேப்பரை வேஸ்ட் பண்ணக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான்" என்றேன்...."அடடா, இப்படியெல்லாம் யோசித்து ஒரு பேப்பரைக் கூடவா வேஸ்ட் ஆக்க மனமில்லாதிருக்கிறாய்?" எனச் செல்லமாக கடிந்தாள் அவள்.
"அப்படீனா நீ எனக்கு ஒன்று தரலாம் இல்லையா என்று கேட்டேன் நான்?" மெல்லிதாய் வெட்கப்பட்டு, அவள் மேனியோடு என்னை அணைத்து கண்களை இறுக்கி மூடி உதட்டை அருகே கொண்டு வந்து விட்டு, என்னை உற்றுப் பார்த்தாள். உனக்கு வேண்டியதை நீயே எடுத்துக் கொள் எனச் சொல்லி வெட்கப்பட்டாள். நான் அச்சப்பட்டு யாரும் பார்க்கிறார்களா என கொஞ்சம் தெளிந்து கைகளால் அணைத்தெடுத்து அவள் உதட்டருகே சென்றேன்.
"போடா கள்வா, இதுக்கேன் இவ்வளவு தாமதம்? கொஞ்சம் பின்னாலே பார். யாரோ வருகிறார்கள்"எனச் சொல்லி மெதுவாய் என் பிடியிலிருந்து விடுதலை பெற்று நகர்ந்தாள்.
"அடிக் கள்ளி! முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே! ஏன் இந்த ஓர வஞ்சனை" என்றேன்.
"அடிக் கள்ளி என்று சொல்கிறாயே! அடிக் கரும்பு பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?" என கேட்டாள் ரௌரி.
"இல்லையே!" என இமைகளை அசைத்துப் பதில் சொன்னேன்.
"அடிக் கரும்பு தான் எப்போதும் ருசிக்கும் எனும் சொல் கேளாது நுனிப் புல் மேயத் துடிக்கும் ஆணழகாய் நீயிருக்கிறாயே எனச் சொல்லி கேலி செய்தாள். கொஞ்சம் காதை அருகே கொண்டு வாயேன்" எனச் செல்லம் குழைந்தாள்.
மெதுவாய் காது கொடுத்து மேனகை சொல்லும் ரகசியத்தை உரசிக் கேட்கும் ஆவலில் நின்றேன். "எதிர்வரும் வாரம் கனடா போவதற்காய் கொழும்பிற்கு போகப் போகிறேன்" எனக் கொடுஞ் சொல் வீசினாள் அவள். கூடவே "என்னை நீ எப்போதும் நினைத்திருக்க ஒரு முத்தம் தருகிறேன்" என என் பிரிவின் வலிக்கு சாமரம் வீசி சாந்தமாய் பேசினாள். அப்படியே வெட்கப்பட்டு ஒரு முத்தத்தை நெற்றியில் தந்தாள்.
அந்தச் சந்திப்பு, அப்படியே முடிந்து விட்டது. என் மனமோ அவள் அருகே இல்லையே எனும் தவிப்பில் தினமும் திண்டாடிக் கொண்டிருந்தது. "வெளிநாடு போகிறேன் எனச் சொல்லிச் சென்றவள் மறுபடி போன் பண்ண மாட்டாளா?" என ஏங்கித் தவித்தேன். மனம் ஒரு குரங்கு என்று சொன்னவர்கள் என் நிலை தனைப் புரிந்து ஏதும் சொல்லையே என கவிதை வடித்தேன். வலி கொண்டேன். இதயத்தில் ரௌரிசாவின் நினைப்பினைத் தாங்கி நடக்கின்ற பிணமானேன். அவள் இல்லா உலகத்தில் ஏன் வாழ வேண்டும் என சிந்தித்தேன். ஆனாலும் என் பின்னே எனை நம்பி உள்ள குடும்ப நிலையினை எண்ணி கொஞ்சம் பின் வாங்கினேன். நெஞ்சில் காதல் வலி! நெருப்பாய் ரௌரிசாவின் பிரிவின் வலி! மஞ்சம் தனில் படுத்து அவள் கூட வாழா விட்டாலும் மனதின் அத்தனை பகுதியிலும் பஞ்சம் எனும் சொல் அவள் அழகில் இல்லையே எனப் பிரம்மனைப் பார்த்துப் பாட வைக்கும் வஞ்சியைப் பிரிந்த துயரின் கறை! நீ தானே எனக்கான தேவதை எனும் நினைப்பில் உழல்கின்ற மனதின் நிலை என நடக்கலானேன்.
நாட்கள் நகர்ந்தது. நானுமோர் வெளிநாட்டு பிரஜையாக கனடாவிற்கு கல்வியின் நிமித்தம் சிறகடிக்கும் நாளும் வந்தது. மனதின் அத்தனை அறைகளிலும் மூன்று வருடப் பிரிவைத் தந்த பின் ஏதும் பேசாது தொலை தூரம் போய் விட்ட கிளியின் நினைப்பு வருடி நிற்க, அவளைக் காண்பேனா எனும் ஆவல் சிறிதும் குன்றாதவனாக, படிப்பின் நிமித்தம் கனடா போனாலும் கல்வியைப் பற்றிய எண்ணம் இல்லாதவனாக மனச் சிறைகளில் அவள் நினைப்பைச் சுமந்து நடந்தேன். கடந்த வாரம், மாலை வேளை, கனடாவின் அழகிய ஸ்காபுரோ சிற்றியின் ஒன்ராரியோ மாகாணம் என் மனதிற்கு இனிமையான இயற்கைக் காட்சிகளால் மனதினைத் தாலாட்டிக் கொண்டிருந்தது.
ஐபோட்டில் அவள் நினைவாக, "அட்டகாசம் படத்தில் இடம் பெற்ற நச்சென்று இச்சொன்று தந்தாயே பாடலில் வரும் "செல்ல முத்தம் போடுகையில் சின்னச் சின்ன மின்சாரம் தோன்றும் என்பார் பெண்ணெ....." எனும் வரிகளை மாத்திரம் ரிப்பீட் செய்து கேட்டுக் கொண்டிருந்தேன். என் முன்னே தள்ளு வண்டிலில் (BABY PRAM) குழந்தையோடு, கொஞ்சம் வாடிய முகத்தோடு ஒரு உருவம்!
"என்னைத் தெரியலையா என்று கேட்டாள் அவள்?"சற்றே நிமிர்ந்து பார்த்தேன்!
"ரௌரிசா! எப்படி இருக்கிறாய்? யார் இது? உன் குழந்தையா என்று கேட்டேன்?" பதில் சொல்லவில்லை. என்னைப் பரிதாபத்தோடு பார்த்தாள் அவள்.
"உன் "கணவன் எங்கே என்று கேட்டேன்?" கண்ணீர் மல்கிச் சொன்னாள்.
"உங்களுக்கு நான் செய்த வேலைக்கு இது தான் பரிகாரம்! என்னை மன்னித்திடுங்கள்! குழந்தை அழுகிறது! நான் போக வேண்டும்!" எனச் சொல்லி விடை பெற்றாள் அவள்!
ஓடோடிச் சென்று அவள் கரம் பற்றி, "உனக்கென்ன ஆச்சு" எனக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனாலும் என் மனத் திமிரோ, இவள் செய்த செயலுக்கு இதுவும் வேண்டும் எனச் சொல்லி, இரக்கமற்ற ஆண்கள் வரிசையில் என்னையும் சேர்த்து என் உணர்ச்சிகளை அவ் இடத்தில் எரித்துச் சாம்பல் ஆக்கியது.
யாவும் கற்பனையே...............
பிற் சேர்க்கை: இப் பதிவினை எழுதி முடிக்கையில் பின் நவீனத்துவம் கலந்த ஒரு முடிவினை எழுதி மைந்தன் சிவா அவர்களிடம் சரி பார்க்குமாறு கொடுத்தேன். அவரோ, பதிவின் தலைப்பு தபூசங்கரின் கவிதைத் தலைப்பு ஒன்றினை நினைவுபடுத்துவதாகச் சொன்னார். கூகிளில் தேடிப் பார்த்தேன் கவிஞர் தபூசங்கர் எழுதியது "வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?" எனும் கவிதைத் தொகுப்பு என்று அறிந்து கொண்டதால் என் பதிவின் தலைப்பினை மாற்றவில்லை.
பிற் சேர்க்கை: இப் பதிவு ஒரு சிறுகதை அல்ல. கவி நடை கலந்த ஒரு உரை நடைத் தொகுப்பு.
பிற் சேர்க்கை: இப் பதிவு ஒரு சிறுகதை அல்ல. கவி நடை கலந்த ஒரு உரை நடைத் தொகுப்பு.
***************************************************************************************************************************
அன்பிற்கினிய சொந்தங்களே, அனைவரும் நலமா? தீபாவளியன்று மழையில் நனைந்த காரணத்தினால் காய்ச்சல் ஆக்கிடுச்சு. வைரஸ்ஸோடு வைரஸ்ஸாக இருமலும், தடிமலும் எனக்கு ரண களத்தை உண்டாக்கிய காரணத்தினால் வலைப் பதிவுகளினூடாக உங்களைச் சந்திக்க முடியவில்லை.
இன்றைய பதிவர் அறிமுகம் பகுதிக்குச் செல்வோமா?
வரலாற்றுப் பதிவுகளை அனைவருக்கும் புரியும் வண்ணம் கதைகளாகவும், சுவையான வடிவிலும் தன் வலைப் பதிவினூடாகப் பகிர்ந்து கொள்வதோடு, ஏனைய சுவாரஸ்யமான சினிமா மற்றும் பல்சுவைக் கதம்ப விடயங்களை, உங்களை ஆச்சரியபடுத்தும் அபூர்வ விடயங்களைத் தன் வலைப் பதிவில் பகிர்ந்து வருகின்றார் "N.H.பிரசாத்" அவர்கள்.
"N.H.பிரசாத்" அவர்களின் "ஊர் காவலன்" வலைப் பதிவிற்குச் செல்ல:
***************************************************************************************************************************
|
95 Comments:
நண்பா, ஓட்டுக்கள் போட்டிருக்கேன்! கமெண்டுபோட பின்னர் வருகிறேன்!
அந்த ஆபத்து அறிவிப்பு சரியா தான் இருக்கு போல!!யாரோ விளுந்திட்டாங்க...காதலில :)
பாஸ் பதிவை படிச்சு ஓட்டு போட்டுவிட்டேன் கமண்ட் போட காலையில் வாரன் நித்திரை வருது...
இப்படி எல்லாரும் நடுராத்திரி பதிவு போட ஆரம்பிச்சா என்ன பண்றது? அதுவும் ரொமாண்டிக் பதிவு வேற.....
எல்லாம் சரிதான், //யாவும் கற்பனையே...............// இது எதுக்கு? சரி... நடக்கட்டும் நடக்கட்டும்....!
@பிரெஞ்சுக்காரன்
நண்பா, ஓட்டுக்கள் போட்டிருக்கேன்! கமெண்டுபோட பின்னர் வருகிறேன்!
//
நண்பா, இப்படிச் சொல்லிட்டு எஸ் ஆகலாமா?
@மைந்தன் சிவா
அந்த ஆபத்து அறிவிப்பு சரியா தான் இருக்கு போல!!யாரோ விளுந்திட்டாங்க...காதலில :)
//
நெசமாவா பாஸ்;-)))
@K.s.s.Rajh
பாஸ் பதிவை படிச்சு ஓட்டு போட்டுவிட்டேன் கமண்ட் போட காலையில் வாரன் நித்திரை வருது...
//
எனக்கும் தூக்கம் வருது பாஸ்...
நாளைக்கு மீட் பண்றேன்/
பாஸ்..
@NAAI-NAKKS
:))
//
நன்றி அண்ணே..
@பன்னிக்குட்டி ராம்சாமி
இப்படி எல்லாரும் நடுராத்திரி பதிவு போட ஆரம்பிச்சா என்ன பண்றது? அதுவும் ரொமாண்டிக் பதிவு வேற.....
//
ஹி...ஹி...
வழமையாகவே நான் மிட் நைட்டில தானே பதிவு போடுவேன்...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@பன்னிக்குட்டி ராம்சாமி
எல்லாம் சரிதான், //யாவும் கற்பனையே...............// இது எதுக்கு? சரி... நடக்கட்டும் நடக்கட்டும்....!
//
அண்ணே, அப்புறமா யார் அந்தப் பெண் என்று கேட்டால்? நான் பதில் சொல்லியே ஆகனும் இல்லே..
அதான் இப்படி எழுதிட்டேன்..
ஹி...ஹி....
அண்ணே தமிழ் சினிமா படம் மாதிரி சோகத்தில முடிச்சு விடீன்களே.......அதுதான் போருக்கமுடியல... அழகாக சொல்லி இருக்குறீர்கள்...
Vishnu Rajan // "போடா கள்வா, இதுக்கேன் இவ்வளவு தாமதம்? கொஞ்சம் பின்னாலே பார். யாரோ வருகிறார்கள்"எனச் சொல்லி மெதுவாய் என் பிடியிலிருந்து விடுதலை பெற்று நகர்ந்தாள்.
"அடிக் கள்ளி! முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே! ஏன் இந்த ஓர வஞ்சனை" என்றேன்....// அருமை நண்பரே ..ரசித்தேன் உங்கள் பதிவை .. :-))
தலைப்பே கவிதையாய் இனிக்குதே..
//அழகான பொண்ணு ஒருவனை காதலிக்கையில் அன்பைச் சொரியத் தானே கடற் கரைக்கு அழைப்பாங்கள்"//
அப்படியா...தகவலுக்கு நன்றி.
கற்பனை-ன்னு சொல்றாரு..ஆனாலும் கதை இல்லேங்கிறாரு..ஒன்னும் புரியலியே..
சின்ன வயசில் எனக்கு மச்சாள் ஒருத்தி அருகே இல்லையே எனும் குறையினை////
அவ்வ்வ்வ்வ் இக்குறை வேறு இருக்கோ:))).
ரெளரிசா////
இதை ரைப் பண்ணவே கஸ்டப்பட்டுவிட்டேன்.... நல்ல நல்ல பெயரெல்லாம் வைக்கிறீங்க:)).
கதையை நல்ல அழகாகக் கொண்டுவந்துவிட்டு... முடிவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
அதெதுக்கு ஆர் கிடைச்சாலும் ... ஐ மீன்.. காதலி:))).... ஒரு நாளோடு விட்டுவிட்டு ஓடுகிறார்கள்:))))))).. நன் கதையைச் சொன்னேன்:))).
தலைப்பைப் பார்த்ததும் பா.விஜய் இன் கவிதை என நினைக்கிறேன்.. அல்லது வைரமுத்துவோ தெரியவில்லை... நினைவுக்கு வருகிறது...
“எதைக் கேட்டாலும்
வெட்கத்தைத் தருகிறாயே
வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்”.
முத்தம் கேட்டு உங்களுக்கு வெட்கமாவது கிடைத்திருக்கு சிலருக்கு தர்மஅடி விழுந்திருக்கு .
மச்சி சொந்த கதையோ அல்லது கற்பனை கதையோ ,? முடிவு நெருடல் .
take care niru
///அது ///தமிழில் இந்த சொல்லுக்கு தப்பான அர்த்தம் வந்துவிட்டது சும்மா அது என்றாலும் தவறாகத்தான் பாக்கிறாங்க என்ன நாசமோ........
/////யாவும் கற்பனையே............/////
ஹி.ஹி.ஹி.ஹி..........
////"உங்களுக்கு நான் செய்த வேலைக்கு இது தான் பரிகாரம்! என்னை மன்னித்திடுங்கள்! குழந்தை அழுகிறது! நான் போக வேண்டும்!" எனச் சொல்லி விடை பெற்றாள் அவள்!
ஓடோடிச் சென்று அவள் கரம் பற்றி, "உனக்கென்ன ஆச்சு" எனக் கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனாலும் என் மனத் திமிரோ, இவள் செய்த செயலுக்கு இதுவும் வேண்டும் எனச் சொல்லி, இரக்கமற்ற ஆண்கள் வரிசையில் என்னையும் சேர்த்து என் உணர்ச்சிகளை அவ் இடத்தில் எரித்துச் சாம்பல் ஆக்கியது.////
இது கற்பனையோ உணயோ ஆனால் நச் என்று இருக்கு......
தபு சங்கரின் கவிதை வரிகளில் தலைப்பும், அதற்கேற்ற பதிவும் அசத்தல் நண்பா..
@ஆகுலன்
அண்ணே தமிழ் சினிமா படம் மாதிரி சோகத்தில முடிச்சு விடீன்களே.......அதுதான் போருக்கமுடியல... அழகாக சொல்லி இருக்குறீர்கள்...
//
நன்றி மச்சி,
சோகத்தில முடிச்சால் தான் யதார்த்தம் நிறைந்திருக்கும் என்று சொல்லுறாங்க.
ஹே...ஹே...
@Vishnu...
Vishnu Rajan // "போடா கள்வா, இதுக்கேன் இவ்வளவு தாமதம்? கொஞ்சம் பின்னாலே பார். யாரோ வருகிறார்கள்"எனச் சொல்லி மெதுவாய் என் பிடியிலிருந்து விடுதலை பெற்று நகர்ந்தாள்.
"அடிக் கள்ளி! முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே! ஏன் இந்த ஓர வஞ்சனை" என்றேன்....// அருமை நண்பரே ..ரசித்தேன் உங்கள் பதிவை .. :-))
//
நன்றி நண்பா.
@செங்கோவி
தலைப்பே கவிதையாய் இனிக்குதே..
//
நிஜமாவா பாஸ்..
நன்றி.
@செங்கோவி
//அழகான பொண்ணு ஒருவனை காதலிக்கையில் அன்பைச் சொரியத் தானே கடற் கரைக்கு அழைப்பாங்கள்"//
அப்படியா...தகவலுக்கு நன்றி.
//
ஹே...ஹே..
இது ரொம்ப ஓவரைய்யா...
@செங்கோவி
கற்பனை-ன்னு சொல்றாரு..ஆனாலும் கதை இல்லேங்கிறாரு..ஒன்னும் புரியலியே..
//
ஹி...ஹி...
நம்புங்கப்பா கற்பனை தான்..
@athira
அவ்வ்வ்வ்வ் இக்குறை வேறு இருக்கோ:))).
ரெளரிசா////
இதை ரைப் பண்ணவே கஸ்டப்பட்டுவிட்டேன்.... நல்ல நல்ல பெயரெல்லாம் வைக்கிறீங்க:)).
//
மச்சாள் இருந்தவா அக்கா.
ஆனால் அப்பா சின்ன வயசில தன் வேலை நிமித்தம் மச்சாள் வீட்டிலிருந்து இடம் பெயர்ந்து யாழ்பாணத்திற்கு எங்களை அழைத்துச் சென்று விட்டார்.
@athira
ரெளரிசா////
இதை ரைப் பண்ணவே கஸ்டப்பட்டுவிட்டேன்.... நல்ல நல்ல பெயரெல்லாம் வைக்கிறீங்க:)).
//
ஹி...ஹி..
புலம் பெயர் நாட்டிலிருந்து ஊருக்கு வரும் சொந்தங்களின் பிள்ளைகளுக்கு இப்படியான பெயர்கள் தானே ரொம்பவும் பொருத்தமாக இருக்கிறது அக்கா.
ஹி...ஹி..
அதான் யாருக்காச்சும் யூஸ் புல்லா இருக்கட்டுமே என்று இப்படி ஒரு பெயரை வைச்சேன்;-)))
@athira
கதையை நல்ல அழகாகக் கொண்டுவந்துவிட்டு... முடிவு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
அதெதுக்கு ஆர் கிடைச்சாலும் ... ஐ மீன்.. காதலி:))).... ஒரு நாளோடு விட்டுவிட்டு ஓடுகிறார்கள்:))))))).. நன் கதையைச் சொன்னேன்:))).
//
ஹே...ஹே...
அதான் எனக்கும் தெரியலையே...
@athira
தலைப்பைப் பார்த்ததும் பா.விஜய் இன் கவிதை என நினைக்கிறேன்.. அல்லது வைரமுத்துவோ தெரியவில்லை... நினைவுக்கு வருகிறது...
“எதைக் கேட்டாலும்
வெட்கத்தைத் தருகிறாயே
வெட்கத்தைக் கேட்டால்
என்ன தருவாய்”.//
அக்கா அது தபூசங்கர் எழுதியது,
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் எனும் கவிதைத் தொகுப்பு..
@Mahan.Thamesh
முத்தம் கேட்டு உங்களுக்கு வெட்கமாவது கிடைத்திருக்கு சிலருக்கு தர்மஅடி விழுந்திருக்கு .
//
ஹே...ஹே...
அனுபவம் போல.
@Mahan.Thamesh
மச்சி சொந்த கதையோ அல்லது கற்பனை கதையோ ,? முடிவு நெருடல் .
//
சொந்தக் கதை என்றால் இப்படி முடிவினை போக விட்டிருக்க மாட்டேனே..
கற்பனை மச்சி,
@கவி அழகன்
take care niru
//
நன்றி மச்சி,
@!* வேடந்தாங்கல் - கருன் *!
தபு சங்கரின் கவிதை வரிகளில் தலைப்பும், அதற்கேற்ற பதிவும் அசத்தல் நண்பா..
//
மச்சி, தபூசங்கர் எழுதியது வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
நான் எழுதியிருப்பது முத்தத்தை கேட்டால்...
ஹி...ஹி.....
ஹா ஹா நிரூபன் டைட்டில் பற்றிய விளக்கம் போட்டாலும் போட்டாரு, கமெண்ட் போட்டவங்கள்ல பாதிப்பேரு அதை பற்றியே கமெண்ட்டிங்க.. ஹா ஹா
//யாவும் கற்பனையே..........//
இதான் அண்ணன்ல உள்ள கெட்ட பழக்கம்! இப்பிடிச் சொன்னா மட்டும் நாங்க நம்பிடுவமா? :-)
தலைப்பே தபுசங்கரை ஞாபகப் படுத்துகின்றது சூப்பர் தலைப்பு !
நண்பர் பிரசாத்தின் ஊர்க்காவன் வலை அறிமுகத்திற்கு நன்றி காத்திரமான எண்ணங்கள் அவர் பதிவுகளில்.
தமிழ் புகுந்து விளையாடு ,ரெட்டைஜடை,குடை நல்ல பெயர்கள் மட்டும் கண்டுபிடிபதில் நீங்களும் ஒரு கவிஞன்!
@தனிமரம்
தலைப்பே தபுசங்கரை ஞாபகப் படுத்துகின்றது சூப்பர் தலைப்பு !
//
பாஸ்..
பதிவினை முழுமையாகப் படித்தால்,.
தபூசங்கரின் அந்த நூலின் பெயரை நீங்கள் அறிந்திருந்தால் இப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்க.
பதிவினை எதற்கும் ஒரு தடவை முழுமையாகப் பாருங்களேன்.
இல்லையேல்
http://kaviyulagam.blogspot.com/2010/08/blog-post_13.html
இந்த இணைப்பில் பாருங்கள்..
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்று தான் தபூசங்கர் எழுதியிருக்கார்.
ஆர்வக் கோளாறில் பின்னூட்டமிடுவோரால் சங்கடங்கள் என்பதனை அறிந்து தான் பின்னூட்டப் பெட்டியினை மட்டுறுத்தி வைத்துள்ளேன்.
ஆஹா... தமிழ் விளையாடுகிறது...
அருமையான உரைநடை இல்லையில்லை கவிநடை...
வாழ்த்துக்கள் நண்பரே...
கதை அருமை !
உடலை நன்றாகப் பேணுங்கள் ...
கதையோ கற்பனையோ இருந்தாலும் அருமை நிரூ
உண்மை கதை போல உள்ளது ....?
கற்பனை என்பதை நம்பமுடியவில்லை சரி கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும் எழுத்துநடையில் கவித்துவம் இருக்கின்றது
காதல் கதைகள் எத்தனை படித்தாலும் சலிப்பூட்டுவது இல்லை அதுவும் கவிதைநடையில் இருந்தால் இன்னும் சுவைதான்
நான் எப்பவும் வேகமாக படிக்க கூடியவன் மெதுவாக படித்தேன் அருமை....அருமை....
ம்..அருமை நிரூபன்...
நிந்ததாஸனின் கற்பணைத்தீயின் கற்கண்டுத் தகிப்பில்
எல்லாம் நினைவுக்கு வருகுது.....
சாண்டில்யன்...முழடில்யன் எல்லாம் தோற்றுப் போவார்களோ.....
வரிகளில் அவ்வளவு முதிர்ச்சி தெரிகிறது நிரூபன்......
வாழ்த்துக்கள்....
நிரூபனே!
ஞாபகப்படுத்துகின்றது என்றால் நீங்கள் அவரின் புத்தகத்தின் பெயரை தலைப்பாக்கியிருக்கிறீங்கள் என்றா சொல்லி இருக்கின்றேன் இல்லையே நன்றாக கவனியுங்கள் தலைப்பே ஞாபகப்படுத்துகின்றது என்று தானே சொன்னேன் காப்பி பேஸ்ட் என்று சொல்லவில்லையே !
ஆர்வக்கோளரில் அல்ல அந்தப்புத்தகம் எனக்கும் பிடிக்கும் என்னிடம் இருக்கின்றது.
ஒரு பின்னூட்டம் தொடர்ந்து உங்களுக்கு மறை பொருள் கொடுக்கும் என்றாள் என் பின்னூட்டத்தை தூக்கிவிடுங்கள்!
நன்றி புரிந்துணர்வுக்கு
தனிமரம்!
வெட்கத்தை மட்டுமல்ல வேதனையையும்தான்!
கற்பனையா, என்னாய்யா குழப்புறீங்க...
//நிரூபன் said...
மச்சாள் இருந்தவா அக்கா.
ஆனால் அப்பா சின்ன வயசில தன் வேலை நிமித்தம் மச்சாள் வீட்டிலிருந்து இடம் பெயர்ந்து யாழ்பாணத்திற்கு எங்களை அழைத்துச் சென்று விட்டார்///
அவ்வ்வ்வ்வ்:)) அணிலை மரமேற விட்ட கதையாப்போச்சே நிரூபனின் கதை:)).
ஊ.கு:
எங்க நிரூபன் குழைபோடும் ஆட்களை இங்கின காணவில்லை:)) குழை தீர்ந்துபோச்சோ?:)), இல்ல குளிர் பிடிச்சு காய்ச்சல் வந்திட்டுதோ?:))).
ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க நிரூபன்.... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))))
வணக்கம் பாஸ்,நலமா?
வேலாயுதக்காய்ச்சல் விட்டுட்டுதா?
//தீபாவளியன்று மழையில் நனைந்த காரணத்தினால் காய்ச்சல் ஆக்கிடுச்சு. வைரஸ்ஸோடு வைரஸ்ஸாக இருமலும், தடிமலும் //'
take care .
கதையின் முடிவு கஷ்டமா இருக்கு கற்பனையாக இருந்தாலும்
எனக்கும் தலைப்பை பார்த்தவுடன் தபூசங்கர்’தான் நினைவு வந்தது.
பதிவின் அமைப்பும் அவர் பாணியில்தான் இருக்கிறது.
கதையை ரசித்துப் படித்தேன்
கற்பனையா?
அவ்வ்வ்வ்வ்!
பதிவின் ஆரம்ப வரிகள் எனது பால்ய நினைவுகளை திரும்பிப்பாக்கவைத்தது.
பதிவின் கடைசி வரை எழுத்துநடை கட்டிப்போட்டு விட்டது.மீண்டு வர ரொம்ப நேரம் ஆச்சு!
முடிவு கொஞ்சம் கனக்க வைத்து விட்டது.
ம்கூம்,வந்துடுச்சு ஆசையில் ஓடி வந்தேன்!
அருமையான காதல் கதை. என்னை உங்கள் பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி.
@தனிமரம்
நிரூபனே!
ஞாபகப்படுத்துகின்றது என்றால் நீங்கள் அவரின் புத்தகத்தின் பெயரை தலைப்பாக்கியிருக்கிறீங்கள் என்றா சொல்லி இருக்கின்றேன் இல்லையே நன்றாக கவனியுங்கள் தலைப்பே ஞாபகப்படுத்துகின்றது என்று தானே சொன்னேன் காப்பி பேஸ்ட் என்று சொல்லவில்லையே !
ஆர்வக்கோளரில் அல்ல அந்தப்புத்தகம் எனக்கும் பிடிக்கும் என்னிடம் இருக்கின்றது.
ஒரு பின்னூட்டம் தொடர்ந்து உங்களுக்கு மறை பொருள் கொடுக்கும் என்றாள் என் பின்னூட்டத்தை தூக்கிவிடுங்கள்!
நன்றி புரிந்துணர்வுக்கு
தனிமரம்!//
தபூசங்கர் எழுதிய புத்தகம் உங்களிடம் இருந்தால், அப் புத்தகத்தின் பெயரைச் சரியாகச் சொல்லலாமே?
என் பதிவின் கீழே தபூசங்கரின் புத்தகப் பெயரைக் கூறியிருக்கிறேனே..
கொஞ்சம் படித்துப் பாருங்களேன்.
@ஜீ...
/யாவும் கற்பனையே..........//
இதான் அண்ணன்ல உள்ள கெட்ட பழக்கம்! இப்பிடிச் சொன்னா மட்டும் நாங்க நம்பிடுவமா? :-)
//
நம்புங்கப்பா...
@தனிமரம்
நண்பர் பிரசாத்தின் ஊர்க்காவன் வலை அறிமுகத்திற்கு நன்றி காத்திரமான எண்ணங்கள் அவர் பதிவுகளில்.
//
நன்றி பாஸ்...
@சே.குமார்ஆஹா... தமிழ் விளையாடுகிறது...
அருமையான உரைநடை இல்லையில்லை கவிநடை...
வாழ்த்துக்கள் நண்பரே...
//
நன்றி பாஸ்...
@koodal bala
ஆஹா... தமிழ் விளையாடுகிறது...
அருமையான உரைநடை இல்லையில்லை கவிநடை...
வாழ்த்துக்கள் நண்பரே...
//
@
உடலை நன்றாகப் பேணுங்கள் ...
//
நன்றி அண்ணே.
@ஜ.ரா.ரமேஷ் பாபு
கதையோ கற்பனையோ இருந்தாலும் அருமை நிரூ
//
நன்றி பாஸ்.
@"என் ராஜபாட்டை"- ராஜா
உண்மை கதை போல உள்ளது ....?
//
இல்லையே பாஸ்..
@veedu
கற்பனை என்பதை நம்பமுடியவில்லை சரி கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும் எழுத்துநடையில் கவித்துவம் இருக்கின்றது
காதல் கதைகள் எத்தனை படித்தாலும் சலிப்பூட்டுவது இல்லை அதுவும் கவிதைநடையில் இருந்தால் இன்னும் சுவைதான்
நான் எப்பவும் வேகமாக படிக்க கூடியவன் மெதுவாக படித்தேன் அருமை....அருமை....
//
நன்றி அண்ணே...
@F.NIHAZA
நன்றி அக்கா.
@சென்னை பித்தன்
வெட்கத்தை மட்டுமல்ல வேதனையையும்தான்!
//
ஆமாம் ஐயா.
@MANO நாஞ்சில் மனோ
கற்பனையா, என்னாய்யா குழப்புறீங்க...
//
ஆமாண்ணே...
@athira
அவ்வ்வ்வ்வ்:)) அணிலை மரமேற விட்ட கதையாப்போச்சே நிரூபனின் கதை:)).
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
என்ன செய்ய அக்கா,
தமிழனாய்ப் பிறந்தால் பலதை இழந்து தானே ஆகனும்.
ஹி....ஹி....
//ஊ.கு:
எங்க நிரூபன் குழைபோடும் ஆட்களை இங்கின காணவில்லை:)) குழை தீர்ந்துபோச்சோ?:)), இல்ல குளிர் பிடிச்சு காய்ச்சல் வந்திட்டுதோ?:))).
ஹையோ படிச்சதும் கிழிச்சிடுங்க நிரூபன்.... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே:))))
//
ஹி...ஹி..
ஊசிக் குறிப்பு நல்லாத் தான் இருக்கு.
குழை போடுறவர் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பள்ளிக்கூடம் போயிட்டு, வேலைக்கும் போயிட்டார் என்று நினைக்கிறேன்.
காட்டான் மாம்ஸ் இன்று இரவு வருவார் என நினைக்கிறேன்.
@கோகுல்
வணக்கம் பாஸ்,நலமா?
வேலாயுதக்காய்ச்சல் விட்டுட்டுதா?
//
அடப் பாவி........
உங்க புண்ணியத்தில ஏதோ நல்லா இருக்கேன்..
@angelin
//தீபாவளியன்று மழையில் நனைந்த காரணத்தினால் காய்ச்சல் ஆக்கிடுச்சு. வைரஸ்ஸோடு வைரஸ்ஸாக இருமலும், தடிமலும் //'
take care .
கதையின் முடிவு கஷ்டமா இருக்கு கற்பனையாக இருந்தாலும்
//
நன்றி அக்கா.
கற்பனையோ ,நிஜமோ கதை அருமை
அனைத்திலும் வாக்களித்தேன்
@Mohamed Faaique
எனக்கும் தலைப்பை பார்த்தவுடன் தபூசங்கர்’தான் நினைவு வந்தது.
பதிவின் அமைப்பும் அவர் பாணியில்தான் இருக்கிறது.
கதையை ரசித்துப் படித்தேன்
.//
ஆமா அப்போ நீங்க இன்னமும் டிஸ்கியைப் படிக்கலையா?
கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்;-)))
@கோகுல்
கற்பனையா?
அவ்வ்வ்வ்வ்!
பதிவின் ஆரம்ப வரிகள் எனது பால்ய நினைவுகளை திரும்பிப்பாக்கவைத்தது.
பதிவின் கடைசி வரை எழுத்துநடை கட்டிப்போட்டு விட்டது.மீண்டு வர ரொம்ப நேரம் ஆச்சு!
முடிவு கொஞ்சம் கனக்க வைத்து விட்டது.
//
நன்றி பாஸ்....
@M.R
கற்பனையோ ,நிஜமோ கதை அருமை
அனைத்திலும் வாக்களித்தேன்
//
நன்றி அண்ணே..
@N.H.பிரசாத்
அருமையான காதல் கதை. என்னை உங்கள் பதிவில் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றி.
//
இதுக்கெல்லாம் எதுக்கு பாஸ் நன்றி...
"அடிக் கள்ளி! முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே! ஏன் இந்த ஓர வஞ்சனை" என்றேன்.//
பாஸூ... தலைப்பே கவிதையா கலக்கலா இருக்கு...
உங்களிடம் உள்ள இந்த எழுத்து நடை திறமை என்று மிளிர போகிறதோ... என்றாவது ஒரு நாள் மிக பெரிய இடத்திற்கு செல்வீர்கள் நண்பா... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
கனடா சென்றவுடன் தான் சடாரென முடித்துவிட்டீர்கள்... இருந்தாலும் முடிவு மனதை பிசைய வைக்கிறது...
யாவும் கற்பனையே... என்று சொல்கிறீர்கள்... ஆனால் கற்பனையாக நினைத்து பார்க்க முடியவில்லை .. நெடுநேரம் இந்த பதிவின் தாக்கம் மனதில் இருக்கும்... கலக்கிவிட்டீர்கள் நண்பா
உடலை பார்த்துக்கொள்ளுங்கள் நண்பா... சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்... உங்கள் நலம் பேணும் நண்பர்... இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
ஊர்காவலன் N.H பிரசாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நிரூபன் said...
காட்டான் ////மாம்ஸ் ////
ஹையோ.. இது வேறையோ?:))) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது எப்ப தொடக்கமாக்கும்?:))))..
கடவுளே நிரூபன்.... என்னைக் காட்டிக் குடுத்திடாதீங்க... நான் இப்போ முருங்ஸ்சில இல்லை... ல்ல்லை....ல்ல்ல்லை....ல்ல்லை...இடத்தை மாத்திட்டேன்ன்ன்ன்:))).
முடிவு பாலச்சந்தர் படம் போல்...
பிடிக்கல...ஆனால் நல்லா இருந்தது...
வயசாயிட்டு...அதான் பிடிக்கலைன்னு யாரோ சொல்றது கேட்குது...
மற்றபடி Very Matured நடை...உங்கள் முத்திரை...
கெட் வேல் சூன்...
கற்பனையா இது.....
கலக்கலா உங்க பாணியில்
அற்புதமா சொல்லியிருகீங்க......
கதை ரொம்ப நல்லா இருக்கு....
@Mohamed Faaique
எனக்கும் தலைப்பை பார்த்தவுடன் தபூசங்கர்’தான் நினைவு வந்தது.
பதிவின் அமைப்பும் அவர் பாணியில்தான் இருக்கிறது.
கதையை ரசித்துப் படித்தேன்
//
பாஸ், தமிழ் இலக்கிய உலகில் வெண்பா எழுதும் போது வெண்பாவில் வள்ளுவனின் சாயல் இருக்கிறதே என்று கூறுவதும், விருத்தம் எழுதும் போது கம்பனின் கம்பரசம் சொட்டுகிறதே எனக் கூறுவதும் இயல்பாகி விட்டது.
என்னைப் பொறுத்தவரை தபூசங்கர் எழுதிய ஆக்கத்தினை ஆதாரங்களோடு இணைப்பில் தந்திருக்கிறேன்.
அவர் எழுதியது வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்?
அடியேன் எழுதியது முத்தத்தை கேட்டால் வெட்கத்தை தருகிறாயே! ஏன்?
ஆகவே....
என் பதிவின் தலைப்பினை தனிமரமும், பாயிக் முஹமட் அவர்களும் ஆதாரங்களுடன் நிரூபித்தால்,
இது தபூசங்கரினது என்று,
அடுத்த நிமிடமே நான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.
நிரூ...சொல்லறதெல்லம் சொல்லிப்போட்டு கற்பனையோ....நாங்கள் நம்பவேணும்.எத்தனை பேர் நம்பினவை !
என்னது யாவும் கற்பனையா?
முத்தம் கேட்டு
அடிவாங்க வில்லை
வெட்கம் தான் வாங்கினீர்கள் மிகிழ்ச்சி ...
நல்ல பதிவு
Post a Comment