Sunday, October 9, 2011

ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள் - பாகம் 07

இத் தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க.....
ஆறாவது பாகத்தின் தொடர்ச்சியாக......
இவ்ளோ பெரிய வரலாற்றினைக் கொண்டிருக்கிற புலி மாமாக்கள் ஏன் சிங்கள ஆமியாக்களோட அடிபடுறாங்க? என்று நான் வாயினை ஆவென்றபடி கேள்வியெளுப்பினேன். அம்மா என்னை உற்றுப் பார்த்தவளாய் "தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய்? இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே?" என்று சொல்லிக் கொண்டிருக்க ஐயா "தம்பி நிரூக் குட்டி, இப்ப நாங்கள் சாப்பிடுவோம்,. இரவைக்கு (இரவிற்கு) மிகுதிக் கதையினைப் புள்ளைக்குச் சொல்லுறன்" என்றவாறு அடுப்படிப் (கிச்சன்) பக்கம் நகரத் தொடங்கினார். 

புட்டும் முட்டைப் பொரியலும் சமைத்து அம்மம்மா கொடுக்கவும், அம்மா ஆசையாக நிலாவினைக் காட்டி, தன் இடுப்பில் என்னை வைத்திருந்து "அங்க பார் தம்பி அம்புலி மாமா" என நிலாக் காட்டி உணவூட்டத் தொடங்கினா. "அம்மா அம்புலி மாமாவும் புலி மாமாக்களோட ஆள் தானே?" என குழந்தை தனமாய் கேள்வி எழுப்பினேன்.  
"உனக்கு செல்லம் கூடிப் (செல்லம் மெத்திப் போச்சு) போச்சு தம்பி" என அம்மா செல்லமாய் கடிந்தா. நானோ குழந்தை தனமாய் "ஆமிக்காரங்க(ள்) வரும் போது மாமா வீட்டிற்கு மேல தானே ஏறி ஒளிகிறவர். அப்படீன்னா அம்புலி மாமாவையும் ஆமியாளுங்க துரத்துறாங்க தானே" என்றேன்? 


அம்மாவோ, உனக்கு I.R.C  Knowledge என என்னைப் பாராட்டி கன்னத்தில் தாயன்பின் அடையாளமாக ஒரு செல்ல முத்தம் வைத்தா. நான் சாப்பிட அடம் பிடிக்கையில் "தம்பி நிரூக் குட்டி! வேளைக்கு (டைம்மிற்கு) சாப்பிட்டால் தானே ஐயா சொல்லுற (சொல்கிற) கதை கேட்கலாம்" என்று சொல்லியதும்  நானும் ஆர்வக் கோளாறில் அம்மா அள்ளித் தரும் புட்டுத் திரளைகளை உண்டு முடித்தேன். மீண்டும் மாநாடு கூடியது. ஐயாவைச் சுற்றி அம்மாவும், அம்மாவின் மடியில் நானும், அம்மம்மாவும் எனச் சூழ்ந்து கொண்டோம். 


அம்மா பாரளுமன்றத்தில் எதிர்க் கட்சி வரிசையில் இருந்து மக்கள் பிரச்சனையினைப் பேசாது சபையினை மட்டும் தொடங்கி வைக்க வணக்கம் போடும் அரசியல்வாதி போன்று, "பேரனுக்கு வரலாறு சொல்லும் போது, கொஞ்சம் விளக்கமாகவும், விரிவாகவும் சொன்னால் தானே எங்கட (எங்களின்) இளைய தலை முறைக்காவது கொஞ்சம் புரிந்துணர்விருக்கும்." என அடியெடுத்து மாநாட்டினை ஆரம்பித்து வைத்தா.


"சிங்களவர் இலங்கையில் எப்போது காலடி எடுத்து வைத்தார்கள் என்று காலையில சொன்னீங்க. ஆனால் அவர்களின் முழுமையான ஆரம்ப கால வரலாற்றினையும், இலங்கையில் வாழும் ஏனைய இனங்களின் வரலாற்றினையும் சொல்லவில்லைத் தானே?" அதனையும் சேர்த்துச் சொன்னால் தானே பேரனுக்கு நல்ல விளக்கம் (வெளக்கம்) கிடைக்கும்? அத்தோடு இலங்கையில் வாழும் ஏனைய இனங்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லி அவர்களின் வரலாறுகளையும் தொட்டுச் சென்றால் சிறப்பாக இருக்கும் அல்லவா?" என்று அம்மா சொல்லியதும் ஐயா தன்னுடைய பிரசங்கத்தை ஆரம்பித்தார். 


இலங்கையில் வாழ்ந்த ஆதிக் குடிகள் இயக்கர் - நாகர் என்றும், அதன் பின்னர் தென் இந்தியாவிலிருந்துஇலங்கைக்கு வந்து காலதி காலமாக பூர்வீகமா - நீண்ட (தொன்மையான) வரலாற்றினை உடையவர்களாகத் தமிழர்கள் வாழ்ந்து வரும் சூழலில்; 
இடைப்பட்ட காலத்தில் கி.மு நான்காம் நூற்றாண்டளவில் இலங்கையினுள் நுழைந்த திராவிட மொழிக் குடும்பம் அல்லாத வட இந்தியர்களின் இனக் கலப்பு வழித் தோன்றல் தான் இந்தச் சிங்களவர்கள். ஆனால் உண்மையில் இன்றைய சிங்களவர்களின் பூர்வீகம் யாவும் தமிழர்களினை அடியொற்றியே வந்தது, இலங்கையில் உள்ள நீண்ட வரலாற்றினை உடைய இனமாக விளங்கும் தமிழ் இனத்தின் ஆரியக் கலப்பு வழித் தோன்றல் தான் இந்தச் சிங்களவர்கள். "என்ன, நான் சொல்லுவது ஏதாச்சும் விளங்குதா" என ஐயா கேள்வியெழுப்பினார்.


"கலப்பு வழித் தோன்றல் "அப்படீன்னா என்ன ஐயா? எனக்கு ஒன்னும் விளங்கலையே? (வெளங்கலையே) என ஐயாவைப் பார்த்தேன். ஐயா விரிவாக உரைக்கத் தொடங்கினார். இலங்கையில் ஆதிக் குடிகளாகச் சிறப்பித்துச் சொல்லப்படும் இயக்கர் - நாகர் இனங்களுள் தமிழ் நாட்டின் மூதாதையர்களான இருளர்களும், அந்தமான் தீவின் ஜரவாக்கள் இன மக்களும், ஆஸ்திரேலியாவின் ஆதிக் குடிகளும், இலங்கையின் வேடுவர்களும் உள்ளடங்குவார்கள்.
ஆஸ்திரேலிய ஆதிக் குடிகள்.
ஆரம்பகாலப் பூகோளவியல் அடிப்படையில் லெமூரியாக் கண்டம் ஒன்றாக இருந்த காரணத்தினால் தான் இலங்கையில் வாழ்ந்த மூதாதையர்களுக்கும், ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கும், அந்தமானில் வாழ்ந்த மக்களிற்கும் இடையே கலாச்சார, மொழி அடிப்படையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வரலாறு சொல்லுகின்றது. தென் இந்தியாவிலிருந்து சென்ற தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்த மேற்படி இன மக்களோடு கலப்புற்றதன் காரணத்தினால் தான் இயக்கர், நாகர் - வேடுவர் இன மக்களின் பேச்சு மொழி யாவும் திரிவுபடுத்தப்பட்டு தமிழ் மொழி செல்வாக்குப் பெறுகின்றது (முதன்மை பெறுகின்றது).  


கி.பி 3-9ம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் தமிழகத்தினைக் களப்பிரர்களும், பாண்டியர்களும் கைப்பற்றி மாறி மாறி ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகையில் தமிழிற்குத் தமிழகத்தில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இந்த வீழ்ச்சியினை சிங்களவர்களும் தமக்குச் சாதகாமகப் பயன்படுத்தி வட இந்தியாவில் பேசப்பட்ட பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலிருந்தும், தமிழ் மொழியிலிருந்தும் கலந்த பாணியில் தமக்கென்று தனியான மொழி நடையினை உருவாக்குகின்றார்கள். 


சிங்களவர்கள் தமிழர்களோடு கலப்புற்ற காரணத்தினால் அவர்கள் சார்ந்திருந்த பௌத்த மதத் தழுவலும், அவர்களின் மணிப் பிரவாள நடை கலந்த மொழி நடையும், திரிவுற்று தமிழில் நின்றும் பிறழ்ந்து (திரிபடைந்து) சிங்களமாக உருமாற்றம் பெற்றுக் கொண்டதோடு, தென் இலங்கையினை அண்டிய பகுதிகளில் சிங்களவர்கள் தனித்திருந்த காரணத்தினால் சிங்களம் பெரும்பான்மை எனும் நிலையினை இலங்கையின் தென் பகுதியில் பெற்றுக் கொள்கிறது.


"ஐயா, அப்போ; சிங்களவர்கள் இனம் உருவாகுவதற்கு காரணமான வட இந்தியர்கள் எப்படி இலங்கைக்குள் வந்தார்கள் என்று சொல்லவில்லையே?" என அம்மா குறுக்கிட்டாள். 
"கி.மு. 700ம் நூற்றாண்டளவில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் நுழைந்த விஜயனும், அவனுடன் கூட வந்த 700 தோழர்களையும் கொண்டு தான் சிங்கள இனத்தின் கலப்பு முறை வரலாறு இலங்கையில் தொடங்குகின்றது" என ஐயா மீண்டும் தொடர்ந்தார்.


இந்த விஜயன் வட இந்தியாவில் லாலா தேசம் என முற் காலத்தில் அழைக்கப்பட்ட வங்காளம், ஒரிசா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய சிங்கபாகு மன்னனது இராஜ்ஜியத்தில் பல அட்டூளியங்களையும், திருட்டுச் செயல்களையும் செய்த மன்னனின் மகன் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இதனால் ஆத்திரமுற்ற மன்னனோ விஜயனிற்கு எதிர்காலத்தில் நல்ல பழக்க வழக்கங்கள் உருவாகும் எனும் நம்பிக்கையில் விஜயனையும், அவனது 700 தோழர்களையும் கைது செய்து இலங்கைக்கு அனுப்பி வைக்கின்றார். 
விஜயன் இலங்கைக்கு வந்த வரலாற்றுச் சம்பவத்திற்கு ஆதாரமாம் வெளியிடப்பட்டு பின்னர் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட அஞ்சல் முத்திரை. 
இந்த வரலாற்றினைச் சிறப்பித்து இலங்கைத் தபால் துறை அமைச்சு, 1956ம் ஆண்டு விஜயனின் வருகை எனும் பெயரில் அஞ்சல் முத்திரை ஒன்றினை வெளியிட்டிருந்தது. பின்னர் சிங்கள இனவாதிகள், தமிழர்களை அடிமைகளாக காலதி காலமாக நடாத்த வேண்டும், தமிழர்கள் தான் இலங்கையின் வந்தேறு குடிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து முழு நாட்டையும் தாமே ஆள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த முத்திரையினை தடை செய்திருந்தார்கள். ஆனாலும் வரலாற்றுப் பாடத்தில் விஜயனின் வருகையினைத் தொடர்ந்து தான் இலங்கையில் சிங்கள இனம் தோற்றம் பெற்றது என்று மகாவம்சத்தை மோற்கோள் காட்டி இந்த காலத்திலும் கற்பிக்கின்றார்கள். நீ பெரியவனாகியதும் இவற்றையெல்லாம் அறிந்து கொள்வாய் என்று சொன்னார் ஐயா.


அப்போது நான் கேட்டேன். "ஐயா, நேற்றைக்கும் எங்கட டீச்சர் படம் பார் பாடம் படி என்று என்னோட பச்சை மட்டைப் புத்தகத்தில இலங்கையில் வாழ்கிற மக்கள் இனம் என்று மூவின மக்களையல்லவா காட்டிப் (சுட்டிக் காட்டி) பாடஞ்ச் சொல்லித் தந்தா? நீங்க தமிழர் சிங்களவர் பற்றித் தானே சொல்லியிருக்கிறீங்க?" என்று ஐயாவின் வரலாற்றில் நான் ஏதோ சிறு தவறு கண்டு பிடித்த பெருமிதத்தில் சுட்டித் தனமாய்ச் சுட்டிக் காட்டினேன். அப்போது அம்மம்மா வழி மறித்து, "ஓமப்பா (ஓம் அத்தான்) பேரனுக்கு டீச்சரம்மா முஸ்லிம் இன மக்கள், பறங்கியர் பற்றிப் படத்தில காட்டி வெளங்கப்படுத்தியிருப்பா. நீங்கள் அப்ப பேரன் சொல்லுற மாதிரி இஸ்லாம் மக்களின் வரலாற்றினையும், பறங்கியர்களின் வழித் தோன்றலையும் சொல்லவில்லைத் தானே?"


ஐயா ஹே...ஹே....எனச் சிரித்தார். "கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிசு தானே. ஆள் பயங்கர விண்ணனாத் தான் வருவான் (கெட்டிக்காரனாக)" என்று என்னைப் பாராட்டினார். கொஞ்சம் பொறு ராசா. இவ்ளோ கதையையும் கேட்டு உனக்கு நித்தா (தூக்கம்) வரலையே என்று என்னைப் பார்த்துக் கேட்டார் ஐயா. 
நானோ ம்....இல்லையே என்று சொன்னேன்.  அப்போது தான் ரோட்டில் நாய் குலைக்கும் சத்தம் கேட்டது. அம்மா தன் மடியில் ஈரமாக ஏதோ ஒட்டுவதை உணர்ந்து; "தம்பி எழும்பு (எந்திரு) பார்ப்பம் (பார்ப்போம்)" என்ற படி எழும்பிய போது, நான் நாய் குலைக்கும் சத்தத்தில் பயந்தவனாய் அம்மாவின் மடியில் இருந்த படியே சீச்சாம் பெய்திருந்தேன். 


"கிழவனைப் பாரன். ஏழு வயசாகப் போகுது. கதை கேட்கிறதில சூரப் புலி மாதிரி இருந்து கொண்டு கழுசாணோட (காற்சட்டையோட) மூத்திரம் அடிக்கிறான். ஹே....ஹே..ஹே.." எனச் சிரித்தார் ஐயா. 
"ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" என நான் மீண்டும் நினைபடுத்தினேன். "நிரூபன் பொடியன் (பையன்) என்னைத் தூங்கவும் விட மாட்டான் போலிருக்கே" என்று ஐயா செல்லமாய்க் கோபித்தவாறு, "நாளைக்கு இரவு உனக்குத் தூக்கம் வரப் பண்ண ஏதும் வேணுமில்லே! அப்போ நாளைக்கே சொல்றேன்" என்றவாறு படுக்கையறைப் பக்கம் போனார்..............
                                                            வரலாறு எச்சங்களாய் விரியும்............................


இத் தொடருக்கான உச்சாத் துணை நூல்கள்: 
*Ancient Jaffna: By M.C. Rasanayagam.
*இலங்கையில் தமிழர்: கலாநிதி முருகர் குணசிங்கம்
*The Demography Of Ceylon An Introductory Survey: B.L.Panditaratna And S.Selvanagakam.
****************************************************************************************************************************************
இன்றைய பதிவர் அறிமுகம், சிறுகதைகள், மண் வாசனை கமழும் ஊர் விடயங்கள், குதூகலமூட்டும் குழந்தைகளுக்கான தகவல்கள் எனப் பல சுவையான பதிவுகளை எழுதிக் கொண்டிருக்கும் ஒரு பதிவரின் அறிமுகத்தினைத் தாங்கி வருகின்றது. 


"நாய்க் குட்டி மனசு" எனும் வலைப் பதிவினூடாக "நாய்க் குட்டி மனசு" எனும் புனை பெயரில் சகோதரி ஒருவர் பல சுவையான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றார். 


"நாய்க் குட்டி மனசு" வலைப் பதிவிற்குச் செல்ல:
http://venthayirmanasu.blogspot.com/
******************************************************************************************************************************************
Courtesy Images From: Google

69 Comments:

shanmugavel said...
Best Blogger Tips

வணக்கம் சகோ!

பலரும் அறியாத வரலாற்றுத்தகவல்கள்.அருமை நிரூபன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...
Best Blogger Tips

உரமானவர்களின் தியாகங்கள்
நெஞ்சம் கனக்கும் வரிகளுடன்...

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிசு தானே. ஆள் பயங்கர விண்ணனாத் தான் வருவான் (கெட்டிக்காரனாக)" என்று என்னைப் பாராட்டினார்./

நாங்களும் பாராட்டுகிறோம்..வாழ்த்துகிறோம்.

இராஜராஜேஸ்வரி said...
Best Blogger Tips

"நாய்க் குட்டி மனசு" எனும் வலைப் பதிவினூடாக "நாய்க் குட்டி மனசு" எனும் புனை பெயரில் சகோதரி ஒருவர் பல சுவையான பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றார். /

பதிவர் அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்>

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

சரித்திரம் கண்முன் விரிகிறது..... தொடருங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...
Best Blogger Tips

நாகர்கள் என்பதில் இருந்தே நாகர்கோவில் எனும் ஊர் வந்தது.....!

Unknown said...
Best Blogger Tips

Gud post!

Unknown said...
Best Blogger Tips

அண்ணே படிச்சிட்டு வாரேன்

Mohamed Faaique said...
Best Blogger Tips

இலங்கயின் புராதன் வரலாற்றை அழகான முறையில் விவரிக்கிறீர்கள், நன்றி

Unknown said...
Best Blogger Tips

நண்பா சாப்பிட போய்விட்டேன் அதான் Late

Thanks For Sharing

Mohamed Faaique said...
Best Blogger Tips

அப்போ...நீங்க 7 வயசுலயும்... ச்சீ...ச்சீ..

Yoga.s.FR said...
Best Blogger Tips

காலை வணக்கம் நிரூபன்!அழகாக எழுதியிருக்கிறீர்கள்.பின்னால் விபரமாக பின்னூட்டுவேன்.

கோகுல் said...
Best Blogger Tips

சில வரலாற்றுக்குறிப்புகளை இன்றைய உங்கள் பதிவிநூடே அறிந்து கொண்டேன்!

rajamelaiyur said...
Best Blogger Tips

Super . . . .boss

Anonymous said...
Best Blogger Tips

/////"அம்மா அம்புலி மாமாவும் புலி மாமாக்களோட ஆள் தானே?" என குழந்தை தனமாய் கேள்வி எழுப்பினேன்.
"உனக்கு செல்லம் கூடிப் (செல்லம் மெத்திப் போச்சு) போச்சு தம்பி" என அம்மா செல்லமாய் கடிந்தா. நானோ குழந்தை தனமாய் "ஆமிக்காரங்க(ள்) வரும் போது மாமா வீட்டிற்கு மேல தானே ஏறி ஒளிகிறவர். அப்படீன்னா அம்புலி மாமாவையும் ஆமியாளுங்க துரத்துறாங்க தானே" என்றேன்? //// அப்போ தொடக்கம் நீங்க இப்பிடி தானோ ))

Anonymous said...
Best Blogger Tips

///இலங்கையில் வாழ்ந்த ஆதிக் குடிகள் இயக்கர் - நாகர் என்றும்,/// இயக்கர் நாகர்களும் பிற்காலத்தில் தலைமுரயூடாக தமிழ் /சிங்களம் என்ற ஒரு இனத்துக்குள் உள்ளடங்கியிருப்பார்கள் தானே..

நாகர்கள் பிற்காலத்தில் தமிழர்களாக மருவியதாகவும் கூறுகிறார்கள்..அதற்காக இன்றும் தமிழர்கள் மத்தியில் காணப்படும் நாகம்பா ,நாகதம்பிரான் ,நாகலிங்கம் போன்ற மரபு பெயர்களை குறிப்பிடுகிறார்கள். அத்தோடு இயக்கர்கள் பெரும் பகுதி பவுத்த-ஆரியர்களால் அழிக்கப்பட்டதாகவும் சில ஆராச்சியாளர்கள் சொல்லுகிறார்கள் !

Anonymous said...
Best Blogger Tips

ஆரம்பகாலப் பூகோளவியல் அடிப்படையில் லெமூரியாக் கண்டம் ஒன்றாக இருந்த காரணத்தினால் தான் இலங்கையில் வாழ்ந்த மூதாதையர்களுக்கும், ஆஸ்திரேலியப் பழங்குடிகளுக்கும், அந்தமானில் வாழ்ந்த மக்களிற்கும் இடையே கலாச்சார, மொழி அடிப்படையில் நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வரலாறு சொல்லுகின்றது./// ஆமாம் பாஸ் இது பற்றி எங்கயோ கொஞ்சம் அறிஞ்சிருந்தன்...

தனிமரம் said...
Best Blogger Tips

ஆனாலும் வரலாற்றுப் பாடத்தில் விஜயனின் வருகையினைத் தொடர்ந்து தான் இலங்கையில் சிங்கள இனம் தோற்றம் பெற்றது என்று மகாவம்சத்தை மோற்கோள் காட்டி இந்த காலத்திலும் கற்பிக்கின்றார்கள். நீ பெரியவனாகியதும் இவற்றையெல்லாம் அறிந்து கொள்வாய் என்று சொன்னார் ஐயா.// 

நானும் இப்படித்தான் படித்தேன் என் சிற்றறிவும் இப்படித்தான் இதுவரை வரலாற்றை இனி படிக்க முடியாவிட்டாலும் உங்கள் தேடல் மூலம் தெளிவு பெற்றேன்!

தனிமரம் said...
Best Blogger Tips

நம் வரலாறு நீண்ட பாரம் பறியம் எனக்கும் இலங்கையில் இருக்கும் வேடுவச் சமூகம் பற்றிய சந்தேகத்தை உங்கள் பதிவு தெளிவு படுத்தியது நன்றி சகோ!

தனிமரம் said...
Best Blogger Tips

அடுத்த சந்ததி சரி சரியான தகவல் தெரிந்து படிக்கனும் என்ற உங்களின் பணி தொடரட்டும்!

தனிமரம் said...
Best Blogger Tips

ஓட்டு இரவு தான் பாஸ் போடமுடியும்! மேலும் இண்ட்லி பிரச்சனையாக இருக்கு கொஞ்சம் விளக்கமாக பதிவு ஒன்று போடலாமே!!!!

Unknown said...
Best Blogger Tips

தொடரை ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன்,தொடருங்கள் நண்பரே.

நிரூபன் said...
Best Blogger Tips

@shanmugavel

வணக்கம் சகோ!

பலரும் அறியாத வரலாற்றுத்தகவல்கள்.அருமை நிரூபன்.//

நன்றி அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@கவிதை வீதி... // சௌந்தர் //
கவிதை வீதி... // சௌந்தர் // said...

உரமானவர்களின் தியாகங்கள்
நெஞ்சம் கனக்கும் வரிகளுடன்...//

நன்றி சகோ.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிசு தானே. ஆள் பயங்கர விண்ணனாத் தான் வருவான் (கெட்டிக்காரனாக)" என்று என்னைப் பாராட்டினார்./

நாங்களும் பாராட்டுகிறோம்..வாழ்த்துகிறோம்//

நீங்களும் நெசமாவா சொல்லுறீங்க.

மிக்க நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

பதிவர் அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்>//

மீண்டும் நன்றி அம்மா.

நிரூபன் said...
Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி

சரித்திரம் கண்முன் விரிகிறது..... தொடருங்கள்//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@பன்னிக்குட்டி ராம்சாமி

நாகர்கள் என்பதில் இருந்தே நாகர்கோவில் எனும் ஊர் வந்தது.....!//

ஆமாம் அண்ணா.

நிரூபன் said...
Best Blogger Tips

@மைந்தன் சிவா

Gud post!//

நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@வைரை சதிஷ்

அண்ணே படிச்சிட்டு வாரேன்//

ஓம் நீங்கள் படிச்சிட்டு வாங்க.

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

இலங்கயின் புராதன் வரலாற்றை அழகான முறையில் விவரிக்கிறீர்கள், நன்றி//

நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@வைரை சதிஷ்
நண்பா சாப்பிட போய்விட்டேன் அதான் Late

Thanks For Sharin//

சண்டேன்னா என்ன மரக்கறியா?
அப்போ ஒரு பிடி பிடிச்சிருப்பீங்களே;-)))

நிரூபன் said...
Best Blogger Tips

@Mohamed Faaique

அப்போ...நீங்க 7 வயசுலயும்... ச்சீ...ச்சீ..//

ஹே....ஹே..
அடப் போங்க பாஸ்..
என்னோட படிச்ச ஒரு பையன் ஒன்பது வயது வரைக்கும் தாய்ப்பால் வேற குடிச்சிருக்கான்;-)))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@Yoga.s.FR

காலை வணக்கம் நிரூபன்!அழகாக எழுதியிருக்கிறீர்கள்.பின்னால் விபரமாக பின்னூட்டுவேன்.//

மிக்க நன்றி ஐயா.

உங்களைப் போன்ற பெரியவர்களின் பின்னூட்டங்களிற்காகவும், விமர்சனங்களிற்காகவும், தவறுகள் ஏதும் இருப்பின் நீங்கள் சுட்டிக் காட்டுவீங்கள் எனும் ஆவலோடும் காத்திருக்கிறேன்.

நிரூபன் said...
Best Blogger Tips

@கோகுல்

சில வரலாற்றுக்குறிப்புகளை இன்றைய உங்கள் பதிவிநூடே அறிந்து கொண்டேன்!//

நன்றி பாஸ்.

நிரூபன் said...
Best Blogger Tips

@"என் ராஜபாட்டை"- ராஜா

Super . . . .boss//

பாஸ்..வரலாறு பற்றி கொஞ்சமாவது சொல்லியிருக்கலாமே..

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
அப்போ தொடக்கம் நீங்க இப்பிடி தானோ )//

என்ன செய்வது அது பிறவியிலே ஊறி விட்டதே;-))))

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.

நாகர்கள் பிற்காலத்தில் தமிழர்களாக மருவியதாகவும் கூறுகிறார்கள்..அதற்காக இன்றும் தமிழர்கள் மத்தியில் காணப்படும் நாகம்பா ,நாகதம்பிரான் ,நாகலிங்கம் போன்ற மரபு பெயர்களை குறிப்பிடுகிறார்கள். அத்தோடு இயக்கர்கள் பெரும் பகுதி பவுத்த-ஆரியர்களால் அழிக்கப்பட்டதாகவும் சில ஆராச்சியாளர்கள் சொல்லுகிறார்கள் !//

ஆமா பாஸ்..ஆனாலும் இவை பற்றி இன்னும் விரிவாக ஆராயலாம், ஆனால் நான் ஈழத்தின் வரலாற்றோடு, சம கால நிகழ்வுகள் வரை - முள்ளிவாய்க்கால், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வரையான சம்பவங்களை உள்ளடக்கி எழுதவுள்ள காரணத்தினால் கொஞ்சம் விரிவாக அலச முடியவில்லை.

நிரூபன் said...
Best Blogger Tips

@கந்தசாமி.
ஆமாம் பாஸ் இது பற்றி எங்கயோ கொஞ்சம் அறிஞ்சிருந்தன்..//

அடடா....மிக்க நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

நானும் இப்படித்தான் படித்தேன் என் சிற்றறிவும் இப்படித்தான் இதுவரை வரலாற்றை இனி படிக்க முடியாவிட்டாலும் உங்கள் தேடல் மூலம் தெளிவு பெற்றேன்!//

நன்றி பாஸ்...

இப்போது வரலாறு மாற்றி விட்டார்கள். கதை 87களின் பிற்பகுதியில் நகர்கின்ற காரணத்தினால் வரலாற்றுப் பாட மாற்றம் பற்றி எழுத முடியாது தானே.
சம காலத்திற்குத் தொடர் நகருகின்ற போது, விஜயன் வருகை பற்றிய சம்பவங்கள் திரிபுபடுத்தப்பட்டமை பற்றி விளக்கமாகச் சொல்ல்கின்றேன்.

தற்போது வரலாற்றுப் பாடப் புத்தகத்திலிருந்து விஜயனும் அவனது 700 தோழர்கள் விடயத்தினையும் நீக்கி விட்டார்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

நம் வரலாறு நீண்ட பாரம் பறியம் எனக்கும் இலங்கையில் இருக்கும் வேடுவச் சமூகம் பற்றிய சந்தேகத்தை உங்கள் பதிவு தெளிவு படுத்தியது நன்றி சகோ!//

மிக்க நன்றி பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

அடுத்த சந்ததி சரி சரியான தகவல் தெரிந்து படிக்கனும் என்ற உங்களின் பணி தொடரட்டும்!//

மிகவும் சந்தோசமாக இருக்கிறது நண்பா.
தொடருங்கள்.

நிரூபன் said...
Best Blogger Tips

@தனிமரம்

ஓட்டு இரவு தான் பாஸ் போடமுடியும்! மேலும் இண்ட்லி பிரச்சனையாக இருக்கு கொஞ்சம் விளக்கமாக பதிவு ஒன்று போடலாமே!!!!//

பாஸ், இண்ட்லி ஓட்டுப் பட்டையில் உள்ள இண்ட்லி எனும் தமிழ் எழுத்தில் கிளிக் செய்வதன் மூலம் இண்ட்லியில் ஓட்டளிக்க முடியும் பாஸ்..

நிரூபன் said...
Best Blogger Tips

@ரா.செழியன்.

தொடரை ஆர்வத்தோடு வாசித்து வருகிறேன்,தொடருங்கள் நண்பரே.//

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பா.
உங்களின் ஆதரவு உள்ள வரை தொடருவேன்.

நன்றி நண்பா.

K said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் பெரியப்பா! சுவமா இருக்கிறீங்களோ?

K said...
Best Blogger Tips

"தம்பி எவ்ளோ நேரத்திற்குத் தான் வாயினை ஆவென்று வைத்திருப்பாய்? இலையான் (கொசு) வாயிற்குள் போயிடுமெல்லோ. வாயை மூடலாமே?"///////

ஆவெண்ட சங்கரி என்று சொல்வார்களே! அது நீங்களா?

K said...
Best Blogger Tips

"ஆமிக்காரங்க(ள்) வரும் போது மாமா வீட்டிற்கு மேல தானே ஏறி ஒளிகிறவர். அப்படீன்னா அம்புலி மாமாவையும் ஆமியாளுங்க துரத்துறாங்க தானே" என்றேன்? ///////

ஆஹா, என்ன அறிவு? என்ன அறிவு??

K said...
Best Blogger Tips

அம்மாவோ, உனக்கு I.R.C Knowledge என என்னைப் பாராட்டி கன்னத்தில் தாய்மையின் அடையாளமாக ஒரு செல்ல முத்தம் வைத்தா.////////

நிரூ, இந்த இடத்தில் தாய்மையின் அடையாளமாக... என்ற சொற்றொடர் பொருத்தம் தானா?

தாய்மை நிலை என்பது - ஒரு பெண் கருவுற்று குழந்தையை பிரசவிக்கும் காலம் வரையான, நிலைமையைக் குறிப்பது!

குழந்தை பிறந்ததும் அவள் தாய்மை நிலை நீங்கி, தாயாகவே மாறிவிடுகிறாள்!

எனவே இந்த இடத்தில், ” தாயன்பின் அடையாளமாக” என்று வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

ஒருக்கா யோசிச்சுப் பார் மச்சி!

K said...
Best Blogger Tips

இந்த வரலாற்றினைச் சிறப்பித்து இலங்கைத் தபால் துறை அமைச்சு, 1956ம் ஆண்டு விஜயனின் வருகை எனும் பெயரில் அஞ்சல் முத்திரை ஒன்றினை வெளியிட்டிருந்தது. பின்னர் சிங்கள இனவாதிகள், தமிழர்களை அடிமைகளாக காலதி காலமாக நடாத்த வேண்டும், தமிழர்கள் தான் இலங்கையின் வந்தேறு குடிகள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து முழு நாட்டையும் தாமே ஆள வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த முத்திரையினை தடை செய்திருந்தார்கள்.////////

அப்பட்டமான உண்மை! சரியான வரலாறு!

K said...
Best Blogger Tips

ஐயா ஹே...ஹே....எனச் சிரித்தார். "கடுகு சிறிதென்றாலும் காரம் பெரிசு தானே. ஆள் பயங்கர விண்ணனாத் தான் வருவான் (கெட்டிக்காரனாக)" என்று என்னைப் பாராட்டினார். ////////

ஹி ஹி ஹி நிரூபன் வலு விண்ணன் தான்! எல்லாத்திலையும்!

K said...
Best Blogger Tips

"ஐயா முஸ்லிம்கள் பற்றி ஏதும் சொல்லையே?" என நான் மீண்டும் நினைபடுத்தினேன். "நிரூபன் பொடியன் (பையன்) என்னைத் தூங்கவும் விட மாட்டான் போலிருக்கே" என்று ஐயா செல்லமாய்க் கோபித்தவாறு, "நாளைக்கு இரவு உனக்குத் தூக்கம் வரப் பண்ண ஏதும் வேணுமில்லே! அப்போ நாளைக்கே சொல்றேன்" என்றவாறு படுக்கையறைப் பக்கம் போனார்..............///////

இத்தொடரின் அடுத்த பகுதியை எழுதும் போது மிகுந்த அவதானத்துடன் எழுதுவாய் என்று நினைக்கிறேன்!

K said...
Best Blogger Tips

தொடர் சூப்பரா போகுது மச்சி!

M.R said...
Best Blogger Tips

வணக்கம் நண்பரே

தொடர்ந்து வாசித்து வருகிறேன் ,பகிர்வுக்கு நன்றி நண்பா

test said...
Best Blogger Tips

அழகாக எழுதியுள்ளீர்கள் நிரூ!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Best Blogger Tips

சகோ தாங்கள் இதனை தொடராக எழுதி வருவதை அறிவேன் ,
ஆனால் இது பிழையான வரலாற்றின் நீட்சி என்பதுவே எனது நிலைப்பாடு.
மற்றபடி இது பற்றிய சரியான வரலாறு சரியான சமயத்தில் வெளி வரும் என்பதுவே உண்மை.இதற்கான உத்திரவாதத்தினையும் தாங்களுக்கு இன்று தருகின்றேன்.மேலும் உண்மையான வரலாறு வெளிப்படும் பொழுது ஒட்டுமொத்த தமிழினமும் பெருமையடையும்,அதோடு உலக மாந்தரினமும் மகிழ்வுடன் அனைத்தும் ஏற்று போற்றும்.

தமிழர்கள் தங்களின் வரலாற்று பிழையை சரிசெய்து வளரவேண்டிய காலகட்டத்தில் தற்பொழுது இருப்பதாலும் ,மிகவும் கசப்பான சில உண்மைகளை ,நிகழ்வுகளை ஜீரணிக்க வேண்டிய தருணம் இது என்பதாலும் ,தற்பொழுது சற்று நிதானத்துடனே பயணிக்கவேண்டியுள்ளது .


மற்றபடி தாங்களின் மீது நன்மதிப்பு வைத்திருப்பதால் இதனை சொல்லுகிறேன் அவ்வளவே.
தவறாக எண்ணவேண்டாம் .
தொடருங்கள் ... தொடர்கிறேன் ...

காட்டான் said...
Best Blogger Tips

வணக்கம் நிரூபன் தொடரை அருமையாக கொண்டு செல்கிறீர்... வாழ்த்துக்கள்!!

காட்டான் said...
Best Blogger Tips

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நாகர்கள் என்பதில் இருந்தே நாகர்கோவில் எனும் ஊர் வந்தது.....!

October 9, 2011 10:45 AM
இலங்கையில் இந்தியாவில் உள்ள ஊர்களின் பெயர்களில் அதிகமான ஊர்கள் இருக்கின்றன உதாரணம் திருநெல்வேலி,கோவளம்,ராமனாதபுரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்..!!

செங்கோவி said...
Best Blogger Tips

நாகர்கள்...தமிழர்கள் லெமூரியாவில் வாழ்ந்த கட்டத்தில் இந்தியாவில் வாழ்ந்த இனம்..நமக்கிணையான பண்பாடும், தொன்மையும் கொண்டவர்கள்..ஆழிப்பேரலைக்குப்பின் தமிழர்கள் வடக்குநோக்கி நகர்ந்த பின், நாகர்களும் தமிழர்களும் ஒன்றாக காலப்போக்கில் கலந்தனர் என்பது ஒரு வர்லாற்றுப்பார்வை..நாகர்கள் ஒடுக்கப்பட்டு, ஒழிந்தனர்..அவர்களின் பண்பட்டு எச்சங்களே மிஞ்சியது என்பது மற்றொரு வரலாற்றுப் பார்வை..

செங்கோவி said...
Best Blogger Tips

தமிழருக்கு அப்புறம் தான் சிங்களர் வந்தனர் என்பது தெளிவான வரலாறு..அதை யாரும் மூடி மறைக்க முடியாது.

செங்கோவி said...
Best Blogger Tips

சீரியசான வரலாற்றினை போரடிக்காமல் நகைச்சுவை கலந்து நகர்த்துவது நன்றாக உள்ளது..

நிரூபன் said...
Best Blogger Tips

@நண்டு @நொரண்டு -ஈரோடு
அன்பிற்குரிய அண்ணா,
இலங்கையில் தமிழர்களின் வரலாறு பற்றிப் பேசும் நூல்களை ஆதாரமாகக் கொண்டும், வரலாற்று ஆசிரியர்களின் உதவியோடும் தான் இப் பதிவினை, இந்தத் தொடரினை நகர்த்திச் செல்கிறேன்.
ஆகவே இத் தொடரில் தவறு அல்லது வரலாற்றில் தவறானா நீட்சி என்று தாங்கள் சொல்லும் போது, எந்தப் பத்தியில் தவறு என்று சுட்டி விளக்கினால் இன்னும் அகம் மகிழ்வேன், மிக்க மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

ஆகவே தவறான வரலாற்றின் நீட்சி என்று தாங்கள் சொல்லுவதனை நான் மறுக்கின்றேன். காரணம் இலங்கையின் கல்வி அமைச்சு ஆரம்ப காலத்தில் சிங்களவர்கள் வரலாறு என்று இதனைத் தான் பாட நூல்களிலும் அச்சிட்டிருந்தார்கள்.

கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் தொகுத்த வரலாற்று நூலில் உள்ள இலங்கையில் தமிழர் பற்றிய, சிங்களவர்கள் பற்றியம் குறிப்புக்களை இத் தொடருக்கு வலுச் சேர்க்கும் நோக்கில் ஆராய்ந்துள்ளேன், இந் நூல் உலகத் தமிழர்களால் இலங்கைத் தமிழர்களுக்கான பொதுவான - சரியான வரலாற்றினைச் சொல்லும் நூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.,

ஆகவே தவறான வரலாற்றின் நீட்சி என்பதற்கான ஆதாரங்களையோ, அல்லது தவறுகளையோ தாங்கள் சுட்டிக் காட்டுமிடத்திற்கு இது தொடர்பில் பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன்.

தங்களின் புரிந்துணர்விற்கு நன்றி.

காட்டான் said...
Best Blogger Tips

சிகிரிய ஓவியங்களிளேயே விஜயன் வந்ததை வரைந்துள்ளார்கள்.????????

காட்டான் said...
Best Blogger Tips

செங்கோவி said...
தமிழருக்கு அப்புறம் தான் சிங்களர் வந்தனர் என்பது தெளிவான வரலாறு..அதை யாரும் மூடி மறைக்க முடியாது.

உண்மைதான் விஜயனை வரவேற்றதே தமிழ் பெண் என்கிறார்களே!!!

கவி அழகன் said...
Best Blogger Tips

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாறேன் வாழ்த்துக்கள்

K.s.s.Rajh said...
Best Blogger Tips

வரலாறு விரிகின்றது.......

Mathuran said...
Best Blogger Tips

தாமதத்திற்கு மன்னிக்கவும் நிரூபன்..

தொடர் அசத்தலாக போகிறது

Mathuran said...
Best Blogger Tips

நிரூபன்.. சில சொற்கள்க்கு பதிவின் இறுதியில் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். உதாரண்மாக IRC என்ற சொல்லினை எமது பிரதேசத்தில் காவாலி என்ற சொல்லுக்கு பதிலாக பயன்படுத்துவார்கள். அப்படி ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொரு மாதிரி பயன்படுத்துவார்கள்

Unknown said...
Best Blogger Tips

அருமை நிரூ மொழியின் உருவாக்கம் ஆயாவின் மொழியில் அருமையாய் சொன்னீர்கள்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...
Best Blogger Tips

Thank u niruban only now i saw my blog being introduced
once again thank u sago

உங்கள் பார்வைக்காக!

நாற்று - thamilnattu.com

நாற்று - புரட்சி எப்.எம்

Puradsi News - Around The World In your Finger Tips

இங்கே கிளிக் செய்தால் அங்கே போகலாமுங்க

Related Posts with Thumbnails