"புள்ள சுமாரா கொஞ்ச நேரம் கடையில நிற்க முடியுமா? வாப்பா டவுனுக்குப் போயி கடைக்கு கொஞ்ச சாமான் வாங்கிட்டு வரனும்" எனத் தன் மளிகைக் கடையினுளிருந்து தன் மகளின் செல்லப் பெயரைச் சொல்லிக் குரலெழுப்பினார் பைசூர்.
"வாப்பா, பொறுங்க வாப்பா. இப்பத் தான் குளிச்சிட்டு வந்திருக்கேன். பர்தாவைக் காணல்ல. தேடி எடுத்து மாட்டிக்கிட்டு வாரேன்" எனப் பதிலுரைத்தவாறு நொடிப் பொழுதினுள் ரெடியாகித் தன் தந்தையின் கடைக்குள் நுழைந்தாள் சுமாரா. "வாப்பா சுருக்கா (விரைவாக) வந்திடுவீங்க ஏலேய்?" எனத் தன் தந்தையிடம் கேள்வி கேட்டு அவரை வழி அனுப்பி விட்டு கடையில் பொருட்களை அடுக்கத் தொடக்கினாள் சுமாரா.
அந் நேரம் பார்த்து ஒரு மெல்லிய புன்னகையோடு அவன் நுழைந்தான். "ஹலோ! எப்படி இருக்கிறீங்க?
கடைக்குள் ஒரு வாடிக்கையாளராக வந்திருப்பவன் - தன்னைப் பற்றி அறிமுகம் இல்லாதவன் எடுத்த எடுப்பிலேயே ஹலோ சொல்லிக் குசலம் (நலம்) விசாரித்ததும் ஷாக் ஆகி விட்டாள் சுமாரா. தன்னைச் சுதாகரித்தவளாகத் தன் பார்தா முகத்தை முழுவதுமாய் மறைக்கிறதா என மேனியில் கோடிட்டுப் பார்த்த பின்னர் அவனிடம் பேச்சுக் கொடுத்தாள் சுமாரா.
"சொல்லுங்க! என்ன வேண்டும்" என்று கொஞ்சம் அதட்டல் (மிரட்டல்) கலந்த தொனியில் கேட்டாள் சுமாரா.
"சொல்லுங்க! என்ன வேண்டும்" என்று கொஞ்சம் அதட்டல் (மிரட்டல்) கலந்த தொனியில் கேட்டாள் சுமாரா.
"அது....அது...அது தான் வேண்டும்" எனத் தன் பாடி லாங்குவேஜ் மூலம் அவள் வேண்டும் என்பதைச் சொல்லியும் சொல்லாதவனாக, விரலசைவு மூலம், அவளின் பின்னேயிருந்த சிகரட் லைட்டரினைக் காட்டினான் நிமல். சிகரட் லைட்டருக்குரிய பணத்தினை வாங்கிப் பெட்டிக்குள் போட்டு விட்டு, குனிந்த தலை நிமிராதவளாக சுமாரா மெதுவாக கடையின் கவுண்டரினை விட்டு நகர்ந்தாள். ஏமாற்றத்துடன் நிமல் வெளியேறினான். அந் நேரம் சுமாராவின் வாப்பாவும் டவுனிலிருந்து பொருட்களை வாங்கிக் கொண்டு வந்தார்.
"புள்ள சுமாரா நீ படிச்சு முடிச்சிட இன்னும் எம்புட்டு வருசம் இருக்கு?"
"வாப்பா நான் கூடிய சீக்கிரத்தில படிச்சு முடிச்சிட மாட்டேன். இப்போ படிக்கிற கம்பியூட்டர் சப்ஜெக்ட் முடிஞ்சதும், எனக்கு மேல படிக்க இன்னும் நெறைய சப்ஜெக்ட் இருக்கு வப்பா" என்று சொன்னாள் சுமாரா.
எனக்கும் புள்ள வயசாயிடுச்சில்லே. நான் சாக முன்னாடி ஒனக்கும் நிக்கா செஞ்சிட்டு அல்லாஹ்கிட்டப் போய்ச் சேர்ந்திட்டனும் என்று வேண்டுதல் வைக்கிறேன்" நீமட்டும் ஓக்கே சொன்னா. கூடிய சீக்கிரத்தில நிக்காவை சட்டு புட்டென்னு செஞ்சிடலாமில்லே" எனச் சொன்னார் பைசூர்.
"வாப்பா நான் படிக்கனும். எனக்கு என்ன அம்புட்டு வயசா? நானாவிற்குத் தானே வயசாகிடுச்சு. அவனுக்கு மொதல்ல ஒரு பொண்ணைப் பார்த்து சீக்கிரமே நிக்காவைச் செஞ்சு முடிச்சிடுங்க" எனச் சொல்லி விட்டு அவ் இடத்தை விட்டு நகர்ந்தாள் சுமாரா. மறு நாள். அதே நேரம் வாப்பா கடையினை விட்டு டவுனுக்குப் போகும் சமயத்தில் பள்ளி விடுமுறையிலிருந்த சுமாராவை அழைத்துக் கடையில் நிற்கச் சொல்லி விட்டுச் சென்றார்.
அதே சைக்கிளில்; ஸ்டைல் எனும் வார்த்தைக்கு வர்ணிப்பு பொருளாகக் கொஞ்சம் கால் கிழிந்து தொங்கும் டெனிம் ஜீன்ஸ் உடன் நிமல் மீண்டும் பைசூரின் கடைக்குள் நுழைந்தான். கடையினுள் அந் நேரம் தன் மனதில் சிக்கி விடத் துடிக்கும் தோகையாய் அதே பெண் இருப்பதனைக் கண்ணுற்றான். மனதில் கொஞ்சம் தைரியம் கொண்டவனாக, "இது ஒங்களோட கடையா?" எனக் கேட்டான்.
அதே சைக்கிளில்; ஸ்டைல் எனும் வார்த்தைக்கு வர்ணிப்பு பொருளாகக் கொஞ்சம் கால் கிழிந்து தொங்கும் டெனிம் ஜீன்ஸ் உடன் நிமல் மீண்டும் பைசூரின் கடைக்குள் நுழைந்தான். கடையினுள் அந் நேரம் தன் மனதில் சிக்கி விடத் துடிக்கும் தோகையாய் அதே பெண் இருப்பதனைக் கண்ணுற்றான். மனதில் கொஞ்சம் தைரியம் கொண்டவனாக, "இது ஒங்களோட கடையா?" எனக் கேட்டான்.
"ஆமா அதிலென்ன சந்தேகம்? எனப் பதில் உரைத்தாள் சுமாரா". பர்தாவினூடே அவளின் முழு அழகினையும் தரிசிக்க முடியா விட்டாலும், அவள் ஒரு பேரழகி தான் என்பதில் ஐயமில்லை எனத் தன் மனதினுள் கோட்டை கட்டினான் நிமல்.
"ஒங்கட பேரைச் சொல்ல முடியுமா?"
"ஒங்கட பேரைச் சொல்ல முடியுமா?"
அந்தக் கணமே சுமாராவின் மன அலைகளை "புள்ளைங்க வயசுக்கு வந்ததும் பசங்க கிட்டப் பேசக் கூடாது. முகத்தை நிமிர்ந்து பார்த்து படிக்கிற வயசில மனசில ஆசையை வளர்ப்பதே தப்பு” என வாப்பா சொல்லிய வார்த்தைகள் வந்து அடித்துச் சென்றன.
மௌனமாய் இருந்தவளின் மனச் சிறையின் எண்ணவோட்டத்தினை உடைத்தான் நிமல். "பெயரைத் தானே கேட்கிறேன். சொல்லுங்களேன்? சொன்னா குறைஞ்சா போயிடுவீங்க?""வேறு வழியின்றிப் பீடிகை போட்டவளாய், என்னோட பெயர் என்னவென்று நான் நேராச் சொல்ல மாட்டேன். முடிஞ்ச கண்டு பிடிச்சுக்குங்க" எனச் சொல்லி விட்டு,
என் பெயரின் முதல் எழுத்து சினிமாவில் பங்கு பற்றும் கலைஞர்களை அழைக்கின்ற சொல்லிருந்து தொடங்குகிறது.
இரண்டாம் எழுத்து, புன்னகைக்கு நிகரான சொல்லின் முதல் எழுத்திலிருந்து தொடங்குகின்றது.
மூன்றாம் எழுத்து பட்டி தொட்டியெங்கும் சலங்கை ஒலியோடு ஒலித்த சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகிப் படப் பாடலொன்றின் தொடக்க எழுத்தில் முடிகின்றது என பூடகாமய்ப் பதிலுரைத்து விட்டு நிமலை நிமிர்ந்து பார்த்தாள் சுமாரா.
நிமல் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவளை வைத்த கண் வாங்காதவனாய்ப் பார்த்துக் கொண்டு நின்றான். அப்போது அவனிடம் "பெயரைக் கண்டு புடிக்கத் தானே க்குளூ கொடுத்திருக்கேன். மொதல்ல என் பெயர் என்னவென்று கண்டு புடிச்சிட்டு வாங்க. அப்புறமா நான் உங்ககிட்டப் பேசுறேன்" என்று சொல்லி விட்டு அவ் இடத்தை விட்டு நகர்ந்தாள் சுமாரா.
சுமாராவின் நிஜப் பெயர் என்னவென்று யோசித்தபடி வீதியில் வந்த நிமல் என்னை எதேச்சையாகச் சந்தித்தான். ஏண்டா நிரூ. உனக்காச்சும் இந்தப் பெயர் என்னவென்று கண்டு பிடிக்க முடியுமா? என்று கேட்டான்.
சுமாராவின் நிஜப் பெயர் என்னவென்று யோசித்தபடி வீதியில் வந்த நிமல் என்னை எதேச்சையாகச் சந்தித்தான். ஏண்டா நிரூ. உனக்காச்சும் இந்தப் பெயர் என்னவென்று கண்டு பிடிக்க முடியுமா? என்று கேட்டான்.
நானோ விடயத்தை விபரமாகக் கேட்டு விட்டு, எனக்கும் தெரியாதென்று சொல்லி விட்டு நிமலிடமிருந்து எஸ் ஆகினேன். நம்ம தோஸ்த்து நிமல் ரொம்ப பாவமுங்க. உங்களில் யாருக்காச்சும் சுமாராவின் நிஜப் பெயர் என்னவென்று கண்டு புடிக்கத் தெரிஞ்சா பின்னூட்டத்தில் பதிலாக எழுதி நிமலின் மனத் தேடலுக்கும் விடை கொடுக்கலாம் அல்லவா.
பிற் சேர்க்கை: இப் பதிவின் தலைப்பு மேற்படி குறுங் கதையினூடாவும், இலக்கிய அடிப்படையிலும் பெறும் முக்கியத்துவம் என்ன?
*****************************************************************************************************************************
பிற் சேர்க்கை: இப் பதிவின் தலைப்பு மேற்படி குறுங் கதையினூடாவும், இலக்கிய அடிப்படையிலும் பெறும் முக்கியத்துவம் என்ன?
*****************************************************************************************************************************
குயிலின் இனிமையான குரலுக்கு நிகராக ஏனைய பறவைகளின் ஒலிகள் அமைந்து கொள்ளாது என்று கூறுவார்கள். அதே போன்று வலைப் பதிவில் குயில் போன்ற (பதிவர்) குரல் மூலமாக இனிமையான பதிவுகளைத் தருகின்ற ஒருவரது பதிவிற்குத் தான் நாம் இன்று செல்லவிருக்கின்றோம்.
சகோதரி "கடம்பவன குயில்" அவர்கள் தன்னுடைய "கடம்பவன பூங்கா" வலைப் பதிவில் ஆன்மீகம், இலக்கியம், எனப் பல சுவையான விடயங்களைப் பகிர்ந்து வருகின்றார்.
கடம்பவனப் பூங்காவிற்கு நீங்களும் செல்ல:
http://kadambavanakuyil.blogspot.com/
*******************************************************************************************************************************
சகோதரி "கடம்பவன குயில்" அவர்கள் தன்னுடைய "கடம்பவன பூங்கா" வலைப் பதிவில் ஆன்மீகம், இலக்கியம், எனப் பல சுவையான விடயங்களைப் பகிர்ந்து வருகின்றார்.
கடம்பவனப் பூங்காவிற்கு நீங்களும் செல்ல:
http://kadambavanakuyil.blogspot.com/
*******************************************************************************************************************************
|
66 Comments:
நசீரா
@வந்தியத்தேவன்
வணக்கம் பாஸ்,
முதல் வருகைக்கும், விடைப் பகிர்விற்கும் மிக்க நன்றி.
அத்தோடு சரியான விடையினைச் சொல்லியமைக்காக பாராட்டுக்கள் பாஸ்.
விடையினைத் தற்காலிகமாக மறைத்து வைக்கின்றேன்.
வணக்கம் மச்சி!
ந சி ரா = நசிரா! ஓகே வா!
எப்புடி கண்டுபுடிச்சம்ல!
கடம்பவன குயில் மேடத்துக்கு வாழ்த்துக்கள்! அவங்களுக்கு என் மேல கோபம்!
இருந்தாலும் எனக்கு அவங்க மேல நோ கோபம்!
பேச்சு வழக்கு சொற்கள் அருமை.
விடையினைத் தற்காலிகமாக மறைத்து வைக்கின்றேன்.//
கொய்யாலே நான் பார்த்திட்டன். எங்களை போல சில ரா பிசாசுகள் இருக்கும் கவனம்.
இரண்டாவதாகச் சரியான விடையினை ஐடியா மணி அவர்கள் சொல்லியிருந்தார்.
அவருக்கும் பாராட்டுக்கள்.
யோவ், ஒரு பெண்ணின் பெயரை கண்டுபிடிக்கத்தான் இம்புட்டு நீளமான பதிவு போட்டியா????????
நிரூபன் said...
இரண்டாவதாகச் சரியான விடையினை ஐடியா மணி அவர்கள் சொல்லியிருந்தார்.
அவருக்கும் பாராட்டுக்கள்.//
மணியும் என்னை போல தான் பார்த்திருக்கும். விடை ந ௦௦௦ ரா
என்ன பாஸ் கேள்வி இது, கத சொல்லுவீங்கன்னு பார்த்தா புதிர் போடுறீங்க, //"சொல்லுங்க! என்ன வேண்டும்" என்று கொஞ்சம் அதட்டல் (மிரட்டல்) கலந்த தொனியில் கேட்டாள் "அஷீனா". // இதுக்கு என்ன அர்த்தம்?
வணக்கம் நிரூபன் உந்த விளையாட்டுக்கு நான் வரல்ல ஐயா எஸ்கேப்..ஹி ஹி
ம்ஹூம்.. கண்டு புடிக்க முடியலைங்க!
தலைப்பை பார்த்து தொடரோ என்று நினச்சன். ஆனா குறுங்கதை
பாஸ் நான் கண்டுபிடிச்சிட்டன்.. வேனுமெண்டா நிமல என்னோட தொடர்புகொள்ள சொல்லுங்க ஹி ஹி
இப்படி பதிலை மறைச்சிட்டா எப்படிங்க நிருபன்...
நாங்கெல்லாம் கொஞ்சம் வீக்...
நண்பர் கடம்பவனப்பூங்காவை அறிமுகம் செய்ததற்க்கு வாழ்த்துக்கள்...
யோவ் பெயர் நசிரா போதுமா?
முன்பு ஒருக்கா கார்த்திகானு ஒரு பிகர் பெயரை கண்டு பிடிக்கச்சொல்லி ஒரு பதிவு போட்டீங்க இப்ப இது என்னையா நடக்குது...சீக்கிரம் கல்யாணத்தை கட்டிவிடுங்கையா இல்லாட்டி இன்னும் எத்தனை பேரோட பெயரை நாங்க கண்டு பிடிக்கவேண்டி வருதோ கடவுளே..
பாஸ் பிகர் பெயர் கண்டு பிடிக்க என்ன இண்டப்போலா வரனும்...ஹி.ஹி.ஹி.ஹி....
புதிருக்கு பதில் சொல்லும் அளவுக்கு இன்னும் அறிவு வளரலீங்க மாப்ள~!
அருமை
என்ன பாஸ் இப்படி பன்னிட்டீங்க
எங்களுக்கு புதிர போட்டுட்டு நீங்க அப்படி விலகிட்டீங்களே
வணக்கம் பாஸ்..... நசிரா என்று நினைக்கிறேன் சரியா?
ஒரு ஊமையின் அறிவிப்பு (கவிதை)
http://veeedu.blogspot.com/2011/10/blog-post_02.html
நீங்கதானே அவுங்க சுமாரா னு சொன்னீங்க...
ஒண்ணும் பிரியல!
புரியாத புதிர் சகோ!
வேண்டாம் தலைவலி
நன்றி!
புலவர் சா இராமாநுச
தம்பி, இன்னும் நீ வளரனும்?
முடியல
கடமவனகுயிலுக்கு வாழ்த்துக்கள்.
அவ்வ்வ்வவ்!
என்னாயா இது பேரை சுமாரா ன்னு எங்க கிட்ட சொல்லிட்டு நிமல் கிட்ட மட்டும் சொல்லாம திரும்ப எங்க கிட்டே கேட்டா எப்பிடி?
நாங்க கேள்வி மட்டும் தான் கேட்போம் மச்சி..
நசிரா ?????????????
நசிரா என்ற பெயரா அப்பெண்ணிற்கு
கடம்பவனக்குயில் குறிப்பிடத்தக்க நல்ல படைப்புகளை தொடர்ந்து தருபவர். நல்ல அறிமுகம் நிரூ.
எனக்குப் பதில் தெரியும். ஆனா சொல்ல மாட்டேன்.
பதிவுக்கு டைட்டில் கலக்கல்...
அது வந்து,ரம்லத்துக்கு சக்களத்தியா வரப் போறதா சொல்லுறாங்களே?அவ பேரு!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!!!!
சுமாரா ஆளோட பேரு குமாரா?
என்ன சகா, கதை தொடருமா? அந்த பெண் பெயர் நசிரா? இல்ல நதிரா வா?
பெயர சொல்லுரிங்களோ இல்லையோ கதைய தொடருங்கள். . .
அவ்வ.... கண்டுபிடிக்கமுடியவில்லை பாஸ்.....
ஓடடு மட்டும்
பாராட்டுகள்
நானோ விடயத்தை விபரமாகக் கேட்டு விட்டு, எனக்கும் தெரியாதென்று சொல்லி விட்டு நிமலிடமிருந்து எஸ் ஆகினேன். நம்ம தோஸ்த்து நிமல் ரொம்ப பாவமுங்க. உங்களில் யாருக்காச்சும் சுமாராவின் நிஜப் பெயர் என்னவென்று கண்டு புடிக்கத் தெரிஞ்சா பின்னூட்டத்தில் பதிலாக எழுதி நிமலின் மனத் தேடலுக்கும் விடை கொடுக்கலாம் அல்லவா.//
சுமாரா என்பது இக் கதையில் வரும் பெண்ணின் செல்லப் பெயர் என்றும், அவளின் முழுப் பெயரினைக் கண்டறியுமாறு அவள் கொடுத்த க்ளூவினையும் இங்கே உங்களின் பார்வைக்காக விட்டிருந்தேன்.
சுமாராவின் நிஜப் பெயர் : நசிரா என்பது சரியான விடை,
இச் சரியான விடையினை பதிவு வெளியாகி பதினைந்து நிமிடங்களிற்குள் சொல்லிய புதிய பதிவர் வந்தியத்தேவன் அவர்களிற்கும்,
ஐடியா மணி,
K.S.S.ராஜா அவர்களிற்கும்,
Veedu அவர்களிற்கும்,
நிகழ்வுகள் - கந்தசாமி அவர்களிற்கும்,
M.R அவர்களிற்கும்,
பிரணவன் சந்தேகத்தின் அடிப்படையில் பெயர் சொல்லியிருந்தாலும் பிரணவனுக்கும் பாராட்டுக்கள்.
இப் பதிவிற்குப் பின்னூட்டப் பெட்டி மூலமாக கருத்துக்களை எழுதிய அத்தனை அன்பு உறவுகளிற்கும், ஓட்டுக்கள் வழங்கியதோடு, பதிவினைப் படித்துச் சென்ற அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றிகள்.
Dr. Butti Paul said...
என்ன பாஸ் கேள்வி இது, கத சொல்லுவீங்கன்னு பார்த்தா புதிர் போடுறீங்க, //"சொல்லுங்க! என்ன வேண்டும்" என்று கொஞ்சம் அதட்டல் (மிரட்டல்) கலந்த தொனியில் கேட்டாள் "அஷீனா". // இதுக்கு என்ன அர்த்தம்?//
அண்ணே, மன்னிக்கனும் அண்ணே,
பதிவில் முதலில் அஷீனா என்று தான் அந்தப் பெண்ணிற்குப் பெயர் வைத்தேன். அப்புறமா பதிவினைத் திருத்தும் போது மாற்றி விட்டேன், இடையில் ஒரு வரி மிஸ்ட் ஆகிடுச்சு. சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணே.
@அம்பாளடியாள்
அம்பாளடியாள் said...
கடம்பவனக் குயிலுக்கு வாழ்த்துக்கள் .கேள்விக்கு விடைகாண முடியவில்லை சகோ .என்னோடு ஏதேனும்
கோவமா?....உங்கள் வரவு மிகவும்
அரிதாகிவிட்டதே .மிக்க நன்றி பகிர்வுக்கு ........//
உங்களோடு கோபம் இல்லை அக்கா,
நான் கொஞ்சம் பிசி,. என்னால் முடிந்த வரை எல்லோர் வலைக்கும் போக முயற்சி செய்கிறேன்.
கண்டிப்பாக உங்கள் வலைக்கும் ஒரு நாள் வாரேன்.
சகோதரி "கடம்பவன குயில்" அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பாஸ் என்ன காமெடி பண்றீங்க... போஸ்ட் கமேண்ட அழுத்துனாவே... கருத்துல ஆன்சர் சொன்னது தெரியுது... நீங்க எங்க மறைச்சு வைக்கிறீங்க :-)
தலைப்பு கவிதத்துவமாய் இருக்குது!ரூம் போட்டு யோசிச்சீங்களோ:)
வந்தனம் நிரூபன் .எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்
என்னால் இன்ட்லியில் யாருக்கும் வாக்களிக்கமுடியவில்லை .என்ன செய்யனும்னு சொல்றீங்களா .பெயர் நசீரா நானும் கண்டுபிடிச்சிட்டேன்
@angelin
வந்தனம் நிரூபன் .எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்
என்னால் இன்ட்லியில் யாருக்கும் வாக்களிக்கமுடியவில்லை .என்ன செய்யனும்னு சொல்றீங்களா .பெயர் நசீரா நானும் கண்டுபிடிச்சிட்டேன்//
அக்காச்சி,
உங்களின் இன்ட்லி கணக்கினுள் நுழைந்து முதலில் லாக் இன் செய்து கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு பதிவுகளாகப் படிக்கும் போதும் பதிவுகளின் கீழ் உள்ள இன்ட்லி ஓட்டுப் பட்டையில் இன் ட்லி என்ற எழுத்தின் மேல் கிளிக் பண்ணி இன்ட்லி பக்கத்திற்குச் சென்றாலே போதும்,
உங்களது ஓட்டுத் தானாகச் சேர்க்கப்படும்.
கதை நல்லாருக்கு ஆனால் தலைப்பின் முக்கியத்துவம் புரியவில்லை! ஹிஹி
சுமாராவின் நிஜப் பெயர் நசீரா...
OK ஏற்கனவே போட்டி நிறைவாயிருச்சா...நலம்...
தலைப்பு டாமஜிங்...
கதை கலக்கல்..
புதிர்...லேட்டா விடை சொல்லியிருக்கலாம்...
பெயரில் என்ன இருக்கிறது?ரோஜாவை எந்தப்பெயரில் அழைத்தாலும் அதே மணம்தான்!
வந்தியத்தேவன் முந்திக்கிட்டார்!
லேட்டா வந்தது நல்லதா போச்சு!
விடை கட்டவிழ்க்கப்பட்டதால்
இல்லேன்னாலும் கண்டுபிடிசிருப்போம்ல~!ஹிஹி
நன்றி நிரூபன் . .இப்ப புரிகிறது . 7 vote is mine
சுமாரா....? சுமார்தான்.... பிகரைச் சொன்னேன்......
// நிரூபன் said...
சுமாராவின் நிஜப் பெயர் : நசிரா என்பது சரியான விடை, //
கரெக்ட், இது தான் விடை. நிரூபன் சரியாகச் சொல்லிவிட்டார். நிரூவுக்கு பாராட்டுகள்.
உள்ளதே கொஞ்ச முடி அதையும் பிச்சுக்கவிரும்பாததில் பதில் சொல்லவரவில்லை
தலைப்பின் சிறப்பையும் சொல்லிடுங்க....
தலையை பிச்சிக் கொள்கிறேன்....
இந்த மொக்கை கதைக்கு இவ்வளவு பாராட்டு ????...என்ன கொடுமை சார் இது..
@RAJ
இந்த மொக்கை கதைக்கு இவ்வளவு பாராட்டு ????...என்ன கொடுமை சார் இது..//
நீங்க நெசமாவே பதிவைப் படிச்சுப் பார்த்தீங்களா?
பதிவில எங்கே சார் மொக்கை வருது? கொஞ்சம் தொட்டுச் சொல்ல முடியுமா?
பதிவ படிக்காம கமெண்ட் போட நான் ஒன்னும் ப்ளாக் எழுதல சார்....
I am not a Blog Writer.. I am a Reader..
என்னக்கு தமிழே டைப் பண்ண வராது... பதிவ படிச்சுட்டு தன் சொன்னே இது ஒரு மொக்கை கதைன்னு..
குமுதத்தில் ஒரு பக்க கதை வருமே..ரொம்ப ரொம்ப மொக்கயா...அது மாதிரி தன் இதுவும் இருந்துச்சு.....
கதைனா படிச்சு முடிச்சுடன் கொஞ்சம் நேரம் மனச விட்டு மறையம்ம இருகண்ணும் ...ஆனா இது எப்ப டா முடியும்னு இருந்துச்சு.....
அதுக்கா நீ கதை எழுதுனு அப்படின்னு சொல்ல மாட்டேன்க்னு நம்புறேன்..
@RAJ
அண்ணே உங்க கருத்து புரியாம இருக்கு சார்,
உங்களது இதே மாதிரியான கருத்தை,
ஆபாசப் படங்கள் தான் ஓரினச் சேர்க்கையைத் தூண்டுகின்றன என்ற பதிவிலும் படித்தேன்
அதான் கேட்டேன்.
அட!நம்ம சைட்டுக்கும் வாங்க பாஸ்!
நல்லா பழகுவோம்!
Post a Comment