புத்தம் புதிய கண்டு பிடிப்பு!
அகில உலகப் பதிவுலக வரலாற்றில் விற்பனைச் சந்தையில், வசூலில் சாதனை படைத்த- பதிவினைப் படிக்காது கமெண்ட் போடும் நபர்களைக் கண்டறியும் நோக்கில் "மூலக் கருத்தை முகர்ந்து அறி" எனும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் நாற்று வலைப் பதிவின் சொந்தக்காரர் செல்வராஜா நிரூபன் அவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட "ஸ்மார்ட் கமெண்ட் பவுண்டர் (SMART COMMENT FOUNDER) சிஸ்டத்தின்" வெற்றியினைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது கண்டு பிடிப்பாக நிரூபன் அவர்களின் முயற்சியிலும், நிகழ்வுகள் கந்தசாமி அவர்களின் வடிவமைப்பிலும் பதிவுலகச் சந்தைக்கு வந்துள்ள புத்தம் புதிய மெசின் தான் கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின்! (SMART COMMENT FOUNDER SYSTEM பற்றி அறியாதோர் இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்)
"அண்மைக் காலமாக பதிவுலக வரலாற்றில் நிலவும் தமிழ்மண டாப் 20 போட்டி முறையின் காரணமாக பதிவர்கள் பலர் அசுர வேகத்தில் தினந் தோறும் இடை விடாது பதிவுகளைப் போட்டி போட்டு எழுதிக் குவித்து வரும் சூழ் நிலையில், பதிவினைப் படித்துப் பின்னூட்டம் போடுகின்ற நபர்களின் எண்ணிக்கை என்பது குறைவாக இருக்கின்றது என "அகில உலகத் தமிழ்ச் சமூக சீர் திருத்தப் பதிவர் குழுமம்" எனும் அமைப்பினால் வெளியிடப்பட்ட கண்ணீர் கலந்த அறிக்கையினைத் தொடர்ந்து, பதிவர்களின் பதிவுகளைப் படிக்காமல் பின்னூட்டம் போடுகின்ற குறைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்த கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின்!
கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின் பற்றிய அறிமுகம்!
*கையினுள் அடங்கும் வகையில் - கைக்கடக்கமாக சிறியதொரு அலைபேசியின் அளவிற்கு ஒப்பானதாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கிளு கிளுப்பான் மெசின் ஆனது, உலகின் எப்பாகத்திலும் எந் நேரத்திலும் சாட்டிலைட் உதவியுடன் தொழிற்படக் கூடிய வல்லமை கொண்டது.
*WEAPONS, FOOD, TASTE, KUMMI, COMMENT ஆகிய ஐந்து பட்டன்களையும், ஒரு பிரதான - MENU பட்டனையும், உள்ளடக்கியுள்ளது இந்த கிளு கிளுப்பான் மெசின்.
* "ஒரு தடவை என் பதிவை எழுதிப் பப்ளிஷ் பண்ணினா, அதில் என்ன தவறு இருந்தாலும் மறுபடியும் நான் படிக்க மாட்டேன் - பதிவினைத் திருத்த மாட்டேன்" என அடம் பிடிக்கும் பதிவர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தானியங்கி முறையில் அப் பதிவுகளில் உள்ள வழுக்களைத் திருத்தும் வசதியினையும் கொண்டுள்ளது இந்த சிஸ்டம்.
*ஒலி வடிவில் பதிவுகளைப் படித்து (Reader) உங்கள் செவியில் ஆட்டோ மெட்ரிக் தொழில் நுட்பத்தில் இயங்கும் லேடிஸ் வாய்ஸ் மூலமாக அப் பதிவினைப் பற்றிய விடயங்களைச் சொல்லுகின்ற தானியங்கி இயல்பு இம் மெசினுக்கு உண்டு.
*மெனு பட்டனில் கிளிக் செய்து, உங்களின் வலைப் பதிவு முகவரியினை, அல்லது நீங்கள் படிக்க விரும்பும் வலைப் பதிவு முகவரியினைக் கொடுத்தால் போதும். அதிலுள்ள பதிவினைப் படித்து, நீங்கள் விரும்பின் உங்களுக்குப் பதிவினைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த சிஸ்டம்.
இல்லையேல் தானாகவே பதிவிற்குப் பொருத்தமான பின்னூட்டத்தினை - நீங்கள் மனதினுள் நினைக்கும் பின்னூட்டத்தினைத் தானியங்கி முறையில் நீங்கள் விரும்பும் மொழியில் பப்ளிஷ் செய்யும் இந்த சிஸ்டம்.
*பதிவெழுதி விட்டுத் தமது பதிவுகளுக்கு இன்னமும் பின்னூட்டம் வரவில்லையே என ஏங்கும் அன்பர்களிற்கும்; "பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக் காட்டவா?" எனும் அறியாமையில் உள்ளோருக்கும், அதிகளவான பின்னூட்டங்களை வழங்கும் நோக்கிலும், அவரவர் தமது ப்ளாக்கிற்கு ஏற்ற வகையில் தமக்குத் தாமே பின்னூட்டங்களைப் போட்டு மகிழ்ச்சியடையும் வண்ணமும் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
*காப்பி பேஸ்ட் பதிவுகள், படிக்கப்படவில்லையே, அவற்றிற்கு அதிகளவான பின்னூட்டங்கள் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து, பதிவினை விட, மிகவும் நீண்ட பின்னூட்டங்களை அள்ளி வழங்கும் வகையில் இந்த கிளு கிளுப்பான் சிஸ்டம் கை கொடுக்கும்.
கிளு கிளுப்பான் சிஸ்டத்தை ஆப்பிரேட் செய்வது எப்படி!
* WEAPONS, FOOD, TASTE, KUMMI, COMMENT, ஆகிய ஐந்து பட்டன்களில் நீங்கள் விரும்பிய வகையில் பின்னூட்டங்களை அளித்து மகிழலாம்.
*WEAPONS எனும் பட்டனை அழுத்தினால் நீங்கள் விரும்பும் பதிவிற்கு "கத்தி, கோடாரி, அருவாள், துப்பாக்கி, தோட்டா, கடப்பாரை" எனும் பாணியில் உலகின் இருக்கும் அத்தனை ஆயுதங்களின் பெயரினையும் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் கமெண்டுகளாகப் போட்டு, பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக் காட்ட முடியும்.
*FOOD என்ற பட்டனை அழுத்தினால் போதும், வடை, பஜ்ஜி, பரோட்டா, போண்டா, சமோசா, பால் கோப்பி எனப் பல வகையான சுவையான உணவுகளின் பெயரினைப் பதிவினைப் படிக்காது பின்னூட்டமாக வழங்கும் தன்மை கொண்டது இந்த மெசின்.
*TASTE என்ற பட்டனை அழுத்தினால் போதும், நீங்கள் விரும்பும் எந்த மாதிரியான பதிவுகளுக்கும், "ஆகா, அருமை, ஓகோ, சூப்பர், கலக்கிட்டாய் மச்சி, எப்படி இப்படி?, சான்ஸே இல்ல, செம தூக்கல், செம ஹாட்" எனும் பாணியிலான பின்னூட்டங்களை அடுத்தடுத்து எழுதி அறுபது பின்னூட்டங்கள் எனும் எண்ணிக்கையினை ஒரு நிமிட நேரத்தில் எட்டும் தனித் தன்மையும் இம் மெசின் மூலம் கிடைக்கும்.
*KUMMI என்ற பட்டனை அழுத்தினால் மொக்கைப் பதிவுகள், சீரியஸ் பதிவுகள், சாதாப் பதிவுகள் என அனைத்து வகையான பதிவுகளுக்கும், தமிழில் உள்ள 247 எழுத்துக்களை உள்ளடக்கிய கும்மிப் பின்னூட்டங்களை வழங்கும் இந்த மெசின்.
*COMMENT எனும் பட்டனை அழுத்தினால்; ஆட்டோமெட்ரிக் ரீடர் முறையில் பதிவினைப் படித்து உங்கள் காதுகளில் தேன் போன்ற குரலோசை மூலம் அப் பதிவின் உள்ளடக்கத்தினைச் சொல்லும் இம் மெசினில், அப் பதிவிற்கு நீங்கள் எவ் வகையான கருத்தினை எழுதப் போகிறீர்களோ, அதனை மனதில் நினைத்தாலே போதும். இரண்டு செக்கனில் நீங்கள் மனதில் நினைத்த பின்னூட்டம் அந்தப் பதிவில் பப்ளிஷ் ஆகும்.
ஸ்பெஷல் ஆப்பர்:
*கிளு கிளுப்பான் சிஸ்டத்தை வாங்குவதன் மூலம் இனிமேல் அலுவலகங்களில், பாடசாலைகளில், ஆப்பிஸ்களில் மேலாதிகரிக்குப் பயந்து கம்பியூட்டரில் பதிவினைப் படித்துக் கமெண்ட் போடும் அன்பர்களிற்கு முதன்மை கொடுக்கும் வண்ணம் தமது மனித உடலின் எப் பாகத்தில் சொருகியிருந்தாலும், உணர்வுகள் மூலம் நீங்கள் மனதினுள் நினைக்கும் பதிவர்களின் பதிவினைப் படித்து அதன் சாராம்சத்தினைச் சொல்லும் இயல்பு கொண்டது இந்த கிளு கிளுப்பான் மெசின்.
*கிளு கிளுப்பான் சிஸ்டத்தினை வாங்கும் ஒவ்வொருவருக்கும் சாட்டிலைட் கனெக்சன் இலவசம்.
*இன்று இரவு இந்திய - இலங்கை நேரப் படி நள்ளிரவு 12.00 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும், இந்த கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசினை நீங்கள் நாளை காலை ஆறு மணியிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பயா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, தென்னாசிய நாடுகளில் நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி ஆடர் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
உறவுகளே, கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசினை வாங்குவதாக பிளான் பண்ணி விட்டீர்களா?
விலையோ குறைவு, ஆனால் இதன் விவேகமோ அதிகம்!!
*கிளு கிளுப்பான் மெசினை வாங்கப் போகும் முதல் பத்து வாடிக்கையாளர்களுக்கு 10% வீத விலைக் கழிவும், வேலாயுதம் படம் ரிலீஸாகுவதற்கு ஐந்து நாட்கள் முன்பதாகவே அப் படத்தினைப் பார்த்து விமர்சனம் எழுதும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.
விலையோ குறைவு, ஆனால் இதன் விவேகமோ அதிகம்!!
*கிளு கிளுப்பான் மெசினை வாங்கப் போகும் முதல் பத்து வாடிக்கையாளர்களுக்கு 10% வீத விலைக் கழிவும், வேலாயுதம் படம் ரிலீஸாகுவதற்கு ஐந்து நாட்கள் முன்பதாகவே அப் படத்தினைப் பார்த்து விமர்சனம் எழுதும் சந்தர்ப்பமும் வழங்கப்படும்.
*முதல் பத்து வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் ஐவருக்கு, எமது கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசினைப் பிரபலமாக்கும் வகையில் நடிகை ஹன்சிகா, மற்றும் அனு ஆகியோர் எமக்காக நடித்துக் கொடுக்கப் போகும் விளம்பர சூட்டிங்கை தூரத்தே இருந்து பார்த்து ரசிக்கும் சந்தர்ப்பம் மட்டும் வழங்கப்படும்.
*இதன் விலை இலங்கை ரூபாயில் வெறும் 1021 ரூபா .49காசுகள் மட்டுமே
இந்தியாவில் 250 ரூபா 6காசுகள் மட்டுமே.
சர்வதேச நாடுகளில்,அந் நாட்டின் நாணயப் பெறுமதியினைப் பொறுத்தும், தொடர்பு கொள்ளும் நபரைப் பொறுத்தும் விலை விகிதம் வேறுபடும்!
முகவர்களுக்கும் முன்னுரிமை உண்டு, இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
Kizhukizuppan Comment Machine
Smart Academy Lap
No 251 ஆரிய குளம்
அடங்கா நல்லூர்
யாழ்ப்பாணம்
தொலை பேசி 0094- 7773333444
மின்னஞ்சல் comment@kizukizuppan.com
No 251 ஆரிய குளம்
அடங்கா நல்லூர்
யாழ்ப்பாணம்
தொலை பேசி 0094- 7773333444
மின்னஞ்சல் comment@kizukizuppan.com
இன்றே முந்துங்கள்! இப் பொழுதே விரையுங்கள்!
கையிருப்பில் குறைந்தளவு ஸ்டொக் மாத்திரம் இருப்பதால் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்.
Hurry up., Don't miss your massive offer!
******************************************************************************************************************************
உலகில் கவிதைகளின் வடிவங்கள் மாற்றமடைந்து வரும் இச் சூழலில்; எம் தமிழ் இலக்கிய சூழலில் மரபுக் கவிதை எனும் முதிர் கன்னி மீது உள்ள காதலும் மரபின் கடின நடை காரணமாகப் பலருக்கு கசப்பினை ஏற்படுத்தி வருகின்றது.
மரபுக் கவிதை மீதான இளையவர்களின் ஆர்வத்தினை அதிகரிக்கும் வண்ணம் இலகு நடையில் - எளிமையாக மரபுக் கவிதைகளை வழங்குகின்ற புலவர்களை நாம் இன்றைய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணி விட முடியும்.
கடுந் தமிழில் மரபெழுதினால் தான் அதற்கு மரபுக் கவிதை என்று பெயர் எனக் கவித்துவம் பேசும் இன்றைய சூழலில் எளிமையான மொழி நடையில் மரபுக் கவிதைகளைப் பகிர்ந்து வருபவர் தான் புலவர் சா. இராமாநுசம் அவர்கள்.
80வது அகவையினை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலிலும், இன்றும் இளமைத் துடிப்போடு வீரியமிக்க மரபுக் கவிதைகளைத் தன்னுடைய வலைப் பதிவில் பகிர்ந்து வருகிறார் புலவர் சா.இராமாநுசம் அவர்கள்.
புலவர் சா.இராமாநுசம் அவர்களின் வலைப் பதிவிற்குச் செல்ல:
***************************************************************************************************************************************************************************
|
164 Comments:
haa haa ஹா ஹா கலக்கல் நிரூபா
ஐடியா செம
என்னது பின்னூட்ட மிஷினா..?
//////
பதிவுலகில் யார் யார் பதிவினைப் படித்துப் பின்னூட்டம் எழுதுகின்றார்கள்? பதிவினைப் படிக்காது எத்தனை பேர் பின்னூட்டம் இடுகின்றார்கள்?
////////////
அப்ப இனி ஏமாற்ற முடியாதா...
@சி.பி.செந்தில்குமார்
haa haa ஹா ஹா கலக்கல் நிரூபா//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
நன்றி பாஸ்..
நிரூபா, உண்மையை சொல்லய்யா, நிஜமா மைனஸ் ஓட்டு வேஎற யாராவது போட்டாங்களா? இல்ல பரபரப்புக்காக நீங்களே போட்டுக்கிட்டீங்களா?
@சி.பி.செந்தில்குமார்
ஐடியா செம//
நெசமாவா...
அப்போ பிசினஸ் பிச்சுக்கிட்டு ஓடும் என்று சொல்லுறீங்க.
///////
அண்மைக் காலமாக பதிவுலக வரலாற்றில் நிலவும் தமிழ்மண டாப் 20 போட்டி முறையின் காரணமாக பதிவர்கள் பலர் அசுர வேகத்தில் தினந் தோறும் இடை விடாது பதிவுகளைப் போட்டி போட்டு எழுதிக் குவித்து வரும் சூழ் நிலையில், பதிவினைப் படித்துப் பின்னூட்டம் போடுகின்ற நபர்களின் எண்ணிக்கை என்பது குறைவாக இருக்கின்றது
////////
இந்த கருத்து ஏற்புடையதாக இல்லை...
நான் தினம் ஒரு பதிவுதான் வாரத்திற்க்கு 6 அல்லது 7 மட்டுமே இதை பதிவுபோட்டு குவிப்பது என்று கணக்கு வராது சகோ...
படித்து பின்னூட்டம் இடம் நபர்கள் குறைந்து வருகிறது உண்மைதான்...
ஆனால் நான் அப்படியில்லை படிக்காமல் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் தங்களுடைய எல்லா பதிவுக்கும் நான் வந்திருப்போன்...
தங்களுடைய பதிவு மிகவும் உணர்ந்து படித்து கருத்து போட வேண்டும் அதற்க்காக நேர பற்றாக்குறைக்காகவே நான் அதிகம் வரமுடியாமல் போகிறது...
நான் எந்த ஒரு பதிவையும் படிக்காமல் கருத்திடுவதில்லை....
டெம்லெட் கமாண்ட் போடும் போது அதை நான் படிக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை... விரிவான கருத்து தேவையில்லை அல்லது கருத்து பகிர நேரம் குறைவு என்றே அர்த்தம்...
சம்பளம் வாங்குனதும் ஆர்டர் பண்ணுறேன். இதே மாதிரி இடுகை எழுதுறதுக்கும் எதுனாச்சும் மெஷின் உங்க R & D-யிலெ இருந்தா சொல்லுங்கப்பு! :-)
இப் பதிவிற்கு மைனஸ் ஓட்டுப் போட்டவரா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
cp666 nirupans peyarilion
இதில ஒராள் பாஸ்...
//////
கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின் பற்றிய அறிமுகம்/////
இது சிபி பதிவுக்கு கமாண்ட் போடவா....
@சி.பி.செந்தில்குமார்
நிரூபா, உண்மையை சொல்லய்யா, நிஜமா மைனஸ் ஓட்டு வேஎற யாராவது போட்டாங்களா? இல்ல பரபரப்புக்காக நீங்களே போட்டுக்கிட்டீங்களா?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
ஏன் பாஸ்...நான் மைனஸ் ஓட்டுப் போடப் போறேன்.
மேலே விபரம் இருக்கிறதே...
/////
தானியங்கி முறையில் அப் பதிவுகளில் உள்ள வழுக்களைத் திருத்தும் வசதியினையும் கொண்டுள்ளது இந்த சிஸ்டம்.
//////////
எனக்கு ஒண்ணு ஆர்டர்....
//////
"கத்தி, கோடாரி, அருவாள், துப்பாக்கி, தோட்டா, கடப்பாரை"
///////
இதற்க்கு மனோகிட்ட பர்மிஷன் வாங்கியாச்சா....
@கவிதை வீதி... // சௌந்தர் //
இந்த கருத்து ஏற்புடையதாக இல்லை...
நான் தினம் ஒரு பதிவுதான் வாரத்திற்க்கு 6 அல்லது 7 மட்டுமே இதை பதிவுபோட்டு குவிப்பது என்று கணக்கு வராது சகோ...
படித்து பின்னூட்டம் இடம் நபர்கள் குறைந்து வருகிறது உண்மைதான்...
ஆனால் நான் அப்படியில்லை படிக்காமல் பின்னூட்டம் இடுவதாக இருந்தால் தங்களுடைய எல்லா பதிவுக்கும் நான் வந்திருப்போன்...
தங்களுடைய பதிவு மிகவும் உணர்ந்து படித்து கருத்து போட வேண்டும் அதற்க்காக நேர பற்றாக்குறைக்காகவே நான் அதிகம் வரமுடியாமல் போகிறது...
நான் எந்த ஒரு பதிவையும் படிக்காமல் கருத்திடுவதில்லை....
டெம்லெட் கமாண்ட் போடும் போது அதை நான் படிக்கவில்லை என்ற அர்த்தம் இல்லை... விரிவான கருத்து தேவையில்லை அல்லது கருத்து பகிர நேரம் குறைவு என்றே அர்த்தம்...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
ஏன்யா நான் உங்களைச் சொல்லுவதாக நீங்கள் எடுத்துக்கனும்?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//////
"ஆகா, அருமை, ஓகோ, சூப்பர், கலக்கிட்டாய் மச்சி, எப்படி இப்படி?, சான்ஸே இல்ல, செம தூக்கல், செம ஹாட்"
/////////
இதை தனிதனியா போடுமா ஒரே பின்னூட்டத்தில் போடுமா# டவுட்டு...
@சேட்டைக்காரன்
சம்பளம் வாங்குனதும் ஆர்டர் பண்ணுறேன். இதே மாதிரி இடுகை எழுதுறதுக்கும் எதுனாச்சும் மெஷின் உங்க R & D-யிலெ இருந்தா சொல்லுங்கப்பு! :-)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முதல் கஸ்டமர் நீங்களா..
வாங்கண்ணே..
உங்களுக்கு ஸ்பெசல் கலரில ஆடர் பண்ணி வைக்கிறேன்.
இதே மாதிரி இடுகை எழுதுறதுக்கு தொழில் ரகசியம் ஒன்றும் இல்லை..
அப்படி ஏதும் இருந்தா அதனையும் சொல்லித் தாரேன்..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
/////
அதனை மனதில் நினைத்தாலே போதும். இரண்டு செக்கனில் நீங்கள் மனதில் நினைத்த பின்னூட்டம் அந்தப் பதிவில் பப்ளிஷ் ஆகும்.
////////
இது நம்ம அயிட்டம்....
@கவிதை வீதி... // சௌந்தர் //
/////
கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின் பற்றிய அறிமுகம்/////
இது சிபி பதிவுக்கு கமாண்ட் போடவா....//
அடிங்.........பிச்சுப் புடுவேன், பிச்சு..
ஏன்யா கோர்த்து விடுறீங்க...
@கவிதை வீதி... // சௌந்தர் //
எனக்கு ஒண்ணு ஆர்டர்....
//
ஓக்கே ரெண்டாவது ஆடர் ரெடி....
ஐயா புலவர் சா.இராமாநுசம என்னையும் கவர்ந்த பதிவர்...
அவரை அறிமுகம் செய்ததற்க்கு ந்னறி நிருபன்...
அதற்க்குள் தமிழ்மணத்தில் மைனஸ் ஓட்டா....
@கவிதை வீதி... // சௌந்தர் //
இதற்க்கு மனோகிட்ட பர்மிஷன் வாங்கியாச்சா....//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இது வேறையா...
அண்ணனுக்கு சேல்ஸில 20 வீதம் கமிசன் கொடுத்து டீல் வைச்சுக்கிறேன்.
@கவிதை வீதி... // சௌந்தர் //
"ஆகா, அருமை, ஓகோ, சூப்பர், கலக்கிட்டாய் மச்சி, எப்படி இப்படி?, சான்ஸே இல்ல, செம தூக்கல், செம ஹாட்"
/////////
இதை தனிதனியா போடுமா ஒரே பின்னூட்டத்தில் போடுமா# டவுட்டு...//
அவ்வ்வ்வ்வ்வ்
இது தனித் தனி பின்னூட்டங்களா வரும்..
நிரூபன் இந்த மிஷினில் மொக்கை பதிவு போடா வசதியிருக்கா, டெம்ப்ளேட் கமெண்டு எல்லாமே இருக்குமா?
வாங்கறவங்க அப்படிதான் நூறு கேள்வி கேட்போம், சில சமயம் வேண்டாம் என்று வச்சிட்டு போவோம் பரவாயில்லையா?
ஒய்! பின்னூட்ட மிசின் விற்பனையில் வர்ற பணத்தில் பாதி எனக்கு தானே ...நினைவிற் நிற்கட்டும் :-)
///WEAPONS எனும் பட்டனை அழுத்தினால் நீங்கள் விரும்பும் பதிவிற்கு "கத்தி, கோடாரி, அருவாள், துப்பாக்கி, தோட்டா, கடப்பாரை" எனும் பாணியில் உலகின் இருக்கும் அத்தனை ஆயுதங்களின் பெயரினையும் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் கமெண்டுகளாகப் போட்டு, பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக் காட்ட முடியும்.
/// ஹஹஹா இது தான் அர்த்தமா ?? நான் கூட என்ன இப்படி பெயர் எல்லாம் தந்திருக்கார் எண்டு குழம்பியிருந்தன்;-)
பாஸ் இந்தப் பதிவை காப்பி பண்ணப்போறாங்க கவனம்..ஹி.ஹி.ஹி.ஹி...
///*COMMENT எனும் பட்டனை அழுத்தினால்; ஆட்டோமெட்ரிக் ரீடர் முறையில் பதிவினைப் படித்து உங்கள் காதுகளில் தேன் போன்ற குரலோசை மூலம் அப் பதிவின் உள்ளடக்கத்தினைச் சொல்லும் இம் மெசினில், அப் பதிவிற்கு நீங்கள் எவ் வகையான கருத்தினை எழுதப் போகிறீர்களோ, அதனை மனதில் நினைத்தாலே போதும். இரண்டு செக்கனில் நீங்கள் மனதில் நினைத்த பின்னூட்டம் அந்தப் பதிவில் பப்ளிஷ் ஆகும்.
//// இந்த வகையறா தான் எனக்கு வேணும் ;-))
பதிவு சூப்பர்...ஹி.ஹி.ஹி.ஹி
பதிவர் ராமானுசம் ஐயா எப்பவும் என் ரசனைக்குரியவரே.. இலகுவான நடை ,எனக்கு பிடித்த மரபு கவிதைகள் எழுதுவதில் பதிவுலகிலே அவருக்கு தனி இடம் தான்.
@கும்மாச்சி
நிரூபன் இந்த மிஷினில் மொக்கை பதிவு போடா வசதியிருக்கா, டெம்ப்ளேட் கமெண்டு எல்லாமே இருக்குமா?
வாங்கறவங்க அப்படிதான் நூறு கேள்வி கேட்போம், சில சமயம் வேண்டாம் என்று வச்சிட்டு போவோம் பரவாயில்லையா?//
அடிங்....என்ன பாஸ்...
பின்னூட்ட மெசினில் இருக்கிற ஆப்சன் என்ன என்று இன்னும் பார்க்கலையா?
எல்லாவிதமான பதிவர்களையும் திருப்திப்படுத்தும் நோக்கில் தான் இதனை உருவாக்கியிருக்கிறோம்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
வணக்கம் நிரூபா ஏன்யா குழ போடுற மாதிரி உங்க மிசின் வேலை செய்யாதா??
@கந்தசாமி.
ஒய்! பின்னூட்ட மிசின் விற்பனையில் வர்ற பணத்தில் பாதி எனக்கு தானே ...நினைவிற் நிற்கட்டும் :-)//
ஹி....ஹி....
ஆமா பாஸ்...
நினைவில் நிற்குது...
யாரோ ஒரு புண்ணியவான் "நான் திருந்திவிட்டேன், இனிமேல் பதிவை படித்து, சுயமாக தான் பின்னூட்டமிடுவேன், ஆகவே எனக்கு இந்த மெசின் வேண்டாம்" என்ற கொள்கையுடன் உங்க பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டிருக்கான் ))
@K.s.s.Rajh
பாஸ் இந்தப் பதிவை காப்பி பண்ணப்போறாங்க கவனம்..ஹி.ஹி.ஹி.ஹி...//
அவ்வ்வ்வ்வ்வ்...
இதைக் காப்பி பண்ணி பல்பு வாங்குவாங்க என்று நினைக்கிறேன்.
@காட்டான்
வணக்கம் நிரூபா ஏன்யா குழ போடுற மாதிரி உங்க மிசின் வேலை செய்யாதா??//
அதான் சொல்லிட்டேனே...
நீங்கள் மனதில நினைக்கிற விடயத்தை கமெண்டாகப் போடும் இயல்பு இந்த மெசினுக்கு உண்டு என்று..
ராமநுசம் ஐயா எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான் எல்லோரும் விளங்கிக்கொள்ளும் முறையில் இருக்கும் அவரின் எழுத்து நிகழ்வுகள் கந்தசாமிபோல் வாழ்த்துக்கள் ஐயா..
ஐயாவுக்கு காட்டான் குழ போட்டான்..
@K.s.s.Rajh
பதிவு சூப்பர்...ஹி.ஹி.ஹி.ஹி//
அவ்...நன்றி பாஸ்.
சூப்பர் மிசின் மக்கா அப்படியே காப்பி பேஸ்ட்க்கு எதிராவும் ஒன்னை கண்டு பிடிங்க....
@கந்தசாமி.
//// இந்த வகையறா தான் எனக்கு வேணும் ;-))//
பாஸ்... உங்களுக்கென்றால் விலை கொஞ்சம் அதிகமாகும், ஓக்கேவா..
பாஸ் நீங்க கண்டு பிடிச்ச மிசின்ல தான் நான் கமண்ட் போட்டேன் கண்டு பிடிங்க பாப்பம் நான் பதிவ வாசிச்சு போட்டனா இல்லை வாசிக்காம போட்டனா என்று....
ராமநுசம் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
ஏன்யா பதிவ படிக்காம நிறையப்பேர் கொமொண்டு போடுறாங்க... இதில எனக்கு தெரிந்தவரை மிக குறைவானவர்களே பதிவுகளை முழுமையாக படித்து பின்னூட்டம் இடுகிறார்கள் இதில் அண்ணாத்த பதிவை மட்டுமல்ல பின்னூட்டங்களையும் தவராது படிப்பவர் அவருக்கு இந்த மொய் பிரச்சனை இல்லை பிடித்தால் படித்து பின்னூட்டம் இடுகிறார் இந்த விடயத்தில் தாராளமாக அவரை பின்பற்றலாம்...
Ha . . Ha . . Kalakkal boss . . .
Cycle gap la enai kendal pannetenka. . . Its ok. . .boss. . .
//கையினுள் அடங்கும் வகையில் - கைக்கடக்கமாக சிறியதொரு அலைபேசியின் அளவிற்கு ஒப்பானதாக தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த கிளு கிளுப்பான் மெசின் ஆனது, உலகின் எப்பாகத்திலும் எந் நேரத்திலும் சாட்டிலைட் உதவியுடன் தொழிற்படக் கூடிய வல்லமை கொண்டது.//
அதெல்லாம் ஓக்கே.. இது ஓசிதானே. அப்பிடின்னாத்தான் வாங்குவம்
//கிளு கிளுப்பான் பின்னூட்ட மெசின் //
பாஸ் மெசினுக்கு பேர் நமீதா V.01 தானே
ஹி ஹி
"என் ராஜபாட்டை"- ராஜாsaid...
Ha . . Ha . . Kalakkal boss . . .
October 1, 2011 8:29 PM
என்னையா எனக்கு முதல்லேயே இவர் வாங்கீட்டாரா??
///இதன் விலை இலங்கை ரூபாயில் வெறும் 1021 ரூபா .49காசுகள் மட்டுமே//
1021 ஓக்கே. அதென்ன 49 காசு
இந்த மிசினால உங்களுக்கு மண்டை காயப்போகுது நடுச்சாமத்தில எழுப்பி பால்கோப்பி கேட்கபோறான்யா தலைவழி... சாரி சாரி தனிமரம்..!!
பாஸ் மெசினில ஏதோ ப்ராப்ளெம் போல இருக்கு. யாரோ மைனஸ் ஓட்டு போட்டிருக்குறாங்கள்
ஒரு மெசின் பார்சல்
@கந்தசாமி.
யாரோ ஒரு புண்ணியவான் "நான் திருந்திவிட்டேன், இனிமேல் பதிவை படித்து, சுயமாக தான் பின்னூட்டமிடுவேன், ஆகவே எனக்கு இந்த மெசின் வேண்டாம்" என்ற கொள்கையுடன் உங்க பதிவுக்கு மைனஸ் ஓட்டு போட்டிருக்கான் ))//
அவ்..
அப்படியா சங்கதி,
அதனையும் எங்கட மெசின் மூலமா கண்டு பிடிக்கலாமா;-))))
@K.s.s.Rajh
சூப்பர் மிசின் மக்கா அப்படியே காப்பி பேஸ்ட்க்கு எதிராவும் ஒன்னை கண்டு பிடிங்க....//
வெகு விரைவில் ட்ரை பண்றேன் பாஸ்...
@K.s.s.Rajh
பாஸ் நீங்க கண்டு பிடிச்ச மிசின்ல தான் நான் கமண்ட் போட்டேன் கண்டு பிடிங்க பாப்பம் நான் பதிவ வாசிச்சு போட்டனா இல்லை வாசிக்காம போட்டனா என்று....//
அடிங்.........ராஸ்கல்...
என்கிட்டேவா...
மவனே பிச்சுப் புடுவேன் பிச்சு..
பதிவினைப் படிச்சதால் தானே இப்படிச் சொல்லியிருக்கிறீங்க.
@"என் ராஜபாட்டை"- ராஜா
Ha . . Ha . . Kalakkal boss . . .//
நன்றி பாஸ்...
@"என் ராஜபாட்டை"- ராஜா
Cycle gap la enai kendal pannetenka. . . Its ok. . .boss. . .//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அரசியல்ல இதெல்லாம் சகஜம் தல...
கோவிச்சுக்க மாட்டீங்க தானே...
@மதுரன்
அதெல்லாம் ஓக்கே.. இது ஓசிதானே. அப்பிடின்னாத்தான் வாங்குவம்//
கொய்யாலே..ஓசியா....
பிச்சுப்புடுவேன் பிச்சு...
@மதுரன்
பாஸ் மெசினுக்கு பேர் நமீதா V.01 தானே
ஹி ஹி//
அட இப்படி ஒரு பேரும் வைக்கலாமா?
எனக்கு இப்படி ஒரு நல்ல பேர் சிக்கலாம் போச்சுதே.....
இனிமே மாத்திட வேண்டியது தான். நன்றி பாஸ்.
@காட்டான்
"என் ராஜபாட்டை"- ராஜாsaid...
Ha . . Ha . . Kalakkal boss . . .
October 1, 2011 8:29 PM
என்னையா எனக்கு முதல்லேயே இவர் வாங்கீட்டாரா??//
ஹே.....ஹே....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@மதுரன்
///இதன் விலை இலங்கை ரூபாயில் வெறும் 1021 ரூபா .49காசுகள் மட்டுமே//
1021 ஓக்கே. அதென்ன 49 காசு//
அவ்வ்வ்வ்
அதுவா சதமய்யா...சதம்.
பைசா
@காட்டான்
இந்த மிசினால உங்களுக்கு மண்டை காயப்போகுது நடுச்சாமத்தில எழுப்பி பால்கோப்பி கேட்கபோறான்யா தலைவழி... சாரி சாரி தனிமரம்..!!//
அவ்............விடுவமா...
கமெண்டைத் திருப்பி அனுப்பி காயம் வர வைக்கிற மெசின் ஒன்று கண்டு பிடிச்சிட மாட்டோம்...........
@மதுரன்
பாஸ் மெசினில ஏதோ ப்ராப்ளெம் போல இருக்கு. யாரோ மைனஸ் ஓட்டு போட்டிருக்குறாங்கள்//
எவனோ ஒருத்தன் நல்ல மனசோட குத்தியிருக்கான்.
அவனுக்கு சந்தோசம் வேணும்னா அடுத்த மைனஸ்ஸை நானே குத்துறேன்.
@மதுரன்
ஒரு மெசின் பார்சல்//
ஆகா...நான்காவது ஆடர் ரெடி..
ஐந்தாவது ஆர்டர், டாலரில் விலை சொல்லுங்கப்பு... அப்புறம் 30 டாய்ஸ் மனி பாக் உண்டா? வாரன்ட்டி உண்டா? வாட்டர் ப்ரூப் ப்லாச்டிகா? பலபேர் தண்ணியில தான் காமென்ட் போடுறாங்களாம், அதனால தான்..
சார் உங்க மெசின் பீட்டா டெஸ்டிங்ல எதோ கோளாறு.. காமென்ட் எல்லாம் திடீர்னு காணாம போயிட்டு, என்ன நடக்குது இங்க?
@Dr. Butti Paul
'சார் உங்க மெசின் பீட்டா டெஸ்டிங்ல எதோ கோளாறு.. காமென்ட் எல்லாம் திடீர்னு காணாம போயிட்டு, என்ன நடக்குது இங்க?//
பாஸ்..அதிக கமெண்ட் இருந்தால் படிக்கிறவங்க கமெண்ட் போட மாட்டாங்களாம்.
அதான்...
எல்லாத்தையும் தற்காலிகமகா தூக்கிட்டேன்.
அப்புறமா பப்ளிஷ் பண்றேன்.
@Dr. Butti Paul
ஐந்தாவது ஆர்டர், டாலரில் விலை சொல்லுங்கப்பு... அப்புறம் 30 டாய்ஸ் மனி பாக் உண்டா? வாரன்ட்டி உண்டா? வாட்டர் ப்ரூப் ப்லாச்டிகா? பலபேர் தண்ணியில தான் காமென்ட் போடுறாங்களாம், அதனால தான்..//
ஹே...ஹே...
இது செம காமெடி...
நிரூபன்said...
@Dr. Butti Paul
'சார் உங்க மெசின் பீட்டா டெஸ்டிங்ல எதோ கோளாறு.. காமென்ட் எல்லாம் திடீர்னு காணாம போயிட்டு, என்ன நடக்குது இங்க?//
பாஸ்..அதிக கமெண்ட் இருந்தால் படிக்கிறவங்க கமெண்ட் போட மாட்டாங்களாம்.
அதான்...
எல்லாத்தையும் தற்காலிகமகா தூக்கிட்டேன்.
அப்புறமா பப்ளிஷ் பண்றேன்//.
ஆஹா பதிவர்களே கப்புன்னு பிடிங்கையா இந்த டெக்கினிக்க.. ஹி ஹி
ஹா..........ஹா.......ஹா...
கலக்கல்
கத்தி, கோடாரி, அருவாள், துப்பாக்கி, தோட்டா, கடப்பாரை
சாரி.. weapons அழுத்திட்டேன் போலிருக்கு...
//பாஸ்..அதிக கமெண்ட் இருந்தால் படிக்கிறவங்க கமெண்ட் போட மாட்டாங்களாம்.
//
:-)
நேரடி தாக்குதலோ????????
எதுக்கெல்லாம் மிஷின் கண்டு புடிக்கிறாங்கப்பா...நடத்துங்க நிரூ...அப்படியே சிந்திக்கர்துக்கும் ஒரு மிஷின் கொடுங்க...ஹிஹி!
நிரூபன் said...
@ஆமினா
ஐந்தாவது ஆர்டர், டாலரில் விலை சொல்லுங்கப்பு... அப்புறம் 30 டாய்ஸ் மனி பாக் உண்டா? வாரன்ட்டி உண்டா? வாட்டர் ப்ரூப் ப்லாச்டிகா? பலபேர் தண்ணியில தான் காமென்ட் போடுறாங்களாம், அதனால தான்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
ஐயோ அக்காச்சி.
இது உங்களுக்கே நியாயமா.
நான் பொத்தாம் பொதுவாகத் தான் சொன்னேன்.////
என்ன சார் நடக்குது.. பாதி கமெண்ட் இல்லாததால ஒண்ணுமே புரியல.. உங்க விளையாட்டுக்கு நான் வரல..
ஆஹா.... சூப்பர் மெசினா இருக்கே..
காட்டான் மாமா நேத்தே சொன்னார் முன் பதிவு பண்ணீட்டேன் என்று.. நெசமாளுமா..???? ஹீ ஹீ
@ஆமினா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
ஐயோ அக்காச்சி.
இது உங்களுக்கே நியாயமா.
நான் பொத்தாம் பொதுவாகத் தான் சொன்னேன்.
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா... அவ்வ்வ்வ்.....,
நிரூ பாஸுக்கும்
கந்தசாமி பாஸுக்கும்
என் வாழ்த்துக்கள்
ஆமினா said...
//பாஸ்..அதிக கமெண்ட் இருந்தால் படிக்கிறவங்க கமெண்ட் போட மாட்டாங்களாம்.
//
:-)
நேரடி தாக்குதலோ????????////
எங்க அடி விழுதின்னே புரியல.. என்ன வாழ்கடா இது
@Dr. Butti Paul
என்ன சார் நடக்குது.. பாதி கமெண்ட் இல்லாததால ஒண்ணுமே புரியல.. உங்க விளையாட்டுக்கு நான் வரல..//
சார்.
,
இது ஆமீனா அக்காவின் பின்னூட்டத்திற்குப் போட வேண்டிய கமெண்ட், மாறி உங்க பின்னூட்டத்தோடு இணைத்து எழுதி விட்டேன் சார்..
மன்னிக்கவும்.
பாஸ் பாஸ்
எனக்கும் ஒரு மெசின் பாஸ்..,
ஹீ ஹீ
நிரூபன் said...
@Dr. Butti Paul
என்ன சார் நடக்குது.. பாதி கமெண்ட் இல்லாததால ஒண்ணுமே புரியல.. உங்க விளையாட்டுக்கு நான் வரல..//
சார்.
,
இது ஆமீனா அக்காவின் பின்னூட்டத்திற்குப் போட வேண்டிய கமெண்ட், மாறி உங்க பின்னூட்டத்தோடு இணைத்து எழுதி விட்டேன் சார்..
மன்னிக்கவும்.///
என்ன சார் நீங்க, பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு...
ஹா ஹா ஹா ஹா சிபி நாதாரி மாட்டிகிட்டான், அவன்தான் பதிவுகளை படிக்கிறதே இல்லை.....
புலவர் அய்யா, அவர்களின் கவிதைகள் பாமரனுக்கும் புரியுராப்ல இருக்கும்!!!!!!!
எட்றா அந்த அருவாளை மைனஸ் ஓட்டு போட்டுட்டு அலையிராணுக...!!!
சகோ Dr. Butti Paul
எங்க அடி விழுதின்னே புரியல.. என்ன வாழ்கடா இது //
உங்கள அடிக்கல....... :-)
இது சம்மந்தமா வேறொரு ப்ளாக்ல பேசுனோம். நான் தான் "அதிகமா கமென்ட் இருந்தா பதிவ மட்டும் படிச்சுட்டு ஓடிடுவேன்"ன்னு சொல்லியிருந்தேன். அதுக்காக நேரடி தாக்குதலான்னு சும்மாகாச்சுக்கும் கேட்டேன் :-)
புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு வலம் வரும் விஞ்ஞானியே வாழ்க..
உங்களை நாசா ஆராய்ச்சி நிலையம் தேடுகிறது..
உடனும் தொடர்பு கொள்ளுங்க.. சகோதரனே எப்படித்தான் ஐடியாக்கள் வருதோ தெரியல...சுப்பெர் சுப்பெர்..
எனக்கும் ஒரு ஓடர் பண்ணித்தாங்க...
மதிப்பிற்குரிய புலவர் ஐயாவுக்கு எனது வாழ்த்துக்களும்...
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துக்கான முகவர் நான்!!!!!!(ஒரு பத்து மிசின் இப்போதைக்கு!)
நாற்று வலைப் பதிவின் நிதி நிலமை காரணமாவும், நாட்டின் திறை சேரியில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாகவும் பால் கோப்பி, வடை, பஜ்ஜி, போண்டா பொருட்களை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.////அப்பிடியெண்டால் ஒரு நூறு தடவை நன்றி மட்டும் "சும்மா" சொல்லுங்கோ!பிறகு வாற ஆக்களுக்கு அதுகும் இல்லை,ஸ்டொக் முடிஞ்சுது எண்டு சொல்லுங்கோ!(ஒரு நாளையக் கணக்கு)
நிரூபன் said...
@ஆமினா
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
ஐயோ அக்காச்சி.
இது உங்களுக்கே நியாயமா.
நான் பொத்தாம் பொதுவாகத் தான் சொன்னேன்//
:-)
நான் அங்கே சொல்ல வந்த கருத்தின் அர்த்ததை புரிந்துக்கொண்டிருப்பீர்கள் என தான் நம்புகிறேன். அதுக்காக என் கருத்தை யாரிடமும் திணிக்க விரும்பல.
//பாஸ்..அதிக கமெண்ட் இருந்தால் படிக்கிறவங்க கமெண்ட் போட மாட்டாங்களாம்.
//
நான் தான் இப்படி சொன்னேன்னு நெனைக்கிறேன் :-) நீங்க இப்படியொரு வார்த்தை சொன்னதும் என்னை நோக்கி வந்த கருத்தாகவே எண்ணினேன். விளக்கம் வேண்டி தெளிவு பெற நேரடி தாக்குதலா என கேட்டேன். அவ்வளவு தான் தம்பி........
இதுவும் கடந்து போகும்
உங்களின் எண்ணக் கருத்துக்களை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறேன்.////ஓமோம்,நாங்களெல்லாம் திருவள்ளுவற்றை வாரிசுகள் தான?
*கிளு கிளுப்பான் சிஸ்டத்தினை வாங்கும் ஒவ்வொருவருக்கும் சாட்டிலைட் கனெக்சன் இலவசம்.////நல்ல வேளை,இ ன்டர்நெட் கனெக்க்ஷன் என்று சொல்லாமல் விட்டீர்களே?
ஒபீஸ் இருக்கிற இடம் சோக்கான இடம்!குளம்,ரெண்டு கரையில றோட்டு!ஒரு பக்கம் "அவை"யின்ரை இடம்.
கள்ள மார்க்கெட்டில் வாங்கிய மிஷின் நன்றாக வேலை செய்கிறது. இதோ.... "கலக்கல் நண்பா. ஆஹா அருமை. ஓஹோ பெருமை. சூப்பர். வந்தேன் சென்றேன். படித்து விட்டு வருகிறேன்".
இந்திய ரூபாய் மதிப்பு ஆறு பைசாக்கு எங்க போறது?
ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்கல் பாஸ்....
எப்படி சார் இப்படி?.
ஹா..ஹா...
நாங்கள்லாம் மெசின் வாங்கிட்டுத்தானே ப்ளாக்கே ஆரம்பிச்சோம்... எப்பூடி....
கலக்கல் பதிவு!
இன்று என் வலையில்
காக்காவின் கக்காவில் இருந்து தப்புவது எப்படி?
அடடா மெசின்ல ஏதோ டெக்னிகல் ஃபால்ட் ஆகி வெளம்பரம் வேற வந்துடுச்சு போல......
@ஆமினா
சகோ Dr. Butti Paul
எங்க அடி விழுதின்னே புரியல.. என்ன வாழ்கடா இது //
உங்கள அடிக்கல....... :-)
இது சம்மந்தமா வேறொரு ப்ளாக்ல பேசுனோம். நான் தான் "அதிகமா கமென்ட் இருந்தா பதிவ மட்டும் படிச்சுட்டு ஓடிடுவேன்"ன்னு சொல்லியிருந்தேன். அதுக்காக நேரடி தாக்குதலான்னு சும்மாகாச்சுக்கும் கேட்டேன் :-)//
ஐயோ..அக்காச்சி,
நான் என் வலையில் நைட்டில் தான் பதிவு போடுவேன்,
காலையில் முழுக் கமெண்டுகளையும் மறைத்து வைத்து, ஏனையோர் கமெண்ட் போட்டாப் பிறகு தான் ரீலீஸ் பண்ணுவேன்.
நீங்க அந்தக் கருத்துச் சொல்லுவதற்கு முன்னாடியே என் பளாக்கில நிறையத் தடவை, எப்போ அதிக கமெண்ட் வருதோ, மறைத்து வைத்து எல்லோரும் கமெண்ட் போட்ட பின்னாடி தான் ரிலீஸ் செய்திருக்கேன்.
@Dr. Butti Paul
சார் உங்க மெசின் பீட்டா டெஸ்டிங்ல எதோ கோளாறு.. காமென்ட் எல்லாம் திடீர்னு காணாம போயிட்டு, என்ன நடக்குது இங்க?//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அப்படியெல்லாம் இல்ல பாஸ்..
கமெண்டுகளை மறைச்சு வைச்சிருந்திட்டு, ரிலீஸ் பண்றேன்..
அவ்வளவு தான்.
@வைரை சதிஷ்
ஹா..........ஹா.......ஹா...
கலக்கல்//
ஏன் மச்சி, இந்த மெசின் கள்ள மார்க்கட்டில கிடைக்குதா;-)))
அவ்வ்வ்வ்வ்வ்வ்
@Mohamed Faaique
கத்தி, கோடாரி, அருவாள், துப்பாக்கி, தோட்டா, கடப்பாரை
சாரி.. weapons அழுத்திட்டேன் போலிருக்கு...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இது வேறையா....
@விக்கியுலகம்
எதுக்கெல்லாம் மிஷின் கண்டு புடிக்கிறாங்கப்பா...நடத்துங்க நிரூ...அப்படியே சிந்திக்கர்துக்கும் ஒரு மிஷின் கொடுங்க...ஹிஹி!//
அண்ணே, கூடிய சீக்கிரம் அந்த ஆசையும் நிறைவேறும் அண்ணே...
ட்ரை பண்றேன்.
@ஆமினா
//பாஸ்..அதிக கமெண்ட் இருந்தால் படிக்கிறவங்க கமெண்ட் போட மாட்டாங்களாம்.
//
:-)
நேரடி தாக்குதலோ???????//
இல்லையக்கா...
நான் எப்போதுமே அப்படித் தான் செய்வேன்...
@துஷ்யந்தன்
ஆஹா.... சூப்பர் மெசினா இருக்கே..
காட்டான் மாமா நேத்தே சொன்னார் முன் பதிவு பண்ணீட்டேன் என்று.. நெசமாளுமா..???? ஹீ ஹ//
ஆமாய்யா....
@துஷ்யந்தன்
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா... அவ்வ்வ்வ்.....,
நிரூ பாஸுக்கும்
கந்தசாமி பாஸுக்கும்
என் வாழ்த்துக்கள்//
நன்றி மச்சி....
@துஷ்யந்தன்
பாஸ் பாஸ்
எனக்கும் ஒரு மெசின் பாஸ்..,
ஹீ ஹீ//
ஹே...ஹே...
அடுத்த ஓடரும் ரெடியா...
மிஸ்டர் கந்தசாமி பாஸ்,
லிஸ்ட்டில துஸியின் பெயரையும் சேர்த்துக் கொள்ளுங்க.
@MANO நாஞ்சில் மனோ
ஹா ஹா ஹா ஹா சிபி நாதாரி மாட்டிகிட்டான், அவன்தான் பதிவுகளை படிக்கிறதே இல்லை.....//
அவ்.............
எனக்கு ஒன்னுமே புரியலை பாஸ்...
என்னமோ சொல்லுறீங்க.
@MANO நாஞ்சில் மனோ
எட்றா அந்த அருவாளை மைனஸ் ஓட்டு போட்டுட்டு அலையிராணுக...!!!//
விடுங்கண்ணே..
இன்னைகு சனிக்கிழமை தானே..
அதான்...
@vidivelli
புதிய புதிய கண்டுபிடிப்புகளோடு வலம் வரும் விஞ்ஞானியே வாழ்க..
உங்களை நாசா ஆராய்ச்சி நிலையம் தேடுகிறது..
உடனும் தொடர்பு கொள்ளுங்க.. சகோதரனே எப்படித்தான் ஐடியாக்கள் வருதோ தெரியல...சுப்பெர் சுப்பெர்..
எனக்கும் ஒரு ஓடர் பண்ணித்தாங்க...//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நாஸா ஏன் என்னைத் தேடுது?
நான் அவங்க தொழில் நுட்பத்தைக் காப்பி பண்ணிட்டேனா...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
@Yoga.s.FR
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்துக்கான முகவர் நான்!!!!!!(ஒரு பத்து மிசின் இப்போதைக்கு!)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஓக்கே ஐயா கண்டிப்பா அனுப்பி வைக்கிறேன்.
@Yoga.s.FR
/அப்பிடியெண்டால் ஒரு நூறு தடவை நன்றி மட்டும் "சும்மா" சொல்லுங்கோ!பிறகு வாற ஆக்களுக்கு அதுகும் இல்லை,ஸ்டொக் முடிஞ்சுது எண்டு சொல்லுங்கோ!(ஒரு நாளையக் கணக்கு)//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
அதுக்கு அடி தான் கொடுப்பாங்க ஐயா....
@Yoga.s.FR
உங்களின் எண்ணக் கருத்துக்களை எதிர்பார்த்தபடி காத்திருக்கிறேன்.////ஓமோம்,நாங்களெல்லாம் திருவள்ளுவற்றை வாரிசுகள் தான?//
ஏன் ஐயா....
உங்கள மாதிரிப் பெரியவர்கள் எங்களுக்குத் திருவள்ளுவர் மாதிரித் தானே...
@Yoga.s.FR
*கிளு கிளுப்பான் சிஸ்டத்தினை வாங்கும் ஒவ்வொருவருக்கும் சாட்டிலைட் கனெக்சன் இலவசம்.////நல்ல வேளை,இ ன்டர்நெட் கனெக்க்ஷன் என்று சொல்லாமல் விட்டீர்களே?//
அவ்வ்....இது சாட்டிலைட்டோடு கனெக்ட் பண்ணியிருப்பதால் இலவச இண்டர் நெட் ஓட்டமெட்ரிக்கா கிடைக்குமாம் ஐயா..
எனக்கு ஒரு சாம்பிள் கிடைக்குமா? யூஸ் பண்ணி பார்த்துட்டு வாங்கிக்கிறேன்.
@Yoga.s.FR
ஒபீஸ் இருக்கிற இடம் சோக்கான இடம்!குளம்,ரெண்டு கரையில றோட்டு!ஒரு பக்கம் "அவை"யின்ரை இடம்.//
அவ்...நீங்கள் என்ன நான் வேலை செய்யுற ஓப்பிஸைப் பற்றிச் சொல்லுறீங்களோ?
@! சிவகுமார் !
கள்ள மார்க்கெட்டில் வாங்கிய மிஷின் நன்றாக வேலை செய்கிறது. இதோ.... "கலக்கல் நண்பா. ஆஹா அருமை. ஓஹோ பெருமை. சூப்பர். வந்தேன் சென்றேன். படித்து விட்டு வருகிறேன்".//
அவ்வ்வ்வ்வ்வ்வ்
யாரைய்யா அது நம்ம மெசினிலே கள்ள மெசின் செய்வது?
@!* வேடந்தாங்கல் - கருன் *!
இந்திய ரூபாய் மதிப்பு ஆறு பைசாக்கு எங்க போறது?//
அதுவா. பேசாம முழுப் பணத்தையும் கொடுங்க, நாமளே சேஞ் தந்து டீலை முடிச்சுக்குவோம்.
@பன்னிக்குட்டி ராம்சாமி
நாங்கள்லாம் மெசின் வாங்கிட்டுத்தானே ப்ளாக்கே ஆரம்பிச்சோம்... எப்பூடி....//
அண்ணே, முடியலை அண்ணே..
எப்படி இப்படி?
@பன்னிக்குட்டி ராம்சாமி
கலக்கல் பதிவு!
இன்று என் வலையில்
காக்காவின் கக்காவில் இருந்து தப்புவது எப்படி?//
அண்ணே, இந்த விடயமும் என் மெசினில் இருந்து கிடைச்சதா..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை..
@shanmugavel
எனக்கு ஒரு சாம்பிள் கிடைக்குமா? யூஸ் பண்ணி பார்த்துட்டு வாங்கிக்கிறேன்.//
அவ்....அண்ணே, அதெல்லாம் முடியாது...
அக்மார்க் கேரண்டி,,,,
மெசினில ISO சார்ட்டிபிக்கேட் முத்திரை கூட இருக்கண்ணே..
சாம்பிள் எல்லாம் கொடுக்க முடியாதுண்ணே..
வேண்ணா ஒரிஜினலை உங்களுக்காக தள்ளுபடி விலையில தாரேன்...
நல்லா கிளப்புரிங்க பாஸ் பீதிய.
"ஒரு தடவை என் பதிவை எழுதிப் பப்ளிஷ் பண்ணினா, அதில் என்ன தவறு இருந்தாலும் மறுபடியும் நான் படிக்க மாட்டேன் - பதிவினைத் திருத்த மாட்டேன்" என அடம் பிடிக்கும் பதிவர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தானியங்கி முறையில் அப் பதிவுகளில் உள்ள வழுக்களைத் திருத்தும் வசதியினையும் கொண்டுள்ளது இந்த சிஸ்டம்.///
இது செம குத்து
"ஒரு தடவை என் பதிவை எழுதிப் பப்ளிஷ் பண்ணினா, அதில் என்ன தவறு இருந்தாலும் மறுபடியும் நான் படிக்க மாட்டேன் - பதிவினைத் திருத்த மாட்டேன்" என அடம் பிடிக்கும் பதிவர்களின் உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, தானியங்கி முறையில் அப் பதிவுகளில் உள்ள வழுக்களைத் திருத்தும் வசதியினையும் கொண்டுள்ளது இந்த சிஸ்டம்.///
இது செம குத்து
*பதிவெழுதி விட்டுத் தமது பதிவுகளுக்கு இன்னமும் பின்னூட்டம் வரவில்லையே என ஏங்கும் அன்பர்களிற்கும்; "பின்னூட்டங்களுக்குப் பதில் எழுதுவது பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக் காட்டவா?" எனும் அறியாமையில் உள்ளோருக்கும், அதிகளவான பின்னூட்டங்களை வழங்கும் நோக்கிலும், அவரவர் தமது ப்ளாக்கிற்கு ஏற்ற வகையில் தமக்குத் தாமே பின்னூட்டங்களைப் போட்டு மகிழ்ச்சியடையும் வண்ணமும் இந்த சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. //
இது உள்குத்து.
*KUMMI என்ற பட்டனை அழுத்தினால் மொக்கைப் பதிவுகள், சீரியஸ் பதிவுகள், சாதாப் பதிவுகள் என அனைத்து வகையான பதிவுகளுக்கும், தமிழில் உள்ள 247 எழுத்துக்களை உள்ளடக்கிய கும்மிப் பின்னூட்டங்களை வழங்கும் இந்த மெசின்.//
இது வெளிக்குத்து
*TASTE என்ற பட்டனை அழுத்தினால் போதும், நீங்கள் விரும்பும் எந்த மாதிரியான பதிவுகளுக்கும், "ஆகா, அருமை, ஓகோ, சூப்பர், கலக்கிட்டாய் மச்சி, எப்படி இப்படி?, சான்ஸே இல்ல, செம தூக்கல், செம ஹாட்" எனும் பாணியிலான பின்னூட்டங்களை அடுத்தடுத்து எழுதி அறுபது பின்னூட்டங்கள் எனும் எண்ணிக்கையினை ஒரு நிமிட நேரத்தில் எட்டும் தனித் தன்மையும் இம் மெசின் மூலம் கிடைக்கும்.
//
இது சைட் குத்து
*WEAPONS எனும் பட்டனை அழுத்தினால் நீங்கள் விரும்பும் பதிவிற்கு "கத்தி, கோடாரி, அருவாள், துப்பாக்கி, தோட்டா, கடப்பாரை" எனும் பாணியில் உலகின் இருக்கும் அத்தனை ஆயுதங்களின் பெயரினையும் அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் கமெண்டுகளாகப் போட்டு, பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்துக் காட்ட முடியும்.//
இது முன் குத்து
*கிளு கிளுப்பான் சிஸ்டத்தை வாங்குவதன் மூலம் இனிமேல் அலுவலகங்களில், பாடசாலைகளில், ஆப்பிஸ்களில் மேலாதிகரிக்குப் பயந்து கம்பியூட்டரில் பதிவினைப் படித்துக் கமெண்ட் போடும் அன்பர்களிற்கு முதன்மை கொடுக்கும் வண்ணம் தமது மனித உடலின் எப் பாகத்தில் சொருகியிருந்தாலும், உணர்வுகள் மூலம் நீங்கள் மனதினுள் நினைக்கும் பதிவர்களின் பதிவினைப் படித்து அதன் சாராம்சத்தினைச் சொல்லும் இயல்பு கொண்டது இந்த கிளு கிளுப்பான் மெசின்.//
இது பின் குத்து!
ஆக மொத்ததுல செம குத்து குத்திட்டிங்க போங்க!
நல்ல பதிவு!
கண்டு பிடிப்பாளர் நிரூபன் எனக்கொரு பால்கோப்பி கொண்டுவரச் சொல்லுங்கோ பின்னூட்டம் எழுதனும்!
இந்த மெசினால் எனக்குப் பல நன்மை எழுத்துப்பிழை வராது,பாடல் ஒலியேற்ற சிலரின் நித்திரையை குழப்பத்தேவையில்லை அத்தனையும் தாண்டி என் நித்திரை நேரம் அதிகரிக்கும் நல்ல விடயம் கண்டுபிடிப்பாளரே!
வட அமெரிக்கா மத்திய அரபு இராச்சியம் ஆகியவற்றின் நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் ஏகவினியோகிஸ்தர் பொறுப்பை என்னிடம் தாருங்கள் இந்த ஒப்பந்தம் மூலம் எனக்கு விசேடவிலைக்கழிவு தரவீர்கள் என்றாள் அதிகளவு இயந்திரத்தை துரித கெதியில் விற்றுத்தரும் தனிமரம் ஓகே என்றாள் மெயில் போடுங்கள் வங்கியில் கடன் உத்தரவாதப் பத்திரத்துடன் விரைவில் வருகின்றேன் அனுவுடன் ஒரு டூயட் பாடுவதற்கு பாடல் என் தெரிவு!
புலவர் ஐயாவின் கவிதைகள் நன்நெறியை போதிப்பவை அவரை தனிமரம் என்றும் தொடரும் வாழ்த்துக்கள் ஐயாவிற்கு!
அவருக்கு வயது என்றும் 16 தான் அதனால்தான் இப்படி கவிதைகள் நெஞ்சம் எல்லாம் நிறைந்து இருக்குது!
ஐயய்யோ இவங்கள் கண்டுபிடிப்பை தாங்கவே முடியலை செல்லம்.
எனது புதிய மென்பொருள் அறிமுகப்ப பதிவு
http://pc-park.blogspot.com/2011/10/hd-optimized-office-software.html
என்னா பாஸ் ஏமாத்திப்புட்டீங்க... நான் கூட கிளு கிளு கிளுப்பான் மிசின்னவுடனே... முத கமேண்டா நமிதா டான்ஸ் ஆடி வரவேற்கும்..ஹன்சிகா டான்ஸ் ஆடியாவறே பின்னுட்டமிட வருபவர்களை குதுகல படுத்தும்னு எதிர்பார்த்தேன் பாஸ்... போங்க பாஸ்
*கிளு கிளுப்பான் சிஸ்டத்தினை வாங்கும் ஒவ்வொருவருக்கும் சாட்டிலைட் கனெக்சன் இலவசம்.//
எப்படி பாஸ் நான் வெறும் டிஸ்கிர்பஸன் மட்டுந்தான் வச்சிருக்கேன் போலருக்கு,,, ஆனா நீங்க தான் ரூம் போட்டு யோசிக்கிறீங்க போல ஹா ஹா ஹா
www.kizhukizuppancomment.com//
இதை க்ளிக் பண்ணா திரும்பவும் இதுக்கே வருது இதென்ன வாழப்பழ காமெடியா. அண்ணே
நம்ம புலவர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அன்பு சகோ நிரூ!
இப்பதிவில் என்னை அறிமுகப்
படுத்தியுள்ளீர் மிக்க நன்றி! என்னை
வாழ்த்தி யுள்ள அனைவருக்கும் என்
நன்றி!
நிற்க,இம் மாதம்(அக்டோபர்)
பத்தொன்பதாம் தேதி என் பிறந்த
நாளும் எண்பதாம் வயது
தொடக்கமும் வருகின்றன
நீங்கள் எழுதியுள்ளவாறு
என்பத்தி மூன்று வரை வாழின் பெரும் மகிழ்சி அடைவேன் காரணம்
அதற்குள்ளாவது தனி ஈழம் அடைந்து
விடுவோம் என்ற ஆசைதான்!
புலவர் சா இராமாநுசம்
சிலர் மரியாதைக்கு..சிலர் வோட்டுக்கு...வெகு சிலர் உண்மையிலே படித்து...சிலர் அறியாமல்...சிலர் அறிமுகத்துக்கு...லூஸ்ல விடுங்க சகோதரம்...
மச்சி இந்த பதிவுல மற்றவங்க ஏமாறலாம் நான் ஏமாற மாட்டனேனனன...
இது முதல் போடும் போதே நான் நல்ல கொமண்ட கொடுத்த ஞாபகம் இருக்கு..
அடுத்த வருட கின்னசில் இது தான் முதலிடம்..
அப்படி 150 வது சுடு சோறு.. முன்னைய பதிவுக்கும் வாக்கிற்கும் அப்புறம் வாறன்..
என்னாது? பின்னூட்டமிஷினா? என்னல்லாமோ வருது ஒன்னுமே புரியலியே. நான்லாம் பதிவைமட்டும் முழுவதும் படித்துகமண்ட் போடுவதுடன் பின்னூட்டமும் எல்லாம் படிச்சுடுவேனாக்கும்.
@புலவர் சா இராமாநுசம்
நிற்க,இம் மாதம்(அக்டோபர்)
பத்தொன்பதாம் தேதி என் பிறந்த
நாளும் எண்பதாம் வயது
தொடக்கமும் வருகின்றன
நீங்கள் எழுதியுள்ளவாறு
என்பத்தி மூன்று வரை வாழின் பெரும் மகிழ்சி அடைவேன் காரணம்
அதற்குள்ளாவது தனி ஈழம் அடைந்து
விடுவோம் என்ற ஆசைதான்!//
அன்பிற்குரிய ஐயா, தங்களின் அன்பிற்கும், புரிந்துணர்விற்கும், நன்றி,
உங்களோடு தொலைபேசியில் பேசும் போது நீங்கள் 80 வயது என்று சொன்னதை 83 என்று நினைவில் வைத்து எழுதி விட்டேன் ஐயா, தவறிற்கு மன்னிக்கவும் ஐயா.
இப்போதே மாற்றி விடுகின்றேன்.
நீங்கள் நூறாம் அகவையினைக் கடந்தும் வாழுவீங்க.
கவலை வேண்டாம்!
@♔ம.தி.சுதா♔
மச்சி இந்த பதிவுல மற்றவங்க ஏமாறலாம் நான் ஏமாற மாட்டனேனனன...
இது முதல் போடும் போதே நான் நல்ல கொமண்ட கொடுத்த ஞாபகம் இருக்கு..//
அடிங் கொய்யாலே...
நீயும் இந்தப் பதிவினை முழுமையாகப் படிக்கலையா?
வடிவாப் பாரு...
மேலே சொல்லியிருக்கேனே..
ஏற்கனவே பதிவுலகில் பட்டையைக் கிளப்பிய, விற்பனைச் சந்தையில் வசூலை அள்ளிய எங்கள் முதற் கண்டு பிடிப்பினைத் தொடர்ந்து இந்த கிளு கிளுப்பான் மெசினைக் கண்டு பிடித்திருக்கேன் என்று..
அவ்...
மச்சி, அது வேற மெசின், இது வேற...
நிரூபன் said... Best Blogger Tips [Reply To This Comment]
@Yoga.s.FR
ஒபீஸ் இருக்கிற இடம் சோக்கான இடம்!குளம்,ரெண்டு கரையில றோட்டு!ஒரு பக்கம் "அவை"யின்ரை இடம்.//
அவ்...நீங்கள் என்ன நான் வேலை செய்யுற ஓப்பிஸைப் பற்றிச் சொல்லுறீங்களோ?////அப்ப ஒபீசில "அது" இருக்காது!குளம் தான் பக்கத்திலயே இருக்கே?ஹா!ஹா!ஹா!
good thinking niru
குறும்புக்கு அளவே இல்லை நிரூபா..இந்த பதிவை எழுத ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க..உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட்
பதிவைப் படிக்காமலேயே கமென்ட் போடுவாங்களா? ஆச்சர்யமா இருக்கு.
@நிரூபன்
செம கிள்ளாடிப்பா நிரூபன்...
டெம்ப்ளேட் கமென்ட் போடுவதற்கு மற்றொரு முக்கிய காரணம்...
பதிவர்..எடுத்துக் கொண்ட கருவுக்கும் பிண்ணூட்டம் இடுபவருக்குமான தொடர்பு குறைவாய் இருப்பதுவும்தான்...
மிசின் ஆர்டர் பண்ணி ரெண்டு நாள் ஆச்சு மிசின் வரலை கமெண்ட் இப்போ தான் போட முடிஞ்சுச்சி ஹா ஹா ஹா
Nice Idea !!! I will develop an APP for this. it will save our team by typing
இந்த மாதிரியான உதவாக்கரை பதிவுகளை எழுதி உங்களுடைய நேரத்தையும், சக்தியையும் விரையம் செய்யணுமா என்ன?
மாறக்கூடியவர்கள்... நிச்சயம் மாறிவிடுவார்கள். எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? இதையே தொடர்ந்து நீங்கள் எழுதும்போது இங்கே வந்து படிப்பவர்களுக்கும் அது பிடிக்காமல் போகலாம் அல்லவா?
Post a Comment