தமிழ் சினிமா இன்றைய கால கட்டத்தில் ஒவ்வோர் தமிழனின் வாழ்வோடும் இரண்டறக் கலந்து விட்டது. பொழுது போக்கு அம்சமாகவும், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற, அல்லது நடிகர்களை அரசியல் எனும் சாக்கடையினுள் தள்ளி விடுகின்ற ஊடகமாகவும் எம் சினிமா இன்று விளங்குகிறது. மேற்கத்தைய சினிமாவின் தரத்தினை- வளர்ச்சியினை, வெரைட்டியான கதைகளை எம் தமிழ் சினிமா எட்டித் தொட முடியாதளவிற்குப் பின் தங்கி நிற்கிறதா எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இப் பதிவு. நாற்று நிரூபன்
எம் தமிழ் சினிமாதான் பல கிராமியக் கனவுகளையும், பச்சை வயலின் வரம்புகளைத் தரிசித்திராத- ஏழ்மை பற்றி உணர்ந்திராத பணக்கார வர்க்கத்திற்கு வாழ்க்கைப் பாடம் போதிக்கும் ஒன்றாகவும் விளங்கியிருக்கின்றது. நாளாந்தம் எம் தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் ஒரு குறுகிய வட்டத்தினுள் தான் இருக்கின்றன. உதாரணமாக ஒரு மாதத்தில் வெளிவருகின்ற படங்களை உற்று நோக்குங்கள், அவற்றின் உள்ளடக்கம் யாவும், ஒரு காதல் கதையினை, இல்லையேல் ஒரே மாதிரியான ரசனை கொண்ட கருப் பொருளைத் தான் கொண்டிருக்கும்.
வெட்கம் மானம் சூடு சுறணையின்றி நாற்றிலிருந்து காப்பி பண்றேன்
எல்லாப் படங்களிலும் ஐந்து அல்லது ஆறு பாட்டுக்கள் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அவற்றில் ஒரு பாடலினை
படத்தினை நடிக்கும் நடிகனைக் கடவுளாகப் போற்றுவதற்கான நம்பிக்கையினை ரசிகர்கள் மத்தியில் ஊட்டக் கூடிய எழுச்சிப் பாடலாகவும், இன்னோர் பாட்டினை நடிகையின் பொக்குளைக் காட்டிக் குத்தாட்டம் போடுவதை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் படங்களில் புகுத்துவது இயக்குனர்களின் கடமையாகி விட்டது.
வெட்கம் மானம் சூடு சுறணையின்றி காப்பி பண்றேன்
உண்மையில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் நடிகைகளின் சதையினை விற்றுக் காசு பார்க்க வேண்டும் எனும் நோக்கிலா எடுக்கப்படுகின்றன எனும் ஆதங்கமும் என்னுள் எழுகின்றது. பிரபல நடிகர்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகின்ற படமாக இருந்தாலும் அவற்றில் குத்தாட்டம் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றதா? இல்லையேல் மார்புகள் குலுங்கக் குலுங்க நடிகைகள் அரை குறை ஆடையில் ஆடுவது தான் படத்தின் விற்பனையினை அதிகரிக்கும் எனும் நோக்கில் எடுக்கப்படுகின்றதா? ரசிகர்கள் விரும்பி இத்தகைய கிளு கிளுப்பு நடனங்களை ரசிக்கின்றார்கள் என்றால், எம் திரைப்பட இயக்குனர்களால் ரசிகர்களின் மன நிலையினை மாற்றி வெரைட்டியான படங்களைக் கொடுக்க முடியாதா?,
கிளு கிளுப்பு நடனத்திற்கு கொடுக்கும் மதிப்பினை விட, காத்திரமான கதையுள்ள படத்தினைக் கொடுத்து; குத்தாட்டங்களையும், சதையினையும் நம்பி எடுக்கப்படும் எம் தமிழ் சினிமாவின் உயிரோட்டத்தினை இயக்குனர்களால் மாற்ற முடியாதா? ஆங்கில- வேற்று மொழித் திரைப்படங்களைப் பாருங்கள். ஒரு கம்ர்சியல் படத்தில் கூட சூட்டைக் கிளப்பும் பல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அங்கே பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? இல்லைத் தானே, படம் முடிந்த பின்னரும் அப் படத்தில் இடம் பெற்ற கிளு கிளுப்புக் காட்சிகளை விட படத்தின் மூலக் கருத் தானே எம் மனங்களில் ஆழமாகப் பதிந்து விடுகின்றது.
நிரூபனின் நாற்று வலையின் மூலப் பதிவு
இத்தகைய நல்ல கரு உள்ள தரமான படங்களை தமிழ் ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் இயக்குனர்களால் வழங்க முடியாதா? நடிகரையும், நடிகைகளையும் நாம் அனைவரும் தலை முறை தலை முறையாக கோயில் கட்டியும், மனதில் இருத்தி தெய்வமாக நினைந்துருகி, உணர்ச்சிவசப்பட்டு பாலூற்றி அபிஷேகம் செய்து வழிபடும் நிலையினைத் தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்தும் செய்யப் போகின்றார்கள்? அங்காடித் தெரு, ஆடோகிராப், அந்நியன் போன்ற வெரைட்டியான படங்களைப் பார்க்க நாம் பல வருடங்கள் தவமிருக்க வேண்டுமா?
நிரூபனின் நாற்று வலையின் மூலப் பதிவு
தமிழகத்தின் ஒவ்வோர் சிற்றூர்களிலும் இன்னும் படமாக்கப்படாத பல அருமையான கதைகள் பொதிந்துருக்கின்றன. அவற்றையெல்லாம் வண்ணத் திரைக்குக் கொண்டு வந்து எம் மனதினை மகிழ்ச்சிபடுத்த இந்த இயக்குனர்களால் முடியாதா?
தமிழ் சினிமாவில் நின்று நிலைக்க வேண்டும் என்றால் இத்தகைய ஒரே மாதிரியான கதைகள்- நாயகன் அடி தடியில் தூள் கிளப்பி, காதலில் வெற்றியீட்டி டூயட் பாடும் அம்சங்களைக் கொண்ட படங்கள் தான் தேவை என்றால்; இதனைத் தான் ரசிகர்களும் விரும்புகின்றார்கள் என்றால், இயக்குனர்களாகிய உங்களால் ஒரு நல்ல சினிமாவை ஏன் படைக்க முடியாது? பாக்கியராஜ். பாரதிராஜா. மணிரத்னம், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்கிரமன், ஷங்கர், என வெரைட்டியான கிரியேட்டி விட்டி கொண்ட இயக்குனர்களைத் தவிர ஏனைய இயக்குனர்களுக்கு கிரியேட்டி விட்டியே கிடையாதா?
நிரூபனின் நாற்று வலையின் மூலப் பதிவு
எத்தனை நாளைக்குத் தான் ஓப்பினிங் சாங்கையும், ஓடி ஓடிக் காதலிக்கும், நடிகனின் உணர்வுகளையும், நடிகனின் தோழனாக வரும் காமெடி நடிகரின் கலாய்த்தல்களையும், நடிகனின் சோர்ந்து போன மனதிற்குச் சொடக்கெடுக்கும் ரெட்டை அர்த்தம் கலந்த குத்தாட்டப் பாடலையும், கிளைமாக்ஸில் வில்லன் கூட்டத்தால் கொல்லப்பட்டவருக்கான பழி வாங்கல் படலத்தையும் பார்த்துப் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருப்பது? கொஞ்சமாவது வெரைட்டியாகத் திங் பண்ணுங்களேன் இயக்குனர் பெரு மகன்களே! UNSTOPPABLE TRAIN, GOD FATHER, EAT PRAY LOVE, A TEAM, TERMINATOR, VOLVER, இந்த மாதிரியான வெரைட்டியான படங்களைப் போல் எம் தமிழ்ச் சினிமா இயக்குனர்களாலும் சிந்தித்து நல்ல படைப்புக்களைத் தர முடியாதா? நிரூபன் நாற்று
ஆங்கிலப் படங்களை இன்ஸ்பிரேசனாகக் கொண்டாவது எம் தமிழ்ச் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தலாம் அல்லவா. "ஒரு படைப்பாளியின் படைப்பினை விமர்சிப்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவன் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு(கருத்தைத் திணிப்பதற்கு) உரிமை இல்லை. காரணம் நாம் படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தினை முடக்கும் வகையில் செயற்படுவது போலாகிடும். ஆனாலும் தொடர்ந்தும் ஒரே மாதிரியான கதை அம்சங்கள் கொண்ட சினிமாவினைப் பார்த்து சலித்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவனாக என் உணர்வுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். இயக்குனர்களே! இவை நிச்சயம் உங்கள் காதுகளை எட்ட வேண்டும்.
*****************************************************************************************************************************
ஒரு ஊடகவியலாளனின் பேனாவின் வலிமை எத்தகைய வீரியம் மிக்கது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் அல்லவா. ஊடகவியலாளனின் மிக முக்கியமான பணி, எச் சந்தர்ப்பத்திலும் விலை போகாத நடு(வு) நிலமையுடன் கூடிய செய்திகளைப் பகிர்வது தான். அந்த வரிசையில் இலங்கையின் பத்திரிகைத் துறையில் பணிபுரிவதோடு, பதிவுலகிலும் தன் காத்திரமான எழுத்துகளால் நம்மோடு உறவாடிக் கொண்டிருக்கிற ஒருவரைத் தான் இன்றைய பதிவினூடாக நாம் இனங்காணப் போகின்றோம்.
இவருக்கு அறிமுகம் தேவையில்லை. காரணம் அவர் எழுத்துக்கள் பதிவுலகில் பலராலும் ரசிக்கப்பட்டிருக்கும் என்றே நினைக்கின்றேன். சமூகப் பிரச்சினைகள், நாசூக்கான அரசியல் விடயங்களை நளினமாகச் சொல்லுகின்ற கட்டுரைகள், மற்றும் சினிமா- வேற்று மொழிப் படங்கள் பற்றிய விமர்சனப் பகிர்வுகள் எனத் தன் வலையில் அசத்தலான விடயங்களைப் பகிர்ந்து வருபவர் தான் மருதமூரான்.
மருதமூரான் அவர்களின் "மருதமூரான்" வலைப் பூவிற்குச் செல்ல:
http://maruthamuraan.blogspot.com
*******************************************************************************************************************************
முக்கிய குறிப்பு: இன்ட்லி ஓட்டுப் பட்டையில் ஓட்டுப் போட முடியவில்லையே எனும் உறவுகளின் வேண்டு கோளுக்கமைவாக, இன்ட்லியில் ஓட்டுப் போடுவதற்கான இணைப்பினை இங்கே பகிர்ந்துள்ளேன். இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
148 Comments:
முதல் குத்தா???
ஆமாம் சகோ.. ரைத்த மாவை மட்டும் அறைச்சிட்டிருந்தாலும் பரவால்லை. வெளிநாட்டு படங்களை சுட்டு படம் எடுத்திட்டு நாங்க உலக சினிமாவுக்கு சவால் விடுரம் , ஆஸ்காருக்கு இந்த படம் போகும் எண்டெல்லாம் அறிக்கை விடுறது தாங்கமுடியல. பாலச்சந்தரோ,பாரதிராஜாவோ,மணிரத்னமோ இல்லை பாலாவோ இப்படி அறிக்கை விட்டதா தெரியல. நல்ல படங்களுக்காக வரம் இருக்க வேண்டி இருக்கு.
அருமையான பதிவு சகோ
நல்ல கதைகளை
நாசூக்காக எடுத்து
வசூலில் சாதனை படைக்க
தரமற்றுப் போனார்கள் என்றே
சொல்லவேண்டும்.
புதுமை எண்ணும் சூத்திரம்
அறிந்திருந்தாலும்
பலவிதமான கட்டுப்பாடுகளில்
இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
இயன்றதை சொல்ல முடியா
அப்பாவிகள் அவர்கள்.....
//உண்மையில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் நடிகைகளின் சதையினை விற்றுக் காசு பார்க்க வேண்டும் எனும் நோக்கிலா எடுக்கப்படுகின்றன//
ஆமாம்.. உ+ம் இயக்குனர் வெங்கடேசின் படங்கள்
//பிரபல நடிகர்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகின்ற படமாக இருந்தாலும் அவற்றில் குத்தாட்டம் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றதா?//
ஆமாம் உ+ம் அண்மையில் வந்த விஜய் படங்கள்.. ரஜினியின் சிவாஜி
//மார்புகள் குலுங்கக் குலுங்க நடிகைகள் அரை குறை ஆடையில் ஆடுவது தான் படத்தின் விற்பனையினை அதிகரிக்கும் எனும் நோக்கில் எடுக்கப்படுகின்றதா?//
ஆமாம் அதற்கு இயக்குணர்களை மட்டும் குறை சொல்ல முடியது, ரசிகனும் அதைத்தான் விரும்புகிறான்.. ஆனால் அவ்வாறான எல்லா படங்களும் வெற்றிபெறுவதுமில்லை..
//ரசிகர்கள் விரும்பி இத்தகைய கிளு கிளுப்பு நடனங்களை ரசிக்கின்றார்கள் என்றால், எம் திரைப்பட இயக்குனர்களால் ரசிகர்களின் மன நிலையினை மாற்றி வெரைட்டியான படங்களைக் கொடுக்க முடியாதா?//
கொடுக்க முடியும் அவ்வாறு கொடுத்தும் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.. உ+ம் இயக்குனர்களான.. பாண்டிராஜ்,சுசீந்திரன்,வசந்தபாலன்,ராசு மதுரவன், சேரன்,தங்கர்பச்சான், அமீர், வெற்றிமாறன், ராம், காதல்,கல்லூரி படத்தின் இயக்குனர் இன்னும் உள்ளார்கள்..
இவ்வாறிருக்க வெங்கடேஷ்,ரவிக்குமார் வகையறாக்கள் இன்னும் கதையை நம்பாமல் நடிகைகளின் சதையை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறார்கள்..
வணக்கம் தலீவா முதல் முறையா உங்கள் பதிவினூடாக தமிழ் சினிமா பக்கம் தலை காட்டியுள்ளீர்கள் போல
நல்ல சினிமாக்களை ரசிக்கும் ரசிகன் உருவாகாத வரை அரைத்த மாவை அரைகுக்கும் சினிமா வந்துகொண்டேதான் இருக்கும்..
////எல்லாப் படங்களிலும் ஐந்து அல்லது ஆறு பாட்டுக்கள் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. // கேட்டா ரசிகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்பார்கள்...ரசிகர்களுக்கு மட்டமான ரசனையை ஏற்ப்படுத்தியதும் இப்படிப்பட்ட சினிமாக்கள் தான்..
உதாரணமாய் விஜய் சுறா படத்தை கூட பத்து தரம் தியேட்டர் சென்று பார்த்தவனும் இருக்கான் ..காரணம் தன் தலைவன் என்ன விதமான படம் நடித்தாலும் அவனால் ரசிக்க கூடியதாக இருக்கிறது ..அதாவது சினிமாவை விடுத்து தனிமனித வழிபாடுகள் தான் இதற்க்கு காரணம்...
////Riyas said...
நல்ல சினிமாக்களை ரசிக்கும் ரசிகன் உருவாகாத வரை அரைத்த மாவை அரைகுக்கும் சினிமா வந்துகொண்டேதான் இருக்கும்..///கரெக்ட் பாஸ் ..
@Ashwin-WIN
முதல் குத்தா???//
ஆமாம் நணபா.
உங்கள் வருகை நல்வரவாகட்டும்,
மகேந்திரன் said...
புதுமை எண்ணும் சூத்திரம்
அறிந்திருந்தாலும்
பலவிதமான கட்டுப்பாடுகளில்
இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
இயன்றதை சொல்ல முடியா
அப்பாவிகள் அவர்கள்.....//
நண்பர் மகேந்திரனின் கருத்தைக்கண்டு வியந்தேன்... எப்படி தமிழ் சினிமாவின் அவஸ்தையான பிரச்சனைகள் அவரால் அலசமுடிந்தது... நன்றி நண்பர் மகேந்திரன்
@Ashwin-WIN
ஆமாம் சகோ.. ரைத்த மாவை மட்டும் அறைச்சிட்டிருந்தாலும் பரவால்லை. வெளிநாட்டு படங்களை சுட்டு படம் எடுத்திட்டு நாங்க உலக சினிமாவுக்கு சவால் விடுரம் , ஆஸ்காருக்கு இந்த படம் போகும் எண்டெல்லாம் அறிக்கை விடுறது தாங்கமுடியல. பாலச்சந்தரோ,பாரதிராஜாவோ,மணிரத்னமோ இல்லை பாலாவோ இப்படி அறிக்கை விட்டதா தெரியல. நல்ல படங்களுக்காக வரம் இருக்க வேண்டி இருக்கு.
அருமையான பதிவு சகோ//
கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதையாக எல்லே இது இருக்கு...
எல்லாம் ஒரு நாள் மாறும் நண்பா.
////படத்தினை நடிக்கும் நடிகனைக் கடவுளாகப் போற்றுவதற்கான நம்பிக்கையினை ரசிகர்கள் மத்தியில் ஊட்டக் கூடிய எழுச்சிப் பாடலாகவும், இன்னோர் பாட்டினை நடிகையின் பொக்குளைக் காட்டிக் குத்தாட்டம் போடுவதை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் படங்களில் புகுத்துவது இயக்குனர்களின் கடமையாகி விட்டது.//// அநேக கதாநாயகர்கள் படங்களில் தங்கள் காதாபாத்திரம் தான் பெரிதாக பேசப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் அதே போல தமக்கு முக்கியத்துவம் தரப்படாத பாத்திரம் என்றால் அவர்கள் அந்த கதைகளை புறக்கணிப்பார்கள்..... ஹீரோயிசத்தை மெயின்டேன் பண்ணனுமாம் )))
//ரசிகர்கள் விரும்பி இத்தகைய கிளு கிளுப்பு நடனங்களை ரசிக்கின்றார்கள் என்றால், எம் திரைப்பட இயக்குனர்களால் ரசிகர்களின் மன நிலையினை மாற்றி வெரைட்டியான படங்களைக் கொடுக்க முடியாதா?//
கொடுக்க முடியும் அவ்வாறு கொடுத்தும் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.. உ+ம் இயக்குனர்களான.. பாண்டிராஜ்,சுசீந்திரன்,வசந்தபாலன்,ராசு மதுரவன், சேரன்,தங்கர்பச்சான், அமீர், வெற்றிமாறன், ராம், காதல்,கல்லூரி படத்தின் இயக்குனர் இன்னும் உள்ளார்கள்..//
நான் அடுத்து சொல்ல வந்த க்ருத்தை தெளிவாக நண்பர் ரியாஸ் சொல்லியிருக்கிறார்...ரியாஸ்க்கு வாழ்த்துக்கள்
////ஆங்கில- வேற்று மொழித் திரைப்படங்களைப் பாருங்கள். ஒரு கம்ர்சியல் படத்தில் கூட சூட்டைக் கிளப்பும் பல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அங்கே பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? இல்லைத் தானே, படம் முடிந்த பின்னரும் அப் படத்தில் இடம் பெற்ற கிளு கிளுப்புக் காட்சிகளை விட படத்தின் மூலக் கருத் தானே எம் மனங்களில் ஆழமாகப் பதிந்து விடுகின்றது./// நூறு வீதம் உண்மை பாஸ் ...
@மகேந்திரன்
நல்ல கதைகளை
நாசூக்காக எடுத்து
வசூலில் சாதனை படைக்க
தரமற்றுப் போனார்கள் என்றே
சொல்லவேண்டும்.//
நம்புவோம், வெகு விரைவில் நமக்கு நல்ல சினிமாக்கள் மீண்டும் வரும் என்று.
@மகேந்திரன்
புதுமை எண்ணும் சூத்திரம்
அறிந்திருந்தாலும்
பலவிதமான கட்டுப்பாடுகளில்
இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
இயன்றதை சொல்ல முடியா
அப்பாவிகள் அவர்கள்.....//
என்ன செய்ய..ஆனாலும் மக்களுக்கு நல்லவற்றை வழங்க வேண்டும் எனும் எண்ணம் இயக்குனர்களுக்கு உதிக்கலாம் அல்லவா?
///ஆங்கிலப் படங்களை இன்ஸ்பிரேசனாகக் கொண்டாவது எம் தமிழ்ச் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தலாம் அல்லவா/// அது தான் ஒட்டு மொத்தமாய் காபி பேஸ்ட் செய்கிறார்களே அது போதாதா அவ்வ்வ்வ்..))
@Riyas
//மார்புகள் குலுங்கக் குலுங்க நடிகைகள் அரை குறை ஆடையில் ஆடுவது தான் படத்தின் விற்பனையினை அதிகரிக்கும் எனும் நோக்கில் எடுக்கப்படுகின்றதா?//
ஆமாம் அதற்கு இயக்குணர்களை மட்டும் குறை சொல்ல முடியது, ரசிகனும் அதைத்தான் விரும்புகிறான்.. ஆனால் அவ்வாறான எல்லா படங்களும் வெற்றிபெறுவதுமில்லை..//
நண்பா, நான் கேட்பது, இயக்குனர்களால் குத்தாட்டம் தான் வேண்டும் என அடம்பிடித்துப் படம் பார்க்கும் ரசிகர்களின் ரசனையினை மாற்றித் தன் பக்கம் ஈர்க்கவல்ல காத்திரமான படைப்பினை வழங்க முடியாதா என்று?
எம் தமிழ் சினிமாதான் பல கிராமியக் கனவுகளையும், பச்சை வயலின் வரம்புகளைத் தரிசித்திராத- ஏழ்மை பற்றி உணர்ந்திராத பணக்கார வர்க்கத்திற்கு வாழ்க்கைப் பாடம் போதிக்கும் ஒன்றாகவும் விளங்கியிருக்கின்றது.//
உண்மைதான் நண்பரே... எத்தனையோ குறைவான பட்ஜெட்டில் படங்களை தரமாக அர்த்தமுள்ளதாகவும் எதார்த்தமாகவும் தர காத்திருக்கின்றனர்.... பாலா, வசந்தபாலன், வரிசையில் ஆனால் அனைவருக்கும் கை கூடுவதில்லை... ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டாதான்... ஹோட்டல் காரன் கடை நடத்துவான்... ஹோட்டல் சாப்பாடில் சத்தில்லை சரியில்லை என கஷ்டமர் வரவிட்டால் ஹோட்டல் காரன் ஒன்னு கடைய மூடுவான்... இல்லன்னா தரமான சாப்பாடை தர முயற்சி செய்வான்.... இது அனைத்தும் ஆடியன்ஸ் கையில் இருக்கிறது.... நடிகர்களுக்கு பாலாபிசேகம் நடக்கும் வரை ... இது போன்ற இயக்குனர்கள் குறுக்கு வழியாக சதையை நம்பி எடுப்பார்கள்
அப்படி சதை நம்பி எடுப்பவர்கள் காலத்தால் பேசப்பட மாட்டார்கள்...
அன்பு நண்பர் ராஜேஷ்
கருத்துக்கு கருத்தளித்தமைக்கு நன்றி.
சகோ நிரூபன்
இன்றைய இயக்குனர்கள்
பவுசு காட்டும் நடிகர்கள்
பணந்தின்னி தயாரிப்பாளர்கள்
போன்ற கட்டுப்பாட்டு கழிகளால்
பினைக்கப்பட்டிருக்கிரார்கள் என்பதே
என் கருத்து
// நடிகர் பார்த்திபன் சுகமான சுமை என்ற படம் எடுத்தார்//
யார் பார்த்தார்கள்...
உள்ளேவெளியே எடுத்தபின்னர் தான் ஓடுச்சி...
தங்கர்பச்சான் எடுத்த ஒன்பது ரூபாய் நோட்டு ஏன் ஓடவில்லை.....
மக்களும் மாறிட்டங்க சகோ...
ஒரே வார்த்தைல டாகுடர் விஜய் மாதிரி படம் எடுக்க கூடாதுன்னு சொல்லிட்டா முடிஞ்சது.....
////பாக்கியராஜ். பாரதிராஜா. மணிரத்னம், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்கிரமன், ஷங்கர், என வெரைட்டியான கிரியேட்டி விட்டி கொண்ட இயக்குனர்களைத் தவிர/// பாலா ,வசந்தபாலனையும் சேர்த்திருக்கலாம்....மணிரத்தினம் ஷங்கரை விட்டு ))))
நடிகர் நந்தா நடித்த ஆணிவேர் என்ற படம் இலங்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது..ஆனால் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் திரையிடப்பட்டது.... நம் நாட்டுக்கேற்ற கேடு கெட்ட விதி அது
பாஸ் நீங்க கூட சாந்தி படத்தை முக்காடு போட்டு பாத்தீங்க தானே... ஹி ஹி
அங்காடித் தெரு, ஆடோகிராப், அந்நியன் போன்ற வெரைட்டியான படங்களைப் பார்க்க நாம் பல வருடங்கள் தவமிருக்க வேண்டுமா?//
வெயிலின் அருமை நிழலில் தெரிவது போல்... உப்புமா படம் எடுப்பவர்களால் தான்.... வசந்தபாலன், பாலா, சேரன் போன்றோர் தனியாக மின்னுகின்றனர்...
ஒரு கட்டத்தில் சேது, அழகி, காசி, ஆட்டோகிராப் போன்ற படங்கள் வரத்தொடங்கின, அவை நன்றாகவும் ஓடி வசூல் செய்தன. அது போல் கதையம்சமுள்ள படங்கள் ஓடும் என்ற நம்பிக்கை துளிர்த்த காலம் அது, ட்ரெண்ட் மாறிவிடும்னு நம்பினோம். ஆனால் அந்த நேரத்தில் ஜெமினி, சாமி, தூள், கில்லி போன்ற படங்கள் வந்து கெடுத்துவிட்டன........
தமிழகத்தின் ஒவ்வோர் சிற்றூர்களிலும் இன்னும் படமாக்கப்படாத பல அருமையான கதைகள் பொதிந்துருக்கின்றன//
உண்மை தான் நண்பா... எதார்த்தமான உண்மையான விசயங்களை எடுத்து சொல்லும்போது நான் கூட பல கம்பெனிகளில் வெளியேற்றப்பட்டிருக்கிறேன்... வேறு வழியில்லாமல் உப்புமா கதைகளுக்கு ஜால்றா அடித்து காலத்தை ஓட்டிய கதையும் உண்டு... அது போல் பல தயாரிப்பாளர்களின் தொல்லையால் இயக்குநர்கள் தடம் மாறிபோன கதையும் உண்டு
//////மணிரத்னம், விக்கிரமன், ஷங்கர்,//////
இவங்கள்லாம் அவங்க பாணின்னு சொல்லிக்கிட்டு ஒரே படத்த தானே திருப்பி திருப்பி எடுத்துட்டு இருக்காங்க?
மாப்பிள இப்பிடியான பதிவுகள போட்டு தமிழ் சினிமா இயக்குனர்களை சிந்திக்க வைக்காதே.. அப்புறம் அவர்கள் நல்ல படம் எடுத்தால்(ஒரு கதைக்குத்தான்)..என்னைப்போன்றோர்கள் குத்தாட்டம் பார்க்க என்ன செய்வதைய்யா...!!!!!????))))))
இயக்குனர் பாலா... தயாரிப்பாளரிடம் சேது படத்தின் கதையை சொன்ன பொழுது... தயாரிப்பாளர் அந்த கதையை தட்டி கழித்து சாமி படம் எடுக்க சொன்னாராம்... வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் சொன்ன மாதிரியே சாமி படத்தை எடுக்க ஆரம்பித்தார்...அந்த மனதிருப்தியில் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கிறார் தயாரிப்பாளர்...உடனே பாலா சாமி படத்தை நிப்பாட்டிவிட்டு சேது படத்தை எடுக்க தொடங்கிவிட்டார்... வந்து பார்த்த தயாரிப்பாளர் கோபப்பட்டு படத்தை டிராப் செய்துவிட்டாராம்... பிறகு அந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் பாலா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல... இன்று அந்த சேது தான் பாலாவை சினிமா உலகம் திரும்பி பார்க்கவைத்தது... தொலைந்து போயிருந்த நடிகர் விக்ரமை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது... என்றுமே தரமான விசயத்துக்காக பாடுபட அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனப்பான்மையும் இருந்துவிட்டால் பாலாக்களாக பல பேர் ஜொலிக்கலாம்... ஆனால் அவசரப்பட்டு பிரதிபலிக்க துடிக்கும் குறுக்குவழி துக்கடாக்களைப்பற்றியோ.. அவர்கள் எடுக்கும் திரைப்படங்களைப்பற்றியோ கவலைப்படுவது வீண்..... அருமையானதொரு பிடித்த பதிவை பகிர்ந்தமைக்கு மனதார நன்றிகள்
மாய உலகம் said...
நடிகர் நந்தா நடித்த ஆணிவேர் என்ற படம் இலங்கையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டது..ஆனால் இந்தியாவைத்தவிர மற்ற நாடுகளில் திரையிடப்பட்டது.... நம் நாட்டுக்கேற்ற கேடு கெட்ட விதி அது
September 9, 2011 1:20 AM
மாப்பிள ஆணிவேர் படத்தை இங்கு திரையரங்கில் பார்தேன் அது அரைவாசிக்கும்மேல் அக்குமார்க் தமிழ்படம் மீதி..!!?? அதை விட நல்ல குறும்படங்கள் வன்னியில் இருந்து வெளியாகியுள்ளது..
அனைத்து ஜனநாயக கடையையும் நிறைவேத்தாச்சு பாஸ்
காட்டான் said...
மாப்பிள இப்பிடியான பதிவுகள போட்டு தமிழ் சினிமா இயக்குனர்களை சிந்திக்க வைக்காதே.. அப்புறம் அவர்கள் நல்ல படம் எடுத்தால்(ஒரு கதைக்குத்தான்)..என்னைப்போன்றோர்கள் குத்தாட்டம் பார்க்க என்ன செய்வதைய்யா...!!!!!????))))))//
அப்பப்ப நம்ம காட்டான் மாம்ஸ் கலக்கிட்டு போயிடுறாரு,... ஹா ஹா ஹா
மாயாவின் உலகத்துக்குள்ள போனதால மாப்பிள்ள நித்திரை கொள்ளாமல் பின்னூட்டம் போடுறார்..ஹி ஹி தூங்கி எழுந்தாச்சா மாப்பு இல்ல இனித்தானா..??
Riyas said...
நல்ல சினிமாக்களை ரசிக்கும் ரசிகன் உருவாகாத வரை அரைத்த மாவை அரைகுக்கும் சினிமா வந்துகொண்டேதான் இருக்கும்..//
சரியாக சொல்லியுள்ளார் நண்பர் ரியாஸ்.... உப்புமா படங்களை நிராகரித்தாலே அது போன்ற படங்கள் வருவதற்கில்லை
காட்டான் said...
மாயாவின் உலகத்துக்குள்ள போனதால மாப்பிள்ள நித்திரை கொள்ளாமல் பின்னூட்டம் போடுறார்..ஹி ஹி தூங்கி எழுந்தாச்சா மாப்பு இல்ல இனித்தானா..??//
தூங்குனாதானே மாம்ஸ் ஏழுந்திருக்குறதுக்கு.... சந்தடி சாக்குல சிரிச்சிபுட்டீங்களே மாம்ஸ்...ஹா ஹா
மகேந்திரன் said...
// நடிகர் பார்த்திபன் சுகமான சுமை என்ற படம் எடுத்தார்//
யார் பார்த்தார்கள்...
உள்ளேவெளியே எடுத்தபின்னர் தான் ஓடுச்சி...
மக்களும் மாறிட்டங்க சகோ...//
நானே இது வரை சுகமான சுமை பார்த்ததில்லை நண்பா...அந்த பேரே கேள்வி படாதவர்கள் பலபேர் இருக்கதான் செய்கிறார்கள்.....
எங்கையப்பா முதலாலிய காணோம்.. ஊர் மேய போட்டாரா..? அவர் எனக்கு ஒரு இங்கீலீசுப்படம் தாரார்ன்னார் ஆனா தமிழ் நாட்டிலதானாம் புடிச்சது அவரே சொன்னார்யா...!?
நிரூபன் said...
@Riyas
நண்பா, நான் கேட்பது, இயக்குனர்களால் குத்தாட்டம் தான் வேண்டும் என அடம்பிடித்துப் படம் பார்க்கும் ரசிகர்களின் ரசனையினை மாற்றித் தன் பக்கம் ஈர்க்கவல்ல காத்திரமான படைப்பினை வழங்க முடியாதா என்று?//
பாஸ் எதார்த்தமான பட்ங்களுக்கென்றே ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்கின்றனர்... கமர்சியல் குத்து பட்ங்களை விரும்பி பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம் இருக்கிறது... இந்த கூட்ட ரசிகர்களின் ரசனையை ஈர்க்கும் காத்திரமான படைப்பாக கொடுத்த முயற்சி தான் பருத்திவீரன்... அதில் கமர்சியலும் எதார்த்தமும் கலந்த ஒரு தரமான படம்... கமர்சியல் படம் மட்டுமே பார்க்கும் ரசிகர்களின் பார்வையும் அந்த படம் முழுக்க ஆக்கிரமித்தது... அதே போல் எதார்த்தமான படங்களை விரும்பும் ரசிகனும் அந்த படத்தை ரசித்தான்... நீங்கள் எதிர்பார்த்த காத்திரமான பாதைக்கு அந்த மாதிரி படங்கள் ஒரு முன்னோடி....
மகேந்திரன் said...
// நடிகர் பார்த்திபன் சுகமான சுமை என்ற படம் எடுத்தார்//
யார் பார்த்தார்கள்...
உள்ளேவெளியே எடுத்தபின்னர் தான் ஓடுச்சி...
மக்களும் மாறிட்டங்க சகோ...//
நானே இது வரை சுகமான சுமை பார்த்ததில்லை நண்பா...அந்த பேரே கேள்வி படாதவர்கள் பலபேர் இருக்கதான் செய்கிறார்கள்.....
மாப்பிள நீ அந்த படத்த பார்க்காமலே இரு சும்மா பிலிம் காட்டியிருக்கார்யா அதில.. ஏண்டா காச கொடுத்து டிவிடி வாங்கினேன்னு நொந்துபோய் இருந்தேன்யா அப்ப.. ஹி ஹி ஹி
நல்லா விளாசி இருக்கீங்க நிரூ..
முதலில் தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் இயக்குநர்களே மிகவும் குறைவு இப்போது. நேரே நடிகரிடம் தான் கதை சொல்கிறார்கள். அப்படிச் சொல்லும்போது என்ன ஆகும்..
அந்த நடிகரை சந்தோசப்படுத்தும்படியான காட்சிகளையே சொல்லவேண்டி வரும். அதனாலேயே ஓப்பனிங் பாடல்களும், பஞ்ச் டயலாக்களும் நம்மை இம்சை செய்கின்றன.
பாலா போன்ற விஷயம் உள்ள இயக்குநர்கள் நடிகர்களிடம் மண்டியிடுவதில்லை.
ஷங்கர் ஒரு கமர்சியல் டைரக்டர் தான். ஆனால் அர்ஜுன் போன்ற கமர்சியல் வேல்யூ அதிகம் இல்லாத நடிகரை வைத்தே சூப்பர் ஹிட் கொடுத்தவர்.அந்தப் படங்களின் கதை எல்லாம் பெரிய நடிகர்களுக்காக எழுதப்பட்டவை. ஆனாலும், தன்னம்பிக்கை காரணமாக, அர்ஜூனை வைத்தே ஜெயித்தார் அவர்.
அப்படி திறமை உள்ள இயக்குநர்களால் மட்டுமே, குறுகிய வட்டம் தாண்டி சிந்திக்க, செயல்பட முடியும்.
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! சவுக்கியமா இருக்கீங்களா? அப்புறம் உங்க பொண்டாட்டி, புள்ளைங்க எல்லோரும் நலமா இருக்காங்களா?
” தமிழ் சினிமா இயக்குனர்கள் அரைத்த மாவையா மீண்டும் அரைக்கிறார்கள்!”
தலைப்பு ஓகே! பதில் - ஆம்!
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, எல்லோரும் நலம் தானே?///
ஆமா நலம்!
தமிழ் சினிமா இன்றைய கால கட்டத்தில் ஒவ்வோர் தமிழனின் வாழ்வோடும் இரண்டறக் கலந்து விட்டது.///
உண்மை சார்!
பொழுது போக்கு அம்சமாகவும், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற, அல்லது நடிகர்களை அரசியல் எனும் சாக்கடையினுள் தள்ளி விடுகின்ற ஊடகமாகவும் எம் சினிமா இன்று விளங்குகிறது. ////
கரெக்ட் ஜஜ்மெண்ட்!
மேற்கத்தைய சினிமாவின் தரத்தினை- வளர்ச்சியினை, வெரைட்டியான கதைகளை எம் தமிழ் சினிமா எட்டித் தொட முடியாதளவிற்குப் பின் தங்கி நிற்கிறதா எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடே இப் பதிவு.///
நல்ல முயற்சி சார்! தொடருங்கள்!
எம் தமிழ் சினிமாதான் பல கிராமியக் கனவுகளையும், பச்சை வயலின் வரம்புகளைத் தரிசித்திராத- ஏழ்மை பற்றி உணர்ந்திராத பணக்கார வர்க்கத்திற்கு வாழ்க்கைப் பாடம் போதிக்கும் ஒன்றாகவும் விளங்கியிருக்கின்றது.///
இதுவும் சரியே! உண்மை! உண்மை!!
நாளாந்தம் எம் தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்கள் ஒரு குறுகிய வட்டத்தினுள் தான் இருக்கின்றன. உதாரணமாக ஒரு மாதத்தில் வெளிவருகின்ற படங்களை உற்று நோக்குங்கள், அவற்றின் உள்ளடக்கம் யாவும், ஒரு காதல் கதையினை, இல்லையேல் ஒரே மாதிரியான ரசனை கொண்ட கருப் பொருளைத் தான் கொண்டிருக்கும்///
இதுவும் உண்மை!
எல்லாப் படங்களிலும் ஐந்து அல்லது ஆறு பாட்டுக்கள் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அவற்றில் ஒரு பாடலினை
படத்தினை நடிக்கும் நடிகனைக் கடவுளாகப் போற்றுவதற்கான நம்பிக்கையினை ரசிகர்கள் மத்தியில் ஊட்டக் கூடிய எழுச்சிப் பாடலாகவும், இன்னோர் பாட்டினை நடிகையின் பொக்குளைக் காட்டிக் குத்தாட்டம் போடுவதை ரசிகர்கள் ரசிக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் படங்களில் புகுத்துவது இயக்குனர்களின் கடமையாகி விட்டது.///
இதுவும் உண்மை!
உண்மையில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் நடிகைகளின் சதையினை விற்றுக் காசு பார்க்க வேண்டும் எனும் நோக்கிலா எடுக்கப்படுகின்றன எனும் ஆதங்கமும் என்னுள் எழுகின்றது. ///
இதில் என்ன சந்தேகம்! - அப்படியே தான்!
பிரபல நடிகர்களின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியிடப்படுகின்ற படமாக இருந்தாலும் அவற்றில் குத்தாட்டம் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றதா? ///
ஆமாம் தவிர்க்க முடியாததுதான்!
இல்லையேல் மார்புகள் குலுங்கக் குலுங்க நடிகைகள் அரை குறை ஆடையில் ஆடுவது தான் படத்தின் விற்பனையினை அதிகரிக்கும் எனும் நோக்கில் எடுக்கப்படுகின்றதா? ///
அதுவும் உண்மை! அப்படியே தான்!
ரசிகர்கள் விரும்பி இத்தகைய கிளு கிளுப்பு நடனங்களை ரசிக்கின்றார்கள் என்றால், எம் திரைப்பட இயக்குனர்களால் ரசிகர்களின் மன நிலையினை மாற்றி வெரைட்டியான படங்களைக் கொடுக்க முடியாதா?,///
ஒரு போதுமே முடியாது! முடியவே முடியாது சார்!
கிளு கிளுப்பு நடனத்திற்கு கொடுக்கும் மதிப்பினை விட, காத்திரமான கதையுள்ள படத்தினைக் கொடுத்து; குத்தாட்டங்களையும், சதையினையும் நம்பி எடுக்கப்படும் எம் தமிழ் சினிமாவின் உயிரோட்டத்தினை இயக்குனர்களால் மாற்ற முடியாதா? ///
முடியாது சார்! அது ஒருபோதுமே சாத்தியமில்லை!
ஆங்கில- வேற்று மொழித் திரைப்படங்களைப் பாருங்கள். ஒரு கம்ர்சியல் படத்தில் கூட சூட்டைக் கிளப்பும் பல காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் அங்கே பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்களா? ///
இல்லை! அவர்கள் கொடுப்பதில்லை!
படம் முடிந்த பின்னரும் அப் படத்தில் இடம் பெற்ற கிளு கிளுப்புக் காட்சிகளை விட படத்தின் மூலக் கருத் தானே எம் மனங்களில் ஆழமாகப் பதிந்து விடுகின்றது.///
ஆமாம்! அப்படித்தான்!
இத்தகைய நல்ல கரு உள்ள தரமான படங்களை தமிழ் ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் இயக்குனர்களால் வழங்க முடியாதா?///
முடியாது சார்!
நடிகரையும், நடிகைகளையும் நாம் அனைவரும் தலை முறை தலை முறையாக கோயில் கட்டியும், மனதில் இருத்தி தெய்வமாக நினைந்துருகி, உணர்ச்சிவசப்பட்டு பாலூற்றி அபிஷேகம் செய்து வழிபடும் நிலையினைத் தான் தமிழ் சினிமா இயக்குனர்கள் தொடர்ந்தும் செய்யப் போகின்றார்கள்? ////
ஆம்! இதுதான் தொடரப்போகிறது!
அங்காடித் தெரு, ஆடோகிராப், அந்நியன் போன்ற வெரைட்டியான படங்களைப் பார்க்க நாம் பல வருடங்கள் தவமிருக்க வேண்டுமா?///
இல்லை! அவ்வப்போது வரும்! நீங்கதான் தேடித் தேடிப் பார்க்கணும்!
தமிழகத்தின் ஒவ்வோர் சிற்றூர்களிலும் இன்னும் படமாக்கப்படாத பல அருமையான கதைகள் பொதிந்துருக்கின்றன.///
உண்மை!
அவற்றையெல்லாம் வண்ணத் திரைக்குக் கொண்டு வந்து எம் மனதினை மகிழ்ச்சிபடுத்த இந்த இயக்குனர்களால் முடியாதா?///
முடியாது சார்! எதுக்கு சொந்த செலவில் சூனியம் வைக்கணும்?
தமிழ் சினிமாவில் நின்று நிலைக்க வேண்டும் என்றால் இத்தகைய ஒரே மாதிரியான கதைகள்- நாயகன் அடி தடியில் தூள் கிளப்பி, காதலில் வெற்றியீட்டி டூயட் பாடும் அம்சங்களைக் கொண்ட படங்கள் தான் தேவை என்றால்; இதனைத் தான் ரசிகர்களும் விரும்புகின்றார்கள் என்றால், இயக்குனர்களாகிய உங்களால் ஒரு நல்ல சினிமாவை ஏன் படைக்க முடியாது? ///
முடியாது சார்! முடியவே முடியாது!
பாக்கியராஜ். பாரதிராஜா. மணிரத்னம், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்கிரமன், ஷங்கர், என வெரைட்டியான கிரியேட்டி விட்டி கொண்ட இயக்குனர்களைத் தவிர ஏனைய இயக்குனர்களுக்கு கிரியேட்டி விட்டியே கிடையாதா?///
ஹி ஹி ஹி இந்தக் கிரியேட்டிவிட்டி என்ற சொல்லை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி போல இருக்கு!
சார், இந்த லிஸ்டில் நீங்க இன்னும் சிலரை விட்டுவிட்டீர்கள்!
எத்தனை நாளைக்குத் தான் ஓப்பினிங் சாங்கையும், ஓடி ஓடிக் காதலிக்கும், நடிகனின் உணர்வுகளையும், நடிகனின் தோழனாக வரும் காமெடி நடிகரின் கலாய்த்தல்களையும், நடிகனின் சோர்ந்து போன மனதிற்குச் சொடக்கெடுக்கும் ரெட்டை அர்த்தம் கலந்த குத்தாட்டப் பாடலையும், கிளைமாக்ஸில் வில்லன் கூட்டத்தால் கொல்லப்பட்டவருக்கான பழி வாங்கல் படலத்தையும் பார்த்துப் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருப்பது? ////
உங்களுக்கு இளமை இருக்கும் வரை!
UNSTOPPABLE TRAIN, GOD FATHER, EAT PRAY LOVE, A TEAM, TERMINATOR, VOLVER, இந்த மாதிரியான வெரைட்டியான படங்களைப் போல் எம் தமிழ்ச் சினிமா இயக்குனர்களாலும் சிந்தித்து நல்ல படைப்புக்களைத் தர முடியாதா?///
அவர்களால் முடியும்! ஆனால் தர மாட்டார்கள்!
ஏன்னா, அவங்களோட பொண்டாட்டி புள்ளைங்களுக்கு நீங்களா சோறு போடுவீங்க?
ஆங்கிலப் படங்களை இன்ஸ்பிரேசனாகக் கொண்டாவது எம் தமிழ்ச் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தலாம் அல்லவா. ///
முடியாது சார்!
பாஸ் ஒரு நாளில் ரெண்டு பதிவா???? ஹீ ஹீ...
ஜெயலலிதா பற்றி உங்க கவிதைக்கு இப்போத்தான் உங்கள் முதல் பதிவுல போய் கும்மி அடிச்சுட்டு வாறன்......
ஏதும் தப்பா சொல்லி இருந்தா சாரி ......................................................
தொடர்ந்தும் ஒரே மாதிரியான கதை அம்சங்கள் கொண்ட சினிமாவினைப் பார்த்து சலித்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவனாக என் உணர்வுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். இயக்குனர்களே! இவை நிச்சயம் உங்கள் காதுகளை எட்ட வேண்டும். ////
எட்டும் சார், ஆனால் அவர்கள் தட்டிவிட்டுட்டு போய்க்கொண்டே இருப்பார்கள்!
உண்மைதான் பாஸ், இதில் வேதனையான விடயம் என்ன வென்றால் முன்பு தரமான நல்ல படங்களை கொடுத்த பல பேர் இப்போது
மசாலாவை அரைப்பதுதான் ,
//உண்மையில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் நடிகைகளின் சதையினை விற்றுக் காசு பார்க்க வேண்டும் எனும் நோக்கிலா எடுக்கப்படுகின்றன எனும் ஆதங்கமும் என்னுள் எழுகின்றது.//
பலருடைய ஆதங்கமும் இதுதான்..... கதையை நம்ம்பிய காலம் போய் சதையை நம்மப தொடங்கிவிட்டார்கள் , இதற்க்கு பதிலாக வேற தொழில் செய்யலாம்
வணக்கம் நிரூபன் சார்!
அருமையான கருப்பொருள் ஒன்றினை இன்று விவாதத்திற்கு எடுத்திருக்கிறீர்கள்!
இனி நான் எனது கருத்துக்களைக் கூறப் போகிறேன்! மாற்றுக் கருத்துக்கள் தான் முன்வைப்பேன்!
முன்வைக்கலாமா?
சார், நீங்கள் நல்லவர் என்பதாலோ , என்னோட நண்பன் என்பதாலோ, என்னால் உங்கள் கருத்துக்களை ஆதரித்து கமெண்டு போட முடியாது!
இன்றைய தமிழ் சினிமாவின் யதார்த்தத்தை எடுத்து சொல்கிறேன் கேளுங்கள்!
சினிமா என்பது ஒரு தொழில்! ஒரு தொழில் செய்யும் போது, அதில் ஈடுபடுபவனுக்கு வருமானம் கிடைக்க வேண்டும்!
தோல்வியடையும் தொழிலை யாரும் தொடர்ந்து செய்ய மாட்டார்கள்!
எனவே சினிமா என்பது ஆயிரக்கணக்கான, உழைப்பாளர்கள் ஊதியம் பெறும் ஒரு தொழில் ஸ்தானம் என்பதை நாம் முதலில் ஏற்றாக வேண்டும்!
அதனை ஏற்றுக்கொண்டால், பாதி குழப்பம் தீர்ந்துவிடும்!
சினிமா எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரும், தன்னை நம்பி காசு கொடுக்கும் தயாரிப்பாளருக்கு, அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றே நினைக்கிறார்! அது அவரது கடமையும் கூட!
எனவே, இன்னொருவரது பணத்தை, வட்டிக்கு வாங்கி வைத்துக்கொண்டு, ரிஸ்க் எடுக்க முடியாது!
போட்ட பணத்தை மீள எடுப்பதே சிறந்த வழி!
சினிமாவில் போட்ட பணத்தை திருப்பி எடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு புத்தி சாலி இயக்குனர், எப்படிப் படம் எடுத்தால் மக்கள் மத்தியில் ஓடும் என்று, மிகச் சரியாகவே கணக்குப் போடுகிறார்!
தமிழர்களுக்கு எது பிடிக்கும்? எப்படிப் படம் எடுக்க வேண்டும் என்று தெரியாதவர்கள் சினிமாவில் வெற்றி பெறவே முடியாது!
யார் என்ன சொன்னாலும், எப்படி வியாக்கியானம் சொன்னாலும், அதிக நாஅட்கள் ஓடி, கமர்ஷியல் ஹிட் கொடுக்கிற படமே வெற்றிப் படம் என்று சொல்லப்படுகிறது!
யார் என்ன சொன்னாலும், எப்படி வியாக்கியானம் சொன்னாலும், அதிக நாஅட்கள் ஓடி, கமர்ஷியல் ஹிட் கொடுக்கிற படமே வெற்றிப் படம் என்று சொல்லப்படுகிறது!
மற்றும் படி ஆர்ட் ஃபில்ம் எடுத்து, விருது வாங்கி, வீடு ஷோ கேசில் வைத்து அழகு பார்க்கலாம்!
ஆனால், ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது!
தமிழ்ச்சினிமாவில் எப்போதுமே கதை ஒண்ணே ஒண்ணுதான்!
ஹீரோ வில்லன்களை ஒழிக்கணும்! ஹீரோயினை கல்யாணம் பண்ணனும்! தற்ஸ் ஆல்/
தமிழ் சினிமாவில் குத்தாட்டத்தை ஒருபோதுமே, நிறுத்த முடியாது! காரணம் குத்தாட்டம் என்பது எமது ரத்தத்தில் கலந்தது!
தமிழனுக்கென்று பாரம்பரிய நடனம் ஒன்று இருக்கிறது! அதுதான் குத்தாட்டம்! - அதனைத் தான் மாடிஃபை பண்ணி, சினிமாவில் தருகிறார்கள்!
எமது பாரம்பரிய தாள வாத்தியம் - கொட்டு மேளம், அல்லது பறை மேளமாகும்!
பல ஆயிரம் வருடங்களாக தமிழர்களின் ரத்தத்தில் கலந்த குத்தாட்டத்தை, ரசிக்கத் தெரியாதவன் - தமிழனே அல்ல!
மேலும் குத்துப் பாடல்களை தமிழன் ரசிப்பதற்கு இன்னொரு காரணம் அதில் ஆடுகிற - பெண் தனது மார்பையும், தொடையையும், தொப்புளையும் காட்டுவதாகும்!
நீண்டகாலமாக அடக்கி வைக்கப்படும் தமிழனின் பாலியல் உணர்வுகளுக்கு ஒரு வடிகால் வேணாம்?
அதுனாலதான் இருட்டறைக்குள், அதற்கு ஒரு தீர்வு தேடுகிறான் தமிழன்!
உண்மையைச் சொன்னால் தேசத் துரோகியைப் பார்ப்பது போல பார்க்கிறீர்கள்!
ஆனாலும் உண்மை இதுதான் - அயிட்டம் ஸாங்க் இல்லைன்னா தமிழன் செத்துருவான்!
என்ன ஆச்சு நிரூவிற்கு வேலாயுதம் படத்திற்கு இப்பவே கூட்டம் சேர்க்கிறாங்களாம் தலீவா நீதான் எல்லாம் என்று இப்படி நாயகர்களாக போற்றும் போது படம் இயக்க யாருக்கு சந்தர்பம் கிடைக்கும் அவரை போற்றுவோரைத்தானே!
தமிழர்களின் வாழ்க்கை முறையே சினிமாவாக மாறுகிறது!
தமிழனின் அடிப்படைக் குணங்களான
அடுத்தவனைப் பார்த்து பெரு மூச்சு விடுதல்,
செண்டிமெண்ட் கேட்டு உருகுதல்,
கூட்டுக் குடும்பம் என்ற பேரில், தனிமனிதனின் பிரைவசியை நசுக்கி, சிக்கலுக்குள் வாழுதல்,
மூட நம்பிக்கைகளை நம்புதல்,
நல்ல கருத்து சொல்பவர்களைக் கிண்டலடித்தல்,
இதுமாதிரியான, மசாலாக்களைத் தான் சினிமாவிலும் காட்டுகிறார்கள்! மக்களும் ரசிக்கிறார்கள்!
இயக்குனர்கள் சிலதை செய்ய நினைத்தாலும் நாயகனும் தயாரிப்பாளர்களும் செய்யும் ரகளையில் தல்ல கதை இருக்கும் இயக்குனர் கஞ்சியாகவேண்டிய நிலை!
பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய உறவுகளே, எல்லோரும் நலம் தானே?
நாங்க நலம் நீங்க ,?
ஆங்கில சினிமா பாணியில் படம் எடுத்தால், ஆஸ்கார் வாங்கலாம் என்பது என்னவோ உண்மைதான்!
ஆனால், அது தமிழர்களின் மனங்களில் ஒட்டாது! ஏனென்றால் தன்னோட செண்டிமெண்ட் உள்ளிட்ட இஸ்தியாதிகள் இல்லாவிட்டால், தமிழன் ரசிக்கவே மாட்டான்!
நல்ல அலசல் தான் நண்பா வெளுத்து வாங்கியிருக்கிங்க .
இன்றைய தமிழ் சினிமா படங்கள் வெற்றி பெறுவதும் நீங்க சொன்ன அம்சங்கள் இருந்தால் தான் .அதனால் வித்தியாமான கோணத்தில் சிந்திக்க தவறுகிறார்கள் இயக்குனர்கள் , தயாரிப்பாளர்கள் /
(படத்தின் மூலக் கருத் தானே எம் மனங்களில் ஆழமாகப் பதிந்து விடுகின்றது.)கலக்குது boss
காமெடி, குத்தாட்டம், செண்டிமெண்ட் இதெல்லாம் இல்லாமல் ஒரு ஒன்றரை மணி நேர படம் எடுத்து, அதனை ஒன்றரை நாட்கள் ஓட வைக்க முடியும் என்றால், இனிமேல் சூரியன் மேற்கில்தான் உதிக்கும்!
தமிழ் சினிமாவில் சிலர் வித்தியாசமாகத்தான் எடுக்க முயல்கிறார்கள்!
பட்டால்தான் தெரியும் என்பது போல, தங்களது ஆர்ட் ஃபில்ம்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மசாலாப் படங்கள் எடுத்தவர்கள் எத்தனை பேர்!
ஒரு நடிகர் தோல்வியின் விழிப்பில் நின்றபோது ஓடிவந்து கதையைக் கொடுத்து அவர் திரைவாழ்வைத் தூக்கிவிட்ட இயக்குனரை அடுத்த படத்தில் நடிக்கின்றேன் என்று சொல்லி ஒப்பத்தம் செய்து அரைவாசி நடித்துவிட்டி ஒரு சட்டையை தொடர்ந்து போடமாட்டன் என்று சொல்லி படத்தினை நிறுத்தி அவரின் கதையை சீரலித்த வரலாறு தெரியுமா பலருக்கு! இப்படி இருக்கும் போது இயக்குனர் எப்படி நல்ல படத்தை இயக்குவது!
மேலும் ஒரு சினிமாவை வெற்றி பெறச் செய்பவர்கள் நல்ல சினிமாவை ரசிக்கும் ஏ தர ரசிகர்கள் அல்ல!
எண்ணிக்கையில் இந்த ரசிகர்களின் எண்ணிக்கை குறைவு!
மூணு நாளா கியூவுல நின்னு, அடிபட்டு, நடிகன் கட்டவுட்டுக்கு பால் ஊத்தி, பொங்க வச்சு, படம் பார்க்குற என்னைப் போன்ற அடிமட்ட ரசிகன் தான் சார், படத்தையே ஓட வைக்கிறான்!
நாங்க மட்டும் இல்லைன்னா, தமிழ் சினிமாக்காரங்க தெருவுல பிச்சைதான் எடுப்பாங்க!
அங்காடித்தெரு நல்ல படம்னு சொன்னாய்ங்க! சரின்னு ஃபிரெண்ட்ஸ் கூட படம் பார்க்கப் போனேன்!
படம் சுத்த வேஸ்டு! படத்துல ஒரு எழவும் இல்ல! பாதியிலேயே எந்திரிச்சு வந்துட்டேன்!
வசந்த பாலனை கொலை வெறி கொண்டு தேடிக்கிட்டு இருக்கேன்!
போங்க சார், நம்மள மாதிரி அடிமட்ட ரசிகனை திருப்தி படுத்தலைன்னா, அவன் சினிமாவுல உருப்படவே மாட்டான்!
தன்னை துதிபாடுவோரை இயக்குனராக வைக்கும் mgr rajani vijai வரிசை தொடரும் வரை இயக்குனர் ஒன்றும் செய்ய முடியாது விசில் அடித்தான் குஞ்சுகள் குத்தாட்டம் பார்க்கும் வரை தமிழில் நல்ல அந்திமந்தாரை,வீடு,முள்ளும்மலரும்,சிறை, ராம்,தவமாய்த்தவம் இருந்து, கோடாம்பாக்கம் போன்ற படங்கள் இனி வருவது கஸ்ரம்! இதைத்தானே பால் ஊத்துவோர் விரும்புகின்றார்கள் !
எந்திரன் படம்! ஷங்கரின் ஹாலிவூட் ரேஞ்ச் முயற்சி! அதை தமிழன் எப்படி ஏத்துக்கிட்டான்?
ரஜினிக்கு ஓப்பனிங் சரியில்ல!, கலாபவன்மணி கிட்ட ஃபைட் பண்ணல - இப்புடி எத்தனை விமர்சனம்!
ஸோ, தமிழ் சினிமாவுல எந்த இயக்குனருக்காவது, பொண்டாட்டி புள்லைங்கள நடுத்தெருவுல வுட்டுட்டு, சூசைட் பண்ற, ஐடியா இருந்துச்சுனா,
அவங்க தாராளமா, நீங்க சொல்லுற நல்ல படம் எடுக்கலாம்! மத்தபடி, நெவெர் ச்சான்ஸ்!
சார், நீங்க குத்துப் பாட்டுக்களை ஏன் வெறுக்கிறீங்கன்னு தெரியல! எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கு்ம்! ஜாலியா ஆடணும், பாடணும், லைஃப என் ஜாய் பண்ணனும்!
அத வுட்டுப் புட்டு, ஆர்ட் ஃபில்ம பார்த்து மெண்டல் ஆகச் சொல்றீங்களா?
சார், நீங்க ஆசைப்படுற மாதிரி, வித்தியாசமான படங்கள் வரணும், அவை வெற்றி பெறணும்னா, தமிழர்களின் ரசனை மாறணும்,
ரசனை மாறணும்னா, தமிழர்களின் லைஃப் ஸ்டைல் மாறணும்!
லைஃப் ஸ்டைல் மாறணும்னா, நமது கல்ச்சர் மாறணும்!
கல்ச்சர மாத்த முடியுமோ?
கல்ச்சர மாத்தி, நம்மளக் கொஞ்சம் சுதந்திரமா வுடுங்கன்னா, உங்கள மாதிரி பெரியவுங்க தான்,
அதெல்லாம் மாத்தக் கூடாதுன்னு அடம்புடிக்கிறீங்கோ!
அப்புறம் எதுக்கு அமெரிக்கா காரன் ஸ்டைல்ல படம் எதிர்பார்க்கறீங்கோ!
போங்க சார்!
( நிரூபன் சார், உங்கள சொல்லலை )
சார், உங்களுக்கு வடிவேலு புடிக்குமா? விவேக் புடிக்குமா? அப்டீன்னு கேட்டா, நெறையப் பேர், வடிவேலுவத்தான் சொல்றாங்கோ!
காரணம், விவேக் எப்ப பார்த்தாலும் அதைப் பண்ணாத, இதப் பண்னாத அப்டீன்னு அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பாரு! காமெடின்னா சிரிப்பு வரணுமே தவிர, அட்வைஸ் பண்ணிக் கொல்லக் கூடாது!
இப்புடித்தான் சார் நிறையப் பேரு நெனைக்கறாங்க!
ஏன்னா, அடுத்தவன் சொல்ற அறிவுரையைக் கேக்குறது தப்பு அப்டீன்னு, எல்லாத் தமிழர்களும் மூளைச் சலவை செய்யப்பட்டு இருக்காங்க!
“ எலேய் சார், சீரியஸாப் பேசுறாருலே, ஓடுலேய்”
இப்படிச் சொல்லிச் சொல்லியே, தமிழர்களின் சிந்திக்கும் திறனை நல்லாவே மழுங்கடிச்சுட்டாங்க!
இதுல போயி நல்ல சினிமா ஏன் வர்லன்னு என்ன இது கேள்வி நிரூபன் சார்?
உங்களுக்குத் தேவைன்னா, ஹாலிவூட் படத்த பார்த்துட்டு, கம்முன்னு இருங்க சார்!
மத்த படி, தமிழ் சினிமா இப்படித்தான் இருக்கும்! அதை மாத்தவே முடியாது சார்!
நிரூபன் சார், கொஞ்சம் ப்ராக்டிக்கலா திங்க் பண்ணலாம் வாங்க சார்!
சார், நான் நண்பர்களோட சேர்ந்து நல்லா டான்ஸ் ஆடி, என் ஜாய் பண்ணி ரொம்ப நாளாச்சு சார்! மனசு பூரா ஆசையா இருக்குது சார்!
என்னோட ஊருல டான்ஸ் கிளப்போ, நைட் கிளப்போ எதுவுமே இல்ல சார்! நான் வாக்குப் போட்ட மொக்கு அரசாங்கம் இந்த வசதியெல்லாம் எனக்கு செஞ்சு தர்ல!
இந்தக் கடுப்புல இருக்குற நான் - அப்பப்ப சினிமாவுல வர்ர அயிட்டம் சாங் பார்த்து மனச தேத்திக்குவேன்!
என்னையப் போயி, ஹேராம் மாதிரி ஹெவியான படம் பார்க்கச் சொன்னா, நான் மெண்டலாகிடுவேன் சார்!
அப்புறம் வயசுக்கு வந்து 7 வருஷம் ஆகுது சார், இதுவரைக்கும் ஒரு பொண்ணையும் தொட்டதில்ல சார்! அதுனால, மனசுக்குள்ள ஆசை இருக்கா, அதுனால சினிமாவுல வர்ர கதாநாயகியப் பார்த்து பார்த்து ஏங்குவேன் சார்!
இதுனால எனக்கு சிநேகா மாதிரி இழுத்துப் போர்த்துற நடிகைகளப் புடிக்கறதே இல்ல சார்!
வெள்ளைக்காரன் ஒவ்வொரு வாரமும் வெள்ளை சனி ஞாயிறு நாட்களில ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா இருப்பான்!
அவனோட நாட்டுல முழத்துக்கு முழம் கிளப்புகளும், பப்புகளும் இருக்கும் சார்! அதுனால அவன் சினிமா பார்த்துத்தான் தன்னோட, இச்சைகளை தீர்த்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல சார்!
அதுனால அவனோட படத்துல அயிட்டம் சாங்க் இல்ல சார்!
அவன் நல்ல படம் குடுக்குறான்!
ஆனா அப்பாவித் தமிழனாகிய என்னோட வாழ்க்கை? ????
கேட்டா , கலாச்சாரமாம் அத கட்டிக் காக்கணுமாம்! இல்லைனா யோகாசனம் செஞ்சு மனச அடக்கட்டாம்!
என்ன கொடுமை சார் இது?
( ஹி ஹி ஹி ஹி நிரூபன் சார் பயந்துடாதீங்க! ஒரு சராசரி தமிழனின் குரலாக நான் இதை எழுதியிருக்கேன்! மத்த படி, என்னைப் பத்தித்தான் தெரியுமே! ஹி ஹி ஹி !! )
நிரூ, எல்லாக் கமெண்டுகளுக்கும் பதில் சொல்லிவிட்டு, இந்த விவாதத்துக்கு, நல்லதொரு பதில் சொல்லிவிட்டு, அடுத்த பதிவுக்கு செல்லவும்!
இல்லைனா, - அங்காடித்தெரு படம் பார்க்க வச்சுடுவேன்னு எச்சரிக்கிறேன்! ஹி ஹி ஹி ஹி!!!!!
அனைவரின் மனத்திலும் ஆதங்கமாக உள்ளதை
மிக அழகாகவும் தெளிவாகவும் உறைக்க வேண்டியவர்களுக்கு
உறைக்கும் படியாகவும் பதிவிட்டிருக்கிறீர்கள்
மனம் கவர்ந்த தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 14
நீங்கள் குறிப்பிடும் அத்தனை இயக்குனர்களும் ஒரே பாணியில் களம் மாறாமல் ஆட்களை கூட மாறாமல் படம் எடுப்பவர்களே...
பெரிய இயக்குனர் என்று மக்களால் தூக்கி வைக்கப்படும் சங்கர் அந்நியனுக்கு அடுத்து கந்தசாமி...என்ன வித்தியாசம் இரண்டுக்கும்...கேட்டால் பெரிய இயக்குனர்...
வாயை கிளறாதீர்கள் சகோதரா..
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்...ஒருவர் சுமாராக ஒரு படம் எடுத்தால் தலையில் தூக்கி வைத்து நாம் ஆடுவோம்..(முருக தாஸ் போல..)
இதை தான் மக்கள் விரும்புகிறார்கள் என்று கண்டதையும் கொடுக்கிறார்கள்...சில மலையாள படங்களையும் பெங்காலி படங்களையும் இவர்களை பார்க்க சொல்ல வேண்டும்...
முக்கியமாக பட விமர்சனம் எழுதும் நண்பர்கள்...தயவு தாட்சனை இன்றி குப்பையை குப்பை என்று உரக்க சொன்னால் தான் இவர்கள் மாறுவார்கள்...
அதுவரை ரசிகர்களை குறை சொல்லி குப்பையை கொடுத்து கஜானாவை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள்...
பூனைக்கு மணியை கட்டி விட்டீர்கள் நிரூ...
நல்ல கருத்து ஆனால் மக்கள் ரசனையை தானே அவங்கள் பார்ப்பான்கள் .
உங்கள் ஆதங்கம் புரிகிறது. ஆனால் அது நம்மை போன்ற சிலரது ஆதங்கம் தான்
அரைச்ச மாவு புளிக்கும்
/////? பாக்கியராஜ். பாரதிராஜா. மணிரத்னம், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்கிரமன், ஷங்கர், என வெரைட்டியான கிரியேட்டி விட்டி கொண்ட இயக்குனர்களைத் தவிர ஏனைய இயக்குனர்களுக்கு கிரியேட்டி விட்டியே கிடையாதா?/////
யோவ் பாஸ் பாக்கியராஜ் சை ஏன்யா இந்த வரிசையில் சேக்குறீங்க கில்மா மேட்டர்களை தனது படங்களில் புகுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான்...முருங்கைக்காயை பிரபல்யமாக்கிய பெருமையும்,மார்கழி மாசத்தில் மிருகங்களிள் அந்த மாதிரிநேரத்தில் வெளியிடும் ஒலிகளை மிகவும் தத்றூபமாக காட்டிய பெருமை இவரைத்தான் சாரும்.
இன்று வரை சிவரது அப்படியான படங்களை அடிக்க இயக்குனகள் வரவில்லை..கொஞ்சம்..எஸ்.ஜே.சூர்யா இந்த அரியசேவையை செய்தார் அப்பறம் அவரையும் காணவில்லை.
////இதுனால எனக்கு சிநேகா மாதிரி இழுத்துப் போர்த்துற நடிகைகளப் புடிக்கறதே இல்ல சார்////
சினேகா அக்காவும் கவர்சியா நடிச்சு இருக்காங்க..யார் சொன்னது மணிசார் அவங்க நடிக்கலைனு
...அர்ஜூனின் படம் ஒன்றில்(படம் சின்னா)அதில் அர்ஜுனுக்கு சினேகா ஜோடி இல்லை அர்ஜுன் ஆண்டி ஹீரோவா நடிச்சி இருப்பார்..அதில சினேகா அக்கா ஒரு ஆட்டம் போடும் பாருங்க..இம்சைப்பன்னாத...இம்சைப்பன்னாத.......காலங்காத்தால இம்சைப்பன்னாத.........இதைவிட இழுத்து போத்தாம நடிக்கிறது எவ்வளவோ தேவல.
கீழே இருக்கும் சினேகா அக்காவின் சோங் லிங்களை போய் பாருங்க மணிசார் இனி இங்க யாரும் சினேகா கவர்சியாக நடிக்கவில்லை என்று சொல்லி சினேக ரசிகர்கள் மனதை புண்படுத்தவேண்டாம்.ஆடையை கலைத்துவிட்டு நடிப்பது மட்டும் கவர்ச்சி இல்லை இதுவும் கவர்சிதான்...போய் பாத்துட்டு வந்து உங்கள் கருத்துரையை சொல்லுங்கப்பா
இனியாரும் சினேகா கவர்சியாக நடிக்கவில்லை என்று சொல்லப்படாது.
(நம்ம பாஸ் நிரூபனும் சினேகா புராணம் பாடுவதாக நேத்து நான் எழுதிய கிசு.கிசு பதிவில் கும்மினவங்க சொன்னாங்க)
http://www.youtube.com/watch?v=B5_eIQKXy_w
http://www.youtube.com/watch?v=o2k8tukOVXE
http://www.youtube.com/watch?v=0nmLOmpItSw
இதைவிட இன்னும் நேரையா சோங் இருக்கு பட் அதன் லிங் எல்லாம் இங்க இணைக்கமுடியாது..நீங்களே போய் தேடிப்பாருங்க
\\\ஆங்கிலப் படங்களை இன்ஸ்பிரேசனாகக் கொண்டாவது எம் தமிழ்ச் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தலாம் அல்லவா. "ஒரு படைப்பாளியின் படைப்பினை விமர்சிப்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அவன் இவ்வாறு தான் செயற்பட வேண்டும் என்று சொல்லுவதற்கு(கருத்தைத் திணிப்பதற்கு) உரிமை இல்லை. காரணம் நாம் படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தினை முடக்கும் வகையில் செயற்படுவது போலாகிடும். ஆனாலும் தொடர்ந்தும் ஒரே மாதிரியான கதை அம்சங்கள் கொண்ட சினிமாவினைப் பார்த்து சலித்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவனாக என் உணர்வுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். இயக்குனர்களே! இவை நிச்சயம் உங்கள் காதுகளை எட்ட வேண்டும். ///
மிகவும் சரி நிரூபன். அவர்கள் காதுகளை எட்டட்டும்
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒரே வார்த்தைல டாகுடர் விஜய் மாதிரி படம் எடுக்க கூடாதுன்னு சொல்லிட்டா முடிஞ்சது.....//
ச்சே! சான்சே இல்ல! எவ்ளோ சிம்பிளா சொல்லிட்டார்!
மாம்ஸ்னா மாம்ஸ்தான்!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஒரு கட்டத்தில் சேது, அழகி, காசி, ஆட்டோகிராப் போன்ற படங்கள் வரத்தொடங்கின, அவை நன்றாகவும் ஓடி வசூல் செய்தன. அது போல் கதையம்சமுள்ள படங்கள் ஓடும் என்ற நம்பிக்கை துளிர்த்த காலம் அது, ட்ரெண்ட் மாறிவிடும்னு நம்பினோம். ஆனால் அந்த நேரத்தில் ஜெமினி, சாமி, தூள், கில்லி போன்ற படங்கள் வந்து கெடுத்துவிட்டன........//
உண்மைதான்!
இருந்தாலும் அதையும்தாண்டி சிலபடங்கள் வெளிவருகின்றன!
பருத்திவீரன், சுப்பிரமணியபுரம், அங்காடித்தெரு, மைனா, அழகர் சாமியின் குதிரை, ஆடுகளம் போன்ற நல்ல படைப்புகளும் வருகின்றன!
//தமிழ் சினிமா இயக்குனர்கள் அரைத்த மாவையா மீண்டும் அரைக்கிறார்கள்! //
பல இயக்குனர்கள்
நல்ல படன் ஓடினா .. நல்ல படம் வரும்
சரியான ஆதங்கம்...
தமிழ்சினிமாவில் ஒரு கதை வெற்றி பெற்றால் அதே பாணியில் பலபடங்கள் பண்ணுவதும் Hero களிற்காகக் கதை பண்ணுவதும், பிறமொழிப் படங்களை காப்பியடிப்பதுவும் மாறவே மாறாது
//அம்பலத்தார் said...
தமிழ்சினிமாவில் ஒரு கதை வெற்றி பெற்றால் அதே பாணியில் பலபடங்கள் பண்ணுவதும் Hero களிற்காகக் கதை பண்ணுவதும், பிறமொழிப் படங்களை காப்பியடிப்பதுவும் மாறவே மாறாது//
என்ன வேணாலும் பண்ணட்டும்! ஆனா என்னமோ தாங்களே உட்கார்ந்து யோசிச்ச மாதிரி அலப்பறை பண்ணுவாங்க பாருங்க....அத மட்டும் பண்ணாட்டி சரி!
@ ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw
Thanks.. friend your every comment i like it and very impressive..
இப்போது தமிழ் சினிமாவில் கலைஞர்களுக்கு (கலைஞர் அல்ல ) பஞ்சமாகிவிட்டது ....தொழிலதிபர்கள் கையில் தமிழ் சினிமா உள்ளதே மோசமான நிலைக்கு காரணம் ....
இப்போ தமிழ் சினிமாவில் கதைப் பஞ்சம் உள்ளது..
நல்லா அழகாக அலசி இருக்கீங்க
மிக சில படங்களே கருத்துள்ள படங்கள் வருகிறது .அதற்காக கருத்தை மட்டுமே வைத்து வேற எதையும் வைக்காம படம் எடுக்க சொல்லவில்லை .
சாப்பாட்டிற்கு ஊறுகாய் சிறு அளவு போதும் .வெறும் ஊறுகாயை தின்றால் வயிறு தான் கெடும்.சாப்பாட்டிற்கு சரியாக ஊறுகாய் வைத்தாலும் திகட்டி தான் போகும் .சாப்பாட்டில் வெறுப்பு வரும்.
எதுவும் அளவோடு வேண்டும்.
நன்றி நண்பரே தங்கள் பகிர்வுக்கு
ஜனநாயக கடமை ஓ.கே
தாங்கள் அறிமுகப்படுத்திய மருதமூரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
பகிர்வுக்கு நன்றி மாப்ள!
அந்த காலம் முதல் இப்ப வரைக்கும் மாவு அரச்சுட்டே இருக்காங்களே...
நான் வருவதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதே
// நடிகனின் தோழனாக வரும் காமெடி நடிகரின் கலாய்த்தல்களையும்//
இந்த வரி தவிர்த்து உங்களது ஆதங்கங்கள் நியாயமானதே. தமிழ் சினிமாவின் குறைபாடு இயக்குனர்களிடமோ, நடிகர்களிடமோ, ரசிகர்களின் ரசனை மட்டத்திலோ இல்லை. தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்கள், நடிகர்கள் சினிமாவுக்கென போட்டுக்கொண்ட ஒரு குறுகிய வட்டத்தால் உண்டான வரையறைகளே ஆகும்.
//பாக்கியராஜ். பாரதிராஜா. மணிரத்னம் (?), சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்கிரமன், ஷங்கர் (?), என வெரைட்டியான கிரியேட்டி விட்டி கொண்ட இயக்குனர்களைத் தவிர//
பாலா, அமீர், சேரன், பாலாஜி சக்திவேல், சுஷீன்தரன், வசந்தபாலன், பிரபு சாலமன், வெற்றிமாறன், S. P ஜனநாதன், சிம்புத்தேவன், சசிகுமார், ராதாமோகன், (இது நீண்ட பட்டியல் தலைவரே) இவங்களயெல்லாம் மறந்துட்டீங்களே? இது நியாயமா?
ஆனா சார், ஆண்களுக்கான ஷேவிங் கிரீம் பாட்டில்ல அரை நிர்வாண மங்கை படம் எதுக்கு? பெரிய நடிகரோட படத்துல குத்துப்பாட்டும் அதுக்குதான். என்ன வாழ்கடா இது.
வருத்தப்ப்பட வேண்டிய செய்திதான். சில நல்ல இயக்குனர்களும், மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில் காணாமல் போய் விடுகிறார்கள்!
உண்மையில் நான் சினிமா பார்ப்பது குறைவு .ஆனால்ஆட்டோக்ராப்ஃ ,பூ படம் பார்த்தேன் .அப்புறம் அழகர் சாமியின் குதிரை .இவை மிகவும் நன்றாக இருந்தது .
//வணக்கம் சார்! கும்புடுறேனுங்க! சவுக்கியமா இருக்கீங்களா? அப்புறம் உங்க பொண்டாட்டி, புள்ளைங்க எல்லோரும் நலமா இருக்காங்களா?//
நிரூபன் நீங்க சொல்லவேயில்லையே
முகவரி துரை,நல்ல இயக்குனர் ஆனால் யாரும் அவரைப் சரியாகப் பயன்படுத்தவில்லை !
முகவரி படத்தை எத்தனை ஊடகம்கள் ஊக்கிவித்தது,கோமல் சுவாமிநாதன் தண்ணீர் தண்ணீர்,ஜெயக்காந்தன் புதுச் செருப்பு கடிக்கும் படங்களை நாம் ஏன் கொண்டாடவில்லை குத்தாட்டமும் குலுக்கலுக்கும் தானே ரசிகர்கள் கைதட்டுகின்றார்கள் என்று இயக்குனர்களே பேட்டி கொடுக்கும் போது யார் யாரைக் குறை சொல்வது?!
முகவரி துரை,நல்ல இயக்குனர் ஆனால் யாரும் அவரைப் சரியாகப் பயன்படுத்தவில்லை !
முகவரி படத்தை எத்தனை ஊடகம்கள் ஊக்கிவித்தது,கோமல் சுவாமிநாதன் தண்ணீர் தண்ணீர்,ஜெயக்காந்தன் புதுச் செருப்பு கடிக்கும் படங்களை நாம் ஏன் கொண்டாடவில்லை குத்தாட்டமும் குலுக்கலுக்கும் தானே ரசிகர்கள் கைதட்டுகின்றார்கள் என்று இயக்குனர்களே பேட்டி கொடுக்கும் போது யார் யாரைக் குறை சொல்வது?!
உங்க ஆதங்கம் புரியுது, என்ன பண்றது படம் பண்ணறத விட பணம் பண்ணனும், அப்பிடி தானே எல்லோரும் நினைக்கிறாங்க..
//ஆனாலும் தொடர்ந்தும் ஒரே மாதிரியான கதை அம்சங்கள் கொண்ட சினிமாவினைப் பார்த்து சலித்துப் போன பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவனாக என் உணர்வுகளை இங்கே பகிர்ந்திருக்கிறேன். இயக்குனர்களே! இவை நிச்சயம் உங்கள் காதுகளை எட்ட வேண்டும். //
என்னுடைய கோரிக்கையும் அதுதான்.
சுட்டுட்டாங்கப்பு... முடிஞ்சா கவனிங்க..
http://kusumbu.com/cinimaread_more.php?newsid=MjcxNw==
@Real Santhanam Fanz
சுட்டுட்டாங்கப்பு... முடிஞ்சா கவனிங்க..
http://kusumbu.com/cinimaread_more.php?newsid=MjcxNw==//
அன்பிற்குரிய சகோதரம்,
தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.
நான் சம்பந்தப்பட்ட இணையத்தளத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு பதிவினை நீக்கக் கோரியிருந்தேன்.
நீக்கி விட்டார்கள்.
இவர்கள் எல்லாம் எந்த வகையான மனிதர்களோ புரியவில்லை.
நண்பர்களே,
உங்களின் காத்திரமான பின்னூட்டங்களுக்கு நன்றி,
உங்கள் அனைவருக்குமான பின்னூட்டங்களுக்கான பதிலை இன்றும் நாளையும் கண்டிப்பாக வழங்குகிறேன்.
ஆனால் இடையிடையே கொப்பி செய்யப்படாத நல்ல படங்கள் வருவது வரவேற்கத்தக்கதே!
//உண்மையில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்கள் நடிகைகளின் சதையினை விற்றுக் காசு பார்க்க வேண்டும் எனும் நோக்கிலா எடுக்கப்படுகின்றன//
நடிகைகள் கவர்ச்சியாய் நடிப்பது வியாபாரத்தை உறுதிபடுத்தி கொள்ள பயன்படும் ஒரு உத்தி, சிவாஜி போன்ற பெரும் பொருட்செலவுடன் எடுக்கப்படும் படங்களின் வியாபாரத்தை எல்லாவழிகளிலும் உறுதிபடுத்தவேண்டியுள்ளது. கதையை மட்டுமே நம்பி இது போல் பெரும் பொருட்செலவில் படமெடுத்தால் படம் ஓடுமா,ஓடாதா என உறுதியாய் சொல்ல யாராலும் முடியாது. கதை,இசை,நடனம் மற்றும் நடிகைகளின் சதை உட்பட அனைத்தும் சிறப்பாக இருந்தால் சந்தையில் சினிமா எனும் பொருளை வாங்க விநியோகஸ்தர்கள் நம்பிக்கையுடன் முன்வருவார்கள். மேலும் பாலியல் எனும் பண்டம் பதின்வயதினரிலிருந்து வயதான முதியவர் வரை விரும்பி நுகரும் பண்டம்.எனவே எந்த டிரென்ட் இருந்தாலும் இந்த பண்டங்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. சங்கவியின் சதையில் ஜெயித்த விஜயாகட்டும்,ஷெரின் மற்றும் சோனியா அகர்வாலின் சதையில் ஜெயித்த தனுசாகட்டும் தங்களை சினிமாவில் நிலைநிறுத்திகொள்ள ஆரம்ப காலங்களில் பாலியலையே நம்பியிருந்தனர். இதற்கு இரசிகர்களை மட்டுமே குறை சொல்வது நியாயமல்ல, பெரிய பட்ஜெட் பெரிய லாபம் எனும் முதலாளிகளின் இலாப வெறியும்,தன்னை எப்படியேனும் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என நினைக்கும் கதாநாயகர்களின் கயமையும்தான் காரணம். இதன் எளிமைபடுத்தப்பட்ட உதாரணம்தான் வலையுலகின் 18+ பதிவுகளும்,ஆபாச பதிவுகளும் இம்மாதிரியான பதிவுகளுக்கு அதிக கூட்டம் வருவது இயல்புதானே. இதே உத்திதான் பெரிய திரையிலும் பயன்படுகிறது.
@Real Santhanam Fanz
//பாக்கியராஜ். பாரதிராஜா. மணிரத்னம் (?), சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்கிரமன், ஷங்கர் (?), என வெரைட்டியான கிரியேட்டி விட்டி கொண்ட இயக்குனர்களைத் தவிர//
பாலா, அமீர், சேரன், பாலாஜி சக்திவேல், சுஷீன்தரன், வசந்தபாலன், பிரபு சாலமன், வெற்றிமாறன், S. P ஜனநாதன், சிம்புத்தேவன், சசிகுமார், ராதாமோகன், (இது நீண்ட பட்டியல் தலைவரே) இவங்களயெல்லாம் மறந்துட்டீங்களே? இது நியாயமா//
தலைவா...எல்லா இயக்குனர்களையும் குறிப்பிட்டால் பதிவு நீண்டு விடுமே என்று தான் தவற விட்டேன்,
மன்னிக்கவும் நண்பா.
Post a Comment