கோயில் முன்றலில் அவளின்
சிரிப்பொலி கேட்டு(த்) திரும்பிப் பார்த்தேன்- அவள்
பின்னே கோமதி மாமி கையில் தேங்காயுடன்
நிற்பதைக் கண்டு தலையில் கை வைத்தேன்!
(இக் கவிதையில் தொக்கி நிற்கும் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்- ஏன் தலையில் கை வைத்தேன் என்று யாராச்சும் சொல்ல முடியுமா?)
நகம் வெட்டச் சொல்லி நாணம் கொள்ளலாமோ?
நீ நகம் வெட்டச் சொல்லி ஞாபகப்படுத்தும்
ஒவ்வோர் வேளையும் எனக்குள் நானே சிரிப்பேன்;
அடிக் கள்ளி
விஷம் கொண்ட என் பற்களை விடவா
நகம் தன்னில் கூர்மை அதிகம் உள்ளது?
பெயர் சொல்லும் அழகில் பொய்மை உண்டா?
மேலுதடும் கீழுதடும் மெதுவாய் ஒட்டி
நாக்கிலிருந்து எச்சில் உமிழாது
நாணம் கொண்டு நீ
என் பெயரைச் சொல்லும் அழகிருக்கிறதே!
அப்பாடா....அதனை ரசிக்க வேண்டி
ஒவ்வோர் விநாடிகளும் தவமிருக்கனும்!
உனக்குத் திருமணமா- ஹைய் எனக்கு ஜாலி!
அடியே உனக்குத் திருமணமா?
அதனையேன் இப்படி விம்மி வெடித்துக்
கண்ணீரோடு சொல்கிறாய்;
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;
ஆதலால் நோ பீலிங்ஸ்!
நவீன நாய்(க்) காதல்!
கண்ணும் கண்ணும் பேசியது அந்தக் காலம்
பேஸ்புக்கில் கடலை போட்டு
பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி
ஊர் சுற்றி பிள்ளை வாங்கி அழிப்பது இந்தக் காலம்!
காதலிக்காக தியாகம் செய்யும் கலியுக காளைகள்!
அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!
************************************************************************************************************************************************************
பிற் சேர்க்கை: எல்லோரும் கவிதைகளைப் படிச்சீங்களா. என் வலைப் பதிவின் மேற் பக்கத்தில் ஒரு வேறுபாடொன்றிருப்பதை யாராவது கண்டு பிடித்தீங்களா?
நாற்று வலைப் பதிவிற்கான ஹெடரினை- நாற்று எனும் சொல்லுக்கான அர்த்தம் நிரம்பி வழியும் வண்ணம் அழகுற டிசைன் பண்ணித் தந்திருக்கிறார் சகோதரன் - "நிகழ்வுகள் வலைப் பதிவின் ஓனர் திருவாளர்- கந்தசாமி" அவர்கள்.
கந்தசாமி பாஸிற்கு நாற்று வலைப் பதிவு வாசகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
******************************************************************************************************************************************************************
மென்மையான எழுத்துக்கள் எப்போதும் மனதைச் சாந்தப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் வரைவிலக்கணம் கூறுவார்கள். வலைப் பதிவிலும் மென்மையான எழுத்துக்களை- அழகிய சொல்லாடல்களைக் கையாண்டு பதிவுகளை எழுதி வரும் பதிவர்களுள் நேசனும் வந்து கொள்கிறார்.
தனி மரம் எப்போது தோப்பாகும் என்ற ஆவலில், தன் மென்மையான எழுத்துக்கள் ஊடாக பதிவுலகில் பயண அனுபவங்கள், மண் வாசனை நிறைந்த விடயங்கள், பாடல் விமர்சனங்கள், ஞாபகச் சிதறல்கள் எனப் பல தரப்பட்ட விடயங்களைத் "தனிமரம்" வலைப் பதிவில் பகிர்ந்து வருகின்றார் நேசன்.
நேசனின் தனி மரம் வலைப் பதிவிற்குச் செல்ல:
http://nesan-kalaisiva.blogspot.com/
*****************************************************************************************************************************************************************
இன்ட்லியில் ஓட்டளிக்க:
|
89 Comments:
உமது தொல்லை தாளாமல் மாமி தேங்காயை தலைமீது விட்டெறிந்து விடுவாளோ என்ற பயம் காரணமாக தலையில் கை வைத்திருப்பீர்கள்தானே?
@R.Elan.
உமது தொல்லை தாளாமல் மாமி தேங்காயை தலைமீது விட்டெறிந்து விடுவாளோ என்ற பயம் காரணமாக தலையில் கை வைத்திருப்பீர்கள்தானே?//
அடடா....பாராட்டுக்கள் அண்ணா..
சரியாகச் சொல்லியிருக்கிறீங்க.
நாற்று டிசைன் கலக்கல்
நேசன் பற்றிய அறிமுகம் ஓக்கே!
>>அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!
hi hi உயிரை விட்டதெல்லாம் 1990..
கோமதி மாமி தலையில ஏன் கை வச்சீங்க?
நகம், பல்லுன்னு என்னென்னமோ சொல்றீங்க...ஆனா பொண்ணு கிடைக்கலேன்னும் சொல்றீங்க..என்னமோய்யா.......
நகம், பல்லுன்னு என்னென்னமோ சொல்றீங்க...ஆனா பொண்ணு கிடைக்கலேன்னும் சொல்றீங்க..என்னமோய்யா.......
ஆஹா..நாற்று டிசைன் கலக்குதே!
தனிமரம் நல்ல விஷயங்களைத் தாங்கி வரும் அருமையான வலைப்பூ..சமீபத்திய மதுரை உலா சூப்பர்.
தலையில் கைவைத்தேன்!
மரியாதை நிமித்தம் கையைத்தூக்கி கும்பிட்டேன் என்றும் பொருள் கொள்ள முடியும் ஏன் என்றாள் மாமியின் தேங்காய் சிதறு தேங்காய இருக்கவும் முடியும் அது உங்கள் தலையாகவும் இருக்கும் உடைக்கும் இடம்!
கலியுகத்தின் காதல் லீலைகளை படம்பிடித்துக்காட்டும் கவிதைகள் யாவும் சிறப்பே அதுவும் நோ பீலீங்ஸ் உச்சம் !
என்ன இப்ப ஒரே புலம்பலா இருக்கு. தொக்கு நிட்கும் பொருள் எனது ஊகத்தின் படி கோமதி மாமி உங்களிடம் தன் மகனுக்கு பொண்ணு பாத்திருக்கிறேன் இன்று கோவிலுக்கு கூட்டி வருவதாகவும் சொல்லி இருக்க வேண்டும்.ஆனால் அந்த பெண் இவள்தான் என்று சற்றும் எதிர்பாத்திருக்கமாட்டீர்கள்
தனிமரத்தையும் நகர்வலம் வர வலையேற்றியதற்கு சிரம் தாழ்த்திய நன்றிகள்!
வாழ்த்துக்கள் தந்து ஊக்கிவிக்கும் நிரூ,சி.பி.ஐயா செங்கோவியாருக்கும் நன்றிகள்! உங்களைப் போன்றோர் ஊக்கிவிக்க இருக்கும் போது தனிமரம் தோப்பாகும் என்ற நம்பிக்கையில் நட்புடன் நேசன்!
நாற்றின் வலையை தன் கைவண்ணத்தால் அழகூட்டும் நண்பன் கந்தசாமிக்கு வாழ்த்துக்கள்!
//நீ நகம் வெட்டச் சொல்லி ஞாபகப்படுத்தும்
ஒவ்வோர் வேளையும் எனக்குள் நானே சிரிப்பேன்;
அடிக் கள்ளி
விஷம் கொண்ட என் பற்களை விடவா
நகம் தன்னில் கூர்மை அதிகம் உள்ளது?///
எனக்கு..இது ஒன்னுமே புரியலை ஒருவேளை இது 18+................
பாஸ்...நாற்று விளக்கப்படம் சூப்பர்........
இன்றைய காதலுக்கு சாட்டை அடி..
சகோதரர் நேசன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
பச்சைப்பசேலென நாற்று கண்ணைக்கவருது
ஏதோ இடக்கு முடக்க தொக்கு வச்சு கவிதை எழுதிரிங்க
அனுபவிச்ச்வன் மாதிரி
இருக்கிறவன் தான் இல்லை இல்லை எண்டு புலம்புவான்
அன்னா சூப்பர்
பல்லின் கூர்மை, நாணத்துடன் பெயர்....
குஜால் குஜாலா இக்கீது...
#அருமை...
வணக்கம் மாப்பிள..
நவீன காலத்து காதல அருமையா சொல்லி இருக்கீங்க.. ஆனா அந்த பேஸ்புக் காதல்ல என்னையா இருக்கு கடலை போடுறதென்னா நாலு சுவத்துக்குள்ள போட்டுட்டு நேரில கானும்போது நேரடியாவே விஷயத்துக்கு வாராங்க...
ஆனா அந்த காலத்தில சோளகாட்டுக்குள்ள வார காதலிய ஆரும் வந்திடுவாங்களோ பயந்து பயந்து காதலிக்கிறதே ஒரு சுகம்தான்யா.. பேஸ் புக்கில நிக்கிற காதலிய தொட ஆசைப்பட்டா தொடக்கூடிய வசதி வந்திட்டாய்யா...!!??
கோமதி மாமி ஒருக்காலும் தலையில சிதறு தேங்காய் அடிக்க மாட்டாய்யா.. புத்தூர் கட்டுக்கு போற காசு அண்ணன் காசையா..!! தானாடாட்டியும் தசையாடுமையா..!!!!!))
யூ டூ
தனிமரம் நேசனுக்கு வாழ்த்துக்கள்..
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;
ஆதலால் நோ பீலிங்ஸ்!//
நாசமாபோச்சுபோ....
நாற்று அமைப்பு நன்று!அமைத்துக் கொடுத்த நண்பருக்குப் பாராட்டுக்கள்!என்னமோய்யா,கவிதைன்னாலே..............!இப்புடித் தாய்யா இருக்கணும்!பொண்ணு பாத்தாச்சா?டும்,டும் எப்போ கொட்டுவீங்க?காட்டானையெல்லாம் நம்பாதைய்யா,கவுத்துடுவார்!ஹி!ஹி! ஹி!!!
நேசனின் அறிமுகத்துக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்....!!!
கிறுக்கல்கள் காவியம் போலத்தான் இருக்கிறது சகோ....
நண்பர் நேசனின் அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
அடடா
///கோயில் முன்றலில் அவளின்
சிரிப்பொலி கேட்டு(த்) திரும்பிப் பார்த்தேன்- அவள்
பின்னே கோமதி மாமி கையில் தேங்காயுடன்
நிற்பதைக் கண்டு தலையில் கை வைத்தேன்!/// பின்னவீனத்துவமாமாமாம்..)
நீ நகம் வெட்டச் சொல்லி ஞாபகப்படுத்தும்
ஒவ்வோர் வேளையும் எனக்குள் நானே சிரிப்பேன்;
அடிக் கள்ளி
விஷம் கொண்ட என் பற்களை விடவா
நகம் தன்னில் கூர்மை அதிகம் உள்ளது?
/// அது தானே பல்லு பட்டாலென்ன நகம் பட்டாலென்ன இரண்டும் விஷமாக்க கூடியது தானே ..... அதுக்காக பல்லுப்போன தாததாவையா கண்ணாணம் பண்ணிக்க முடியும் ))))
கவிதை அருமை நிரூ வார்த்தை பிரயோகம் அருமை..
நிறைய கனவு வருமோ!!?- ஏன்னா போன பதிவுக்கும் இந்த பதிவுக்கும் கொஞ்சம் முரண்பாடு தெரியுதே?
////மேலுதடும் கீழுதடும் மெதுவாய் ஒட்டி
நாக்கிலிருந்து எச்சில் உமிழாது
நாணம் கொண்டு நீ
என் பெயரைச் சொல்லும் அழகிருக்கிறதே!
அப்பாடா....அதனை ரசிக்க வேண்டி
ஒவ்வோர் விநாடிகளும் தவமிருக்கனும்!/// ஹும் கண்ணானமான பிறகு தானே தெரியும் அது காட்டெருமை குரல் எண்டு )))
/////அடியே உனக்குத் திருமணமா?
அதனையேன் இப்படி விம்மி வெடித்துக்
கண்ணீரோடு சொல்கிறாய்;
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;
ஆதலால் நோ பீலிங்ஸ்!/// வகுப்பு "தோழியா" இல்ல "தோழிகளா" ???
///கண்ணும் கண்ணும் பேசியது அந்தக் காலம்
பேஸ்புக்கில் கடலை போட்டு
பெற்றோர் கண்ணில் மண்ணைத் தூவி
ஊர் சுற்றி பிள்ளை வாங்கி அழிப்பது இந்தக் காலம்!/// காதல் பேரில் கொ(ல்)ள்ளும் காமம்... யதார்த்தம் )
////அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!/// நாங்களும் உங்க ரகம் தான் பாஸ் .....சும்மா எவளோ ஒருத்திக்கா எதுக்கு உயிரவிடனும்.... நாட்டில பிகருகளுக்கா பஞ்சம் )))
நக்கல் நையாண்டி எள்ளல் மற்றும் இன்ன பிற இத்தியாதி கலந்து வாசகர்களை கிளுகிளுப்பூட்டிய உங்களுக்கு நன்றிகள் பாஸ் )
நேசனுக்கு வாழ்த்துக்கள் ...தனி மரம் விரைவில் தோப்பாகட்டும் )
neenga sonnathu innum ready panne illa. avvv
Yoga.s.FR said...
நாற்று அமைப்பு நன்று!அமைத்துக் கொடுத்த நண்பருக்குப் பாராட்டுக்கள்!என்னமோய்யா,கவிதைன்னாலே..............!இப்புடித் தாய்யா இருக்கணும்!பொண்ணு பாத்தாச்சா?டும்,டும் எப்போ கொட்டுவீங்க?காட்டானையெல்லாம் நம்பாதைய்யா,கவுத்துடுவார்!ஹி!ஹி! ஹி!!!
September 20, 2011 12:10 PM
என்னங்க என்ர தொழில்ல கைய வைச்சிட்டீங்களே.. நானே இவருக்கு ஒரு மாடும் கன்னுமா அவுக்க பேசி வைச்சிட்டன் இடையில இப்பிடி கவுட்டா பொடியன் யோசிக்க தொடங்கினா நீங்கதான் என்ர புரோக்கர் பீஸ தரோனும் சொல்லிபூட்டன்... கிரெடிட் செய்தும்தருவோம் சத்தலத்தோட கொந்திராவும் இருக்கையா நான் தொழில் சுத்தமையா..ஹிஹி
நவீன நாய்க்காதல் சூபபெருங்கோ, ப்ளாகாரில் கொட்டித்தீர்க்கும் காதலைப்பற்றி சொல்லாம விட்டுட்டீங்களே???
நாற்றின் வலைத்தளம் ஊடாக வாழ்த்துக்கள் கூறிய சகபதிவாளர் எல்லோருக்கும் தனிமரத்தின் தாழ்மையான நன்றிகள்! உங்களின் நீர் ஊற்றில் தான் தனிமரம் தளிர்க்கின்றது!
நட்புடன் நேசன்!
சத்தலமோ(cetelem),என்ன கோதாரியோ எனக்கெல்லாம் அதில கொந்திரா இல்லை!கடவுளேயெண்டு,இண்டைக்கு வரைக்கும் பிரான்சில அஞ்சு சதம் கடன் இல்லாம இருக்கிறன்!அது போக,நிரூபன் உங்களிட்ட எப்ப மாடும் கண்டும் கேட்டவர்?அவர் இளம்பொடியன்.அவருக்கு வெறும் இளம் கண்டு காணும்!பிறகு..................................................!பொடி கெட்டிக்காறன்!(cetelem-செதெலெம்,பிரான்சில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் பிரத்தியேக வங்கி)
சகோ.. கந்தசாமி கலக்கி இருக்கார்...
பேனர் சூப்பர்ப்....
Yoga.s.FR said...
சத்தலமோ(cetelem),என்ன கோதாரியோ எனக்கெல்லாம் அதில கொந்திரா இல்லை!கடவுளேயெண்டு,இண்டைக்கு வரைக்கும் பிரான்சில அஞ்சு சதம் கடன் இல்லாம இருக்கிறன்!அது போக,நிரூபன் உங்களிட்ட எப்ப மாடும் கண்டும் கேட்டவர்?அவர் இளம்பொடியன்.அவருக்கு வெறும் இளம் கண்டு காணும்!பிறகு..................................................!பொடி கெட்டிக்காறன்!(cetelem-செதெலெம்,பிரான்சில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் பிரத்தியேக வங்கி)
அட பராவாயில்லையே உந்த வங்கியல்ல எனக்கும் ஒரு கடனுமில்ல.. அட வீட்டுக்கு இருந்த கடனக்கூட கட்டி முடிச்சிட்டன் கடனுக்கு நானும் உங்களபோல அவ்வளவு பயம்..!!!?? ஆனா எங்கட ஆக்கள் அவங்க சும்மா தருகிறதபோல எல்லாஇடமும் கடனவாங்கீற்று படுகிற பாடு இருக்கே....!!!?
அப்புறம் நீங்கதான் சொல்லுறியள் நிரூபன் கன்னிபையன்னு கவிதையில நகத்தையும் பல்லையும் பற்றி சொல்லேக்க அனுபவபட்ட பொடிசுதான்னு நினைச்சுதாண்ண மாடும் கன்னுமா அவுக்க யோசிச்சேன்.. சரி இனி தெரிஞ்ச பொடியனாபோச்சு சீதனம்(இதபற்றி ஒரு சின்ன பதிவு போடலாம்ன்னு இருக்கேண்ண..) இல்லைன்னா நான் ஒரு நல்ல பொண்ண பாத்துக்கொடுக்கிறன்.. அதுக்கு புரோக்கர் பீசு வேணாமுங்கோ....!!
அதொண்டும் வேணாம்,ஊருக்கை தான் பாக்கோணும்!இங்கின வந்து எங்கள மாதிரி கோப்பை கழுவ வேணாம்!மற்றது,டாக்குட்டரை வச்சு படமெல்லாம் எடுக்கிறியளாம்,உண்மையோ?எனக்கு ஒரு பாத்திரமும்?!வேணாம்!(சட்டி,பானை எண்டா தாருங்கோ!)!ஹி!ஹி! ஹி!!!
காட்டான் said...அப்புறம் நீங்கதான் சொல்லுறியள் நிரூபன் கன்னிபையன்னு கவிதையில நகத்தையும் பல்லையும் பற்றி சொல்லேக்க அனுபவபட்ட பொடிசுதான்னு நினைச்சுதாண்ண மாடும் கன்னுமா அவுக்க யோசிச்சேன்.///அவர் வந்து பலதும் கற்றவர்!அப்பிடியெண்டால்,தமிழில நல்ல விருப்பமான ஆள்,பொது அறிவுக் களஞ்சியம்!பல ஊர் அடிபட்டவர்!இப்பிடிச் சொல்லிக்கொண்டே போகலாம்!இப்பிடி நான் சொல்ல ஒவ்வொரு வசனத்துக்கும் வியாக்கியானம் பண்ணாதையுங்கோ,சொல்லீட்டன்,ஓ!!!!!!!!!!!
Yoga.s.FR said...
அதொண்டும் வேணாம்,ஊருக்கை தான் பாக்கோணும்!இங்கின வந்து எங்கள மாதிரி கோப்பை கழுவ வேணாம்!மற்றது,டாக்குட்டரை வச்சு படமெல்லாம் எடுக்கிறியளாம்,உண்மையோ?எனக்கு ஒரு பாத்திரமும்?!வேணாம்!(சட்டி,பானை எண்டா தாருங்கோ!)!ஹி!ஹி! ஹி!!!
September 20, 2011 4:28 PM
அதுவும் சரிதாங்க.. இஞ்ச வேண்டாம்ன்னு நீங்க சொல்லிறியள்.. அங்க போய்பார்த்தா
அவங்க பொடியங்கள எவ்வளவு படிப்பிச்சாவும் இஞ்ச அனுப்பத்தானே நிக்கிறாங்க நாங்க இஞ்ச இருக்கிற பிரச்சனைய சொன்னா ஏதோ தங்கட பொடியங்க வெளிநாட்டுக்கு போய் முன்னேறுறது எங்களுக்கு விருப்பமில்லைன்னுதானே கதைக்கிறாங்க.. இஞ்ச எவ்வளவு பேர் கொஞ்ச காசோட ஊருக்கு போவன்னு நினச்சாங்க இப்ப அவங்க தாங்க நினைச்ச காசிண்ட பத்து மடங்கு கடனோட இருக்கிறாங்க நாங்க கத்தினா கேப்பாங்களா..!!?
உங்களுக்கு ஒரு படமும் வேண்டாம் பாத்திரமும் வேண்டாம்.. பென்சன் வரபோற நாள எண்ணிக்கொண்டு இருங்கோ அது கிடைச்சோன இஞ்ச அட்ரஸ்ச வைச்சுக்கொண்டு ஊருல போய் நல்லா சந்தோஷமாய் இருந்துகொண்டு வைக்கேசனுக்கு பிரான்சுக்கு வாங்கோ.. தமிழர்கள் பென்சன் எடுக்கிறது இஞ்ச குறைவு... நீங்க நீண்ட ஆயுளோட இருந்து எங்கட ஆட்கள் இவர்களுக்கு உழைச்சு கொடுத்து பென்சன் எடுக்காம போனவங்க காசையும் சேர்த்து எடுக்கோனும்.. நினச்சுபாருங்க இவ்வளவையும் நீங்க எடுத்து முடிய தோராயமா எவ்வளவு வருஷமாகுமண்ண... அப்ப பின்னால நானும் வந்திடுவன் பென்சனுக்கு...ஹி ஹி அது சரி எல்லா பேசீட்டும் ஒழுங்கா வச்சிருக்கிறீங்களோ..? இல்லைன்னா பரவாயில்ல அதற்குறிய நடவடிக்கைய எடுங்கோ...........
அட என்ர கந்தசாமின்ர கைவரிசையா..? நல்லா இருக்கையா.. இப்பிடிதான் இருகோனும் நம்ம பொடியங்க.. ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துகொண்டு.. மற்றவங்களுக்கு உதவுறதே ஒரு சுகமையா.. வாழ்த்துக்கள் கந்தசாமி.. ராசுக்குட்டியும் இப்பிடி செய்யுறார் அவருக்கும் இந்த இடத்தில நன்றி சொல்லுறேன்..
கலக்கல் கவிதை
அடி கள்ளி !
ஆகா!!
என்ன வார்த்தைகள் !!!!!
கவிதை யின் தலைப்பு
கலக்கல் !!!கலக்கல் !!!கலக்கல் !!!
நாற்று - பெயர் பலகை
சூப்பர் ர் ர் ர் ர் ர் ........................ர்
கலக்கல் கவிதை
அடி கள்ளி !
ஆகா!!
என்ன வார்த்தைகள் !!!!!
கவிதை யின் தலைப்பு
கலக்கல் !!!கலக்கல் !!!கலக்கல் !!!
நாற்று - பெயர் பலகை
சூப்பர் ர் ர் ர் ர் ர் ........................ர்
வர வர கவிதை தான் கூடுது. அண்ணர் பீலிங்கில நிக்கிறாரோ!
KANA VARO said...
வர வர கவிதை தான் கூடுது. அண்ணர் பீலிங்கில நிக்கிறாரோ!
அட உன்ர கொண்ணன் பீலிங்கிலயே நிக்கட்டும் எங்களுக்கு நல்ல கவிதை கிடைகும்..!! ஹி ஹி
அதுக்குள்ள இத்தனை ஓட்டா பயமுறுத்துறீங்கப்பா
நல்ல DESIGN....:))
பச்சூலர் நிரூபனுக்கு வணக்கம்:)))).
நகைச்சுவையோடுகூடிய கவிதைகள் அனைத்தும் கலக்கல்... ரசித்துப் படித்தேன்.
யாமிருக்க எதுக்கு கவலை.... என்பக்கத்தில நாங்க சம்பந்தம் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சிட்டமில்ல:))).
நிரூபனுக்குப் பொண்ணு பார்க்கப் போகிறோம், வரவிருப்பமானவர்கள் எல்லாம் முன்கூட்டியே பெயர்ப்பதிவு செய்யுங்கோ:).
முக்கிய கண்டிஷன்:
ஆண்களில்...பட்டுவேட்டி அல்லது ஜீன்ஸ் போட்டவைக்கு மட்டும்தான் அனுமதி, இந்தக் குளிரிலயும்... ஆதிகால வேஷத்தோடெல்லாம்:)) வருவோருக்கு அனுமதி இல்லை:)))).
ஆஹா, அனைத்துக் கவிதைகளும் அசத்தல் நிரூ! கலக்கலா இருக்கு! மச்சி உனக்கு சீக்கிரமே கலியாணம் நடக்கணும்னு ஆல்ரெடி 13 கடவுள்கிட்ட நான் வேண்டுதல் வச்சிருக்கேன்!
இப்போ, இன்னும் 23 கடவுள்கிட்ட நேர்த்தி வச்சிருக்கேன்! மொத்தம் 36 கடவுள்கள்!
பார்க்கலாம் உனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்குதா என்று!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!!
ஹெடர் சூப்பரா இருக்கு! இப்படி ஒன்று எனக்கும் செய்து தருவாரா? கந்தசாமி அண்ணர்?
நிரூ, கவிதை சூப்பர்.
அதீஸ், நானும் நானும் வாரேன் இளைய தளபதிக்கு பெண் பார்க்க. அவர் 1008 கன்டிஷன் போடுவார். அந்தக் கன்டிஷனுக்கு எந்திரன் படத்தில் வரும் ரோபோ போல ஒரு பெண்ணை உருவாக்கணும்.
//கலியாணம் கட்டாத பிரமச்சாரியின் காலக் கிறுக்கல்கள்//
அட ராமா... இந்தாளு தொல்ல தாங்க முடியல்லயே.... காதலிச்சுத்தான் கவிதை எழுதுவாங்கா.. கலியாணம் கட்டாததுக்கே கவிதையா.... இருங்க படிச்சுட்டு வாறன்
நகைச்சுவை கவிதைகளை ரசித்தேன்.
//அடியே உனக்குத் திருமணமா?
அதனையேன் இப்படி விம்மி வெடித்துக்
கண்ணீரோடு சொல்கிறாய்;
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;//
வெளங்கிடும்... கலியாணம் ஆனமாதிரித்தான்
கந்தசாமி கைவண்ணம் அருமையாக இருக்கிறது சகோ!
கவிதை சூப்பர்
ஹெடர் சூப்பர்...
கந்தசாமி கலக்கிட்டீங்க
கந்தசாமியை இனி ஐஸ் வைக்கணும் போல...
நேசனுக்கு வாழ்த்துக்கள்
நாற்று சொற் பதத்திற்கு ஏற்ப தங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பு அருமை !...கவிதையும்
நன்றாக உள்ளது .பதிவர் நேசனிற்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .............
நாற்று டிசைன் அருமை நண்பரே
அறிமுகம் செய்திருக்கும் நண்பர் நேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தேங்காயை தலையில் உடைப்பார்களா ?
இப்படித்தான் இருக்கு இன்று காதல்.
கலக்கல் விஷயம்....கந்தசாமி அவர்களுக்கும் வாழுத்துக்கள்...தனி மரம் பதிவர் அறிமுகத்துக்கு நன்றி நண்பா!
நிரூ...!
////அன்பே நீ இல்லையென்றால்;
நான் உயிரை விடுவேனா- நோ சான்ஸ்
உடனே அடுத்த பிகரை தேடுவேன்!///
இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. ஹிஹிஹி.
நாற்று டிசைன் கலக்கல்...
சகோதரர் நேசன் நம்மவர்...
கவி நிரூபன்...சகலகலா வல்லவர்...
நாற்று டிசைன் ரொம்ப நல்லா இருக்கு.
உனது உதடுகள் உச்சரிக்கும் வரை நான் உணர்ந்ததில்லை
எனது பெயர் இத்தனை அழகானது என்று
என்ற கவிதைபோன்ற உதடு கவிதை ரொம்ப பிடிச்சிருக்கு
ஐயா M.R எங்கள் ஊரில் திருவிழாக்களில் போர்த்தேங்காய் என்று ஒரு சொல்வாடை உண்டு தேங்காயை தலைக்கு மேல் போட்டு இன்னொரு தேங்காயினால் அடித்து உடைப்பது இது ஒரு சுவாரசியமான ஆண்களின் வீரத்தைக்காட்டும் கிராமிய நிகழ்வு இப்போதும் அங்காங்கே நடைமுறையில் இருக்கின்றது! நாங்கள் விளையாடிது தொலைத்துவிட்டு அகதியாக வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் இன்னும் அந்த விளையாட்டை கைவிடவில்லை!
@ஆதிரா அக்கா நானும் வாரன் பெண்பார்க்க எட்டுமுழ பட்டுவேட்டி கட்டிக்கொண்டு ஆனால் பெண் வீட்டில் எனக்கு பால் கோப்பிதான் தரனும் யூஸ் சோடா தந்தால் மாப்பிள்ளை நிரூவை இழுத்துக்கொண்டு வெளிநடப்புத்தான் செய்வன்/ஹீ ஹீ
(இக் கவிதையில் தொக்கி நிற்கும் பொருள் என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்//
i think it is Cocos nucifera .
நாற்று டிசைன் superb
உங்களின் உணர்ச்சிகளை உண்மையாக வெளிப்படுத்திவிட்டீர்கள்.வாழ்த்துக்கள்.ஆமாம்,நாற்று பின்புலம் நாற்று வயல்போல தெடியவில்லையே,நாற்றைப் பிடுங்கி நட்ட வயல் போல் அல்லவா இருக்கின்றது?
காட்டான்,....விட்டால் லாச்சப்பலுக்கு வாங்கோ,நல்ல பொல்லு ஒண்டு வாங்கித் தாறன் எண்டும் சொல்லுவியள் போல கிடக்கு?அதெல்லாம் சரியா தான் இருக்கு.பெஞ்சன் கந்தோரால எத்தினை பொயிண்ட்ஸ் இருக்கெண்டும் வந்திட்டுது.இப்ப பெஞ்சன் எடுக்கிற வயதில்லை எனக்கு!இன்னும் கொஞ்ச நாள் "அடிப்பம்" எண்டு திரியிறன்!
நிரூபன்,இப்போது பார்வையிட முடியாது என்று வருகிறது,காலையில் பார்க்கிறேன்!
நிரூபன்,இப்போது பார்வையிட முடியாது என்று வருகிறது,காலையில் பார்க்கிறேன்!
அடியே உனக்குத் திருமணமா?
அதனையேன் இப்படி விம்மி வெடித்துக்
கண்ணீரோடு சொல்கிறாய்;
உனக்குத் தெரியாமல் என்னோடு
இவ்வளவு காலமும் ஊர் சுற்றிய
உன் வகுப்புத் தோழியும் இதனைத் தான்
நேற்றுச் சொன்னாள்;
ஆதலால் நோ பீலிங்ஸ்! //
ஹா ஹா இன்னா ஃபீலிங்கு ஹா ஹா செம பாஸ்
கவிதை தொகுப்புகள் சூப்பர்.....
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
காதக் கவிதைகள் என்றைக்கும் திகட்டுவதில்லை....
நாற்று HEADER நன்றாக உள்ளது நண்பரே
Post a Comment