மீண்டும் அதே கணங்கள், அதே வலி சுமந்த நினைவுகள், உணவின்றி உயிர் மட்டும் ஊசலாடிய ரணங்கள் நிறைந்த மரத்தடி வாழ்க்கை இனிமேல் வரவே வரக் கூடாது எனும் எண்ணம் இப்போது எல்லார் மனங்களிலும் உட் புகுந்து விட்டது. ஆனாலும் என் ஞாபகச் சிதறல்களில் வெடி வைத்து, ஆங்காங்கே காயங்களை உண்டாக்கிய சீழ் கலந்த பருக்களை இலகுவில் அழித்து விட முடியாது எனும் எண்ணத்தோடு; என் நினைவுகளை எங்களூர் வயல் வரம்பினூடாகத் தரிசிக்கத் தொடங்குகிறேன்.
ஒவ்வோர் பகுதிக்கும் பொதுவான ஓர் மொழியிருந்தாலும் உச்சரிப்பில் மட்டும் பீறிட்டுக் கிளம்பின வேற்றுமைகள். அவையே பின் நாளில் மனிதர்களின் மனங்களில் பிரதேசவாதம் எனும் கொடிய விசம் நிறைந்த எமனின் பற்களைப் போல மாற்றமுறத் தொடங்கின. எல்லோரும் ஒரே கொள்கையில் திரள வேண்டும் எனும் எண்ணங்களில் மட்டும் ஆங்காங்கே நச்சுக் கற்றைகள் துளிர்க்கத் தொடங்குகின்றன. ஈழத்தின் அழகான வனப்புக்களிற்கிடையே தொலைந்து போகும் வல்லமையை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து நாம் எல்லோரும் இழக்கத் தொடங்கி விட்டோம்.
எங்கள் சுத்தமான காற்றில் தென்னங் கீற்றில் வாசனை நிரம்பியிருக்கும். எங்கள் ஊர் மண்ணில் செம்பாட்டின் செக்கச் சிவேலென்ற செம்மை கலந்திருக்கும். இத்தனைக்கும் அணி சேர்த்து அழகு கூட்டும் வல்லமை வான் உடைத்துப் பாயும் எங்கள் குளங்களிடமிருந்தது. பின்னாளில் அச் சுகந்தமான காற்றில் கந்தகத் துகள்கள் கலவி செய்து, அதன் வாசனையின் போக்கில் குருதிகளைத் தெளித்து விட்டிருந்தன.
பச்சைப் பசேலென்ற வயல் நாற்றுக்கள் காற்றில் தலையசைக்க, கீற்றுக்கள் குமரிப் பெண்களின் கொலு சொலி போல சத்தமிடும் ஓசையிலும், ‘அருவி வெட்டப் போறேன் பெண்னே, அரிவாளைக் கொண்டா...’ எனும் பாடலின் சந்த நயத்திலும் எங்களூர் கல கலவெனக் கண் சிமிட்டிப் புழுதி கலந்த செம்பாட்டுக் கிரவல் வீதிகளினூடு புன்னகைத்தபடி வந்தோரை வரவேற்கும் எண்ணத்தோடு காத்திருந்திருக்கிறது.
தாய் சொல்லே வேதம் என எண்ணிய மாமாவின் நினைப்புக்களை மட்டும் என் அம்மம்மா அடிக்கடி நினைவூட்டுவா. கூத்துப் பார்ப்பதற்காய் என் மாமாவிற்கு இருந்த அலாதிப் பிரியத்தினைத் தட்ட முடியாதவளாய், ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த பரஞ்சோதி ஐயாவுடன், கவனமாய்ப் போய் வா என்று கை கொடுத்து விடுகையில் தான் சொல்லிய ஒரே ஒரு வசனத்தின் அர்த்தத்தை பின்னாளில் எங்களுக்குச் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருப்பா. இந் நாளில் பாட்டி வலைஞர் மடத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் இப்போதும் பாதுக்காக்கப்பட்டவளாய் ஆவியாய் உலவுகிறாள்.
‘கூத்துப் பார்க்கப் போகும் போது’கவனமாய்ப் போய் வா!
தம்பி, நீ சின்னப் பொடியன்(பையன்),
பரஞ்சோதிக்குப் பின்னுக்கு எப்போதுமே நில் எனும் அம்மம்மாவின் சொல் தட்டாதவராய் எங்கள் மாமா இருந்திருக்கிறார் என்பதனை மறு நாள் உணர்ந்திருக்கிறா அம்மம்மா.
‘எப்பூடியடா தம்பி கூத்து?
நான அங்கே கூத்தே பார்த்தனான், பரஞ்சோதியரின்ரை குண்டியையெல்லோ பார்த்தானான்.......
நீ தானே சொன்னனீ, பரஞ்சோதி ஐயாவைத் தவற விட்டால் தொலைந்து போய் விடுவாய் என்று, அது தான் எனும் பாணியில் மாமா ஆத்திரமும், நையாண்டியும் கலந்து பதில் சொல்லியிருக்கிறார். இப்படியான நினைவுகளை விட்டு இலகுவில் அறுத்தெறிய முடியாத நீண்ட காலச் சக்கரத்தின் பிடிமானங்கள் எங்களூரவர்கள் எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது.
பின் நாளில் என் மாமாவின் செய்கைகளைப் பார்த்து, நானும் மையல் கொண்டவனாய்; உயரத்தில் அவரைப் போல் ஆகாத விடலைப் பருவத்தில் உணர்வுகளில் அவர் போல் ஆக வேண்டும் என விடாப் பிடியாய் இருந்திருக்கிறேன். மாமாவின் வயதையொத்த ஏனைய பெரியவர்களின் வாழ்க்கையிலும், அன்ரிமார் வாழ்விலும் புயல் மையம் கொள்ளத் தொடங்கியது.
மாமா வீட்டின் மேற் புறக் கூரையினுள் பதுங்கி, மறைந்திருப்பதற்காக ஓடிப் போய் ஏறத் தொடங்குகிறார். அவரை வைத்த கண் வாங்காது பார்த்த படி நான்.................................நினைவலைகள் தொடரும்.......................
இத் தொடரின் அடுத்த பாகத்தினைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்:
http://www.thamilnattu.com/2011/09/blog-post_10.html
அன்பிற்கினிய உறவுகளே!
ஈழம் பற்றிய முழுமையான வரலாற்றுத் தொடர் ஒன்றினை எழுத வேண்டும் என்கின்ற என்னுடைய நீண்ட நாள் தாகத்திற்கு இந்தத் தொடர் நிச்சயம் பங்களிப்பாக அமையும் என்பதால், ஏற்கனவே என் வலையில் நான்கு பாகங்கள் வரை தொடர்ச்சியாக வெளிவந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இத் தொடரினை முதலாவது பாகத்திலிருந்தே ஆரம்பிக்கின்றேன்.
*******************************************************************************
மொக்கை போடுதல் என்பது எல்லோருக்கும் கைவரப்பெற்ற ஒரு கலையல்ல. ஆனாலும் மொக்கை போடத் தெரிந்த- சமயோசிதமாக டைம்மிங் காமெடி பண்ணத் தெரிந்த பலர் நம்மைச் சுற்றி இருந்தாலே போதும். நேரம் செலவாகுவதும் தெரியாது.
குறும்பாகப் பேசக் கூடியவர்கள் சொல்வதைக் கேட்டு ரசித்து;
சிரித்துக் கொண்டிருந்தால் வாழ்வும் இனிமையாக அமையும்.
நகைச்சுவை நடிகர்களின் மொக்கைகளை சினிமாவில் பார்த்து, நாம் அனைவரும் சந்தோச மழையில் நனைந்திருப்போம். ஆனால் அந்த நகைச்சுவை நடிகர்களையே ஹீரோவாக்கி, அவர்களை வைத்து மரண மொக்கை போடுகின்ற வல்லமை கைவரப் பெற்றவர்கள் ஒரு சிலர் தான் பதிவுலகில் உள்ளார்கள்.
அவர்கள் வரிசையில் நல்லதம்பி, மொக்கராசு எனும் இரண்டு நண்பர்கள் இணைந்து நடிகர் சந்தானத்தை மொக்கை போட்டு, செம ரவுசு பண்றாங்கப்பா. அவர்களின் வலைக்கு ஒரு முறை போனீங்க. உங்களையும் மொக்கையாக்கிடுவாங்க.
இந்த இனிமையான, நகைச்சுவைகளால் உங்கள் உள்ளத்தைச் சிரிப்பு மழையில் நனைய வைக்கின்ற ரிஜல் சந்தானம் பான்ஸ் எனும் வலைப்பூவிற்கு நீங்கள் செல்வதற்கான முகவரி:
|
97 Comments:
மீண்டும் வந்துவிட்டதா இந்தத் தொடர்..நன்றி நிரூ.
பரஞ்சோதி..யைப் படிக்கவும் தான் மீள்பதிவுன்னு தெரியுது..சாரி!
ஆரம்பமே கண்ணில் குளத்தைக் கொட்டுகிறது!அந்த நிலம்,இற்றைக்கு பதினாறு ஆண்டுகளாக மிதிக்கவே முடியாதபடி!நான் விட்டு வந்து இருபத்தேழு ஆண்டுகள்!
எப்பூடியடா தம்பி கூத்து?////மறந்து குலுங்க வைத்த கேள்வியும்,பதிலும்!
//இந் நாளில் பாட்டி வலைஞர் மடத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் இப்போதும் பாதுக்காக்கப்பட்டவளாய் ஆவியாய் உலவுகிறாள்.//
இந்த வரிகள் காட்டும் சித்திரம் கொடூரமாய் உள்ளது நிரூ.
@செங்கோவி
மீண்டும் வந்துவிட்டதா இந்தத் தொடர்..நன்றி நிரூ.//
ஆமா பாஸ்...உங்களை மாதிரி, புதுப் பதிவர்கள் சாரி
யூத் பசங்க படிக்காம விட்டதால மொதல்ல இருந்தே ஆரம்பிக்கிரேன்.
சந்தானம்ஃபேன்ஸ் அலப்பறையான வலைப்பூ தான்..!
@செங்கோவி
பரஞ்சோதி..யைப் படிக்கவும் தான் மீள்பதிவுன்னு தெரியுது..சாரி!//
அவ்...அப்படியா...நீங்கள் இந்தத் தொடரின் முதல்ப் பாகத்தினை லைட்டுப் போடாமல் படிச்சிருக்கிறீங்க.
ஐ மீன் பின்னூட்டம் போடாம...
அவ்...
@Yoga.s.FR
ஆரம்பமே கண்ணில் குளத்தைக் கொட்டுகிறது!அந்த நிலம்,இற்றைக்கு பதினாறு ஆண்டுகளாக மிதிக்கவே முடியாதபடி!நான் விட்டு வந்து இருபத்தேழு ஆண்டுகள்!//
ஏன் ஐயா...இப்பத் தானே வடக்கில் வசந்தம் வீசுகிறது என்று சால்வை அங்கிள் தெமிழில் பேசுறார்.
ஏ ஒன்பது நெடுஞ்சாலையேறி வாங்கோவன்.
நாம ஒரு குட்டிப் பதிவர் சந்திப்பும் நடத்தாலாமில்லே?
மனதின் பழைய நினைவுகளை பதிவாக தந்தமைக்கு நன்றி நண்பரே
//நிரூபன் said...
@செங்கோவி
பரஞ்சோதி..யைப் படிக்கவும் தான் மீள்பதிவுன்னு தெரியுது..சாரி!//
அவ்...அப்படியா...நீங்கள் இந்தத் தொடரின் முதல்ப் பாகத்தினை லைட்டுப் போடாமல் படிச்சிருக்கிறீங்க.
ஐ மீன் பின்னூட்டம் போடாம...//
அப்படியா...பயந்து போய் போடாமப் போயிருப்பேன்.
@Yoga.s.FR
எப்பூடியடா தம்பி கூத்து?////மறந்து குலுங்க வைத்த கேள்வியும்,பதிலும்!//
அவ்.....ஐயாவிற்கும் நினைவுகள் மீட்டப்படுகிறது என்று நினைக்கிறேன்.
தமிழ் மணம் இணைய வில்லையே
@செங்கோவி
இந்த வரிகள் காட்டும் சித்திரம் கொடூரமாய் உள்ளது நிரூ//
என்ன பண்ண பாஸ்,
இதனை எல்லாம் எப்படி மறைத்து ஒரு தொடரை எழுத முடியும்?
//
நிரூபன் said...
@Yoga.s.FR
எப்பூடியடா தம்பி கூத்து?////மறந்து குலுங்க வைத்த கேள்வியும்,பதிலும்!//
அவ்.....ஐயாவிற்கும் நினைவுகள் மீட்டப்படுகிறது என்று நினைக்கிறேன்.//
மறக்க முடியுமா அந்தப் பதிலை!
@செங்கோவி
சந்தானம்ஃபேன்ஸ் அலப்பறையான வலைப்பூ தான்..!//
ஹா...ஹா....
நீங்களும் அங்கே போயிருக்கிறீங்க போல இருக்கே...
நண்பர்களே ஒன் மினிட் வெயிட்..
என் பின்னூட்டப் பெட்டி ஏதோ கோளாறு பண்ணுகிறது. பார்த்திட்டு வாரேன்.
//
நிரூபன் said...
@செங்கோவி
இந்த வரிகள் காட்டும் சித்திரம் கொடூரமாய் உள்ளது நிரூ//
என்ன பண்ண பாஸ்,
இதனை எல்லாம் எப்படி மறைத்து ஒரு தொடரை எழுத முடியும்?//
எதையும் மறைக்க வேண்டாம்..உண்மையைப் பொதுவில் வைங்க.
செய்தி பார்த்தேன்!குடாவே குலுங்குகிறதாம்.நீங்கள் என்னடாவென்றால்,வசந்தம் வீசுகிறதென்கிறீர்களே?பதிவர் சந்திப்பு,பின்னூட்டமிடுவோர் சந்திப்பெல்லாம் அடுத்த ஆண்டில்(முடிந்தால்)வைத்துக் கொள்ளலாம்!இப்போது,வலையில் பேசுவோம்!புடிச்சிருந்தா கட்டிக்குவோம்,இல்லேன்னா பிரண்ட்ஸா பழகுவோம்!
@M.R
தமிழ் மணம் இணைய வில்லையே//
இன்னும் கொஞ்ச டைம்மில் இணைஞ்சிடும் நண்பா..
வெயிட் பண்ணுங்க..
சாரி..
சந்தானம்ஃபேன்ஸ் அலப்பறையான வலைப்பூ தான்..!///(டெம்பிளேட் கமெண்ட்!)
@M.R
மனதின் பழைய நினைவுகளை பதிவாக தந்தமைக்கு நன்றி நண்பரே//
இதுக்கெல்லாம் ஏன் நன்றி பாஸ்..
நமக்குள்ளே நன்றி எல்லாம் வேணாமே..
ஹா...ஹா...
// Yoga.s.FR said...
சந்தானம்ஃபேன்ஸ் அலப்பறையான வலைப்பூ தான்..!///(டெம்பிளேட் கமெண்ட்!)//
பாஸ், அலப்பறை -ன்னு சொன்னாலும் அருமைக் கமெண்ட்ல தான் வருமா?
தொடருங்கள் நிரூபன்.. நீங்கள் வலையுலகத்தில் இருப்பதால் , தமிழ்கூறும் நல் உலகத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆவணக் கொடையாக இருக்கட்டும் உங்கள் தொடர்...
@Yoga.s.FR
செய்தி பார்த்தேன்!குடாவே குலுங்குகிறதாம்.நீங்கள் என்னடாவென்றால்,வசந்தம் வீசுகிறதென்கிறீர்களே?பதிவர் சந்திப்பு,பின்னூட்டமிடுவோர் சந்திப்பெல்லாம் அடுத்த ஆண்டில்(முடிந்தால்)வைத்துக் கொள்ளலாம்!இப்போது,வலையில் பேசுவோம்!புடிச்சிருந்தா கட்டிக்குவோம்,இல்லேன்னா பிரண்ட்ஸா பழகுவோம்!//
ஹா...ஹா..நான் சும்மா பகிடிக்குத் தான் அப்படிச் சொன்னேன் ஐயா.
மர்ம மனிதர்கள்- கிரிஸ் மனிதர்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் விடயங்கள் தாங்கிய பதிவினை இன்னும் இரண்டு நாட்களினுள் முற்று முழுதான அலசல்களோடு எழுதப் போகிறேன்.
செங்கோவி said..."மறக்க" முடியுமா அந்தப் பதிலை!///"மணக்க" முடியுமா அப்புடீன்னு வரணும்!
@Yoga.s.FR
சந்தானம்ஃபேன்ஸ் அலப்பறையான வலைப்பூ தான்..!///(டெம்பிளேட் கமெண்ட்!)//
ஹா...ஹா...
காட்சியாய் கண் முன் விரிகிறது, தற்போதைய விஷத்தின் தாக்கம் ஏதுமின்றி
செங்கோவி said...
// Yoga.s.FR said...
சந்தானம்ஃபேன்ஸ் அலப்பறையான வலைப்பூ தான்..!///(டெம்பிளேட் கமெண்ட்!)//
பாஸ், அலப்பறை -ன்னு சொன்னாலும் அருமைக் கமெண்ட்ல தான் வருமா?////டவுட்டு...ம். ..ம்...ம்.ம்.
@பாரத்... பாரதி...
தொடருங்கள் நிரூபன்.. நீங்கள் வலையுலகத்தில் இருப்பதால் , தமிழ்கூறும் நல் உலகத்திற்கு நீங்கள் அளிக்கும் ஆவணக் கொடையாக இருக்கட்டும் உங்கள் தொடர்...//
வணக்கம் சார்,
நாளைக்குப் பள்ளி இல்லையா..இந்த நேரத்தில் வந்திருக்கிறீங்க..
உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவினால் தான் இவை எல்லாம் சாத்தியமாகிறது.
@Yoga.s.FR
செங்கோவி said..."மறக்க" முடியுமா அந்தப் பதிலை!///"மணக்க" முடியுமா அப்புடீன்னு வரணும்!//
ஆமா...இதென்ன நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரசியம் பேசுறீங்க?
@பாரத்... பாரதி...
காட்சியாய் கண் முன் விரிகிறது, தற்போதைய விஷத்தின் தாக்கம் ஏதுமின்றி//
மிக்க நன்றி நண்பா.
ரிஜல் சந்தானம் பான்ஸ் எனும் வலைப்பூவிற்கு எனது நல்வாழ்த்துகள்.
அங்க வூட்டத் திறந்து போட்டுட்டு வந்து இங்க கும்மியடிக்காரு,என்னாச்சுன்னு பாப்போம்!
//
நிரூபன் said...
@Yoga.s.FR
செங்கோவி said..."மறக்க" முடியுமா அந்தப் பதிலை!///"மணக்க" முடியுமா அப்புடீன்னு வரணும்!//
ஆமா...இதென்ன நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரசியம் பேசுறீங்க?//
இல்லைய்யா..மறக்குமா..மணக்குமான்னு பட்டிமன்றம் ஓடுது.
மறுபடியும் பதிவிட்டமைக்கு நன்றி.இது வெளிவந்திருந்த சமயம் நான் வலைப்பக்கம் வரவில்லை.நான் இப்போதுதான் பார்க்கிறேன்!
மன்னிக்கவும், தமிழ் மணத்தில் நாளை வாக்களிக்கிறேன்..
@பாரத்... பாரதி...
காட்சியாய் கண் முன் விரிகிறது, தற்போதைய விஷத்தின் தாக்கம் ஏதுமின்றி//
நன்றி சகோ...
@Yoga.s.FR
அங்க வூட்டத் திறந்து போட்டுட்டு வந்து இங்க கும்மியடிக்காரு,என்னாச்சுன்னு பாப்போம்!//
பொறுமை! பொறுமை!
வருகிறேன், வருகிறேன்.
@கோகுல்
மறுபடியும் பதிவிட்டமைக்கு நன்றி.இது வெளிவந்திருந்த சமயம் நான் வலைப்பக்கம் வரவில்லை.நான் இப்போதுதான் பார்க்கிறேன்!//
நான்கு பாகங்கள் எழுதியதோடு நிறுத்தி விட்டேன் பாஸ்..
இனித் தொடர்ந்து எழுத வேண்டும் எனும் ஆவல் பொங்க..மீண்டும் எழுதத் தொடங்கியிருக்கிறேன்.
@Yoga.s.FR
அங்க வூட்டத் திறந்து போட்டுட்டு வந்து இங்க கும்மியடிக்காரு,என்னாச்சுன்னு பாப்போம்!//
நிச்சயமாய் உங்களின் வாழ்த்துக்கள் அவர்களைப் போய்ச் சென்றடையும்.
நன்றி சகோ.
செங்கோவி said... Best Blogger Tips [Reply To This Comment]
//
நிரூபன் said...
@Yoga.s.FR
செங்கோவி said..."மறக்க" முடியுமா அந்தப் பதிலை!///"மணக்க" முடியுமா அப்புடீன்னு வரணும்!//
ஆமா...இதென்ன நீங்க ரெண்டு பேரும் ஏதோ ரசியம் பேசுறீங்க?//
இல்லைய்யா..மறக்குமா..மணக்குமான்னு பட்டிமன்றம் ஓடுது. ////இளையராஜான்னு சொல்லுற ராசையா போட்ட பாட்டுன்னா ரெண்டு பேருக்குமே புடிக்கும், அதான்!
@பாரத்... பாரதி...
மன்னிக்கவும், தமிழ் மணத்தில் நாளை வாக்களிக்கிறேன்..//
ஓக்கே பாஸ்...
நாளை பார்க்கலாம்..
இதற்கெல்லாம் மன்னிப்பு எதற்கு பாஸ்?
ஆரம்பமே அசத்தல் மாப்பிள நான் இந்த கதைக்குள் நிற்பதைப்போல் உணர்கிறேன்.. சிறு வயதில் கூத்து பார்க்க போய் ஆரம்ப காட்சியிலேயே நித்திரை கொண்டது ஞாபகம் வருகின்றது தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க ஆர்வமாய் இருக்கின்றேன்..
ஓமொல்லோ செம்பாட்டி மண்ணில மழை பெய்தா வீடு பூராவும் செம்மண்தான் கதையில் வரும் ஒவ்வொரு வசனமும் என்னை என்ர ஊருக்கே கொண்டு போகின்றது இப்பிடியான கதைகள் என்னை உடம்பை மாத்திரம் பாரீசில் வைத்திருக்கின்றது... வாழ்த்துக்கள் நிரூபன்..
எனக்கு அந்த மாட்டை நல்லா பிடிச்சிருக்கு.. என்ர சிவலயன பார்த்த மாதிரி இருக்கு..
என்னாச்சு உங்களுக்கு தொடர் முடித்து வைப்பீர்கள் என்று ஓடிவந்தால் மீள் பதிவா ?
பதிவு முதல் படித்த நினைவு இல்லை, ஆனால் தலைப்பு மட்டும் அப்படியே நினைவில் நின்றது. மீள் பதிவு என்று நினைத்தே உள்ளே வந்தேன்
அது உண்மை ஆகிவிட்டது, ஆனாலும் படிக்க படிக்க சுவராசியமே.... தொடருங்கள் பாஸ் நாங்களும் தொடர்கிறோம்...
நம்ம சொந்த ஊர் நெடுங்கேணியில் கதை நடப்பது போலவே இருக்கு
புகைப்படங்கள் அருமை பாஸ்
தொடரில் மண் வாசனை கமகமக்குது
அசத்துங்கள் பாஸ்...
அழகான தொடக்கம்....
....மண்வாசம்...
காட்டான் said...
எனக்கு அந்த மாட்டை நல்லா பிடிச்சிருக்கு.. என்ர சிவலயன பார்த்த மாதிரி இருக்கு..///
நீங்கள் ரொம்பதான் மிஸ் பண்ணுறீங்க போல....
//நண்பர்களே, பதிவு பிடித்திருந்தால், உங்களின் பங்களிப்புக்களை ஓட்டுப் பட்டைகள் மூலமாகவும் காட்டலாமே!!//
காட்டியாச்சு காட்டியாச்சு
வெல்கம் டூ தட் தொடர் & சந்தானம் ஃபேன்ஸ் பிளாக்
தமிழ்மணம் 11
மலரும் அந்த நினைவுகள் மனதை தொடுகிறது சகோ.,,,
தொடருங்கள்.
மாப்ள பகிர்வுக்கு நன்றி!
எவன் வந்து எந்த பக்கம் ஆதரவு என்று முத்திரை குத்தினாலும் உங்கள் பதிவை தொடருங்கள்
இலங்கை தமிழ் வலைப்பூக்களின் TOP 20 வரிசை http://pc-park.blogspot.com/2011/09/top-20-tamil-blog.html
//ஈழத்தின் அழகான வனப்புக்களிற்கிடையே தொலைந்து போகும் வல்லமையை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து நாம் எல்லோரும் இழக்கத் தொடங்கி விட்டோம்.//
நாம பிறந்ததே அதுக்கப்புறம் தானே பாஸ்!
//ஈழத்தின் அழகான வனப்புக்களிற்கிடையே தொலைந்து போகும் வல்லமையை ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து நாம் எல்லோரும் இழக்கத் தொடங்கி விட்டோம்.//
நாம பிறந்ததே அதுக்கப்புறம் தானே பாஸ்!
//
‘எப்பூடியடா தம்பி கூத்து?
நான அங்கே கூத்தே பார்த்தனான், பரஞ்சோதியரின்ரை குண்டியையெல்லோ பார்த்தானான்.......
நீ தானே சொன்னனீ, பரஞ்சோதி ஐயாவைத் தவற விட்டால் தொலைந்து போய் விடுவாய் என்று, அது தான் எனும் பாணியில் மாமா ஆத்திரமும், நையாண்டியும் கலந்து பதில் சொல்லியிருக்கிறார். இப்படியான நினைவுகளை விட்டு இலகுவில் அறுத்தெறிய முடியாத நீண்ட காலச் சக்கரத்தின் பிடிமானங்கள் எங்களூரவர்கள் எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது.//
ஹிஹி நல்ல்லா பாக்கிறாங்கப்பா!!
//இத் தொடரினை முதலாவது பாகத்திலிருந்தே ஆரம்பிக்கின்றேன்.//
ஆரம்பியுங்க...ரசனையான தொடர்!!
மீள்பதிவா?
ஏற்கணவே படித்து கருத்திட்டுவிட்டேன்.. என்னத்தை சொல்வது தொடரை சீக்கிரம் எழுதுங்கள்
//ஈழம் பற்றிய முழுமையான வரலாற்றுத் தொடர் ஒன்றினை எழுத வேண்டும் என்கின்ற என்னுடைய நீண்ட நாள் தாகத்திற்கு//
அடடா வித்தியாசமான ஆனால் யாரும் இதுவரை முயற்சிக்காத முயற்சி.. வாழ்த்துக்கள் நிரூபன்
தமிழ் மணம் 15
tamil 10
indli
ulavu
votted friend
ஏற்கனவே படித்தப்போ முழுசும் வாசிக்கல..இப்பதான் தெரியுது தொடருன்னு...விரைவா தொடருங்க....நிரூபன்...
சந்தானம் பான்ஸ் அறிமுகத்துக்கு நன்றி நண்பா...மொக்கை டுயசன் சேர்ந்திரலாம் போல...
நிரூ....!
தொடரின் ஆரம்பமே அசத்தல். (ஏற்கனவே பதிவிட்டது என்று கூறியிருந்தீர்கள்) மீண்டும் தொடரும் முடிவுக்கும் வாழ்த்துக்கள்.
ஆனாலும், சில விடயங்களைக் கையாளும் பெழுது மிகவும் அவதானத்துடனும்- பொறுப்புடனும் செயற்பட வேண்டும். இல்லாவிட்டால் உங்களின் மீது தேவையற்ற அவச்சொற்கள் வந்து சேரும். எதிலும், நிலைமாறாத நடுநிலையே இந்தத் தொடருக்கும் அவசியம்.
யோவ்...! அங்காங்கோ தெறிக்கும் எள்ளலும்- நகைச்சுவையும் தொடருக்கு அழகு சேர்க்கிறது. வாழ்த்துக்கள்.
உங்கள் தொடரை எதிர்பார்கிறேன்
என்று என் வலையில்
விஜய் vs அஜித் யார் புத்திசாலி?
எப்பூடியடா தம்பி கூத்து?//
Real time comedy !!!
தொடருங்கள் ...தொடர்கிறேன் .
உங்கள் இந்த தொடர் பாகத்தையும் ஆவலுடன் தொடர்கிறேன். நீங்களும் உங்கள் மாமா செய்ததுபோல பெரியாக்கள் சொன்னத அப்பிடியே செய்வீங்களா???
அப்பிடியிருந்திருந்தா இப்பிடி நோட்டி போயா வந்திருக்காமாட்டழுங்க என ஹிஹிஹி
ஆர்வமூட்டும் தொடர் ...தொடருங்கள் ........
நிரூபன் பதிவைத்தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..
உங்கள் வர்ணைகள்,உவமைகள், உருவங்கள் அழகாகயிருக்கின்றன்..
//பச்சைப் பசேலென்ற வயல் நாற்றுக்கள் காற்றில் தலையசைக்க, கீற்றுக்கள் குமரிப் பெண்களின் கொலு சொலி போல சத்தமிடும் ஓசையிலும், ‘அருவி வெட்டப் போறேன் பெண்னே, அரிவாளைக் கொண்டா...’ எனும் பாடலின் சந்த நயத்திலும் எங்களூர் கல கலவெனக் கண் சிமிட்டிப் புழுதி கலந்த செம்பாட்டுக் கிரவல் வீதிகளினூடு புன்னகைத்தபடி வந்தோரை வரவேற்கும் எண்ணத்தோடு காத்திருந்திருக்கிறது//
அசத்தல்
பாஸ் வந்தாச்சு பதிவை படிச்சாச்சு ஓட்டும் போட்டாச்சு,,
பாஸ் நீங்க தப்பா நினக்கல்லன்னா ஒன்னு சொல்லட்டுமா,,
சில இடங்களில் கொஞ்சம் அதிகமாக படுகிறது,,
சிலருக்கு இது பிடிப்பதில்லை.. இன்றைய அவசர உலகத்துல சொல்ல வருவதை சுருக்கமா சொன்னாத்தான் அநேகருக்கு பிடிக்கிறது..
பிழையிருந்தா மன்னிக்கனும் உங்களுக்கு தெரியாததா
பிரகாஷ் நம்மூருக்கு வந்திருந்தார். அவருடன் சுத்திக்(வெட்டியாதான்) கொண்டு இருந்ததினால் ரெண்டு நாளாக வர முடியவில்லை..
வரலாறு முக்கியம் நிரூ.. அதுவும் இடைசெருகல் அல்லது திரித்தல் இல்லாமல் உள்ளதை உள்ள படி சொல்லுதல் இன்னும் அவசியம்..
உதாரணம் ராஜா ராஜா சோழனை பற்றி எழுதும் போது அவர் செய்த நல்ல செய்திகள் மட்டும் சொல்லப்படும் அவரின் இன்னொரு பக்கம் தெரியாது, அது போல் இல்லாமல் ஒரு கண்ணாடி போல வரலாறு இறந்த காலத்தை பற்றி பேச வேண்டும். அது கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் இருக்கலாம், அனால் அது அவசியம்
தொடருங்கள் இது உங்கள் வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் செய்தியும் கூட
!* வேடந்தாங்கல் - கருன் *! said... Best Blogger Tips [Reply To This Comment]
பிரகாஷ் நம்மூருக்கு வந்திருந்தார். அவருடன் சுத்திக்(வெட்டியாதான்) கொண்டு இருந்ததினால் ரெண்டு நாளாக வர முடியவில்லை./////இத நீங்க சொல்லணுமாக்கும்?அந்தாள் கூட சுத்தினா வெட்டியா தான் சுத்தணும்!அவரு பத்து நாள் லீவில சுத்துறாரு!உங்களுக்கு எங்க போச்சு புத்தி!(அப்பாடா,கோத்து வுட்டாச்சு,சாப்பிட்டது செரிச்சுடும்!)
இப்படியான தொடர்களை எழுத உங்களால் மட்டும்தான் பாஸ் முடியும்....வாழ்த்துக்கள்
அப்பறம் இப்பவே ஒரு குரூப் ரெடியா இருக்கும் ஆகா நிரூபன் ஈழக்கதை ஏதோ எழுதப்போறான்யா.நமக்கு சரியான சர்தர்ப்பம் என்று உங்கள் தொடரை கும்ம.....அதுக்கும் தயாராகி கலக்குங்கள் பாஸ்.
உங்க ஊரு எங்க ஊரு போல மிக
அழகாக இருக்கு
தொடரை விரைவில்
தொடங்க,படங்களோடு வர
ஆவன செய்யுங்கள்
வாழ்வு முடிவதற்குள்
ஈழ மண்ணில் என் கால்தடம்
பதிய வேண்டும்
புலவர் சா இராமாநுசம்
தொடரட்டும்,தொடரட்டும் ..... ஏற்க்கனவே வாசித்துவிட்டேன் அடுத்தடுத்த பாகத்துக்காக காத்திருக்கேன் ....
இப்போதுதான் படிக்கிறேன். தொடருங்கள்.
தொடருங்க மக்கா தொடருங்க.....
மன்வாசனை இப்போதே அடிக்க ஆரம்பிச்சிடுச்சி ..தொடருங்கள் :-)
@Raazi
பாஸ் நீங்க தப்பா நினக்கல்லன்னா ஒன்னு சொல்லட்டுமா,,
சில இடங்களில் கொஞ்சம் அதிகமாக படுகிறது,,
சிலருக்கு இது பிடிப்பதில்லை.. இன்றைய அவசர உலகத்துல சொல்ல வருவதை சுருக்கமா சொன்னாத்தான் அநேகருக்கு பிடிக்கிறது..
பிழையிருந்தா மன்னிக்கனும் உங்களுக்கு தெரியாததா//
நண்பா, என்னுடைய வழமையான பதிவுகளில் இருந்து கொஞ்சம் சுருக்கித் தான் இதனை எழுதுகின்றேன்.
சகோதரம், வரலாற்றினை எழுதும் போது முழுமையாக சுருக்கி எழுத முடியாது, தங்களின் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கிறேன்.
தங்களின் புரிந்துணர்விற்கும், அன்பிற்கும் நன்றி நண்பா.
உங்கள் தொடரை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் அண்ணா
சகோ! வழக்கம் போல லேட்
ஏற்கனவே படித்திருக்கிறேன்.
ஈழ வாழ்வியலை படம்பி டித்துக்காட்டும் ஒரு வரலாற்று பதிவுக்கான தொடக்கம். வாழ்த்துக்கள் நிரு. எமது ப்ளாக் அறிமுகத்துக்கு நன்றி. வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. சீக்கிரமே நம்ம கடையில சந்திப்பம்.
ஈழ வாழ்வியலுக்கான தொடர் மறுபடியும் தொடர ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள் பாஸ்... பல வெற்றிகளை குவிக்கட்டும் வாழ்த்துக்கள்
நண்பர்கள் நல்லதம்பி, மொக்கராசு - ரியல் சந்தானம் ஃபேன்ஸ்களுக்கு வாழ்த்துக்கள்
venkattan
//
சகோதரம், இந்தத் தொடரில் மைனஸ் ஓட்டுப் போடுமளவிற்கு நான் என்ன தப்பாக எழுதி விட்டேன் என்று விளக்கமாக கூற முடியுமா?
காரணம் ஒரு வரலாற்றுத் தொடரினை எழுதும் போது, அதில் தவறுகள் இடம் பெறா வண்ணம் எழுதுவது தானே சிறந்தது. அன்பிற்குரிய நண்பா. இந்தப் பதிவில் உள்ள தவறினைச் சுட்டிக் காட்ட முடியுமா?
அதுவே பெரிய உதவியாக இருக்கும்.
@புலவர் சா இராமாநுசம்
உங்க ஊரு எங்க ஊரு போல மிக
அழகாக இருக்கு
தொடரை விரைவில்
தொடங்க,படங்களோடு வர
ஆவன செய்யுங்கள்
வாழ்வு முடிவதற்குள்
ஈழ மண்ணில் என் கால்தடம்
பதிய வேண்டும்
புலவர் சா இராமாநுசம்//
ஐயா. உங்களின் காத்திரமான கருத்துக்களுக்கு நன்றிகள்.
தங்களின் ஆசை வெகு விரைவில் நிறைவேற வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்.
வாருங்கள் எங்கள் மண்ணிற்கு...கூடிக் கொண்டாடி மகிழ்வோம்.
சுவாரசியமான அனுபவ பகிர்வு!
இப்படியான நினைவுகளை விட்டு இலகுவில் அறுத்தெறிய முடியாத நீண்ட காலச் சக்கரத்தின் பிடிமானங்கள் எங்களூரவர்கள் எல்லோரிடமும் இன்றும் இருக்கிறது.............
உண்மதான் ஒவ்வொருவரது மனதிலும் எத்தனையோ மறக்கமுடியா நினைவுகள். சுவாரசியமாக ஆரம்பமாகிறது தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்
Post a Comment